யாரோடு யார்?
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால், இப்போதே அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் வியூகங்களை வகுத்து வருகின்றன.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியுள்ளனர்.
இதனால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது..
தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆயுட்காலம் வருகிற மே 23ம் தேதியுடன் முடிகிறது.
எனவே, அதற்கு முன்னதாக புதிய சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதனால் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தோடு சேர்த்து கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டன.
தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக, ஆகியவற்றின் முடிவுகள்தான் அரசியலை நிர்ணயிப்பவையாக உள்ளன.
தற்போதைய நிலையில், திமுக கூட்டணியில் புதிய தமிழகம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. அதோடு சேர்த்து சில அரசியல் கட்சிகளை, கூட்டணியில் இணைக்கும் வேலையில் அதன் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதில், தேமுதிக தங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தனது விருப்பத்தை திமுக தலைவர் கருணாநிதி கடந்த 23ம் தேதி அறிவித்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அதிமுக மீது கடுமையான அதிருப்தியில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது தொண்டர்கள் மத்தியில் இந்த அழைப்பு பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தேமுதிக வைகோ வுடனான மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விடக்கூடாது.என்பதற்காக மக்கள் நலக் கூட்டணியுடன் நெருங்கும் விஜயகாந்தை குழப்பத்தில் வைக்க கருணாநிதி வைத்த புள்ளி என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.
தேமுதிக -திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் நிச்சயம் திமுகவுக்கு இணையான தொகுதிகளை கேட்கும்.அதானால் வெற்றி பெற்றாலும் முன் போல் மைனாரிட்டி ஆட்சிதான் அமைக்க முடியும்.அதிலும் விஜயகாந்த் கட்சி திமுக நெருங்கும் அளவுக்கு இடங்க்களைப்பெற்று விட்டால் துணை அல்லது இணை முதல்வர் பதவியை அவர் கண்டிப்பாக கேட்பார் .அதன் பின் ஆட்சி நடந்த மாதிரிதான்.அமையும்,கொக்கும் கூட்டு சேர்ந்து பறந்த கதிதான்.
அதுமட்டுமல்ல திமுகவில் பெரும்பாலான தொண்டர்களை எண்ணம் தற்போதைய ஜெயலலிதா அதிருப்தி அலையை தனக்கு சாதகமாக பயன் படுத்தி வெல்லும் சக்தியும்,தகுதியும் திமுகவிற்கே உள்ளது.அதை பயன் படுத்தி தற்போதுள்ள முஸ்லிம் லீக் ,புதிய தமிழகம் கட்சிகளின் துணையுடன் தேர்தலை சந்தித்தால் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமரலாம் என்பதுதான். அதுதான் ஸ்டாலின் எண்ணம்.
அதானால்தான் திமுக தனித்து போட்டியிடும் என்று அவர் கூறியுள்ளார்.அதற்கு அவர் நமக்கு நாமே மக்கள் சந்திப்பில் கிடைத்த அனுபவம்.மக்கள் ஆதரவு ஆகியவற்றை நேரிலேயே கண்டதுதான்.ஆதன் பின்னான மழை வெள்ளம் நிவாரணப்பணி ஆட்சியாளர்களின் சொதப்பல் நடவடிக்கைகள் ஆளுங்கட்சியினர் அத்து மீறல்கள் கூடுதல் பலமாக திமுகவுக்கு அமையும்.
சென்ற முறை சென்னையின் மொத்த தொகுதிகளையும் அள்ளிய அதிமுகவுக்கு இந்த முறை பெருத்த எதிர்ப்பு அந்த சென்னையிலேயே உண்டாக்கி விட்டது செம்பரபாக்கம்.இதுவும் கூடுதல் பலம்.இதை சரியாக திட்டமிட்டு வாக்குகளாக,தொகுதிகளாக அள்ளுவதில்தான் திமுகவின் எதிர்காலம் உள்ளது.இதையும் ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார்.
வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலை முதன்முறையாக சந்திக்கிறது மக்கள் நலக் கூட்டணி. முதல்முறையாக மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய 4 கட்சிகள் இணைந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. பாண்டவர் அணியாக இருந்து கூட்டணியாக உருவாகும் முன்னரே மனித நேய மக்கள் கட்சி வெளியேறி விட்டது,
இக்கட்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து உள்ளன.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், தங்களுடன் விஜயகாந்த் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். நேரடியாக அவரை சுமார் 70 நிமிடங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போதும் அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அந்த நீண்ட சந்திப்பில், உறுதியான, நம்பிக்கையான வார்த்தைகள் எதையும் விஜயகாந்த் அவர்களிடம் தெரிவிக்கவில்லை. தேமுதிக வைகோ வுடனான மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து விடக்கூடாது.என்பதற்காக மக்கள் நலக் கூட்டணியுடன் நெருங்கும் விஜயகாந்தை குழப்பத்தில் வைக்க கருணாநிதி வைத்த புள்ளிதான் திமுக கூட்டணிக்கு அழைத்தது.அதனால் திமுக எண்ணியபடி விஜயகாந்தும் குழம்பி விட்டார்..
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் 4 பேரும் விஜயகாந்த்தை சுற்றி அமர்ந்து கொண்டு மாறி, மாறி கேள்விகளாக கேட்டு பதில் பெற முயன்றுள்ளனர்.
ஆனால் விஜயகாந்த் தனது வழக்கமான பாணியில் அவர்களுடைய கேள்விகளில் இருந்து பதிலுக்கு தனது வழக்கமான குழப்ப கேள்விகளாக கேட்டு அவர்களை திணறடித்து விட்டாராம்.
அவரிடம் இருந்து சாதகமான பதில் எதையும்பெற முடியாமல் அவர்கள் திரும்பி விட்டார்கள் .
கூட்டம் முடிந்து வெளியில் வந்த தலைவர்கள் 4 பேரும் ஏமாற்றத்துடன் சென்றதாக அந்தக் கட்சிகளின் தொண்டர்கள் கூறுகின்றனர்.
அதனால் அன்று முதல் இன்றுவரை விஜயகாந்த் குறித்த எந்த தகவலையும் அவர்கள் பேசுவதையும் நிறுத்தி விட்டனர்.
அதிமுக வருகிற 31ம் தேதி சென்னையில் செயற்குழு மற்றும் பொதுக் குழுவை கூட்டப்போவதாக அறிவித்துள்ளது.
வழக்கமாக தேர்தலுக்கு முன் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்த தனது நிலைப்பாடுகளை ஜெயலலிதா அறிவிப்பார்.
கடந்த சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் அதேபோலத்தான் அறிவித்தார். இப்போதும் கூட்டணி அமைத்து போட்டியா?
அல்லது தனித்துப் போட்டியா? என்பதை அவர் அறிவிப்பார் என்று அதிமுக வினர் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், அதன் மீது தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், தொண்டர்களை அவர்கள் அரவணைத்து செல்லாமல், பணம் பண்ணுவதிலேயே அவர்கள் குறியாக இருப்பதால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் நிவாரணப் பணிகள் மந்தமாக நடைபெறுகின்றன. பல இடங்களில் நிவாரணப் பணிகளே நடைபெறவில்லை. இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை மக்கள் மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆளும் கட்சி மழை வெள்ள பாதிப்பு நடவடிக்கையில் தோல்வி கண்டதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.
இது பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டன. நமக்கு நாமே பயணத் திட்டம் மூலம் மக்களிடம் திமுகவுக்கு நல்ல பெயர் உருவான நிலையில், மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளில் திமுகவும் அதன் தொண்டர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதேபோல தேமுதிகவும் நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டினர்.
அதோடு எதிர்க்கட்சிகள் அனைத்துமே தீவிரம் காட்டின. இதனால் ஆளும் கட்சி மீது மக்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 3வது அணி அமைத்த பாஜ, இந்த முறையுடன் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முயன்றது.
அது முடியவில்லை.
2016 - எங்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜக தலைவர் தமிழிசை |
தற்போது பழைய கூட்டணியை புதுப்பிக்க முடிவு செய்து விஜயகாந்த், அன்புமணியுடன் தமிழக பாஜ தலைவர்கள் பேசினர். ஆனால், அவர்கள் பிடி கொடுக்கவில்லை.
இதனால் தனித்து விடப்பட்டுள்ள பாஜ அடுத்து என்ன செய்யலாம் என்று கணக்குப் போட்டு வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடந்த சில நாட்களாக தேர்தலுக்கான வேலைகளில் சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டனர்.
கூட்டணிக்கான கூட்டல், கழித்தல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தமிழக அரசியலில் சுறு சுறுப்பையும், விறு விறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எப்படியும் ஜனவரி மாத இறுதியில் கூட்டணி நிலைகள் இறுதியாகும் .
இன்று,
டிசம்பர்-27.
சென்னையை போன்றே இங்கிலாந்தில் வெள்ளம். |
- வடகொரியா அரசியலமைப்பு தினம்
- உலக வங்கி உருவாக்கப்பட்டது(1945)
- தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது(1956)
- பேர்சியா, ஈரான் என்ற பெயரை பெற்றது(1934)
- ஸ்பெயின் ஜனநாயக நாடானது(1978)
==============================================================================================
முகநூல்
கவிதா சொர்ணவல்லி
எழுதியது: செல் முருகன் : via நந்தன் ஸ்ரீதரன்
கொள்ளையடிக்க தயாராகும் 'இலவச இணையம்'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'இலவச அடிப்படை இணையம் (Free Basics)' என்ற சங்கதிக்கு ஆதரவு தருமாறு கேட்டு பேஸ்புக் பரப்புரை செய்கிறது. அதில் நம் நண்பர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருப்பதாக பரப்பப் படுகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'இலவச அடிப்படை இணையம் (Free Basics)' என்ற சங்கதிக்கு ஆதரவு தருமாறு கேட்டு பேஸ்புக் பரப்புரை செய்கிறது. அதில் நம் நண்பர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருப்பதாக பரப்பப் படுகிறது.
இது உங்களின் கருத்து சுதந்திரத்தையும், இலவச தகவல் அறியும் உரிமையையும் பாதிக்கும் செயல் மட்டுமல்ல. உங்களிடமிருந்து பெரிய அளவில் கார்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்கும் திட்டமுமாகும்.
மேம்போக்காக பார்த்தால் அனைவருக்கும் இலவச இணையம் கிடைப்பது போன்ற பரப்புரையாக சமூக அக்கறை உடையதாக தெரியலாம். ஆனால் இதில் அவர்கள் சேர்த்திருக்கும் வார்த்தை மிக மிக உண்ணிப்பாக ஆராயப்பட வேண்டியது.
"Basics" அதாவது 'அடிப்படை.'
அதென்ன அடிப்படை இணையம் (Basic Internet) என்று நீங்கள் கேள்வி கேட்கும் பொழுது தான் கார்ப்பரேட்களின் சதி வெளிப்படும். அதாவது இணையத்தில் கிடைக்கும் ஒரு சில வசதிகளை மட்டுமே இலவசமாக பெறலாம் என்றும் முக்கியமான தகவல்களோ, இணைய அடிப்படையிலான தேவைகளையோ பயன்படுத்திக் கொள்ள வெவ்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று அர்த்தம்.
இதனை முழுமையாக புரிந்து கொள்ள ஒரு உதாரணம் அளிக்கிறேன். நம் அனைவரின் வீட்டிலும் தொலைக்காட்சி இணைப்பு இருக்கும். இப்பொழுது எல்லோருக்கும் விருப்பமான ஒரு சேனலை நீங்கள் பெற வேண்டும் என்றால், அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருக்கிறது அல்லவா?
அது போல (TRAI ஒப்புதல் அளித்துவிட்டால்) இணையத்தின் மிக முக்கியமான அதிகமாக உபயோகிக்கக் கூடிய சேவைகளுக்கு பிற்காலத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். தற்பொழுது உள்ள whatsapp, Calls, video calls போன்றவை மட்டுமல்லாமல், இணைய வங்கி சேவை, இணையத்தில் முக்கிமான தகவல் களஞ்சியங்களைத் தேடவும், உங்களது சிந்தனைகளைப் பதிவிடவும் கூட பிரத்தியேக கட்டணங்கள் வசூலிக்கப்படலாம்.
wikipedia போன்று இலவசத் தகவல்கள் அளிக்க வேண்டும் என்ற குறிக்கோள்கள் உடைய இணைய தளமாக இருந்தாலும் அந்த இணையத்தை பார்ப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஒரு பக்கம் இது இணைய பயனீட்டாளர்களிடம் ஏற்படுத்தப்படும் சிக்கல் என்றால்;
மறுபக்கம் இதே wikipedia நிறுவனம் தனது குறிக்கோளில் விடாபிடியாக, இலவசமாக அளிக்க விரும்பினால், அந்த நிறுவனம் இணைய சேவையை கட்டுபடுத்துபவர்களுக்கு பெறும் தொகை அளிக்க வேண்டி இருக்கும். இது அந்நிறுவனத்தை சீர்குலைக்கச் செய்யும்.
இது மட்டுமல்லாமல் புதிதாக ஒரு இணைய தளம் தொடங்குபவர்களும், அதன் மூலம் தொழில் வாய்ப்பு பெற நினைப்பவர்களும் தங்களது சேவைகளை அனைவருக்கும் சென்று சேறுமாறு உருவாக்க முடியாத நிலை ஏற்படும். இது பெரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் சதி செயலாகும். குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் - பேஸ்புக் போன்ற இன்னொரு நிறுவனம் உருவாவதை தடுக்கும் செயலாகும்.
சுருக்கமாக கூறுவதென்றால் - பிறரின் புகைப்படத்தை பார்ப்பதற்கு இலவசம் என்றும், உங்களது புகைப்படத்தை பதிவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று இருந்தால் எப்படி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
தயவு செய்து இதை தவிர்த்து விடுங்கள் ..
பீப் சிம்புக்கு ஆதரவாக வருபவர்கள்,பேசுபவர்கள் எல்லோரும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிரார்கள்.ராதிகா,சுகாசினி,வரிசையில் புதிய வரவு வீரலட்சுமியின் வீர வரலாறு பற்றி.
தமிழ்க்கனல்
விசாரித்த உண்மை.....
தமிழர் முன்னேற்ற படை என்ற பெயரில் இயங்கும் வீரலட்சுமி என்ற பெண் சிறு சிறு தமிழர் ஆதரவு போராட்டங்களில் ஈடுபட்டதை கண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு நான் வரச்சொல்லி, பழ.நெடுமாறன் ஐயாவிடம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தி வைத்தேன்..
தொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டிவந்தேன்.
தொடர்ந்து நல்லெண்ணத்துடன் நட்பு பாராட்டிவந்தேன்.
இப்போது பீப் பாடல் விவகாரத்தில் ,ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக , சிம்புவை ஆதரித்து எனது குழுவில் அவர் பதிவு போட்டதைக் கண்டு, அதிர்ந்து போய், அவரை திருத்த இக்குழுவினருடன் சேர்ந்து அறிவுரை கூறிப் பார்த்தும் பயனில்லை என தெரியவந்தது...
சென்ற வாரம் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசிய எமி ஜாக்சனை எந்திரன் 2 படத்திலிருந்து நீக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து, அதற்காக இரண்டு பேருந்து வாடகைக்கு எடுக்க வேண்டும்.அதற்காக பத்தாயிரம் ரூபாய் வேண்டும் என என்னிடம் கேட்டு, வங்கி எண் அனுப்பினார்.
நான் யோசித்து அந்த செய்தியை பகிர்ந்தேன்.
நான் யோசித்து அந்த செய்தியை பகிர்ந்தேன்.
இதற்கிடையே, அவர் இதே போல கோரிக்கை வைத்து தமிழர் நலம் பேரியக்க தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் அவர்களிடம் 10,000 க்கு காசோலை பெற்று, அதை பயன்படுத்தி ஒரு பைக் வாங்கிவிட்டதாக தெரிந்துவிட்டது.
மேலும் எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தை சொல்லி பத்தாயிரம் , பத்தாயிரமாக கரந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது..
மேலும் எனது பல நண்பர்களிடம் இதே காரணத்தை சொல்லி பத்தாயிரம் , பத்தாயிரமாக கரந்திருப்பதாகவும் ஐயம் உள்ளது..
மேலும் அவர் சொன்னபடி முற்றுகையும் நடத்தவில்லை. முற்றுகை போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துவிட்டார்.
இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கரப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது.
இது போல சில போராட்டங்களை அறிவித்து, தமிழ் உணர்வாளர்களிடம் பணம் கரப்பதை வாடிக்கையாக கொண்டவர் இவர் என சந்தேகம் எழுகிறது.
சிம்பு வீட்டாரிடம் தொகை பெற்றுக்கொண்டு பீப் பாடலை ஆதரிக்கிறாரோ என கடும் ஐயம் எழுகிறது....
இவரிடம் இனி எச்சரிக்கையாக இருங்க மக்கா.....
இப்படிக்கு
தமிழ் ராஜேந்திரன்
வழக்கறிஞர்
9789433344
தமிழ் ராஜேந்திரன்
வழக்கறிஞர்
9789433344
==========================================================================================