சென்னை பேரிடர் .முழுக்காரணம் யார்?
மத்திய அரசு அதிகாரிகள் அறிக்கை விபரம்!
சென்னை முழுக்க மழை நீர் புகுந்து மக்களை சீரழிக்க செயலற்ற அரசும்,தங்கள் பணியை செய்யாத பொறுப்பற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகளுமே முழுக்காரணம் என தெரியவந்துள்ளது.அடையாறு மற்றும் நேப்பியர் பாலங்களில் முகத்துவார மணல் அடைப்பை திறந்து விடாததால்தான் கடலில் சென்று கலக்க வேண்டிய வெள்ள நீர் கடலுக்கு செல்ல முடியாமல் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் உத்தரவுப்படி மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் கடலில் நீர் கலக்கும் முகத்துவாரங்களை சரியாக திறந்து விடாததால் நீர் செல்ல முடியாமல் தேங்கி மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது பற்றி மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:
"கூவம் ஆறு கடலில் கலக்கும் நேப்பியர் பாலப்பகுதியை தாண்டி முகத்துவாரப் பகுதி உள்ளது. வழக்கமாக அதிகமாக நீர் திறக்கப்பட்டால் கரைப்பகுதியில் தேங்கும் மணல், குப்பை கழிவுகள் உள்ளிட்ட அடைப்புகள் மலை போல் தேங்கி நிற்கும்.இந்த நிலையில் அந்த முகத்துவாரத்தை தோண்டி நீர் செல்ல வழி ஏற்படுத்தவேண்டும்.
அடையாறிலும் இதேபோன்று முகத்துவாரத்தை திறந்து ஆழப்படுத்தும் பணிகளை நடத்த வேண்டும். அதிகப்படியான நீர் திறக்கப்படும் சில நிமிடங்களுக்கு முன் முகத் துவாரத்தை கடற்படை உதவியுடன் பொதுப்பணித்துறையினர் தோண்டுவது இதுவரை இருந்து வரும் கட்டாய வழக்கம்.
ஆனால் இந்த முறை முகத்துவாரப் பகுதிகளில் தோண்டுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டதால்தான் கடலுக்குள் செல்ல வெண்டிய மழை வெள்ள நீர் சென்னை மாநகருக்குள் புகுந்து தனது அழிவை காட்டி விட்டது.
இந்த வெள்ளம் , மோசமான நிலை ஏற்பட்ட முழுக்காரணம் மழை அதிக அளவு 2015ல் பெய்யும் என்று ஏற்கனவே எச்சரிக்கப்ப்டிருந்தும்,மழை அது போலவே அடித்து ஊற்ற ஆரம்பித்ததும் முகத்துவாரங்களில் தாங்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பொதுப்பணித்துறையினர் செய்யாமல் தூங்க்கி,செயலற்று இருந்ததும் அவர்கள் வேலை வாங்க வேண்டிய தமிழக அரசும் ஓய்வில் செயல்படாமல் இருந்ததும்தான் ஆகும்"என்று அறிவித்துள்ளனர்.இதை மத்திய அரசுக்கு அறிக்கையாகவும் அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
கனமழையால் நீர்வரத்து அதிகரித்த நிலையில் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து முறையே வினாடிக்கு, 80 ஆயிரம் மற்றும், 30 ஆயிரம் கனஅடி நீர் நேற்று முன்தினம் இரவில் திறந்து விடப்பட்டது.இந்த நீர் ஆற்றில் கலந்து கடலுக்குள் செல்ல முடியாமல் நிரம்பியதால் கூவம் மற்றும் அடையாற்று கரைகளிலிருந்து எதிர்த் திசையில் வெளியேறிய நீர், சென்னையின் நகர் பகுதிக்குள் புகுந்து 15 அடி உயரத்திற்கு மேல் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தேங்கியுள்ளது.
பூண்டி ஏரியில் திறக்கப்பட்ட நீர், கூவம் ஆற்றிலிருந்து வெளியேறி ஊருக்குள் பாய்ந்ததால் ஆவடி, அம்பத்துார், சூளைமேடு, எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேத்துப்பட்டு, அமைந்தகரை, அரும்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து விட்டது.
இதேபோல் கூவத்திலிருந்து அதிகமான உபரி நீரில் ஒரு பங்கு பக்கிங்ஹாம் கால்வாய்க்குள்ளும் புகுந்து விட்டது.
அதனால்பேசின்பிரிட்ஜ், சென்ட்ரல் மற்றும் வடசென்னை பகுதிகள் பாதிக்கப்பட்டன.
சென்னை முழுக்க போக்குவரத்தே இல்லாமல் போய் தனித்தீவாகவும் மாறி விட்டது.
சென்னை முழுக்க போக்குவரத்தே இல்லாமல் போய் தனித்தீவாகவும் மாறி விட்டது.
வெள்ள நீர் வடிந்தால் போதும் என்று சென்னை மக்கள் இருந்து விடக் கூடாது.
இனிதான் இந்த மழை வெள்ளத்தில் இறந்த கால்நடைகள் ,எலிகள் ,நாய்கள் வீடு மூழ்கியதால் உள்ளே மாட்டிக்கொண்டு தப்ப முடியாமல் இறந்து போன வயோதிகர்கள் போன்றவர்கள் மூலம் நோய் கிருமிகள் கட்டிக்கிடக்குகும் நீர் மூலம் பரவும்.
அதற்கு இந்த அரசு தயாராக நிவாரணங்களை மேற்கொள்ளாது என்பது அதன் இன்றைய வரைக்குமான செயல்பாடு நிலையை பார்த்தால் தெரிகிறது.
எப்படி தாங்களாகவே ,தன்னார்வலர்கள் மூலம் மழை வெள்ளப்பாதிப்பில் இருந்து மீண்டார்களோ அப்படியே நமக்கு நாமே என்று செயல் பட்டு காப்பற்றிக்கொள்ள வேண்டும் .
நில வேம்பு ,விசக்குடிநீர் என்று குடித்து தங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் வெள்ளம் வடிந்த பின்னர் அதுதான் முக்கியம்.
============================================================================================
இன்று,
டிசம்பர்-04.
உச்ச நீதிமன்ற 43 வது தலைமை நீதிபதி.
உச்ச நீதிமன்றத்தின் 43வது தலைமை நீதிபதியாக, திரத் சிங் தாக்குர், 63, நேற்று பதவியேற்றார்.
இதுவரை தலைமை நீதிபதியாக பணியாற்றிய எச்.எல்.தத்து, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதியாக, டி.எஸ்.தாக்குர் பதவியேற்றார்.
அவருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டி.எஸ்.தாக்குர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இவரது தந்தை, டி.டி.தாக்குர், காஷ்மீர் துணை முதல்வராகவும், ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
கடந்த 1972ல், ஜம்மு - காஷ்மீர் ஐகோர்ட்டில், பிளீடராக பணியைத் துவக்கிய, டி.எஸ்.தாக்குர், 1994ல், கூடுதல் நீதிபதியாகவும், அதன்பின், கர்நாடகா ஐகோர்ட் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
டில்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில ஐகோர்ட்களில் நீதிபதியாக பணியாற்றிய டி.எஸ்.தாக்குர், 2009ல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமையிலான அமர்வு தான், கிரிக்கெட் சூதாட்டம், மேற்கு வங்க சாரதா சிட் பண்ட் ஊழல், உ.பி., முன்னாள் அமைச்சர் பாபு சிங் குஷ்வஹா மீதான ஊழல் வழக்குகளில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள தாக்குரின் பதவிக் காலம், 2017 ஜனவரி, 4 வரை உள்ளது.
===========================================================================================
இருக்கிற தண்ணீர் காணாது என குழாய் உடைந்து வேறா?
=============================================================================================
டிசம்பர்-04.
- இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்
- இந்திய கடற்படை தினம்
- தாய்லாந்து தேசிய சுற்றுசூழல் தினம்
- உலகின் முதலாவது ஞாயிறு இதழான தி அப்சர்வர்-ன் முதலாவது இதழ் வெளிவந்தது(1791)
- இந்தியாவில் சதி முறையை ஒழிக்க கவர்னர் வில்லியம் பெண்டிங் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது(1829)