வெள்ளி, 9 நவம்பர், 2012

உள்ளதும் போகிறது

அ மெரிக்க ஜனாதிபதியாக பாரக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார்.

தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளர் மித் ரோம்னியைவிட கூடுதலான வாக்குக ளைப் பெற்று பாரக் ஒபாமா இரண்டா வது முறையாக வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக போட்டி யிடுபவர் மொத்தமுள்ள 535 வாக்குகளில் குறைந்தபட்சம் 270 வாக்குகள் பெற்றால் தான் வெற்றிபெற முடியும். இந்நிலையில், ஒபாமா 274 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மித்ரோம்னி 201 வாக்குகள் பெற்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக் குப்பதிவு இந்திய நேரப்படி நவம்பர் 6ம் தேதி இரவு நடைபெற்றது. 7ம் தேதி காலை முதலே வாக்குகள் எண்ணப் பட்டன.

இரு வேட்பாளர்களுமே சரிசமமாக வாக்குகள் பெற்றுவந்த நிலையில், புளோரிடா மற்றும் விர்ஜீனியா மாகாண வாக்குகள் எண்ணப்பட்டபோது ஒபாமா முன்னிலை பெற்றார். தொடர்ந்து அவரே முன்னிலை பெற்று வெற்றிபெற்றார்.

எனினும் கலிபோர்னியா மாகாணத் தின் ஆளுநராக மித்ரோம்னி வெற்றி பெற்றார்.

51 வயதான ஆப்பிரிக்க அமெரிக்கரான ஒபாமாவின் வெற்றியை அவரது கட்சி யினரும், அவரது ஆதரவு ஊடகங்களும் கொண்டாடி வருகின்றன. ஒபாமாவின் சொந்த நகரான சிகாகோவில் அவரது கட்சி அலுவலகம் முன்பு ஆயிரக்கணக் கான மக்கள் கூடி வாழ்த்து தெரிவித்தனர். நியூயார்க்கிலும் இதேபோன்ற கொண் டாட்டத்தில் ஒபாமா ஆதரவாளர்கள் ஈடுபட்டனர்.

ஒபாமாவின் வெற்றியையும் தனது தோல்வியையும் மித்ரோம்னி ஒப்புக் கொண்டார். அவர் ஒபாமாவைத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த சுமார் ஐந்தாண்டு காலமாக வரலாறு காணாத பொருளாதார நெருக் கடியில் சிக்கி அமெரிக்கா தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது முதல் நான்காண்டு கால ஆட்சிக் காலத்தில் இந்த நெருக்கடிக்கு ஒபாமா வால் தீர்வு காண முடியவில்லை.

இந்த ஆட்சிக்காலத்தில்தான் ஒரு சதவீத பெரும் பணக்காரர்களுக்கு மட் டுமே ஊக்க நிதியும், நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் ஏற்படுத்தித் தந்த ஒபாமாவின் நிர்வாகத்திற்கு எதிராக 99 சதவீத மக்களின் போர்க்குரலாக வால்ஸ்டிரீட் போராட்டங்கள் வெடித் துக் கிளம்பின என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிபிறக்கவில்லை. புதிய வேலைவாய்ப் புகளை உருவாக்கவும் ஒபாமா அரசால் முடியவில்லை. இந்தப்பின்னணியில் பொருளாதார நெருக்கடியின் வேகம் தீவிரமடைந்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையிலேயே மீண்டும் ஒபாமா ஜனாதிபதி ஆகிறார்
.

இவர் அதிகாரத்திற்கு வந்ததால் அவரின் பொருளாதார நடவடிக்கைகள் அதிகமாகும் .
இந்தியாவில் கணினித்துறையில் அமெரிக்க நிறுவனங்கள் பணி வழங்குவதை ஒபாமா
விரும்பவில்லை.அது அமெரிக்காவில் வேலையின்மையை அதிகரிப்பதாக அவர் எண்ணுகிறார்.
முதலில் இரண்டாம் முறை பதவி ஏ ற்ற உடனே அவுட் சோர்சிங் முறைக்கு ஆப்பு வைப்பார் .என்று அமெரிக்க அதிகாரிகள்  கூ றி வருகின்றனர் . அதுதான் நடக்கும் என்றும் தெரிகிறது.
நாம் இங்கே பெட்டிக்கடை வரை அமெரிக்கா விற்கு கதவை திறந்து வைத்து சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்.ஆனால் நமக்கு உள்ளதும் போகப்போகிறது .எல்லாம் மன்மோகன் சிங் நிபுண ருக்கே வெளிச்சம்.
____________________________________________________________________________________________-
 வரலாறு கூ றும் .நூறாண்டு சாதனைகளில் ஒன்று?

தமிழகத்தில் முன்னெப்போதும் இல் லாத வகையில் வரலாறு காணாத கடுமையான மின்வெட்டு 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம்வரை அமலில் உள்ளது. கிராமப்புறங்களில் பல இடங்களில் ஒரு நாளில் வெறும் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம்தான் மின் சப்ளை வழங்கப்படுகி றது.
இதனால் மக்கள் படும் அவதி சொல்லி மாளாது. மின் வெட்டால் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், சிறு தொழில்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது என்பது ஒருபுறமிருக்க, மக்களின் இயல்பு வாழ்க் கையே வெகுவாக பாதிக்கப்பட்டு, சொல்லொண் ணாத் துயரத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
மின் விசிறி, குளிர்சாதனப் பெட்டி, மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சிப் பெட்டி என்று பழக்கப்பட்டுவிட்ட மக்கள் இரவில் தூக்கமிழந்து அவதிப்படுகின்றனர்.
மனிதனின் அதி முக்கிய அடிப்படைத் தேவையே உணவு, உடை, இருப்பிடம், குடிநீர், சுகாதாரம் ஆகிய வைதான். இதற்கு அப்புறம்தான் ஏனைய தேவைக ளும் வசதிகளும். ஆனால் இந்த அடிப்படைத் தேவைகள் மின்சாரத்தின் மூலமே பூர்த்தியாகிறது என்கிற வாழ்க்கை முறைதான் இன்று வியாபித்திருக் கிறது.
அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படும்போது அல்லது கிடைக்காதபோது கோபம் என்பது இயல் பாக ஏற்படும். இதனால்தான் மின்சார அலுவல கங்களைக் கூட தாக்கத் தொடங்கியிருக்கின்றனர் பொது மக்கள்.
சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி என்ற ஜனநாயக வழிமுறைகளைக் கடை பிடித்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மக்கள், இன்று வன்முறையைப் பிரயோகிக்கும் நிலைக்குச் சென்றிருப்பதற்கு அர சாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஏற்கெனவே மின் சப்ளை இல்லாமல் தூக்கம் தொலைத்து மன ரீதியாக எரிச்சலும், வெறுப்பும், கோபமுமான மனநிலையில் மக்கள் இருந்து வரும் நிலையில், பல மணி நேர இருட்டை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கை வரி சையைக் காட்டும்போது அவர்கள் கொலை வெறிக்கே சென்று விடுகின்றனர். இதன் விளைவுகள்தான் மின்சார அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என்று சொன்னால் அது மிகை யில்லை.
முந்தைய ஆட்சியில் வெறும் ஆறு மணி நேரம் தான் மின் வெட்டு இருந்தது. அதற்கே திமுக அர சைக் கரித்துக் கொட்டினர் பொது மக்கள். கடந்த தேர்தலில் திமுக தோற்றதற்கான காரணங்களில் மின் வெட்டுப் பிரச்சினையும் பிரதானமானது.
திமுக ஆட்சியே பரவாயில்லை என்கிற மன நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். 16 வயதினிலே திரைப் படத்தில், “ஆத்தா ஆடு வளர்த்தா, கோழி வளர்த்தா, நாய் வளர்க்கலே” என்று கமலஹாசன் சொல்வது போன்ற ஒரு காட்சி வரும். இந்த டயலாக்கை தமிழக முதல்வரோடு ஒப்பிட்டு, “ஆத்தா மின் விசிறி கொடுத்தா, மிக்ஸி கொடுத்தா, கிரைண் டர் கொடுத்தா ஆனா கரண்டு மட்டும் கொடுக்கலை” என்று ஃபேஸ்புக் போன்ற வலைதளங்களில் கமெண்ட்டுகள் எழுதப்படுகின்றன.
இதேபோல, திமுக ஆட்சியில் மின்துறை அமைச் சராக இருந்த ஆற்காடு வீராசாமிக்கு மெúஸஜ் வைக்கும் வகையில், “நாங்கள் உங்களை மின்வெட் டுக்காக கடுமையாக திட்டியிருக்கிறோம். அது தவறு தான். மன்னித்துக் கொள்ளுங்கள்...” என்றும் வலைத ளங்களில் கமெண்ட்டுகள் களைகட்டுகின்றன.
முன்பெல்லாம் அரசின் செயல்பாடுகள் ஏடுகளில் கார்ட்டூன் படங்களாக வெளியாகி நக்கலுடன் விமர் சிக்கப்படும். இன்று வலைதளங்களும் இந்த விமர்ச னங்களை முன் வைக்கின்றன. இந்த கமெண்ட்டுக ளெல்லாம் வெறுமனே சிரித்து வைக்கும் வகைப்பட் டதல்ல... சிந்திக்க வைக்கிறது. மக்களின் மன ஓட் டத்தையும், வேதனைûயையும் இவை பிரதிபலிக் கின்றன என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வ தாகத் தெரியவில்லை.
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நாள் ஒன் றுக்கு 1 மணி நேரம் என்று இருந்த மின்வெட்டு, 2 மணி நேரமாக பரிணாமம் அடைந்திருக்கும் அறி விப்பையும் அரசு வெளியிட்டு, சென்னை மக்க ளையும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது.
வெளிநாட்டு தொழிற்சாலைகளுக்கும், ஐ.டி. துறை போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மட்டும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப் படுகிறது. உள்நாட்டுத் தொழில் நிறுவனங்கள் கடும் மின்வெட்டைச் சந்திக்கின்றன.
அரசின் விழாக்கள், ஆடம்பர நிகழ்ச்சிகள், சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என அவசிய மற்ற வகையில் மின்சாரம் வீணாக்கப்படுகிறது. இதில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க அரசு தயாராக இல்லை. அரசு அலுவலகங்களிலும் மின் சிக்கன நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படுவதில்லை.
தாராளமயமாக்கல் கொள்கையின் மூலம் தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு பெரும் லாபத் துடன், மானியங்களும் வழங்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட பின்பும், தனியார் நிறுவனங்கள் உறு தியளித்த மெகாவாட் அளவுகளில் கால் பங்கு மின்சாரத்தைக் கூட அவை வழங்கியதில்லை.
மாறாக தமிழகத்தை விட்டு அதிக லாபம் கிடைக் கும் மாநிலங்களுக்கு பல தனியார் நிறுவனங்கள் ஓடி விட்டன.
மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்தை கேட்டுப் பெறலாம் என அறிவு ஜீவிகள் அரசுக்கு ஆலோ சனை சொன்னால், மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வர மின்தட வசதியில்லை என்கிறது அரசு. ஆனால் நெய்வேலி போன்று தமிழகத்தில் தயாராகும் மின்சாரத்தை பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல எப்படி மின்தட வசதிகள் உள்ளன என்பது விளங்க வில்லை.
நெய்வேலி முதல் அலகு மின் நிலைய விரிவாக்கத் திலிருந்தும், ஆந்திர மாநிலம் சிம்மாத்ரி அனல் மின் நிலையத்திலிருந்தும் தமிழகத்திற்கு வர வேண்டிய மின்சாரத்தை தமிழக அரசு ஏன் கேட்டுப் பெற வில்லை என்று தமிழக முதல்வரை நோக்கி கேள்வி கள் எழுப்பப்படுகின்றன.
குஜராத் மாநிலத்தில் இருப்பது போன்று சூரிய மின் உற்பத்திக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை நிறைவேற்றலாம் என்றும் தமிழக அரசுக்கு ஆலோசனைகள் வழங்கப்படு கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் மின் தடையை ஓரளவிற்கு தவிர்க்கலாமே!
ஆனால் இவற்றையெல்லாம் தமிழக அரசு கவ னத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. இந்த மின் வெட்டு என்பது அரசின் நிர்வாகச் சீர்கேட்டைத் தான் தெளிவுபடுத்துகிறது. மின் பற்றாக்குறை இயல் பாக இருந்தாலும், அக்குறையை நீக்கும் நிர்வாகத் திறமை தமிழக அரசிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நன்றி;கீற்று  [மக்கள் ரிப்போர்ட்]