சனி, 31 மார்ச், 2018

உங்கள் ஆதார் தகவல்கள் யார் கையிலோ?

மோடி அரசு முனைந்து செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் இந்திய மக்களுக்கு அவதியைத்தருவதாகவும்,அழிவைத்தருவதுமாகத்தான் அமைகிறது.
ஆதார் எண்ணை மோடி அரசு வந்தபின்னர் கட்டணக்கழிப்பறை செல்வதற்கு கூட இணைக்க வேண்டிய நிலை.
ஆதார் அட்டை பாதுகாப்பில்லை.தனிமனிதரின் தகவல்களைத் திருடுகிறது என்றால் அப்படி எல்லாம் இல்லை.மிகப்பாதுகாப்புடன் உள்ளது.

10 அடி அகல சுவர் உள்ள அறையில் பாதுகாக்கப்படுகிறது என்று ஆதார் அமைப்பு கூறுகிறது.ஆதார் ரகசியம் பாதுகாக்கப்படும் கணினி தகவல் சேமிப்பு அமைப்பில்(சர்வர்)இருந்து கணினி மூலமாகவே திருடப்படுகையில் சுவரும்,இயந்திரத் துப்பாக்கியும் என்ன  பாதுகாப்பைத்தரும்.
ஜனவரி மாதம்தான் 500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட தகவல்களைப் பெற்றுவிட்டதாக தெரிவித்திருந்தது ஒரு நாளிதழ். அதை மறுத்த தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அந்த செய்தியை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் மீதும் நாளிதழ் மீதும் காவல்துறையில் புகார் அளித்தது. 
இதோ ஏர்டெல் நிறுவன வங்கி தனது ஏர்டெல் அலைபேசி சிம் அட்டை வாங்க ஆதார் என்னைத்தந்தவர்கள் விபரங்களைத்திருடி செய்த திருவிளையாடலைப்  பாருங்கள்.நம் ஆதார் தகவல்களை   மத்திய அரசு என்ன லட்சணத்தில்  பாதுகாக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்.
  டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் கைபேசி வழியாக பண பரிவர்த்தனைகளை செய்யும்படி ஊக்குவிப்பதற்கு வங்கிகள் செயலிகளை (ஆப் (APP) அறிமுகப்படுத்தின. 
மக்கள் கார் முதல் காய்கறி வரை வாங்குவதற்கு App மூலமே பணம் செலுத்தலாம் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும், வங்கித் துறையில் தனியார் கார்ப்பரேட்டுகளை அனுமதிக்கும் தாராளமய கொள்கையின் ஒரு பகுதியாக புதிய கார்ப்பரேட் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
அப்படி அனுமதி பெற்ற ஒரு நிறுவனம் மொபைல் சேவை வழங்கி வந்த ஏர்டெல். ஏர்டெல் வங்கி சேவையில் கணக்கு தொடங்கிய வாடிக்கையாளர் காசோலை மூலமாகவோ, வேறு வங்கிக் கணக்குகளிலிருந்தோ, தனது ஏர்டெல் கணக்கில் பணத்தை போட முடியும்.
ஆனால், தொலைபேசி கட்டணத்துக்கும், இணைய கட்டணத்துக்குமே நம்ப முடியாத ஏர்டெல்-ஐ நம்பி பணத்தை போடுவதற்கு பலர் தயாராக இல்லை. 
மேலும், பல வணிக வங்கிகளும் App மூலமாக பண பரிமாற்ற வசதியை தர ஆரம்பித்தன. எனவே தனது வங்கி சேவைக்கு வாடிக்கையாளர்களை புதிதாக சேர்ப்பதற்கு ஏர்டெல் ஒரு வழியை கண்டுபிடித்தது.
மொபைல் சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தமது தொலைபேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது ஆதார் மூலம் அனைத்து தகவல்களையும் இணைக்கும் மோடி அரசின் திட்டத்தின் ஒரு பகுதி. 
அந்த கட்டாயத்தின் கீழ் தமது ஆதார் எண்ணை, தமது ஏர்டெல் மொபைல் எண்ணுடன் இணைத்திருந்த வாடிக்கையாளர்களை ஏர்டெல் குறிவைத்தது.

ஏர்டெல் பேமண்ட் வங்கி 
 தலைமைச் செயல் அலுவலர் – சசி அரோரா.
இதற்கிடையில், டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக அனைவரும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என்று கெடு விதித்தது, மோடி அரசு. புதிய வங்கிக் கணக்குகளை தொடங்குவதற்கு ஆதார் எண் அவசியம் என்று வலியுறுத்த ஆரம்பித்தன வங்கிகள். 
ஏற்கனவே கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் அவர்களது வங்கி சேவைகள் முடக்கப்படும் என்று தொலைபேசி மூலமும், குறுஞ்செய்திகள் மூலமும் நச்சரிக்க ஆரம்பித்தன. (இப்போது ஆதார் திட்டத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு சொல்வது வரை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.)
இப்போது, வங்கிக் கணக்கு ஆரம்பிக்க ஆதார் எண் அவசியம் (போதுமானது), மொபைல் எண்ணுடனும் ஆதார் எண் இணைப்பு என்ற இரண்டையும் சேர்த்து பாருங்கள்.
வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு தேவையான ஆதார் எண்ணையும், கணக்குடன் இணைப்பதற்கான மொபைல் எண்ணையும் தன் கட்டுப்பாட்டில் பெற்ற ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் ஏர்டெல் வங்கிக் கணக்கை தொடங்கி விட்டது. 
இந்த வாடிக்கையாளர்கள் தமது சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக இணைத்திருந்த வங்கிக் கணக்கை மாற்றி ஏர்டெல் வங்கிக் கணக்கை இணைத்து விட்டது. 
இதற்கும் ஆதார் எண்ணும், தொலைபேசி எண்ணும் தன் கட்டுப்பாட்டில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டது. இந்த வாடிக்கையாளர்களின் சமையல் எரிவாயு மானிய பணம் அவர்களது ஏர்டெல் வங்கிக் கணக்குக்குள் போகத் தொடங்கியது.
இவ்வாறாக வாடிக்கையாளருக்குத் தெரியாமலேயே அவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அவரது பணத்தையும் அந்த கணக்குக்கு திருப்பி விட்டிருக்கிறது ஏர்டெல். 
இவ்வாறாக 31 லட்சம் கணக்குகள் மூலம் ரூ 190 கோடியை திசை திருப்பியுள்ளது அம்பலமானது.
இந்த மோசடியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஆதார் எண்ணை தொட்டில் முதல் சுடுகாடு வரை அனைத்துடனும் இணைப்பது நம் வாழ்க்கையை மூக்கணாங்கயிறு போட்டு கார்ப்பரேட்டுகள் கட்டுப்படுத்துவதற்கான வழி என்பதைத்தான்.

பெரும்பாலோனோர் அன்றாடம் பயன்படுத்தும் தேடல் தளமான கூகுளில் ஆதார் மூலம்   தனிநபர் தகவல்கள் கசிந்திருக்கின்றன.  
 முன்பெல்லாம் ஆதார் தகவல் கசிந்திருப்பதை நிரூபிக்க முயற்சி செய்பவர்கள் அந்தத் தகவல்களை அடைவதற்கு மூளையை சற்று கசக்க வேண்டியிருந்தது. 
ஆனால் இந்த முறை அதிகமாக மெனக்கெடாமல் சும்மா ஒரு கீ வேர்டை தட்டினாலே தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறது கூகுள். 
"Mera Aadhaar meri pehchan filetype:pdf " என்று கூகுளில் தேடினால் ஆதார் தகவல்கள் தென்படவே அதிர்ந்து போனார்கள் இணையவாசிகள். 
ஆதார் டேட்டாபேஸில் இருந்து நேரடியாக இல்லாமல் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தும் பிற நிறுவனங்கள் மூலமாக இந்தத்  தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 
pdf பார்மெட்டில் புகைப்படம், இருப்பிடத் தகவல், ஆதார் எண் என முழுமையான தகவல்கள் அதில் இருந்திருக்கிறது. குறிப்பிட்ட மூன்று இணையதளங்களில் இருந்துதான் அதிக அளவில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆதார் திட்டத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பை
 உருவாக்கிய நந்தன் நீலகேணி
ஒருவர் ஆதார் எண்ணை கைபேசியுடனும் வங்கிக் கணக்குடனும் இணைக்கும் போது அவரது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளையும், கைபேசியின் இடம் அறியும் தொழில்நுட்பம் மூலம் அவரது பயண விபரங்களையும், ஒரு கார்ப்பரேட் நிறுவனமோ அரசோ கண்காணித்து தெரிந்து கொள்ள முடியும். 
நாட்டின் 120 கோடி மக்களின் இத்தகைய விபரங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் வசம் போய், அவர்கள் மக்களை தம் விருப்பப்படி ஆட்டுவிக்க முடியும். 
இது நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக முடியும்.
ஏர்டெல் செய்த மோசடியின் அளவு ரூ 190 கோடியாக இருந்தாலும், இது ஆதார் என்ற வெடிகுண்டின் நாசவேலை சாத்தியங்களை கோடிட்டு காட்டும் பனிப்பாறையின் விளிம்பு மட்டுமே.
உதாரணமாக, இனிமேல் சிறுநீரகம் தானம் செய்பவர்களின் ஆதார் எண்ணை சரி பார்த்து, அவரது தொலைபேசியில் ஒப்புதல் பெற்று விட்டால் சட்டரீதியாக அவரது அனுமதி பெறப்பட்டு விட்டதாக கருதப்படும் என்று ஒரு சட்டத்தை அரசு இயற்றி விடுவதாக வைத்துக் கொள்வோம். 
அதன்படி, சில லட்சம் குடிமக்களின் ஆதார் எண்+தொலைபேசி எண் விபரங்களை கைப்பற்றும் எந்த சிறுநீரக திருட்டு கும்பலும் சட்ட பூர்வமாக யாருடைய சிறுநீரகத்தையும் எடுத்துக் கொள்ளும் உரிமையை பெற்று விடும்.
இறக்குமதிக்கான LOU என்ற வசதியில் இருந்த ஓட்டையை பயன்படுத்தி ரூ 12,000 கோடிக்கும் மேல் ஆட்டையை போட்ட நீரவ் மோடி போன்ற முதலாளிகளின் நாடு இது. 

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் பல்வேறு சேவைகளி் சேர்க்கைகளை பயன்படுத்தி ஏர்டெல் போன்று நூற்றுக் கணக்கான ஓட்டைகளை கண்டுபிடித்து மக்கள் தலையை மொட்டை அடிக்க இந்திய ‘தொழில் முனைவர்கள்’ காத்திருக்கிறார்கள். 
நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது.
ஆனால், மோடி அரசோ, ஏர்டெல் செய்த இந்த முறைகேட்டை ஏதோ சட்ட ஒழுங்கு பிரச்சனை போல பார்த்து சொற்ப தொகை அபராதம் மட்டும் விதித்துள்ளது. 
டஜன் கணக்கில் தனியார் கார்ப்பரேட்டுகளை வங்கி தொடங்கி நடத்த அனுமதிப்பதை ரத்து செய்யவோ, ஆதார் எண்ணை அனைத்துடனும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவதையோ நிறுத்தவில்லை.
அரசுதான் ஆதார் எண்ணை மக்கள் மீது திணித்தது. எரிவாயு மானியத்துடனும், வங்கிக் கணக்குடனும், வருமான வரி கணக்குடனும் இணைக்கும்படி கட்டாயப்படுத்தியது. 
எனவே, இந்த ஊழலுக்கும் இனிமேல் நடக்கவிருக்கும் மோசடிகளுக்கும் ஆதார் திட்டத்தை முரட்டுத்தனமாக திணித்த மோடி அரசும், ஆதார் திட்டத்தை அறிமுகப்படுத்திய முந்தைய மன்மோகன் சிங் அரசும், அதை அமல்படுத்த உதவிய இன்ஃபோசிஸ் நந்தன் நீலகேணியுமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இப்போதாவது நாம் விழித்துக் கொண்டு ஆதார் என்ற மக்கள் விரோத திட்டத்தையும், அதை கட்டாயமாக புகுத்தும் மோடி அரசின் அடக்குமுறையையும் எதிர்க்க வேண்டும்.
500 ரூபாய் செலவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களின் ஆதார் தகவல்களைப் பெறலாம் .
  =====================================================================================  
ன்று,
மார்ச்-31.
 • ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)
 • ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)
 • மால்ட்டா விடுதலை தினம்(1979)
 • முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)
======================================================================================

                                                            செவ்வாய் தோஷம்.?வெள்ளி, 30 மார்ச், 2018

பாஜகவுக்கு எதிராக அமித்ஷா ?

கர்நாடகத் தேர்தல் பாஜகவினரை கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது. 

பிள்ளையார் பிடிக்ககுரங்கான கதையாக, பாஜக ஒன்றைச் செய்யநினைத்தால், சம்பந்தம் இல்லாத பிரச்சனை ஒன்று வந்து, எடியூரப்பா உள்ளிட்ட பாஜகதலைவர்களை அலைக்கழித்துக் கொண்டி ருக்கிறது. 

முதல்வர் கனவில் இருக்கும் எடியூரப்பாவுக்கு, சொந்தக் கட்சியும், அதன் தலைவர் களுமே எதிரிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் பாஜக குறுக்கு வழி யில் ஆட்சியைப் பிடித்து, பாஜக-வைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்கிறார். 

கோவா மாநிலத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மகதாயி நதிநீர் தொடர்பாக நீண்ட காலப் பிரச்சனை இருக்கும் நிலையில், பாரிக்கர் மூலம் அப்பிரச்சனையை தீர்த்து விட்டால்; அதுகர்நாடகத் தேர்தலில் தனக்கு சாதகமாக இருக்கும் என்று எடியூரப்பா கணக்குப் போட்டார்.


குறிப்பாக, வட கர்நாடகா விவசாயிகளின் வாக்குகளை அள்ளி விடலாம் என்பது அவரது திட்டம். அந்த வகையில், நீண்டகால மகதாயி பிரச்சனையை 2017 டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தீர்த்து வைப்பேன் என்று எடியூரப்பா அறி வித்தார். ஒரே ஓட்டமாக ஓடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வீட்டில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையும் நடத்தினார். 

ஆனால், கோவா நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் பாஜக-வின் கூட்டணி கட்சி அமைச்சர் வினோத் பலின்கரோ, மகதாயி நதிநீரை ஒரு சொட்டு கூட கர்நாடகாவுக்கு தரவே முடியாது என்று கூறிவிட்டார்.

அவரைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கரும் இப்பிரச்ச னையில் நழுவிக் கொண்டார்.சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல,இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த கர்நாடக விவசாயிகள், எடியூரப்பா அவருக்கு அவரே விதித்துக் கொண்ட டிசம்பர் 15 காலக்கெடு முடிந்ததும் போராட்டத்தில் குதித்தனர்.
 பந்த் நடத்தி மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். 

கர்நாடகத்தில் உள்ள பாஜக அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். மகதாயி பூமராங் ஆனது. எடியூரப்பாவுக்கும்- பாஜக வுக்கும் சொந்தக் காசில் சூனியம் வைத்தது போல மாறியது.சரி இது போகட்டும். 

நமக்குத்தான் லிங்காயத் மக்களின் ஆதரவு இருக்கிறதே அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று எடியூரப்பா ஆறுதல் அடைந்தார். ஆனால்,அதற்கும் ஆபத்து வந்தது. 

“தாங்கள் இந்துக்கள் அல்ல; பிராமணிய சடங்குகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை; எனவே, எங்களை தனிச்சமயமாக அறிவிக்க வேண்டும்” என்பது லிங்காயத் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. 
ஆனால், பாஜக அதனை ஏற்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், பெல்காவியில் லட்சக்கணக் கில் திரண்ட லிங்காயத் மக்கள், தங்களை தனி மதமாக அறிவிக்கக் கோரி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். மத்திய பாஜக அரசுதான் தங்களுக்கு எதிராக இருப்பதாக கூறி தங்களின் கண்டனங்களை முழங்கினர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையா, லிங்காயத்துக்களின் கோரிக்கையை ஏற்பதாக வும், அவர்களைத் தனி மதமாக வகைப்படுத்த தயார் என்று அறிவித்தார். லிங்காயத்துக்கள் ஆனந்தக் கூத்தாடி விட்டனர். 
ஆனால், எடியூரப்பாவுக்கு அதுவே பெரும் எரிச்சலாக மாறியது. 

லிங்காயத்துக்கள் இந்து சமயத்தின் ஒரு பகுதி; அவர்கள் தனியாக போக விடமாட்டேன் என்று எடியூரப்பா கூற, அவருக்கு எதிராக லிங்காயத்துக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் இறங்கி, எடியூரப்பாவையும், பாஜக-வை வெளுத்தெடுத்து விட்டனர்.
 மறுபுறத்தில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையாவையே ஆதரிப்ப தென்றும் அவர்கள் முடிவு செய்தனர். இதனால், தான் சார்ந்த லிங்காயத் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற எடியூரப்பாவின் இரண்டாவது கனவிலும் மண் விழுந்தது.போனதெல்லாம் போகட்டும். அமித்ஷா இருக்கிறார் நம்மைக் கரையேற்ற, அவர்நினைத்தால், தோற்றவர்களையும் ஜெயித்த தாக அறிவிக்க வைப்பார்; வோட்டிங் மெஷின் களையும் கூட மாற்றி விடுவார். கலவரம் நடத்தி யாவது நம்மை முதல்வராக்கி விடுவார் என்று அடுத்த நம்பிக்கைக்கு எடியூரப்பா தாவினர்.

அது தற்போது, ஏழரைச் சனி எடியூரப்பா வுக்கா, அமித்ஷாவுக்கா என்று சனீஸ்வர பகவானே குழம்பிப் போகும் அளவிற்கு பாஜக-வினரை கதிகலங்க வைத்துள்ளது.
எடியூரப்பாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று பெங்களூருவில் டெண்ட் அடித்துள்ள அமித்ஷா, தேர்தல் பிரச்சா ரத்தின் முதல் நாளிலேயே எடியூரப்பாவுக்கு எதிராக பேசி மாட்டிக் கொண்டார்.

அவர்கள் பாட்டுக்கு இருந்த பத்திரி கையாளர்களை அழைத்து, பேட்டி என்று சொல்லி,உரையாற்றத் துவங்கிய அமித்ஷா, “ஊழலில் ஊறித்திளைத்த அரசு எது என்று போட்டி வைத்தால், நம்ம எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம்” உளறிக்கொட்ட, அருகிலிருந்த எடியூரப்பா ஆடிப்போய் விட்டார். 

பாஜக தலை வர்கள், தொண்டர்கள் அத்தனை பேரும் பதறி விட்டனர்.அமித்ஷா தெரிந்துதான் உளறினாரா, தெரியாமல் உளறினாரா, என்று கர்நாடக பாஜக வட்டாரத்திற்குள் இப்போது வரை ஒருபட்டிமன்றமே நடந்து வருகிறது. 

காங்கிரஸ் காரர்களும், சமூகவலைத்தள வாசிகளும் வழக்கம்போல அமித்ஷாவின் உளறலை ஊடகங்களில் அள்ளிப்போட்டு பாஜக-வை கர்நாடகத்தில் ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கி விட்டனர். சமூகவலைத்தளங்களில் அமித்ஷாவின் உளறல் இன்னும் சூடு ஆறாமல் பரிமாறப்பட்டுக் கொண்டு வருகிறது.

ஆனால், அதற்குள் பாஜக எம்.பி. பிரகலாத்ஜோஷியின் நாக்கில் இருந்த சனி மீண்டும் அமித்ஷாவை விடாமல் இழுத்து மீண்டும் எதிர்க்கட்சியினர் இருக்கும் தெருவில் தள்ளியிருக்கிறது.பெங்களூரு பொதுக்கூட்டத்தில், எடியூரப்பாவுக்கு ஆதரவாக புதன்கிழமையன்று அமித்ஷா பேசியிருக்கிறார். 

அப்போது அவர் மோடியின் சாதனைகளையும் அள்ளிவிட்டுள்ளார். இந்த பேச்சை ஹிந்தியிலிருந்து கன்னடத்திற்கு மொழியாக்கம் செய்யும் வேலை, பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 அப்போது, “ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் சித்தராமையா ஒன்றும் செய்யமாட்டார்” என அமித் ஷா கூற, பிரகலாத் ஜோஷி உண்மையைச் சொன்னரோ, அல்லது அமித்ஷாவின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து சொன்னாரோ, “நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது; அவரை நம்பாதீர்கள்” என்று மொழிபெயர்த்து விட்டார்.

பட்ட காலிலேயே படும் என்ற கதையாக, பாஜக-வினர் ஒரேயடியாக வெந்து நொந்து விட்டனர். அமித்ஷாவின் அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதியும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

                                                                                                                                                                                       தொகுப்பு: அ.மாரிமுத்து.
                                                                                                                                                                                                   (முகநூலில்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் நமது தமிழ் மொழி 2-வது இடம் பெற்றுள்ளது. 


ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ் மொழியில்தான் அதிக இணையதளங்கள் உள்ளதாக உலக தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. 


ஜப்பன், சீன மொழிகளை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை தமிழ் மொழி பிடித்துள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக நலன்களைப் பெற்றுத் தரத்தானே மக்கள் வாக்களித்து அனுப்பியுள்ளார்கள்.
அவர்களின் அடிப்படை தேவையான காவிரி நீரை வேறு மாநிலத்துக்கு ஆதரவாக தர மறுக்கும் மத்திய அரசின் மக்களவையில் இவர்கள் இருந்து என்னதான் சாதிக்கப் போகிறார்கள்.

இதற்க்கும் முன்னரும் ஒன்றையும் புடுங்கவில்லை.இனியும் புடுங்கப்போவதில்லை. 

வெட்டியாக இருப்பதை விட பதவியை விட்டு ஒட்டு மொத்தமாக விலகினால் அது வரலாற்றில் மத்திய அரசின் துரோகத்தைப்பதிவு செய்யும்.

"பியுட்டிபுல் காஷ்மீர் "பாடியதைத்தவிர இவர்கள் இவ்வளவு நாள் தமிழகத்துக்கு செய்த துரோகங்களும் பரிகாரமாகும் .
அதை விட்டு உயிரை விடப்போகிறதெல்லாம் பேத்தல்,நாடகம்,மக்களை ஏமாற்றும் செயல்.

வேண்டுமானால் கருணைக்கொலைக்கு தமிழக  மக்கள் குடியரசுத்தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
=====================================================================================
ன்று,
மார்ச்-30.


 • அமெரிக்க தேசிய மருத்துவர்கள் தினம்

 • தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்(1709)

 • அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது(1822)

 • ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்டது(1858)


ஆனந்தரங்கம் பிள்ளை
30.3.1709 - 16.1.1761
பதினெட்டாம் நூற்றாண்டு நிகழ்வுகளை அறிந்துகொள்ள, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் படித்தால் போதும்! 
அந்த அளவுக்கு அவற்றை வரலாற்றுப்பூர்வமாக எழுதி வைத்துள்ளார். 
தமிழ்மொழிதவிர இதர மொழிகளையும் அறிந்தவர். அதனால், புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் இவரை, திவானாக அமர்த்திக் கொண்டனர். ஜோதிடவியல், வானவியல் மட்டுமன்றி சிறந்த புரவலராகவும் இருந்தார்.
ஆரம்பத்தில், பாண்டிச்சேரியில் திவானாக இருந்த அப்பாவுக்கு உதவியாக இருந்தார் ஆனந்தரங்கம். அப்போது, தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளை நாட்குறிப்புகளாக எழுதிவந்தார். 

பிறகு, பிரெஞ்சு ஆளுநர் டூப்ளேயின் துபாஷியாக (இருமொழி வல்லுநர், நேரடி மொழிபெயர்ப்பாளர்) 1747இல் நியமிக்கப்பட்டார். பணியில் இருந்தபோதும், நாட்குறிப்புகளைத் தவறாமல் எழுதினார்.


அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது. 25 ஆண்டுகள் (1736 செப்டம்பர் முதல் 1760 செப்டம்பர் வரை) எழுதிய நாட்குறிப்பில் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், தண்டனைகள், கடல் வணிகம், வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகள் பதிவாயின.

நாட்குறிப்புகள் எளிமையான தமிழில் உள்ளன. பல மொழிகள் அறிந்திருந்தும், நாட்குறிப்பைத் தமிழில் எழுதினார் என்பது தமிழுக்குக் கிடைத்த பெருமை. அக்காலப் பேச்சுத் தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகள், பிறமொழிகளில் இருந்து வந்த சொற்கள், வழக்கிழந்த சொற்கள் போன்றவற்றையும் பதிவுசெய்துள்ளார் ஆனந்தரங்கம் பிள்ளை.

அவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே நாட்குறிப்புகள் கிடைத்தன. 
அவற்றை பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது. அதற்குப் பிறகு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த முயற்சியால் தமிழில் கிடைத்தது.
அதுவரை மட்டுமல்ல இன்றுவரை  யாரும் செய்திடாத அரும்பணியைச் செய்த ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு, வரலாற்றின் அரிய பொக்கிஷம்!
=====================================================================================
காலாவதியானாரா காரல் மார்க்ஸ் ?

காரல் மார்க்­ஸின் 200வது பிறந்­த­நாள், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­ன­ரால் உல­கம் முழு­வ­தும் இந்த ஆண்டு கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

மார்க்­ஸின் பிறந்த நாளைச் சிறப்­பிக்­கும் வித­மாக, ஜெர்­ம­னி­யில் அவர் பிறந்த ட்ரையர் நக­ரில் ஒரு புது­மை­யான  முறையில் கொண்டாடினார்கள்.

அந்­ந­க­ரில் இருக்­கும் எல்லா போக்­கு­வ­ரத்து சிக்­னல் விளக்­கு­க­ளி­லும் காரல்­மார்க்­ஸின் உரு­வம் ஒளிர்­கி­றது. 
பாத­சா­ரி­கள் செல்­ல­லாம், செல்­லக்­கூ­டாது என்­ப­தற்­கான விளக்­கு­க­ளில் மார்க்ஸ் உரு­வம் தெரி­கி­றது.

சிவப்பு விளக்கு எரி­யும்­போது, இரு கைக­ளை­யும் விரித்­த­படி மார்க்ஸ் நிற்­கி­றார்.
பச்சை விளக்கு எரி­யும்­போது, அவர் நடப்­பது போன்ற உரு­வம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

200 ஆண்டுகளானாலும் உலக மக்கள் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான் மார்க்ஸ் இருக்கிறார்.

தொழிலாளர் இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

சூத்திரர்கள் இருக்கும்வரை பெரியாரும் இருப்பார்.

==================================================================================


வியாழன், 29 மார்ச், 2018

ஸ்டெர்லைட்டை மூடு

லண்டனில் வசிக்கும் அணில் அகர்வாலின் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனம் மும்பையை தலைமை அலுவலகமாக கொண்டு இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தொழிற்சாலைகள் சுரங்கங்கள் அமைத்து தாதுக்களை சுத்திகரித்து பிற தொழில்களுக்கு தேவையான உலோக மூலகங்கள், அமிலங்கள், பலமான கான்கீரிட் டிற்கு தேவையான செயற்கை மணல் ஆகியவைகளை மலிவு விலையில் உலக சந்தையில் விற்பதாக மார்தட்டுகிறது.

ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் குறிப்பாக தூத்துக்குடியிலும். பூமியையும் காற்றையும் கெடுக்கும் பழைய தொழில் நுட்பங்களையும் பழைய கருவிகளையும் வைத்து தொழிலாளர்களை நோகடித்து சுரண்டுவதையும் .
 எதிர்க்கும் மக்களை பஜ்ரங்தள் போன்ற குண்டர் படையை வைத்து மிரட்டுவது தீவைத்து கொல்வது போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அது சாதுர்யமாக மறைத்துவிடுகிறது. 
அவற்றை காசு வாங்கிக்கொண்டு  ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. ஸ்டெர்லைட் மக்கள் தொடர்பு அலுவலர் கூட்டம் என்ற பெயரில் செய்தியாளர்களை மாதாமாதம் அழைத்து கவனித்து விடுகிறார்.உணவு,உற்சாகாப்பானம்,கையில் பண உறை என்று குளிப்பாட்டி விடுகிறார்.மது வெளியில் கொடுக்கப்பட்டு விடுகிறது.மாது மட்டும் இல்லை.பெரிய கடைகளில் 5000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கிக்கொள்ள அடிக்கடி பரிசு அட்டை வழக்கப்படுகிறது.
வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலையை 1975ல் தூத்துக்குடியில் இயக்க துவங்கிய பொழுது உள்ளூர்வாசிகள் முதலில் வர வேற்றனர். 

காரணம் பலருக்கு வேலை வாய்ப்பு,ஆளுங்கட்சி அதிமுகவின் முதல்வர் ஜெயலலிதாவே வந்து கலந்து கொண்டு நாச வேலைக்கு அடிக்கல் நாட்டி மக்களை ஏமாற்றி வைத்திருந்தனர்.
தமிழ் மாந்தன் என்பவர் ஸ்டெர்லைட் அழிவைப்பற்றி மக்களிடம் எடுத்துக்கூறிய  போது அதிமுகவினராலும்,காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டு தான் பார்த்துக்கொண்டிருந்த பணியையும் இழந்து காணாமல் போக்கடிக்கப்பட்டார்.
ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த தாதுக்களிலிலிருந்து தாமிர உலோகத்தை (காப்பர்) பிரித் தெடுக்கும் வேலையில் திரளும் திட விஷ ஆர்சினிக் கழிவுகளை ஆயிரக்கனக்கான டன்களை கொட்டி நிலத்தையும் நீரையும் கெடுத்த பிறகே மக்கள் உணரத் தொடங்கினர். 
சல்ஃபர்-டை ஆக்சைடு அமோனியா போன்ற எரிசலூட்டும் வாயுக்களை அவ்வப் பொழுது புகை போக்கி மூலம் காற்றிலே கலந்து சுற்றி வாழும் மக்களையும் பிஞ்சு குழந்தைகளையும் கண் எரிச்சல் இருமல் தோலில் புண்கள் போன்ற உபாதைகளை உணரத்தொடங்கிய பிறகுதான் இதன் ஆபத்தை உணர்ந்தனர்.
லண்டன் வாசி அணில் அகர்வால் 

அறிவியல் பொருளாதார மூடர்கள் இந்தியவையும் தமிழகத்தையும் இன்று நிர்வகிப்பதால் தூத்துக்குடியில் 20க்கும் மேற்பட்ட ரசாயன ஆலைகளை அடுத்தடுத்து தனியாரை அமைக்கவிட்டுள்ளனர் .
இதனால் திட மற்றும் வாயு விஷக்கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியில் தள்ளி விட்டு மற்றவர் மேல் பழியை சுமத்தி தப்பிட முடிகிறது. 
அதில் வேதாந்தா, நீதிமன்றத்தில் மற்றவர் மேல பழியை போட்டு வாதாடி தப்புவதற்கு அதிகாரிகளே துணைபோனர் .
மக்களின் போராட்டங்களின் விளைவாக ஐந்து முறை ஆலையை மூட நேர்ந்தது . 
வேதாந்தா ஒவ்வொரு முறையும் நீதி மன்றம் செல்லும் பின்னர் ஆலையை திறந்துவிடும். 
அதில் வேதாந்தா நிர்வாகத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியமே துணைபோகிறது .
மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை சுற்றி 250 மீட்டர் அகலத்தில் மரங்கள் வளர்க்க வேண்டும் என்று முதலில் உத்தரவிட்டது. 
வேதாந்தா நிர்வாகம் அது முதலீட் டு செலவாகி உற்பத்தி செலவை கூட்டும் என்பதால் 25 மீட்டர் அகலத்தில் மரங்கள் வளர்க்க அனுமதி கேட்டது. 
அதனை மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஏற்றுக் கொண்டது.
2010ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஆலையை மூட தீர்ப்பளித்தது வேதாந்தா மேல் முறையீட்டில் கட்டபஞ்சாயத்து தீர்ப்பாக உச்ச நீதி மன்றம் 100 கோடி ரூபாய் தண்டம் விதித்து தொழிற் சாலையை திறக்க உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் குழு சமர்பித்த புலன்விசாரனை அறிக்கை இந்த நிறுவனத்தின் கிரிமினல் நடவடிக்கை களை பட்டியலிட்டது.
ஒடிசா மக்கள் போராட்டக்குழு 

2003ம் ஆண்டில் ஒடிசா மாநிலத்தின் காடுகளில் அலுமினிய சுரங்கத்தை உருவாக்க அங்குவசித்த குடும்பங்களை விரட்டிட குண்டர் படையை (பஜ்ரங்தள்) ஏவி பயமுறுத்தியது. 
அதனை சாதுர்யமாக இந்து கிருத்துவ மத மோதல்களாக காட்டிட ஒரு பாதிரியார் குடுமபத்தையே எரித்து திசை திருப்பிவிட்டது. 
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாம்பியாவில் தாதுக்களை சுத்தம் செய்ய காஃபு ஆற்றில் கழிவுகளை கொட்டி நீரை கெடுத்த குற்றச்சாட்டுக்கு ஆளானது. 
அங்குள்ள நீதிமன்.றம் வேதாந்தா நிறுவனத்தை பொருப்பற்ற லாப வெறிபிடித்த நிறுவனம் என்று தீர்ப்புக் கூறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்கவைத்தது. 
சாதுர்யமாக அரசிற்கு தாது எடுக்க கொடுக்க வேண்டிய கட்டணத்தை கொடுக்காமல் நிவாரணமாக கொடுத்து அரசையே ஏமாற்றியது.
 உச்ச நீதிமன்றம் இந்த அறிக்கையை ஏற்று இருந்தால் அகர்வாலை ஏமாற்று பேர்வழி என்று தீர்ப்பை வழங்கியிருப்பார்.
தமிழக மக்களின் கவனத்திற்கு வேதாந்தா என்ற பன்னாட்டு நிறவனத்திற்கு பஜ்ரங்தள் இருப்பது போல் இந்துத்வா அமைப்புகள் அனைத்தும் ஏதேனும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஸ்பான்செர் செய்யும் கூலிபட்டாளமாகவே இருக்கும் . 
ஒடிசா அலுமினிய ஆலை 

இந்துத்வ.அரசியல் ரவடி ராஜா வின் ஸ்பான்சர்யார் என்பதை கவனியுங்கள்.

பல ஆண்டுகளாக சி.ஐ.டி.யு மார்க்சிஸ்ட் கட்சி ம.தி.முகவும் ஆலையை மூடக் கோரி இயக்கத்தை துவக்கினர் ஊடகங்கள் பரபரப்பான செய்தியாக வெளியிட்டன. 
அதே வேளையில் வேதாந்த நிறுவனத்தின் கிரிமினல் நடவடிக்கைகளை இருட்ட டிப்பு செய்தன . . சி.ஐ.டியு தலைவர்கள்தான் ஆக்க பூரவமான தீரவிற்கு குரல் கொடுத்தனர் .
தாதுவை இறக்குமதி செய்து காப்பர் தயாரிக்கும் ஸ்டெர் லைட் ஆலையை மூட வேண்டும். 
அதற்கு பதிலாக தாது மணலை வைகுந்த ராஜன் போன்றோர் ஏற்றுமதி செய்வதை தடுத்து அதனை பயன்படுத்தி பொதுத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்ட தொழிற்சாலை அமைக்க வேண்டும். 
தூத்துக்குடியை நரகமாக்கும் ரசாயன ஆலைகளை மூட வேண்டும். 
நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி மாசுகட்டுப் பாட்டு வாரியமே சுற்றுப்புற சூழலை பேணுகிற முறை புகுத்த வேண்டும்.
இடது சாரி அரசியலே சரியான தீர்வை தரும். மற்ற அரசியல் வேதாந்தா போன்ற கார்ப்பரேட்களின் ஏவல் படி அசையும்.
                                                                                                                    -மீனாட்சி சுந்தரம் (தீக்கதிர்)
=====================================================================================
ன்று,
மார்ச்-29.
 • தாய்வான் இளைஞர் தினம்
 •  பணியிடங்களில்  புகைப்பிடித்தலை  தடை செய்த முதல் நாடுஅயர்லாந்து (2004)
 • யாஹூவின் 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)
 • பூமி மணித்தியாலம், அனைத்துலக மயமாக்கப்பட்டது(2008)
======================================================================================


புதன், 28 மார்ச், 2018

'காப்பர் உனக்கு, கேன்சர் எனக்கா '

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த பேரணியில் கலந்து கொண்ட மக்கள் முழக்கமிட்ட வாசகம் இது.  அவர்கள் ஏந்திய பதாகைகளிலும் இந்த  வாசகம்தான் அதிகளவில்   இடம் பிடித்திருந்தன. 
காப்பர் - ஸ்டெர்லைட்
தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையில் முதன்மையாக காப்பர் கேத்தோடு ( Copper Cathode) மற்றும் காப்பர் ராடுகள் (Copper rods) உற்பத்தி செய்யப்படுகின்றன. 

நாம் வீடுகளில் பயன்படுத்தப்படும் வயர்களில் உள்ள   மின்சாரக் கம்பிகள் (Wires) காப்பரால்  ஆனவையே. ட்ரான்ஸ்பார்மரில் மின்சாரத்தைக் கடத்துவதற்காக காப்பர் ராடுகள்தயாரிக்கப்படுகின்றன. 
காப்பர் ராடுகள், கேத்தோடுகள் தயாரிக்கும்போது வெளிப்படும் நச்சுக்காற்றால் நுரையீரல் சம்பந்தமான வியாதிகளும், காப்பர் கலந்த உணவையும் தண்ணீரையும் எடுத்துக்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் பாதிப்புகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். 

தமிழ்நாட்டிலேயே தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன. 
உண்மையில், காப்பர், உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்துமா? அந்த மக்களின் அச்சம் உண்மை தானா? 
 நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம். 
"தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வாயுக்களால் கண்டிப்பாக காற்று மாசடையும். 

அதிலும்  காப்பர் தயாரிக்கும் ஆலையில் இருந்து வெளிவரும் வாயுக்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. என்னதான் முறையாகப் பராமரித்தாலும் கூட காப்பர் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.  
நுரையீரல் புற்றுநோய்
காப்பர் கலந்த நச்சுக்காற்றை நேரடியாகச் சுவாசிக்கும்போது, அதில் உள்ள  தனிமங்கள் மூச்சுப்பாதையில் அப்படியே படிந்துவிடும். 

இது ரத்தத்தில் கலக்கும்போது சுவாச மண்டலம் விரைவாகப் பாதிக்கப்பட்டு,  நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அலர்ஜி, சி.ஓ.பி.டி ( Chronic Obstructive Pulmonary Disease ) சுவாசக்கோளாறு போன்ற உடல்நலப் பிரச்னைகளை உண்டாக்கும். 

நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைத்துவிடும். இதன் தாக்கம் இப்போது ஓரளவுக்குத்தான்  தெரியவந்திருக்கிறது. 
அடுத்த தலைமுறை இதன் பாதிப்பை அதிகமாக எதிர்கொள்ளும்" என்கிறார் அவர்.  

இது குறித்து நம்மிடம் பேசிய சிறுநீரக மருத்துவ நிபுணர் சேகர், "காப்பர் கலந்த உணவையும், தண்ணீரையும்  எடுத்துக்கொள்ளும்போது சிறுநீரகம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. 

காப்பர் போன்ற தனிமங்கள்  சிறுநீரகத்தின் ஃபில்ட்ரேஷன்  ஆற்றலை  குறைக்கும்.

 சிறுநீரகத்தில்  அப்படியே  தங்கி ஃபில்ட்ரேஷன்  இஞ்சுரியை (Filteration injury) ஏற்படுத்தும். நாளடைவில் சிறுநீரகம் முழுமையாக பாதிப்பைடைய வாய்ப்புள்ளது" என்கிறார். 
புற்றுநோய் சிறப்பு மருத்துவர் இராமநாதனிடம் பேசினோம்.  "காப்பர் நிறைந்த உணவையோ, தண்ணீரையோ அதிகமான அளவில்  எடுத்துக் கொள்ளும்போது, அதன் பி.ஹெச் அளவு மாறும்போது கேன்சர் வரக்கூடிய வாய்ப்புள்ளது. 

காப்பர் மட்டுமல்ல எந்தவொரு தனிமமும் உடலில் அதிகமாகும்போது புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. " என்கிறார் அவர்.
உலகளவில் மனித இறப்புக்கான காரணிகளில் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக ஏழு லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். 

அதேபோல் 5,56, 400 இறப்புக்கள் புற்றுநோயால் ஏற்படுகின்றன. 

ஒவ்வொருவருடம் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் .
ஸ்டெர்லைட் பேரணி
இந்தநிலையில் இதுபோன்ற ஆலைகளில் இருந்து வெளிவரும் நச்சுக்காற்றால், கழிவுகளால் புற்றுநோய் பாதிப்புகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. 
நன்றி:விகடன்.
ஸ்டெர்லைட் நிறுவனத்திடம்  காங்கிரஸ் & பாஜக பெற்ற நன்கொடை!
=====================================================================================

ன்று,
மார்ச்-28.
 • சிலோவேக்கியா, செக் குடியரசு ஆசிரியர் தினம்
 • கான்ஸ்டன்னீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன(1930)
 • இந்திய விடுதலை போராட்ட வீரர் எஸ்.சத்யமூர்த்தி இறந்த தினம்(1943)
=====================================================================================
இந்தியாவில் அலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இணைய சேவைக்காக தான்  மக்கள் அதிகளவில் அலைபேசிகளைபயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
அலைபேசி இணையச் சேவை பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 100 கோடியாக உள்ளது. அதிகளவில் தகவல் பரிமாற்றமும் நடைபெறுகிறது.

அலைபேசிகள்  இணைய வேகத்தில் உலக அளவில் 109-ஆவது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. கடந்த ஆண்டும் இதே இடம்தான் இந்தியாவுக்கு கிடைத்தது .
அதைவிட்டு அசையவில்லை.


இந்தியாவுக்கு கிட்டத்தட்ட கடைசி இடம்தானாம்.பின்னால் சோமாலியா,உகாண்டா போன்ற சில நாடுகள்தான் உள்ளன.

இந்தியாவில் சராசரி இணைய வேகத்தின் அளவு, கடந்த ஆண்டு நவம்பரில் 8.80 எம்பிபிஎஸ் ஆக இருந்தது. 

4 ஜி வரவுக்குப்பின் தற்போது அது 9.01-ஆக அதிகரித்துள்ளது.இதே உயர்வு அணைத்து நாடுகளுக்கும் உண்டு.

62.07 எம்பிபிஎஸ் சராசரி அளவுடன் 
அலைபேசி இணைய வேகத்தில் நார்வே முதலிடத்தில் உள்ளது. அகண்ட அலைவரிசை இணைய வேகத்தை பொருத்தவரை, கடந்த ஆண்டு 76-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 67-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 
இதில்  சிங்கப்பூர் உலக அளவில் முதலிடத்தில் உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 
                                      இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் முன்னரே பாஜக
                                 கர்நாடக தேர்தல் தேதிகளை அறிவித்து சாதனை செய்துள்ளது.

இந்திய தேர்தல் அசிங்கம்?

இந்தியாவைஆட்சி செய்வது பாஜகதான்.மோடிதான் என்பதில் யாருக்குமே எந்த வித ஐயமுமில்லை.
ஆனால் இதுவரை தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு தேர்தல் ஆணையம் என்பதில்தான் நாம் ஒரு முடிவுக்கு ,மாற்றுக்கருத்துக்கு வரவேண்டிய கட்டாயம்.

சென்ற தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வாக்குகள் எண்ணிக்கை அன்று திமுக ஆளும் ஜெயலலிதாக் கட்சியை  விட அதிக தொகுதிகள் எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது.
இதே காலை  11 மணியளவில்தான் அன்றைய பிரதமர் மோடி அப்போதைய முதல்வரான ஜெயலலிதாவுக்கு"மீண்டும் முதல்வராவதற்கு வாழ்த்துகள்"என்று கீச்சு (டுவிட்டர்)செய்தி வெளியிட்டார்.
12 மணியளவில் முன்னணி நிலவரமே மாறியது.


4000 வாக்குகள் முன்னணியில் இருந்த திமுக வேட்பாளர் அப்பாவு  40 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரையிடம் ராதபுரத்தை கொடுத்தார்.
காரணம் அதுவரை செல்லுபடியாக இருந்த வாக்குகள் பல திடீரென வந்த ஆணையால் செல்லாமலாகி விட்டன.
இதுபோல் தமிழகம் எங்கும் அதிகபட்சமாக 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற  ஜெயலலிதா கட்சியினர் எண்ணிக்கை 34.

இவை எல்லாம் திமுகவுக்கு கிடைக்கவேண்டியவை.இவை எல்லாம் மோடி வாழ்த்துக்களுக்கு முன்னர் திமுக ஆயிரக்கணக்கில் முன்னணியில் இருந்த தொகுதிகள்.
மோடி வாழ்த்தும் இந்திய தேர்தல் ஆணைய ஆசியும் ஜெயலலிதாவுக்கு இல்லாவிட்டால் இன்றைய  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.

இதே போல்தான் கோவா,மணிப்பூர்,இமாசல பிரதேசம் முதல் இன்றைய திரிபுராவரை பாஜக ஆட்சி வர காரணம் நடந்த தேர்தல் அல்ல.அதை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம்.

குஜராத்தில் பாஜக தான் தோல்வியை பெறுவது நடக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் என்றதும்.அதனுடன் நடக்கக்கூடிய மற்ற மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தை குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டாம் என்றதும் இந்திய தேர்தல் ஆணையம் அப்படியே வாய் பொத்தி தஞ்சாவூர் பொம்மையாக நடந்து கொண்டது.
மோடி குஜராத்தில் பல கூட்டங்களை நடத்தி சலுகை மேல் சலுகையாக குஜராத்துக்கு அறிவித்து,அங்கு பாஜக வாக்கை சிதறடிக்க கூடிய ஜிஎஸ்டி வரிக்கு சலுகைகள் அறிவித்தார்.


புதிய திட்டங்களைத்திறந்தார்.செயலானவைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தான் முஸ்லிகளின் கா(வ)லன் என்று அறிவித்துக்கொண்டார்.பட்டேல்களை சமாதப்படுத்தினார்.
தன்னை பிற்படுத்தப்பட்டவன் என்பதால் எல்லோரும் கிண்டலடிப்பதாக மேடையில் அழுதார்.
குஜராத் மக்களிடம் வாக்குகளைப்பெற எல்லா நாடகங்களும் நடத்தி முடித்தப் பின்னர் அமித் ஷா தலையசைக்க இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது.

ஆனால் மோடி மஸ்தான் வேலையால் தோல்வி கிடைக்கவில்லை.ஆனால் தோல்விக்கு அருகே போய் வெற்றிக்கோட்டைதட்டியது .மயிரிழை அருகில் காங்கிரஸ்.
ஆக இந்திய தேர்தல் ஆணையம் பாஜக-மோடியின் கையாளாக செயல்படுவது பட்டவர்த்தனமாகியது.
மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட இருவருமே குஜராத்தைச் சேர்ந்தவர்கள்.

மோடியின் தனிச் செயலாளர் ஒருவர், மோடி ஆட்சியில் தலைமைச்செயலாளர் சேவை செய்தவர் மற்றோருவர்.பின் தேர்தல் ஆணையச் செயல்பாடு எப்படி இருக்கும்?

இதைவிடக் கேவலம் குஜராத் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சிக்கு பரப்புரை காலம் முடிந்தபின்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேட்டியளித்தார் என்றும் ஏன் உங்கள் கட்சி தகுதியற்றதாக அறிவிக்கக் கூடாது என்றும் அவருக்கு தேர்தல் ஆணையம் டெல்லியில் இருந்து அறிவிக்கை அனுப்பியதுதான்.

அதனால் சூடான ராகுல் காந்தி "தான் உட்பட்ட நாளில்தான் பேட்டி கொடுத்தேன்.வாக்கு சேகரிக்க அதைப் பயன்படுத்தவில்லை.அதற்கு நடவடிக்கை எடுப்பதானால் அதே நேரம் பாஜகவுக்கு வாக்கே கேட்டு பகிரங்கமாக பேட்டி கொடுத்த மத்திய அமைசசர் அருணஜெட்லீ,அமித் ஷா போன்றோர் மீதும் நடவடிக்கை எடுங்கள்.அவர்கள் இருவருக்கும் என்னைப்போல் ஏன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பவில்லை."என்ற கேள்வியை பகிரங்கமாக ஊடகங்களில் ஆதாரத்துடன் எழுப்பினார்.

உடனே இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது.
இருவருக்கு அறிவிக்கை அனுப்பியது என்று எண்ண வேண்டாம்.ராகுலுக்கு அனுப்பிய விளக்கம் கோரிய கடிதத்தை நீக்கம் செய்து திரும்பப்பெற்றுக் கொண்டது.

இதுதான் இந்திய தேர்தல் ஆணைய நடுநிலை செயல்பாடு.?
அதே நடுநிலைதான் தற்போது கர்நாடக தேர்தல் அறிவிப்பிலும்.
கர்நாடக சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ராவத் டில்லியில் 12 மணிக்கு அறிவித்தார். 
"கர்நாடக  தேர்தல் மே 12ம் தேதி நடக்கும்.வாக்கு எண்ணிக்கை மே 18 " என கூறினார். 

ஆனால் இந்திய தேர்தல் ஆணையர் ராவத்  அறிவிக்கும்  முன்னர் 11 மணி 8 நிமிடத்திலேயே  பா.ஜ.,வின் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அமித் மால்வியா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில்
" மே 12ம் தேதி தேர்தல் நடக்கும். ஓட்டு எண்ணிக்கை மே 18 ம் தேதி" என பதிவிட்டார். 
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்: ஏப்ரல் 17
கடைசி நாள்: ஏப்ரல் 24 
வேட்புமனு பரிசீலனை: ஏப்ரல் 25
வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள்: ஏப்ரல் 27
ஓட்டுப்பதிவு: மே 12
ஓட்டு எண்ணிக்கை: மே 15

இந்திய தேர்தல் ஆணையர் அறிவிக்கும்  முன்னரே தேர்தல் தேதியை அறிவிக்கும் அளவிற்கு பா.ஜ.க  விரைவான இந்திய தேர்தல் ஆணையமாக மாறிவிட்டது. 
இது ஏற்கனவே தனது நடுநிலை,தன்னாட்சி போன்றவற்றை  கேள்விக்குரியதாக்கியுள்ளது போதாதென்று ஆணையத்தை  பாஜக எந்த அளவு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையே  கேள்விக்குறியாகியுள்ளது. 

தேதியை கசிய விட்டதற்காக தற்போது அமித் மாளவியா  மீது  வழக்குப்பதிவு செய்யப்படுமா ? 
அல்லது தேர்தல் ஆணைய நம்பகத்தன்மை சீரழித்த தேர்தல் ஆணைய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்யப்படுமா? 

காரணம் இது இந்திய தேர்தல் ஆணைய நன்மதிப்பின் மீதான தாக்குதல்.
ஏற்கனவே தினகரன் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் முதலில் பேரம் பேசி கையூட்டு வாங்கிய தேர்தல் ஆணைய அலுவலர்கள் யார் மீதும் விசாரணை இல்லை.நடவடிக்கை இல்லை.
அந்த வழக்கில் தற்போதைய நிலையே மூட்டு மந்திரமாக உள்ளது.

இது போன்ற அடுக்கடுக்கான குற்றசாட்டுகளால் இந்திய தேர்தல் ஆணையமே அதை நம்பி வாக்களிக்கும் ஒவ்வொரு இந்திய வாக்காளர்கள் முன்னர் அம்மணமாக அவமானப்பட்டு நிற்கிறது.
தன்  மீதான களங்கத்தை தேர்தல் ஆணையம் துடைத்தெறிய வேண்டும் செய்யுமா.?
இல்லைஇன்னும் ஆளுங்கட்சிகளுக்கு எடுபிடிகளாக கீழிறங்குமா?