நினைவாற்றல் அதிகரிக்க...,
உ டற்பயிற்சி செய்வது உடலை சீராக வைத்து கொள்வதற்கு உதவும்.
தற்போது உடற்பயிற்சி செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும், அல்சீமர்ஸ் மற்றும் டிமென்சியா ஆகிய வியாதிகள் குறையும் வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் பல்கலைகழக பேராசிரியர் கிர்க் எரிக்சன் தலைமையிலான ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வுக்கு 50 வயது முதல் 80 வயது வரை உள்ள 120 பேர் உட்படுத்தப்பட்டனர்.
அவர்கள் தினமும் 40 நிமிடங்கள் என வாரத்திற்கு 3 நாட்கள் நடக்கவேண்டும். அல்லது எளியவகை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
பயிற்சிக்கு முன்பும், பயிற்சியின் முடிவிலும் அவர்களின் மூளைப்பகுதி ஸ்கேன் செய்து வைத்து கொள்ளப்பட்டன.
இதில் நினைவாற்றலை அதிகரிக்கும் மூளையின் முக்கிய பகுதியான ஹிப்போகேம்பஸின் அளவு நன்கு கவனிக்கப்பட்டன. அதில் எளிய உடற்பயிற்சி செய்தவர்களின் மூளையில் ஹிப்போ கேம்பஸ்1.5 சதவீதம் அளவு சுருங்கி காணப்பட்டது. அது வழக்கமான ஒன்று என அறிவிக்கப்பட்டது.
அதே வேளையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களின் மூளையில் ஹிப்போகேம்பஸ் அளவு முன்பை காட்டிலும் பெரிதாக (2 சதவீதம்) வளர்ந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதிலிருந்து வயது முதிர்ந்தவர்கள் ஆனாலும் முறையான உணவு மற்றும் சரியான அளவில் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என தெரியவந்துள்ளது.
பிறகென்ன செய்யுங்க செஞ்சுகிட்டே இருங்க உடற்பயிற்சியை!
=========================================================================================
அக்ரூட் !
வால்நட்டின் வடிவத்தை நன்கு கவனியுங்கள் ?
மூளையின் வடிவம் போலவே இருக்கும்.
அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட்.
அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.
சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும்.
உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
======================================================================================இன்று ,
டிசம்பர்-22.
- இந்திய கணித தினம்
- இந்திய கணிதவியலாளர் ராமானுஜர் பிறந்த தினம்(1887)
- இந்தியாவின் முதல் சரக்கு ரெயில் ஓடவிடப்பட்ட நாள் (டிச.22, 1851)
- சீனிவாச ராமானுஜம்
உலகின் மிகச்சிறந்த 'கணித மேதைகளில்' ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் 'தேசிய கணித தினமாக' 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது.
வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். இதுதவிர அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானதாக விளங்குகிறது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான்.

ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நுாற்றாண்டில் கணிதத்துறையில் இந்தியா பின்தங்கியது. இந்நிலையில் ராமானுஜம் மூலம் 20ம் நுாற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.யார் இவர்?: ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர் 1887 டிச., 22ல், ஈரோட்டில் பிறந்தார் சீனிவாச ராமானுஜன், 3 வயது வரை பேசும் திறனற்றவராக இருந்தார். பள்ளியில் சேர்ந்த பின் பேச்சு வந்தது.
ஒருநாள் ஆசிரியர் 'பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை' என கூறினார். உடனே, ''பூஜ்யத்திற்கு இடதுபக்கம் 1ஐ சேர்த்தால் 10 வருகிறதே,'' என பதிலளித்தார். அதே போல, 'ஒரு எண்ணை அதே எண்ணால் வகுத்தால் 1 வரும்' என ஆசிரியர் பாடம் நடத்தினார். உடனே ராமானுஜம், ''பூஜ்யத்தை பூஜ்யமால் வகுத்தால் 1 வருமா?'' என கேட்டார். அப்போது அவரது வயது 10 தான். 12வது வயதில் கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயற்சி எடுத்தார்.அப்போது 'மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜத்துக்கு வேலை கிடைத்தது. இங்கு ராமானுஜரின் கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேலாளர் எஸ்.என்.அய்யர், அவர் தயாரித்த சில முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப ஊக்குவித்தார்; இதற்கு எந்த பதிலும் இல்லை.
இருப்பினும் 1913ல் ராமானுஜம், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டி என்பவருக்கு சில கணித இணைப்புகளை அனுப்பி வைத்தார். இதை கண்ட ஹார்டி, 'இது சாதாரண மனிதரது அல்ல, ஒரு மேதையின் படைப்பு' என வியந்தார். ராமானுஜத்தை உடனேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜத்தின் திறமை சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்துவரவில்லை. உடல் நிலை வெகுவாக பாதிக்கப்பட, 1917ல் இந்தியா திரும்பினார். 1920 ஏப்., 26ல் மறைந்தார்.

உங்க மோடி கூட என்னை மாதிரி போஸ் கொடுக்க முடியாது. யாருகிட்ட,?