பாஜகவுக்கு எதிராக அமித்ஷா ?

கர்நாடகத் தேர்தல் பாஜகவினரை கிறுக்குப் பிடிக்க வைத்துள்ளது. 

பிள்ளையார் பிடிக்ககுரங்கான கதையாக, பாஜக ஒன்றைச் செய்யநினைத்தால், சம்பந்தம் இல்லாத பிரச்சனை ஒன்று வந்து, எடியூரப்பா உள்ளிட்ட பாஜகதலைவர்களை அலைக்கழித்துக் கொண்டி ருக்கிறது. 

முதல்வர் கனவில் இருக்கும் எடியூரப்பாவுக்கு, சொந்தக் கட்சியும், அதன் தலைவர் களுமே எதிரிகளாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவா மாநிலத்தில் பாஜக குறுக்கு வழி யில் ஆட்சியைப் பிடித்து, பாஜக-வைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர் முதல்வராக இருக்கிறார். 

கோவா மாநிலத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மகதாயி நதிநீர் தொடர்பாக நீண்ட காலப் பிரச்சனை இருக்கும் நிலையில், பாரிக்கர் மூலம் அப்பிரச்சனையை தீர்த்து விட்டால்; அதுகர்நாடகத் தேர்தலில் தனக்கு சாதகமாக இருக்கும் என்று எடியூரப்பா கணக்குப் போட்டார்.


குறிப்பாக, வட கர்நாடகா விவசாயிகளின் வாக்குகளை அள்ளி விடலாம் என்பது அவரது திட்டம். அந்த வகையில், நீண்டகால மகதாயி பிரச்சனையை 2017 டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் தீர்த்து வைப்பேன் என்று எடியூரப்பா அறி வித்தார். ஒரே ஓட்டமாக ஓடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வீட்டில், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையும் நடத்தினார். 

ஆனால், கோவா நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் பாஜக-வின் கூட்டணி கட்சி அமைச்சர் வினோத் பலின்கரோ, மகதாயி நதிநீரை ஒரு சொட்டு கூட கர்நாடகாவுக்கு தரவே முடியாது என்று கூறிவிட்டார்.

அவரைத்தொடர்ந்து மனோகர் பாரிக்கரும் இப்பிரச்ச னையில் நழுவிக் கொண்டார்.சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல,இவ்வளவு காலமும் அமைதியாக இருந்த கர்நாடக விவசாயிகள், எடியூரப்பா அவருக்கு அவரே விதித்துக் கொண்ட டிசம்பர் 15 காலக்கெடு முடிந்ததும் போராட்டத்தில் குதித்தனர்.
 பந்த் நடத்தி மாநிலத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். 

கர்நாடகத்தில் உள்ள பாஜக அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர். மகதாயி பூமராங் ஆனது. எடியூரப்பாவுக்கும்- பாஜக வுக்கும் சொந்தக் காசில் சூனியம் வைத்தது போல மாறியது.சரி இது போகட்டும். 

நமக்குத்தான் லிங்காயத் மக்களின் ஆதரவு இருக்கிறதே அதை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று எடியூரப்பா ஆறுதல் அடைந்தார். ஆனால்,அதற்கும் ஆபத்து வந்தது. 

“தாங்கள் இந்துக்கள் அல்ல; பிராமணிய சடங்குகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை; எனவே, எங்களை தனிச்சமயமாக அறிவிக்க வேண்டும்” என்பது லிங்காயத் மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. 
ஆனால், பாஜக அதனை ஏற்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், பெல்காவியில் லட்சக்கணக் கில் திரண்ட லிங்காயத் மக்கள், தங்களை தனி மதமாக அறிவிக்கக் கோரி மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர். மத்திய பாஜக அரசுதான் தங்களுக்கு எதிராக இருப்பதாக கூறி தங்களின் கண்டனங்களை முழங்கினர்.

இதனை பயன்படுத்திக் கொண்ட கர்நாடக மாநில முதல்வரான சித்தராமையா, லிங்காயத்துக்களின் கோரிக்கையை ஏற்பதாக வும், அவர்களைத் தனி மதமாக வகைப்படுத்த தயார் என்று அறிவித்தார். லிங்காயத்துக்கள் ஆனந்தக் கூத்தாடி விட்டனர். 
ஆனால், எடியூரப்பாவுக்கு அதுவே பெரும் எரிச்சலாக மாறியது. 

லிங்காயத்துக்கள் இந்து சமயத்தின் ஒரு பகுதி; அவர்கள் தனியாக போக விடமாட்டேன் என்று எடியூரப்பா கூற, அவருக்கு எதிராக லிங்காயத்துக்கள் ஆங்காங்கே போராட்டங்களில் இறங்கி, எடியூரப்பாவையும், பாஜக-வை வெளுத்தெடுத்து விட்டனர்.
 மறுபுறத்தில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சித்தராமையாவையே ஆதரிப்ப தென்றும் அவர்கள் முடிவு செய்தனர். இதனால், தான் சார்ந்த லிங்காயத் மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற எடியூரப்பாவின் இரண்டாவது கனவிலும் மண் விழுந்தது.



போனதெல்லாம் போகட்டும். அமித்ஷா இருக்கிறார் நம்மைக் கரையேற்ற, அவர்நினைத்தால், தோற்றவர்களையும் ஜெயித்த தாக அறிவிக்க வைப்பார்; வோட்டிங் மெஷின் களையும் கூட மாற்றி விடுவார். கலவரம் நடத்தி யாவது நம்மை முதல்வராக்கி விடுவார் என்று அடுத்த நம்பிக்கைக்கு எடியூரப்பா தாவினர்.

அது தற்போது, ஏழரைச் சனி எடியூரப்பா வுக்கா, அமித்ஷாவுக்கா என்று சனீஸ்வர பகவானே குழம்பிப் போகும் அளவிற்கு பாஜக-வினரை கதிகலங்க வைத்துள்ளது.
எடியூரப்பாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போகிறேன் என்று பெங்களூருவில் டெண்ட் அடித்துள்ள அமித்ஷா, தேர்தல் பிரச்சா ரத்தின் முதல் நாளிலேயே எடியூரப்பாவுக்கு எதிராக பேசி மாட்டிக் கொண்டார்.

அவர்கள் பாட்டுக்கு இருந்த பத்திரி கையாளர்களை அழைத்து, பேட்டி என்று சொல்லி,உரையாற்றத் துவங்கிய அமித்ஷா, “ஊழலில் ஊறித்திளைத்த அரசு எது என்று போட்டி வைத்தால், நம்ம எடியூரப்பா அரசுக்குத்தான் முதலிடம்” உளறிக்கொட்ட, அருகிலிருந்த எடியூரப்பா ஆடிப்போய் விட்டார். 

பாஜக தலை வர்கள், தொண்டர்கள் அத்தனை பேரும் பதறி விட்டனர்.அமித்ஷா தெரிந்துதான் உளறினாரா, தெரியாமல் உளறினாரா, என்று கர்நாடக பாஜக வட்டாரத்திற்குள் இப்போது வரை ஒருபட்டிமன்றமே நடந்து வருகிறது. 

காங்கிரஸ் காரர்களும், சமூகவலைத்தள வாசிகளும் வழக்கம்போல அமித்ஷாவின் உளறலை ஊடகங்களில் அள்ளிப்போட்டு பாஜக-வை கர்நாடகத்தில் ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கி விட்டனர். சமூகவலைத்தளங்களில் அமித்ஷாவின் உளறல் இன்னும் சூடு ஆறாமல் பரிமாறப்பட்டுக் கொண்டு வருகிறது.

ஆனால், அதற்குள் பாஜக எம்.பி. பிரகலாத்ஜோஷியின் நாக்கில் இருந்த சனி மீண்டும் அமித்ஷாவை விடாமல் இழுத்து மீண்டும் எதிர்க்கட்சியினர் இருக்கும் தெருவில் தள்ளியிருக்கிறது.பெங்களூரு பொதுக்கூட்டத்தில், எடியூரப்பாவுக்கு ஆதரவாக புதன்கிழமையன்று அமித்ஷா பேசியிருக்கிறார். 

அப்போது அவர் மோடியின் சாதனைகளையும் அள்ளிவிட்டுள்ளார். இந்த பேச்சை ஹிந்தியிலிருந்து கன்னடத்திற்கு மொழியாக்கம் செய்யும் வேலை, பாஜக எம்.பி. பிரகலாத் ஜோஷிக்கு வழங்கப்பட்டுள்ளது.

 அப்போது, “ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் சித்தராமையா ஒன்றும் செய்யமாட்டார்” என அமித் ஷா கூற, பிரகலாத் ஜோஷி உண்மையைச் சொன்னரோ, அல்லது அமித்ஷாவின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து சொன்னாரோ, “நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது; அவரை நம்பாதீர்கள்” என்று மொழிபெயர்த்து விட்டார்.

பட்ட காலிலேயே படும் என்ற கதையாக, பாஜக-வினர் ஒரேயடியாக வெந்து நொந்து விட்டனர். அமித்ஷாவின் அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் இன்னும் என்னென்ன நடக்குமோ என்ற பீதியும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

                                                                                                                                                                                       தொகுப்பு: அ.மாரிமுத்து.
                                                                                                                                                                                                   (முகநூலில்)
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக அளவில் அதிக இணையதளங்கள் கொண்ட மொழிகள் பட்டியலில் நமது தமிழ் மொழி 2-வது இடம் பெற்றுள்ளது. 


ஆங்கிலத்துக்கு அடுத்தப்படியாக தமிழ் மொழியில்தான் அதிக இணையதளங்கள் உள்ளதாக உலக தகவல் தொழில்நுட்ப மன்றம் அறிவித்துள்ளது. 


ஜப்பன், சீன மொழிகளை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்தை தமிழ் மொழி பிடித்துள்ளது.




----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக நலன்களைப் பெற்றுத் தரத்தானே மக்கள் வாக்களித்து அனுப்பியுள்ளார்கள்.
அவர்களின் அடிப்படை தேவையான காவிரி நீரை வேறு மாநிலத்துக்கு ஆதரவாக தர மறுக்கும் மத்திய அரசின் மக்களவையில் இவர்கள் இருந்து என்னதான் சாதிக்கப் போகிறார்கள்.

இதற்க்கும் முன்னரும் ஒன்றையும் புடுங்கவில்லை.இனியும் புடுங்கப்போவதில்லை. 

வெட்டியாக இருப்பதை விட பதவியை விட்டு ஒட்டு மொத்தமாக விலகினால் அது வரலாற்றில் மத்திய அரசின் துரோகத்தைப்பதிவு செய்யும்.

"பியுட்டிபுல் காஷ்மீர் "பாடியதைத்தவிர இவர்கள் இவ்வளவு நாள் தமிழகத்துக்கு செய்த துரோகங்களும் பரிகாரமாகும் .
அதை விட்டு உயிரை விடப்போகிறதெல்லாம் பேத்தல்,நாடகம்,மக்களை ஏமாற்றும் செயல்.

வேண்டுமானால் கருணைக்கொலைக்கு தமிழக  மக்கள் குடியரசுத்தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
=====================================================================================
ன்று,
மார்ச்-30.


  • அமெரிக்க தேசிய மருத்துவர்கள் தினம்

  • தமிழில் நாட்குறிப்பு எழுதிய ஆனந்த ரங்கம் பிள்ளை பிறந்த தினம்(1709)

  • அமெரிக்காவில் புளோரிடா உருவாக்கப்பட்டது(1822)

  • ரப்பர் உடனான பென்சிலுக்கான காப்புரிமம் ஹைமன் லிபமன் என்பவரால் பெறப்பட்டது(1858)


ஆனந்தரங்கம் பிள்ளை
30.3.1709 - 16.1.1761
பதினெட்டாம் நூற்றாண்டு நிகழ்வுகளை அறிந்துகொள்ள, ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகளைப் படித்தால் போதும்! 
அந்த அளவுக்கு அவற்றை வரலாற்றுப்பூர்வமாக எழுதி வைத்துள்ளார். 
தமிழ்மொழிதவிர இதர மொழிகளையும் அறிந்தவர். அதனால், புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சுக்காரர்கள் இவரை, திவானாக அமர்த்திக் கொண்டனர். ஜோதிடவியல், வானவியல் மட்டுமன்றி சிறந்த புரவலராகவும் இருந்தார்.
ஆரம்பத்தில், பாண்டிச்சேரியில் திவானாக இருந்த அப்பாவுக்கு உதவியாக இருந்தார் ஆனந்தரங்கம். அப்போது, தினசரி நடக்கும் நாட்டு நிகழ்வுகளை நாட்குறிப்புகளாக எழுதிவந்தார். 

பிறகு, பிரெஞ்சு ஆளுநர் டூப்ளேயின் துபாஷியாக (இருமொழி வல்லுநர், நேரடி மொழிபெயர்ப்பாளர்) 1747இல் நியமிக்கப்பட்டார். பணியில் இருந்தபோதும், நாட்குறிப்புகளைத் தவறாமல் எழுதினார்.


அவருடைய நாட்குறிப்பு, 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புதுச்சேரியின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியது. 25 ஆண்டுகள் (1736 செப்டம்பர் முதல் 1760 செப்டம்பர் வரை) எழுதிய நாட்குறிப்பில் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், தண்டனைகள், கடல் வணிகம், வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகள் பதிவாயின.

நாட்குறிப்புகள் எளிமையான தமிழில் உள்ளன. பல மொழிகள் அறிந்திருந்தும், நாட்குறிப்பைத் தமிழில் எழுதினார் என்பது தமிழுக்குக் கிடைத்த பெருமை. அக்காலப் பேச்சுத் தமிழ், சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணக் கூறுகள், பிறமொழிகளில் இருந்து வந்த சொற்கள், வழக்கிழந்த சொற்கள் போன்றவற்றையும் பதிவுசெய்துள்ளார் ஆனந்தரங்கம் பிள்ளை.

அவர் மறைந்து 85 ஆண்டுகளுக்குப் பிறகே நாட்குறிப்புகள் கிடைத்தன. 
அவற்றை பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டது.

பின்னர் ஆங்கிலத்தில் கிடைத்தது. அதற்குப் பிறகு புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் எடுத்த முயற்சியால் தமிழில் கிடைத்தது.
அதுவரை மட்டுமல்ல இன்றுவரை  யாரும் செய்திடாத அரும்பணியைச் செய்த ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு, வரலாற்றின் அரிய பொக்கிஷம்!
=====================================================================================
காலாவதியானாரா காரல் மார்க்ஸ் ?

காரல் மார்க்­ஸின் 200வது பிறந்­த­நாள், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யி­ன­ரால் உல­கம் முழு­வ­தும் இந்த ஆண்டு கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

மார்க்­ஸின் பிறந்த நாளைச் சிறப்­பிக்­கும் வித­மாக, ஜெர்­ம­னி­யில் அவர் பிறந்த ட்ரையர் நக­ரில் ஒரு புது­மை­யான  முறையில் கொண்டாடினார்கள்.

அந்­ந­க­ரில் இருக்­கும் எல்லா போக்­கு­வ­ரத்து சிக்­னல் விளக்­கு­க­ளி­லும் காரல்­மார்க்­ஸின் உரு­வம் ஒளிர்­கி­றது. 
பாத­சா­ரி­கள் செல்­ல­லாம், செல்­லக்­கூ­டாது என்­ப­தற்­கான விளக்­கு­க­ளில் மார்க்ஸ் உரு­வம் தெரி­கி­றது.

சிவப்பு விளக்கு எரி­யும்­போது, இரு கைக­ளை­யும் விரித்­த­படி மார்க்ஸ் நிற்­கி­றார்.
பச்சை விளக்கு எரி­யும்­போது, அவர் நடப்­பது போன்ற உரு­வம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

200 ஆண்டுகளானாலும் உலக மக்கள் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான் மார்க்ஸ் இருக்கிறார்.

தொழிலாளர் இருக்கும்வரை மார்க்ஸ் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

சூத்திரர்கள் இருக்கும்வரை பெரியாரும் இருப்பார்.

==================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?