26 சட்ட வரைவுகள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதில் ஒன்று வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் வகித்த முற்போக்குப் பாத்திரமும் பண்பாடும் உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் போன்ற பகுதிகளில் இந்து ஜாட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் ஒரு பிணைப்பை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
எப்படி இருந்தாலும் உத்தரபிரதேசத்தில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பாஜக அயோத்தி ராமர்கோவில் விவகாரத்திற்கு இணையான அளவில் பேசப்படக்கூடிய ஒரு சட்டத்தை அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன்.
இந்து வாக்கு திரட்டலுக்கு கூடுதல் அம்சங்கள் இன்று தேவைப்படும் சூழலில் இந்த 26 மசோதாக்களில் பல மாநிலங்களில் உரிமைகளை பறிப்பது, சிறுபான்மையோர் வாழ்வுரிமையை பறிப்பது தொடர்பாக இருக்கலாம்.
வருகிற 29-ஆம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூடவிருக்கும் நிலையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடந்து வருகிறது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டும் போதாது விளைபொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்யும் விதமாக சட்ட அங்கீகாரம் வேண்டும். மின்சாரச் சட்டத்தை கைவிட வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வேண்டும் என்ற கோரிக்கைகளை விவசாயிகள் வைத்துள்ளார்கள்.
இவைகள் தொடர்பாகவும் பிரதமர் ஆலோசனை செய்கிறார்.
குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கான குழு ஒன்றை அமைபப்தாக அமைச்சரவை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
--------------------------------
நாட்டையே சொந்தமாக்க வேலை செய்யும்,80 லட்சத்தில் சொகுசு கார் வைத்திருப்பவருக்கு வீடில்லை என்பது வரலாற்று கொடுமையிலும்,கொடுமை.
அய்யா,புலம்பெயர் ஈழத்தமிழர்களே,
வழக்கமா கொடுப்பதை விட அதிகம் போட்டுக் கொடுங்க.அண்ணன் இந்த வரலாற்று பிழையை அழிக்கட்டும்.