அள்ளிக்கட்டியதா அந்நிய மூலதனம்?
பத்திரிகைகளும், அரசின் இயந்திரங்களும் கடந்த சில நாட்களாக சீனாவை காட்டிலும் இந்தியாவிற்கு அதிகமான அந்நிய நேரடி முதலீடு சொல்லிவருகின்றனர்.
பிரதமர் மோடியின் சுற்றுபயணத்தின் விளைவாக கடந்த 2014 ஜனவரி, ஜுன் காட்டிலும், இந்த 2015 ஆம் ஆண்டில் 2.6 மடங்கு கூடுதலாக அந்நிய நேரடி மூலதனம் வந்ததாக பெருமை கொள்கிறார்கள்.
இந்த அரையாண்டில் இந்தியாவிற்கு வந்த நிகர முதலீடு 31 மில்லியன் டாலர் (1,86,000 கோடி) மற்றும் சீனாவிற்குள் வந்த நிகர முதலீடு 28 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதை வைத்து தான் சீனாவை காட்டிலும் இந்தியாவிற்கு கூடுதலாக அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா பெற்றது அதிகமா?:-
இந்த அரையாண்டில் சீனாவிற்குள் வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 68 பில்லியன் டாலர் இதே காலத்தில் சீனா இதர நாடுகளில் செய்துள்ள முதலீடு 40 பில்லியன் டாலர்.
ஆக நிகர முதலீடு 28 பில்லியன் டாலர் 2009 ஆம் ஆண்டிலிருந்து சீனா தொடர்ச்சியாக வெளிநாடுகளில் முதலீடு அதிகமாக செய்து வருகிறது.
நிகர முதலீடு கணக்கிடும் போது, உள்ளே வந்த முதலீட்டில், வெளிநாடுகளில் செய்யப்படும் முதலீட்டை கழித்துதான் கணக்கிடப்படும். ஆகவே தான் இந்த வித்தியாசம். உண்மையில் இந்தியாவை காட்டிலும் 3.6 மடங்கு சீனாவிற்கு கூடுதலாக அந்நிய முதலீடு வந்துள்ளதாக அறிக்கைகள் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

சீனாவிற்கு வந்த நிகர மூலதனம் ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் டாலராக இருக்கிறது. ஆனால் இந்தியாவிற்கு 2.9 பில்லியன் டாலராக உள்ளது. இதை வைத்து கொண்டு தான் சீனாவை இந்தியா மிஞ்சியதாக கூறப்படுகிறது. ஆனால் சீனாவிற்கு வந்த மொத்த முதலீடு மாதம் ஒன்றிற்கு 10.5 பில்லியன் டாலர் அதாவது 3.6 மடங்கு கூடுதலாக சீனாவிற்குள் வந்துள்ளது.
இந்தியா மற்ற நாடுகளில் செய்கிற முதலீடு ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாக 2011 முதல் குறைந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு 16 மில்லியன் டாலர் அளவில் வெளிநாடுகளில் முதலீடு செய்த இந்தியா, 2015 ஆம் ஆண்டு வெறும் 1.8 பில்லியன் டாலர் அளவே முதலீடு செய்துள்ளது.
இந்தியா, குறைவாக வெளிநாடுகளில் முதலீடு செய்வதால் நிகர அந்நிய நேரடி முதலீடு சீனாவை காட்டிலும் கூடுதலாக இருப்பது போல் பிம்பம் உள்ளது.
இந்தியா, குறைவாக வெளிநாடுகளில் முதலீடு செய்வதால் நிகர அந்நிய நேரடி முதலீடு சீனாவை காட்டிலும் கூடுதலாக இருப்பது போல் பிம்பம் உள்ளது.
இந்தியாவிற்குள் வந்த முதலீடு கூட முதல் ஐந்து மாதத்தில் 3.5 பில்லியன் டாலர் அளவு சராசரியாக இருந்தது. கடைசி 3 மாதங்கள் (ஜுன்-ஆகஸ்ட் 2015) 1.8 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. அடுத்த சில மாதங்களில் இது இன்னமும் குறைய வாய்ப்புள்ளது.
அந்நிய நேரடி முதலீடு தான் இந்தியாவை வளமாக்கும் என்பது போல் மோடி பேசி வருவதை நாம் காண்கிறோம். உலக பொருளாதாரமே அந்நிய நேரடி முதலீட்டை நம்பி இல்லை . 2007ல் உலகத்தில் உள்ள மொத்த அசையா முதலீடு உருவாக்கத்தில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு 14 சதவீதம் ஆக இருந்தது.
இது 2015ல் 9 சதவீதம் ஆக குறைந்துள்ளது. அதேபோல் இந்தியாவிலும் இது 11 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய முதலீட்டாளரான அமெரிக்கா 2013ல் 3 டிரில்லியன் டாலராக இருந்தது. 2014ல் இது 100 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.
இப்படி உலகம் முழுவதும் மீதான மோகம் குறைந்துள்ள நிலையில் மோடி உலகை சுற்றி வருகிறார்.

குசைளவ ஞடிளவ பத்திரிக்கை சொல்கிறத அமெரிக்காவில் உள்ள மேடிசன் சதுக்கத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து மோடி மந்திரம் சொல்ல, பல ஆயிரம் பேரை தயார் செய்தும் அமெரிக்காவுடன் இதுவரை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட (ஆடிர) போட முடியவில்லை. சீனா 100 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக கூறினாலும், அதிபர் கடைசியாக ஒத்து கொண்ட 20 பில்லியன் டாலர் கூட இந்தியாவிற்கு வரவில்லை.
மோடி அறிவித்ததை போல ஜப்பானிலிருந்து வரவேண்டிய 34 பில்லியன் டாலர், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய 41 பில்லியன் டாலர், சீனாவிலிருந்து வரவேண்டிய 20 பில்லியன் டாலர், ஐக்கிய அரபு நாடுகள் 70 பில்லியன் டாலர் இவையாவும் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு வந்த மொத்த அந்நிய நேரடி முதலீடு 258 பில்லியன் டாலர் (ரூபாய் மதிப்பில் 12,93,303 கோடி) ஆனால் மோடி தற்போது அறிவித்துள்ள முதலீடுகள் 15 ஆண்டுகளில் வந்த மொத்த முதலீட்டில் 60 சதவீதம் ஆகும். வெள்ளை காக்கா பறக்குது பாரீர் என்று மோடி முழங்கி வருகிறார்.

எங்கே தேடுவேன், முதலீட்டை எங்கே தேடுவேன்:
என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு படத்தில் எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன் என்று பாடுவார். அதுபோல் 31 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்ததாக கூறப்பட்டும், அது எங்கே என்று தேடவேண்டிய சூழல் தான் உள்ளது. தொழில் உற்பத்திக்கு அது பயன்பட்டதா என்றால் இல்லை என்பது தான் பதில் ஆயமந ஐn ஐனேயை என்பதற்கு வராத முதலீடு நுஒஞடடிவை ஐனேயை என்பதற்கு வந்துள்ளது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சந்தையை சுரண்டுவதற்கு தான் மூலதனம் வந்துள்ளது. அரசின் தொழில்துறையின் அறிக்கைப்படி 2015ல் வந்த முதலீட்டில் பெரும்பாலான முதலீடு மின்வணிகம் (இ.காமர்ஸ்) பிலிப் கார்ட், ஸ்நாப் டீல் போன்ற நிறுவனங்களிலும், மெட்ரோ காஷ் அண்ட் கேரி நிறுவனத்திலும், ஆட்டோ மொபைல் தொழிலிலும் வந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையில் 6 பில்லியன் டாலர் வந்திருந்தாலும் மொத்த விற்பனையில் ஏற்றுமதி சதவீதம் 20-25 சதவீதம் தாண்டவில்லை. அதாவது வந்த முதலீடு ஏற்றுமதி செய்ய பயன்படவில்லை. மாறாக உள்நாட்டில் இருந்த கிராக்கியை பயன்படுத்தியுள்ளது.
ஒதுங்கி விடுகின்ற முதலீடு உற்பத்தியை பெருக்குவதை காட்டிலும், எலக்ட்ரானிக் (மின்னணு) பொருட்களின் இறக்குமதியை அதிகப்படுத்துவதுதான் உதவியுள்ளது.
2013 லிருந்து இன்றுவரை மின்னணு பொருட்களின் இறக்குமதி பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களில் செய்யப்படுகின்ற முதலீடு ஏற்றுமதிக்கு பயன்படவில்லை, மாறாக இறக்குமதியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
2013 லிருந்து இன்றுவரை மின்னணு பொருட்களின் இறக்குமதி பலமடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிறுவனங்களில் செய்யப்படுகின்ற முதலீடு ஏற்றுமதிக்கு பயன்படவில்லை, மாறாக இறக்குமதியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பை அதிகம் உருவாக்குகிற கட்டுமான தொழிலிலோ, உற்பத்தி துறையிலோ, மின்சாரம், எண்ணெய் எரிவாயு, உலோகங்களிலோ இந்த முதலீடு பெரிய அளவில் வரவில்லை.
இதை பற்றி கவலைப்படாமல் பல நூறு கோடிகள் செலவு செய்து மோடி வெளிநாட்டு சுற்று பயணம் தொடர்ந்து சென்று வருகிறார். கூட்டி கழித்து பார்த்தால், அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியா இழந்ததுதான் அதிகம்.
-இளைஞர் முழக்கம்,
=======================================================================================================
இன்று,
டிசம்பர்-2.
- ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)
- லாவோஸ் தேசிய தினம்
- அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)
புகழ்பெற்ற மங்கா காமிக்ஸ் ஓவியர் ஷிகெரு மிஸுகி மறைவு
ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற மங்கா காமிக்ஸ் ஓவியரான ஷிகெரு மிஸுகி திங்கட்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 93.
ஜப்பானைச் சேர்ந்த புகழ்பெற்ற மங்கா காமிக்ஸ் ஓவியரான ஷிகெரு மிஸுகி திங்கட்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 93.
மங்கா வகை காமிக்ஸ்களில், திகில் கதைகளை பிரபலப்படுத்தியவர் மிஸுகி. இவர் உருவாக்கிய கெகெகெ நோ கிடரோ (அச்சுறுத்தும் கிடரோ) என்ற காமிக்ஸ் தொடர் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ஒரு தொடராகும்.
ஜப்பானிய நாடோடிக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரில் ஒரு சிறுவன் மிகப்பெரிய பூதங்களுடன் மோதுவதுதான் கதை.
இந்தக் கதைகள் அனிமேஷன் படங்களாகவும் உருவாக்கப்பட்டன.
மரணம், அழிவு, மறுபிறப்பு ஆகியவை இவரது படைப்புகளின் அடிநாதமாக இருந்தன. இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற மிஸுகி, இறுதிவரை அதன் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதை இவரது பல கதைகள் காட்டின. இரண்டாவது உலகப் போரில்தான் அவர் தனது இடது கையை இழந்தார்.
உலகம் முழுவதும் மிஸுகியின் ரசிகர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
பலர், மிஸுகியின் பாத்திரங்கள், கதைகளை வைத்து சமூக வலைதளங்களில் அவருக்கு அஞ்சலிக் குறிப்புகளை எழுதிவருகின்றனர்.
"மரணத்திற்குப் பிந்தைய உங்கள் வாழ்வில், யோகாய் உடன் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். போய்வாருங்கள்" என ஒருவர் தனது ஃபேஸ்புக் குறிப்பில் கூறியிருக்கிறார். யோகாய் என்பது, இவரது மங்கா நாவல்களில் வரும் ஒரு பேயாகும்.
நரகத்திலிருக்கும் ஜந்துக்கள் உங்கள் கையெழுத்தைக் கேட்கக்கூடும் என ஒருவர் தன் அஞ்சலிக் குறிப்பில் கூறியிருக்கிறார்.
"மரணத்தைத் தழுவிக் கொள்வதற்கும் உலகில் இருக்கும் வினோதங்களைக் கொண்டாடுவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார் என மற்றொருரசிகர் கூறியிருக்கிறார்.
================================================================================================
ஒரு அதிகாலைப் பொழுது! கணவன் மனைவியை எழுப்பிக் கேட்டான்.
‘‘டியர்... யோகா பண்ணப் போறேன். நீயும் வர்றியா?’’
கணவனை வித்தியாசமாகப் பார்த்த அந்த மனைவி, ‘‘ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பைக் குறைன்னு சொல்றீங்க. அப்படித்தானே?’’
‘‘அதுக்கில்லைம்மா... யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!’’
‘‘அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?’’
‘‘இல்லை... இல்லை... நீ வர வேணாம். விடு!’’
‘‘அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!’’
‘‘ஐயோ, இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?’’
‘‘இவ்வளவு நாளா புரிஞ்சுக்காமதான் இருந்தேனா?’’
‘‘மறுபடி பாரு... நான் அப்படிச் சொல்லலை!’’
‘‘அப்படித்தான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?’’
‘‘தயவுசெஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?’’
‘‘ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!’’
‘‘ஓகே! நானும் போகலை. போதுமா?’’
‘‘உங்களுக்குப் போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க...’’
‘‘சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன். சந்தோஷமா?’’
‘‘அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் என்ஜாய் பண்ணணும். அதுக்குத்தானே இவ்வளவும் பேசுனீங்க?’’
வெறுத்துப்போன கணவனுக்கு எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான்.
திருமணமான ஆண்களுக்கு இது சமர்ப்பணம்!
குங்குமத்தில் படித்தது,