சிம்பு "பீ" ப் பாடல்,

இதைப்பற்றி எல்லாம் எழுதி அசிங்கப்பட வேண்டாம் என்றிருந்தாலும் பாடல் விகாரம் தமிழக விவகாரமாக மாற்றப் படுவதையும்.
அதில் உள்ள உள் நோக்கங்களையும் கண்டு சும்மா இருக்க முடியவில்லை.

வேண்டுமென்றே சிம்பு பீப் பாடல் விவகாரத்தை பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

பீப் ஆரம்பத்திலேயே மகளிர் சங்கப்போராட்டம் ஆரம்பித்த போதே சிம்பு மனிதத்தன்மையுடன் "தான் விளையாட்டுக்கப் பாடி அப்போதே ஒதுக்கப்பட்ட பாடல்.


தனக்கு தெரியாமல் நண்பர் யாரோ வெளியிட்டு விட்டார்கள்.அதனைஉடனே நீக்கம் செய்ய செய்கிறேன்,என்று கூறி பொறியை நெருப்பாக்காமல் முடித்திருக்கலாம்.ஆனால் சிம்பு கேட்டாலும் அவர் வாய்க்கொழுப்பு கேட்காதே.

அது"அது எனது பாத் ரூம் பாடல்.கேட்க வேண்டாம் என்றால் போ.

வலை தளத்தில்தானே போர்னோவும் இருக்கிறது.அதை யார் தட்டி கேட்கிறீர்கள்"என்று திமிராகப் பேசி சனியனை வலிய வாங்கிக்கட்டிக் கொண்டது.

குற்றச்சாட்டு மனுக்களைப்பெற்றுக்கொண்ட காவல்துறையோ யுவராஜ் விவகாரத்தில் காட்டிய திறமையான தேடலை கையில் வலையுடன் ஆரம்பித்தது.

ஆட்சி மேலிடமும்,காவல் துறையும்,நடு நிலை தவறா ஊடகங்களும் வெள்ள,பேரிடர் பாதிப்பை மூலையில் போட்டு விட்டு சிம்புவின் பீப்பை பிடித்துக்கொண்டது.

ஐந்து தனிப்படை அமைத்து தேடும் காவல்துறையினர் ராஜேந்தர் வீட்டில் இதுவரை தேடலில் இறங்கவில்லை.அனிருத் கனடாவில் இருக்கிறார்.

பிரச்னையின் முடிவு தெரியாமல் அவர் இந்தியாவுக்கு வராமல் மோடி கொள்கையை கடை பிடிக்கிறார்.

ராஜேந்தர் மகனுக்காக மனுவை,பிணையை பற்றியே பேசுகிறார்.


ஆனால் மகனை காட்ட மாட்டேன் என்கிறார்.
சிம்பு காவல்துறையிடம் சென்றால் என்ன தூக்கிலா போடப்போகிறார்கள். 


இந்நிகழ்வின் முதலிலேயே சிம்பு காவல்துறை முன் சென்றிருந்தால் பினையும் இலகுவாக கிடைத்திருக்கும்,கைதும் இராது.

மாதர் சங்க போராட்டங்களும் வலைதள இடுகைகளும் இருந்திருக்காது.


ஆனால் சிம்பு ஏன் ஓடி ஒளிந்தார்.நிரபயா வழக்கு குற்றவாளிகளே தண்டனையின்றி வெளியே வரும் போது ஒரு பீப்புக்காக சிம்பு தலை மறைவு ஏன்?

இதை தனது வரும் படங்களுக்கு பரபரப்பான விளம்பரம் என்று எண்ணியுள்ளாரா.?

அப்படி என்றால் ஏற்கனவே போய்க்கொண்டிருக்கும் அவர் சந்தை மதிப்பை இது மேலும் குறைக்கத்தான் செய்யும்.செய்துமிருக்கிறது.

சகிலா படம் பார்க்கப்போவது போல சிம்பு படத்துக்கும் வர வேண்டிய நிலையைத்தான் இந்த பர,பரப்பு செய்துள்ளது.

அடுத்து சிம்புவின் அம்மா அவர்களின் குடும்ப குறள் தொலைக்காட்சியில் நடித்த நல்லதங்காள் பானி குறும்படம் அனுதாபத்தை விட எரிச்சலைத்தான் தருகிறது.


மகனை வெளியே கொண்டு வந்து விவகாரத்தை முடிக்காமல்.தமிழ்நாட்டை விட்டுப்போவதாக வரும் வசனங்கள் அனுதாபத்தை தராமல் சிரிப்பை தருகிறது.


ஏற்கனவே கமல்ஹாசன் பேசி பரவலான வசனத்தை ராஜேந்தர் எதற்காக தனது மனைவிக்கு எழுதிக்கொடுத்தார்.

சிம்புக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பார்த்தால் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறார்கள்.

பணக் கஷ்டத்தை  சமாளிக்க பலதாரத்துக்குப்பின் ஒரு தாரமாக 'சித்தி"யடைந்த சதி,பதி கள்.

நீலப்படத்தில் மாட்டிக்கொண்டு நடிகர் மட்டும் மாட்டிக்கொண்டு சிறை செல்ல முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் காப்பாற்றப்பட்டவர்கள்.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதாவது வக்காலத்து வாங்கி பேசுபவர்கள் இப்படி பட்ட தகுதியுள்ளவர்கள்தான் என்பதை சுட்டிக்காட்டத்தான் பழைய விவகாரங்கள்.

இப்படி புலம்ப வேண்டிய,நாட்டை விட்டு ஓட வேண்டிய அவசியம் ஏன்?


சிம்பு யுவராஜ் போல கைலியும்,துண்டையும் கட்டி மாறு வேடத்தில் வந்து காவல்துறையில் வாக்குமூலம்கொடுத்தால் போதுமே.

மாறு வேடம் என்றால் சிம்பு அப்பா ராஜேந்தர் நன்றாகப் போடுவாரே.

தாடி.அதே அடுக்கு மொழி ஆனால் வேட்டி கட்டினால் அண்ணன்,

பேண்ட் போட்டு இன் பண்ணினால் தம்பி என்று வித்தியாசமான மாறு வேடங்களை படங்ககளில்போட்டு மக்களால் கண்டு பிடிக்கமுடியாத அளவு நடித்த ராஜேந்தருக்கு மாறு வேடம் மகனுக்கு போட சொல்லியா தர வேண்டும்.

ஆனால் சிம்பு,ராஜேந்தர் செய்யும் குழப்பங்களை ஜெயலலிதாவும்,காவல் துறையும்,நடுநிலை ஊடகங்களும்,சமூக தளங்களும் நல்ல முறையில் செம்பரபாக்க அவலங்களில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு பயன் படுத்திக்கொண்டுள்ளார்கள்.


பீப் பாட்டின் பயன் அது ஒன்றுதான்.














இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?