ஞாயிறு, 28 அக்டோபர், 2012

வணக்கம் செய்தியாளர்கள்

இன்றைய முக்கிய செய்தியே விஜயகாந்த் -செய்தியாளர்கள் மோதல்தான் .

விஜயகாந்த் செய்தியாளர்களை தரக்குறைவாக பேசியது மிகவும் தவறு .அதேபோல் செய்தியாளர்கள் செவ்வி தர மறுப்பவரை விடாமல் சென்று கடுப்படிப்பதும் எந்த பிரச்னை இருந்தாலும் தங்களுக்கு செவ்வி கொடுப்பதுதான் ஒருவரின் தலையாய கடமை என்பதுபோலும் விரட்டி ,நோகடிக்கும் கேள்விகளால் தாக்குவதும் அதே அளவு தவறு.
செய்தியாளர்கள் விஜயகாந்தை விரட்டி மோதியது போல் முந்தைய எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதாவை தங்களுக்கு பதில் சொல்ல மோதியது உண்டா?
அவர்களும் ஆள் பார்த்துதான் செயல்படுகிறார்கள்.அல்லது ஆளுங்கட்சி க்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் .
ஏற்கனவே தனது கட்சிக்காரர்கள் ஓடியதால் கோபத்தில் ,அவமானத்தில் இருப்பவரை சீண்டுவது ,அவர் பதில் தர மறுக்கும்போது கண்டிப்பாக தந்தே ஆகவீண்டும் என்பதும் மனிதாபிமானமற்ற செயல்கள்தான்.இதில் விஜயகாந்தை கண்டித்து சாலைமறியல் வேறாம் .செய்தியாளர்கள் இன்றையை நிலையில் அதிமுக அல்லது முதல்வர் புகழ் பாடும் பஜனை கோஷ்டிகளாகிவிட்டனர் .
 அது உண்மையும் கூ ட .
முன்பு ஆளுங்கட்சி திமுகவை அதன் செயல்பாடுகளை கண்டித்து பக்கம் பக்கமாக செய்திகள் வெளியிட்டனர்.
இரண்டு மணிநேர மின்தடையை கோபாவேசமாக கண்டித்து எழுதினர்.மின்தடைக்கு கருணாநிதியும்-ஆற்காடு வீராசாமியும்தான் காரணம் என்றனர்.
இன்று ஜெயா அரசில் ஒரு நிகழ்வுகூட கண்டிக்கும் அளவு நடக்கவே இல்லையா?15 மணி நேர மின்தடை அவர்களையோ ,மக்களையோ பாதிக்கவே இல்லையா?
சமச்சீர் கல்வி,தலைமை செயலகம் ,அண்ணா நுலகம் ,பேருந்து கட்டண உயர்வு,விலைவாசி உயர்வு,12-18 வரையிலான அரிசி வகைகள் இன்று 32-45 ஆனது எல்லாம் அவர்களை பாதிக்கவே இல்லையா?


அதை பற்றி செய்திகள் மக்களின் போராட்டங்கள் செய்திகளாக ஏன் வருவதில்லை.முக்கியத்துவம் ஏன் தரப்படவில்லை?
ஜெயா அரசில் 17 மணிநேரம் மின்தடைக்கு காரணம் ஜெயா அரசின் இயங்காமை காரணம் அல்லவாம்.மின் இல்லாமைதான் காரணமாம் இப்படி அறிய கண்டு பிடிப்பு விளக்கம் தந்தது நமது எம்.ஜி.ஆர் அல்ல.நிமிர்ந்த நடை கொண்ட தினமணி.
அதற்கும் தினமலருக்கும் இன்றுவரை திமுக தான் செய்தி கிடங்கு,கருணாநிதிதான் கருத்துப்பட[கார்டூன் ]களஞ்சியம்.
ஜெயைப் பற்றியோ -அதிமுக அரசைப்பற்றியோ இதுவரை இந்த இதழ்களில் கண்டிப்பு செய்தியோ -கார்டூன்களோ வந்ததில்லை.வரப்போவதுமில்லை.
இப்படி இயங்கும் செய்தியாளர்களுக்கு எதற்காக பிற தலைவர்கள் செவ்வி கொடுக்க வேண்டும்.?
அவர் செவ்வி கொடுத்தால் அதை அவரை கிண்டல டித்துதான்  பிரசுரிப்பார்கள்.
விமான நிலையத்தில் விஜயகாந்திடம் ஒரு  செய்தியாளர் கேட்ட கேள்வியே அவர்களின் இதழிய அறிவுக்கு கட்டியங்கூறும்
"உங்கள் தொகுதி ரிஷிவந்தியத்தில் மின்தடை 15 மணி நேரமாக உள்ளதே அதை தடுக்க என்ன செய்துள்ளீர்கள்?"
இது கடுப்படிக்கும் கேள்வி மட்டுமல்ல அந்த செய்தியாளரின் முட்டாள் தனமான அறிவையும் பறை சாற்றுகிறது அல்லவா?
இது யாரிடம் கேட்க வேண்டிய கேள்வி ?
யாரிடம் கேட்கிறார்?
இவர் எல்லாம் செய்தியாளராக எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
இவர் விஜயகாந்தை கோபமுறச்செய்யவே இப்படி கேட்கின்றார் .வேண்டுமென்றே கேட்கின்றார்.
இதற்கெல்லாம் சுயமரியாதை உள்ள எவருமே பதில் சொல்ல கோபமுறவே செய்வார்கள்.
 இவர்கள் நடுநிலை செய்தியாலர்கலகத் தெரியவில்லை.அதிமுக அடிவருடிகளாகவே -அரசு அளிக்கும் விளம்பரத்துண்டுக்களுக்காக அலைபவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
அதற்கு விஜயகாந்தை பலிகடா ஆக்குகிறார்கள்.
உண்மையான பத்திரிகைத்தனம் காணாமல் போய்விட்டது .
செவ்வி தர மறுப்பவர்களை விரட்டி சென்று கேவலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் மீது விஜயகாந்துதான்  வழக்கு தொடுக்கவேண்டும். 

புதன், 3 அக்டோபர், 2012

செலவுகள்

சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவி .சண்முகம் அமைச்சர் ,கட்சி  பொறுப்புகளில்  இருந்து கழட்டி விடப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சி.வி.சண்முகம் வகித்து வந்த வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி. ரமணா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 
சி.வி.சண்முகம் துணை சபாநாயகர் ஆக நியமிக்கத்தான் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டிருக்கலாம் .
சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
, ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஊரக தொழில்துறை புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பி.மோகன் அக்டோபர் 6ம் நாள்  பதவியேற்றுக் கொள்வார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டில் நடக்கும் எட்டாவது அமைச்சரவை மாற்றம் இது
தமிழக சட்டப் பேரவை சபாநாயகராக இருந்த டி ஜெயகுமார் கடந்த வாரம் ராஜினாமா செய்தது தனி.
அதிமுக அமைச்சர்கள் சொந்த மூளையில் உதிக்கும் முடிவுகள் எதையும் செய்ய முடியாது.
அம்மா தான்  எல்லாம் .மற்றவரெல்லாம் சும்மாதான்.
பிறகு ஏன் இந்த அடிக்கடி மாற்றங்கள் என்றுதான் தெரியவில்லை.
_______________________________________________________________________________________________
 இது 11000 பவுண்ட் 
 -------------------------------
'விக்கி லீக்ஸ் 'ஜுலியன் அசாஞ் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக நிரூபித்து விட்டது.ஆனாலும் அவரை சுவீடனுக்கு நாடுகடத்தியி தீர வேண்டும்  என்பதில்  பிரித்தானிய அரசு உறுதியாக உள்ளது.
 தான் அமரிக்காவிற்கு நாடுகடத்தப்பட மாட்டேன் என உறுதி வழங்கினால் சுவீடனின் விசாரணகளை எதிர்கொள்ளத் தயார் என அசாஞ் தெரிவித்திருந்தார்.
அதனை
பிரித்தானிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை .
அதனால் ஈ க்குவாடார் அரசு வழங்கியஅகதி   பதவியால் அந்த நாட்டின் தூதகரகத்தில்  ஜூலியன் அசாஞ் வசதியாக மறைந்து வாழ்கிறார் .ஆனால் அவரை  கைது செய்வதற்காக லண்டன் காவல்துறை 24 மணி நேரமும் தூதரகத்தின் வாசலில்  காத்திருக்கிறது.

லண்டனில் அமைந்துள்ள ஈக்குவாடார்  தூதரகத்தைச் கண்காணித்தவாறு காவலர்கள் வலம்வருகின்றனர். 
இந்த ஏற்பாடுகளுக்காக பிரித்தானிய அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து 11 ஆயிரம் பவுண்ஸ் களை செலவிடுகிறது.
_______________________________________________________________________________________________
 இது 1880 கோடி ருபாய் 
-------------------------------------
சோனியாவின் வெளிநாட்டு பயனச்செலவுதான் இப்போதைய பரபரப்பு அரசியல் .இது தொடர்பாக த.உ.சட்டத்தில் ஒருவர் கேட்க இதுவரை பதில் வராமல் இருந்தது.
ஆனால் மோடி 1880 கோடி செலவு என்றவுடன் ஒரு பக்கமும் சேராத பதிலை அரசு கொடுத்துள்ளது .
அவர் வெளிநாட்டு சென்றார்.மருத்துவ செலவுகளை அரசிடம் இருந்து இதுவரை கேட்கவில்லை என்று மட்டும் தகவலை மொட்டையாக கொடுத்துள்ளது அரசு.
அதில் விமானச்செலவு பற்றி ,தனி விமானம் பற்றி ,அதற்கான செலவு பற்றி ஒன்றுமே இல்லை.
 சோனியாவும் குஜராத் தேர்தல் பரப்புரையில் ஒன்றும் சொல்லவில்லை .
ஆனால் மோடி பற்றி காங்கிரசின் குட்டி தேவதைகள் ஒவ்வொரு கருத்தை சொல்லுகிறார்களே ஒழிய செலவு பற்றி ஆதாரப்பூர்வமாக யாரும் விளக்கவில்லை.
ஆனால் மோடி மீண்டும் வாயை திறந்துள்ளார்.அவருக்கு இது தேர்தல் கால பேச்சுக்கு நல்ல தலைப்பு அல்லவா?
'சோனியா காந்தியின் வெளிநாட்டு செலவு குறித்து நான் கூறியிருக்கும் கருத்துகள் தவறானது என்று நிரூபிக்கப்படுமானால், ஒரு பொது இடத்தில் அது குறித்து பகிரங்கமாக நான் மன்னிப்பு கேட்கத் தயார்."
-என்று தோள் தட்டியிருக்கிறார்.திக் விஜய்சிங் என்ன சொல்லப்போகிறார் .?
_______________________________________________________________________________________________

 

திங்கள், 1 அக்டோபர், 2012

ரூ.1880 கோடி


 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு ரூ.1880 கோடி செலவு செய்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .
 
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ள நரேந்திர மோடி, பவன்கர் மாவட்டம் ஜெசார் என்ற பகுதியில்  பேசும்போது கூறியதாவது:-
 
"எங்கள் அரசு கட்டுப்பாடின்றி செலவு செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது .
 அது உண்மை அல்ல. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு, மக்கள் பணத்தில் இருந்து ரூ.1880 கோடி செலவு செய்துள்ளது.
 
சோனியாவின் வெளிநாட்டு பயணச் செலவு மற்றும் சொகுசு ஓட்டல்களில் தங்கியதற்கான செலவானது பாவ் நகர், ஜாம் நகர், ஜுனாகத் மற்றும் ராஜ்காட் நகராட்சியின் ஓராண்டு பட்ஜெட்டை விட அதிகம்.
இதேபோல் குடியரசுத் தலைவர் , பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு விமானம் உள்ளிட்ட சலுகைகள் வெறும் காங்கிரசு எம்.பி.யான சோனியா காந்திக்கு வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் எந்த பொறுப்பும் இல்லாத ஒரு மக்களவை உறுப்பினருக்கு இவ்வாறு செலவு செய்யும் பணத்தில் இருந்து குஜராத் மாநிலத்திற்கான மின்சாரத்தையே  தயாரித்துவிடலாம்."
என்று கூறியுள்ளார் .
அவர் கூறியது உண்மை என்றால் காங்கிரசு கட்சித் தலைவியாக இருக்கும் "சோனியாவுக்கு "எந்த வகையில் இவ்வளவு மக்கள் வரிப்பணம் வாரி இறைக்கப் பட்டது?"
வருக்கு எந்த பொறுப்பும் அரசில் இல்லை.அவர் நம் பிரதமருக்கு தலைவி ,அதுவும் ஒரு குறிப்பிட்ட கட்சித்தலைவி அவருக்கு ஏன் இப்படி அரசு பணம் வீணடிக்கபடுகிறது?
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்தத் தாடிக்காரர் முதல்  இந்தத் தாடிக்காரர்வரை....
-கே.ஏ.தேவராஜன்
1970களில் இந்திராகாந்தியின் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மேத்தா. அழகான தாடி அவருடைய அடையாளம். சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தவர். இந்தியாவிற்கு உதவி கேட்டு அமெரிக்காவிற்குப் போனார். நியூயார்க் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் அலுவலகத்தில் அமெரிக்க ஏகபோக முதலாளிகளைச் சந்தித்தார்.

இந்தியா - தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் முதலான குழந்தைகளைப் பிரசவிக்க அந்நிய மூலதன உதவி தேவை எனக் கெஞ்சினார். என்ன சொல்லி எப்படிக் கெஞ்சினார்?

  “ அந்நிய நேரடி முதலீடுகளுக்காக இந்தியாவின் கர்ப்பப்பை திறந்துவைக்கப்பட்டிருக்கிறது” என்பதாகும். 
இதைக் கேட்ட அமெரிக்க முதலாளிகள் “அடடா! பிரமாதம்” என ஆர்ப்பரித்து வரவேற்றார்கள்.

ஆனால், அச்செய்தி இந்தியாவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் தயவிற்காக இம்மாதிரி அடிமையாக நடந்துகொள்வதா என நம் மக்கள் ஆர்த்தெழுந்தனர்.

இந்தியாவை பாரதமாதா என வணங்குகிறோம். அப்படியிருக்க, அசோக் மேத்தாவின் உதாரணம் இந்தியாவிற்கே அவமானம் என ஆவேசப்பட்டனர்.

என்னதான் இருந்தாலும் ஒரு ‘சோஷலிஸ்ட்’ அவ்வாறு கூறியிருக்கவேகூடாது என்றும் சிலர் அங்கலாய்த்துக்கொண்டனர்.

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்ன சொல்லி சமாளித்தார்கள்?

அமெரிக்கர்களுக்குச் சுற்றிவளைத்துப் பேசுவது பிடிக்காது; புரியாது.

அவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படிச்சொல்லித்தான் திருப்திப்படுத்தமுடியும்; அப்படித்தான் அசோக்மேத்தா பேசிவிட்டார் என்று சமாதானம் கூறினார்கள்; சமாளித்தார்கள்.

இன்று சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம், விமானப் போக்குவரத்தில் 74 சதவீதம் மற்றும் செய்தி ஒலிபரப்பு, மின்சாரம், இன்சூரன்ஸ் என அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடுகள் தங்கு தடையின்றி நுழைவதற்கு வசதியாக இந்தியப் பொருளாதார வாசல்கள் தாராளமாக திறக்கப்பட்டுவிட்டன.
சுரண்டல் கொள்ளையின் சொர்க்க பூமியாக இந்தியா மாற்றப்பட்டுவிட்டது.

அன்றையத் தாடிக்காரர் அசோக்மேத்தாவின் ஆசையை இன்றையத் தாடிக்காரர்கள் மன்மோகன்சிங், மாண்டேக் சிங் அலுவாலியா முதலானோர் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக வங்கியின் இந்த முன்னாள் ஊழியர்கள் உட்பட மூலதனச் சார்பாளர்களால் இந்திய ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டுவிட்டது என்பதுதான் இன்றைய அபாயம்! அதுவே நமக்கு எச்சரிக்கை!

நன்றி ;தீக்கதிர் 
______________________________________________________________________________________________________________
 

வாலில் தீ....

   ஆற்றுப் படுகையில் யாரோ முன் தோண்டி வைத்திருந்த ஊற்றுப் பள்ளத்தை ஒரு கடுங்கோடை மாலையில் தாகத்துடன் பார்த்தபடி நிற்கின்றேன்,
குப்புறப்படுத்துத் தோண்டி வைத்த குழியில் ஆசையாய் மேலும் ஐந்து கையளவு மண்ணைக் கோதி எடுக்கிறேன். மூன்றாம் கோதலில் என் புறங்கையில் சற்றே ஈரம், ஆறு, ஏழு, எட்டு, நீர் எட்டிப் பார்க்கிறது.

 நாவறண்ட என் முகத்தை பிம்பமாய்ப் பிடித்துக் காட்டி விட்டு தாகம் தணிக்கிறது. மூக்கில் ஒட்டிய ஈர மணலையும் முன் சட்டையில் ஒட்டிய காய்ந்த மணலையும் தட்டி விட்டு எழுகிறேன் கனவு கலைகிறது -
அத்தனையும் கனவுதான். 
             பரமக்குடிக்கார ஆள் என் நினைவில் தற்போது இது நடக்க வாய்ப்பில்லை. பரமக்குடி கடக்கும் ஆற்றுப் படுகைக்கே மூடு விழா நடத்தத் துவங்கி பல மாமாங்கங்கள்  ஆகிவிட்டன. கரையோர வீடுகள் கள்ளழகர் போல் தம் களம் விட்டிரங்கி ஆற்றுப்படுகையில் புது மனைகள் புகுந்து தம் கழிவுகளை ஆற்றுப்படுகையில் கலக்க விட்டு ஓரிரு மாமாங்கங்கள் ஆகிவிட்டன. பன்றிகள் போல் மனிதர்கள் நாமும் சர்வாஹாரிகள் (omnivore) தான் எனினும் கழிவு பொருட்களையும் களை பொருட்களையும் நாம் நித உணவுகளாக்கிக் கொண்டு, திட உணவுகளை மெதுவாய் அப்புறப்படுத்தி வருகிறோம்.

                மேற்சொன்னவற்றிற்கும் வால் மார்ட் (Wall Mart) இந்தியாவிற்குள் நுழைவதற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டால் விவரம் சொல்ல நிறைய இந்தியர்கள் ஆதாரங்களோடு கடும் வாதம் புரியக் காத்திருக்கிறார்கள்.
 தமிழகத்தின் நுழைவாயிலை தற்காலிகமாகத் தமிழக முதல்வர் தாழிட்டு வைத்திருக்கிறர். அதற்கு என் போன்ற ஆட்களின் தற்காலிகமான நன்றி தமிழக முதல்வருக்கு உரித்தாகும். இந்த வைராக்கியத்தை அவர் கடைப் பிடித்தால் எங்கள் நன்றி என்றென்றும் உண்டு. எதிர் காலச் சந்ததிகளின் விவரமறிந்த நன்றியும் கூட. 
            என்ன செய்து விடப் போகிறது இந்த வால் மார்ட் (Wall Mart)... இப்படிப் பதறுகிறீர்கள்...? என்று கேட்டால்;
 வால் மார்ட் (Wall Mart) என்ற அமெரிக்க பல் பொருளங்காடி கிராமவாசிகளையும் வாடிக்கையாளர்களாக்கிக் கொண்டு, அவர்களே அறியாமல் அவர்கள் பிடரியில் கையை வைத்துத் தள்ளிக் கொண்டு போய் தம் கல்லாவில் காசு போட வைக்கும். 
ஊற்று நீரை பாட்டிலில் நிரப்பி விற்கும். 
பதனி பருக ஆசை என்று என் போன்ற பழைய ஆட்களுக்கும் பாட்டிலில் அடைத்து விற்றாலும் விற்கும் வால் மார்ட் (Wall Mart) சொல்லமுடியாது.  
மீனுக்கு வாலும் பாம்புக்குத் தலையும் காட்டி மயக்கும் விளாங்குத்தனம் உள்ள அமெரிக்க வியாபாரக் குழுமங்கள் கிராம உத்யோக பவனின் காதியுக்திகளையும் அனுமதியின்றி அபகரித்துத் தனதாக்கிக் கொள்ளும். 
பனம்பழமும் கிழங்கும் என்னவென்றே தெரியாத இந்தியப் பிள்ளைகள் பிட்சாவே தன் பாரம்பரிய உணவு என மயங்கும். மயங்கட்டுமே, இதில் என்ன கெட்டுப் போகிறது? எனச் சிலர் கேட்கலாம்.
                யோசித்துப் பார்த்தால் ஒன்றும் கெட்டுப் போகாதுதான் .
கம்யூனிசமோ ஜனநாயகமோ செத்தாலும் பனைமரம் உயிரோடு நிற்கும். ரோம் ராஜ்யம் துளிர்த்தெழும். பல்லாயிரம் வருடங்களுக்கும் முன்னால் மஹாவீரரின் முந்தைய  தீர்த்தங்கரர்களுக்கும் பல்லாயிரம் ஆண்டுகளுட்கு முன்னால் இந்நாட்டை வளமாக்கிய மண்ணும் மரமும் சரியாது சாயாது. 
ஆளெல்லாம் மடிந்து சில நூறு வருடங்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து தோப்புகள் சூழும். ஆற்றுப்படுகையில் இன்றைய வீடுகள் நிர்மூலமாகி மண்ணோடு கலந்து புதிய கரடு முரடான ஆற்றுப்படுகையாகும். இதெல்லாம் முன் வீடுகளும் மனிதர்களும் இருந்த இடம் என்று நினைவு கூற ஒரு மனம்கூட மிஞ்சாது.
நாம் அழிவோம்... உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி.
.
 நன்றி:ஆனந்த விகடன்,
 
மற்றும் ஆயுத எழுத்து  [வலைப்பூ  ]