உலகின் முதல் தமிழ் பைபிள்
தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில், இருந்து திருடு போன புதிய அத்தியாயம் என்னும் பைபிள் லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட உலகின் முதல் பைபிள் என்னும் சிறப்புடையது. பார்த்தோலொமஸ் சீகன் பால்க் என்பவர் தென் இந்தியாவின் சிறந்த கிருத்துவ மதபோதகர். 1682ம் ஆண்டு ஜெர்மன் நாட்டிலுள்ள சாக்சானி என்ற நகரத்தில் பிறந்து பாலே பல்கலைக்கழகத்தில் படித்து லுாதரன் தேவாலயத்தில் கிருத்துவ மதபோதகராக இவர் பணியாற்றினார். டென் மார்க் நாட்டு மன்னரின் வேண்டுகோளை ஏற்று இவரும் கென்ரிக் என்பவரும் தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் டச்சு காலனி வசம் இருந்த பகுதியில் மதபோதகராக பணிபுரிய கடந்த 1706ம் ஆண்டு இந்தியா வந்தார். இங்கு அவரே ஒரு அச்சகத்தை நிறுவி அதில் தமிழ் மொழியில் இந்திய நாட்டு கலாச்சாரம் மற்றும் மதம் சம்மந்தமான படைப்புகளை வெளியிட்டார். இவர் பைபிளின் "புதிய அத்தியாயத்தை" தமிழில் 1715 ம் ஆண்டு மொழி பெயர்த்தார். இவர் 1719 ம் ஆண்டு மறைந்தார். இந்த தமிழ் மொழிபெயர்ப்பான புதிய அத்தியாயம்