அரிசி கிலோ 6.90
அரவிந்த் கெஜ்ரிவால் தனது அடுத்த குற்றசாட்டாக கூறி வருவது சுவிஸ் வங்கி பதுக்கல் காரர்கள் பற்றிதான் :
"கடந்த வருடம் எச்.எஸ்.பி.சி. வங்கி அந்த 700 நிறுவனங்களின் பெயர்களின் பட்டியிலை வெளியிட்டது. ஆனால் எச்.எஸ்.பி.சி. வங்கி அவர்கள் தவறுதலாக முகேஷ் அம்பானியின் பெயரை வெளியிட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த பட்டியிலை எச்.எஸ்.பி.சி. வங்கி தயார் செய்யவில்லை. அதை பிரான்ஸ் அரசு தயார் செய்ததுள்ளது.
எச்.எஸ்.பி.சி. வங்கி ஏன் இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது? பிரான்ஸ் அரசுதான் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவரங்கள் அனைத்தும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் செர்வரிலிருந்து திருடப்பட்டவையாகும். முகேஷ் அம்பானியின் வங்கி கணக்கை தவறுதலாக அவர்களுடைய கம்யூட்டர் தயார் செய்தது என்று கூற அவர்கள் முயற்சி செய்கிறார்களா? இந்த பட்டியிலில் இடம்பெற்ற நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஆனால் முகேஷ் அம்பானி, அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியை சந்தித்து தனது நிறுவனங்களில் சோதனை செய்யாதவாறு பார்த்துக்கொண்டார். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பிரணாப் முகர்ஜி எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களில் எம்.பி.க்கள் யாரும் இல்லை என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அன்னு டாண்டனின் கணவர், இறப்பதற்கு முன்பு ரிலையன்ஸ் நிறுவனங்களில் வருமான வரிச் சோதனையாளராக சென்றவர்.
பின்னர் அவர் அந்நிறுவனத்தின் வேலையில் அமர்த்தப்பட்டார். இந்நிலையில் எம்.பி. அன்னு டாண்டனின் வங்கி கணக்கில் உள்ள பணம் ரிலையன்ஸ் பணமா? அல்லது காங்கிரஸ் பணமா? அல்லது ராகுல் காந்தியின் பணமா? அரசு தொழிலதிபர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது.
சோதனை செய்யப்பட்ட மூன்று நிறுவனங்கள் சட்டத்தை மீறும் விதத்தில் தவறான தகவல்களை தந்துள்ளன. ஜெனிவா எச்.எஸ்.பி.சி. வங்கியில் முதலீடு செய்ய அவர்களின் பிரதிநிதிகள் இங்கு வீடுவீடாக செல்கிறார்கள். அரசு அவர்களை கைது செய்யவேண்டும். அவர்கள் மீது விசாரணை மேற் கொள்ள வேண்டும்.
மேலும் எச்.எஸ்.பி.சி. நிறுவனம் இந்தியாவில் ஹவாலா மோசடியில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். ராகுல் காந்திக்கு சொந்தமான 125 கோடி ரூபாய் அவருக்கு மிக நெருக்கமாக உள்ள அன்னு டாண்டனின் எச்.எஸ்.பி.சி. வங்கி கணக்கில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இருவரும் தலா 100 கோடி ரூபாய் ஜெனிவாவில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் 2006ம் ஆண்டிலிருந்து சுமார் 6000 கோடி ரூபாய்க்கான விவரங்களை வெளியிடவேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இவரின் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர்கள் மறுத்துள்ளனர்.
_______________________________________________________________________________________________
மன்மோகன்சிங் ஊரில் அரிசி கிலோ 6.90 மட்டும்தான்?
நா ட்டின் ஏழை, எளிய மற்றும் நடுத் தர மக்களின் அடிப்படை வாழ்வாதார மாக விளங்குகிற பொது விநியோக முறை யை படிப்படியாக ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ரேசன் கடைகளில் பொருட்கள் விநியோ கிப்பதற்கு பதிலாக , அதற்குரிய தொகை யை நேரடியாகப் பணமாகவே கொடுத்து விடுவது என தீர்மானித்துள்ளது. இத்திட்டம் 2013 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது. முதல்கட்டமாக 2013 ஜனவரி 1ல் 51 மாவட்டங்களில் அமலுக்கு வரும் இத்திட்டம், 2013 ஏப்ரல் 1ம் தேதிக்குள் 18 மாநிலங்களிலும், 2014 ஏப்ரல் 1க்குள் எஞ்சியுள்ள 16 மாநிலங்களிலும் அம லுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்துகிறோம் என்ற பெயரில் அனைத்துவிதமான மானியங்களையும் வெட்டுவது என்ற அறிவிப்புகளை அடுத்தடுத்து மன்மோகன் சிங் அரசு அறிவித்தவண்ணம் உள்ளது.
ரேசன் கடைகள் மூலம் மக்களுக்கு பொருள் விநியோகிப்பதற்காக அரசு அளித்து
வரும் மானியங்கள்அனைத்தையும் வெட்ட வேண்டுமென கேல்கர் குழு அளித்த
பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது. அதை உட னடியாக செயல்படுத்தவும்
முடிவு செய் துள்ளது. ரேசன் பொருட்களுக்குப் பதிலாக அரசாங்கம் மக்கள்
கையில் நேரடியாக பணமே அளிக்கிறது என்று விளம்பரம் செய்து, மக்களை ஏமாற்ற
முயற்சிக்கும் இத்திட்டத்தின் பின்னணியில், ரேசன் கடைகளில் இனிமேல்
பொருட்கள் வழங்கப்படாது என்கிற ஒரு பயங்கர மான தாக்குதல் காத்திருக்கிறது.
மிகப் பெருவாரியான ஏழை, எளிய மக்கள் தங் களது அன்றாட உணவுக்கு ரேசன்
பொருட்களையே நம்பியிருக்கும் நிலை யில், ரேசன் பொருளுக்கு அரசு என்ன
மானியம் கொடுக்கிறதோ அந்தத்தொ கையை மக்கள் கையில் கொடுப்பதால்,
வெளிச்சந்தையில் அதை வைத்து எப் பொருளையும் வாங்க முடியாத நிலை மைக்குத்
தள்ளப்படுவார்கள். ரேசன் கடைகள் மூடப்படுவதால் வெளிச்சந் தையில்
உணவுதானியங்கள் உள்பட அனைத்துப் பொருட்களின் விலையும் மிகக்கடுமையாக
அதிகரிக்கும்.
பிரதமர் அலுவலகம் அறிவித்தவுட னேயே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உடனடியாக
அமைச்சரவைக் கூட்டப் பட்டு இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக
அறிவிக்கப்பட்டுவிட்டது. கேரளத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை உடனடி யாக
கூட்டிய முதலமைச்சர் உம்மன் சாண்டி, “கேரளத்தில் வறுமைக்கோட் டுக்கு மேலே
உள்ளவர்களுக்கு 2 ரூபாய்க்கு வழங்கப்படும் 9 கிலோ அரிசிக்கான மானியத்தை
அவர்களின் வங்கிக்கணக் கில் சேர்த்துவிடுவோம்” என்று கூறி யுள்ளார். அரிசி
கிலோவுக்கு 6 ரூபாய் 90 பைசா வீதம் அரசு மானியம் அளிக்கிறது. இந்தத்தொகை,
கார்டுதாரர்களின் வங் கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அவர்
தெரிவித்துள்ளார்.
இந்த 6 ரூபாய் 90 பைசாவை எடுத்து, அவர்கள் வெளி மார்க்கெட்டில் 1 கிலோ
அரிசி வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதே திட்டம்.நாட்டில் வெளிச்சந்தையில்
எந்தக் கடையிலும் வெறும் 6 ரூபாயை வைத்து ஒரு கிலோ அரிசி வாங்க முடியாது
என்பது தான் நடைமுறை உண்மை.
ஆனால் இதை மற்ற கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருக்கும்பொதூ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமட்டுமே இந்த திட்டத்தை
துவக் கத்திலிருந்து எதிர்த்து கொண்டிருக்கிறது.
நன்றி : தீக்கதிர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------