ஆர்எஸ்எஸான கோவை காவல்துறை!

 

Dolo 650- விளைவுகள் 

Dolo 650 மாத்திரையை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரபல டாக்டர் சில எச்சரிக்கை தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் தொற்று பாதிப்பு உள்ளவர்கள், லேசான அறிகுறி தென்படுபவர்கள் என அனைவருக்கும் மருத்துவர்கள் பரிந்துரைத்த பொதுவான மாத்திரை எதுவென்றால் டோலோ 650 தான்.

ஆனால் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகும் என்பது குறித்து டாக்டர். செங்கோட்டையன் ஜோன்ஸ் கூறியுள்ளார். அதாவது, சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் முக்கிய மாத்திரை இது.

பல்வேறு பாராசிட்டமால் மாத்திரைகளில் Dolo-வும் ஒன்று. காய்ச்சலில் இருந்து வெளி வருவதற்கு இது உதவுகிறது என்றாலும் அதிகமாக பயன்படுத்தினால் கல்லீரலில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.

அதுபோல கல்லீரலில் ஏற்கனவே பாதிப்பு இருப்பவர்கள் Dolo என்ற இந்த பாராசிட்டமாலை அதிகமாக சாப்பிடுவதால் கல்லீரல் எளிதில் பாதிப்பு அடையும். இது காய்ச்சலை தற்காலிகமாக குறைக்கிறதே தவிர முழுமையாக குணப்படுத்துவதில்லை.


கல்லீரல் பிரச்சினைகளை மட்டுமின்றி ரத்தசோகை, மஞ்சள் காமாலை, உடல் வீக்கம், சருமப் பிரச்சினைகள், தடிப்புகள், டயேரியா போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த மாத்திரையை மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------

ஜல்லிக்கட்டு



----------------------------------------------------------------------

உ.பி,தேர்தல்

பரிதாப பா.ஜ.க,

உத்தரப் பிரதேசம் மேற்கு மாவட்டங்களில் பிப்ரவரி 10, 14 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில், பாஜகவினரின் வாகனங்களுக்கு கருப்பு கொடி காட்டுவது, கல் எறிவது, சேற்றை வீசியது என பல சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளது.

அதில் ஒன்று, பாஜக சிவால்காஸ் வேட்பாளர் மனிந்தர்பால் சிங், சூர் கிராமத்தில் பயணித்த போது, அவரை தாக்கிய 20 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், 65 பேர் அடையாளம் காணப்படமுடியவில்லை.
சிங் புகாரளிக்காத நிலையில், காவல் துறையினர் சொந்தமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து சிங் சண்டே எகஸ்பிரஸூக்கு கூறுகையில், எனது வாகனத்தை பாலோ செய்து ஏழு வாகனங்கள் வந்து, கல் ஏறிந்தும் நான் புகாரளிக்கவில்லை. அவர்கள் எனது சொந்த மக்கள். நான் அவர்களை மன்னிக்கிறேன். ஆனால் ஜனநாயக நாட்டில் வாக்கு சேகரிக்க வருபவர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றார்.

காவல் துறை கூற்றுப்படி, கல் ஏறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராஷ்ட்ரிய லோக் தள கட்சி கொடிகளை வைத்திருந்ததாகவும், கிடைக்கும் வீடியோ காட்சிகள் மூலம் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தனர்.

வரவிருக்கும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி மற்றும் RLD அமைத்த கூட்டணி மூலம், யாதவர்கள், முஸ்லீம்கள் மற்றும் ஜாட்களின் வாக்குகளை ஒன்றாக இணைக்க முடியும் என கருதியுள்ளனர்.

2013 முசாபர்நகர் கலவரத்தால் முஸ்லிம்கள் மற்றும் ஜாட் சமூகத்தினரிடையே உருவான பிளவு காரணமாக, பாஜக அதிகப்படியான இடங்களை பிடித்தது.
ஆனால், இம்முறை வேளாண் சட்டங்களால் அதிருப்தியடைந்த மேற்கு உபி மக்கள், பாஜக மீது கோபத்தில் உள்ளனர். மேற்கு உ.பி., அரசியலில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்திய ஜாட் சமூகத்தின் வாக்குகளை பெற பாஜக முயன்று வருகிறது.
டெல்லியில் ஜாட் தலைவர்களை அமித் ஷா சந்தித்து பேசினார்.

அப்பகுதி முழுவதும் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறன்றனர்.
முன்னதாக, வியாக்கிழமை மாலை, பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ-வும் முசாபர்நகரின் கட்டௌலி வேட்பாளருமான விக்ரம் சைனி, அவரது தொகுதியில் உள்ள பைன்சி கிராமத்தில் பாஜகவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார்.
அப்போது, அவரிடம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்று போராட்டக்காரர்கள் கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.


காந்தியை கோட்சே கொல்லவில்லையாம்: ஆர்எஸ்எஸ் அமைப்பாக மாறிய கோவை காவல்துறை!

கோட்சே பெயரைக் கூறக் கூடாது என காவல் ஆய்வாளர் ,உதவி ஆணையர் தகராறு.

 
நாட்டின் தேச தந்தை என்று போற்றப்படும் காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, கோவை சிவானந்தா காலனி பகுதியில் மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டனர்.
காவல்துறையினர் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த ப்ளக்ஸ் தட்டிகளை அகற்ற முயன்றனர். இதனால் காவல்துறை மற்றும் நிகழ்வு ஏற்பாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.ப்ளக்ஸ் தட்டியில் இந்து மதவெறியர்களால் காந்தி கொல்லப்பட்டார் என்கிற வாசகம் இடம்பெறக்கூடாது என போலீசார் சொன்னதால் ப்ளக்சில் இடம்பெற்றிருந்த இந்து என்கிற வார்த்தையை மட்டும் ஸ்டிக்கர் ஒட்டி நிர்வாகிகள் மறைத்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெற்றது, உறுதிமொழிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்று உறுதிமொழி வாசித்தார்.
அப்போது கோட்சேவால் சுட்டுக்கொன்ற மாகத்மா காந்தி நினைவுநாளில் என்கிற வாசகத்தை படித்ததும், மீண்டும் கூட்டத்திற்குள் குறுக்கே பாய்ந்த ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றான் என்கிற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு ஜி.ராமகிருஷ்ணன் வேறு யார் கொன்றார்கள் என்று தெரிவியுங்கள். கோட்சேதான் கொன்றான் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு தண்டனையே விதித்துள்ளது உங்களுக்கு தெரியாதா என கேள்வி எழுப்பினர். ஆனால் இதெல்லாம் எங்களுக்கு தெரியவேண்டியதில்லை. கோட்சே, இந்து போன்ற வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என உதவி ஆணையர் சுகுமார் மற்றும் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் தடுத்து தகராறில் ஈடுபட்டனர்.
கோவையில் இருப்பது தமிழ்நாடு காவல்துறையா ?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?