சனி, 24 நவம்பர், 2012

சாதாரண மனிதர் கட்சி

 அரவிந்த் கேஜ்ரிவால் தனது புதுக் கட்சியை சொல்லிவிட்டார்.இது மக்களுக்கான வித்தியாசமான கட்சி என்றுள்ளார்.
இதுவரை வந்த கட்சிகள் முழுக்க அப்படித்தான் வந்து அரசியல் குட்டையில் நீக்கமற கலந்துள்ளன.
இறைவனுடன் ,மக்களுடன் கூ ட்டணி என்று அலைந்தவர்கள் இன்று தங்கள் கட்சி ச.ம.உ ,க்களை யாரும் கவர்ந்திழுத்துவிடக் கூ டாது என்று பயத்துடன் உள்ள நிலைதான் உள்ளது.பார்ப்போம் சா.ம.கட்சி யின் தனித்துவத்தை.
சாதாரண மனிதர் கட்சி- என்ற பொருள்படும் "ஆம் ஆத்மி பார்ட்டி” என்ற பெயரைச்  அறிவித்தார் அரவிந்த் கேஜ்ரிவால். 

புதுதில்லியில் கட்சியின் முதல் கூட்டம் அதிகாரபூர்வமாக இன்று கூடி இந்தக் கூட்டத்தில் அவர் இந்தப் பெயரை அறிவித்தார். 
 மாலை 5 மணி அளவில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார் அரவிந்த் கேஜ்ரிவால். அப் போது, இந்தப் பெயரை அதிகாரபூர்வமாக ஊடகங்களிடம் அறிவிப்பார் என்று தெரிகிறது .
இன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, தேசியக் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் 300க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
தேசிய கவுன்சில் தற்போது 30 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர். கட்சியின் கொள்கைகளை தீர்மானிக்கும் உயர்மட்டக் குழுவாக இது அமையும். கட்சியின் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட அனைவரும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
 நம்ம பக்கம் உள்ளவர்கள் ஆத்மியில் இப்போவே சேர்ந்து கொண்டால் நாளைக்கு எதாச்சும் பொறுப்பாளர் பதவி கெடைக்க வாய்ப்பிருக்கிறது.
சொல்லவா வேண்டும் .இப்போவே இடம் பிடிக்க துண்டுடன் சிலர் கிளம்பியிருப்பார்களே?
கிளம்பிட்டாங்கயா? 
அரவிந்த் கெஜ்ரிவால் அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி,
"அரவிந்த் கெஜ்ரிவால், யோகேந்திர யாதவ் குழுவினர் உருவாக்கும் மாற்று அரசியலுக்கான புதிய தேசிய கட்சி 26–ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் வெளியிட்ட நாளாகிய அன்றைய தினம், கட்சியின் பெயரை அறிவித்து, புதிய கட்சி துவங்குகிறது.இந்நிகழ்ச்சி டெல்லி நாடாளுமன்ற வீதி, ஜந்தர்மந்தரில் நடக்கிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து இயக்க உறுப்பினர்கள், ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.அரசியலில் மாற்றம் வராதா என்று ஏங்கி கொண்டிருந்த பல கோடி நம் நாட்டு மக்களுக்கு மாற்று அரசியலை தரக்கூடிய அரசியல் புரட்சியாக, ஜனநாயகத்தை மீட்டெடுக்க சிறந்த ஆளுகையை செயல்படுத்த, நல்ல அரசியலை உருவாக்கும் இயக்கமே இந்த புதிய கட்சி.
சுயராஜ்ஜியம், மக்கள் கையில் அதிகாரம், அதிகார பரவலாக்குதல் ஆகியவற்றை கொள்கையாக கொண்டு மக்கள் இயக்க போராட்டங்களின் அடுத்த கட்ட பரிணாம தொடர்ச்சியை இக்கட்சி வலியுறுத்தும். சமூக மாற்றத்திற்கான சமன் சமூகத்தை அமைக்கும் ஒரு அரசியல் இயக்கம். கடைசி மனிதருக்கும் உரிமை கிடைக்க செய்வதே இந்தக்கட்சியின் நோக்கமாகும்.தமிழ்நாட்டில் புதிய கட்சியினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாவட்டங்கள், மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, ஒன்றிய, ஊராட்சி மற்றும் கிராமபுறங்களுக்கு இப்பணியை எடுத்துச் சென்று அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை இக்குழு முன்னெடுத்து செல்லும்.
இதற்கான சென்னையில் நடந்த அமைப்பு கூட்டத்தில் புதிய கட்சிக்கான தற்காலிக ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநில ஆலோசகராக ஆர்.கீதா, டாக்டர் டி.கபிரியேலா, மாநில ஒருங்கிணைப்பாளர்களாக கிறிஸ்டினா சாமி, எம்.லெனின்.மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்களாக கு.பாலகிருஷ்ணன், டாக்டர் ஜி.ஆனந்த், எஸ்.அய்யாபிள்ளை, ஐ.ஜோதி அமலா, எம்.ஏ.ஜெயக்குமார், ஜோசபின், ஓய்.அருள்தாஸ், கே.ஆர்.நாகராஜ், எஸ்.ஆர்.கலாவதி, சென்னை மாவட்ட அமைப்பாளராக எம்.சாந்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.' கூறினார்.

_______________________________________________________________________________________________


குண்டழகிகள் தேர்வு ,இது   லண்டனில்  நடந்தது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------