நமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்
- - ------------------- கிரீன் டீ ,பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டால் நல்லதுதானே . | |
காங்கிரசு எண்ணியபடியே மக்களவையில் கூ ட்ட ம் நடந்து மன்மோகன் மற்றும் சோனியா ,அமெரிக்கா மனதில் இனிப்பை கொட்டியுள்ளது.
மாயாவதியும்,முலாயமும் தாங்கள் கலந்து கொண்ட விருந்துக்கு செஞ்சோற்று க்கடனை அடைத்துள்ளனர்.கர்ணன் அதற்காக தனது உயிரைத்தான் கொடுத்தான் .இவர்கள் இருவரும் நாட்டு மக்களின் எதிர் காலத்தை பலி கொடுத்துள்ளனர்.
மக்களவையை அந்நிய முதலீட்டை விட்டு கவனமாக மாற்றி அழைத்து
கூக்குரலிட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றி யுள்ளனர் .
என்ன இன்னும் அடுத்த பிரச்னைவரை சி.பி.ஐ. பயம் இல்லாமல் மாயாவதியும்,முலாயமும்,லாலுவும் இருக்கலாம்.
இவர்களுக்கு கைவந்த இந்தக் கலை நம்ம கலைஞருக்கு மட்டும் கைகொடுக்கவில்லை.
அவரையும் குடும்பத்தையும் ஜெ போல் பழி வாங்க 2ஜி யை வைத்து ஒரு விளையாட்டையே நடத்தி திகாரில் மகள் கனி மொழியை வைத்து அழகு பார்த்து விட்டது.
கருணாநிதியோ இன்னமும் காங்கிரசுக்கு அடிவருடிக்கொண்டுதான் இருக்கிறார்.
அவருக்கு என்ன திட்டமோ?
அந்நிய வணிக திறப்புக்கும் முதலில் மாவீரனாக எதிர்த்த திமுக இப்போது பொடி வைத்துப்பெசுகிறது.அது மீண்டும் சரணாகதி என்பதைத்தான் காட்டுகிறது.
ஜெயோ மம்தாவுடன் இணைந்து எதிர்க்க மாட்டேன் என்று தனி பாதையில் போகிறார்.
இடதுசாரிகளின் முடிவும் மன்மோகன் அரசுக்கு ஆதரவாகத்தான் முடியும்.
ஆக அந்நிய வணிகம் மன்மோகன் நினைத்ததுபோல் கனவிலிருந்து நினைவுக்கு வரும்போல்தான் தெரிகிறது.
முலாயம்,லாலு,மாயாவதி,கருணாநிதி போன்றோரை பார்த்து
சோனியா இப்போது நினைப்பது மட்டும் தெரிகிறது
"நமக்கு வாய்த்த அடிமைகள் மிக திறமைசாலிகள்.ஆனால் வாய்தான் காதுவரை கிழிகிறது"
---------------------------------------------------------------------------------------

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி
ஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.
கிரீன் டீயின் நன்மைகள்........
* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
* இதய நோய் வராமல் தடுக்கிறது.
* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
* பருக்கள் வராமல் தடுக்கிறது.
* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
நன்றி:வியப்பு
_______________________________________________________________________________________________
வீரபாண்டி ஆறுமுகம் மறைவு.
1937ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி பிறந்தவர். திமுகவில் கடந்த 1957ல் இணைந்தார். பூலாவரி பஞ்சாயத்து தலைவராக 1958-76 களில் இருந்தார். தனது அரசியல் வாழ்க்கையினை அங்கிருந்து துவக்கிய அவர், வீரபாண்டி பஞ்சாயத்து யூனியன் தலைவராக 70-76ல் இருந்தார். பின்னர் சேலம் மத்திய கோஆப்பரேடிவ் வங்கி தலைவராக 1973-76ல் இருந்தார்.
தமிழக சட்ட மன்றத்துக்கு 1962-67, 67-71, 71-76, 89-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டங்களில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சேலம் திமுக வட்டாரத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தார். தமிழக அமைச்சரவையில் 89-90 ல் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தவர். பின்னர் விவசாயத்துறையில் வேளாண் அமைச்சர் பொறுப்பை 1990-91, 96-2001, 2006-2011 காலகட்டங்களில் வகித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மி பழனிச்சாமியிடம் தோல்வியுற்றார்.
கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலால் சிரமப்பட்டு வந்தார். ஒரு வாரமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவந்தார்.இவருக்கு 3 மகன்கள்.
கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சென்னையில் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.
______________________________________________________________________________________________
பதினாறு பெற்று பெருவாழ்வு
இங்கிலாந்தை சார்ந்தவர் சூய் ராட்போர்ட் வயது 37 தான்.இவர் தனது கணவருடன் சேர்ந்து சாதனை படைத்துள்ளார்.நாம் வாழ்த்தும் பதினாறை யும் பெற்று வளர்க்கிறார்.
இன்னும் ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டபின் தனது சாதனையை முடித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
____________________________________________________________________________________________