புதன், 28 நவம்பர், 2012

சில சோதனைகள்...,

விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இப்போது யாசர் அராபத்தின் உடல் தோண்டி எடுக்கப்படுகிறது.
இதேபோல் வேறு சில தலைவர்களின் உடல்கள் வேவ்வேறு காரணங்களுக்காக கல்லறைகளில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அதில் சிலவற்றை இங்கு காண்போம்.
சுரன்
சே குவேரா
அர்ஜென்டினாவில் பிறந்த கியுப நாட்டுப் புரட்சியாளரான சேகுவேரா 1967ஆம் ஆண்டு போலிவியாவில் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உடல் எங்கே புதைக்கப்பட்டது என்பது தொடர்பாக பல ஆண்டுகள் ரகசியம் காக்கப்பட்டது.
 சே சுடப்பட்டதில் தொடர்புடைய ஒரு பொலிவிய இராணுவ ஜெனரல் 1995ஆம் ஆண்டில் சேகுவேராவின் உடல் ஒரு விமான நிலையத்தின் ஒடு பாதை அருகே புதைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கப் பிறகு அவரின் உடல் எடுக்கப்பட்டு கியுபாவுக்கு கொடுக்கப்பட்டது. சேகுவேராவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகத்தில் அவ்வுடல் தற்போது பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தோண்டி எடுக்கப்பட்டது சேவின் உடலா என்பது குறித்து இன்னமும் சந்தேகம் இருக்கிறது.

ஆலிவர் கிராம்வெல்
இங்கிலாந்தில் முடியாட்சியை ஒழித்து குடியாட்சியை ஒரு குறுகிய காலத்துக்கு கொண்டு வந்தவர் ஆலிவர் கிராம்வெல். படை வீர்ராகவும், ராஜ தந்திரியாகவும் திகழ்ந்த இவர் 1658 ஆம் ஆண்டு மரணித்தார். அரச மரியாதையுடன் அவரது உடல் புகழ் பெற்ற வெஸ்ட்மினிஸ்ட்டர் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது.
 ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு முடியாட்சி மீண்டும் கொண்டுவரப்பட்ட பிறகு இவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தலை வெட்டி சிதைக்கப்பட்டது. பிறகு அவரின் உடல் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் ஒரு கொலை களத்தின் அருகே வீசப்பட்டது.
ஆலிவர் கிராம்வெல்லின் தலை ஒரு கம்பில் கட்டப்பட்டு வெஸ்ட்மினிஸ்டர் ஹாலின் மாடியில் வெளியில் தெரியும் படி வைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலை 1815 இல் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இது ஆலிவர் கிராம்வெல்லின் தலை என்றே உறுதிப்படுத்தப்பட்டது.

சார்லி சாப்ளின்
புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட நடிகர் சார்லி சாப்ளின் தனது வாழ்வின் கடைசி 25 ஆண்டுகளை சுவிட்சர்லாந்தில் கழித்தார்.
அவர் இறந்த பிறகு கோசிய சூர் வேவி என்ற கிராமத்தில் புதைக்கப்பட்டார். இரண்டு திருடர்கள் 1978ஆம் ஆண்டு அவரின் உடலை அங்கிருந்து தோண்டி எடுத்துச் சென்றனர்.
பெரும் பணம் கொடுத்தால்தான் உடலைத் தர முடியும் என்று அவர்கள் சார்லி சாப்ளினின் வழக்கறிஞர்களோடு பேரம் பேசினர். மூன்று மாதங்களுக்குப் பிறகு போலந்து மற்றும் பல்கேரியாவில் இருந்து அகதிகளாக வந்திருந்த அந்த இரு திருடர்களும் பிடிபட்டனர். 
சார்லி சாப்ளினின் உடல் மீட்கப்பட்டது அதே இடத்தில் மீண்டும் புதைக்கப்பட்டது. ஆனால் இரவில் யாரும் திருடிச் சென்று விடக் கூடாது என்ற நோக்கில் சார்லி சாப்ளினின் கல்லறை இம்முறை கான்க்ரீட்டால் மூடப்பட்டது.
கிறிஸ்டபர் கொலம்பஸ்
அமெரிக்க கண்டத்துக்கு கடல் வழி கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் நிலை இன்னமும் மோசமானது. தனது உடலை அமெரிக்காவில் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதிவிட்டு கொலம்பஸ் 1506ஆம் ஆண்டு இறந்துபோனார்.
ஆந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் தகுந்த தேவாலங்கள் இல்லை. எனவே அவரது உடல் ஸ்பெயின் வல்லாடோலிட்டில் புதைக்கப்பட்டது. அதன் பிறகு சிவைல் மாடாலயத்துக்கு அது மாற்றப்பட்டது. 1542 ஆம் ஆண்டு அந்த உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டு ஹிஸ்பனியோலா என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டது.
அதன் பிறகு அது தற்போது டொமினிகன் குடியரசின் தலைநகராக இருக்கும் சான்டோ டொமின்கோவில் புதைக்கப்பட்டது. 17ஆம் நூற்றாண்டின் முடிவில் ஸ்பெயின் ஹிஸ்பானியோலாவின் மேற்குப் பகுதிகளை பிரான்சிடம் இழந்தது. அதன் காரணமாக கிறிஸ்டோபர் கொலம்பஸ்சின் உடல் கியூபாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கியுபா 1898ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பிறகு கொலம்பஸ் அவர்களின் உடல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடைசி முறையாகக் கடந்து சேவைலில் இருக்கும் தேவாலயத்துக்கு கொண்டு வந்து புதைக்கப்பட்டது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் உடல் குறித்த அதிகார பூர்வ வரலாறு இப்படி இருக்க – டொமினிகன் குடியரசின் தலைநகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்று பெயர் பொறிக்கப்பட்ட ஒரு பெட்டியில் இருந்து சில எலும்புகள் எடுக்கப்பட்டன.
அவை அங்கே கொலம்பஸ் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் சீவைலில் அருகே புதைக்கப்பட்ட கொலம்பஸ்சின் சகோதரர் டிகோவின் டி என் ஏவும் அங்கே புதைக்கப்பட்ட கோலம்பஸ்சின் உடல் என்று கருதப்படும் உடலின் டி என் ஏவும் ஒத்துப்போவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேரி கியுரி
இயற்பியலுக்கு ஒன்று வேதியலுக்கு ஒன்று என இரண்டு நோபல் பரிசுகளை வென்றவரான மேரி கியுரி மற்றும் அவரது கணவரின் அஸ்தி பிரான்சின் உள்ள ஒரு சாதாரண கல்லறையில் இருந்து எடுக்கப்பட்டு பாரிஸில் உள்ள பான்தியன் என்ற இடத்துக்கு 1995 ஆம் மாற்றப்பட்டுள்ளது.
நன்றி:பி.பி.சி.
---------------------------------------------------------------------------------குப்பை வானம்

உலக நாடுகளின் வேகமான பொருளாதார வளர்ச்சி காரணமாக நச்சுத்தன்மை கொண்ட கழிவுப்பொருட்களின் அளவும் வேகமாக அதிகரித்து வருகிறது. நச்சுதன்மை கொண்ட வேதிப்பொருட்களில் இருந்து, மக்கிபோகாத நெகிழிப் பொருட்கள் வரை, பயன்படாத கணினிகள், அவற்றின் உதிரிபாகங்கள் என பல வகையான மின்னணு சாதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் மலைமலையாக குவியத் துவங்கியுள்ளன. 
இந்த கழிவுகளை வெற்றிகரமாக கையாளும் வழிகளை ஆய்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் வாங்குகின்ற பொருட்களில் பலவற்றை, பயன்படுத்திய பின்னர் காயிலாங் கடையில் போட்டு சிறுதொகையாவது பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் அவற்றை மட்கும் குப்பைகள், மட்காத குப்பைகள் என பிரித்து கையாளும் முறைகள் நிறையவே உள்ளன. தொழில் நுட்பவளர்ச்சில் மேம்பாடு அடைந்துள்ள இன்றும், கழிவுப்பொருட்களை கையாளும் வசதியில்லாமல் பல நாடுகள் அல்லல் படுகின்றன.
 புவியிலேயே இப்படியிருக்க விண்வெளியில் குவிந்துள்ள குப்பைகளை பற்றி என்ன சொல்வது?
விண்வெளியில் குப்பைகளா? என்று வியப்படைய வேண்டாம். விண்வெளிக்கு அனுப்பப்பட்டு செயலிழந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் விண்வெளியில் தான் உள்ளன. இப்படி மனிதரால் தேவையின்றி விண்வெளியில் விடப்பட்ட பொருட்களை தான் விண்வெளி கழிவுகள் அல்லது விண்வெளி குப்பைகள் என்று கூறுகின்றோம். ராக்கெட்டை முன்னோக்கி தள்ளுகின்ற எரிபொருள் கலன்கள், செயலிழந்த செயற்கைக்கோள்கள், செயற்கைக்கோள்களிலிருந்து வெடித்து சிதறிய பகுதிகள், துண்டுகள், துகள்கள், ராக்கெட் இயந்திர பட்டைகள், சிறிய திருகாணி, குறடு மற்றும் பிற சிறிய பொருட்கள் அனைத்தும் விண்வெளிக்கழிவுகளே.
முன்னாள் சோவியத் யூனியன் 1957 ஆம் ஆண்டு விண்வெளிக்கு ஆட்களை அனுப்பி விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியது முதல், எண்ணிக்கையில்லா கழிவுகள் அல்லது குப்பைகள் பரந்த விண்வெளியில் கொட்டப்பட்டுள்ளன என்று தான் குறிப்பிட வேண்டும்.
 இவ்வாண்டு தொடக்கத்தில் கண்களால் காணக்கூடிய அளவில் 17,000 கழிவுகள் விண்வெளியில் உள்ளதாக Houston னிலுள்ள ஜான்சன் விண்வெளி மையத்தின், நாசாவின் விண்வெளிக்கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியியலாளர் நிக்கோலாஸ் ஜான்சன் தெரிவித்தார்.
 அப்படியானால் கண்காணிப்பு கருவிகளால் பார்க்க முடியாத கழிவுகளின் எண்ணிக்கை தெரியவில்லை. கடந்த எப்ரல் திங்கள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அமெரிக்க சமூக மாநாட்டில் பங்குபெற்ற அறிவியலாளர்கள் 150 மில்லியன் துண்டுகளுக்கு மேலாகவே விண்வெளியில் கழிவுகள் உள்ளதாக குறிப்பிட்டனர். இவற்றில் பெரும்பாலானவை விண்வெளி வீரர்களால் வீசப்பட்டவை. இதற்கு முந்தைய புள்ளிவிபரங்கள் 45 விழுக்காடு விண்வெளி கழிவுகள் அமெரிக்காவாலும், 48 விழுக்காடு ரஷியாவாலும் குவிக்கப்பட்டவை என்று தெரிவிக்கின்றன. 1.2 விழுக்காடு மட்டுமே சீனாவால் உருவாக்கப்பட்டது.
அண்டவெளி, வானியல், வானிலை, அறிவியல் ஆராய்ச்சிகள் என மட்டுமே செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்ட காலம் மலையேறிபோய்விட்டது. இன்றைய நவீன தொழில்நுட்ப புரட்சியாய் உருவாகியுள்ள தகவல் தொடர்பு வசதிகளை வர்த்தகமாக மாற்றும் வகையில் பல செயற்கைக்கோள்களை எல்லா நாடுகளும் போட்டிப்போட்டு கொண்டு அனுப்பிவருகின்றன. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த செயற்கைக்கோள்கள் செயலிழந்து கழிவுகளாகிவிடுகின்றன. இவை சுற்றுவட்டப்பாதையில் இயங்கி ஆய்வுசெய்துவரும் செயற்கைக்கோள்களோடு மோதினால், அதன் செயல்பாட்டைப் பாதிப்பது மட்டுமல்ல அதிக விண்வெளிக்கழிவுகளையும் உருவாக்கும். கடந்த வாரத்தில் ஏற்பட்ட இரு செயற்கைக்கோள் மோதிக்கொண்ட விபத்தை இங்கே குறிப்பிடலாம்.

 அமெரிக்க Iridium 33 வர்த்தக செயற்கைக்கோளும், ரசியாவின் செயலிழந்த செயற்கைக்கோளும் ஒன்றொடொன்று மோதி சிதறியது என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பெப்ரவரி 11 ஆம் நாள் தெரிவித்தது. இந்த செயற்கைக்கோள் மோதல் சம்பவம் சர்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பொதுவாக, மிதந்து கொண்டிருக்கும் விண்வெளிக் கழிவுகளின் சராசரி வேகம், நொடிக்கு 10 கிலோமீட்டராகும். அதிகபட்ச வேகம் நொடிக்கு 16 கிலோமீட்டர். சீருந்திலோ, பேருந்திலோ செல்லுகின்றபோது 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்வதாக சொன்னால் ஒரு மணிநேரத்திற்கு 80 கிலோமீட்டர் என்று பொருள். இந்த வேகத்தில் சென்றாலே பறந்து போகிறார் பாருங்கள் என்று கூறுவதுண்டு. அப்படியானால் ஒரு மணிநேரத்திற்கு சராசரியாக 57,600 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவரும் விண்வெளி கழிவுகள், ஒன்றோடு ஒன்று மோதினாலோ அல்லது ஆராய்ச்சிகளை மேற்கோண்டிருக்கும் செயற்கைக்கோளோடு மோதினாலோ ஏற்படும் விளைவை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
 10 கிராம் எடையுள்ள சிறிய கழிவுப்பொருள் மோதினாலே, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சீருந்து மோதினால் ஏற்படுகின்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீன விண்வெளி கழிவுகள் திட்டத்தின் தலைமை அறிவியலாளர் Du Heng கூறியுள்ளார்.

எனவே விண்வெளி ஆய்வில் ஈடுப்பட்டுள்ள பல்வேறு நாடுகள் விண்வெளியில் பெருகி வரும் கழிவுகளை பற்றி அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளன. விண்வெளிக்கழிவுகளை குறைக்கும் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அறிவியலாளர்கள் மாநாடு அறிவுறுத்தியது. செயலிழக்கின்ற பல்வேறு செயற்கைக்கோள்களால் தான் அதிகளவில் விண்வெளிக்கழிவுகள் ஏற்படுகின்றன. எனவே அவை செயலிழக்கும் முன்பே மிகவும் அதிக உயரத்திற்கு அனுப்பிவிடுவது மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய மாற்றங்களை புகுத்துவது ஆகியவை விண்வெளிக் கழிவுகளை குறைக்கும் வழிமுறைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு அதிக செலவு ஆகும். புதிய தொழில்நுட்ப மாற்றங்களை செயல்படுத்தவும் பல ஆண்டுகள் தேவைப்படும். 
சர்வதேச அளவில் ஒரு கட்டுப்பாடோ அல்லது விதிகளோ பெரிய அளவில் இல்லாததால் கழிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு நாடுகள் அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை. 

இழப்பீடு கோரும் வரையறைகளும் இதுவரை இல்லை. இவ்வாறே நீடித்தால் பல கோடி செலவிட்டு செயற்கைக்கோள்களை அனுப்பும் வளரும் நாடுகளுக்கு இத்தகைய செயற்கைக்கோள் மோதல் பெரும் இழப்பாக போய்விடும்.
பல ஆண்டுகளாக அறிவியலாளர்கள் எச்சரித்த செயற்கைக்கோள்கள் மோதிக்கொள்ளும் சாத்தியக்கூறு முதல் முறையாக நிகழ்ந்துள்ளது. இனிமேல் விண்வெளி விதிமுறைகளின் உருவாக்கத்தை பற்றி சர்வதேச நாடுகள் சிந்திக்க தொடங்கும் என்பதில் ஐயமில்லை.
. தலைக்கு மேல் கத்தி தொங்கும் இக்கட்டில் இருக்கிறேன் என்றால் இனிமேல் விண்வெளி கழிவுகளை எண்ணிக்கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------------
கணினிச் சேமிப்பு சாதனங்களாக பயன்படும் வன்தட்டு, பென்டிரைவ் போன்றவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை சில சமயங்களில் தவ்ருதலாக அழிபட நேரலாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை மீட்டுக் கொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவற்றின் வரிசையில் Easy Photo Recovery மென்பொருளும் சிறந்ததாகக் கருதப்படுகின்றது.
இதன் மூலம் Compact Flash, SD, MMC, Memory Stick போன்ற சேமிப்பு சாதனங்களிலிருந்து இழக்கப்பட்ட புகைப்படங்களை அவற்றின் தரம் சிறிதளவும் குறையாது அதே பெயருடன் மீட்டுத்தருகின்றது.
தரவிறக்க சுட்டி

\சுரன்கசப்பா? கசாப்பா?

--

-----------------------------------------------------------------------------------------------------------------------------------


கருணாநிதி மறைத்து வைத்திருந்த பூனை இப்போது வெளியே வந்து விட்டது.
சஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றும் ,அந்நிய சில்லறை வர்த்தகம் இங்குள்ள வணிகர்களுக்கு ஆப்பு வைத்து விடும் என்றும் முதலில் பேசிய தமிழக முதறின்ஞர்  வரிசையாக வந்த டெல்லி தூதுவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் பேரம் படிந்து விட்டதால் டெல்லி சுல்தான்களிடம் பணிந்து விட்டார்.
முலாயம்,மாயாவதி ,லாலு வரிசையில் இணைந்துவிட்டார்.
இதுவரை சில்லறை வணிகத்தில் அன்னியர் புகில் என்ன நீதி என்று போர் முரசு கொட்டியவர்
கடைசியில் '2-ஜி' புல் தடுக்கி சோனியா காலில் போய் விழுந்து விட்டது மிக கேவலமான அரசியல் தந்திரம்.
இதற்கு அவர் சொல்லும் ஆட்சி மாற்றம் ,பாஜக வந்துவிடும் என்பதெல்லாம் கதைக்குதவா
காரணங்கள்.
இப்படி தேச விரோத செயல்களையும்,லட்சக் கோடிக் கணக்கில் அரசுப் பணத்தை கொள்ளை கொள்ளும் -பணமுதலை களுக்கான இந்த காங்கிரசு அரசு கவிழ்வதால் மக்களுக்கு நல்லதுதானே .இந்தியாவுக்கும் நல்லதுதானே?
இப்படி மக்கள் விரோத அரசு கவிழ்ந்தால் அடுத்து வருபவர்களும் இதை எச்சரிக்கையாகக் கொண்டு ஆட்சி நடத்துவார்கள் தானே?
சட்டமன்ற தேர்தலில் 63 இடப்பிரச்னையில் வீரமாக பேசி பின் தடால் பல்டி அடித்த கருணாநிதி இப்போதும் அப்படி கவிழ்வார் என்று எதிர்பார்த்தது அப்படியே நடந்துள்ளது.
அதற்காக அவர் கூறும் சாக்கு இதுதான்
'அரசின் முடிவினை தி.மு.கழகம் ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் கூட, வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருக்கிறது.அப்படி ஏதேனும் ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பா..ஜ.க. போன்ற மதவாதக் கட்சிகளுக்குத்தான் ஆதாயம், மத்தியில் அதே பாரதீய ஜனதாவின் ஆதிக்கம் உருவானாலோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசுட்சிப் பொறுப்புக்கு வந்தாலோ, இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள் கிளப்பப்படக்கூடும், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்களும் நிகழக்கூடும், மதவாத அரசோ ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்க வைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக் கூடாது என்பதாலேயே மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம்'' என்கிறார் அவர். 
நாடும்,மக்களும் எப்படியும் போகட்டும் ஆட்சி கவிழக் கூ டாது என்பதுதான் இப்போ து அவரின் நோக்கம்.
இதற்கு கட்சி பொதுக்குழு தேவையா?
கருணாநிதிக்கு இப்போது தனது மத்திய அமைச்சர்கள் பதவி போய்விடக் கூ டாது .மகள் கனிமொழி மீதான சிபி ஐ  வழக்கு போகவேண்டும் .அதற்கு அணுசக்தி ஒப்பந்தமானால் என்ன?சில்லறை வணிகமானால் என்ன?
முன்னதாக சில்லறை வணிகம் பற்றி அவர் கூறியதெல்லாம் தவறா?
குலாம் நபி ஆசாத் கருனாநிதியை சந்தித்தப்பின் அந்த ஆபத்தெல்லாம் நீங்கி விட்டதா?
கனிமொழியின் ஆபத்து மட்டும்தான் இப்போதைக்கு விலகியுள்ளது.ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் காங்கிரசால் கருணாநிதியை பணியவைக்க மீண்டும் உபயோகிக்கப்படும்.
இது போன்றவர்கள் இருப்பதாலேதான் காங்கிரசு இத்தனை மோசமான மக்கள் விரோத ஆட்சியை,ஊழல் மிக்க நிர்வாகத்தை தைரியமாக செய்கிறது.
வழியில் காங்கிரசை கோபமாக விமர்சிக்கும் கருணாநிதி,முலாயம் சிங்,மாயாவதி ,லாலு பிரசாத் போன்ற மாவீரர்கள் மக்களவையில் அதே காங்கிரசுக்கு ஆதரவளிப்பதுக்கு காரணம் மக்கள் நலம் அல்ல.சி.பி.ஐ ,பயம்தான்.
ஆனால் இது போன்ற அட்டைக்கத்தி வீரர்கள் வெளியில் இனி ஆவேசமாக மக்கள் சார்பாக பேசுவதை இனி கைவிட வேண்டும் .சோனியா அம்மா ஆசியுடன் என்று [இங்கு அம்மா கட்சிக்காரர்கள் செய்வது போல் ]என்று சுவரொட்டியில் வாழ்த்துப்பா பாடி காலத்தை ஒட்டட்டும் .
நாட்டை ஒரு வழி செஞ்சாச்சு ,ஓம் சுவாகா ,
க ருணாநிதி இப்போது எடுத்த முடிவு கசப்பானது மட்டுமல்ல-மக்கள் நலனை கசாப்பு போடும் முடிவும் கூ ட ...
காங்கிரசின் கையில் அந்த சி.பி.ஐ.ஆயுதம் இருக்கும் வரை அதன் மக்கள் விரோத சீர்திருத்தங்கள் தடையின்றி நடந்து வரும்.
வாழ்க ஜனநாயகம்!,வளர்க சி.பி.ஐ.தொண்டு!!
______________________________________________________________________________________________
--suran
ஈழப் பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளை கிழிப்பதுதான் இப்போது இலங்கை படையினரின் முக்கிய வேலை . 
மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பகுதிளில்  ஒட்டப்பட்ட சுவரொட்டி .---------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

திங்கள், 26 நவம்பர், 2012

போதையின் பாதை

பாகிஸ்தானில் லாகூ ர் நகரில்  இருமல் (ஸிரப்) மருந்தை உட்கொண்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த மருந்தை விற்றுள்ள மருந்தகங்களில் ஒன்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதுடன், அதன் உரிமையாளர்களையும் கைதுசெய்துள்ளனர்.

ஷாஹ்த்ரா நகர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை வரையான மஊன்று நாட்களில்  உயிரிழந்துள்ள இவர்கள் இருமல் மருந்தை  போதைக்கு உட்கொண்ட போதை அடிமையானவர்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல்  விற்கப்படுகின்ற இருமல் ஸிரப் மருந்துகளை  போதைக்காகவே  சிலர் உட்கொள்கின்றனர்.

வழக்கமாக  போதைப் பொருள் உட்கொள்பவர்கள்  இடுகாட்டையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
அவர்களில் பலர்  போதைப் பொருட்களை உட்கொண்ட இடுகாடுகளிலேயே இறந்துபோய் கிடந்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் 72 மணி நேரத்துக்குள் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பஞ்சாப் மாநில முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பல மருந்தகங்களில் தேடுதல் நடத்தி அதிகாரிகள் இந்த இருமல் மருந்து ஸிரப் கையிருப்புகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த மருந்துப் பொருட்கள் காலாவதியானதில்லையாம் .ஆனால் கலப்பு விகித மாற்றத்தினால் விடமாகியிருக்கலாம். என்று ஊடகங்கள் எழுதியுள்ளன .

சென்ற ஜனவரி மாதத்திலும் லாகூரில் இதய நோயாளிகளுக்கான மருந்துகளில் கலப்படத்துக்கு உள்ளான மருந்துகளை உட்கொண்ட 100-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

அரச மருத்துவமனையில் இதய நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட  மருந்துப் பொருட்களாலேயே அவர்கள் உயிரிழந்தது  குறிப்பிடத்தக்கது.
 இப்போதெல்லாம் விட த்திலும் கலப்படம்.அதனால் தற்கொலை செய்து கொள்பவர்கள் வேறு வழியைத்தான் கடைபிடிக்க வேண்டியதுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

உடற்பயிற்சி குறித்து நமக்குப் பொதுவாக சில கருத்துகள் உண்டு. உண்மையில் அவற்றில் எவையெல்லாம் சரியானவை? இதோ, நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள்...

கருத்து: நல்ல வடிவம் பெறுவதற்குச் சிறந்த வழி, ஓட்டம்.

உண்மை: ஓட்டமும், மெல்லோட்டமும் (ஜாகிங்) நல்ல உடற்பயிற்சிகள்தான். ஆனால் அவை கால் மூட்டுகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒருவர், நீச்சல், நடை, சைக்கிளிங் என்று எந்த உடற்பயிற்சியையும் தேர்வு செய்து, அதன் மூலம், தான் சாப்பிட்டதை விட அதிக கலோரிகளை எரிக்க முடிந்தால் அது சிறந்த உடற்பயிற்சிதான்.

கருத்து: வலியில்லாத உடற்பயிற்சிகளால் பெரிதாக நன்மை இல்லை.

உண்மை: 'ஜிம்' பயிற்சியின் போது தசைகளில் வலி எடுக்காவிட்டால் அதனால் பிரயோஜன மில்லை என்று பொதுவாகப் பலரும் கருதுகிறார்கள். தீவிர உடற்ப யிற்சியின்போது சிறிது கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நல்ல உடற்பயிற்சிக்கு வலிதான் அடையாளம் என்பதில்லை. தசை சோர்வு அல்லது தசைநார் கிழிந்திருப்பதையும் வலி சுட்டிக்காட்டலாம்.

கருத்து: அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதே நல்லது.

உண்மை: நேரத்தை விட பயிற்சிதான் முக்கியம். பகல் வேளையில் வசதியான எந்த நேரத்திலும் பயிற்சி செய்யலாம்.

கருத்து: நான் உடம்பின் ஒரு பகுதிக்கு மட்டும் தொடர்ந்து பயிற்சி செய்தால் அதன் வலிமை அதிகரிக்கும்.

உண்மை: மனித மனதைப் போல தசைகளுக்கும் இடைவெளியுடன் கூடிய சவால் தேவை. எனவே குறிப்பிட்ட பகுதிக்கு விட்டு விட்டுப் பயிற்சி செய்வதே நல்லது.

கருத்துகள்: காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்யலாம். விரைவாக எடையைக் குறைக்க பட்டினி கிடப்பதே சிறந்த வழி.

உண்மை: தசைகளின் தினசரிப் பராமரிப்புக்கு ஊட்டச்சத்துகள் அவசியம். கலோரி குறைந்த உணவில் கவனமாக இருப்பவர்கள்தான் அதிக எடை போடுகிறார்கள். அவர்களின் உடல் ஆரோக்கியமும் குறைகிறது.

கருத்து: வயது முதிர்ந்தவர்களும், மிகவும் இளவயதினரும் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.

உண்மை: உடற்பயிற்சி செய்யும் முதியவர்களுக்கு 'ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ்' அறிகுறி குறையும். மூட்டு நிலைத்தன்மை அதிகரிக்கும். தவறி விழுந்தால் எலும்பு முறிவைத் தடுக்கும் வகையில் எலும்பு அடர்த்தி பராமரிக்கப்படும். மிக இளவயதினருக்கு, உடற்பயிற்சி அவர்களின் தன்னம்பிக் கையை அதிகரிக்கும்.

கருத்து: உடலைக் காப்பதற்கு நான் ரசித்துச் சாப்பிடும் அனைத்தையும் துறக்க வேண்டும்.

உண்மை: சரியான உணவுமுறை என்பது வாழ்நாள் 'அட்ஜஸ்ட் மெண்ட்'. பிடித்த உணவை முற்றிலுமாக நிராகரிப்பது ஆரோக்கியமான வழிமுறையல்ல. கட்டுப்பாடும், அளவும்தான் முக்கியம். முறையாகவும், மிதமாகவும் சாப்பிட்டால் எந்த உணவும், யாரையும் குண்டாக்காது. மனோவியல் ரீதியாகவும், மிகவும் கண்டிப்பான உணவு முறை, உங்களுக்கு எதிராகத்தான் அமையும்.

கருத்து: கனமான பொருட்களைத் தூக்குவது தசைகளை வலுப்படுத்தும். எனவே ஒரு பெண், பெண்மையுடன் திகழ குறைந்த எடையுள்ள பொருட்களையே தூக்க வேண்டும்.

உண்மை: கனமான பொருட்களைத் தூக்குவது ஒரு பெண்ணை, தசைகள் திரண்ட அழகி ஆக்கிவிடாது. வலுவான தசைகளை உருவாக்க பெண்களுக்கு மனோரீதியாகவே அமைப்பில்லை. மிகத் தீவிரமான பயிற்சிதான் அதைக் கொண்டுவரும்.

கருத்து: எல்லா உடற்பயிற்சிக் கருவிகளும் என் உடம்புக்கு ஏற்றவைதான்.

உண்மை: வீட்டில் வைத்து உபயோகப்படுத்தும் சில உடற்பயிற்சிக் கருவிகள் நன்றாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. உங்களுக்கு ஏற்கனவே உடல்ரீதியான பாதிப்புகள் இருந்தால் அவை மேலும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சிக் கருவியில் பயிற்சி செய்யும்முன், உடற்பயிற்சி வல்லுநரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. 
========================================================================

ஞாயிறு, 25 நவம்பர், 2012

விலைவாசியை கட்டுப்படுத்த

இப்போது இந்தியாவை பொறுத்தவரை மாதாமாதம் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை இன்ப அதிர்ச்சிக்கு தள்ளிவிடுகிறார்கள்.

இந்தவிலை உயர்வுக்கு வெளி சந்தை கச்சா எண்ணை விலை உயர்வு மட்டும் காரணாமாக அமையவில்லை இங்குள்ள பெட்ரோலிய தொழிற்சாலை உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்கும் வெறியும் ,அதற்கு நம் ஆட்சியாளர்கள் துணை போவதாலேயே இப்படி விலை உயர்வை இந்திய மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
பெட்ரோலில் இப்படி மக்கள் துண்பப்படுவதை வழி இல்லையா? என்றால் இருக்கிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோ லை குறைவாக செலவிட்டு பெற்றோல் சிக்கனத்தை உருவாக்கலாம். 
ஆனால் அதை செய்ய நம் ஆட்சியாளர்களுக்கு மனமில்லை.
காரணம் அதானால் மக்களுக்கு மட்டுமானால் நன்மை விளையலாம்.
கட்சிக்கு படி அளக்கும் அம்பானிகளுக்கு லாபம் இல்லாமல் பொய் விடுமே.
மக்களா?அம்பானிகளா?என்றால் நம் மன்மோகன் சிங் வகையறாக்களின் கட்சி முள் அம்பானிகள் பக்கமே சாய்கிறது.
சரி .இனி பெட்ரோல் விலை குறைக்க உதவும் எத்தனால் பற்றி பார்ப்போம்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் இறக்குமதி செலவு குறையும்

சர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்  கிடைக்கும்.எத்தனால் கலந்த பெட்ரோலில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவு.வாகனங்களுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும்

இந்தியாவில் 2010-11ம் நிதியாண்டில் 220 கோடி லிட்டர்கள்  எத்தனால் உற்பத்தியாகியுள்ளது.

பொது துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கண்டிப்பாக பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ.,), ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான அரசாணை வெளியான பின், நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கட்டாயம் கலந்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு, கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.இதன்படி,வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான், நிகோபார், லட்சத்தீவு ஆகியவை நீங்கலாக, 19 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தின் கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 105 கோடி லிட்டர் எத்தனால் தேவை என, மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில், சர்க்கரை ஆலைகளுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் இடையே, எத்தனால் கொள்முதல் விலை தொடர்பான பிரச்னையால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால், எத்தனால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுமித்ரா சவுத்ரி தலைமையிலான குழுவை, சி.சி.இ.ஏ., அமைத்தது.இக்குழு, இடைக்கால ஏற்பாடாக, ஒரு லிட்டர் எத்தனால் கொள்முதல் விலையை, 27 ரூபாயாக நிர்ணயித்தது.எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனைக்கு தேர்வு செய்யப்பட்ட, 19 மாநிலங்களில், 13 மாநிலங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.அதிலும், ஆண்டுக்கு, 44 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.நிர்ணயித்த இலக்குப்படி, எத்தனாலை கொள்முதல் செய்யாத எண்ணெய் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.இருந்தபோதிலும், எத்தனால் கலப்பு பிரச்னையில், மத்திய அரசின் தெளிவற்ற போக்கு காரணமாகவே, இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செலவினத்தை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றில் ஒன்றாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சி.சி.இ.ஏ.,வின் ஒப்புதலை அடுத்து, பெட்ரோலிய அமைச்சகம், விரைவில் அரசாணை வெளியிட உள்ளது. மேலும், எத்தனால் விலை, கொள்முதல் ஆகியவை தொடர்பான ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட உள்ளன.இதையடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை நடைமுறைக்கு வரும்.எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையின் வாயிலாக, எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.
இந்நிலையில், எத்தனால் கலப்பு திட்டத்திற்கு, ரசாயன துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலப்பதால், பல்வேறு ரசாயன பொருட்களுக்கு தேவையான எத்தனாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என,சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில், 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால்  பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 105 கோடி லிட்டர்கள்  எத்தனால் மட்டும்தான் தான் தேவைப்படும். 
அதனால், எத்தனாலுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.அப்படியே பற்றாக்குறை ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்கள், எத்தனாலை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என, அவர் மேலும் கூறினார். இந்தோனேசியா ,தாய்லாந்து  ,பிலிப்பைன்ஸ் போன்ற அதிக எத்தனால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து கொள்ளாலாம்.விளையும் அங்கு மிக மலிவுதான்.
ஆட்சியாளர்கள் செய்து பெட்ரோல் பயனீ ட்டையும்,விலையையும் குறைப்பார்களா ?
______________________________________________________________________________________________

பற்பசை அபாயம்  
பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதால்  அதை பல் துலக்கும் போது உட்கொள்வதால் ஆபத்து என்று  தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமும் தொலைக்காட்சிகளில் பற்பசையினால் நாள் முழுக்க வாசம் வீசுவதாகவும் அதனால் பெண்கள் நம் மீது பொத்து,பொத்து என்று விழுவது போலவும் காட்டுகிறார்கள் .ஆனால் அது உண்மையில்லை.நாள் முழுக்க யார் வாயும் பற்பசையால் மணப்பதில்லை.

ப ற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது. பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று மருத்துவ ர் கள்  தெரிவிக்கிறார்கள். ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

தொலைக்காட்சி  விளம்பரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம்.
நம் பெருசுகள் வேப்பங்குச்சி,சாம்பலையும்,அடுப்புக்கரியையும் வைத்தி பல் விளக்கி 70 வயதுவரை நல்லி எழும்பி மென்று துப்பியிருக்கிரார்கள்.
ஆனால் இன்று 1வயது சிறுவனுக்கே சாக்லேட்டுகள் தின்று பற்கள் அரித்துப் போயுள்ளன.உணவு பழக்கம் பல் கெட முக்கிய காரணம்.
____________________________________________________________________________________________
 மரண தேதி ?
மனிதன்  வாழ்வில் மரணம் எப்போது வரும்? 
இதுவரை அது  மர்மம் தான் . 
ஆனால், அந்த மர்மத்தையும்  ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 இவற்றின் முனைகளில் 'டெலோ மர்ஸ்' என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது 'டெலோ மர்ஸ்'சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.
இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 வகையான பறவைகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் சாவு காலம் கண்டறியப்பட்டு , அதன் சாவு தேதி கிட்ட தட்ட சரியாக இருந்துள்ளது.
அடுத்ததாக, இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளது.
______________________________________________________________________________________________

சனி, 24 நவம்பர், 2012

சாதாரண மனிதர் கட்சி

 அரவிந்த் கேஜ்ரிவால் தனது புதுக் கட்சியை சொல்லிவிட்டார்.இது மக்களுக்கான வித்தியாசமான கட்சி என்றுள்ளார்.
இதுவரை வந்த கட்சிகள் முழுக்க அப்படித்தான் வந்து அரசியல் குட்டையில் நீக்கமற கலந்துள்ளன.
இறைவனுடன் ,மக்களுடன் கூ ட்டணி என்று அலைந்தவர்கள் இன்று தங்கள் கட்சி ச.ம.உ ,க்களை யாரும் கவர்ந்திழுத்துவிடக் கூ டாது என்று பயத்துடன் உள்ள நிலைதான் உள்ளது.பார்ப்போம் சா.ம.கட்சி யின் தனித்துவத்தை.
சாதாரண மனிதர் கட்சி- என்ற பொருள்படும் "ஆம் ஆத்மி பார்ட்டி” என்ற பெயரைச்  அறிவித்தார் அரவிந்த் கேஜ்ரிவால். 

புதுதில்லியில் கட்சியின் முதல் கூட்டம் அதிகாரபூர்வமாக இன்று கூடி இந்தக் கூட்டத்தில் அவர் இந்தப் பெயரை அறிவித்தார். 
 மாலை 5 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். அப் போது, இந்தப் பெயரை அதிகாரபூர்வமாக ஊடகங்களிடம் அறிவிப்பார் என்று தெரிகிறது .
இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தேசியக் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
தேசிய கவுன்சில் தற்போது 30 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கும் உயர்மட்டக் குழுவாக இது அமையும். கட்சியின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட அனைவரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
 நம்ம பக்கம் உள்ளவர்கள் ஆத்மியில் இப்போவே சேர்ந்து கொண்டால் நாளைக்கு எதாச்சும் பொறுப்பாளர் பதவி கெடைக்க வாய்ப்பிருக்கிறது.
சொல்லவா வேண்டும் .இப்போவே இடம் பிடிக்க துண்டுடன் சிலர் கிளம்பியிருப்பார்களே?
கிளம்பிட்டாங்கயா? 
அரவிந்த் கெஜ்ரிவால் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி,
"அரவிந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் குழுவினர் உருவாக்கும் மாற்று அரசியலுக்கான புதிய தேசிய கட்சி 26–ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் வெளியிட்ட நாளாகிய அன்றைய தினம், கட்சியின் பெயரை அறிவித்து, புதிய கட்சி துவங்குகிறது.இந்நிகழ்ச்சி டெல்லி நாடாளுமன்ற வீதி, ஜந்தர்மந்தரில் நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து இயக்க உறுப்பினர்கள், ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.அரசியலில் மாற்றம் வராதா என்று ஏங்கி கொண்டிருந்த பல கோடி நம் நாட்டு மக்களுக்கு மாற்று அரசியலை தரக்கூடிய அரசியல் புரட்சியாக, ஜனநாயகத்தை மீட்டெடுக்க சிறந்த ஆளுகையை செயல்படுத்த, நல்ல அரசியலை உருவாக்கும் இயக்கமே இந்த புதிய கட்சி.
சுயராஜ்ஜியம், மக்கள் கையில் அதிகாரம், அதிகார பரவலாக்குதல் ஆகியவற்றை கொள்கையாக கொண்டு மக்கள் இயக்க போராட்டங்களின் அடுத்த கட்ட பரிணாம தொடர்ச்சியை இக்கட்சி வலியுறுத்தும். சமூக மாற்றத்திற்கான சமன் சமூகத்தை அமைக்கும் ஒரு அரசியல் இயக்கம். கடைசி மனிதருக்கும் உரிமை கிடைக்க செய்வதே இந்தக்கட்சியின் நோக்கமாகும்.தமிழ்நாட்டில் புதிய கட்சியினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிராமபுறங்களுக்கு இப்பணியை எடுத்துச் சென்று அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை இக்குழு முன்னெடுத்து செல்லும்.
இதற்கான சென்னையில் நடந்த அமைப்பு கூட்டத்தில் புதிய கட்சிக்கான தற்காலிக ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில ஆலோசகராக ஆர்.கீதா, டாக்டர் டி.கபிரியேலா, மாநில ஒருங்கிணைப்பாளர்களாக கிறிஸ்டினா சாமி, எம்.லெனின்.மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக கு.பாலகிருஷ்ணன், டாக்டர் ஜி.ஆனந்த், எஸ்.அய்யாபிள்ளை, ஐ.ஜோதி அமலா, எம்.ஏ.ஜெயக்குமார், ஜோசபின், ஓய்.அருள்தாஸ், கே.ஆர்.நாகராஜ், எஸ்.ஆர்.கலாவதி, சென்னை மாவட்ட அமைப்பாளராக எம்.சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.' கூறினார்.

_______________________________________________________________________________________________


குண்டழகிகள் தேர்வு ,இது   லண்டனில்  நடந்தது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 23 நவம்பர், 2012

நமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்-
-
-------------------
கிரீன் டீ ,பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லதுதானே .

காங்கிரசு எண்ணியபடியே மக்களவையில் கூ ட்ட ம் நடந்து மன்மோகன் மற்றும் சோனியா ,அமெரிக்கா மனதில் இனிப்பை கொட்டியுள்ளது.
மாயாவதியும்,முலாயமும் தாங்கள் கலந்து கொண்ட விருந்துக்கு செஞ்சோற்று க்கடனை  அடைத்துள்ளனர்.கர்ணன் அதற்காக தனது உயிரைத்தான் கொடுத்தான் .இவர்கள் இருவரும் நாட்டு மக்களின் எதிர் காலத்தை பலி கொடுத்துள்ளனர்.
மக்களவையை அந்நிய முதலீட்டை விட்டு கவனமாக மாற்றி அழைத்து 
கூக்குரலிட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி யுள்ளனர் .
என்ன இன்னும் அடுத்த பிரச்னைவரை சி.பி.ஐ. பயம் இல்லாமல் மாயாவதியும்,முலாயமும்,லாலுவும் இருக்கலாம்.
இவர்களுக்கு கைவந்த இந்தக் கலை நம்ம கலைஞருக்கு மட்டும் கைகொடுக்கவில்லை.
அவரையும் குடும்பத்தையும் ஜெ போல் பழி வாங்க 2ஜி யை வைத்து ஒரு விளையாட்டையே நடத்தி திகாரில் மகள் கனி மொழியை வைத்து அழகு பார்த்து விட்டது.
 கருணாநிதியோ இன்னமும் காங்கிரசுக்கு அடிவருடிக்கொண்டுதான் இருக்கிறார்.
அவருக்கு என்ன திட்டமோ?
அந்நிய வணிக திறப்புக்கும் முதலில் மாவீரனாக எதிர்த்த திமுக இப்போது பொடி வைத்துப்பெசுகிறது.அது மீண்டும் சரணாகதி என்பதைத்தான் காட்டுகிறது.
ஜெயோ மம்தாவுடன் இணைந்து எதிர்க்க மாட்டேன் என்று தனி பாதையில் போகிறார்.
இடதுசாரிகளின் முடிவும் மன்மோகன் அரசுக்கு ஆதரவாகத்தான் முடியும்.
ஆக அந்நிய வணிகம் மன்மோகன் நினைத்ததுபோல் கனவிலிருந்து நினைவுக்கு வரும்போல்தான் தெரிகிறது.
முலாயம்,லாலு,மாயாவதி,கருணாநிதி போன்றோரை பார்த்து  
சோனியா இப்போது நினைப்பது மட்டும் தெரிகிறது 
"நமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்.ஆனால் வாய்தான் காதுவரை கிழிகிறது"

 ---------------------------------------------------------------------------------------

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி
 ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.

கிரீன் டீயின் நன்மைகள்........


* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.


* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.


* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.


* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.


* இதய நோய் வராமல் தடுக்கிறது.


* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.


* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.


* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.


* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.


* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.


* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.


* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.


* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.


* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.


* பருக்கள் வராமல் தடுக்கிறது.


* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

நன்றி:வியப்பு  
_______________________________________________________________________________________________
வீரபாண்டி ஆறுமுகம் மறைவு. 


1937ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பிறந்தவர். திமுகவில் கடந்த 1957ல் இணைந்தார். பூலாவரி பஞ்சாயத்து தலைவராக 1958-76 களில் இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையினை அங்கிருந்து துவக்கிய அவர், வீரபாண்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக 70-76ல் இருந்தார். பின்னர் சேலம் மத்திய கோஆப்பரேடிவ் வங்கி தலைவராக 1973-76ல் இருந்தார்.
தமிழக சட்ட மன்றத்துக்கு 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் திமுக வட்டாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். தமிழக அமைச்சரவையில் 89-90 ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். பின்னர் விவசாயத்துறையில் வேளாண் அமைச்சர் பொறுப்பை 1990-91, 96-2001, 2006-2011 காலகட்டங்களில் வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மி பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார்.
கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலால் சிரமப்பட்டு வந்தார். ஒரு வாரமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.இவருக்கு 3 மகன்கள்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.
______________________________________________________________________________________________
பதினாறு பெற்று பெருவாழ்வு 

 இங்கிலாந்தை சார்ந்தவர் சூய் ராட்போர்ட் வயது 37 தான்.இவர் தனது கணவருடன் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.நாம் வாழ்த்தும் பதினாறை யும் பெற்று வளர்க்கிறார்.
இன்னும் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டபின் தனது சாதனையை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். 
____________________________________________________________________________________________ 

செவ்வாய், 20 நவம்பர், 2012

தாடா வுக்கு தடாசிவசேனாவின் தலைவர் பால் தாக்கரேவின் மரணத்தை அடுத்து மறுநாள் மும்பையில் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை  மூடப்பட்ட து தொடர்பாக  எதிர்ப்பு தெரிவித்து முகநூலில் கருத்து பதிவு செய்ததா ல் கைது  செய்யப்பட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ள சகின் தாடா என்ற பெண் இது குறித்து  மனதளவில்  அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் .
இவரின் பதிவை ஆதரித்து விருப்பம்[ "லைக்"] போட்ட இன்னொரு பெண் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் இணைய தள சுதந்திரம் குறித்த விவாதத்தை கி ளப்பியுள்ளது.

கைது நடவடக்கைகளை பிரஸ் கவுன்சில் ,மற்றும் பலரால் கண்டிக்கப்பட்டு ள்ளது.
இதற்கு முன்னர் தமிழகத்தைச் சேர்ந்த பின்னணிப் பாடகர் சின்மயி க்கு எதிராக கருத்து தெரிவித்த சிலரும், மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் வெள்ளையர் ஆட்சிக்கால வாய்ப்பூட்டு சட்டம் மீள வந்துவிட்டது.
முகநூலில் பதிந்தவர்-விரும்பியவர் 
வகுப்புவாதம்,தீவிரவாதம் ,கலவரம் தூண்டும் செய்திகளை தடை செய்ய மிகவும் யோசிக்கும் மத்திய -மாநில அரசுகள்  தனிப்பட்ட பிரபலங்கள் பற்றிய கருத்துக்களை மட்டும் உடனே நடவடிக்கை எடுப்பது ஏன்?
 தாக்கரே மரணத்துக்குப்பின் கடையடைப்பு தேவைதானா?
ஏற்கனவே அவர் இறந்தவுடனேயே கடைகள் அடைக்கப்பட்டு,போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு மக்கள் அவதியுற்ற நிலையில் ,உடல் தகனத்துக்கு மறு நாள் கடையடைப்பு தேவையா?என்றதற்குத்தான் தாடா வுக்கு  தடா போடப்பட்டுள்ளது.
 ______________________________________________________________________________________________
வண்ணத்தில் பிரதமர்[வால்மார்ட்டில் வாங்கியதா?]

சிகப்பா இருப்பவன்

"மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்"
 என்று 6ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 
இது சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பதைப் போல்தான்.
9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. 
இன்னமும்  போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது   புதிதாக ஒரு கதை  கிளம்பியுள்ளது.
6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று எழுதப்பட்டுள்ளது.
இது அசைவம் உண்பவர்களை கேவலப்படுத்துவதுடன் -அதிர்ச்சியிலும்  ஆழ்த்தியுள்ளது. மாணவப் பருவத்தில் இதுபோன்று பயிலப் படும் தகவல்களால் அசைவ உணவு உண்பவர்கள் மீது தவறான கண்ணோட்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதை நீக்கவேண்டும் என்று அசைவ உணவுப் பிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
இதை அசைவ உணவை விட சைவ உணவுதான் நல்லது .என்று அதன் பெருமையை விளக்கி எழுதி இருக்கலாமே.
 இது பற்றி  மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜூ இது எதிர்பாராத நிகழ்வு என்று கூறியுள்ளார்.6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள தகவல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
மனிதன் பரிணாம வளர்ச்சியடையும் மிருகமாக இருக்கையில் மற்ற மிருகங்களை வேட்டையாடி உண்டுள்ளான் .
அறிவு வளர,வளரத்தான் சைவமாக மாறியுள்ளான்.ஆறறிவு படைத்த மனிதன் விலங்கு வகையில் ஒன்றுதான். 
அதுவரை ஆடையின்றி கொன்றதை தின்று விதிவந்தால் இறந்து போயிருக்கிறான்.
இதை கல்வியாளர்கள் மறந்தது ஏன் ?
______________________________________________________________________________________________
-

வெள்ளி, 16 நவம்பர், 2012

உலக குத்து

இன்று உலகை கலக்கிக் கொண்டிருக்கும் சை[psy]குத்துப்பாட்டு 

பார்த்து விட்டு ஆட முடிந்தால் ஆடிக்கொள்ளுங்கள் 

மூளை ?முக்கிய கண்டுபிடிப்பு


கோமா நிலை எனப்படும் நடைபிண நிலையிலும் மனித மூளை சிந்தித்து செயற்படும் திறனுடன் இருப்பதாகவும், தான் இருக்கும் சூழலை அதனால் உணரமுடியும் என்றும், தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அது நினைவில் பதிந்துகொள்கிறது என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் வெஜிடேடிவ் ஸ்டேட் என்றழைக்கப்படும் ஒரு நிலை இருக்கிறது. அதாவது ஒரு மனிதரின் மூளைச்செயற்பாடுகள் முற்றாக செயலிழந்த ஒரு நிலை. அவருக்கு தன்னைப்பற்றியோ தனது சூழல் பற்றியோ எந்த பிரக்ஞையும் இல்லாத ஒரு நிலை.
 அவரால் மற்றவர்களிடம் பேசவோ மற்றவர்கள் பேசுவதை கேட்டுப் புரிந்துகொள்ளவோ முடியாத ஒரு நிலை. அவரது உடல் உறுப்புக்களை அவரால் இயக்கமுடியாத நிலை.
சில நேரங்களில் அவரது கண்கள் திறந்திருந்தாலும் அவரால் பார்த்து புரிந்துகொள்ளமுடியாத நிலை.
தமிழில் சொல்வதானால், நடைபிணம் போன்றதொரு நிலை. அதாவது உடலில் உயிர் இருக்கிறது என்பதைத்தவிர வேறு எந்த உணர்வும், உடற்செயற்பாடும் இல்லாத ஒரு நிலை.
இந்த நிலையில் இருப்பவர்களின் மூளை சிந்திக்கும் திறனற்றது என்று தான் இதுவரை மருத்துவ உலகம் நம்பி வந்தது.
ஆனால் அப்படிப்பட்டவர்களின் மூளை சிந்திக்கிறது, செயற்படுகிறது என்பதுடன், தான் இருக்கும் சூழலை அந்த மூளை புரிந்துகொள்கிறது, தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அது பதிலும் அளிக்கிறது என்கிற அதிசய கண்டுபிடிப்பு ஒன்றை பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் துறை மருத்துவ பேராசிரியர் அட்ரியன் ஓவென் நிரூபித்திருக்கிறார்.
நரம்பியலில் இது ஒரு சாதனைதான் 
மருத்துவ உலகில், குறிப்பாக நரம்பியல் துறையில் இது ஒரு மைல் கல் என்று வர்ணிக்கப்படுகிறது. நரம்பியல் துறையின் மருத்துவ புத்தகங்கள் மாற்றி எழுதப்படவேண்டிய அளவுக்கு இது முக்கிய கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.
ஸ்காட் ரட்லி என்கிற கேனடா நாட்டைச்சேர்ந்தவர் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கார் விபத்தில் சிக்கியபோது அவரது மூளை கடுமையாக பாதிக்கப்பட்டது. சிலகாலம் கோமா நிலையில் இருந்தார். பின்னர் அவர் கோமா நிலையிலிருந்து மீண்டாலும், அவர் நடைபிணமாகவே வாழ்ந்து வந்தார். அவரது கண்ணிமைகள் திறந்திருந்தாலும் அவரால் பார்க்கமுடிந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவ்வப்போது அவரது விரல்கள் அசைவதாகவும், அவர் தனது கண்களை அசைத்து தம்மிடம் பேச முயல்வதாகவும் அவரது பெற்றோர் கூறினாலும் மருத்துவர்கள் அதை நம்பவில்லை. மருத்துவ பரிசோதனைகளிலும் அவரது மூளை சிந்திப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்தது.
இந்த பின்னணியில் பிரிட்டனைச்சேர்ந்த நரம்பியல் மருத்துவ பேராசிரியர் ஆட்ரியன் ஓவென் இவரை பரிசோதித்தார்.

அவர் நடத்திய மேம்பட்ட ஸ்கேன் பரிசோதனைகளில் ஸ்காட் ரட்லியின் மூளை செயலற்றதல்ல என்றும், சிந்திக்கும் திறன் கொண்ட, கேட்கும் கேள்விகளை உள்வாங்கி அதற்கு பதிலளிக்கும் திறன்கொண்டது என்றும் பேராசிரியர் நிரூபித்திருக்கிறார்.
இந்த பரிசோதனையின் ஒருபகுதியாக, ரட்லியிடம் அவருக்கு தற்போது உடலில் வலி இருக்கிறதா என்று கேட்டபோது இல்லை என்று பதில் கூறும் அவரது மூளைச்செயற்பாட்டை ஸ்கேன் காட்டியது. இது மிக முக்கிய கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கும் பேராசிரியர் ஓவன், இனிமேல் இந்த நிலையில் இருக்கும் நோயாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப உணவு கொடுப்பது, உடை மாற்றுவது, அவர்களை குளிப்பாட்டுவது என்று அவர்களின் அன்றாட தேவைகளை அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப செய்ய முடியும் என்று தெரிவிக்கிறார்.
நினைவாற்றல் குறையாது 
இதே போல இத்தகையவர்களுக்கு சிந்திக்கும் திறன் மட்டுமல்ல, சேதமடைந்த மூளையின் நினைவாற்றலும் தொடர்வதையும் இன்னொரு நோயாளியின் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.
கேனடாவைச் சேர்ந்த ஸ்டீவன் கிரஹாம் என்கிற நோயாளியின் மூளை பாதிக்கப்பட்டு அவர் நடைபிணமான பிறகு அவரது சகோதரிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை அவரது மூளை நினைவில் வைத்திருந்தது என்பதையும் அவரிடம் செய்யப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஸ்கேன் பரிசோதனைகள் நிரூபித்திருக்கின்றன.
இந்த பரிசோதனைகள் எல்லாமே, வெஜிடேடிவ் ஸ்டேடஸ் என்கிற நடைபிண நிலையில் இருக்கும் மனிதர்களின் மூளை சிந்திக்கும் திறனுடன் இருப்பதை நிரூபிப்பதாக தெரிவித்திருக்கும் பேராசிரியர் ஓவென், இந்த பரிசோதனை முடிவுகள் இத்தகைய நிலையில் இருக்க நேரும் நோயாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும் என்பதுடன் அவர்களை பராமரிக்க நேரும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என்றும் நம்புகிறார்.
உடல் நடைபிணமாக இருந் தாலும் அவர்களின் மூளையின் சிந்திக்கும் செயற்படும் திறன் அவர்களை வாழ வைக்கு ம் என்பதே அவரது நம்பிக்கை.
_______________________________________________________________________________________________
 

வியாழன், 15 நவம்பர், 2012

நவம்பர் மாதம்

முக்கிய நிகழ்வுகள்
=================

1-11-1954 - பாண்டிச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்திய யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.

 1-11-2000 - சட்டிஸ்கர் மாநிலம் (26-வது) உருவாக்கப்பட்டது.

 1-11-1956 - ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.

 3-11-1957 - ரஷ்யா விண்வெளிக்கு ஒரு நாயை அனுப்பியது.

 6-11-1860 - அமெரிக்காவின் 16-வது குடியரசுத் தலைவராக ஆபிரகாம் லிங்கன் தேர்வு செய்யப்பட்டார்.

  7-11- 1917             ரஷ்ய புரட்சி .சோவியத் பிறந்தது.

 19-11-1994 - ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 22-11-1963 - அமெரிக்க அதிபர் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

 26-11-1949 - இந்திய அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டது.
 

______________________________________________________________________________________________
 
முக்கிய தினங்கள்
================
6.போர் மற்றும் ஆயுதப்
 போராட்டத்துக்கு எதிரான நாள்

7.ரஷ்ய புரட்சி தினம்


9.சட்ட உதவி தினம்

10.அமைதிக்கு விஞ்ஞானம் தினம்

12.உலக நிமோனியா தினம்

14.உலக சர்க்கரை வியாதி
 விழிப்புணர்வு தினம்

15.உலக தத்துவ தினம்

16.உலகப் பொறுமை தினம்

17.சாலை விபத்துகளில்
 உயிரிழந்தோர் நினைவு தினம்

19.தேசிய ஒருமைப்பாடு தினம்

20.பிரபஞ்ச குழந்தைகள் தினம்

21.உலக தொலைக்காட்சி தினம்

25.பெண்களுக்கெதிரான
 வன்கொடுமை தடுப்பு தினம்

26.இந்திய அரசியலமைப்பு
 சட்ட நாள்

30.கணினி  பாதுகாப்பு தினம்
_________________________________________________________________________________
 
பிரபலங்களின் பிறந்த தினங்கள்

--------------------------------------------------

1.வி.வி.எஸ்.லட்சுமணன் (இந்திய
 கிரிக்கெட் வீரர்)

2.ஷாருக் கான் (இந்தி நடிகர்)

3.அமார்த்தியா சென் (இந்தியப்
 பொருளாதார நிபுணர்-நோபல் பரிசு பெற்றவர்)

4.சகுந்தலா தேவி (கணித மேதை)

5.சித்தரஞ்சன் தாஸ் (புகழ்பெற்ற
 வங்காள வக்கீல்)

5.விராட் கோலி (இந்திய கிரிக்கெட் வீரர்)

7.விபின் சந்திர பால் (சுதந்திரப்
 போராட்ட வீரர்)

7.சர் சி.வி.ராமன் (இந்திய விஞ்ஞானி)

7.கமல்ஹாசன்
11.அபுல் கலாம் ஆஸôத் (சுதந்திரப்
 போராட்ட வீரர்)

11.ராபின் உத்தப்பா (இந்திய கிரிக்கெட் வீரர்)

13.பி.சுசீலா (பின்னணிப் பாடகி)

14.ஜவாஹர்லால் நேரு

15.சானியா மிர்ஸô (இந்திய டென்னிஸ்
 வீராங்கனை)

18.வி.சாந்தாராம் (புகழ்பெற்ற
 திரைப்பட இயக்குநர்)

19.ராணி லட்சுமி பாய் (ஜான்சி ராணி)

19.இந்திரா காந்தி


19.சுஷ்மிதா சென் (பிரபஞ்ச அழகி)

22.முலாயம் சிங் யாதவ் (அரசியல்வாதி)

23.நீரத் சி.செüத்ரி (பிரபல எழுத்தாளர்)

24.அருந்ததி ராய் (பிரபல எழுத்தாளர்)

27.சுரேஷ்குமார் ரெய்னா (இந்திய
 கிரிக்கெட் வீரர்)

29.என்.எஸ்.கிருஷ்ணன்
30.ஜெகதீஷ் சந்திர போஸ் (இந்திய
 விஞ்ஞானி)
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 நினைவு தினங்கள்
================

6.சஞ்சீவ் குமார் (இந்தி நடிகர்)

7.சி.சுப்ரமணியன் (இந்திய அரசியல்வாதி)

9.கே.ஆர்.நாராயணன் (முன்னாள்
 குடியரசுத் தலைவர்)


12.பண்டிட் மதன்மோகன் மாளவியா
 (பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியர்)

15.நாதுராம் கோட்சே  (காந்தியை
 சுட்ட வர்)

17.லாலா லஜபதி ராய் (இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்)

21.சர்.சி.வி.ராமன்

23.ஜெகதீஷ் சந்திர போஸ்

29.ஜே.ஆர்.டி.டாடா (தொழிலதிபர்)
---------------------------------------------------------------------------------------------------------------------------------