ஞாயிறு, 25 நவம்பர், 2012

விலைவாசியை கட்டுப்படுத்த

இப்போது இந்தியாவை பொறுத்தவரை மாதாமாதம் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை இன்ப அதிர்ச்சிக்கு தள்ளிவிடுகிறார்கள்.

இந்தவிலை உயர்வுக்கு வெளி சந்தை கச்சா எண்ணை விலை உயர்வு மட்டும் காரணாமாக அமையவில்லை இங்குள்ள பெட்ரோலிய தொழிற்சாலை உரிமையாளர்கள் பணம் சம்பாதிக்கும் வெறியும் ,அதற்கு நம் ஆட்சியாளர்கள் துணை போவதாலேயே இப்படி விலை உயர்வை இந்திய மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது.
பெட்ரோலில் இப்படி மக்கள் துண்பப்படுவதை வழி இல்லையா? என்றால் இருக்கிறது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதன் மூலம் பெட்ரோ லை குறைவாக செலவிட்டு பெற்றோல் சிக்கனத்தை உருவாக்கலாம். 
ஆனால் அதை செய்ய நம் ஆட்சியாளர்களுக்கு மனமில்லை.
காரணம் அதானால் மக்களுக்கு மட்டுமானால் நன்மை விளையலாம்.
கட்சிக்கு படி அளக்கும் அம்பானிகளுக்கு லாபம் இல்லாமல் பொய் விடுமே.
மக்களா?அம்பானிகளா?என்றால் நம் மன்மோகன் சிங் வகையறாக்களின் கட்சி முள் அம்பானிகள் பக்கமே சாய்கிறது.
சரி .இனி பெட்ரோல் விலை குறைக்க உதவும் எத்தனால் பற்றி பார்ப்போம்.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் இறக்குமதி செலவு குறையும்

சர்க்கரை ஆலைகள் மற்றும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்  கிடைக்கும்.எத்தனால் கலந்த பெட்ரோலில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவு.வாகனங்களுக்கு கூடுதல் மைலேஜ் கிடைக்கும்

இந்தியாவில் 2010-11ம் நிதியாண்டில் 220 கோடி லிட்டர்கள்  எத்தனால் உற்பத்தியாகியுள்ளது.

பொது துறையை சேர்ந்த மூன்று எண்ணெய் நிறுவனங்கள், கண்டிப்பாக பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கலந்து விற்பனை செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (சி.சி.இ.ஏ.,), ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதற்கான அரசாணை வெளியான பின், நாடு முழுவதும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.பெட்ரோலில், 5 சதவீத எத்தனாலை கட்டாயம் கலந்து விற்பனை செய்யும் திட்டத்திற்கு, கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருந்தது.இதன்படி,வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான், நிகோபார், லட்சத்தீவு ஆகியவை நீங்கலாக, 19 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.இத்திட்டத்தின் கீழ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 105 கோடி லிட்டர் எத்தனால் தேவை என, மதிப்பிடப்பட்டது.
இந்நிலையில், சர்க்கரை ஆலைகளுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் இடையே, எத்தனால் கொள்முதல் விலை தொடர்பான பிரச்னையால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால், எத்தனால் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சவுமித்ரா சவுத்ரி தலைமையிலான குழுவை, சி.சி.இ.ஏ., அமைத்தது.இக்குழு, இடைக்கால ஏற்பாடாக, ஒரு லிட்டர் எத்தனால் கொள்முதல் விலையை, 27 ரூபாயாக நிர்ணயித்தது.எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனைக்கு தேர்வு செய்யப்பட்ட, 19 மாநிலங்களில், 13 மாநிலங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.அதிலும், ஆண்டுக்கு, 44 கோடி லிட்டர் எத்தனால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.நிர்ணயித்த இலக்குப்படி, எத்தனாலை கொள்முதல் செய்யாத எண்ணெய் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்திருந்தது.இருந்தபோதிலும், எத்தனால் கலப்பு பிரச்னையில், மத்திய அரசின் தெளிவற்ற போக்கு காரணமாகவே, இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரித்துள்ளதால், இறக்குமதி செலவினத்தை குறைக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அவற்றில் ஒன்றாக, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தும் பொருட்டு, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டத்தை உறுதியுடன் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சி.சி.இ.ஏ.,வின் ஒப்புதலை அடுத்து, பெட்ரோலிய அமைச்சகம், விரைவில் அரசாணை வெளியிட உள்ளது. மேலும், எத்தனால் விலை, கொள்முதல் ஆகியவை தொடர்பான ஒப்பந்த புள்ளிகளும் கோரப்பட உள்ளன.இதையடுத்து, குறிப்பிட்ட மாநிலங்களில் எத்தனால் கலப்பு பெட்ரோல் விற்பனை நடைமுறைக்கு வரும்.எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையின் வாயிலாக, எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு அன்னியச் செலாவணியை மிச்சப்படுத்த முடியும்.
இந்நிலையில், எத்தனால் கலப்பு திட்டத்திற்கு, ரசாயன துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோலில் எத்தனாலை கலப்பதால், பல்வேறு ரசாயன பொருட்களுக்கு தேவையான எத்தனாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என,சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டில், 220 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால்  பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு, 105 கோடி லிட்டர்கள்  எத்தனால் மட்டும்தான் தான் தேவைப்படும். 
அதனால், எத்தனாலுக்கு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.அப்படியே பற்றாக்குறை ஏற்பட்டால், எண்ணெய் நிறுவனங்கள், எத்தனாலை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்படும் என, அவர் மேலும் கூறினார். இந்தோனேசியா ,தாய்லாந்து  ,பிலிப்பைன்ஸ் போன்ற அதிக எத்தனால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்து கொள்ளாலாம்.விளையும் அங்கு மிக மலிவுதான்.
ஆட்சியாளர்கள் செய்து பெட்ரோல் பயனீ ட்டையும்,விலையையும் குறைப்பார்களா ?
______________________________________________________________________________________________

பற்பசை அபாயம்  
பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப்பொருள் கலந்திருப்பதால்  அதை பல் துலக்கும் போது உட்கொள்வதால் ஆபத்து என்று  தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
தினமும் தொலைக்காட்சிகளில் பற்பசையினால் நாள் முழுக்க வாசம் வீசுவதாகவும் அதனால் பெண்கள் நம் மீது பொத்து,பொத்து என்று விழுவது போலவும் காட்டுகிறார்கள் .ஆனால் அது உண்மையில்லை.நாள் முழுக்க யார் வாயும் பற்பசையால் மணப்பதில்லை.

ப ற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது. பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது. இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று மருத்துவ ர் கள்  தெரிவிக்கிறார்கள். ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

தொலைக்காட்சி  விளம்பரங்களைக்கண்டு ஏமாற வேண்டாம்.
நம் பெருசுகள் வேப்பங்குச்சி,சாம்பலையும்,அடுப்புக்கரியையும் வைத்தி பல் விளக்கி 70 வயதுவரை நல்லி எழும்பி மென்று துப்பியிருக்கிரார்கள்.
ஆனால் இன்று 1வயது சிறுவனுக்கே சாக்லேட்டுகள் தின்று பற்கள் அரித்துப் போயுள்ளன.உணவு பழக்கம் பல் கெட முக்கிய காரணம்.
____________________________________________________________________________________________
 மரண தேதி ?
மனிதன்  வாழ்வில் மரணம் எப்போது வரும்? 
இதுவரை அது  மர்மம் தான் . 
ஆனால், அந்த மர்மத்தையும்  ரத்த பரிசோதனை மூலம் அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களிலும் குரோமசோம்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
 இவற்றின் முனைகளில் 'டெலோ மர்ஸ்' என்ற மூலப்பொருள் உள்ளது. செல்கள் உடைந்து கொண்டே வருவதால் உடல் உறுப்புகள் வளர்ச்சி பெறுகின்றன. அவ்வாறு செல்கள் உடைந்து உடல் வளர்ச்சி அடையும்போது 'டெலோ மர்ஸ்'சின் வடிவமும் குறைந்து கொண்டே வருகிறது.
இதன் மூலம் ஒரு உயிரினத்தின் வயதையும், அதன் மூலம் அவற்றின் வாழ்நாளையும் கணிக்க முடியும். அந்த அடிப்படையில், செல்ஸ் நாட்டில் உள்ள கவுசின் தீவில் வாழும் 320 வகையான பறவைகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் சாவு காலம் கண்டறியப்பட்டு , அதன் சாவு தேதி கிட்ட தட்ட சரியாக இருந்துள்ளது.
அடுத்ததாக, இச்சோதனை விலங்குகளிடமும், மனிதர்களிடமும் நடத்தப்பட உள்ளது.
______________________________________________________________________________________________