வியாழன், 31 டிசம்பர், 2015

2015 ஆண்டு ஒரு பின்னோக்கிய பார்வை.

காசு கேட்கும் மால்வேர் வைரஸ்

மால்வேர் புரோகிராம்கள் மூலம் கணினிகளைக் கைப்பற்றி, அவற்றை முடக்கி வைத்து, இயங்க வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு பணம் தர வேண்டும் என்ற அச்சுறுத்தல்களைப் பெறுவதில், ஆசியாவில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றுள்ளது. 
இத்தகைய மால்வேர் புரோகிராம்களை Ransomware malware programs என அழைக்கிறார்கள்.
தற்போது 'எங்கும் எதிலும் இணையம்' (Internet of Things) என்ற பழக்கம் பரவி வருவதால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் பரவுவது இன்னும் அதிகரிக்கும் என்று, வைரஸுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும், அமெரிக்காவினைச் சேர்ந்த செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது. 
வரும் 2016 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செமாண்டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற Ransomware threats இந்தியாவில் ஆண்டுக்கு 60,000/ என்ற எண்ணிக்கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது. 
அதாவது நாள் ஒன்றுக்கு, 170 மால்வேர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த Ransomware புரோகிராம்கள் பாதித்த கணினிகள், அதன் பயனாளர்களைத் தங்கள் கணினிகளை  பயன்படுத்தாதபடி முடக்கிவிடுகின்றன. 
அல்லது மிகக் குறைவான அளவில் பயன்படுத்த அனுமதிக்கின்றன. 
பயனாளர்கள், குறிப்பிட்ட தொகையினை, இணைய வங்கிக் கணக்கில் செலுத்துமாறு அச்சுறுத்தப்படுகின்றனர். 
அப்படிச் செலுத்தினால் மட்டுமே, கணினிகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும்; டேட்டாக்களைப் பெற முடியும் என்று அச்சுறுத்துகின்றன. 
அது உண்மையாகவும் உள்ளது. 
இவ்வாறு கணினி  அல்லது அவற்றின் டேட்டாக்களை முடக்கி வைக்கும் இத்தகைய ransomware புரோகிராம்களை Crypto-ransomware என அழைக்கின்றனர். 
இந்தியாவில் காணப்படும் ransomware புரோகிராம்களில் 86% இந்த வகை Crypto-ransomware ஆக உள்ளன. 
அமெரிக்க நிறுவனமான செமாண்டெக் அண்மையில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் அமைப்பான National Association of Software and Services Companies (Nasscom)த்துடன் இணைந்து, இந்தியாவில் இணையப் பாதுகாப்பிற்கான சேவைகளை வழங்கி, உலக அளவில் அதற்கான திறமைகளை இந்தியர்களிடம் வளர்க்க இயங்கி வருகிறது. 
இந்த வகையில் பயிற்சி பெற்ற இளைஞர்கள், இப்பிரிவில் நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். 
ஏனென்றால், இப்போது, இணையத்தில் நாம் சந்திக்கும் ஆபத்துக்களின் வகைகள் பலவாறாய்ப் பெருகி வருகின்றன. அவை அனைத்திற்குமான முழுமையான பாதுகாப்பு புரோகிராம்களை வடிவமைப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 
2020 ஆம் ஆண்டில், உலக அளவில் ஏற்பட இருக்கும் 30,000 கோடி டாலர் மதிப்பிலான இணைய வர்த்தகத்தில், 5 முதல் 6 சதவீத வர்த்தகத்தினை இந்தியா மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது என மின்னணுவியல் துறையும், தகவல் தொழில் நுட்பத் துறையும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளன. 
Internet and Mobile Association of India (IAMAI) அமைப்பு இது குறித்து கூறுகையில், வரும் 2016 ஆம் ஆண்டில், 40.2 கோடிக்கும் மேலான இணையப் பயனாளர்களுடன், இந்தியா அமெரிக்காவையும் மிஞ்சி விடும் என அறிவித்துள்ளது. 
அடுத்த ஜூன் மாதத்தில், இது 46.2 கோடியாக உயரும் எனவும் தெரிகிறது. 
இந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, செமாண்டெக் நிறுவனத்தின் அறிக்கை, இந்திய பயனாளர்களையும், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தயாரிப்பவர்களையும் எச்சரித்துள்ளதாகவே கருதப்படுகிறது. செமாண்டெக் நிறுவனம் ஆண்டு தோறும் தன் கணிப்புகளிலிருந்து, பல முடிவுகளை, உலகளாவிய அளவில் வெளியிட்டு வருகிறது. 
4.15 கோடி வைரஸ் பாதிப்புகளை ஆண்டு தோறும் இது கண்காணிக்கிறது. 
இந்த கண்காணிப்பு 157 நாடுகளில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, இந்தியாவிற்கு இந்நிறுவனம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையினை சரியான முறையில் எடுத்துக் கொண்டு, நம் மென்பொருள் வல்லுநர்கள் செயல்பட்டால் நம் கணினியை காப்பாற்றலாம்..
========================================================================================
தினமும் 8லிட்டர்..

தினமும் 8லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் .
என்று சிலர் கூறுகிறார்கள்.உண்மையிலேயே ஒருவர் அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா?அப்போதுதான் உடல் நலம் பாதுக்கக்கப்படுமா?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல... தண்ணீர்கூட நஞ்சுதான்’ 
தேவைக்கு அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது அது சிறுநீரகங்களுக்கு சுமையை அதிகரிக்கும் என்பதே காரணம். 
அதன் உண்மை தன்மை பற்றி பார்ப்போம்.  
ஒரு நாளைக்கு நமது உடலில் 15 லிட்டர் சிறுநீர் தயாராகிறது. 
ஆனால்,  ஒன்றரை லிட்டர்  சிறுநீர் மட்டுமே உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. 
அப்படியானால் எஞ்சியுள்ள அளவு வியர்வை, வாந்தி, உடல் உபாதைகளின் போது மட்டுமே வெளியேறும். நமது உடலின் தேவைக்கேற்ப அதன் பயன்பாடும் இருக்கும். 
ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. 

தாகம் ஏற்பட்டால்தான் குடிக்க வேண்டும் என்றில்லாமல், காலை, மதியம், இரவு என சமமாக பிரித்து தண்ணீர் அருந்தலாம். 
4 லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு சிறுநீரின் வீரியமானது குறைந்துவிடும். 
நிறைய தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகங்களில் உள்ள மெடுல்லரி கான்சன்ட்ரேஷன் கிரேடியன்ட்’ (Medullary concentration gradient) சரியாக வேலை செய்யாது. 
தேவையான நீரை எடுத்துக் கொண்டு தேவையில்லாத நீரானது சிறுநீராக வெளியேறும். 

அதுதான் இயல்பானது. நிறைய தண்ணீர் குடித்தால் உடலில் நீர்ச்சத்துகள் தங்காமல், அதுவும் சேர்ந்து சிறுநீரில் வெளியேறி விடும். 
இது உடலுக்கு நல்லதல்ல. 
சிலருக்கு மரணம் வரை கொண்டு சென்றுவிடும் அபாயமும் இதில் இருக்கிறது. 
அதனால் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதே நல்லது. 
சிலர் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ்,கோககோலா ,பெப்சி போன்ற  மென்,காற்றெற்ற  பானங்கள் என குடிப்பார்கள். 
இதனால் சுண்ணாம்புச் சத்தானது கரையாமல் சிறுநீரகத்தில் சேர்ந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கிவிடும். 
தாகம் எடுத்தால் தண்ணீர்தான் குடிக்க வேண்டுமே தவிர, பிற குளிர்பானங்களை குடிக்கக் கூடாது...’’

  
 இப்போது உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகளைப் பார்ப்போம்.

* உடலில் தண்ணீர் குறைந்த அளவில் இருந்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். தாகம் என்பது உடலில் தண்ணீர் குறைபாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான அறிகுறிகளில் ஒன்று.
* வாயானது அடிக்கடி வறட்சியடைந்தால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.
* சிறுநீரானது வெளிர் மஞ்சள் நிறத்தில் வந்தால் உடலில் சரியான அளவில் தண்ணீர் உள்ளது என்று அர்த்தம். அதுவே சிறுநீரானது நல்ல அடர் நிறத்தில் கடுமையான துர்நாற்றத்துடன் வெளிவந்தால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
* அழும் போது, கண்களில் இருந்து போதிய தண்ணீர் வராவிட்டால் உடல் தண்ணீரின்றி வறட்சியுடன் உள்ளது என்றும் அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் அர்த்தம்.
* உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும். இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதிகம் குடிக்க வேண்டும் என்று பொருள்.
* சிலருக்கு உடல் வறட்சி அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான அறிகுறி அல்ல.
மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று சொல்லும்.
* உடலின் வியர்வையானது தண்ணீரால் உருவானது. ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும்.
* உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும். எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள்.
* 70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது செய்த பின்னரோ ஏற்படும்.
* இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம் கிடைக்கும்.
* ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும்.
* மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை இறுக்கமடையச் செய்துவிடும்.
* உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில் போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம் பருகினால் சரியாகிவிடும்.
* உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர் அதிகம் பருகுங்கள்.                                                                                                                             

===========================================================================================
இன்று,
டிசம்பர்-31.
 • பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)

 • விக்டோரியாராணி, கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்(1857)
 • வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமஸ் ஆல்வா  எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
 • மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
============================================================================================
முகநூல் 


புதன், 30 டிசம்பர், 2015

எலிக் காய்ச்சலுக்கு மருந்து!


‘‘வெள்ளத்தின்போது ஏற்படும் ஆபத்துகளைவிட வெள்ளம் வடிந்தபின் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற சுகாதாரக்கேடுகளால்தான் மக்களுக்குப் பல்வேறு ஆபத்துகள் வருகின்றன’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். 
இந்த வரிசையில் ’எலிக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற  ‘லெப்டோஸ்பைரோசிஸ்’   (Leptospirosis) நோய் முக்கியமானது.

‘லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகள் நம்மைப் பாதிப்பதால் இது ஏற்படுகிறது. 
இந்தக் கிருமிகள் எலி, பெருச்சாளி, ஆடு, மாடு, பன்றி, பூனை போன்ற பல்வேறு விலங்குகளின் உடலில் வசித்து, அவற்றின் சிறுநீர் வழியாக வெளியேறும். 
மழைக்காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீட்டில் வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும். 
அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா’ கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல் வரும். பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைவதுதான் அதிகம்.

எனவே  பாதங்களில் விரிசல், பித்த வெடிப்பு, புண், சேற்றுப்புண் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருகிற அபாயம் அதிகம். காலில் செருப்பு அணியாமல் நடக்கும்போது விலங்குகளின் சிறுநீர்க்கழிவு மனிதர்களின் உடலுக்குள் நுழைந்து நோய் உண்டாக அதிக வாய்ப்புண்டு. கிராமப்புறங்களில் விலங்குகளைக் குளிப்பாட்டும் அதே குளங்களில்தான் ஊர் மக்களும் குளிப்பார்கள். 
அப்போது அவர்களின் வாய், கண், மூக்கு வழியாகவும் இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து, எலிக் காய்ச்சலை ஏற்படுத்தும்.

கடுமையான காய்ச்சல், தாங்க முடியாத தலைவலி, தசைவலி, உடல்வலி, கண்கள் சிவப்பது, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இந்த நோயின் முதல்கட்ட அறிகுறிகள். இவற்றில் ‘சிவந்த கண்கள்’, இந்த நோயை இனம் காட்டும் முக்கிய அறிகுறி. 
இந்த நேரத்தில் தகுந்த சிகிச்சை பெற்றுவிட்டால் நோய் உடனே கட்டுப்படும். தவறினால், நோய் தீவிரமாகும். குறிப்பாக, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை எனப் பல்வேறு முக்கிய உறுப்புகளை இது தாக்கும். இதன் விளைவாக நோயின் இரண்டாம் கட்ட அறிகுறிகள் தோன்றும். மஞ்சள் காமாலை, கண்களில் ரத்தக்கசிவு, சிறுநீரிலும் மலத்திலும் ரத்தம் போவது போன்றவை இந்தக் கட்டத்தின் முக்கிய அறிகுறிகள். 
இப்போதும் இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், இந்தக் கிருமிகள் இதயம் மற்றும் மூளையைப் பாதித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

எலிக் காய்ச்சலைக் குணப்படுத்தவும், வரவிடாமல் தடுக்கவும் ‘டாக்சிசைக்ளின்’ (Doxycycline) மருந்து கை கொடுக்கிறது. அலோபதி மருத்துவத்தில் ஒரு  மருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்படும்போது, ஏற்கனவே உள்ள ஒரு மருந்தின் வேதிக்கட்டமைப்பை மாற்றி அமைத்துப் புதிய மருந்துகளை உருவாக்குவது ஒரு தயாரிப்பு முறை. 
இந்தமுறை முதன் முதலில் கடைப்பிடிக்கப்பட்டது இந்த மருந்தின் கண்டுபிடிப்பில்தான். 
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பென்சிலின், ஸ்ட்ரெப்டோமைசின் என்ற இரண்டு ஆன்டி பயாடிக் மருந்துகள்தான் புழக்கத்தில் இருந்தன.

இவை இரண்டுமே ஊசி மருந்துகள். பலரும் ஊசி போட்டுக்கொள்ளத் தயங்கினர்; நோய்கள் கட்டுப்படு வதற்குத் தாமதமானது. மேலும் இவை இரண்டும் சில வகை பாக்டீரியா கிருமிகளை மட்டுமே கட்டுப்படுத்தின. 
வைரஸ், காளான் போன்ற இன்னும் பல கிருமிகளைக் கட்டுப்படுத்த இவற்றால் இயலவில்லை. எனவே, புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவத்துறை தீவிரமாக இறங்கியது. இது மாத்திரையாக இருந்தால் இன்னும் சிறந்த பலனைத் தரும் என்ற கருத்தோட்டத்தில் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தினர்.


இந்த வழியில் 1945ல் பெஞ்சமின் மின்ச் டூகார் எனும் அமெரிக்க விஞ்ஞானி, ஆக்டினோமைசீட்ஸ் எனும் பாக்டீரியாவிலிருந்து ‘குளோர் டெட்ராசைக்ளின்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்தார். இதுதான் மருத்துவத்துறையில் முதன்முதலில் ‘ஒரே சமயத்தில் பல பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுத்து நோய்களைக் குணப்படுத்தும் மருந்து’ (Broad spectrum antibiotic) என்ற புகழைப் பெற்றது. முக்கியமாக சளிக் காய்ச்சல், சரும நோய்கள், பால்வினை நோய்கள், காலரா, பிளேக் போன்றவற்றுக்கு நல்ல பலனைக் கொடுத்தது. 
மேலும், இது பலரும் எதிர்பார்த்தது போலவே மாத்திரையாகத் தயாரிக்கப்பட்டதால் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் தொடர்ந்து பல நோய்களுக்குத் தரப்பட்ட காரணத்தால் இதன் செயலாற்றல் குறைந்தது.

இதன் பின்னர்  ‘ஃபைசர்’ மருந்து நிறுவனம் இதேபோல் வேதிப்பண்புள்ள ‘ஆக்ஸி டெட்ராசைக்ளின்’ எனும் மருந்தை ஆக்டினோமைசீட்ஸ் துணை இனக் கிருமியிலிருந்து கண்டுபிடித்தது. 
ஆனால் இதைப் பாதுகாப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் நோயாளிகளுக்கு நீண்ட காலம் இதைப் பயன்படுத்த முடியவில்லை. 
எனவே, இதே நிறுவனத்தில் பணிபுரிந்த சார்லி ஸ்டீபன்ஸ் என்ற விஞ்ஞானி ஆக்டினோமைசீட்ஸ் துணை இன பாக்டீரியாக்களோடு சில செயற்கைப் பொருள்களையும் கலந்து புதிய மருந்தை 1960ல் கண்டுபிடித்தார்.

இதை நீண்ட காலம் பாதுகாக்கவும் முடியும் எனத் தெரிந்து கொண்டார். இதற்கு ‘டாக்சிசைக்ளின்’ என்று பெயரிட்டார். 1967ல் இது மனிதப் பயன்பாட்டுக்கு வந்தது. 
புண், பரு, நிமோனியா சளி, வயிற்றுக்கோளாறுகள், பால்வினை நோய்கள் என்று பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக இது பிறவியெடுத்தது. 
என்றாலும் இவை எல்லாவற்றையும்விட எலிக் காய்ச்சலைக் குணப்படுத்தும் முக்கிய மருந்தாக மருத்துவர்கள் பயன்படுத்துவது இதை மட்டுமே!

பாக்டீரியா கிருமிகள் வளர்வதற்குத் தேவையான புரதத்தை இது முற்றிலும் அழித்துவிடுவதால் அக்கிருமிகள் வளர்வது தடுக்கப்படுகிறது. 
இதனால் நோய் குணமாகிறது. 
மழைக்காலத்தில் வாரம் 2 மாத்திரைகள் வீதம் 6 வாரங்களுக்கு இதைச் சாப்பிட்டால் இந்தக் காய்ச்சல் வரவே வராது.
                                                                                                             -டாக்டர் கு.கணேசன்,
=====================================================================================
இன்று,
டிசம்பர்-30.
 • சுபாஷ் சந்திர போஸ், அந்தமான் தீவுகளின் போர்ட் பிளையர் நகரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)
 • உலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனைக்கு விடப்பட்டது(1953)
 • சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)=====================================================================================
முகநூல் 
அரசு விழாக்கள்,நிகழ்ச்சிகளில் ஜெயலலிதா படத் தை,பேனரை பிடித்துக்கொண்டு நிற்க ஆட்கள் தேவை.எங்கிருந்து பார்த்தாலும் தெரியும்படி பிடிப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டுஅந்தந்த மாவட்ட ஆட்சியர்களை உடனே அணுகவும்.                     


செவ்வாய், 29 டிசம்பர், 2015

மழைக்கால சுவாசம்

இந்த மழைக்காலத்தில் வெள்ளத்தினால் கிருமிகள் ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானது சுவாசம் ,சுவாசப்பை தொடர்பான  கோளாறுகள்  .
 தொண்டை நோய்கள்,
 சுவாச கோளாறுகள், 
இருமல், 
நெஞ்சக சளி, 
ரத்தம் கலந்து சளி வருவது போன்றவைதான் அவை.
அவைகளைப் போக்கும் மருந்துகளை பார்க்கலாம் .
இயற்கையான நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்தே நோய்களை காணாமல் போகச்செய்யலாம்.பின் விளைவுகளும் இராது. 

முள்ளங்கியை பயன்படுத்தி இருமல் மருந்து. 
முள்ளங்கியை சுத்தப்படுத்தி தோல் நீக்கிவிட்டு அறைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். 
இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும். 
வடிகட்டி எடுத்து, இருமல் இருக்கும்போது காலை, மாலை 50 மிலி எடுத்துக் கொள்ளவும். மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, தொண்டை கட்டுதல் ஆகியவை சரியாகும்.முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் வராமல் காக்கும். 
இது கந்தக சத்தை அதிகம் பெற்றுள்ளது. 
விட்டமின் சி, மினரல் இருக்கிறது. 
நோய் எதிர்ப்புசக்தி உள்ளது. 
சளியை கரைக்கும் தன்மை உடையது. 
உடலுக்கு உஷ்ணத்தை தரும்.


வெற்றிலையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து , 
2 வெற்றிலை, 2 லவங்கம், கால் ஸ்பூன் சீரகம், ஒரு ஏலக்காய், 5 மிளகு எடுத்துக்கொள்ளவும். வெற்றிலையை காம்புகள் நீக்கிவிட்டு துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும். 
அதனுடன் தட்டி வைத்துள்ள லவங்கம், ஏலக்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை சேர்க்கவும். 
இதனுடன் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்க்கவும். இதை  இருமல், மூச்சிரைப்பு இருக்கும்போது குடித்தால் இப்பிரச்னைகள் சரியாகும். 
நுரையீரல் தொற்றுக்கு மருந்தாகிறது.

அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை மழை, குளிர் அதிகமாக இருக்கும். 

இந்த காலகட்டத்தில் சளி, இருமல், நெஞ்சக கோளாறுகள், ஆஸ்துமா ஏற்படும். 
வீட்டில் பயன்படுத்தும் வெற்றிலை, லவங்கம், சீரகம் உன்னதமான மருந்தாகி ஆஸ்துமாவை சரி செய்கிறது. இருமலை இல்லாமல் செய்கிறது. 
சளியை கரைக்கிறது. 
தொண்டை கட்டை சரிசெய்கிறது.

இஞ்சியை பயன்படுத்தி இருமல், சளி, ஜீரண கோளாறுக்கான மருந்து 
ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, அரை ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும். 

சளி கரைந்து வெளியேறும். 
தொண்டை கட்டு விலகும்.
 செரிமான கோளாறுகள் சரியாகும். 
குழந்தைகளுக்கு இதில் பாதி அளவு கொடுக்கவும்.
இஞ்சி காய்ந்த நிலையில் சுக்கு என்று அழைக்கப்படும். 
இஞ்சி, சுக்குவை புறதோல் நீக்கிய பின்புதான் பயன்படுத்த வேண்டும்.  

கடுகை பயன்படுத்தி இருமல், மூச்சிரைப்புக்கான மருந்து . 
கடுகை வறுத்து பொடி பண்ணி வைத்துக்கொள்ளவும். அரை ஸ்பூன் கடுகு பொடியில், ஒரு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். 
வடிகட்டி அரை ஸ்பூன் தேன் சேர்த்து குடித்தால் இருமல் சரியாகும். 
கடுகை குறைவாகத்தான் பயன்படுத்த வேண்டும்.
கடுகு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. 
உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்க கூடியது. 
பலத்தை தருவதுடன், ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. சளியை கரைக்க கூடியது. 
இருமலை போக்கும் தன்மை கொண்டது.  
========================================================================================
இன்று,
டிசம்பர்-29.
 • தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்(1891)
 • உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது(1993)
 • மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1911)
 • ஐரிய சுதந்திர நாடு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது(1937)

=========================================================================================
இலவசபொருட்கள்   ஆந்திர மாநிலம் நெல்லூரில் மலிவு விலையில் விற்பதை வாங்க குவிந்த கூட்டம்.


திங்கள், 28 டிசம்பர், 2015

"பீப்" போய் " த்தூ" வந்த'தூ',

பெரு மழை,செம்பரம்பாக்கம் வெள்ளம் அதில் மக்கள் பட்ட அவதிகளை மறக்கடிக்க அரசுக்கும் ,அதனை அண்டி வாழும் ஊடகங்களுக்கு தொடர்ந்து பர,பர செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
முதலில் பீப் பாடல் சிம்பு.மகளிர் சங்கங்கள் எதிராக போராட கிளம்பும் போது உலகநியாயம் பேசும் சிம்பு தந்தை ராஜேந்தர் மகனை அப்பாடலுக்கு வருத்தம் தெரிவிக்க கூறி அதன்படி நடந்திருந்தால் இன்று அந்த பிரச்னை முடிந்து மக்கள் மறந்தும் போயிருப்பார்கள்.

ஆனால் என்ன காரணத்தினாலோ சிம்பும் அவரைச்சார்ந்தவர்களும் அதை ஊதி பெரிதாக்கினார்கள்.
கூவி காவல்துறையினர் தே டி வந்த போது  சிம்பு உடன் போய் ஒருசின்ன வருத்தம் கூறி வாக்குமூலம் கொடுத்திருந்தால் கூட அச்சமயம் பீப் பிரச்னை பீசாயிருக்கும்.

மாறாக சிம்பு ஒடி  ஒளிந்தார்.
தனது மகனுக்கு தெரியாமல் பாடல் வெளியாகி விட்டது என்றார் ராஜேந்தர்.

சிம்புவின் முன்னாள் காதலிகள் நயன்தாரா,ஹன்சிகா போன்றோருடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சும் படங்கள்  யாரால் எடுக்கப்பட்டது?சிம்பு அப்போதைய காதலியுடன் உறவு முறிந்ததும் உடனே வலைத்தளங்களில் யாரால் ஏற்றப்பட்டது ?
மற்றொரு வீரப்பன்,யுவராஜ் போல் தலைமறைவாகிக்கொண்டு அறிக்கைகள் விட்டு ஊடகங்களுக்கு குறையாத தீனியை போட்டார்.
அவர் அம்மா உஷா மகன் சுதந்திர போராட்டத்தில் தலைமறைவானது போல் தியாகி போல் அவர்கள் குடும்ப குறள் காணொளியில் பின்னணி இசை,எடிட்டிங் உடன் ராஜேந்தர் கதை-வசனம் இயக்கத்தில் நடித்து ஒரு காணொளியை விட்டார்.
அவருக்கு பக்க பலமாக தமிழின திடீர் போராளி,போராட நிதி வசூல் செய்து கார் பொன்ற வசதிகளுடன் தன வாழ்க்கை போராட்டத்தை களம் கண்ட வீரலட்சுமி தலைக்கு 500 என்று ஆட்களை கூட்டி வந்து பீப் பாடலை தேசவுடமையாக்க ஆர்ப்பாட்டம் செய்தார்.
ஆர்ப்பாட்டம் முடிந்த கையுடன் ராஜேந்தரை பார்த்து கூலியை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.சரத் குமார் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் நடிகர் சங்கம் என்ன செய்கிறது என்றார்?
அடுத்த நாள் அவரது சித்தி மன்னிக்கவும் மனைவி ராதிகா சிம்பு பாடல் ஆழம் மிகுந்தது.அதை பள்ளி தோறும் கலை வணக்க பாடலாக்கலாம்.நடிகர் சங்கம் என்ன செய்கிறது ?என்று கேட்டார்.
ஆக சரத்குமார் தம்பதிகள் இரு கருத்துக்களை வெளியிட்டாலும் நடிகர் சங்கம் என்ன செய்ததில் முடிப்பதில் ஒன்றுபட்டார்கள்.
அதற்கு  ரகசிய காரணம் அடுத்தநாள் "சரத்குமார் சங்க கணக்கு,வழக்குகளை இதுவரை ஒப்படிக்கவில்லை.
சங்க இடம் விற்பனை ரத்து என்று சொல்லியது பொய்."என்று நாசர் சொல்லும்போதுதான் தெரிந்தது.
இந்த பீப் பிரச்னை மட்டுமே மக்கள் வெள்ள சேதத்தில் இருந்து விடுவிக்க போதுமானதாக இருந்தாலும் அவ்வப்போது ஊடகத்தினருடன் உரசும் விஜகாந்த் செய்தியாளர்கள் மைக்கை நீட்டி ஏடா கூடமாக கேள்விகளை கேட்க ஆரம்பித்ததும் எரிச்சலாகிவிட்டார்.
வழக்கம் போல் கையை நீட்டாமல்'இது போன்ற கேள்விகளை ஜெயலலிதாவிடம் ஏன் கேட்கமாட்டீர்கள் என கேட்டார்.எ அதற்கு "அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லையே ?"என்று ஒரு நிருபர் சொல்ல.
இல்லாவிட்டாலும் நீங்கள் பத்திரிகையாளர்கள் "த்தூ'என்று காறி துப்பிவிட்டார.ஆனால் அத்ற்கு அங்கு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் காரியத்தி துடைத்து விட்டு மேலும் சில கேள்விகளை கேட்டு விட்டுதான் சென்றனர்.
ஆனால் வீட்டுக்கு போனதுதான் பத்திரிகையாளர் சங்கம்  'நீங்கள் காறித்துப்பியது தவறு.வன்மையாக்ககண்டிக்கிறோம் .என்று அறிக்கை வெளி வந்தது.
ஜெயா தொலைக்கட்சியோ பொதுமக்களும்,ஊடகத்தினரும் ,சமூக வலைத்தளங்களில் வசிப்பவர்களும் விஜய் காந்தை  கடுமையாக  விமர்சித்து காரித்துப்புவதாக செய்தியை மீண்டும்,மீண்டும் ஒளி பரப்பியது.
ஆக ஜெயா தொலைக்கா ட்சிக்கு  அரசின் பேரிடர் கையாலகத்தனத்தில் கோபத்தில் இருந் மக்களை திசை திருப்ப ஒரு பிடி கிடைத்து விட்டது.
தமிழக ஊடகங்க்களுக்கும்தான்.
ஆனால் வெளியெ மக்களுக்கு  அதிமுக அரசையும்,அதற்கு வால் பிடிக்கும் நடுநிலை என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள் மீதும் இருந்த கோபம் விஜயகாந்து காறித்துப்பியதில் ஒரு வடிகாலாக இருந்தது என்பதுதான் உண்மை.
தங்கள் சார்பாக அவர் செய்துள்ள மரியாதையாகத்தான் கருதுகிறார்கள்.
மழை சேதத்தில் ஆளும் அதிமுக கட்சியினர் நடந்து கொண்ட அத்து மீறல்கள்.தனியார்  செய்த நிவாரணப்பணிகள் உதவிகளை தடுத்து ஜெயா ஸ்டிக்கர் ஒட்டியது.
ஒரு பிஸ்கட் பாக்கெட் கொடுத்தாலும் ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பவரை விட பெரிதாக் ஜெயலலிதா படத்தை வைத்து ஆட்டுவது.
நில வேம்பு குடி நீரைக்கூட அம்மா கசாயம் என்று ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பது "எல்லாம் மக்களை கோபத்தில் தள்ளியது என்றால்.அதிமுகவை விட அதிகமாக கோட்டைக்கு வராத,சரியான நேரத்தில் ஏரியை திறந்து விட ஆணையிடாத ,சேதங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கவே வராத ஜெயலலிதாவுக்கு சிங்கியடித்து "நிவாரணப்பணிகள் துரிதமாக ஜெயலலிதா உத்திரவின்படி நடக்கிறது "என்று சொம்பு செய்திகளை போட்ட .
சொன்ன ஊடகங்கள் மீதும் கடுங்கோபம் கொள்ளவைத்துள்ளது.
அவர்களின் கோபத்தின் வடிகாலாக அந்த "த்தூ'அமைந்துள்ளது என்பதுதான் உண்மை.
அதற்காக விஜய் காந்த் மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியம் இல்லை.
ஊடகங்கள் வேண்டுமானால் இனி அவர் செய்திகளை தவிர்க்கட்டும்.
அந்த முதுகெழும்பு நம் ஊடக முதலாளிகளுக்கு கிடையாது.
பணிபுரிந்தவர் மீது உமிழப்பட்டாலும் அரசு விளம்பரத்துக்காக ஜெயலலிதாவுக்கு சிங்கியடிப்பதும்,மக்களிடம்செல்ல வேண்டியதிருப்பதாலும்,டி .ஆர்.பி.க்காகவும்  திமுக,தேமுதிக,காங்கிரசு போன்ற கட்சிகளின் தயவும் அவர்களுக்கு தேவை.
அதனால் எச்சிலை துடைத்துவிட்டு மைக்கை நீட்டி வாயைக்கிளற வேண்டியதுதான் பத்திரிகையாளன் வேலை.
வேறு வழியில்லை.
அது  "true" இல்லத்தாயி "த்தூ".

========================================================================================
இன்று'
டிசம்பர்-28.
 • இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது (1885)
 • கலிலியோ கலிலி, நெப்டியக்ஷன் கோளைக் கண்டுபிடித்தார்(1612)
 • தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன(1836)
 • லண்டனில் வெஸ்ட்மின்ஸ்ட் தேவாலயம் திறக்கப்பட்டது(1065)

டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரஸ் உருவானது.ஞாயிறு, 27 டிசம்பர், 2015

யாரோடு யார்?சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால், இப்போதே அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் வியூகங்களை  வகுத்து வருகின்றன. 
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியுள்ளனர். 
இதனால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது.. 
தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆயுட்காலம் வருகிற மே 23ம் தேதியுடன் முடிகிறது. 
எனவே, அதற்கு முன்னதாக புதிய சட்டசபைக்கான தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும். 
அதனால் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று  கூறப்படுகிறது. 

 தமிழகத்தோடு சேர்த்து கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.  தமிழகத்தில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டன. 


தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளான  திமுக, அதிமுக,  ஆகியவற்றின் முடிவுகள்தான் அரசியலை நிர்ணயிப்பவையாக  உள்ளன. 
தற்போதைய நிலையில்,  திமுக கூட்டணியில் புதிய தமிழகம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. அதோடு சேர்த்து சில அரசியல்  கட்சிகளை, கூட்டணியில் இணைக்கும் வேலையில் அதன் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். 
அதில், தேமுதிக தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று  தனது விருப்பத்தை திமுக தலைவர் கருணாநிதி கடந்த 23ம் தேதி அறிவித்தார். 
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
ஏற்கனவே அதிமுக மீது கடுமையான அதிருப்தியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது தொண்டர்கள் மத்தியில் இந்த அழைப்பு  பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தேமுதிக வைகோ வுடனான மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விடக்கூடாது.என்பதற்காக  மக்கள் நலக் கூட்டணியுடன் நெருங்கும் விஜயகாந்தை குழப்பத்தில் வைக்க கருணாநிதி வைத்த புள்ளி என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.
தேமுதிக -திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் நிச்சயம் திமுகவுக்கு இணையான தொகுதிகளை கேட்கும்.அதானால் வெற்றி பெற்றாலும் முன் போல் மைனாரிட்டி ஆட்சிதான் அமைக்க முடியும்.அதிலும் விஜயகாந்த் கட்சி திமுக  நெருங்கும் அளவுக்கு இடங்க்களைப்பெற்று விட்டால் துணை அல்லது இணை முதல்வர் பதவியை அவர் கண்டிப்பாக கேட்பார் .அதன் பின் ஆட்சி நடந்த மாதிரிதான்.அமையும்,கொக்கும் கூட்டு சேர்ந்து பறந்த கதிதான்.
அதுமட்டுமல்ல திமுகவில் பெரும்பாலான தொண்டர்களை எண்ணம் தற்போதைய  ஜெயலலிதா அதிருப்தி அலையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி வெல்லும் சக்தியும்,தகுதியும் திமுகவிற்கே உள்ளது.அதை பயன் படுத்தி தற்போதுள்ள முஸ்லிம் லீக் ,புதிய தமிழகம் கட்சிகளின் துணையுடன் தேர்தலை சந்தித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமரலாம் என்பதுதான். அதுதான் ஸ்டாலின் எண்ணம்.
அதானால்தான் திமுக தனித்து போட்டியிடும் என்று அவர் கூறியுள்ளார்.அதற்கு அவர் நமக்கு நாமே மக்கள் சந்திப்பில் கிடைத்த அனுபவம்.மக்கள் ஆதரவு ஆகியவற்றை நேரிலேயே கண்டதுதான்.ஆதன் பின்னான மழை வெள்ளம் நிவாரணப்பணி ஆட்சியாளர்களின் சொதப்பல் நடவடிக்கைகள் ஆளுங்கட்சியினர் அத்து மீறல்கள் கூடுதல் பலமாக திமுகவுக்கு அமையும்.
சென்ற முறை சென்னையின் மொத்த தொகுதிகளையும் அள்ளிய அதிமுகவுக்கு இந்த முறை பெருத்த எதிர்ப்பு அந்த சென்னையிலேயே உண்டாக்கி விட்டது செம்பரபாக்கம்.இதுவும் கூடுதல் பலம்.இதை சரியாக திட்டமிட்டு வாக்குகளாக,தொகுதிகளாக அள்ளுவதில்தான் திமுகவின் எதிர்காலம் உள்ளது.இதையும் ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார்.

 வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முதன்முறையாக சந்திக்கிறது மக்கள் நலக் கூட்டணி. முதல்முறையாக  மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய 4 கட்சிகள் இணைந்து  போட்டியிடப்போவதாக  அறிவித்துள்ளன.  பாண்டவர் அணியாக இருந்து கூட்டணியாக உருவாகும் முன்னரே மனித நேய மக்கள் கட்சி வெளியேறி விட்டது,
இக்கட்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து உள்ளன. 
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தங்களுடன் விஜயகாந்த் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நேரடியாக  அவரை சுமார் 70 நிமிடங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போதும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அந்த நீண்ட சந்திப்பில், உறுதியான,  நம்பிக்கையான வார்த்தைகள் எதையும் விஜயகாந்த் அவர்களிடம் தெரிவிக்கவில்லை.  தேமுதிக வைகோ வுடனான மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விடக்கூடாது.என்பதற்காக  மக்கள் நலக் கூட்டணியுடன் நெருங்கும் விஜயகாந்தை குழப்பத்தில் வைக்க கருணாநிதி வைத்த புள்ளிதான் திமுக கூட்டணிக்கு அழைத்தது.அதனால் திமுக எண்ணியபடி  விஜயகாந்தும் குழம்பி விட்டார்..
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் 4 பேரும் விஜயகாந்த்தை சுற்றி  அமர்ந்து கொண்டு மாறி, மாறி கேள்விகளாக கேட்டு பதில் பெற முயன்றுள்ளனர். 
ஆனால் விஜயகாந்த் தனது வழக்கமான பாணியில் அவர்களுடைய  கேள்விகளில் இருந்து பதிலுக்கு தனது வழக்கமான குழப்ப கேள்விகளாக கேட்டு அவர்களை திணறடித்து விட்டாராம். 
அவரிடம் இருந்து சாதகமான பதில் எதையும்பெற முடியாமல் அவர்கள் திரும்பி விட்டார்கள் 
கூட்டம் முடிந்து வெளியில் வந்த தலைவர்கள் 4 பேரும் ஏமாற்றத்துடன் சென்றதாக அந்தக் கட்சிகளின்  தொண்டர்கள் கூறுகின்றனர். 
அதனால் அன்று முதல் இன்றுவரை விஜயகாந்த் குறித்த எந்த தகவலையும் அவர்கள் பேசுவதையும் நிறுத்தி விட்டனர். 
  அதிமுக வருகிற 31ம் தேதி சென்னையில் செயற்குழு மற்றும் பொதுக் குழுவை  கூட்டப்போவதாக அறிவித்துள்ளது. 
வழக்கமாக தேர்தலுக்கு முன் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்த தனது நிலைப்பாடுகளை  ஜெயலலிதா அறிவிப்பார். 
கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதேபோலத்தான் அறிவித்தார். இப்போதும் கூட்டணி அமைத்து போட்டியா?  
அல்லது தனித்துப் போட்டியா? என்பதை அவர் அறிவிப்பார் என்று அதிமுக வினர்  எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதன் மீது தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும்,  தொண்டர்களை அவர்கள் அரவணைத்து செல்லாமல், பணம் பண்ணுவதிலேயே அவர்கள் குறியாக இருப்பதால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.  
இந்தநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால்  நிவாரணப் பணிகள் மந்தமாக நடைபெறுகின்றன. பல இடங்களில் நிவாரணப் பணிகளே நடைபெறவில்லை. இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை  மக்கள் மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சி மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கையில் தோல்வி கண்டதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். 
இது பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது.  
 இந்தச் சந்தர்ப்பத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டன. நமக்கு நாமே பயணத் திட்டம் மூலம் மக்களிடம் திமுகவுக்கு  நல்ல பெயர் உருவான நிலையில், மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளில் திமுகவும் அதன் தொண்டர்களும்  தீவிரமாக ஈடுபட்டனர். 
அதேபோல தேமுதிகவும் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டினர். 
அதோடு எதிர்க்கட்சிகள் அனைத்துமே தீவிரம் காட்டின. இதனால்  ஆளும் கட்சி மீது மக்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைத்த பாஜ, இந்த முறையுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றது. 
அது  முடியவில்லை.
2016 - எங்களை
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
பாஜக தலைவர் தமிழிசை

 தற்போது பழைய கூட்டணியை புதுப்பிக்க முடிவு செய்து விஜயகாந்த், அன்புமணியுடன் தமிழக பாஜ தலைவர்கள் பேசினர். ஆனால்,  அவர்கள் பிடி கொடுக்கவில்லை. 
இதனால் தனித்து விடப்பட்டுள்ள பாஜ அடுத்து என்ன செய்யலாம் என்று கணக்குப் போட்டு வருகிறது. இவ்வாறு  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த சில நாட்களாக தேர்தலுக்கான வேலைகளில் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர்.  
கூட்டணிக்கான கூட்டல், கழித்தல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக அரசியலில் சுறு சுறுப்பையும், விறு விறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  
எப்படியும் ஜனவரி மாத இறுதியில் கூட்டணி நிலைகள் இறுதியாகும் .
===============================================================================================
இன்று,
டிசம்பர்-27.
சென்னையை போன்றே இங்கிலாந்தில் வெள்ளம்.
 • வடகொரியா அரசியலமைப்பு தினம்
 • உலக வங்கி உருவாக்கப்பட்டது(1945)
 • தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது(1956)
 • பேர்சியா, ஈரான் என்ற பெயரை பெற்றது(1934)
 • ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)


==============================================================================================
முகநூல் 
கவிதா சொர்ணவல்லி
எழுதியது: செல் முருகன் : via நந்தன் ஸ்ரீதரன்
கொள்ளையடிக்க தயாராகும் 'இலவச இணையம்'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'இலவச அடிப்படை இணையம் (Free Basics)' என்ற சங்கதிக்கு ஆதரவு தருமாறு கேட்டு பேஸ்புக் பரப்புரை செய்கிறது. அதில் நம் நண்பர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருப்பதாக பரப்பப் படுகிறது.
இது உங்களின் கருத்து சுதந்திரத்தையும், இலவச தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கும் செயல் மட்டுமல்ல. உங்களிடமிருந்து பெரிய அளவில் கார்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும் திட்டமுமாகும்.
மேம்போக்காக பார்த்தால் அனைவருக்கும் இலவச இணையம் கிடைப்பது போன்ற பரப்புரையாக சமூக அக்கறை உடையதாக தெரியலாம். ஆனால் இதில் அவர்கள் சேர்த்திருக்கும் வார்த்தை மிக மிக உண்ணிப்பாக ஆராயப்பட வேண்டியது.
"Basics" அதாவது 'அடிப்படை.'
அதென்ன அடிப்படை இணையம் (Basic Internet) என்று நீங்கள் கேள்வி கேட்கும் பொழுது தான் கார்ப்பரேட்களின் சதி வெளிப்படும். அதாவது இணையத்தில் கிடைக்கும் ஒரு சில வசதிகளை மட்டுமே இலவசமாக பெறலாம் என்றும் முக்கியமான தகவல்களோ, இணைய அடிப்படையிலான தேவைகளையோ பயன்படுத்திக் கொள்ள வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அர்த்தம்.
இதனை முழுமையாக புரிந்து கொள்ள ஒரு உதாரணம் அளிக்கிறேன். நம் அனைவரின் வீட்டிலும் தொலைக்காட்சி இணைப்பு இருக்கும். இப்பொழுது எல்லோருக்கும் விருப்பமான ஒரு சேனலை நீங்கள் பெற வேண்டும் என்றால், அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கிறது அல்லவா?
அது போல (TRAI ஒப்புதல் அளித்துவிட்டால்) இணையத்தின் மிக முக்கியமான அதிகமாக உபயோகிக்கக் கூடிய சேவைகளுக்கு பிற்காலத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். தற்பொழுது உள்ள whatsapp, Calls, video calls போன்றவை மட்டுமல்லாமல், இணைய வங்கி சேவை, இணையத்தில் முக்கிமான தகவல் களஞ்சியங்களைத் தேடவும், உங்களது சிந்தனைகளைப் பதிவிடவும் கூட பிரத்தியேக கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.
wikipedia போன்று இலவசத் தகவல்கள் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோள்கள் உடைய இணைய தளமாக இருந்தாலும் அந்த இணையத்தை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒரு பக்கம் இது இணைய பயனீட்டாளர்களிடம் ஏற்படுத்தப்படும் சிக்கல் என்றால்;
மறுபக்கம் இதே wikipedia நிறுவனம் தனது குறிக்கோளில் விடாபிடியாக, இலவசமாக அளிக்க விரும்பினால், அந்த நிறுவனம் இணைய சேவையை கட்டுபடுத்துபவர்களுக்கு பெறும் தொகை அளிக்க வேண்டி இருக்கும். இது அந்நிறுவனத்தை சீர்குலைக்கச் செய்யும்.
இது மட்டுமல்லாமல் புதிதாக ஒரு இணைய தளம் தொடங்குபவர்களும், அதன் மூலம் தொழில் வாய்ப்பு பெற நினைப்பவர்களும் தங்களது சேவைகளை அனைவருக்கும் சென்று சேறுமாறு உருவாக்க முடியாத நிலை ஏற்படும். இது பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சதி செயலாகும். குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் - பேஸ்புக் போன்ற இன்னொரு நிறுவனம் உருவாவதை தடுக்கும் செயலாகும்.
சுருக்கமாக கூறுவதென்றால் - பிறரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு இலவசம் என்றும், உங்களது புகைப்படத்தை பதிவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
தயவு செய்து இதை தவிர்த்து விடுங்கள் ..

பீப் சிம்புக்கு ஆதரவாக வருபவர்கள்,பேசுபவர்கள் எல்லோரும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிரார்கள்.ராதிகா,சுகாசினி,வரிசையில் புதிய வரவு வீரலட்சுமியின் வீர வரலாறு பற்றி.

தமிழ்க்கனல்விசாரித்த உண்மை.....
தமிழர் முன்னேற்ற படை என்ற பெயரில் இயங்கும் வீரலட்சுமி என்ற பெண் சிறு சிறு தமிழர் ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதை கண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நான் வரச்சொல்லி, பழ.நெடுமாறன் ஐயாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்..
தொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டிவந்தேன்.
இப்போது பீப் பாடல் விவகாரத்தில் ,ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக , சிம்புவை ஆதரித்து எனது குழுவில் அவர் பதிவு போட்டதைக் கண்டு, அதிர்ந்து போய், அவரை திருத்த இக்குழுவினருடன் சேர்ந்து அறிவுரை கூறிப் பார்த்தும் பயனில்லை என தெரியவந்தது...
சென்ற வாரம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய எமி ஜாக்சனை எந்திரன் 2 படத்திலிருந்து நீக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து, அதற்காக இரண்டு பேருந்து வாடகைக்கு எடுக்க வேண்டும்.அதற்காக பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என என்னிடம் கேட்டு, வங்கி எண் அனுப்பினார்.
நான் யோசித்து அந்த செய்தியை பகிர்ந்தேன்.
இதற்கிடையே, அவர் இதே போல கோரிக்கை வைத்து தமிழர் நலம் பேரியக்க தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களிடம் 10,000 க்கு காசோலை பெற்று, அதை பயன்படுத்தி ஒரு பைக் வாங்கிவிட்டதாக தெரிந்துவிட்டது.
மேலும் எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தை சொல்லி பத்தாயிரம் , பத்தாயிரமாக கரந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது..
மேலும் அவர் சொன்னபடி முற்றுகையும் நடத்தவில்லை. முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார்.
இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கரப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது.
சிம்பு வீட்டாரிடம் தொகை பெற்றுக்கொண்டு பீப் பாடலை ஆதரிக்கிறாரோ என கடும் ஐயம் எழுகிறது....
இவரிடம் இனி எச்சரிக்கையாக இருங்க மக்கா.....
இப்படிக்கு
தமிழ் ராஜேந்திரன்
வழக்கறிஞர்
9789433344
==========================================================================================