மழைக்காலத்தை சமாளிக்க

 எளிய வழிகள் பத்து.
(சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து )
இநத அடைமழைக்காலத்தில் வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, ஃப்ளு சுரங்கள் மற்றும் டெங்கு வர வாய்ப்பு உண்டு. உணவிலும் வாழ்வியலிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியம்.
1. நன்கு தரதரவென காய்ச்சி அருந்திய நீரை மட்டுமே. இளவெதுவெதுப்பான சூட்டோடு மட்டுமே பருகுங்கள்
2. இளவெதுவெதுப்பான நீரை மட்டும் குளிக்க பயன்படுத்துங்கள்.
3. ஆவியில் வெந்த எளிதில் சீரணிக்க கூடிய இட்லி, இடியாப்பம், சோறு, புட்டு, பொங்கல், சாப்பிடவும். கோதுமைச் சப்பாத்தியும் கொடுக்கலாம். மிளகுதூவிய கிழங்கு மதியம் மட்டும் கொஞ்சமாக எடுக்கலாம். பிற மாவுப்பண்டங்கள் வேண்டாம். மிளகு, பூண்டு, சீரகம் போட்ட ரசம் சோறு நல்லது.
4. நோய் எதிர்ப்பாற்றலை உடலில் அதிகரிக்க காரம் தேவைப்படும் இடத்திலெல்லாம் மிளகுத் தூள் பயன்படுத்துங்கள். அன்னாசிப்பூ எனும் star anise-ஐ குருமா போன்ற உணவில் போட்டு சாப்பிடவும். தேநீரில் இலவங்கப்பப்ட்டை, துளசி இலை போட்டு தேநீர் அருந்தலாம்.
5. நிலவேம்புக் குடிநீர் வீட்டில் கண்டிப்பாக இருக்கட்டும். இந்த பொடியைப் போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60 மிலியாக்க் குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள். 6 வய்துக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30மிலி கொடுக்கலாம். 3-6 வயதில் 15-30மிலி கொடுக்கலாம். பச்சிளம் குழந்தைகளுக்கு வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் எப்போதும் கிடைக்கும்.
6. செஞ்சில் சளி கட்டி இருமலுடன் துன்பப பட்டால், துளசி (ஒருகைப்பிடி அளவு), வெற்றிலை( 2 இலை), மிளகு( 4 எண்ணிக்கை), கற்பூரவல்லி(ஒருகைப்பிடி அளவு) –இதனை போட்டு 250 மிலி நீர் விட்டு சூடாக்கி 60மிலியாக குறுக்கி கஷாயமாக்கி உணவுக்கு முன்னதாக பருகுங்கள்.
7. வெறும் தரையில் படுக்க வேண்டாம். படுக்கை தலையணை உறையை வெயில் தெரியும் போது வெயிலில் போட்டு எடுங்கள். ஈரமான நாட்களில் ஒவ்வாமைத் தும்மல் வர மிக முக்கிய காரணம் ஈரம் பாய்ந்த துவைக்காத தலையணை உறை என்பதை மறக்க்க் கூடாது
8. குழந்தைகளை காது, தலைப்பகுதியை அணைத்த (குரங்கு குல்லா மாதிரி) ஆடை அணிவியுங்கள். இருசக்கர வாகன முன் பகுதியிலோ, சாலையைப் பார்த்த படியோ குழந்தையை உட்கார வைக்காதீர்கள்.
9. வயிற்றுப் போக்கை நிறுத்த கறிவேப்பிலை, சித்த மருந்துகளான சுண்டை வற்றல் பொடி, தயிர்சுண்டிச் சூரணம் பயனளிக்கும். கூடவே உடலில் நீர்த்துவம் குறைந்திடாது இருக்க உப்பு, பனைவெல்லம் கலந்த நீர், இள நீர், நீர்த்த மோர், அருந்துங்கள்.
10. சுரம் 2 தினங்களைத் தாண்டி படிப்படியாக அதிகரித்தாலோ, தோலில் சிவந்த படைகள் இருந்தாலோ, சுரத்தில் துவளும் சூழல் வருவது போலிருந்தாலா, அருகாமையில் உள்ள குடும்ப மருத்துவரை தாமதிக்காது அணுகுங்கள். 
========================================================================================
இன்று,
டிசம்பர்-06.
  • ஸ்பெயின் அரசியலமைப்பு தினம்
  • பின்லாந்து விடுதலை தினம்(1917)
  • .அமெரிக்காவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது(1865)
  • உலகில் முதல் முறையாக லண்டனில் வாடகை வாகன சேவை துவங்கியது(1897)
  • ======================================================================================
காய்ச்சல் ஒரு நோயா?

காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காக நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி போராடுவதன் பாகம் தான் காய்ச்சல். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால், உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது.

காய்ச்சல் மூளையை பாதிக்குமா?


காய்ச்சல் காரணமாக குழந்தைகளின் மூளை பாதிப்படையும் என அனேக பெற்றோர்கள் வீண் பயம் கொள்கின்றனர். சாதாரண காய்ச்சல்களுக்கு அவ்வாறு பயப்படத் தேவையில்லை. காய்ச்சல் 107.6°F (42°C) க்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அத்தகைய நிலை ஏற்படக்கூடும்.

மருத்துவம் செய்யாவிட்டால் காய்ச்சல் அதிகரித்துக்கொண்டே போகுமா?


அப்படியில்லை. வைரஸ் தொற்றால் உண்டாகும் காய்ச்சல்கள் சாதாரணமாக 105°F க்கு மேல் அதிகமாவதில்லை. குழந்தைக்கு கனமான உடை,போர்வை போர்த்தியிருந்தாலோ, அதிக வெப்பமான சூழலில் இருந்தாலோ மட்டுமே உடல் வெப்பம் அதற்கு மேலே அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. காய்ச்சலால் குழந்தைக்கு ஜன்னி கண்டு விடும் என்று சில பெற்றோர்கள் அனாவசியமாக பயப்படுவார்கள். இது தேவையற்ற பயம். அபூர்வமாகவே அப்படி நிகழும். திடீரென்று உடல் வெப்பம் மிக அதிகமாகப் போனால் அத்தகைய நிலை உண்டாகலாம். எனவே அப்போது உடனே வெப்பத்தை குறைக்க முயல வேண்டும். காய்ச்சல் பெரும்பாலும் நோய்க்கிருமிகளால்தான் வருகிறது என்றாலும் விஷம், கேன்சர், மற்றும் சில காரணங்களாலும் வரும்.

வெப்ப அதிர்ச்சி


அதிக வெப்பத் தாக்குதல்கள் உயிருக்கு ஆபத்தாக முடியும். கத்திரி வெயில் தாகுதல்கள். நெருப்பினால் உண்டாகும் வெப்பமான சூழல்களில் மாட்டிக் கொள்ளுதல் ஆபத்தானவை. இத்தகைய நிலைகளில் உடல் தன் வெப்பத்தை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது போவதால் மரணத்தை ஏற்படுத்தி விடும். இன்னிலையில் பாதிக்கப்பட்டவரை உடனே அந்த சூழலில் இருந்து இடம் மாற்றவும். குளிர்ந்த நீரில் நனைத்த துணியை கொண்டு உடல் முழுதும் துடைத்து விடவும். ஐஸ் கட்டிகளை அக்குள் மற்றும் கழுத்து பகுதிகளில் வைத்து வெப்பத்தை உடனடியாகக் குறைக்கவும். திரவ ஆகாரங்களைக் குடிக்கக் கொடுத்து நினைவிழக்காமல் பார்த்துக் கொள்ளவும். உடனடி மருத்துவரை பார்க்கவும்.

காய்ச்சலுக்கு என்ன சிகிச்சை செய்யலாம்?


காய்ச்சல் சாதாரணமாக இருந்து வேறு ஒரு பிரச்சினையும் இல்லாதிருந்தால் எந்த வித சிகிச்சையும் தேவையில்லை. காய்ச்சலுக்கு தனியாக மருந்து எதுவும் இல்லை என்பதே உண்மை. சிகிச்சை என்பது உங்கள் உபாதையை குறைப்பது, வைரஸ்களை எதிர்த்துப் போராட உடலுக்கு துணை செய்வது மட்டும் தான். நிறைய நீராகாரமும் ஓய்வும் இருந்தாலே போதும் தானாகவே குணமாகிவிடும்.

குழந்தை மிகவும் பலவீனமாகி வாந்தி, நீரிழப்பு எற்பட்டு தூங்க முடியாமல் துன்பப்பட்டால் மட்டுமே காய்ச்சலை சிறிது குறைக்க முயற்சிக்கலாம். ஆனால் காய்ச்சலை முற்றிலும் இல்லாத அளவு குறைத்து விடக்கூடாது. 

காய்ச்சலை குறைக்க முயலும் போது


காய்ச்சலால் குளிர் ஏற்பட்டவரை கனத்த போர்வையால் மூடக்கூடாது.

வெப்பமில்லாத காற்றோட்டமான அறைகளில் கிடத்தவும். மெல்லிய ஆடைகளை அணியலாம். தேவைப்பட்டால் மெல்லிய போர்வை உபயோகிக்கலாம்.

இளஞ்சூடான நீரில் குளிக்கலாம் அல்லது நனைந்த துணியால் உடம்பைத் துடைத்து எடுக்கலாம். காய்ச்சல் தணிய மருந்து எடுத்துக் கொண்ட பிறகு தான் இதை செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இவ்வாறு குறையும் வெப்பம் பிறகு மீண்டும் கூடிவிடும்.

பச்சைத் தண்ணீரில் குளிக்கக் கூடாது.இது உடலை அதிகம் குளிர வைத்து நடுக்கத்தை ஏற்படுத்தி விடும்.இது நிலமையை மோசமாக்கி உடல் வெப்பத்தை அதிகரித்து விடும்.

முடிந்த அளவு, குளிர்ந்த திரவ ஆகாரங்கள் குடிக்க கொடுக்கவும். இது காய்ச்சலால் உண்டாகும் நீரிழப்பை ஈடு செய்யும். சளி கெட்டியாகாமல் வெளியேற உதவும்.

என்ன மருந்துகள் எடுக்கலாம்?


Acetaminophen மற்றும் ibuprofen குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் குறைய உதவுகிறது.

4 முதல் 5 மணிக்கொருமுறை acetaminophen எடுத்துகொள்ளலாம். 6 முதல் 8 மணிக்கொருமுறை ibuprofen எடுத்துகொள்ளலாம். கைக்குழந்தைகளுக்கு Ibuprofen நல்லதல்ல.

பெரியவர்களுக்கு Aspirin நல்லது. ஆனால் குழந்தைக்கு கொடுக்காதீர்கள்.

காய்ச்சல் மருந்துகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கிறது. சரியான மருந்து விவரங்களை படித்து விட்டு அதன்படி உபயோகிக்கவும்.

3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரை காண்பிக்காமல் சுய வைத்தியம் செய்யாதீர்கள்.

டாக்டரை எப்போது பார்க்க வேண்டும்?


மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால்.100.2°F (37.9°C) மேல் காய்ச்சல் அதிகரித்தால்.
3 முதல் 6 மாதக் குழந்தைக்கு காய்ச்சல் 101°F (38.3°C) அல்லது அதற்கு மேல் அதிகமானால்.
6 முதல் 12 மாதக் குழந்தைக்கு காய்ச்சல் 103°F (39.4°C)கு மேல் அதிகமானால். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்.
சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் காய்ச்சல் 48 முதல் 72 மணி நேரத்திற்கு மேல் நீடித்தால்.
ம105°F (40.5°C) க்குமேல் காய்ச்சல் இருந்து சிகிச்சை செய்தும் குறையா விட்டால். எரிச்சல். பிதற்றல், சுவாசிப்பதில் சிரமம். கழுத்து விறைத்தல் ,கை கால் செயலிழப்பு, ஜன்னி ஏற்பட்டால்.
தொண்டைகரகரப்பு,காதுவலி,இருமல் இருந்தால்.
Acetaminophen போன்ற காய்ச்சல் மாத்திரைகள் பலனளிக்காவிட்டால் உடனே டாக்டரை பார்க்க வேண்டும்.

நோய் நாடி அறிதல் 


மருத்துவர் நோயாளியை தோல், கண்கள், காது, மூக்கு, தொண்டை, கழுத்து, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளை நன்கு ஆராய்ந்து நோய் காரணத்தை அறிவார்.

எவ்வளவு நாள் காய்ச்சல் நீடிக்கிறது?


காய்ச்சல்அதிகரித்துக்கொண்டிருக்கிறதா? அதுவும் வேகமாகவா?
விட்டு விட்டு காய்ச்சலா? காய்ச்சல் வந்து போகும் கால இடைவெளி எவ்வளவு? தினமும் வந்து போகிறதா?
காய்ச்சலுக்கு காரணம் எதாவது அலர்ஜியா?
காய்ச்சல் ஏறி இறங்குகிறதா?
போன்ற கேள்விகளில் காய்ச்சலுக்கான காரணம் தெரிய வரும்.
தேவைப்படும் டெஸ்ட்டுகள்
இரத்த சோதனை
சிறு நீர் பரிசோதனை


மார்பு பகுதியில் எக்ஸ் ரே சோதனை காய்ச்சலோடு ஜலதோசம் இருந்தால் அடிக்கடி ஆவி பிடிப்பது நல்லது. நீராவியின் வெப்பம் தொண்டையும் சுவாசக்குழாயிலும் உள்ள வைரசுகளை அழிக்கிறது.

தொண்டை கரகரப்புக்கு 1 கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பது நலம் தரும். எல்லா மருந்தும் பாதுகாப்பானது அல்ல.காய்ச்சல் ஜல தோசத்திற்கு கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.“ஜலதோசம் மருந்து சாப்பிடாவிட்டால் 7 நாளில் குணமாகும். மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்" என்று கூறப்படுவது நகைச்சுவைக்காக அல்ல. இம்மாத்திரைகள் பல சமயங்களில் ஓவர் டோசாகவோ, தேவையற்றதாகவோ இருக்கிறது. நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இத்தகைய மாத்திரைகள் கொடுக்கக்கூடாது என்று FDA கூறுகிறது.

மூக்கடைப்புக்கு பயன்படும் மருந்துகளும் தற்காலிக நிவாரணம் தான் தருகிறது. தொடர்ந்து பயன் படுத்துவது கெடுதி செய்யும்.அவற்றில் அடங்கியுள்ள Pseudoephedrine இரத்த அழுத்தத்தை அதிகரித்து இதய நோயில் கொண்டு விடும்.தொடர்பாக புராஸ்டேட், தைராய்டு, நீரிழிவுக்கு இழுத்து செல்லும். மூக்கடைப்பு மருந்துகளில் காணப்படும் phenylpropanolamine (PPA) பக்க வாதத்திற்கு அடிகோலும் .எனவே இம்மருந்து உங்களிடமிருந்தால் தூக்கி எறிந்து விடவும்.

உறங்குவதிலோ , பேசுவதிலோ இடையூறு இருந்தால் ஒழிய dextromethorphan அடங்கிய இருமல் மருந்துகள் உபயோகிக்க வேண்டாம்.சில இருமல் மருந்துகள் தூக்க கலக்கத்தை ஏற்படுத்தி கை கால்களை தள்ளாடச் செய்து விடும்.அது விபத்துக்களுக்கு ஆளாக்கும்.சிறிய இருமலை வாயை துணி கொண்டு பொத்தி சகித்துக் கொள்வது நல்லது. சுவாசக்குழாயிலிருந்து சளியையும் கிருமிகளையும் வெளியேற்றத்தான் இருமல் உண்டாகிறது. இது நல்லது. இருமல் ஒரு நோயல்ல.
காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிடலாம்?

காய்ச்சல் வந்துவிட்டாலே எதுவும் சாப்பிடக் கூடாது என்று பொதுவான கருத்து உள்ளது. அது மிகவும் தவறானது. ஆனால், காய்ச்சல் நேரத்தில்தான் உடலுக்கு அதிக கலோரிச் சத்து தேவைப்படுகிறது. எனவே ஊட்டச் சத்தான உணவுக்கு, காய்ச்சல் நேரத்திலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியம். காய்ச்சல் வந்தால் குடலில் அழற்சி இருக்கும்; நாக்கில் கசப்புணர்வு இருக்கும். நோய்த் தொற்று இருக்கும் நிலையில் குமட்டல், வாந்தி உணர்வும் இருக்கும்.

மிருதுவான, அதே சமயம் காரம் - மசாலா இல்லாத திரவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்துமாவு கஞ்சி, ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், வேக வைத்த காய்கறிகளை மசித்துச் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடலாம்.பழச்சாறு சாப்பிடலாம். ஏனெனில் காய்ச்சல் இருக்கும் நிலையில் வெப்ப வெளியேற்றம் காரணமாக உடலின் உயிர்ச் சத்துகளில் ஒன்றான நீர்ச் சத்து அளவு குறையும்.எனவே குடிநீர் அதிகம் குடிக்க வேண்டும். 

காய்ச்சல் இருக்கும் நிலையில் பழச்சாறு, இளநீர், மோர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. இவற்றைச் சாப்பிட்டால் காய்ச்சல் அதிகமாகும், ஜலதோஷம் வந்து சேரும் என்ற கவலையும் ஏற்படுகிறது.இது வீண் கவலை. காய்ச்சல் இருந்தாலும் இவற்றைச் சாப்பிடும் நிலையில் உடலுக்குத் தேவையான உயிர்ச்சத்து கிடைத்து, காய்ச்சல் குறையும்.

காய்ச்சல் என்பது ஓர் அறிகுறிதான். நோய்த் தொற்று (viral infection) காரணமாகவே காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே காய்ச்சல் குறைந்தவுடன், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் புரதச் சத்து அதிகம் தேவை. இந்நிலையில் பால், தயிர், பருப்பு - கீரைகள் - காய்கறிகள் நிறைந்த உணவு ஆகியவற்றை காய்ச்சல் விட்ட பிறகு தொடர்ந்து சாப்பிட வேண்டும். பழங்கள் சாப்பிடுவதும் புரதச் சத்தை உடலுக்கு அளிக்கும்.அசைவம் சாப்பிடுவோர் முட்டை சாப்பிடலாம். அசைவ உணவில் காரம்-மசாலா அதிகம் கூடாது.

நோயெதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள்


எந்த ஒரு நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தியை, நம் உடம்பானது தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். இது, நோய்களை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராகச் சண்டைபோட்டு அவற்றை உடலில் இருந்து வெளியேற்றிவிடும் அல்லது அழித்துவிடும்.நீங்கள் உட்கொள்ளும் வைட்டமின்கள் (Minerals) மற்றும் கனிமங்களின் (Vitamins) அளவைப் பொறுத்துத்தான் இந்த சக்தி இயங்கும். அதனால் இந்தச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டாலே போதும், மருந்தின்றி காய்ச்சலை விரட்டியடிக்கலாம்!

நோயெதிர்ப்புச் சக்தி அதிகம் உள்ள சில சத்துகளையும் உணவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.சத்துள்ள உணவு அதோடு vitamin A, the vitamin B complex (vitamins B-1, B-2, B-5, B-6, folic acid) , vitamin C, சரியான அளவு எடுத்துக்கொள்வது நோயெதிர்ப்பு neutrophil களை உருவாக்கி நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.

காப்பர் சத்து : நம் ரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள்தான் தொற்றுநோய்க் கிருமிகளை முழுவேகத்துடன் எதிர்க்கக் கூடியவை.காப்பர் சத்தானது வெள்ளை அணுக்களுக்கு அந்த சக்தியை அளிக்கக்கூடியதாக உள்ளது. பனிவரகு, சாமை உள்ளிட்ட தினைவகைகள், பீன்ஸ், சன்னா, பட்டாணி, தாமரைத்தண்டு, செல்மீன்கள், சாக்லெட் ஆகியவற்றில் காப்பர் சத்து அதிகம் உள்ளது.

வைட்டமின் E : இளமையிலிருந்தே வைட்டமின் E சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வருபவர்களுக்கு, வயதானபின்னும் ஃப்ளு காய்ச்சல் போன்ற தொந்தரவு வராது. காரணம், வைட்டமின் E யானது அதிகமாக உடலுக்குள் செல்லச் செல்ல... நோயெதிர்ப்பு உயிரணுக்களின் அளவானது இரண்டு மடங்காக உற்பத்தியாகியிருக்கும். இதனால் அவை காய்ச்சலைத் தரும் வைரஸ்களை எளிதில் கொன்றுவிடும்.சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள், பட்டாணி, கோதுமை, தானிய வகைகள், காய்கறி எண்ணெய்கள், மீன், மீன் எண்ணெய், முட்டை, கோழி ஆகியவற்றில் வைட்டமின் E அதிகம் .

வைட்டமின் B12: B12ன் தலையீட்டால்தான் காய்ச்சலைத் தரும் கிருமிகள் உடலுக்குள் வரும்போதெல்லாம் நோயெதிர்ப்புச் சக்தியை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் தங்கள் கடமைகளை ஒழுங்காகச் செய்ய B12தான் காரணம்.ஈரல், முட்டை, பால் போன்ற அசைவ உணவுகளில் B12 மிக அதிகமாக உள்ளன. பீன்ஸ், ஆரஞ்சு, கீரை வகைகள், பட்டாணி, சூரியகாந்தி விதைகள், முழுதானிய விதைகள் ஆகியவற்றிலும் இச்சத்து போதியளவு உள்ளன.

துத்தம் (ZINC) : உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை மேலும் மேலும் வளர்க்க துத்தச்சத்து அவசியமாக உள்ளது. தானிய வகைகள், அனைத்துத் தினைவகைகள், பீப், போர்க் போன்றவற்றில் துத்தச்சத்து அதிகமாக உள்ளன.

தாவர வேதிப்பொருள்:உங்கள் உடலில் உள்ள நோயெதிர்ப்புச் சக்தியை வலுவாக்கி, நோய்க்கிருமிகளை அழித்து நிர்மூலமாக்க தாவர வேதிப் பொருட்கள் அவசியம்தேவை.வெங்காயம், ஆப்பிள் (குறிப்பாக தோல்கள்), கறுப்பு டீ, பூண்டு, மிளகு, பெர்ரி, திராட்சை, தக்காளி ஆகியவற்றில் வேண்டிய மட்டும் தாவர வேதிப் பொருட்கள் உள்ளன. இவை காய்ச்சலை (Flu) உருவாக்கும் கிருமிகளை அண்டவிடுவதில்லை.

சந்தோஷமான சூழல்:குடும்ப உறுப்பினர்களுடன் சந்தோஷமாக இருக்கும் சூழலை உருவாக்கிக்கொள்வது என்பது காய்ச்சலை வரவிடாமல் தடுக்கும் ஓர் உத்தியாகும். அன்பான பேச்சு, ஆதரவான நடவடிக்கைகள், சுற்றுலா, இசை.... இவையாவும் மனதை சந்தோஷப்படுத்துவதால், நம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் கூடுகிறதாம்.
நன்றி:தினகரன் 

இப்படி உங்கத்தங்கத்தலைவி பக்கம் அமர்ந்து பேச முடியுமா ?கருத்துக்களை சொல்லமுடியுமா?
த[ரை] ரம் தாழ்ந்த பண்ணி செல்வம் 
கமல் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தது பதில் தாக்குதல் அறிக்கையல்ல உங்களின் நிர்வாகங்களை சீர்படுத்ததான் அப்படி கூறினார் , 
கமலுக்கு உங்களின் அறிவாற்றலைப்பற்றி என்ன தெறியும் "நீங்க எப்பவும் போல்  கோயில் குளம்னு போய்கிட்டிருங்க நமக்கு வாய்ப்பளித்த அம்மாதான் முக்கியம் வாக்களித்த மக்கள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான்"
இது கமலுக்கு தெரிந்துதான் அந்த பேட்டியில் அப்படி கூறியுள்ளார் பண்ணி செல்வம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?