ரூ.1880 கோடி


 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசு ரூ.1880 கோடி செலவு செய்துள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .
 
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பிரச்சாரப் பயணத்தை தொடங்கியுள்ள நரேந்திர மோடி, பவன்கர் மாவட்டம் ஜெசார் என்ற பகுதியில்  பேசும்போது கூறியதாவது:-
 
"எங்கள் அரசு கட்டுப்பாடின்றி செலவு செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது .
 அது உண்மை அல்ல. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு, மக்கள் பணத்தில் இருந்து ரூ.1880 கோடி செலவு செய்துள்ளது.
 
சோனியாவின் வெளிநாட்டு பயணச் செலவு மற்றும் சொகுசு ஓட்டல்களில் தங்கியதற்கான செலவானது பாவ் நகர், ஜாம் நகர், ஜுனாகத் மற்றும் ராஜ்காட் நகராட்சியின் ஓராண்டு பட்ஜெட்டை விட அதிகம்.
இதேபோல் குடியரசுத் தலைவர் , பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் சிறப்பு விமானம் உள்ளிட்ட சலுகைகள் வெறும் காங்கிரசு எம்.பி.யான சோனியா காந்திக்கு வழங்கப்படுகிறது. அரசாங்கத்தின் எந்த பொறுப்பும் இல்லாத ஒரு மக்களவை உறுப்பினருக்கு இவ்வாறு செலவு செய்யும் பணத்தில் இருந்து குஜராத் மாநிலத்திற்கான மின்சாரத்தையே  தயாரித்துவிடலாம்."
என்று கூறியுள்ளார் .
அவர் கூறியது உண்மை என்றால் காங்கிரசு கட்சித் தலைவியாக இருக்கும் "சோனியாவுக்கு "எந்த வகையில் இவ்வளவு மக்கள் வரிப்பணம் வாரி இறைக்கப் பட்டது?"
வருக்கு எந்த பொறுப்பும் அரசில் இல்லை.அவர் நம் பிரதமருக்கு தலைவி ,அதுவும் ஒரு குறிப்பிட்ட கட்சித்தலைவி அவருக்கு ஏன் இப்படி அரசு பணம் வீணடிக்கபடுகிறது?
 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அந்தத் தாடிக்காரர் முதல்  இந்தத் தாடிக்காரர்வரை....
-கே.ஏ.தேவராஜன்
1970களில் இந்திராகாந்தியின் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் அசோக் மேத்தா. அழகான தாடி அவருடைய அடையாளம். சோஷலிஸ்ட் கட்சியில் இருந்தவர். இந்தியாவிற்கு உதவி கேட்டு அமெரிக்காவிற்குப் போனார். நியூயார்க் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் அலுவலகத்தில் அமெரிக்க ஏகபோக முதலாளிகளைச் சந்தித்தார்.

இந்தியா - தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் முதலான குழந்தைகளைப் பிரசவிக்க அந்நிய மூலதன உதவி தேவை எனக் கெஞ்சினார். என்ன சொல்லி எப்படிக் கெஞ்சினார்?

  “ அந்நிய நேரடி முதலீடுகளுக்காக இந்தியாவின் கர்ப்பப்பை திறந்துவைக்கப்பட்டிருக்கிறது” என்பதாகும். 
இதைக் கேட்ட அமெரிக்க முதலாளிகள் “அடடா! பிரமாதம்” என ஆர்ப்பரித்து வரவேற்றார்கள்.

ஆனால், அச்செய்தி இந்தியாவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் தயவிற்காக இம்மாதிரி அடிமையாக நடந்துகொள்வதா என நம் மக்கள் ஆர்த்தெழுந்தனர்.

இந்தியாவை பாரதமாதா என வணங்குகிறோம். அப்படியிருக்க, அசோக் மேத்தாவின் உதாரணம் இந்தியாவிற்கே அவமானம் என ஆவேசப்பட்டனர்.

என்னதான் இருந்தாலும் ஒரு ‘சோஷலிஸ்ட்’ அவ்வாறு கூறியிருக்கவேகூடாது என்றும் சிலர் அங்கலாய்த்துக்கொண்டனர்.

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் என்ன சொல்லி சமாளித்தார்கள்?

அமெரிக்கர்களுக்குச் சுற்றிவளைத்துப் பேசுவது பிடிக்காது; புரியாது.

அவர்களுக்கு எப்படிச் சொன்னால் புரியுமோ அப்படிச்சொல்லித்தான் திருப்திப்படுத்தமுடியும்; அப்படித்தான் அசோக்மேத்தா பேசிவிட்டார் என்று சமாதானம் கூறினார்கள்; சமாளித்தார்கள்.

இன்று சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீதம், விமானப் போக்குவரத்தில் 74 சதவீதம் மற்றும் செய்தி ஒலிபரப்பு, மின்சாரம், இன்சூரன்ஸ் என அனைத்திலும் அந்நிய நேரடி முதலீடுகள் தங்கு தடையின்றி நுழைவதற்கு வசதியாக இந்தியப் பொருளாதார வாசல்கள் தாராளமாக திறக்கப்பட்டுவிட்டன.
சுரண்டல் கொள்ளையின் சொர்க்க பூமியாக இந்தியா மாற்றப்பட்டுவிட்டது.

அன்றையத் தாடிக்காரர் அசோக்மேத்தாவின் ஆசையை இன்றையத் தாடிக்காரர்கள் மன்மோகன்சிங், மாண்டேக் சிங் அலுவாலியா முதலானோர் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக வங்கியின் இந்த முன்னாள் ஊழியர்கள் உட்பட மூலதனச் சார்பாளர்களால் இந்திய ஆட்சி அதிகாரம் கைப்பற்றப்பட்டுவிட்டது என்பதுதான் இன்றைய அபாயம்! அதுவே நமக்கு எச்சரிக்கை!

நன்றி ;தீக்கதிர் 
______________________________________________________________________________________________________________
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?