வியாழன், 3 டிசம்பர், 2015

தனித்து நின்று தமிழகத்தை காப்பற்றிய

தரணி போற்றும் தாய்?

இப்போதைய சென்னையின் வெள்ள பாதிப்புகளுக்கு முழுகாரணம், ஜெயா அரசின் செயலற்ற நிர்வாகம்மே.... தமிழக அரசு மட்டும் வானிலை மைய்யத்துடன் சரியான ஒத்துழைப்புடன் சமயோசித முன்னேற்பாட்டுடன் செயல்பட்டிருந்தால், அடையாற்று வெள்ள பாதிப்பு 75% சதம் குறைந்திருக்கும்... சென்னை முழுதும் வெள்ளகாடாக மாறியிருக்காது...
செம்பரம்பாக்கம் ஏரி நவம்பர் 9 ஆம் தேதி நிரம்பி, 25 ஆயிரம் கன அடி நீர், அடையாற்றின் மூலம் வெளியேற்றபட்டபோது, மேம்பாலங்களை தொட்டு, கரை பகுதி வீடுகளை மூழ்கடித்து பாய்ந்தது.. இரு நாட்களுக்கு பின், நீரின் அளவு குறைக்கப்பட்டு, செம்பரம்பாக்கம் ஏரியின் முழுகொள்ளளவான 22 அடியில் நிறுத்தப்பட்டது. அடுத்த பெருமழை, நவம்பர் 28 தேதிக்கு மேல் என்ற எச்சரிக்கை அப்போதிலிருந்தே பரவலாக அறிவிக்கப்பட்டு வந்தது...
ஜெயா அதிமுக அரசானது உண்மையிலேயே செயல்படும் அரசாக இருந்திருந்தால், அந்த இடைப்பட்ட 15 நாள்களில், சிறிது சிறிதாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீரை வெளியேற்றி, ஏரியின் நீர் அளவை குறைத்து வைத்திருந்தால், நவம்பர் 30 & டிசம்பர் 1 ஆம் தேதி கன மழையினால், திடீரென ஒரேடியாக 30 ஆயிரம் கன அடி தண்ணீரை, அடையாறு ஆற்றில் திறந்துவிடவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது... முழு சென்னையும் அடையாற்றின் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டிருக்காது... குறைக்கப்பட்ட செம்பரம்பாக்கம் நிறையும் நேரத்தில், மழையின் அளவும் குறைந்து, அதிகளவு நீரை வெளியேற்றும் அவசியம் வந்திருக்காது...
இதேதான் பூண்டி, புழல், கூவம் ஆற்றுக்கும்.... மேலும், கடலுடன் கலக்கும் கழிமுக பகுதிகளை தூர்வாரி, மணல் திட்டுக்களை அகற்றாததால், ஆற்றுநீரானது கடலுக்குள் செல்லாம்மல், பின்னோக்கி ரிவர்ஸில் வருகிறது.. மொத்தத்தில் ஜெயா அரசின், ஒருங்கிணைப்பின்மை, திட்டமிடாமை, செயலற்றதன்மையால் இந்த நிலை..

சில‬ விஷயங்களை சொல்லியே ஆகவேண்டும்......
‪#‎சென்னை‬ துறைமுகம் -- ‪#‎மதுரவாயல்‬ பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பில் போடாமல்
காலத்தோடு நிறைவேற்றியிருந்தால், இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில், அந்தப் பாலம் வழியாக பயணித்து எளிதில் புறநகர்ப் பகுதியை அடைந்து விடலாம்.......

பாதிக்கப்பட்டவர்கள் புறநகர்ப் பகுதிகளை அடைந்து விட்டால் அங்கே அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி, தங்குமிடம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுக்க வசதியாக இருந்திருக்கும்.......
‪#‎தனிப்பட்ட‬ ஒருவரின் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இன்று அவதிப்படுகிறார்கள் தலைநகர மக்கள்.......
எப்படியோ தப்பிப் பிழைத்து செயல்பாட்டுக்கு வந்த மெட்ரோ ரயில் தான் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆபத்பாந்தவனாக இயங்கும் ஒரே போக்குவரத்து.......
#சில விஷயங்கள் சொன்னால் புரியாது சிலருக்கு......
இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தான் புரியும்......!!!!!

மாநகராட்சி வழங்கும் உணவு பைகளில் ஜெ படம் போடுவதற்கு தாமதம் ஆகுவதால் 5000 உணவு பொட்டலங்கள் அதிமுகவினர்  கைப்பற்றி ஜெ படப் பைகள் வராததால் சென்னை அமைஞ்சகரையில் அழுகிய நிலையில் கொட்டினர் . .

 சென்னை நிலைமை சரியானதும் இருக்கு உலக நாயகனுக்கு.போத்தீஸ் அபிமான விளம்பரப் படத்துக்கு காண்பிக்க  கூட  சிரமம் உண்டாகலாம்.
===============================================================================================