கிருமி நாசினி; மெகா ஊழல்

குடிநீரில் உள்ள கிருமிகளை அழிக்க, கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் குளோரின் மாத்திரைகள் வாங்கியதில், தமிழகத்தில் மெகா ஊழல் நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது. 
தமிழகத்துக்கு தேவையான குளோரின் மாத்திரைகள், ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. 
குளோரின் மாத்திரைகள், ஆந்திராவில், ஒரு கிலோ, 180 ரூபாய்க்கும்; 
குஜராத்தில், 160 ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது; 
அவை, தமிழகத்தில், கிலோ, 600 - 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
டெண்டர்கடந்த, 2014ல், சேலத்தில், கிராம பஞ்சாயத்துகளுக்கு, குளோரின் மாத்திரைகள் கொள்முதலுக்கான, 'டெண்டர்' விடப்பட்டது. 
சேலம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்த, 'ஓம் சக்தி ஏஜன்சி'யின் உரிமையாளர் லோகாதிராமன் தலைமையில் செயல்படும் மூன்று நிறுவனங்கள், மூன்று பெயர்களில் டெண்டர் கோரின; வேறு யாரும் டெண்டர் கேட்கவில்லை. 
இந்த நிறுவனங்கள் முறையே, ஒரு கிலோ, 1,440; 1,470; 1,480 என, மூன்று விலைகளில் டெண்டர் கோரியதால், குறைந்த பட்ச விலையான, 1,440 ரூபாய்க்கு, டெண்டர் விடப்பட்டு, மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டன. 
இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக, அப்போதைய பஞ்சாயத்து உதவி இயக்குனர் ரமேஷ்குமார், கலெக்டர் மகரபூஷணம் ஆகியோர், 'ஓம் சக்தி நிறுவன குளோரின் மாத்திரைகளை வாங்க வேண்டும்' என, பரிந்துரை செய்தனர்.

விசாரணைவெளி மார்க்கெட்டில், குளோரின் மாத்திரை, அதிகபட்சமாக, 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சேலம் மாவட்டத்தில், 1,440 ரூபாய்க்கு மாத்திரைகள் வாங்கப்பட்டதன் மூலம், பல கோடி ரூபாய்க்கு மெகா ஊழல் நடந்துள்ளது. 
மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து, ஒரு கிலோ, 180 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தில், 700 ரூபாய்க்கு விற்பனை செய்வதிலும், முறைகேடு நடந்திருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தி, ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் குறித்த அறிக்கையை, அரசுக்கு அனுப்பி உள்ளனர். 
வேலுார் மாவட்டத்திலும், மாத்திரை கொள்முதலில் மோசடி செய்ததை கண்டறிந்த மாவட்ட நிர்வாகம், 1.50 கோடி ரூபாயை, ஓம் சக்தி நிறுவனம், திரும்ப செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், அந்நிறுவனத்திடம் இருந்து, மாத்திரைகளை கொள்முதல் செய்ய தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும், அந்த நிர்வாகத்தின் சார்பில், 16 மாவட்டங்களில் கிளைகளை ஏற்படுத்தி, அதன் மூலம் அரசு அதிகாரிகளை வளைத்து போட்டு, குளோரின் மாத்திரைக்கான டெண்டர் எடுத்து, மெகா மோசடியை அரங்கேற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

 இதே போல், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆளுங்கட்சியினர் அறிவுறுத்தலில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், மெகா மோசடி நடந்துள்ளது. 
=========================================================================================

அரசின் மெத்தனமே 400 உயிர்களை பறித்தது.

சென்னை பேரிடர்  யார் காரணம்?
Vallialagappan Alagappan உடன் Rajendran Dharmalingam.
10 மணிகள்
சென்னையில் பெய்த பெருமழையை வெள்ளமாக மாற்றியது தமிழக அரசின் மெத்தனப்போக்குதான் என ஃப்ரண்ட்லைன், டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் வயர்ட் போன்ற இதழ்கள் குற்றம் சாட்டியுள்ளன. அக்கட்டுரைகள் தரும் ஆதாரங்களை எளிதில் புரியும் வண்ணம் விளக்குவதே இப்பதிவு.
நவம்பர் 8, 9, 12, 13, 15, 23 தேதிகள்:
சென்னையில் கனமழை பெய்கிறது.
நவம்பர் இறுதி வாரம் (தோராயமாக 26ஆம் தேதி):
1) சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1 மற்றும் 2ஆம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கின்றன.
2) எச்சரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம், அதாவது பொதுப்பணித்துறை செயலாளரிடம் (PWD Secretary) செம்பரப்பாக்கம் ஏரியில் 83அடி இருக்கும் நீரின் அளவை 75அடியாக குறைக்க சொல்கிறார்கள். குறைத்தால் மட்டுமே வர இருக்கும் அதீத கனமழையை ஏரி தாங்கும் என்றும் சொல்கிறார்கள்.
நவம்பர் 27ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 28ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 29ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.
நவம்பர் 30ஆம் தேதி:
எந்த நடவடிக்கையும் இல்லை.

அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருந்த (Dry days) நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். 
(இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும். 
ஆனால் இது அம்மாவின் ஆட்சி. அம்மாவின் ஆட்சியில் “அணையை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்… அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே இழுத்துப்போட்டுச் செய்வார் என்பதால் இதில் மட்டும் நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல. 
அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின் ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு)
டிசம்பர் 1:
· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள் சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)
· செம்பரம்பாக்கம் ஏரியின் அளவு அரசு தளத்தின்படி 3141மில்லியன் கன அடியாக இருக்கிறது.
· டிசம்பர் 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை கலெக்டர் சுந்தரவல்லியிடம் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு, செம்பரபாக்கம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிவிட்டதால் நொடிக்கு 5000 கனஅடி நீரை வெளியேற்ற இருப்பதாகவும், இந்த அளவு நொடிக்கு 7500 கனஅடி வரை உயர்த்தப்படலாம் என்றும் மொட்டையாக ஒரு செய்தி கிடைக்கிறது.
· மாலை 5 மணிக்கு முதலில் ஏரியை திறக்கிறார்கள். 
பெயரை வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் நொடிக்கு 10000 கன அடி நீரை வெளியேற்றியதாகவும், இவ்வளவு பெரிய வெள்ளத்தை திறந்துவிட முடிவுசெய்த அரசு கண்டிப்பாக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள் என தான் நம்பியதாகவும் wired இதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
· ஆனால் தமிழக அரசின் இணையதளத்தில் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து நொடிக்கு வெறும் 900கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டதாக குறிப்பிட்டிக்கிறார்கள்.
ஆகமொத்தத்தில்,
செய்தியாளர்களுக்கு கலக்டர் சொன்னபடி நொடிக்கு 5000-7000 கன அடியை திறந்துவிட்டார்களா? அல்லது பொதுப்பணித்துறை ஊழியர் கூறியதைப் போல நொடிக்கு 10000கன அடி நீர் திறந்துவிட்டார்களா? 
அல்லது அரசு தளம் சொல்வதைப் போல நொடிக்கு வெறும் 900கன அடி நீர் தான் திறந்துவிட்டார்களா? 
எது உண்மை? 
உண்மையோ இன்னும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது!
டிசம்பர் 2ஆம் தேதி:
· அரசு தளத்தின்படி டிசம்பர் 1ஆம் தேதி ஏரியில் நீரின் அளவு 83.48அடி (3141 மில்லியன் கன அடி). டிசம்பர் 2ம் தேதி ஏரியில் நீரின் அளவு 74.08அடி (1134மில்லியன் கன அடி). ஆக 2007 மில்லியன் கன அடி நீர் முந்தைய இரவு 10 மணிக்கு வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதாவது அறிவித்த நொடிக்கு 7500கன அடிக்கு மாறாக கிட்டத்தட்ட நொடிக்கு 29000 கன அடி நீரை டிசம்பர் 1ஆம் தேதி எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென வெளியேற்றியிருக்கிறார்கள். அதிகாலை 2மணிக்கு சென்னையை வெள்ளம் வந்தடைகிறது. இரவு 10மணிக்கு அபாயகரமான அளவில் திறந்துவிடப்பட்ட வெள்ளம் தூங்கிக்கொண்டிருந்த மக்களையும், வீடுகளையும் மூழ்கடிக்கிறது.
வெள்ளத்திற்கான 
காரணங்கள்:
1) 26ஆம் தேதியே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் மேலதிகாரிகளிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கச் சொல்லியும், 27,28,29,20 ஆகிய மழையில்லா தேதிகளில் எழவு காத்த கிளி போல ‘மேலிட’ உத்தரவுக்காக காத்திருந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.
2) டிசம்பர் 1ஆம் தேதி மாலை நான்கு மணிக்கு வெறும் 7500கன அடி மட்டுமே திறக்கப்போகிறோம் என செய்தி கொடுத்துவிட்டு, இரவு 10 மணிக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாமல், மக்கள் வெளியேற நேரமும் கொடுக்காமல் திடீரென நொடிக்கு 29000கன அடி நீரை திறந்துவிட்டது.
3) சொல்லாமல் கொள்ளாமல் திறந்துவிட்டதை கொஞ்சம் சீக்கிரமாக 6மணிக்கு திறந்துவிட்டிருந்தால் இரவு 10மணிக்கு வெள்ளம் சூழ்ந்திருக்கும். ஆனால் இரவு 10மணிக்கு திறந்ததால் அதிகாலை 2மணிக்கு வெள்ளம் சூழ்ந்து மக்கள் தப்பிக்க வழியின்றி மாட்டிக்கொண்டார்கள். இவ்வளவு அபாகரமான அளவு நீரை நடு இரவில் திறப்பது என்பது மிகப்பெரிய தவறு.
4) இந்த 29000 கன அடி திறப்பைப் பற்றி பத்திரிக்கைகளுக்கு எந்தத் தகவலும் தரப்படவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டபின் சில அதிகாரிகள் வாய்மொழியாக மட்டுமே இதை டிசம்பர் 2ஆம் தேதி எல்லாம் முடிந்தபின் தெரிவித்திருக்கிறார்கள்.
5) பொதுவாகவே ஏரியில் இருக்கும் நீரை, வெளியேற்றுகிறேன் பேர்வழி என வாளியைக் கவிழ்ப்பதைப் போல கழிப்பது மரபல்ல. அபாயகரமான அளவை எட்டிவிட்டால் வாளியில் துளையிட்டு நீரை வெளியேற்றுவதைப் போல கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றுவதுதான் முறை. இதை நவம்பர் 27,28,29,30ஆம் தேதிகளில் செய்திருந்தால் வெள்ளத்தை கண்டிப்பாக தடுத்திருக்க முடியும் என்றும் இந்த வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல, முழுக்க முழுக்க அரசுதான் இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
6) இதெல்லாம் போக சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்காக அரசு அவசர அவசரமாக சாலைகள் அமைத்தது நினைவிருக்கலாம். அந்த குப்பைகள், கழிவுகள் எல்லாம் அடையாறு கடலில் கலக்கும் வழியை அடைத்துக்கொண்டதும் வெள்ளத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன்.
7) சென்னையை சுற்றியுள்ள நான்கு ஏரிகளையும், அடையாறு, கூவம் நதிப்பாதைகளையும், ஓட்டெரி, பங்கிங்காம் கால்வாய்களையும் ஜூன் ஜூலை மாதத்தில் தூர்வாருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதைச் செய்யாமலோ/சரியாகச் செய்யாமலோ விட்டிருப்பது இன்னொரு முக்கிய காரணம். ஆனால் முறையாக தூர்வாரியதைப் போல கணக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள்.
ஆக, மேலுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும்போது சென்னையையும், சென்னை மக்களையும் மீளாத்துயரில் தள்ளியிருக்கும் வெள்ளம் இயற்கை பேரிடர் அல்ல. கனமழையை அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பயமும் ஊரை அழித்த வெள்ளமாக மாற்றியிருக்கிறது. இப்போது நாம் அனைவரும் ‘ஸ்டிக்கர்’ பணிகள் பற்றி பேசுவதிலும், அதிமுகவை கிண்டலடிக்கும் மீம்கள் செய்வதிலும். எல்லா கட்சிகளும் இப்படித்தான் என உண்மைகளை அறியாமல் பேசுவதும் என பிசியாக இருக்கிறோம். இன்னும் சிலரோ ஏரியில் வீடு கட்டினால் வெள்ளம் வரத்தான் செய்யும், பல்லாண்டு காலம் செய்த தவறு என்றெல்லாம் பேசி அரசின் நிர்வாகமின்மைக்கும், மெத்தனபோக்குக்கும் தங்களை அறியாமலேயே துணை போகின்றார்கள். அரசும் அதையேதான் விரும்புகிறது.
இந்திய ஊடகங்கள் நம்மை கவனிப்பதில்லை என கூக்குரலிட்டதன் பலனாக சென்னை வெள்ளத்தின் காரணங்களை அலசி ஆராய்ந்து அவர்கள் உண்மைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இதை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம்?
எந்த அளவுக்கு நிவாரணப்பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்களோ அதே அளவில் உண்மையை வெளிக்கொணர்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். ஆட்சியாளர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் முறையான சுதந்திரமான விசாரணைக் கமிஷன் வைத்து உண்மையை உலகுக்கு கூறுவது மட்டும்தான் இறந்தவர்களுக்கும், இழந்தவர்களுக்கும் நாம் செய்யும் உண்மையான நிவாரணம் ஆகும்.
-டான் அசோக்
நன்றி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
வயர்ட்
ஃப்ரண்ட்லைன்,



இச்சுவரொட்டிக்கான அர்த்தம் கண்டு பிடிப்பவர்கள் நிச்சயம் அதிமுக தான்.
ஒளிரட்டும் தமிழகம்,மிளிரட்டும் எதிர்காலம்.==================================================================================================================
இன்று,
டிசம்பர்-11.
  • யூனிசெப் நிறுவனம் அமைக்கப்பட்டது(1946)
  • கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி இறந்த தினம்(2004)
"மகாகவி பாரதி"
சுப்பிரமணியன் – பெற்றோர் வைத்த பெயர். சுப்பையா என்பது செல்லப் பெயர். புலமையும் திறமையும் பாரதி என்ற பட்டத்தைச் சூட்டியது. மகாகவி, முறுக்கு மீசைக்காரன், முண்டாசுக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை என ஏராளமான அடைமொழிகள் ஏராளம் !
எட்டயபுரம், பிறந்த ஊர். சென்னை, வாழ வந்த ஊர். புதுச்சேரி, 13 ஆண்டுகள் பதுங்கி இருந்த ஊர். மூன்று வீடுகளும் இன்று நினைவுச் சின்னங்கள்!
சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, இந்தியா, விஜயா, சூரியோதயம், கர்மயோகி, தர்மம் ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும் பாலபாரதா என்ற ஆங்கில இதழிலும் தொடர்ந்து பணியாற்றியவர். 
எட்டயபுரம் ஜமீனைவிட்டு விலகியதும் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராக இரண்டு மாதங்கள் பணியாற்றினார். அன்று அவருக்கு 17 ரூபாய் மாதச் சம்பளம். 
ஏழு வயதிலேயே பாடல்கள் புனையும் ஆற்றல் பெற்றார். 11 வயதில் போட்டிவைத்து பாரதி என்று பட்டம் கொடுத்தார்கள். 
இளசை சுப்பிரமணியம் என்று ஆரம்ப காலத்தில் எழுத ஆரம்பித்த இவர், வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார்!
14 அரை வயதில் ஏழு வயது செல்லம்மாவை மணந்துகொண் டார். இந்தத் தம்பதியருக்கு தங்கம்மாள், சகுந்தலா என்று இரண்டு மகள்கள்!
காலம்னிஸ்ட் எனப்படும் பத்தி எழுத்துக்களை முதன்முதலாகத் தமிழுக்கு இவர்தான் அறிமுகப்படுத்தினார்.
 உ லக விநோதங்கள், பட்டணத்துச் செய்திகள், ரஸத்திரட்டு, தராசு ஆகிய தலைப் புக்களில் நடைச் சித்திரங்களாகத் தொடர் கட்டுரைகள் எழுதினார்!
முதன்முதலாக அரசியல் கார்ட்டூன்களைப் பயன்படுத்தியவரும் பாரதியே. ‘
சித்ராவளி’ என்ற பெயரில் கார்ட்டூன் இதழ் நடத்த அவர் எடுத்த முயற்சி மட்டும் நிறைவேறவில்லை!
பாரதிக்கு பத்திரிகை குரு ‘தி இந்து’ ஜி.சுப்பிரமணிய ஐயர். அரசியல் ஆசான், திலகர். 
தனிமையிரக்கம் என்பது பாரதி பாடிய முதல் பாடல். ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்பது கடைசிப் பாடல். 
. ‘ஸ்வதேச கீதங்கள்’ இவரது முதல் புத்தகம்!
மணியாச்சி சந்திப்பில் கலெக்டர் ஆஷ் கொலை செய்யப்பட்ட நிகழ்வின்போது பாரதியின் மீதும் சந்தேக ரேகை விழுந்தது. வழக்கில் இவரும் விசாரிக்கப்பட்டார்!
கனகலிங்கம், நாகலிங்கம் ஆகிய இருவருக்கும் காயத்ரி மந்திரம் சொல்லிக் கொடுத்து பூணூல் அணிவித்தார். பாரதி பூணூல் அணிய மாட்டார். 
கறுப்பு கோட், தலைப்பாகைதான் அவரது அடையாளம். வேட்டி, சட்டையில் அழுக்கு இருந்தாலும் பார்க்க மாட்டார். கிழிசல் இருந்தாலும் கவலை இல்லை. , சட்டையில் ரோஜா, மல்லிகை என ஒரு பூவைச் சொருகிவைத்திருப்பார்!
தன்னுடைய எழுத்துக்களை 40 தொகுதிகளாகப் பிரித்து புத்தகங்கள் வெளியிடத் திட்ட மிட்டார். ஆளுக்கு 100 ரூபாய் அனுப்பக் கோரிக்கைவைத்தார். யாரும் பணம் அனுப்பவில்லை!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகள் தெரியும். 
தமிழ், தமிழ்நாட்டின் சிறப்பு குறித்துப் பாட்டு எழுதி அனுப்ப மதுரைத் தமிழ்ச் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியானபோது, இவர் எழுதி அனுப்பிய கவிதைதான், ‘செந்தமிழ் நாடெனும்போதினிலே’ அதற்கு அன்று 100 ரூபாய் சன்மானம் கிடைத்தது!
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானைக்கு வெல்லத்தை இவர் கொடுக்க… அது தும்பிக்கையால் தள்ளிவிட்டதில் தலையிலும் மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டவர் ‘தூக்கத்தில் உயிர் பிரிந்தது. சென்னை கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாடு அவரது உடல் புதைக்கப்பட்ட இடம், . 
அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டது  20-க்கும் குறைவானவர்களே.
=====================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?