ஞாயிறு, 28 நவம்பர், 2021

இந்தி( மக்கள்) பரப்பு

 இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.அதனால்தான் இந்தியாவை மூன்றாம் உலக நாடு என்கிறோம். உலக மயம் அறிமுகம் ஆன 91-ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் ஒரு முக்கியத்துவமும் கவனமும் கிடைத்துள்ளது. அதற்குக் காரணம் தனியார் தாரளாமயக் கொள்கை மூலம் இந்திய வளங்களை உலக நாடுகள் பங்கீடு செய்து கொள்வதுதான்.ஆனால், இந்தியாவின் இதயமான வேளாண் தொழில் நசிந்து விலைவாசி உயர்வு, கல்வி வீழ்ச்சி. தனிநபர் வருவாய் இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, என பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்குள் பெரும்பான்மை இந்தியர்கள் சிக்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான் இந்தியாவில் ஏழ்மையான மாநிலங்கள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.வளர்ச்சிக்குறியீட்டின் அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்கள் மிக மிக பின் தங்கியிருக்கிறது.இந்தி, இந்து, இந்துத்துவம் இவைகளை போற்றுகிற மாநிலங்களாகவும் பாஜக எளிதில் வெற்றி பெறும் மாநிலங்களாகவும் இவைகள் உள்ளன.

இந்தியாவிலேயே அதிக  வறுமை உள்ள மாநிலங்களில் முதலிடம் பீகாருக்கு கிடைத்துள்ளது அங்கு 51.91 சதவிகித ஏழைகள் உள்ளார்கள். இரண்டாவது இடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு கிடைத்துள்ளது அங்கு 42.16 சதவிகிதம் ஏழைகள் உள்ளார்கள். மூன்றாவது இடம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு கிடைத்துள்ளது அங்கு 37.79 சதவிகித ஏழைகள் உள்ளார்கள். அதற்கு அடுத்த இடத்தில் மத்திய பிரதேசம், மேகாலாயா அஸ்ஸாம் என அடுத்தடுத்து பாஜக ஆளும் மாநிலங்களிலேயே வறுமையும் ஏழமையும் கல்வியறிவின்மையும் கோலோச்சுகிறது.

இந்த பட்டியலில் வறுமையை ஒழித்த மாநிலங்களில் முதலிடத்தில் இருப்பது கேரளம் இங்கு 0.71 சதவிகிதம் ஏழைகள் உள்ளார்கள். தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது இங்கு 4.89 சதவிகிதம் ஏழைகள் உள்ளார்கள்.கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், தனி நபர் வருவாய், ஊட்டச்சத்து, பிரசவ கால மரணங்கள் குறைவு என இந்தியாவின்  பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தென்னிந்தியாவின் கேரளமும் தமிழ்நாடும் முதல் இரு இடங்களில் உள்ளன.

இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழி என பாஜகவினர் கூறி வரும் நிலையில் இந்தி பேசும் மாநிலங்கள் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளன. 

ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் லட்சக்கணக்கானோர் தென் இந்தியா நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள்.

 தமிழ்நாடு, கேரளம் என இரு மாநிலங்களிலும் கடற் தொழில் முதல் கட்டுமான தொழில் வரை இவர்கள் எங்கும் பரவி வருகிறார்கள். 

இது என்ன விதமான பின் விளைவுகளை உருவாக்கும் என்பது தெரியவில்லை.

பா.ஜ.க வின் திட்டம் போல் தென் மாநிலங்களையும் இந்தி மாநிலங்களாக மாற்றம் அபாயம் உண்டாகுகிறது.

ஒரே நாடு ,ஒரே குடும்ப அட்டையை செயல்படுத்தவும் உதவும்..

சனி, 27 நவம்பர், 2021

உதய நாள்.

 பராசக்தியில் வசனம் எழுதி  தன் பேனா முனயில் திரை உலகத்தை புரட்டி போட்ட கருணாநிதியின் பேரன் என்ற அடை மொழியோடு திரையுலகில் கால் பதித்தவர் உதயநிதி ஸ்டாலின். விஜய் நடித்த ‘ குருவி’ திரைப்படம் இவரை தயாரிப்பாளராகவும்… ‘ விண்ணை தாண்டி வருவாயா’ இவரை விநியோகஸ்தராகவும் அடையாளம் காட்டியது.

ஆர்யா.. சூர்யா என அவர்களின் திரைப்படங்களை தயாரித்த இவர் அவர்களின் வரிசையிலேயே ஒரு நடிகராகவும் அமர்ந்தார். . ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படத்தில் ஹன்சிகாவின் நாயகனாக உதயமானார் உதயநிதி.

4/ 9

ஹன்சிகா இல்லைனா நயன்தாரா என இவர் அடுத்து நயன்தாராவின் நாயகனாக ‘’இது கதிர் வேலன் காதல்’ திரைப்படத்தில். கதிர்வேலனாக காதல் படித்த உதயநிதி அது முதல் முன்னணி இளம் நாயகர்களின் வரிசையிலும் அமர்திரைப்படம்.


தொடர்ந்து உதயநிதியின் நடிப்பு பரிமாணமும் சற்று பூசி இவர் நடித்த கெத்து,  நன்பேண்டா, மனிதன் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன. குறிப்பாக மனிதனில் இயல்பான இளைஞராக…. வாதாடும் வழக்கறிஞராக வலம் வந்து நடிப்பிலும் ஒரு சன்(Sun)னாக ஜொலித்தார் உதயநிதி

6/ 9

இயக்குனர் எழில் இயக்கிய, சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் காதல் நகைச்சுவை என ’எம்புட்டு இருக்கு ஆசை என பாடி…. அடுத்து ’பொதுவாக என் மனசு தங்கம்’ என தமிழ் சினிமாவிற்கு சொன்ன உதயநிதியின் வெற்றிப்படமாக அமைந்தது ‘நிமிர்’ திரைப்படம்

அமைதியான தந்தைக்கு மகனாக, காதலியைக் கண்டு உருகும் எளிய காதலனாக, காதலியைத் தொலைத்து நிற்கும் ஏமாளியாக என ஒரு எதார்த்த நடிப்பை கொடுத்த உதயநிதியை பாராட்டியது கோலிவுட் வட்டரம். அதுவரை ஒரு கமர்சியல் நாயகனாக திரையில் தோன்றி வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த நிமிர் ஒரு நிமிர்வை தந்தது என்றே சொல்லலாம்.

8/ 9

நிமிர் படத்தில் உதயநிதியின் எதார்த்த நடிப்பில் தன் அடுத்த படத்தின் நாயகனை அடையாளம் கண்டார் மிஸ்கின். ஆம்..மிஸ்கினின் ‘சைக்கோ; திரைப்படத்தில் ஹீரோ உதயநிதி என்றதும் அச்சரியப்பட்டு போனது கோடம்பாக்கம். அந்த ஆச்சரியம், ஏமாற்றம் அளிக்காமல் மிஸ்கினின் கதாநாயகனாக மிஸ்கின் நாயகர்களின் உடல் மொழியில் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து மெழுகாய் உருகவைத்தார் உதயநிதி.

9/ 9

மிஸ்கினின் சைக்கோவில் ஒரு சிறந்த நடிகரை அடையாளம் கண்டு கொண்டபின் தமிழ் சினிமா உதயநிதி ஸ்டாலினின் கால்சீட்டை ஹவுஸ் புல் ஆக்கியது. வாரிசாகவும்.. அரசியல் பின்புலத்தாலும் திரையில் அறிமுகமானாலும் நடிப்பின் நேசிப்பே நாயகனாய் முன்னிறுத்தும். அதற்கு உதரணம் உதயநிதியே.

- அருண்

இன்று "உநயநிதிஸ்டாலின்" பிறந்தநாள்.

வியாழன், 25 நவம்பர், 2021

ஏசு கதை?

 ஏசு கிறிஸ்து ஒரு கற்பனை! அப்படி ஒருவர் இல்லை! இல்லவே இல்லை!

-ஜோசப் இடமருகு


நான் ஜோசப் இடமருகு பேசுகிறேன். இந்திய பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும். உலக நாத்திக சங்கத்தின் துணைத் தலைவருமான ஜோசப் இடமருகுதான் பேசுகிறேன்.1934 செப்டம்பர் 7ஆம் தேதி கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பிறந்தேன்.


இளமைக்காலத்தில் கிறித்துவைத் தெய்வமாக நம்பி. அம்மத நூல்கள் அனைத்தையும் தீவிரமாகப் படித்தேன். வயது வளர்ந்தது, எனது பகுத்தறிவு வலிமை பெற்றது. விமர்சன கண்ணோட்டத்தோடு மூடநம்பிக்கையை ஓரம்கட்டி வைத்துவிட்டு, பைபிளைப் படிக்கத் தொடங்கிய பிறகுதான் அதில் உள்ள குறைபாடுகள் தெரியவந்தன.


19ஆவது வயதில் எனது ஆராய்ச்சிப்படி கிறித்து ஒரு மனிதனாக வேண்டுமானால் இருக்கலாம் நிச்சயம் கடவுளாக  இருக்க வாய்ப்பில்லை என்று எழுதினேன்.இது கிறித்துவர்கள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியது.நான் அஞ்சவில்லை. என்னைக் கிறித்துவ மதத்திலிருந்து நீக்கினர். நான் மகிழ்ச்சியடைந்தேன்.


அதன்பிறகுதான் எனது ஆராய்ச்சி தீவிரமானது. ஏசுவினுடைய வாழ்க்கையில் நேரடித் தொடர்புடைய இடங்களை     நேரில் சென்று காணவேண்டும் என்ற ஆசை பிறந்தது.


பாலஸ்தீனத்திற்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகள் கிறித்துவம் என்பது ஒரு ஏமாற்று வேலை என்பதை  எனக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியது. உதாரணமாக ஏசு சுமந்த சிலுவையின் துண்டுகள் என்று மரத்துண்டுகளை        விற்றுக் கொண்டிருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒரே ஒரு சிலுவையின் துண்டுகளை  விற்றுக் கொண்டிருக்கிறீர்களே, அது இன்னும் விற்றுத் தீரவில்லையா? அது முழுமையாக விற்றுத் தீருவதற்கு இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும்? என்று வினவினேன்.


“தங்கள் பிழைப்பில் மண்ணைப்போட இந்தியாவில் இருந்து ஒருவன் வந்துவிட்டான்” எனக்கருதி என்னைச் சூழ்ந்து கொண்டு கிறித்துவர்கள் தாக்க முற்பட்டனர்.வந்த இடத்தில் அறிவு பூர்வமாகப் பேசி வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமோ? என்று ஒரு கனம் சிந்தித்து அமைதியானேன்.


நூறுடாலரும் இருநூறு டாலரும் கொடுத்து அதனைச் சிலர் வாங்கிக்கொண்டு போன போதுதான் எனக்குத் தெரிந்து, கிறித்துவம் முட்டாள்களையும் மூடநம்பிக்கையாளர்களையும் நம்பித்தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறதென்று! கேரளத்தில் தாமஸின் மண்டை ஓடு இதுதான் என்று ஆறு ஏழு இடங்களில் வைத்து வணங்குவதைப் பார்த்துள்ளேன். கிறித்துவ மூடத்தனம் உலகம் முழுவதும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.


ஏசுவைச் சிலுவையில் அறைந்த கல்வாரி மலை கல்லும், முள்ளும், பாறைகளும் நிறைந்த மாபெரும் மலை என்று கிறித்துவ பாதிரிமார்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்த எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. சுமார் 15அடி உயரத்திற்குமேல் இல்லாத ஒரு மேடை. அதுவும் ஒரு ஜெப ஆலயத்திற்கு உள்ளேயே இருக்கிறது. இதனைத்தான் அவர்கள் மாபெரும் கல்வாரி மலை என்று கதையளந்து கொண்டிருந்தனர்.


எவ்வளவு தூரம் நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் பாதிரிகள் என்று எண்ணிப் பார்த்தேன். எனக்கு கோபம் கோபமாக வந்தது. ஏசுவின் வாழ்க்கையில் நடந்ததாகப் பாதிரியார்கள் கூறும் சமபவங்கள், நடந்த இடங்கள் எவை எவை என்று தேடித்தேடிச் சென்று விசாரித்தேன். அவர்கள் காட்டிய இடங்களும் சொன்ன கதைகளும் கொஞ்சம் கூட அறிவிக்குப் பொறுந்துவதாக இல்லை.


எதையாவது சொல்லி பணத்தைப் பிடுங்குவதிலேயே குறியாக இருந்த அங்குள்ள பாதிரியார்களின் பணத்தாசை       என்னை மிகவும் ஆச்சிரியப்பட வைத்தது.


கிறித்துவப் பாதிரியார்களை விட்டுவிட்டுச் சாதாரண மனிதர்களிடம் சென்று பேசினேன். அவர்களில் பலர் பாதிரியார்களின் ஒழுக்கக்குறைவுகளைப் பற்றி கதைகதையாகக் கூறினர். உள்ளூர் மக்களுக்குக் கிறித்துவத்தின் மீது நம்பிக்கையோ ஈடுபாடோ அவ்வளவாக இல்லை என்பதை உணர்ந்தேன். அவர்களில் பலர் ஏசுவின் கதையை உண்மை என்று ஏற்க        மறுக்கின்றனர்.


உள்ளூரில் சலித்துப் போன சரக்கைப் “புதியது” எனக் கூறி மற்ற நாடுகளில் விற்பனைச் செய்ய கிறித்துவம் முயலுவதை அறிந்தேன். உள்ளூர் மக்களே ஒப்புக் கொள்ள மறுக்கும் ஒரு கதை எப்படி உண்மையாக இருக்கும் என்று என் மனம்


சந்தேகம் கொண்டது.அதன் விளைவாக விரிவான ஆராய்ச்சியில் இறங்கினேன்.கிறித்துவம் தோன்றுவதற்கு முன்பிருந்தே உலகில் நிலவிவரும் பழம்பெரும் மதங்கள் பலவற்றின் நூல்களைத் தேடிப்பிடித்துப் படித்தேன். ஒரு உண்மை விளங்கியது.


ஏசு கிறிஸ்து குறித்து கூறப்படும் செய்திகள் அனைத்தும் கற்பனையானவை. அப்படி ஒருவர் பிறக்கவே இல்லை.    உலகை மதரீதியாக ஆதிக்கம் செய்ய நினைத்த ஒரு கூட்டம் இந்துமதம் மற்றும் புத்தமதம் ஆகியவற்றிலிருந்து திருடப்பட்ட கருத்துகளைக் கொண்டு கற்பனையாய் படைத்து உலவவிட்ட ஒரு கதாபாத்திரம்தான் ஏசுகிறிஸ்து என்பது மிகத் தெளிவாக தெரிந்தது. அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றுள் சிலவற்றை இங்கே தருகிறேன்.


கிருஷ்ணனின் கதையிலிருந்துதான் கிறித்துவின் கதை தயாரிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணனிலிருந்து தோன்றிய கிறிஸ்து 


கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் ஒரு பாத்திரமாக வரக்கூடியவர். மகாபாரதம் நடந்து முடிந்து சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கிருஷ்ணர் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர்.இயேசு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர். எனவே, கிருஷ்ணனின் கதையிலிருந்து கிறித்துவின் கதை வந்தது என்பதை உறுதியாக நம்பலாம். இதோ அவற்றிற்கான ஆதாரங்கள்.


கிருஷ்ணன் யது வம்சத்தில் பிறந்தார். இதை கொஞ்சம் மாற்றி கிறிஸ்து யூத வம்சத்தில் பிறந்தார் என்றனர்.


2. கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பே அசரீரி அறிவித்தது.அதைக் கொஞ்சம் கூட மாற்றாமல் கிறிஸ்துவின் வருகையை அசரீரி அறிவித்தது என்று எழுதி வைத்தார்கள்.


கிருஷ்ணன் அரச குடும்பத்தில் பிறந்தார். அதனையே அச்சு மாறாமல் தாவீது என்னும் அரச வம்சத்தில் பிறந்ததாகக் கூறிக் கொண்டனர்.

தேவகி கணவனுடன் சேராமலேயே கர்ப்பம் தரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. மேரியும் அப்படித்தான் கர்ப்பம் தரித்தாள் என்று கதை எழுதினர்.


கிருஷ்ணன் பிறக்கும் போது நட்சத்திரம் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. ஏசு பிறந்தபோதும் நட்சத்திரம் தோன்றியதாக தங்கள் கதையைப் பலப்படுத்தினர்.


கிருஷ்ணன் பிறக்கும் போது தேவலோகம் கொண்டாடியது. ஏசு பிறந்தபோதும் அப்படித்தான் தேவலோகம் மகிழ்ச்சியுற்றது என்று எழுதிவைத்தனர்.


குழந்தையாகிய கிருஷ்ணனை மாட்டு இடையர்கள் கண்டுகளித்ததாகப் புரயணங்களில் வருகிறது. அதனைக் கொஞ்சம் மாற்றி ஏசுவை ஆட்டு இடையர்கள் தரிசித்தனர் என்று கூறிக் கொண்டனர்.


குழந்தை கிருஷ்ணனை நாரதர் உள்ளிட்ட முனிவர்கள் கண்டு வணங்கியதாகப் புராணம் கூறுகிறது. குழந்தை ஏசுவையும் கிழக்கிலிருந்து வந்த அறிஞர்கள் கண்டு வணங்கியதாகப் பைபிளில் எழுதி வைத்தனர்.


கிருஷ்ணனால் தனக்கு ஆபத்து என்று கம்சன் கருதினான், அதையே கொஞ்சம் மாற்றி கிறித்துவால் தனக்கு ஆபத்து என்று “ஏரோது” மன்னன் கருதியதாக எழுதிக் கொண்டனர்.

கிருஷ்ணனை யமுனை நதிக்கு அப்பால் கொண்டுபோய் ஆயர்பாடியில் தலைமறைவாக வளர்த்து வந்தனர். அதனைப் பின்பற்றி ஏசுவை எகிப்துக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வளர்த்து வந்ததாக கதைப்படுத்தினர்.


கிருஷ்ணனின் அவதாரத்தை அறிந்து இரண்டு வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொல்வதற்குக் கம்சன் உத்தரவிட்டான் இதே போன்றதொரு உத்தரவை ஏசுவைத் தேடிய ஏரோது மன்னனும் இட்டதாகச் சொல்லி வைத்தனர்.

கிருஷ்ணனுடைய தலமாகப் போற்றப்படுவது மதுரா. ஏசு வளர்க்கப்பட்டதாகக் கிறித்துவர்கள் கூறிக்கொள்ளும் ஊர் மதூரியா.


கிருஷ்ணனுடைய தாயார் தேவகிக்கு மாயாதேவி என்ற ஒரு பெயரும் உண்டு. ஏசுவினுடைய தாயார் மேரி என்றனர். மாயா-மேரி பெயர் ஒற்றுமை காண்க.


கிருஷ்ணனுடைய தாயாருக்கு நந்தரின் மனைவி தோழி. மேரிக்கும் ஒரு தோழியைத் தயார் செய்தனர் கிறித்துவர்கள்.


கிருஷ்ணனுக்குப் பலராமன் அண்ணனாக இருந்ததைப் பார்த்து ஏசுவுக்கு அண்ணனாக யோவானைப் படைத்துக் கொண்டனர்.

கிருஷ்ணன் வாதத்தில் அறிஞர்களை வென்றதை அறிந்து ஏசுவும் மதகுருமார்களை வென்றதாக எழுதிவைத்தனர்.


கிருஷ்ணன் காட்டிற்குச் சென்று தவம் இருந்ததைப் படித்துவிட்டு ஏசு பாலைவனத்திற்குச் சென்று தவம் இருந்ததாக எழுதினர்.


இந்து மதத்தில் காணப்படும் மும்மூர்த்திகளில் இரண்டாவது மூர்த்தி விஷ்ணு. அதனை அப்படியே பின்பற்றி கிறித்துவத்தின் மும்மூர்த்தி  தத்துவத்தில் கிறித்துவை இரண்டாவதாக வைத்தனர்.

தர்மத்தை நிலைநாட்டி நல்லோர்களைப் பாதுகாக்க ஏற்பட்டது கிருஷ்ணாவதாரம். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் அதற்காகத்தான் தோன்றினார் என்று எழுதிவைக்கப் பட்டுள்ளது.

கிருஷ்ணன் காளிங்கனான நாகத்தை அழித்ததாக வரலாறு. ஏசுவும் ஒரு நாகத்தை அழித்ததாகப் பைபிளில்   எழுதிவைத்தனர்.


கிருஷ்ணனை “பரமாத்மா” என்கிறது இந்துமதம். அதனை அப்படியே ஏற்று கிறிஸ்துவை பாவமற்றவர் என்கிறது கிறித்துவம்.

கிருஷ்ணன் நிறைவான மனிதனாகவும் தெய்வமாகவும் திகழழ்ந்தான் என்கிறது புராணம். ஏசுவும் அப்படித்தான் இருந்தார் என்று எழுதி வைக்கப்பட்டது.


கிருஷ்ணன் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார் என்பதைப் படித்துவிட்டு ஏசுவும் அவற்றைச் செய்ததாக எழுதி வைத்தனர்.

கிருஷ்ணன் முதன்முதலில் குஷ்டரோகியைக் குணப்படுத்தினார் என்கிறது இந்துமதம். ஏசுவும் அப்படித்தான் என்று எழுதிக் கொண்டது கிறித்துவ மதம்.


25.கிருஷ்ணன் இறந்தவர்களை உயிர் பெறச் செய்தார் என்று  இந்துமதம் கூறுகிறது.ஏசுவும் அவ்வாறே செய்ததாக கிறித்துவர்கள் எழுதிவைத்தனர்.


மரத்தின் மேல் படுத்திருந்த கிருஷ்ணனை வேடன் அம்பு எய்து கொன்றான் என்பது வரலாறு. இதனைப் பார்த்து மரச்சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த கிறித்துவை ஒரு வீரன் ஈட்டியால் குத்தினான் என்கிறது கிறித்துவம்.


கிருஷ்ணன் முக்தி பெற்றபோது துர்நிமித்தங்கள் உண்டாயின. சந்திரனில் கரியவட்டம் காணப்பட்டது. சூரியன் இருண்டு போனது. வானிலிருந்து நெருப்பும் சாம்பலும் மழைபோல் பொழிந்தது என்கிறது இந்துமதம்.


இதனை பின்பற்றி ஏசு இறந்த போதும் நாடு இருளில் மூழ்கியது. தேவாலயத்தின் திரைச்சீலை கிழிந்து தொங்கியது என்றும் எழுதி வைத்தனர்.


28.கிருஷ்ணனுடைய மரணத்திற்குப்பின் யாதவ வம்சம் அழிவுற்றது என்கிறது 


இந்துமதம்.கிறித்துவின் காலத்திற்கு பின் யூத வம்சமும் அழிவைத் தான் சந்தித்தது என்று எழுதிவைத்தார்கள் கிறித்துவர்கள்.


கிருஷ்ணன் போர்க்களத்தில் உபதேசம் செய்தார். கொஞ்சம் மாற்றி மலைப்பிரதேசத்தில் ஏசு உபதேசம் செய்தார் என்று எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.


பதினாறு வயதான போது தனது போதனைகளை உலகெங்கும் பரப்புமாறு சீடர்களை அனுப்புகிறார் கிருஷ்ணன். இதனை அப்படியே பின்பற்றி ஏசுவும் தனது சீடர்களை அனுப்பியதாக எழுதி வைத்தனர் கிறித்துவர்கள்.


இவ்வாறு கிருஷ்ணரின்  வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை யெல்லாம் இந்தியாவிலிருந்து வாணிகத்திற்காக வந்தவர்களிடம் தெளிவாகக் கேட்டு தெரிந்து கொண்டு அதனையே கொஞ்சம் கூட்டியும் குறைத்தும் எழுதித் தொகுத்தது   தான் கிறித்துவின் கதை!


பௌத்தத்தை தழுவிய பைபிள்


சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய புத்த, சமண நூல்கள் பல உன்னதமான கொள்கைகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கின. அவற்றை அப்படியே அபகரித்துக் கொண்டுதான் கிறித்துவம் வளர்ந்துள்ளது.


ஏசு போதித்ததாகக் கிறித்துவர்கள் கூறும் பல கருத்துகளின் மூலத்தை புத்தரிடம் காணலாம். “லலிதாவிஸ்தாரா”  என்ற சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள புத்தமத நூலில் உள்ள கருத்துகளைத்தான் பைபிள் கருத்துகள் என்று காப்பியடித்து எழுதிக்கொண்டுள்ளனர் கிறித்துவர்கள்.


“என்னை நம்பி விசுவாசம் செய்வோர் ஆனந்தம் அடைவர் ” என்பது தொடங்கி “அழிவை நேக்கிச் செல்லும் ஆடுகளைத் திசைதிருப்பும் ஞபானமுள்ள மேய்ப்பன் நான்” என்பதுவரை அனைத்தும் லலிதாவிஸ்தாராவில் இருந்து திருடப்பட்டவைதான்.


புத்தர் தனது சீடர்களுக்கு அனைத்தையும் துறந்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியதைக் காப்பியடித்து ஏசு கூறியதாக எழுதிக் கொண்டனர்.


“ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழி காடட்டினால் இருவருமே குழியில் விழுவர்” என்கிற கருத்து புத்த நூலில் உள்ளது. அதனை அப்படியே கிறித்துவர்கள் களவாடிக் கொண்டு பைபிளில் எழுதிக் வைத்தனர்.


இப்படி பைபிளில் உள்ள எல்லா வசனங்களுக்கும் புத்தமத நூல்களில் இருந்து ஆதாரம் காட்ட முடியும். அதனை    விரிவாகக் கூறிப் படிப்போரைச் சலிப்படைய செய்திட நான் விரும்பவில்லை. ஆனால் வலுவான ஆதாரமாக விளங்கும் ஒரு கதையைப் பற்றி நான் சொல்லித்தான் ஆகவேண்டும்.


அந்தக்கதை இதோ:


புத்தகுரு ஒருவர் பொதுமக்களிடம் காணிக்கை கோருகிறார். பணக்காரர்கள் அள்ளிக்கொடுத்தனர். ஒருவிதவை  இரண்டு நாணயங்களை மட்டும் கொடுத்தார்.அப்போது குரு “எல்லோரும் தனக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு   மீதியைத் தானமாகக் கொடுத்தனர்.ஆனால் இந்த விதவைப் பெண்மனியோ தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாமல் தன்னிடமிருந்த இரண்டு நாணயங்களையும் கொடுத்து விட்டார். எனவே, இவர் கொடுத்தது தான் மற்றெல்லாவற்றையும் விட மேலானது.” என்று கூறி பாராட்டினார்.


இந்தக் கதையை அப்படியே திருடி பைபிளில் சேர்த்துவிட்டனர். “புத்தகுரு” என்பதற்குப் பதிலாக “ஏசு” என்று மாற்றி போட்டு எழுதிவைத்துக் கொண்டனர். புத்த நூலில் இந்தக் கதையை படித்துவிட்டு இதே கதையை அச்சுமாறாமல் பைபிளில் படிக்க நேரும் யாவரும் கிறித்துவர்களின் கதைத் திருட்டை எளிதாக அறியலாம்.


இதையெல்லாம் யார் ஆராய்ச்சி  செய்து  கண்டுபிடிக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தில் வார்த்தைகளைக்கூட மாற்றாமல் அப்படியே எடுத்துப் போட்டு “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்று உளறிய முட்டாளைப் போல் கிறித்துவர்கள் மாட்டிக் கொண்டனர்.


டிசம்பர் 25 பிறத்தல், 3ஆம் நாள் உயிர்த்தெழுதல், 12 சீடர்கள்


டிசம்பர் 25ல் பிறந்தது, 3ஆம் நாள் உயிர்த்தெழுந்தது, 12 சீடர்கள், ஆகிய அனைத்தும் ஏற்கனவே பலநாட்டுக் கதைகளில் உள்ள கற்பனைச் செய்திகள் தான். அதனை அப்படியே களவாடிக் கற்பனைக் கதாபாத்திரமான ஏசுவுக்குப் பொருத்திவிட்டனர்.


இதோ, கிறித்துவத்திற்கு முன்னாள் உள்ள பழைய கதைகளில் உள்ள ஆதாரங்கள்.


கிரேக்க தெய்வம் ஹர்குலிஸ் இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக ஒரு கதை உள்ளது.

எகிப்தின் ஒஸிரிஸ் தெய்வம் டிசம்பர் 25ல் பிறந்து வெள்ளிக் கிழமையில் இறந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை உண்டு.

டயோனியஸஸ் என்ற கடவுள் டிசம்பர் 25ல் பிறந்து, துன்பப்பட்டு இறந்து பிறகு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் அவருக்கு 12 சீடர்கள் இருந்ததாகவும் ஒரு கதை காணப்படுகிறது.


ரோமாபுரியில் மித்ரா என்னும் தெய்வம் ஒரு கன்னியின் வயிற்றில் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்ததாகவும் அப்போதுஇடையர்கள் சூழ்ந்து இருந்ததாகவும்,அத்தெய்வத்திற்கு 12 சீடர்கள் இருந்ததாகவும்,அத்தெய்வம் சீடர்களிடம் தன்னுடைய மரணத்திற்குப்பிறகுத் தனது உடலைத் தின்று இரத்தத்தைக் குடிக்கும் படியாகக் கூறியதாகவும், கல்லறையிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததாகவும் ஒரு கதை கூறப்படுகிறது. சதையைத் தின்று ரத்தத்தைக் குடிக்கும் தத்துவத்தை இங்கிருந்து தான் கிறித்துவர்கள் களவாடினர்.


இக்கதைகள் அனைத்திலும், டிசம்பர் 25ஆம் தேதி பிறத்தல், 12 சீடர்கள், மூன்றாம் நாள் உயிர்த்தெழுதல் ஆகியன ஒரே மாதிரியாக இருக்கக் காணலாம்.


கிறித்துவ மதம் தோன்றுவதற்கு முன்பே வழங்கி வந்த தொன்மையான கதைகளைத் திருடி அதை ஏசுவின் சரித்திரம் என போலியாக ஒரு கதையைத் தயாரித்தனர்.


இப்போது கூட்டிப் பாருங்கள் கணக்கு சரியாக வரும்,


கிரேக்க,எகிப்து நாடோடி கதைகள்+கிருஷ்ண வரலாறு+பௌத்த தத்துவங்கள்  = கிறித்துவும், கிறித்துவ மதமும் 


   கிறித்துவும், கிறித்துவ மதமும் கற்பனையாகக் கட்டியமைக்கப் பட்டவை என்பதை ஆய்வு செய்து நீரூபித்தற்காக என்னைக் கிறித்துவ மதத்தை விட்டு வெளியேற்றி விட்டார்கள். அதன் பிறகு தான் பகுத்தறிவு மிக்க மனிதனானேன். என்னை மூடநம்பிக்கையிலிருந்து வெளியேற்றிய கிறித்துவர்களுக்கு நன்றி!


 இப்படிக்கு,

ஜோசப்_இடமருகு

இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர்

(தற்போது) புதுதில்லி


நன்றி : Sairam Sairam

நன்றி : சகோ Kannan Venkatakrishnan

வேளான்சட்டங்கள் முடிந்த கதை.

 மோடி அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி  விவசாயிகளுக்கு எதிரான, கார்பரேட் களுக்கு ஆதரவான புதிய மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்தது. 

அதன்பிறகு அவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. 

இதற்கு நாடு முழுவதும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்தும், அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று பிரதமர் மோடி, அந்த மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

https://youtu.be/u8-M3d86V5s

 


இந்த நேரத்தில் அந்த சட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டம், அதனைத் தொடர்ந்து மோடியின் திரும்பப் பெறும் அறிவிப்பு வரை ஒரு மீள் பார்வையிடுவோம். 

 

ஜூன் 5. 2020: மத்திய அரசு மூன்று புதிய வேளாண் மசோதாக்களை அறிமுகம் 

செப்.14. 2020: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்


செப். 17. 2020: மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.


செப் 20. 2020: மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.


செப். 24. 2020: மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் மூன்று நாட்கள் ரயில் மறியலை அறிவித்தனர்.


செப். 25. 2020: அகில இந்திய கிஸான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு அழைப்பின் பெயரில் இந்தியா முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


செப். 26. 2020: பாஜக கூட்டணியில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் விலகியது.


செப் 27. 2020: மூன்று புதிய வேளாண் சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. மேலும், புதிய வேளாண் சட்டம் அமலுக்கு வந்தது என அரசிதழில் தெரிவிக்கப்பட்டது.


நவ. 25. 2020: பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் சங்கத்தினர் ‘டெல்லி சலோ’ எனும் டெல்லி நோக்கி போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால், கரோனா தொற்றின் காரணமாக டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.


நவ. 26. 2020: டெல்லியை நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயிகள் ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும், அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைக்க முயன்றனர்.


நவ. 28. 2020: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகள் டெல்லியின் எல்லைகளை விட்டு வெளியேறி, புராரியில் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்குச் சென்றவுடன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என அறிவித்தார். ஆனால், விவசாயிகள் அதனை நிராகரித்தனர்.


டிச. 3. 2020: மத்திய அரசு, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் முதல் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தியது. ஆனால், அது தோல்வியில் முடிந்தது.


டிச. 5. 2020: இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அதுவும் தோல்வியில் முடிந்தது.


டிச. 8. 2020: டெல்லியில் போராடிவந்த விவசாயிகள் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைத்தனர். இதற்கு நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாயிகள் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.


டிச. 9. 2020: புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்ததை விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நிராகரித்தனர்.


டிச. 11. 2020: பாரதிய கிஸான் சங்கம் இந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது.


டிச. 13. 2020: மத்திய அமைச்சர் ரவி சங்கர், விவசாயிகள் போராட்டத்தில் சில சமூகவிரோதிகளின் குழு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.


டிச. 30. 2020: ஆறாம் கட்ட பேச்சு வார்த்தை நடந்தது. அதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன.


ஜன. 4. 2021: ஏழாம் கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று விவசாயிகள் தீர்க்கமாக தெரிவித்தனர். ஆனால், மத்திய அரசு தரப்பில் அது முடியாது எனத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
ஜன. 7. 2021: புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் போராட்டங்களுக்கு எதிரான மனுக்களை ஜனவரி 11ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.


ஜன. 11. 2021: விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாண்ட விதத்தை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியது.


ஜன. 12. 2021: உச்ச நீதிமன்றம் புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு இடைகால தடை விதித்தது. மேலும், சட்டத்தை ஆராயவும் திருத்தங்களை மேற்கொள்ளவும் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்தது.


ஜன. 26. 2021: குடியரசுத் தினத்தன்று, விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில், விவசாயிகள் செங்ககோட்டையினுள் நுழைந்தனர். மேலும், சிலர் செங்கோட்டையின் மீது விவசாயிகள் சங்கக் கொடியையும் ஏற்றினர். இதில், விவசாயிகளுக்கும் போலீஸாருக்குமிடையே மோதல் நடந்தது. இதில், உயிரிழப்புகளும் ஏற்பட்டன.


ஜன. 29. 2021: புதிய வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடத்திற்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், வேளாண் சட்டம் குறித்து ஆராய்ந்து திருத்தங்களை மேற்கொள்ள குழு அமைப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், அதனை விவசாயிகள் ஏற்கொள்ளவில்லை.


பிப். 2. 2021: பாப் பாடகி ரிஹானா, காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். போராட்டம் தொடர்பான டூல் கிட் என்ற ஆவணம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.


பிப். 5. 2021: டூல் கிட் விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்க போராட்டத்தில் டெல்லி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


பிப். 6. 2021: விவசாயிகள், பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை நாடு தழுவிய மூன்று மணிநேர சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பிப். 14. 2021: டூல் கிட விவகாரத்தில் காலநிலை ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார்.


பிப். 23. 2021: திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்.


மார்ச். 6. 2021: டெல்லி எல்லையில் விவசாயிகள் தங்கள் போராட்டாத்தின் 100வது நாளை நிறைவு செய்தனர்.


மார்ச். 8. 2021: விவசாயிகள் போராட்டத்தின் சிங்கு எல்லை பகுதியில் துப்பாகி சூடு நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


ஏப்ரல். 15. 2021: விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா கடிதம் எழுதினார்.


மே. 27. 2021: போராட்டத்தின் 6 மாதங்கள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் விவசாயிகள் 'கறுப்பு தினமாக' அனுசரித்தனர்.


ஜூன். 5. 2021: புதிய வேளாண் சட்டங்களை அறிமுகம் செய்து ஒரு வருடமானதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜூன். 26. 2021: புதிய வேளாண் சட்டங்கள் எதிர்த்து போராட்டத்தின் ஏழாம் மாதம் அடைந்ததை அடுத்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி நடத்தினர்.


ஜூலை. 22. 2021: போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் இணைந்து பாராளுமன்ற கட்டடத்திற்கு அருகில் கிஸான் சன்சாத் என "மழைக்கால கூட்டத்தொடரை" தொடங்கினர்.


ஆகஸ்ட். 7. 2021: 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி டெல்லி ஜந்தர் மந்தரில் உள்ள கிசான் சன்சாத் நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தனர்.


செப். 5. 2021: உத்தரப் பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவால் விடும் வகையில், முசாபர்நகரில் விவசாயத் தலைவர்கள் பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


அக். 3. 2021: லக்கிம்பூரில் விவசாயிகள் மீது மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் மோதிய சம்பவம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நெரிசலால் எட்டு பேர் உயிரிழந்தனர்.அக். 22. 2021: விவசாயிகள் போராட்டம் சட்டத்திற்கு எதிரானது இல்லை எனத் தெரிவித்தது நீதிமன்றம். மேலும், விவசாயிகள் போராட்டம் மக்களை பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்தது.


அக். 29. 2021: விவசாயிகள் போராடி வந்த இடமான காசியாபூரில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை டெல்லி போலீஸார் அப்புறப்படுத்தினர்.


நவ. 19. 2021: பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

புதன், 24 நவம்பர், 2021

26 சட்ட வரைவுகள்

 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

இதில் ஒன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வகித்த முற்போக்குப் பாத்திரமும் பண்பாடும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் போன்ற பகுதிகளில் இந்து ஜாட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் ஒரு பிணைப்பை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் உத்தரபிரதேசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாஜக அயோத்தி ராமர்கோவில் விவகாரத்திற்கு இணையான அளவில் பேசப்படக்கூடிய ஒரு சட்டத்தை அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன். 

இந்து வாக்கு திரட்டலுக்கு கூடுதல் அம்சங்கள் இன்று தேவைப்படும் சூழலில் இந்த 26 மசோதாக்களில் பல மாநிலங்களில் உரிமைகளை பறிப்பது, சிறுபான்மையோர் வாழ்வுரிமையை பறிப்பது தொடர்பாக இருக்கலாம்.

வருகிற 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூடவிருக்கும் நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்து வருகிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டும் போதாது விளைபொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யும் விதமாக சட்ட அங்கீகாரம் வேண்டும். மின்சாரச் சட்டத்தை கைவிட வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் வைத்துள்ளார்கள்.

இவைகள் தொடர்பாகவும் பிரதமர் ஆலோசனை செய்கிறார்.

குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கான குழு ஒன்றை அமைபப்தாக அமைச்சரவை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

--------------------------------


நாட்டையே சொந்தமாக்க வேலை செய்யும்,80 லட்சத்தில் சொகுசு கார் வைத்திருப்பவருக்கு வீடில்லை என்பது வரலாற்று கொடுமையிலும்,கொடுமை.

அய்யா,புலம்பெயர் ஈழத்தமிழர்களே,

வழக்கமா கொடுப்பதை விட அதிகம் போட்டுக் கொடுங்க.அண்ணன் இந்த வரலாற்று பிழையை அழிக்கட்டும்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

"வீரசக்ரா"

 அபி நந்தனுக்கு  வீர்சக்கரா- அபி நந்தன் பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டது உண்மையா?

கடந்த 2019- நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஒரு மினி ராணுவ விமானப் போரில் இந்தியா ஈடுபட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த  நொடி இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானை இந்தியா தாக்கி விட்டதாகவும் 300 திவீரவாத முகாம்களை அழித்து விட்டதாகவும் அலறின. ஆனால், சற்று நேரம் கழித்துதான் அப்படி ஒரு தாக்குதல் முயற்சியை முறியடித்தோம் என்றும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் எங்களிடம் பிடிபட்டிருக்கிறார் என்றும் பாகிஸ்தான் சொன்னது.

60 மணி நேரம் கழித்து பாகிஸ்தானே இந்தியாவிடம் அபி நந்தனை பத்திரமாக ஒப்படைத்தது. அவருக்கு வீர தீர செயல்களுக்கான பாதுகாப்புத்துறை விருதான வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் எப்ஃ-16 ரக விமானத்தை வீழ்த்திய அபிநந்தன் தனது விமானத்தில் இருந்து பாரசூட்டில் குதித்து உயிர்தப்பினார் என்கிறது இந்திய தரப்பு. ஆனால். பாகிஸ்தான் தரப்போ இதை அடியோடு மறுக்கிறது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய விமானப்படை விமானியால் பாகிஸ்தானின் எப் -16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா கூறுவதை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. குறிப்பிட்ட அந்த தினத்தில்  எப் -16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என சர்வதேச நிபுணர்களும் அமெரிக்க அதிகாரிகளும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கின்ற்னர்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தரப்பு சொல்வது இதுதான்!

இந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைஸன் ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவுரி வான் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை அபிநந்தன் இடைமறித்தார். 

அப்போது அந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து திரும்பியபோது அந்நாட்டு விமானப்படையினர் அபிநந்தன் விமானத்தைச் சுட்டனர். இதில் அவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். ஏற்குறைய 60 மணிநேரத்துக்கும் மேலாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து அதன்பின் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.

-----------------------------------------------------------------------------------

https://youtu.be/lSVmzDoIGQIமாடுக்கு ஆம்புலன்ஸ்

மனுசனுக்கு குப்பை வண்டி......

திர்வரும் டிசம்பர் மாதம் முதல் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்கு ஏற்ப வாகனங்களை மாடுகளுக்கான ஆம்புலன்ஸ்களாக மாற்றும் பணிகளைத் துவக்கிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் !

கொரோனாவில் மொத்த மாநிலமே கதிகலங்கி நின்றது. மருத்துவமனை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, சுடுகாட்டு பற்றாக்குறை, கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்தது, கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட கொரோனா சடலங்கள் என உத்தரப் பிரதேசத்தின் மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை கொரோனா அம்பலப்படுத்தியது.

கொரோனாவால் மரணமடைந்தவர்களை எடுத்துச் செல்ல வண்டியில்லாமல் குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட நிலைமையை சீர்படுத்துவது குறித்து எதுவும் பேசாத யோகி, மாடுகளுக்கு  ஆம்புலன்ஸ் தருகிறார்.

இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள் 

அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!

----------------------------------------------------------------------------------------------சனி, 20 நவம்பர், 2021

இனிஎன்னநடக்கும்?

 மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் எனச் சொல்லியிருக்கிறார் மோடி. நவம்பர் 26ஆம் தேதி வந்தால் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. ஒரு வருடத்தில் எந்த காலக்கட்டத்திலும் வராத ஞானம் மோடிக்கு எப்படி திடீரென வந்தது?


ஜூலை 21ஆம் தேதி.

பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள விவசாயிகள் தெருக்களுக்கு வந்தனர். தங்களின் ட்ராக்டர்களுடன் சென்று சாலைகளை மறித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அரசு கொண்டு வந்திருந்த மூன்று விவசாய மசோதாக்கள் வாபஸ் வாங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை மனுக்கள் கொண்டிருந்தது.

ஒன்றும் நடக்கவில்லை.

போராட்டங்கள் தொடர்ந்தன.

அதே ஜூலை மாதம் 21ஆம் தேதி இன்னொரு சம்பவமும் நடந்தது. USIBC என்கிற அமைப்பு, India Ideas என்கிற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியது. முதலீட்டாளர்கள் மாநாடு! அதாவது இந்தியாவில் முதலீடு செய்யச்சொல்லி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் மாநாடு. அதில் இந்தியப் பிரதமர் சென்று பேசினார். பிரதமரின் பேச்சில் முக்கியக் கூறுகளாக இருந்தவை என்ன தெரியுமா?

”இந்தியாவில் முதலீடு செய்வதற்கு இந்த நேரமே மிகச் சரியான நேரம்”.

அதாவது மக்கள் கொரோனா பாதிப்பில் அல்லலுற்றுக் கொண்டிருந்த நேரம்.

“இந்தியாவின் உணவு பதப்படுத்தும் துறை கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் மதிப்பை எட்டும்” என்றார் பிரதமர்.

இந்தியப் பொருட்களை ஏன் வெளிநாட்டு நிறுவனங்கள் பதப்படுத்த வேண்டும்? பிரதமருக்கே வெளிச்சம்!

காப்பீடு, பாதுகாப்புத்துறை மட்டுமின்றி சுகாதாரம், விமானப் போக்குவரத்து என எல்லா துறைகளிலும் முதலீடுகளை ஈர்த்துக் கொண்டிருந்தார் பிரதமர். கிராமங்களில் இருக்கும் ஐம்பது கோடி பேருக்கும் மேற்பட்டோருக்கு இணைய வசதி இருப்பதாக அடித்துவிட்டார். இந்தியா வாய்ப்புகளுக்கான நிலம் என்றார். திறந்த மனங்களும் திறந்த சந்தையும் கொண்டிருக்கும் இந்தியா உலகுக்கு அளிக்க ஏராளமான விஷயங்கள் இருப்பதாகச் சொன்னார். வெளிப்படைத்தன்மையும் வாய்ப்புகளும் இந்தியாவில் இருப்பதாகக் கூறினார்.

வளைந்து நெளிந்து முதுகுத்தண்டே ஒடியுமளவுக்கு கூழைக் கும்பிடு போட்டு விளக்கி முதலாளிகளை ஈர்க்க விரும்பும் பிரதமருக்கு ஒரு வார்த்தை கூட விவசாய மசோதாக்களைப் பற்றி விவசாயப் பிரதிநிதிகளை அழைத்து விளக்க வேண்டும் எனத் தோன்றவே இல்லை.

ஜூலை 21ஆம் தேதி முதலாளிகளிடம் மோடி பேசிக் கொண்டிருந்த அக்கூட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பின் பெயர் USIBC. பெயரின் விரிவாக்கம் US INDIA BUSINESS COUNCIL. அமெரிக்க இந்தியா வர்த்தக சபை என மொழிபெயர்க்கலாம். அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் அமர்ந்து ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்தது அமெரிக்க முதலாளிகளிடம்.

இவற்றுக்குள் அமெரிக்கா எங்கு வந்தது? நம்மூர் விவசாயத்தை அழிப்பதில் அமெரிக்காவுக்கு ஏன் இத்தனை ஆர்வம்?

அமெரிக்க நாட்டை சார்ந்த உலக வர்த்தக நிறுவனம் தன்னிடம் நிதி மற்றும் வணிக உதவி பெறும் நாடுகளுடன் பலவித ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒப்பந்தம் Agreement on Agriculture. விவசாயத்தின் மீதான உடன்படிக்கை!

அடிப்படையில் உலக வர்த்தக நிறுவனத்தை புரிந்துகொண்டால் மட்டுமே அது முன்வைத்த விவசாய உடன்படிக்கை நம்மை பாதிக்கும் விதத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

உலக வங்கியிடமிருந்து ஒரு நாடு வாங்கும் பணத்தை அந்நாடு திருப்பி அடைக்க வேண்டும். திருப்பி அடைக்க முடியவில்லை எனில், வருமானம் ஈட்டுவதற்கான வழியை அந்த நாட்டுக்கு சொல்லித்தர உருவாக்கப்பட்டதே உலக வர்த்தக நிறுவனம். தனக்கான பணத்தை மீட்டெடுக்க அந்நிறுவனம் சொல்லிக் கொடுக்கும் உத்திகள் நிச்சயமாக குறிப்பிட்ட அந்த நாட்டுக்கு எந்த பலனையும் தராது எனப் புரிந்து கொள்ளலாம். சரியாகச் சொல்வதெனில், அந்த நாட்டை மொத்தமாக அமெரிக்காவுக்கு அடிமைச் சேவகம் செய்ய வைப்பதாகவே உலக வர்த்தக நிறுவனத்தின் உத்திகள் அமையும். அப்படிப்பட்ட ஒரு உத்திதான் விவசாய உடன்படிக்கை.

ஒரு நாட்டின் அரசு அதன் விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் கொடுக்கும் ஆதரவு, பாதுகாப்பு மற்றும் சலுகைகள் யாவும் உலக வர்த்தக நிறுவனம் திட்டமிடும் வணிகத்துக்கு தடையாக இருக்கின்றன. அவற்றை அரசு விலக்கினால்தான் அமெரிக்காவின் வணிகத்துக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளுக்கான சலுகைகளை ஒழிக்க வலியுறுத்துவதே Agreement on Agriculture என்றழைக்கப்படும் விவசாய உடன்படிக்கை. அந்த உடன்படிக்கைக்கு இந்தியாவும் உடன்பட்டிருக்கிறது.

அதனால்தான் கடந்த வருட செப்டம்பர் மாதத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி அவசர அவசரமாக மசோதாக்களை சட்டங்களாக்கியது மோடி தலைமையிலான அரசு. பிறகுதான் டெல்லிக்கு செல்வதென விவசாயிகள் மத்திய மாநிலங்களில் முடிவெடுத்தனர். டெல்லி எல்லையில் தடுக்கப்பட்டும் ஓயாமல் அங்கேயே அமர்ந்து போராட்டங்களை தொடர்ந்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய சங்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளடக்கிய பல சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு போராட்டங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது. காவல்துறை ஒடுக்குமுறை, ஆரோக்கிய குறைபாடு, மன உளைச்சல் முதலிய பல காரணங்களால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர். எனினும் போராட்டம் குலையவில்லை. இறுதியில் மோடியின் அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பாசாங்கான திருத்தங்களை முன்வைத்தது அரசு. விவசாயிகள் ஏற்கவில்லை. பேச்சுவார்த்தையின் எல்லாக் கட்டங்களும் தோற்றது. போராட்டம் தொடர்ந்தது.

பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நேர்வழி எப்போதுமே உடன்படாத வழி. எனவே குடியரசு தினத்தன்று போலியாக ஒரு விவசாயிகள் கூட்டத்தை திரட்டி செங்கோட்டையை ஆக்கிரமித்தது. அச்சம்பவத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என கைகளை விரித்தது போராட்டங்களை நடத்திய விவசாயக் கூட்டமைப்பு. செங்கோட்டையை ஆக்கிரமித்த விவசாயக் குழுவின் தலைவர் பா.ஜ.க தலைவர்களுடன் இருந்த புகைப்படங்கள் வெளியாகின. பா.ஜ.க அசிங்கப்பட்டது. ஆனாலும் அடங்கவில்லை.

வரும் வருடத்தில் நடக்கவிருக்கும் பஞ்சாப், உத்தர பிரதேசம் முதலிய தேர்தல்கள் பா.ஜ.கவுக்கு முக்கியம். ஏற்கனவே சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்கள் பலவற்றில் மண்ணைக் கவ்வியிருக்கிறது. விவசாயப் போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கும் சீக்கியர்களை எதிர்த்துக்கொண்டு பஞ்சாபில் எந்தக் கட்சியும் செயல்பட முடியாது. பஞ்சாபில் தனியாக நின்றும் பா.ஜ.க ஜெயிக்க முடியாது. கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம். வேளாண் சட்டங்கள் ஒரு பெரிய இடையூறு. அப்போதும் திருந்தவில்லை பா.ஜ.க.

விவசாயிகள் போராட்டங்களை நிறுத்த இன்னொரு வழியை நாடியது. விவசாயப் போராட்டக் குழுக்கள் இருந்த பல்வேறு இடங்களில் கார் நுழையும் பாணி உருவாக்கப்பட்டது. விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொல்கிற பாணி. இந்திய மக்களுக்கே உணவளிக்கும் விவசாயிகளை கொன்று அச்சுறுத்தும் வேலை. அப்போதும் விவசாயப் போராட்டங்கள் சிதறவில்லை. தொடர்ந்தது.

காவல்துறை ஒடுக்குமுறை, திருட்டுத்தனம், கடும் குளிர், மழை, உயிருக்கான அச்சுறுத்தல் என எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தன விவசாயப் போராட்டங்கள். இந்தச் சூழலில்தான் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பிரதமர்.

அப்படியெல்லாம் திருந்தக் கூடியவரா மோடி? விவசாயிகளுக்காக அமெரிக்க எஜமானனை பகைத்துக் கொள்வாரா? இல்லை, பா.ஜ.கதான் திருந்திவிடுமா? ஆர்.எஸ்.எஸ் திருந்தத்தான் விடுமா?

2017ஆம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அறுதி பெரும்பான்மையில் ஜெயித்தது. அது ஜெயித்த சீட்டுகள் 325. அந்த வெற்றியும் நேரடி வெற்றியெல்லாம் இல்லை. உத்தர பிரதேசத்தின் பிற கட்சிகள் தேர்தல் செலவுகளுக்கு பணமில்லாத நிலையை அதற்கு முந்தைய வருடத்திலேயே திட்டமிட்டு மோடி உருவாக்கினார்.
https://youtu.be/xBqj_S4H-BY
https://youtu.be/xBqj_S4H-BY
நவம்பர் 8. பணமதிப்பு நீக்கம்!

பணமதிப்பு நீக்கத்தால் அதிக பணப்புழக்கம் கிடைத்த கட்சியும் வளர்ந்த கட்சியும் ஒன்றே ஒன்றுதான். பா.ஜ.க! உத்தர பிரதேசத்தின் பிற கட்சிகள் தேர்தல் செலவுகள் செய்யக் கூட பணமின்றி முடக்கி, தான் மட்டும் பணத்தை அள்ளி இறைத்து பா.ஜ.க பெற்ற வெற்றிதான் 325 சீட்டுகள். ஆகவே அதுவும் நேர்வழியில்லை.

இப்போதும் நவம்பர் மாதம்தான். உத்தர பிரதேச தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழல்!

கடந்த வாரத்தில் வெளியான C Survey கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, வரும் உத்தர பிரதேச தேர்தலில் பாஜக வென்றாலும் கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும். கடந்த தேர்தலில் பெற்ற சீட்டுகளில் 100 சீட்டுகளை பறிகொடுக்கும் என்கிறது கருத்துக் கணிப்பு. பஞ்சாபில் சுத்தம். ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை பெறும் என்கிறது கருத்துக் கணிப்பு. பா.ஜ.கவுக்கு பூஜ்யம். அதிகபட்சம் போனால் ஒரு சீட் கிடைக்கும் என்கிறது கணிப்பு.

எனவே சொல்லுங்கள், பா.ஜ.க திருந்துமா? மோடி திருந்துவாரா? அமெரிக்காதான் விடுமா?

ஆதலால்தான் விவசாயச் சங்கங்கள் போராட்டங்கள் கைவிடப்படுமென இன்னும் அறிவிக்கவில்லை. மோடி வடிக்கும் கண்ணீருக்கு முதலையின் கண்ணீரைக் கூட நம்பிவிடலாம் என்பதே விவசாயிகளின் எண்ணம்.

இனி என்ன நடக்கலாம்?

மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப் போவதாக மோடியே அறிவித்துவிட்ட பின் ஏன் விவசாயிகள் இன்னும் போராடுகின்றனர் என குரல்கள் உருவாக்கப்படலாம். வட நாட்டு ஊடகங்கள் ஏற்கனவே இந்த அறிவிப்பை ‘விவசாயிகளுக்கு மோடி கொடுக்கும் அன்பளிப்பு’ என்றுதான் கூவிக் கொண்டிருக்கின்றன. விவசாயிகள் போராட்டத்தை கைவிட வேண்டுமென அழுத்தம் உருவாக்கப்படும். பிறகு நம்மூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல், ‘சிவப்புச் சட்டைகள் ஊடுருவிவிட்டன’ என்றோ ‘சமூக விரோதக் குழுக்களிடம் போராட்டம் இருக்கிறது’ என்றோ கருத்தை ஊடகங்கள் கொண்டு உருவாக்கி விட்டு, அரச அடக்குமுறை கட்டவிழ்க்கப்படலாம். விவசாயிகளை விரட்டியடிக்கலாம். பிறகு ஒரு நன்னாளில் நடக்கும் தேர்தலுக்காக கூட்டணிகள் உருவாகும். பா.ஜ.க வெற்றி பெறும். அதற்குப் பிறகு மீண்டும் விவசாயச் சட்டங்கள் ’கன்னத்தில் மரு வைத்துக் கொண்டு’ மாறுவேடத்தில் கொண்டு வரப் படலாம்.

ஏனெனில் சூட்சுமக் கயிறு அமெரிக்காவிலிருந்து நீளுகிறது.

ஆட்சியிலிருந்த கடந்த ஏழு வருடங்களில் பணமதிப்புநீக்க போராட்டங்களை பற்றி மோடி கவலைப்படவில்லை. காஷ்மீர் பிரிக்கப்பட்டதற்கு எதிரான போராட்டங்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களிலும் ‘ஒரு இஞ்ச் கூட பின்வாங்க மாட்டோம்’ என்கிற நிலைப்பாடுதான் அரசிடம் இருந்தது.

எந்த வகையிலும் மக்களின் நலனுக்கு இயங்காத அரசிடமிருந்து நிச்சயமாக நேர்மையான மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

தேர்தலுக்காகவே மோடி இந்த ‘பல்டி’ அடித்திருந்தாலும் மாநிலங்கள் கடந்த விவசாயிகளின் போராட்டம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

மோடியோ பா.ஜ.கவோ ஆர்.எஸ்.எஸ்ஸோ அமெரிக்காவோ மக்கள் ஒன்றுபடுகையில் ஒன்றுமே இல்லை என்பதே மீண்டும் உணர்த்தப்பட்டிருக்கிறது. விவசாயிகள் அதை உணர்த்தியிருக்கின்றனர்.

உணவுக்கு மட்டுமல்ல, பாசிச பா.ஜ.க எதிர்ப்புக்கும் உழவே தலை!
________________________________________________