விகடன் குடும்பத்தில் சொத்துச் சண்டை – சரிக்கட்ட பாஜகவிடம் பேரம் பேசிய சீனிவாசன் .இதுதான் பத்திரிகை உலக இன்றைய கழுகார் பரபரசெய்தி. விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனின் குடும்பத்தில் மீண்டும் சொத்துச் சண்டை உச்சத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனிவாசனின் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு 5 மகள்களும் உள்ளனர். தாத்தாஎஸ்.எஸ்.வாசன் சேர்த்துவைத்தை சொத்துகள் மற்றும் விகடன் குழுமத்தை மொத்தமாக சீனிவாசன் அபகரித்து விட்டதாகவும். கொஞ்ச நஞ்ச சொத்துக்களைக் கொடுத்து பின்னால் செய்கிறேன் பின்னால் செய்கிறேன் என சகோதரிகளை ஏமாற்றிவிட்டதாகவும் குடும்பத்தில் அடிக்கடி குடுமியைப் பிடித்துக் கொள்வது தொடர்ந்துவந்தது. 2001 ஆம் ஆண்டு விகடன் குழுமத்தின் மொத்த அதிகாரத்தையும் கையிலெடுத்த சீனிவாசன், தந்தை பாலசுப்பிரமணியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சகோதரிகளையும் ஏமாற்றி வந்ததாக அப்போதே பல தகவல்கள் வெளியாகின. இதனால், மகனோடு கோபித்துக் கொண்டு சென்ற பாலசுப்பிரமணியனை அப்போதைய மூத்த பத்திரிகைகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். அதன் பின்னரும் சீனிவாசனின் ஏமாற்றுப் போக்கை சகித்துக்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக
2023 பா.ஜ.க வின் ராசிபலன் அண்மையில் டிசம்பர் மாதம் நடைபெற்ற பாஜக பாராளுமன்ற கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. * இதன் ஒரு பகுதியாக தற்போதைய மத்திய அமைச்சரவையில் உள்ள சில முக்கிய அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு ஏற்ற மாநிலங்களில் கட்சிப் பணிகளில் ஈடுபடுத்த அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. * செயல்பாடில்லாத பொம்மை அமைச்சர்களை நீக்கவும், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையிலும் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றமும், கட்சி பணிகளைத் தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் வருகிற பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் மேற்கொள்ளப்படலாம் என டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் கட்சி ரீதியாக பாஜக-வுக்கு பலன் அளித்தாலும், மக்கள் செல்வாக்கை திரட்டுவதில் அது எந்த அளவுக்குப் பலன் அளிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், " பாஜக-வின