நிலவில் மனிதன் இறங்கியது உண்மையா?





 அமெரிக்கா உண்மையிலேயே நிலவிற்கு மனிதனை அனுப்பியதா??
அல்லது உலகை ஏமாற்ற உருவாக்கிய கட்டுக் கதையா???
சென்னை சேதம் பற்றி பரபரப்புடன் இருந்த மக்களை சிம்புவின் பீப் பாடல் திசை திருப்பிக்கொண்டிருக்கிறது.இதற்கு அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது.அதானால்தான் வெளியே வர முடியாத பிரிவுகளை வழக்கை பதிவு செய்ய உத்திரவிட்டுள்ளது.செமபரம்பாக்கம் எரித்தண்ணீர் கோபத்தில் இருந்து மக்களை திசை திருப்ப இந்த பீப் பாடல் நல்ல வாய்ப்பு அல்லவா?
அடுத்து ஜெயா புகழ் பாடிஉவதை லட்சியமாகக் கொண்ட லட்சிய கட்சித்தலைவர் ராஜேந்தர் அடுக்கு மொழியால் மகனுக்கு வாதாடுவார்.மக்கள் அங்கு திரும்பி விடுவார்கள்.என்ற நம்பிக்கைதான்.
அதனால் நாமும் இன்று அமெரிக்கா மக்களை நிலாவை வைத்து ஏமாற்றிய கதையை பார்ப்போம்.
உலக பயங்கரவாதி அமெரிக்காவின் பொய் புரட்டல்களை நம்ம சகோதரர்களும் படித்து பயன்பெற்று தெரிந்து கொள்ளட்டும் எப்படி எல்லாம் நம்ப வைத்து இருக்கிறார்கள்.
உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான். 1930 – ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். 
அதேப்போல், நிலாவிற்கு விண்களம் அனுப்பியவர்களும் இவர்களே. இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்களங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள். 
இப்படியாக நிலாவை நோக்கிய இந்த விண்களப் பயணமும், நிலாவைப் பற்றிய ஆராய்ச்சியும் வெற்றிகரமானதாக அமைந்தவுடன்,
1957 – ஆம் ஆண்டு விண்களத்தில் ”லைகா” என்ற நாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர். ”லைகா” நாயும் உயிர் சேதாரமின்றி நிலவிற்கு சென்று திரும்பியது. அந்த பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது .இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் அடுத்து சோவியத் யூனியனைச் சேர்ந்த மூன்று பேர்களை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது.
அந்த மூன்று பேர்களையும் ஏற்றிக்கொண்டு நிலாவை நோக்கி புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது. அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது. 
மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் உறைந்து போனது மட்டுமல்லாமல், இது மனித உரிமைக்கு எதிரானது என்று கூறி மன்னிப்பும் கேட்டனர். அது மட்டுமல்லாமல், நிலாவிற்கு ஆட்களை அனுப்பி செய்யும் சோதனையை இத்துடன் கைவிடுவதாகவும் அறிவித்துவிட்டனர்.
அந்த காலங்களில், எதிலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும் போட்டிப்போட்டது. 
நிலாவிற்கு ஆட்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், ”அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்” என்று அமெரிக்கா சவால் விட்டது.
அதன் பிறகு தான், அமெரிக்கா உலகத்திலேயே தான் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்த நாடு என்று காட்டுவதற்காக, கடந்த 1969 – ஆம் ஆண்டு ஜூலை மாதம் ”அப்போலோ – 11” என்ற விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் டேவிட் R ஸ்காட் என்பவரையும் நிலாவிற்கு அனுப்பிவைத்தது. ஜூலை 20 – ஆம் தேதி நிலாவில் இறங்கிய விண்களத்திலிருந்து, நீள் ஆம்ஸ்ராங் தான் முதன் முதல் தன் காலடியை வைத்து இறங்கினார். 
இந்த செய்தி உலகெங்கிலும் செய்தித்தாள்களில் வந்தது. பிறகு ”நிலாவில் முதன்முதல் காலடி வைத்தவர் யார்…?” என்ற கேள்வியே இல்லாத பாடப்புத்தகமும் இல்லை, வினாத்தாள்களும் இல்லை என்றாகிவிட்டது.
அறிவியலில், ஆராய்ச்சியில் சோவியத் யூனியனை விட தாம் தான் முன்னணி நாடு என்று அமெரிக்கா தம்பட்டம் அடித்து கொண்டாடியது. அறிவியல் ஆராய்ச்சியில் எங்களை வெல்ல யாருமில்லை என்று கொக்கரித்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ”நிலவில் இறங்கி நீள் ஆம்ஸ்ட்ராங் வலம் வந்த” திரைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்துப் பார்த்து சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்கள்.
அவர்கள் சொன்னது என்னவென்றால், நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவிற்கே செல்லவில்லை என்பதும், அது நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்டத் திரைப்படம் என்பதும் தான். உலக மக்களை எப்படியெல்லாம் அமெரிக்கா மடையர்களாக ஆக்கியிருக்கிறது என்று என்னும் போது நமக்கெல்லாம் உண்மையிலேயே கோபம் வருகிறது.
”ஹாலிவுட்டில் நிலாவைப்போன்று செட்டிங்ஸ் போட்டு படம் எடுத்தவர் என் கணவர் தான்” என்ற உண்மையையும் அந்த படத்தை இயக்கிய அன்றைய ”science fiction” பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக் – இன் மனைவியும் வெளியிட்டிருக்கிறார்.
அப்படி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நிறைய விஷயங்களை கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பதையும் பார்த்தால் உங்களுக்கு உண்மை விளங்கும்.
1) முதலாவது நிலாவில் வெளிச்சமே இருக்காது. சூரியனின் ஒளி பட்டு தான் பூமியிலிருக்கும் நமக்கு நிலா வெளிச்சமாக தெரிகிறதே ஒழிய, தானாக நிலாவில் எப்படி வெளிச்சம் வரும். அங்கு street light எல்லாம் கிடையாது.
2 ) நீள் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் இறங்கி அமெரிக்கக் கொடியை நிலாவில் நடுவார். அப்போது அந்தக் கொடி அசையும். காற்றே இல்லாத இடத்தில் கொடி பறப்பதற்கு சாத்தியமே இல்லை.
3 ) அதேப்போல் காற்றே இல்லாத இடத்தில் கால் தடம் பதிக்க நடப்பது என்பதும் இயலாததே. அப்படியிருக்கையில் அவர்கள் நடந்த காலடித் தடம் இருக்கும். அவர்கள் நடக்கும் போது புழுதி பறக்கும். இதெல்லாம் நிலாவில் எப்படி முடியும்.
4 ) சுற்றிலும் focusலைட் போட்டு படபிடிப்பு நடத்தப்பட்டதால், அந்த நிலாவில் உள்ள பொருட்களின் நிழல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணங்களில் இருக்கும்.
5 ) நீள் ஆம்ஸ்ட்ராங்கின் முகத்தை அருகில் காட்டுவார்கள் அதில் அவருக்கு எதிரில் இருக்கும் விண்வெளிவீரர்கள் இரண்டுபேரின் உருவங்கள் தெரியும். நிலாவிற்கு சென்றதே இரண்டு பேர் எனும் போது மூன்றுவதாக இன்னொருவர் யார்…?
இப்படியாக அந்த படபிடிப்பில் கோட்டைவிட்டிருப்பதால் அமெரிக்கா நிலாவிற்கு செல்லவில்லை என்றும், நிலாவிற்கு சென்றது போல் ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமே அது என்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு அறிவியல் வளர்ச்சியும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் உள்ள இந்த காலத்திலேயே அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் இன்றைக்கு நிலாவைப் பற்றிய எந்தவிதமான முழுமையான முடிவுக்கும் வரமுடியாமலும், நிலாவிற்கு ஆட்களை அனுப்ப யோசித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
அன்றைக்கு – அதுவும் 60 – களில் இன்றைக்கு இருப்பது போன்ற அறிவியல் வளர்ச்சியோ, தொழிநுட்ப வளர்ச்சியோ இல்லாத நாட்களில் எப்படி நிலாவிற்கு ஆட்களை அனுப்பினார்கள்..? என்று நாம் யோசித்தாலே இவர்களின் மக்களை மடையர்களாக்கும் வேலை புலப்பட்டுவிடும்.
இனிமேல் உங்களிடம் யாராவது நீள் ஆம்ஸ்ட்ராங்கை அமெரிக்க நிலவுக்கு அனுப்பியது உண்மை என்றால் அதற்க்கு முன்பே நாங்கள் ஒரு பாட்டியை வடை சட்டியோடு நிலவுக்கு அனுப்பி விட்டோம்.கடந்த 60 வருடத்திற்கு மேல் அந்த பாட்டி நிலாவில் வடை சுட்டு வியாபாரம் செய்து வருகிறது.அவரை உங்கள் ஆம்ஸ்ட்ராங் பார்த்தாரா என்று விசாரியுங்கள்.
 நன்றி : ஈழ மண் வாசம் | கரை செல்வன் | இன்று ஒரு தகவல்,
பிரபஞ்ச கோள்கள் எதனால் ஆனது?

சூரியனில் எந்த வகையான வேதியியல் பொருட்கள் இருக்கின்றனவோ அதேமாதிரி வேதியியல் கலவைதான் மற்ற எல்லா நட்சத்திரங்களிலும் இருக்கும். 
இன்னும் சொல்லப்போனால் இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே மாதிரியான வேதியியல் பொருட்களின் கலவைதான் இருக்கும் என்று நம்பலாம். காரணம் இந்தப் பேரண்டம் முழுவதும் நட்சத்திரங்களும், வாயுமேகங்களும்தான் இருக்கின்றன.
 அதே மாதிரி வாயு மேகங்களால்தான் சூரிய குடும்பத்திலுள்ள எல்லாக் கோள்களும் உருவாகி இருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்த பிரபஞ்சத்திலுள்ள பொருட்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
வாயுக்கள்
சாதாரணமாக பிரபஞ்சத்தில் 98 சதமான இடம் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் நிரப்பப் பட்டிருக்கின்றன. இவை மிகவும் லேசான, வெகு விரைவில் நகரக்கூடிய அணுக்களால் ஆனவை. அளவில் மிகச்சிறியதான இந்த அணுக்கள் வெப்பம் அதிகமாக இருக்கும்போது அதிவேகமாகவும் நகரும். 
அணுக்கள் மிகவும் அதிக வேகத்தில் நகரும் போது அவற்றை எந்தப் புவிஈர்ப்பு சக்தியாலும் பிடித்து வைத்துக் கொள்வது சிரமம்.அதிக வெப்பமுள்ளதாயும், அதே சமயத்தில் அளவில் பெரிதாயும் இருக்கும் சூரியன் மற்றும் நட்சத் திரங்கள் போன்றவற்றால் மட்டுமே ஹைட்ரஜன், ஹீலியம்வாயுக்களைப் பிடித்து வைத்துக் கொள்ள முடியும். 
ஒரு பொருள் வெப்பமாக இல்லாவிட்டாலும் அதனுடைய மேற்பரப்பு அதிகக்குளிர்ச்சியாக இருக்குமானால் அதுஅதிகப் புவிஈர்ப்பு இல்லாமல் இருந்தாலும் கூட அவற்றால் எளிதாக ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடியும். 
மிகவும் பிரம்மாண்டமான வாயுக் கோளங்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்களில் ஹைட்ரஜனும், ஹீலியமும் அதிகமாகக் காணப்படுகின்றன.இந்தக் கோள்களின் அடர்த்தி சூரியனில் இருப்பது போல் ஒரு சதுர செ.மீட்டருக்கு 1.4 கிராமாக இருக்கிறது. இந்த அடர்த்தியானது இன்னும் கோளப் பகுதியின் உள்ளே செல்லச்செல்ல குறைவாக இருக்கலாம். 
காரணம் உள்பகுதியில் அழுத்தம் இல்லை. இம்மாதிரி சனி கிரகத்தில் உள்பகுதியில் அடர்த்தி குறைவாக இருப்பது நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.பனிப்பொருட்கள்ஹைட்ரஜன், ஹீலியத்திற்கு அடுத்தபடியாகப் பிரபஞ்சத்தில் பரவியிருப்பது பனி. இந்தப் பனி யானது ஆக்ஸிஜன், நைட்ரஜன் மற்றும் கார்பன் மூலக்கூறுகளால் ஆனதாகக் காணப்படுகின்றன. 
இவை பெரும்பாலும் ஹைட்ரஜனோடு சேர்ந்தவையாக இருக்கின்றன. 
அதாவது ஹைடரஜன் ஆக்சிஜனோடு சேர்ந்து உருவாகக் கூடிய தண்ணீர் மூலக்கூறுகளாகவும், நைட்ரஜனும் ஹைட்ரஜனும் சேர்ந்த அமோனியாவாகவும், கார்பனும் ஹைட்ரஜனும் சேர்ந்த மீத்தேனாகவும் காணப்படுகின்றன.
இவற்றுக்கு அடுத்தபடியாக கார்பனும் ஆக்சிஜனும் கலந்து கார்பன்டை ஆக்ஸைடும், கார்பன் மோனாக்சைடும், கார்பனும் நைட்ரஜனும் சேர்ந்து சயனோஜென்; சல்பர் ஹைடரஜனோடு சேர்ந்து ஹைட்ரஜன் சல்பர் டை ஆக்சைடும் பனியில் காணக்கூடிய முக்கியப் பொருட்களாக இருக்கின்றன.பனி மூலக்கூறுகள் வாயுக்களைவிட ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளக்கூடியவை. 
அதிக புவி ஈர்ப்பு இல்லாத கோள்கள் ஹைட்ரஜனையும், ஹீலியத்தையும் வைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், பனிப்பொருட்களை தன்னுடன் வைத்துக் கொள்ள முடியும். ஹீலியம் வேறு எதனுடனும் சேராத காரணத்தால் அது பெரும்பாலும் கோள்களில் காணப்படுவது இல்லை.
 ஆனால் ஹைட்ரஜன் மற்ற சிலவற்றோடு சேர்ந்து பனியாக மாறியிருப்பதால் அது கோள்களில் காணப்படுகிறது.வாயுக்கோள்களில் உள்ள பனிப்பொருள் ஒரு நல்ல கலவையாக இருக்கிறது. இந்தக் கலவையானது ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனைவிட நன்றாகவே இருக்கிறது எனலாம். 
இதே மாதிரி பனிதான் வால் நட்சத்திரங்களிலும் காணப்படுகிறது. 
சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களின் மிகப்பெரிய துணைக்கோள்கள் கனிமீட், கலிஸ்ட்ரோ, டைட்டன், ட்ரிட்டன் ஆகிய நான்கிலும் அதிகமாகப் பனிப் பொருட்கள் காணப்படுகின்றன.
பாறைகள்
பாறைகள் கோள்களில் காணப்படும் மூன்றாவது பொருள். இந்தப் பாறைகள் சிலிக்கானும் ஆக்சிஜனும் சேர்ந்த கலவையாகவும், மாங்கனீசும் மற்றும் பல மூலகங்களால் ஆனதாகவும் காணப்படுகின்றன. இவை பனியைப் போன்று புவி ஈர்ப்பை நம்பியில்லாமல் ஒன்றோடொன்று நன்றாகப் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு திடமாக இருக்கின்றன. 
ஒரு சிறிய பாறைத் துண்டும் அதிகப் புவிஈர்ப்பு இல்லாத சூழலில் கூட ஒரு பிணைப்போடு இருக்கக்கூடியது. 
இந்தப் பாறைகள் அதிகமான வெப்பநிலையில்தான் உருகும் என்பதால் அவை சூரியனுக்கு அருகாமையில் இருந்தாலும் தாக்குப் பிடித்து இருக்கக் கூடியவையாக இருக்கின்றன.சில பனியாலான கோள்களும் சிறிதளவு பாறைப் பொருட்களைக் கொண்டு உருவாகியிருக்கின்றன. வால் நட்சத்திரங்களிலும் இம்மாதிரிப் பாறைகள் காணப்படுகின்றன. சில வெப்பமான கோள்களிலும் உதாரணமாக புதன் கோளிலும், நம்முடைய நிலவிலும் வாயுக்களோ அல்லது பனியோ கிடையாது. அவற்றின் மேற்பரப்பு பாறைகளால் ஆனதாக இருக்கிறது. செவ்வாய் மற்றும் வியாழன் துணைக்கோளான ஐயோவிலும் கடுங்குளிர் நிலவுகிறது. 
செவ்வாயில் கார்பன்டை ஆக்ஸைடும், ஐயோவில் சல்பராலான பனி நிலவியபோதிலும் அங்கே பாறைகள் முழுமையாகக் காணப்படுகின்றன. 
அதேபோல் வியாழன் துணைக் கோளான யுரோப்பாவிலும் பெருமளவிற்குப் பனி காணப்பட்டாலும் அதற்குப் பாறையிலான மையப் பகுதி இருக்கின்றது.
உலோகம்
நாம் மேலே குறிப்பிட்ட நான்கு பொருட்களில் இரும்பு கலந்த உலோகம் சிறிதளவில் காணப்படுகிறது. இந்த இரும்பு கலந்த உலோகம் மற்ற மூன்று பொருட்களையும் விட அதிக அடர்த்தியாக உள்ளதால் அவை கோள் களின் நடுவில் மூழ்கிப்போய் இருக்கின்றன. 
நமது சூரிய குடும்பத்தில் இரும்பு மையத்தை உடைய பாறைக்கோள்கள் குறைவாக இருக்கின்றன. இவை பூமியும், புதனும் மற்றும் வெள்ளியும்தான்.
நமது சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களின் வேதியியல் ஒவ்வொன்றுக்கும் மாறுபட்டாலும் அவை அனைத்தும் சூரியன் உருவான அதே தூசி மற்றும் வாயு மேகங்களிலிருந்து உருவானவைதான். 
நாம் காணும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் அவற்றின் நிறையும், வெப்பநிலையும்தான் என்று கூறப்படுகிறது.
நன்றி : துளிர் மாத இதழ்,
=========================================================================================================================================
இன்று,
 டிசம்பர்-13.
  • மோல்ட்டா குடியரசு தினம்(1974)
  • போலந்தில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது(1981)
=============================================================================================
சமூக வலைதளங்களில், அரசுக்கு எதிராக பகிரப்படும் கருத்துக்கள், கேலி சித்திரங்கள், அ.தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மழை வெள்ளம் சென்னையை மட்டுமின்றி, 'நான்காண்டு சாதனை; நாலாபுறமும் வளர்ச்சி' என பெருமைப்பட்டுக் கொண்டிருந்த அ.தி.மு.க.,வினரை கலங்கடித்துள்ளது.
சென்னையில் வழக்கத்திற்கு மாறாக கன மழை பொழியும் என, வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது; 
செம்பரம்பாக்கம் ஏரி நீரை முறையாக மேலாண்மை செய்யாதது போன்ற காரணங்களால், சென்னை நகரம் தண்ணீரில் தத்தளித்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 

அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களும், கடலோரம் அமைந்துள்ள கடலுார் மாவட்டமும், பெரும் பாதிப்புக்குள்ளாகின.

இது அடுத்த தேர்தலிலும் நிச்சய வெற்றி என்ற கனவில் இருந்த அ.தி.மு.க.,வினரின் துாக்கத்தை கலைத்துள்ளது. துக்கத்தை உண்டாக்கியுள்ளது.

பொதுவாக பேரிடர் ஏற்பட்டால், பொறுப்பில் இருக்கும் அரசு, மீட்பு, நிவாரணம், மறுவாழ்வு ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். 
ஆனால், தமிழக அரசின் செயல்பாடு கடும் விமர்சனத்தை கிளப்பி உள்ளது. 
இந்நிலையில், 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்ற சமூக வலைதளங்களில், தமிழக அரசின் செயல்பாடுகளை, 'நெட்டிசன்கள்' கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மக்களுக்கு வழங்கிய நிவாரண பொருட்களை பிடுங்கி, அதில், ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டியதும்,இந்த கடுமையான துயர காலத்திலும் நிவாரணப்பொருட்களை கொடுக்கையில் கண்டிப்பாக ஜெயலலிதா படத்தை ஒருவர் பெரிதாக தூக்கிக் கொண்டு விளம்பரம் செய்வதும்  மக்களிடம் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 
பலத்த வரவேற்பு
சினிமா நகைச்சுவை காட்சிகளையும், அரசியல் விமர்சனங்களையும் இணைத்து சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோ காட்சிகளுக்கு, மக்களிடம் பலத்த வரவேற்பு உள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நிறைவேற்றி, மக்களை தன் பக்கம் திருப்பும் முயற்சியில், அ.தி.மு.க., ஈடுபட்டு வந்தாலும், சமூக வலைதள விமர்சனங்களை தடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது.-

முகனூல்,



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?