தமிழ் முன்னணி
உலகத்தில் மிகவும் பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.
அதில் உள்ளதாவது:உலகில் பேசப்படும் மொழிகளின் தற்போதைய எண்ணிக்கை சுமார் 6000.இவற்றில் பல வாய் மொழியாக இருந்தாலும் எழுத்து வடிவம் கிடையாது.வெறும் பேச்சு மொழிகளாக குழுவாரியாக பல உள்ளன.
பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பேசப்பட்ட மொழிகள் பல இன்று அழிவை சந்தித்துள்ளன.
பத்து அளவிலான மொழிகள் தான் இன்றும் பேசப்பட்டும்,எழுதப்பட்டும் வருகின்றன.
இந்த மொழிகளில் மிக பழைய மொழிகள் வரிசையை கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன.
அந்த வரிசை.
■ 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Latin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian) இந்தோ – ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
■ 8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian) கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
■ 7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew) இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
■ 6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic) அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
■ 5 வது இடத்தில் சீன மொழி (Chinese) சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
■ 4 வது இடத்தில் கிரீக் (Greek) கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
■ 3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian) ஆஃப்ரோ – ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
■ 2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit) இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது.
ஆனால் இந்த மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.இன்று வெறும் அர்ச்சனை மொழியாகவும்,சில எழுத்துக்களாகவும்தான் உள்ளது.மக்களால் பேசப்படும் மொழியாக இல்லை.
■ 1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil) 5000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மொழி தமிழ் மொழியாகும்.
இன்றுவரை உயிர்ப்புடன் பேச்சு,எழுது,கணினி வரை இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.
========================================================================================
இன்று,
டிசம்பர்-18.
- சர்வதேச இடம்பெயர்வோர் தினம்
- கத்தார் தேசிய தினம்
- நைஜர் குடியரசு தினம்(1958)
- நியூஜெர்ஸி,அமெரிக்காவின் 3வது மாநிலமாக இணைந்தது(1787)
- ஹச்.டி.எம்.எல்., 4.0 வெளியிடப்பட்டது(1997)
ஜோசப் ஸ்டாலின்
பிறந்த தினம்: 18-12-1878
லெனின் மறைவுக்குப் பின், சோவியத் ஒன்றியத்தின் பொதுவுடைமைக் கட்சியின் மத்தியக்குழு பொதுச் செயலாளராக 1922 முதல் 1953 வரை, ஸ்டாலின் தலைவராக விளங்கினார்.
இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது.
அதன் பொருளாதாரம் மேம்பட்டது.அதைத்தான் இந்தியாவில் நேரு ஐந்தாண்டு திட்டங்களாகக் கொண்டுவந்தார்.
ஸ்டாலின் காலத்தில் செய்யப்பட்ட பொருளாதார சீரமைப்புகள் சோவியத் ரஷ்யாவை உலக வல்லரசாக அமெரிக்காவுக்கு மாற்றாகவும் கொண்டுவந்தது.
இவரது ஆட்சியில் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்று, வல்லரசு ஆனது. 1930-களில் இவர் ஏற்படுத்திய அரசியல் தூய்மைபடுத்தல் கொள்கையை பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையாக கொண்டுவரப்பட்டு சோவியத்தை மக்களாட்சியாக,தொழிலாளர் ஆட்சியாககொண்டுவந்தது.
. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கட்டது.
. இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போதே ஸ்டாலினின் உடல்நிலை பாதிக்கட்டது.
இவரின் அதிக புகைப்பிடிக்கும் பழக்கத்தால் தமனிக்கூழ்மைத் தடிப்பு ஏற்பட்டது.
அக்டோபர் 1945-ம் ஆண்டு இவருக்கு இதயத்திசு இறப்பு ஏற்பட்டதால் இறந்தார்.
========================================================================================
தொற்றுநோய்களை விரட்டும்
மகா சுதர்சன மாத்திரை!
தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள்.
சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது.
மலிவு விலை மருந்து
தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்?
அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தொற்றுநோய் ஏற்பட்டாலோ, விஷக் காய்ச்சல் வந்தாலோ என்ன செய்வார்கள்? எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்?
பயப்படத் தேவையில்லை.
இதற்கு மிக மலிவான சித்த மருந்து உள்ளது. தொற்று நோய்கள் தாக்காமலும், விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் வராமலும், டெங்கு, சிக்குன் குன்யாவை விரட்டவும், சளி, இருமல், தும்மலைத் தடுக்க இருக்கவே இருக்கிறது மகா சுதர்சன சித்த மாத்திரை.
இந்த மாத்திரையில் 45 வகை மூலிகைகள் மற்றும் படிகாரம் கலந்துள்ளது.
தீரும் நோய்கள்
அனைத்து வகை காய்ச்சல் (விஷக் காய்ச்சல்,
மர்மக் காய்ச்சல்,
டெங்கு,
சிக்குன் குன்யா,
டைபாய்டு,
மலேரியா,
குளிர் காய்ச்சல்
சளி, இருமல், தும்மல், மூச்சடைப்பு, உடல்வலி,
தலைவலி,
தலை பாரம்,
மூட்டு வலிகள்,
தொற்று நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக,
ஆஸ்துமா,
நாள்பட்ட சர்க்கரை நோய்,
தோல் நோய்கள்,
எய்ட்ஸ்,
புற்று நோய்
ஆகிய அனைத்துக்கும் தீர்வு தரும் ஒரே மருந்து,
இந்த மகா சுதர்சன சித்த மாத்திரை.
மாத்திரை அளவு
ஒரு வயதிலிருந்து ஐந்து வயதுவரை ½ மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.
ஐந்து வயதிலிருந்து 15 வயதுவரை ஒரு மாத்திரை மூன்று வேளை. தேன், பால், வெந்நீரில் கலந்து கொடுக்கலாம்.
15 வயதிலிருந்து எந்த வயதினருக்கும் இரண்டு மாத்திரை மூன்று வேளை.
ஆகாரத்துக்குப் பிறகு வெந்நீரில் சேர்த்துச் சாப்பிடவும்.
நோயின் தீவிரத்துக்கேற்ப ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை தரலாம்.
இதனுடன் மருத்துவரின் ஆலோசனை பெற்று நிலவேம்புக் குடிநீர் எடுத்துக்கொள்ளவும்.
உணவு
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இட்லி, இடியாப்பம், அரிசிக் கஞ்சி, பருப்பு கலந்த சாதம் போன்றவை. தேவைப்பட்டால் ஆங்கில மருந்தைச் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
பலன் அதிகம், பக்க விளைவு தடுக்கப்படும்.
அனைத்துச் சித்த, ஆயுர்வேத மருந்துக் கடைகளில் இந்த மாத்திரை கிடைக்கிறது.
விலை மிக மிகக் குறைவு.
உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வேறு பல நோய்கள் உள்ளவர்கள் தொடர்ந்து மகா சுதர்சன மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவர் ஆலோசனை பெற்று அனைவரும் காலை இரண்டு மாத்திரை, இரவு இரண்டு மாத்திரை உணவுக்குப் பிறகு சாப்பிட்டுவர, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல், சகல நோய்களையும் கட்டுப்படுத்திச் சங்கடங்களை நீக்கும்.
டாக்டர் எஸ். காமராஜ்
சிறப்பு நிலை சித்த மருத்துவர், இ.எஸ்.ஐ. திருச்சி,
========================================================================================
முகநூல்