புதன், 28 நவம்பர், 2012

கசப்பா? கசாப்பா?

--

-----------------------------------------------------------------------------------------------------------------------------------


கருணாநிதி மறைத்து வைத்திருந்த பூனை இப்போது வெளியே வந்து விட்டது.
சஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றும் ,அந்நிய சில்லறை வர்த்தகம் இங்குள்ள வணிகர்களுக்கு ஆப்பு வைத்து விடும் என்றும் முதலில் பேசிய தமிழக முதறின்ஞர்  வரிசையாக வந்த டெல்லி தூதுவர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் பேரம் படிந்து விட்டதால் டெல்லி சுல்தான்களிடம் பணிந்து விட்டார்.
முலாயம்,மாயாவதி ,லாலு வரிசையில் இணைந்துவிட்டார்.
இதுவரை சில்லறை வணிகத்தில் அன்னியர் புகில் என்ன நீதி என்று போர் முரசு கொட்டியவர்
கடைசியில் '2-ஜி' புல் தடுக்கி சோனியா காலில் போய் விழுந்து விட்டது மிக கேவலமான அரசியல் தந்திரம்.
இதற்கு அவர் சொல்லும் ஆட்சி மாற்றம் ,பாஜக வந்துவிடும் என்பதெல்லாம் கதைக்குதவா
காரணங்கள்.
இப்படி தேச விரோத செயல்களையும்,லட்சக் கோடிக் கணக்கில் அரசுப் பணத்தை கொள்ளை கொள்ளும் -பணமுதலை களுக்கான இந்த காங்கிரசு அரசு கவிழ்வதால் மக்களுக்கு நல்லதுதானே .இந்தியாவுக்கும் நல்லதுதானே?
இப்படி மக்கள் விரோத அரசு கவிழ்ந்தால் அடுத்து வருபவர்களும் இதை எச்சரிக்கையாகக் கொண்டு ஆட்சி நடத்துவார்கள் தானே?
சட்டமன்ற தேர்தலில் 63 இடப்பிரச்னையில் வீரமாக பேசி பின் தடால் பல்டி அடித்த கருணாநிதி இப்போதும் அப்படி கவிழ்வார் என்று எதிர்பார்த்தது அப்படியே நடந்துள்ளது.
அதற்காக அவர் கூறும் சாக்கு இதுதான்
'அரசின் முடிவினை தி.மு.கழகம் ஏற்கவில்லை, எதிர்க்கிறது என்ற நிலைப்பாட்டினை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் கூட, வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை ஏற்கப்பட்டால், அரசு கவிழ்ந்து விடக்கூடும் என்ற நிலை இருக்கிறது.அப்படி ஏதேனும் ஆபத்து ஏதும் ஏற்படுமானால், 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தை பூதாகாரமாகக் கிளப்பி, மத்திய அரசின் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுப் பழி சுமத்திய பா..ஜ.க. போன்ற மதவாதக் கட்சிகளுக்குத்தான் ஆதாயம், மத்தியில் அதே பாரதீய ஜனதாவின் ஆதிக்கம் உருவானாலோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசுட்சிப் பொறுப்புக்கு வந்தாலோ, இன்னும் எத்தனை அலைக்கற்றை ஊழல் புகார்கள் கிளப்பப்படக்கூடும், பாபர் மசூதி இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரானச் செயல்கள் போன்ற மதவாதப் பயங்கரங்களும் நிகழக்கூடும், மதவாத அரசோ ஊழல் பீதிகளைக் கிளப்பி வஞ்சக வலையில் மக்களைச் சிக்க வைக்கும் எந்தவொரு அரசோ பதவிக்கு வந்து விடுவதற்கும் இடம் தரக் கூடாது என்பதாலேயே மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் காலத்தின் கட்டாயம்'' என்கிறார் அவர். 
நாடும்,மக்களும் எப்படியும் போகட்டும் ஆட்சி கவிழக் கூ டாது என்பதுதான் இப்போ து அவரின் நோக்கம்.
இதற்கு கட்சி பொதுக்குழு தேவையா?
கருணாநிதிக்கு இப்போது தனது மத்திய அமைச்சர்கள் பதவி போய்விடக் கூ டாது .மகள் கனிமொழி மீதான சிபி ஐ  வழக்கு போகவேண்டும் .அதற்கு அணுசக்தி ஒப்பந்தமானால் என்ன?சில்லறை வணிகமானால் என்ன?
முன்னதாக சில்லறை வணிகம் பற்றி அவர் கூறியதெல்லாம் தவறா?
குலாம் நபி ஆசாத் கருனாநிதியை சந்தித்தப்பின் அந்த ஆபத்தெல்லாம் நீங்கி விட்டதா?
கனிமொழியின் ஆபத்து மட்டும்தான் இப்போதைக்கு விலகியுள்ளது.ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் காங்கிரசால் கருணாநிதியை பணியவைக்க மீண்டும் உபயோகிக்கப்படும்.
இது போன்றவர்கள் இருப்பதாலேதான் காங்கிரசு இத்தனை மோசமான மக்கள் விரோத ஆட்சியை,ஊழல் மிக்க நிர்வாகத்தை தைரியமாக செய்கிறது.
வழியில் காங்கிரசை கோபமாக விமர்சிக்கும் கருணாநிதி,முலாயம் சிங்,மாயாவதி ,லாலு பிரசாத் போன்ற மாவீரர்கள் மக்களவையில் அதே காங்கிரசுக்கு ஆதரவளிப்பதுக்கு காரணம் மக்கள் நலம் அல்ல.சி.பி.ஐ ,பயம்தான்.
ஆனால் இது போன்ற அட்டைக்கத்தி வீரர்கள் வெளியில் இனி ஆவேசமாக மக்கள் சார்பாக பேசுவதை இனி கைவிட வேண்டும் .சோனியா அம்மா ஆசியுடன் என்று [இங்கு அம்மா கட்சிக்காரர்கள் செய்வது போல் ]என்று சுவரொட்டியில் வாழ்த்துப்பா பாடி காலத்தை ஒட்டட்டும் .
நாட்டை ஒரு வழி செஞ்சாச்சு ,ஓம் சுவாகா ,
க ருணாநிதி இப்போது எடுத்த முடிவு கசப்பானது மட்டுமல்ல-மக்கள் நலனை கசாப்பு போடும் முடிவும் கூ ட ...
காங்கிரசின் கையில் அந்த சி.பி.ஐ.ஆயுதம் இருக்கும் வரை அதன் மக்கள் விரோத சீர்திருத்தங்கள் தடையின்றி நடந்து வரும்.
வாழ்க ஜனநாயகம்!,வளர்க சி.பி.ஐ.தொண்டு!!
______________________________________________________________________________________________
--suran
ஈழப் பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த சுவரொட்டிகளை கிழிப்பதுதான் இப்போது இலங்கை படையினரின் முக்கிய வேலை . 
மாவீரர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பகுதிளில்  ஒட்டப்பட்ட சுவரொட்டி .---------------------------------------------------------------------------------------------------------------------------------
suran