அதென்ன மர்மக்காய்ச்சல்?

சென்னையையும் பல தமிழகப்பகுதிகளையும் இந்தமுறை மழை ,வெள்ளம் புரட்டிப் போட்டுவிட்டது.
மழை நீர் வடிந்தால் அடுத்து வருவது கொசுவும் அது தரும் நோய்களும்தான்.
இந்த முறை அந்த பாத்திப்பு பரவலாக அதிகமாக இருக்கும்.
அதற்கு தக்க மக்கள் தயாராக,பாதுகாப்பாக,முன்னெச்சரிக்கை யாக இருக்க வெண்டும்.
அரசு ?அது எல்லாம் முடிந்த பின்னர்தான் செயலில் இறங்கும்.அதுதான் கடந்த காலம் நமக்கு எச்சரித்து விட்டு போனது.நமக்கு நாமே மட்டும் தான் நம்மை இன்றைய நிலையில் பாதுக்காக்கும்.
அரசு பரவும் காய்ச்சலுக்கு "மர்மக்காய்ச்சல் என்று பெயர் சூட்டி விட்டு அதை ஆராய்ந்து கொண்டே காலத்தை அந்நோய் சரியாகும் வரை ஊட்டி விடும்.
மழைக்காலம் தொடங்கிவிட்டால் சளி, இருமல், உடல் வலி என நோய்கள் வரிசைகட்டி நிற்கும். பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் கொண்டாட்டத்துடன் பரவும். 
சுத்தமில்லா தெருக்கள், குண்டுகுழி சாலைகள் எல்லாவற்றிலும் தண்ணீர் தேங்கி, கழிவுநீருடன் கலந்து பல தொற்றுநோய்களை உருவாக்கும். 
மலேரியா, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் எளிதாகப் பரவும். 
அரசு அதிகபட்ச அக்கறை எடுத்து தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க, பல வழிமுறைகளை கையாளக்கூடும். 
‘மர்மக் காய்ச்சலுக்கு 20 பேர் பலி’ என்பது போல பீதி கிளப்பும் செய்திகளை அடிக்கடிப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் எய்ட்ஸ் நோயே ‘மர்ம நோய்’ என்றுதானே அழைக்கப்பட்டது? 
பெயரிடாமல் ‘மர்மக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படுவது ஏன்? 
கண்டுபிடிக்கப்படாத கிருமியால் வருவதுதான் மர்மக் காய்ச்சலா? 
வரும் முன் இதன் அறிகுறிகளை கண்டறிய முடியாதா? 
தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன? 

‘‘எந்த வைரஸ் மூலம் வருகிறது எனத் தெரியாமல் மக்களைத் தாக்கும் காய்ச்சலையே மர்மக் காய்ச்சல் என்று செய்தித்தாள்களில் குறிப்பிடுகின்றனர். வைரஸ் கிருமிகளின் மூலம் வரும் காய்ச்சல் மட்டுமே இந்த வகையில் சேர்க்கப்படும். 
யாராவது ஒருவர் தெளிவில்லாத அறிகுறிகள் உள்ள காய்ச்சலில் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்தால், உடனடியாக எங்கள் மருத்துவக் குழுவை அங்கே தீவிரப்படுத்தப்படும்.  அந்தப் பகுதியில் உள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்துவோம். வேறு யாருக்கேனும் சந்தேக அறிகுறிகள் இருந்தால், அவர்களையும் பரிசோதித்து மருத்துவமனைக்கு அனுப்ப வெண்டும்.

சிக்குன்குனியா, டெங்கு, ஸ்வைன் ஃப்ளு போன்றவை மர்மக் காய்ச்சலில் அடங்கும். காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற வழக்கமான அறிகுறிகளையே இது முதலில் காட்டும். உடல் வலி இருக்கும். பற்களில் வலியும் ஈறுகளில் ரத்தக் கசிவும் ஏற்படும். சாதாரணக் காய்ச்சல் என்று இருந்துவிடாமல் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது நல்லது. 
 
சிக்குன்குனியா, ‘ஏடிஸ்’ எனப்படும் பகல் நேரத்தில் கடிக்கும் வரிகொசுவின் மூலம் ஏற்படுகிறது. சிக்குன்குனியா காய்ச்சல்  வந்தால் மூட்டு வலி கடுமையாக இருக்கும். சிக்குன்குனியாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லை. கொசுக்கள் வராமல் வீட்டைச் சுத்தமாக பராமரிப்பதுதான் எளிய வழி. வலியைக் குறைக்க மட்டுமே மாத்திரைகள் பயன்படும். நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலமும் எதிர்ப்பு சக்தியை பெறலாம். நொச்சி இலைகளை நெருப்பில் போட்டு புகையை மூட்டினால் ‘ஏடிஸ்’ வகை கொசு வருவதில்லை. இது போன்ற இயற்கையான வழிமுறைகளை கையாளலாம்.

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டுவலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை நிற மாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி - இந்த மூன்றும்தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் நோய் அறிகுறிகள்.
 ரத்தக் கசிவும் ஏற்படலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும். 

இந்த நோய், 4 வகை வைரஸ்களால் உண்டாக்கப்படுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். டெங்கு வைரஸின் ஒரு வகையால் பாதிக்கப்பட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்புத் தன்மை உருவாகி விடும். 
டெங்கு ரத்தக் கசிதல் நோய் (Dengue hemorrhagic fever)  என்பது மிகத் தீவிர தன்மை கொண்டது. தோலில் ரத்தக் கசிவு, மூக்கில் ரத்தம் வடிதல், வாய் ஈறில் ரத்தம் வருதல், கருப்பு மலம், ரத்த வாந்தி போன்றவை ஏற்படக்கூடும். 

ரத்தக் கசிவு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் இந்த டெங்கு இறப்பு வரை கொண்டு சென்றுவிடும். இன்ஃபுளுயன்சா தொற்று நோய் வகையை சேர்ந்ததுதான் ‘ஸ்வைன் ஃப்ளூ’. 
முதலில் பன்றிகளுக்கு மட்டுமே வந்த இந்நோய் பின்னர் மனிதர்களையும் தாக்கத்தொடங்கியது.அதானால் பன்றிக்காய்ச்சல் என்று பெயர்.பன்றிக்காய்ச்சல்,எய்ட்ஸ் 
 போன்று புதிய கிருமிகள் உலகில்  பரவ அமெரிக்க மருத்துவ நிறுவனங்கள்தான் காரணம்.அவர்கள் தங்கள் மருந்துகளை உலக அளவில் விற்கவே இந்த அநியாயங்களில் ஈடுபடுகிறார்கள்.
இன்று பன்றிக்காய்ச்சலுக்கான டாமி புளு மாத்திரைகள் அமெரிக்க நிறுவனத்தில் மட்டும்தான் தயாரிக்கப்படுகிறது என்பது நிலைமையை காட்டி விடுகிறது.

சுவாசத்தைப் பாதிக்கக்கூடியது. கடுமையான காய்ச்சல், இருமல், தும்மல், உடம்பு வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு என எல்லாம் ஒன்று சேர்ந்து 4 நாட்களுக்கு ஆளை பாடாகப்படுத்தும். இந்த நோய் பிறரது தும்மல் மற்றும் இருமல் மூலமாக காற்றில் வேகமாகப் பரவும். 
இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து விலகியிருப்பது அவசியம். இந்நோயின் கடுமையை தாக்குப்பிடிக்க முடியாத சிலர் இறந்து விடுகின்றனர்.

குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடும். அதோடு, மூச்சு விடவும் சிரமப்படுவார்கள். 
இந்நோய்க்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தையே இப்போது தருகின்றனர். 

மர்மக் காய்ச்சலின் தீவிரத்தில், நுரையீரலுக்குச் செல்லும் சுவாசம் நின்றுவிடுவதால்தான் பொதுவாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை Respiratory arrest என்று அழைப்போம். நுரையீரல், இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்களையும் வைரஸ் பாதிக்கிறது. 
இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் இவ்வகை காய்ச்சல் வந்தால் மக்கள் பயப்படுகிறார்கள். அதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கலந்தாய்வுகளை நடத்தி வருகிறோம். 

தெருக்களை, வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்ள விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறோம். சிறு குழுக்களாக பிரிந்து, மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறோம். தண்ணீர் தேங்காமல், குப்பை கூளங்கள் இல்லாமல், கொசுக்கள் இல்லாமல் சுத்தமாக நமது சுற்றுச்சூழலை பராமரித்தால் எந்த மர்மக் காய்ச்சலும் மக்களை தாக்காது’.


- விஜய் மகேந்திரன்,
=========================================================================================
இன்று,
டிசம்பர்-09.
  • சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்
  • தான்சானியா விடுதலை தினம்(1961)
  • இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது(1946)
  • ஐக்கிய அரபு நாடுகள் அமைப்பு ஐ.நா.,வில் இணைந்தது(1971)
=========================================================================================
மருத்துவ தளங்கள்.
உடலின் செயல்பாடு பற்றியும், புதிது புதிதாக புரியாத பெயர்களில் தெரியாத நோய்களெல்லாம் தோன்றும் இக்காலகட்டத்தில், ஆரோக்கியமான வாழ்வுதான் அனைவரின் கனவாகவும் இருக்கிறது. 
உடலில் தோன்றும் சிறு பாதிப்பு கூட எதனால்? 
ஏன்? என்ற கேள்விகளை நமக்குள் எழுப்புகின்றன. 
அத்தகைய கேள்விகளுக்கு விடையை யாரிடம் அறிந்து கொள்வது? 
சாதாரண பிரச்சனையா? 
மருத்துவரின் உதவி தேவைப்படக்கூடியதா? 
அப்படியானால் எந்த பிரிவு மருத்துவரை அணுகலாம்? 
மருத்துவரிடம் சந்தேகங்கள் கேட்டால் பதில் கிடைக்குமா? 
என்பது போன்ற குழப்பங்களுக்கெல்லாம் தீர்வாக பல உடல்நலன் சார்ந்த தகவல்களுடன் நூற்றுக்கணக்கான இணையதளங்கள் உள்ளன.அதில் சிலவற்றை  பார்ப்போம்.
http://www.innerbody.com
உடலை செயல்பாட்டின் அடிப்படையில் 12 தொகுதிகளாகப் பிரித்து ஒவ்வொரு தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளவை, அவற்றின் செயல்பாடு ஆகியவற்றைப் பற்றி 2டி மற்றும் 3டி முறையில் படத்துடன் விளக்குகிறது இந்த இணையதளம். 
ஒவ்வொரு தொகுப்பிலும் தோன்றக்கூடிய நோய்கள் பற்றி அறிந்து கொள்ள இத்தளத்தில் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.விரிவான தகவல்கள் மற்றும் அனிமேஷன் முறையிலான வரைபடம் பள்ளிச் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எளிமையாகப் புரியும்படியாக இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
http://www.medguideindia.com
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அலோபதி மருந்துகளைப் பற்றிய இணையதளம் இது. இத்தளத்தில் மருந்தின் மூலப் பெயர் அல்லது கம்பெனி வைத்துள்ள பெயர் அல்லது தயாரிப்பாளர் ஆகிய மூன்று நிலைகளில் தேடும் வசதியைத் தருகிறது.மருந்தின் பெயரை உள்ளிட்டுத் தேடும்போது அந்த மருந்தை தயாரிக்கும் நிறுவனம், அது எந்தெந்த நோய்களுக்காகத் தரப்படுகிறது, அதே மருந்தை தயாரிக்கும் வேறு நிறுவனங்கள், மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகியவையும் கூறப்பட்டுள்ளன.இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள மருந்துகள், புதிதாக வந்துள்ள மருந்துகள் எனப் பல்வேறு விபரங்களைத் தருகிறது.மேலும், இத்தளத்தில் தடுப்பூசிகள், மருந்துகள் குறித்த விரிவான விபரங்களும், பொதுக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு தொடர்பான சந்தேகங்கள், காப்பீடு பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
http://www.medindia.net/
உடல் நலன் தொடர்பான கட்டுரைகள், உடற்கூறு குறித்த விரிவான விபரங்கள், மருந்துகளைப் பற்றிய விபரங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பற்றிய விபரங்கள், புதிய மருத்துவ தகவல்கள், செய்திகள் என விரிவான மருத்துவ களஞ்சியம்போல் இத்தளம் திகழ்கிறது. குழந்தைகளின் வளர்ச்சி கால்குலேட்டர், உடல் எடை கால்குலேட்டர், உணவுப் பொருள்களில் உள்ள விட்டமின் சத்துக்கள் தொடர்பான கால்குலேட்டர் என 30க்கும் மேற்பட்ட கணக்கீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாற்று மருத்துவம் குறித்த விபரங்களும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
www.webmd.com
மேற்கண்ட தளத்தைப் போலவே பல்வேறு உடல் நலன் சார்ந்த கட்டுரைகள், அலோபதி மருந்துகளைப் பற்றியும், அவற்றால் உண்டாகும் பக்க விளைவுகள் பற்றியும் இத்தளம் முழுமையாக விளக்குகிறது.
http://health.howstuffworks.com/
கழ்பெற்ற இணையதளமான ஹவ் ஸ்டஃப் ஒர்க்ஸ்-ன் துணைப் பக்கமாக அமைந்துள்ள இத்தளத்தில் 10 தலைப்புகளில் நோய்கள் குறித்த விபரங்களை விரிவாகத் தரப்பட்டுள்ளன.
https://www.nlm.nih.gov/medlineplus
மேற்கூறப்பட்ட தளங்களைப் போலவே இத்தளமும் உடற்கூறு குறித்தும், மருந்துகளைப் பற்றியும் விரிவான விபரங்களைத் தருகிறது. 
உடல் நலன் குறித்த வீடியோக்களும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.

                         அதிலேயும் அம்மா படம் ஒட்டீருக்காங்க்க.பைனாகுலரில் பாருடா.
               வெள்ள நிவாரணப்பணிகளை பாருங்கனா.இப்படி பார்க்குறீங்க?மாநகராட்சி மேயரா  நீங்க?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு