'மாட்டிக்கொண்ட மோடி
மக்களை உளவுப்பார்க்க பெகாசஸ் செயலி பயன்படுத்திய விவகாரம் குறித்து, உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். .இந்நிலையில், அந்த குழு முன் ஆஜரான இரண்டு சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள், மனுதாரர்களின் சாதனங்களில் பெகாசஸ் மால்வேர் பயன்படுத்தியதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த இரண்டு ஆராய்ச்சியாளர்கள், உச்ச நீதிமன்றக் குழுவின் முன் ஆஜராகி, அவர்களது தடயவியல் பகுப்பாய்வு விவரங்களை வழங்கினர் இரண்டு ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் ஏழு பேரின் ஐபோன்களை ஆய்வு செய்துள்ளார். அதில் இருவரது மொபைல் பெகாசஸ் செயலியின் தடம் இருப்பதை கண்டறிந்ததாக தெரிவித்தார். இரண்டு நபர்களின் சாதனங்களிலிருந்து தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவை நீக்கிய பிறகு, ஏப்ரல் 2018 இல் மனுதாரர்களில் ஒருவரின் செல்போனில் பெகாசஸ் செயலி ஊடுருவலையும், மற்றொரு போனில் 2021 ஜூன் மற்றும் ஜூலை காலக்கட்டத்தில் மால்வேர் ஊடுருவலின் பல தடயங்களை கண்டறிந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற குழு முன் வாக்குமூலம் அளித்த அந்த நிபுணர், மார்ச் 2021 இல் பல முறை நடை