வியாழன், 30 செப்டம்பர், 2021

காஷ்மீர் வரலாறு.

 இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புரிமைகளை இந்திய அரசு கடந்த ஆண்டு (2019) ஆகஸ்ட் 5ம் தேதி அகற்றியதோடு ஜம்மு & காஷ்மீர் - லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகவும் அந்த மாநிலத்தைப் பிரித்தது.இதையடுத்து, அப்போது இந்தப் பிரச்சனை ஐ.நா.விலும் விவாதிக்கப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட காஷ்மீரின் சுருக்கமான வரலாற்று நிகழ்வுகளை காஷ்மீரின் நிலை மாற்றியமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை ஒட்டி மேம்படுத்தி மறுபிரசுரம் செய்கிறோம்.

பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியத் துணைக் கண்டம் 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு டொமினியன்களாகவும், 565 தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களாகவும் சுதந்திரம் பெற்றன.

தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களுக்கு மூன்றுவிதமான தேர்வுகள் இருந்தன. ஒன்று அவை இந்தியாவோடு செல்வது என்று முடிவெடுக்கலாம். அல்லது பாகிஸ்தானோடு செல்வதாக முடிவெடுக்கலாம். அல்லது தனித்திருக்கவும் முடிவெடுக்கலாம்.

அத்தகைய தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களில் ஒன்றுதான் காஷ்மீர்.

1846-ல் அமிர்தசரஸ் உடன்படிக்கை மூலம் பிரிட்டனிடம் இருந்து 75 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீரை விலை கொடுத்து வாங்கிய டோக்ரா வம்சத்தினர் அதனை பிரிட்டீஷ் இந்தியாவுக்கு உட்பட்ட ராஜ்ஜியமாக ஆட்சி செய்து வந்தனர்.

இந்தியா விடுதலை பெற்றபோது டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் ஹரி சிங் காஷ்மீரை ஆண்டு வந்தார்.ஹரி சிங்குக்கு எதிரான போராட்டம்

ஆனால், அவரது ராஜ்ஜியத்தின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்தனர். டோக்ரா வம்ச ஆட்சியில் இந்த பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு பங்கோ, மதிப்போ இருக்கவில்லை; மாறாக அவர்கள் துன்பங்களுக்கு ஆளாயினர் என்ற அதிருப்தி இருந்தது. எனவே டோக்ரா வம்ச ஆட்சிக்கு எதிராக ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி போராடி வந்தது. அப்போது காஷ்மீரை டோக்ரா வம்சத்துக்கு விற்ற அமிர்தசரஸ் உடன்படிக்கை கையெழுத்தாகி 100 ஆண்டுகள் ஆகியிருந்தன. காஷ்மீரை டோக்ரா வம்சத்தினருக்கு பிரிட்டாஷார் விற்ற அந்த உடன்படிக்கை செல்லாது என்று கூறி தேசிய மாநாட்டுக் கட்சி போராடிவந்தது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

Hari Singh

அத்துடன் பிரதிநிதித்துவ ஆட்சி ஒன்று அமைந்து அந்த ஆட்சிதான் காஷ்மீரின் தலையெழுத்தைத் தீர்மானிக்கவேண்டும் என்று ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி வலியுறுத்தி வந்தது.

இந்தப் பின்னணியிலும், மன்னர் ஹரி சிங் இந்தியாவுடன் சேருவதா அல்லது பாகிஸ்தானுடன் சேருவதா அல்லது, தனித்திருப்பதா என்பது பற்றி தடுமாற்றத்திலேயே இருந்தார் என்று பல வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஷேக் அப்துல்லா

சூஃபி மரபின் செல்வாக்கு நிலவிய காஷ்மீர் முஸ்லிம்கள் தங்கள் ராஜ்ஜியம் பாகிஸ்தானுடன் செல்வதை விரும்பவில்லை, ஷேக் அப்துல்லாவுக்கும் அப்படி ஒரு விருப்பம் இருக்கவில்லை.இந்து ராஜ்ஜியமான காஷ்மீர், மதச்சார்பற்ற இந்தியாவில் சேர்வதை ஜம்முவில் இருந்த இந்துக்களே விரும்பவில்லை என்பதோடு, அப்படி சேரவேண்டும் என்று கோரியவர்களை இந்து விரோதிகள் என்றும் அவர்கள் வருணித்தனர் என பிரபல காஷ்மீர் விவகார வல்லுநரும், 'காஷ்மீர் டுவார்ட்ஸ் இன்சர்ஜன்சி' என்ற நூலின் ஆசிரியருமான பால்ராஜ் புரி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாகிஸ்தான் பழங்குடிகளின் ஊடுருவல்

இந்நிலையில், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தை (North West Frontier Province) சேர்ந்த பழங்குடிகள் 1947 அக்டோபரில் நவீன ஆயுதங்களோடு காஷ்மீருக்குள் புகுந்தனர். பூஞ்சில் இருந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவது அவர்களது நோக்கம்.

காஷ்மீர் பற்றி இந்தியாவில் பரப்பப்படும் தவறான நம்பிக்கைகள் - ஓர் அலசல்

பாகிஸ்தானிடம் இருந்து இந்தியா போரில் கைப்பற்றிய காஷ்மீர் கிராமம்

அவர்களை எதிர்கொள்ள மன்னர் ஹரிசிங் படைகளால் முடியவில்லை. இந்நிலையில், தமது அரசாட்சியைப் பாதுகாத்துக்கொள்ள இந்தியாவுடன் இணைந்துகொள்ள சம்மதிக்கும் ஆவணத்தில் அவர், பல நிபந்தனைகளோடு 1947 அக்டோபர் 26-ம் தேதி கையெழுத்திட்டார். பாதுகாப்பு, வெளிவிவகாரம், தொலைத் தொடர்பு ஆகியவை மட்டுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், இந்த ராஜ்ஜியத்தின் மீதான தமது இறையான்மையை இந்த உடன்படிக்கையின் எந்த ஷரத்தும் பாதிக்காது என்றும் அவர் அந்த ஆவணத்தில் குறிப்பிட்டார்.

இதையடுத்து இந்தியப் படைகள் ஜம்மு காஷ்மீருக்கு சென்று பழங்குடி ஊடுருவல்காரர்களை விரட்டிக்கொண்டு பாகிஸ்தான் எல்லைவரை சென்றன. அது இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முதல் போருக்கு வழி வகுத்தது.

பட மூலாதாரம்,SOPA IMAGES/GETTY IMAGES

இந்நிலையில், 1947 நவம்பர் 2-ம் தேதி ஆல் இந்தியா ரேடியோவில் பேசிய ஜவஹர்லால் நேரு, அமைதி திரும்பியவுடன் ஜம்மு காஷ்மீர் மக்கள் கருத்தை அறிய சர்வதேச மேற்பார்வையில் கருத்து வாக்கெடுப்பு நடத்தி, அந்த மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களின் எதிர்காலம் முடிவு செய்யப்படும் என்றார்.

ஐ.நா.வுக்கு அளித்த வாக்குறுதி

இதையடுத்து, 1947 டிசம்பர் 31-ம் தேதி பாகிஸ்தானைப் பற்றி ஐ.நா.வுக்கு ஒரு புகார் அனுப்பியது இந்தியா. அந்தப் புகாரில், ஜம்மு காஷ்மீர் மக்களின் கருத்தறிந்து அதற்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது இந்தியா.

அந்த வாக்குறுதி வாசகம்:"ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்திய அரசு ஆதாயம் அடைய முயல்கிறது என்ற தவறான எண்ணத்தை நீக்கும் வகையில், ஊடுருவல்காரர்கள் விரட்டப்பட்டு, சகஜ நிலை திரும்பியவுடன், இந்த மாநிலத்தின் மக்கள் தங்கள் தலை விதியை சுதந்திரமாக முடிவு செய்வார்கள் என்பதை இந்திய அரசு தெளிவாக்க விரும்புகிறது. உலக அளவில் ஏற்கப்பட்ட முறையில் கருத்தறியும் வாக்கெடுப்பு ( 'ரெஃபரண்டம்' அல்லது 'பிளபிசைட்' ) நடத்தப்பட்டு அதன் மூலம் அந்த முடிவு எட்டப்படும். சுதந்திரமான, நியாயமான கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஐ.நா.வின் மேற்பார்வை அவசியம்".

விஷயம் ஐ.நா.வுக்கு சென்றவுடன் அது இந்தியா - பாகிஸ்தான் மோதலை நிறுத்துவதற்கே முதலில் முயன்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவின்படி இந்தியா -பாகிஸ்தான் பற்றிய ஐ.நா. ஆணையம் அமைக்கப்பட்டது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஜவஹர்லால் நேரு

ஐ.நா. தீர்மானம்

1948 ஏப்ரல் 21-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ஐ.நா. தீர்மானம் கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்தும் பேசியது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைய வேண்டுமா, பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா என்பதை அந்த மாநில மக்கள் ஜனநாயக முறையில் சுதந்திரமாக, நியாயமாக நடத்தப்படும் கருத்தறியும் வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யவேண்டும் என்பதை இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே விரும்புவதாக அந்த தீர்மானம் குறிப்பிடுகிறது. அத்துடன் அந்த மாநிலத்தில் இருந்து பழங்குடி ஊடுருவல்காரர்களும், அந்தப் பகுதியின் குடிமக்கள் அல்லாத பாகிஸ்தானியர்களும் அங்கிருந்து வெளியேறுவதை பாகிஸ்தான் உறுதி செய்யவேண்டும், அங்குள்ள வெகுஜன அரசு, சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்குத் தேவையான அளவு குறைவான படைகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற படைகளை இந்தியா விலக்கிக் கொள்ளவேண்டும் என்பவற்றை முன் நிபந்தனைகளாக ஐ.நா. தீர்மானம் குறிப்பிட்டது.

சட்டப்பிரிவு 370 சிறப்புரிமை ரத்து: இனி என்னென்ன நிகழும்?

காஷ்மீர் குறித்த நரேந்திர மோதியின் முடிவை இந்தியர்கள் ஏன் ஆதரிக்கிறார்கள்?

மாநிலத்தின் குடிமக்கள் யாருடன் இணைவது என்பது பற்றி முடிவெடுக்க முழு வாய்ப்பையும், சுதந்திரத்தையும் இரண்டு நாடுகளும் அளிக்கவேண்டும். ஐ.நா. நியமிக்கும் கருத்து வாக்கெடுக்கும் நிர்வாகிக்கு சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்துவதற்கான எல்லா அதிகாரங்களையும் இந்தியா அளிக்கவேண்டும். அதுவரை முக்கிய அரசியல் குழுக்களின் பிரதிநிதிகள் நிர்வாகத்தை நடத்தவேண்டும் என்றும் அந்த நிபந்தனை குறிப்பிட்டது.

ஆனால், பாகிஸ்தான் முழுவதும் வெளியேறவேண்டும். இந்தியாவுக்கு முழு உரிமை இருப்பதால், இந்தியப் படைகளையும் வெளியேறச் சொல்வது ஆக்கிரமிப்பாளரையும், ஆக்கிரமிக்கப்பட்டவர்களையும் சமமமாக நடத்துவது போலாகும் என்று இந்தியா கருதியது. பாகிஸ்தானும் இந்த நிபந்தனையை எதிர்த்தது. அதன் பிறகும் ஐ.நா.வில் பல முறை இதே போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பட மூலாதாரம்,ANADOLU AGENCY/GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐநா பாதுகாப்பு அவை (கோப்புப்படம்)

ஆனால், 1957க்குப் பிறகு இந்தியாவுக்குப் பாதகமான எந்த தீர்மானமும் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் நிறைவேறாதபடி அப்போதைய சோவியத் ஒன்றியம் பார்த்துக்கொண்டது.

பிறகு, தாங்கள் நாடு ஜம்மு காஷ்மீரில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு எந்த சூழ்நிலையிலும் ஒப்புக்கொள்ளாது என்று 1964ல் ஐ.நா.விடம் தெரிவித்தது இந்தியா.

அதன் பிறகும் காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டதுண்டு. ஆனால், குறைந்தது 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டதில்லை.

1980களின் பிற்பகுதியில் காஷ்மீரில் தீவிரவாதம் பெரிதாகத் தலையெடுக்கத் தொடங்கியது. நீண்ட காலப் பகுதிகள் கவர்னர் ஆட்சியின் கீழ் இருந்தன.

எனினும் காஷ்மீர் தொடர்பாக வெகு காலத்துக்குப் பிறகு இந்தியா எடுத்த மிகப்பெரிய கொள்கை முடிவு ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீரின் அரசியல் நிலையை பெரிய அளவில் மாற்றியமைத்தது. அந்த நாளில்தான் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமை அகற்றப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்புரிமையை நீக்க இந்தியா முடிவெடுத்த நிலையில், அதை எதிர்த்து பாகிஸ்தான் எழுதிய புகார் பற்றி மூடிய கூட்டத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 2019 ஆகஸ்ட் 16 அன்று விவாதித்து. எனவே என்ன விவாதிக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகவில்லை.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துக்குப் பின் பேசிய இந்தியாவின் ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் "இந்தியாவின் நடவடிக்கை எதுவும் இந்தியாவுக்கு வெளியே பாதிப்புக்களை ஏற்படுத்தும் வகையில் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியாவின் சட்டமியற்றும் அமைப்புகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக நல்ல ஆட்சி நிர்வாகத்தை மேம்படுத்தவும், சமூக பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கவுமே" என்று குறிப்பிட்டார்.புதன், 29 செப்டம்பர், 2021

பிரதமர் பதில் தரவேண்டும்.

 

"PM- CARES நிதி கொரோனாவுக்கான போராட்டத்தை வலுப்படுத்தும் இலக்கைக் கொண்டது. கொரோனா வைரஸை வீழ்த்த ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவும், தரமான சிகிச்சை கிடைப்பதை விஸ்தரிக்கவும் இந்த நிதி பயன்படும். 

அனைத்துத் தரப்பு மக்களும் PM- CARES-க்கு நண்கொடை அளிக்க நான் வேண்டுகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிகழ்கால சவாலை எதிர்கொள்வோம். எதிர்காலத்தைப் பாதுகாப்போம்"

இப்போது பிரச்சனை இதுவல்ல? PM- CARES நிதி அரசு நிதியல்ல என்று பிரதமரின் அலுவலகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதுதான் பிரச்சனை. பிஎம் கேர்ஸ் நிதியம் குறித்து வழக்கில் கடந்த வாரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், பிஎம் கேர்ஸ் மத்திய அரசுக்கு சொந்தமானது அல்ல எனத் தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்வி்களை எழுப்பி வருகின்றன. அரசு ஊழியர்கள் PM- CARES நிதிக்கு தாராளமாக நிதியளிக்க ஊக்குவிக்கப்பட்டனர், அரசாங்க இணையதளம் வாயிலாக PM- CARES-க்கு விளம்பரம் மூலம் நிதி திரட்டப்படுகிறது. தவிர எல்லா அரசு இணையதளங்களிலும் PM- CARES பக்கத்திற்குச் செல்ல இணைப்பு இருக்கிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை PM- CARES நிதிக்கு அளிக்கச் செய்யப்பட்டனர்.

இத்தனை நடந்தபின்னரும் வெளிப்படைத்தன்மை இல்லையே என்பதுதான் எதிர்க்கட்சிகளின் ஆதங்கமாக உள்ளது.

PM- CARES உருவான கதை:கடந்த 2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். அதன் பின்னர் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி ஜனவரியில் கண்டறியப்பட்டார். மார்ச் மாதம் தேசம் முதல் முழு ஊரங்கை சந்தித்தது. அந்தச் சூழலில் தான் பிரதமர் அவசரகால நிலைமைகளுகாக குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (Prime Minister Citizens Assistance and Relief Emergency Situations Fund -PM CARES) என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் கவுரவத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், அறங்காவலர்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளனர்.

கொரோனா என்ற புதிய பெருந்தொற்று ஏற்படுத்தியிருந்த அச்சம் பொதுமக்களையும், தொழிலதிபர்களையும், பிரபலங்களையும் தாராளமாக நிதியுதவி செய்யத் தூண்டியது. இதனால், தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் ரூ.6500 கோடி நிதி வசூலானது. இதில் ரத்தன் டாடா மட்டுமே ரூ.1500 கோடி நிதி வழங்கினார்.

இயற்கைப் பேரிடர்களை சமாளிக்க, ஏற்கெனவே பிரதமரின் தேசிய நிவாரண நிதி என்ற ஒன்று நீண்டகாலமாக இருக்கிறது. இந்தச் சூழலில் ஏன் PM- CARES என்று தனியாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. 

ஒரே வாரத்தில் ரூ.6500 கோடி நிதி குவிய சிலர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் PM- CARES செயல்பாடுகள் குறித்து தகவல் கோரினர். ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் PM- CARES வராது என்று அதிர்ச்சித் தகவலை அரசு தெரிவித்தது. இதுதான் சர்ச்சையின் ஆரம்பப் புள்ளி. PM- CARES பொது அமைப்பு கிடையாது. கேக் எனப்படும் மத்திய அரசின் தணிக்கை அமைப்பின் அதிகார வரம்பின் கீழ் இது வராது. இது ஒரு தொண்டு அமைப்பு என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குழப்பங்கள் காரணமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் சம்யக் அகர்வால் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர், PM- CARES நிதியின் குழப்பங்களை அரசு களைய வேண்டும் என்று கோரியிருந்தார்.

PM- CARES அரசு அமைப்பு இல்லை என்றால் பிரதமர் படத்தை பயன்படுத்தக்கூடாது, அரசு லோகோவையும் பயன்படுத்தக்கூடாது. நண்கொடை அளிப்பவர்களின் விவரங்களை, தொகையை அவ்வப்போது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றெல்லாம் கோரினார். இதேபோல் இன்னொருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் PM- CARESஐ அரசாங்க அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த வழக்குகள் எல்லாம் விசாரணைக்கு வர, எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சனங்களை முன்வைக்க பிரதமர் அலுவலகம் தரப்பில் PM- CARES ஒரு தொண்டு நிறுவன அறக்கட்டளை போன்றது. இதில் பிரதமர் அலுவலகம் கவுரவ அடிப்படையில்தான் அங்கம் வகிக்கிறது என்று தெரிவித்தது. PM- CARES இணையதளத்திலேயே தணிக்கை அறிக்கைகள் இருக்கின்றன. PM- CARES நிதி அறக்கட்டளை அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு உருவாக்கப்படவில்லை. இது தனிநபர்களிடமிருந்து பெறப்படும் நிதியால் செயல்படுவதால் கேக் இதில் தலையிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

எதிர்கொள்ளப்படும் கேள்விகள்

 இது குறித்து எழுப்பப்படும் கேள்விகள்., 
1. அறக்கட்டளையின் செயல்பாடுகள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லையென்றால் ஏன் பிரதமரின் படம் இணையதளத்தில் இடம்பெற வேண்டும்?
2. இந்த அதிகாரப்பூர்வ பிஆர்ஓவாக எதற்காக பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும்?
3. எதற்காக நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை அளிக்க நிர்பந்திக்கப்பட வேண்டும்?
என்று அடுக்கடுக்காக கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன. இந்தச் சூழலில் PM- CARES சர்ச்சை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் துருப்புச் சீட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை.
ஆகஸ்ட் 09’2020இல் பிஜேபியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் பிஜேபியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சொன்னதாக ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.அதில், இன்று 50,000 வெண்டிலேட்டர்கள் பி.எம்,கேர் நிதியிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்னும் 20,000வெண்டிலேட்டர் விரைவில் கொடுக்கப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

அரசின் அதிகாரப்பூர்வ அமைப்பானசுகாதாரத்துறை 18,000 வெண்டிலேட்டர்கள் தான் கொடுக்கப்பட்டிருக்கிறதென்று சொல்லும்போது, பிஜேயின் தலைவர் ஏன் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிமாக்கி 50,000என்று சொல்ல வேண்டும்.

அப்படியானால் மீதமிருக்கிற 32,000 வெண்டிலேட்டர்கள் எங்கே? இதற்கான பணம் எங்கே? ஏற்கனவே 2.5லட்சம் பெருமானமுள்ள வெண்டிலேட்டர்களை 4 லட்சம் கொடுத்து மோடி அரசு வாங்குவதாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் இப்போது எண்ணிக்கையையும் அதிகப்படுத்துவது எதனால்? அதேபோல மொத்தமே 60,000 வெண்டிலேட்டர்கள் தான் என்று அரசு சொல்கிறது.


ஆனால் பிஜேபியோ 70,000கணக்கு சொல்கிறது. ஆக எப்படிப்பார்த்தாலும் கொரோனா தொற்றை பயன்படுத்தி வெண்டிலேட்டர்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழலை பிஜேபி அரசு செய்திருக்கிறது என்பது மேற்கூறிய அவர்களின் அறிக்கையின் வாயிலாகவே அறியமுடிகிறது.

இதன் உண்மை தன்மையை அறிய பி.எம்.கேர் நிதியை உடனடியாக அரசின் வரம்பிற்குள் கொண்டுவந்து முறையான தணிக்கை செய்து உண்மையை நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

செவ்வாய், 28 செப்டம்பர், 2021

ஆப்கி டிரம்ப் சர்க்கார்

வாஷிங்டனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் பல பேருந்துகளில் வந்து வெள்ளை மாளிகைக்கு வெளியே மோதியை வரவேற்கக் கூடினர், , மோதியின் படம் மற்றும் ஆதரவில் எழுதப்பட்ட பெரிய பேனர்களைத் தாங்கி அவருக்கு ஆதரவாகக் கோஷங்களை எழுப்பினர்.மோதிக்கு எதிராகவும் ஒரு குழு அங்கு கூடி இருந்தது. அவர்கள் மோதி எதிர்ப்பு முழக்கமிட்டனர். சிலர் மோதியே திரும்பிச்செல் என எழுதப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை ஏந்தியபடி குரல் எழுப்பினர்.
ஒரு சந்தர்ப்பத்தில், இந்த இருவேறு குழுக்களும் நேருக்கு நேர் வந்து ஒரு மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. 

அங்கு சரியான நேரத்தில் காவல் துறை வந்து பாதுகாப்புக்கு நின்றது.

டிரம்ப் ஆட்சியில் இருந்த அளவுக்கான வரவேற்பு இனி சாத்தியமில்லை என்பதைப் பல தெளிவான குறியீடுகளால் பைடன் அரசு தெரிவிக்கத் தவறவில்லை.

மோதி இருதரப்பு சந்திப்புக்காக வெள்ளை மாளிகைக்கு வந்தபோது, அதிபர் பைடன் வெளியே வந்து அவரை வரவேற்கவில்லை. மாறாக, மோடி ஓவல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பைடன் அவரைச் சந்தித்தார்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தி சார்ந்த நலன்கள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் அளவுக்கு, இரு நாடுகளுக்கும் ஒருவருக்கொருவர் தேவைப்படும் அளவுக்கும் இன்று புவி சார் அரசியல் நிலை மாறிவிட்டது.

மோதி-பைடன் இரு தரப்பு சந்திப்பில், எல்லாமே மிகவும் அளவிடப்பட்ட முறையில் நடந்தன. ஒவ்வொரு சொல்லும் அளந்து அளந்தே பேசப்பட்டது.

பெருந்தொற்று காரணமாகவும் கொண்டாட்டங்கள் குறைவாகவே இருந்தன. மோதியின் உற்சாகமும் குறைந்தே காணப்பட்டது. பைடனும் மோதிக்கு 'சிறந்த தலைவர்' போன்ற பட்டங்கள் எதுவும் வழங்கவில்லை.அதே நேரத்தில், பைடனுக்கு 'சிறந்த தலைவர்' என்ற பட்டம் வழங்க மோடி முயற்சி செய்ததும் தெரிந்தது.

ஜனநாயக மாண்புகளை வலியுறுத்திய பைடன், கமலா

மாறாக, துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மோதியுடனான சந்திப்பின் போது ஜனநாயக மதிப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

பைடன், மோதியுடனான சந்திப்பில், "மகாத்மா காந்தியின் அகிம்சை, மரியாதை மற்றும் சகிப்புத்தன்மை போன்ற இலட்சியங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவை" என்று கூறினார்.

காந்தியடிகளின் கொள்கைகளை மேற்கோள் காட்டிய மோதி, உலகிற்கு அவர் செய்த நன்மைகளையும் பட்டியலிட்டார்.

ஆனால், அமெரிக்கச் செய்தித்தாள்களில் மோதியின் அமெரிக்க வருகை பற்றி எந்தச் சிறப்புக் குறிப்பும் இல்லை. சில செய்தித்தாள்களில், ஜனநாயக மதிப்புகள் குறித்து மோதிக்கு வழங்கப்பட்ட அறிவுரைகள் என்று தலைப்பிடப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன.லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸில் வெளியான செய்தியின் தலைப்பு 'கமலா ஹாரிஸ் இந்த வரலாற்றுபூர்வ சந்திப்பில் இந்தியாவில் மனித உரிமைகள் தொடர்பான அழுத்தத்தை மோதிக்கு உணர வைத்தார்" என்பதாக இருந்தது.

அதே சமயம், அமெரிக்க இதழான பொலிடிகோவில் வெளியான ஒரு கட்டுரை, இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து, பைடன் நிர்வாகம் கண்டும் காணாமல் இருப்பது பற்றி விவாதிக்கிறது.

இந்தக் கட்டுரையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய வழக்கறிஞர் ஜான் சிஃப்டனின் அறிக்கையும் அடங்கும், அதில் அவர், "இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் குறித்து பைடன் நிர்வாகம் ஏன் அமைதி காக்கிறது" அமெரிக்க அதிகாரிகள் ஏன் கைகளைக் கட்டிக்கொண்டிருக்கின்றனர்? இது என்ன உத்தி? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அமெரிக்கா ஒப்படைத்துள்ள 157 தொல்பொருட்களின் படங்கள் இடம்பெற்ற குறிப்பேட்டை பார்வையிடும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

இதற்கிடையே, மோதியின் அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாகவும் தனித்துவமாகவும் இருந்தது என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்கா தன் வசம் உள்ள 157 இந்திய தொல் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்திருக்கிறது. அந்த பொருட்களுடன் பிரதமர் நரேந்திர மோதி தாயகம் திரும்புவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது.


இந்த பொருட்கள் பெரும்பாலும் 11ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியை சேர்ந்தவை.

கலைப்பொருட்களில் பாதி (71) கலாசாரம் சார்ந்தவையாக இருந்தாலும், மற்ற பாதி இந்து மதம் (60), பெளத்த மதம் (16) மற்றும் சமணம் (9) ஆகியவற்றுடன் தொடர்புடைய சிலைகளையும் கொண்டுள்ளன.

அவை உலோகம், கல் மற்றும் சுடுமண்ணால் தயாரிக்கப்பட்டவை.

வெண்கல சேகரிப்பில் முதன்மையாக லட்சுமி நாராயணன், புத்தர், விஷ்ணு, சிவன் பார்வதி மற்றும் 24 சமண தீர்த்தங்கரர்கள், கண்கலமூர்த்தி, பிராமி மற்றும் நந்திகேசன் ஆகியோரின் புகழ்பெற்ற தோரணைகளின் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் உள்ளன.திங்கள், 27 செப்டம்பர், 2021

பனங்காட்டு படை

 தமிழகத்தில் நடமாடும் நகைக்கடையாக வலம் வந்த ஹரி நாடார் தற்போது கர்நாடகாவில் புகழ்பெற்ற சிறைச்சாலையில் பெட்டிப் பாம்பாக அடங்கி கிடக்கிறார். சாதியை தலையில் தூக்கி சுமந்தவரை நிரந்தர கைதியாக மாற்ற அதே சாதியினரே மும்முரமாக இறங்கி இருப்பதாக சாட்சாத் ஹரி நாடாரே கூறி இருப்பது தான் ஹலைட்.

 
பனங்காட்டுப் படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஹரி நாடார் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், வானூர் தாலுகா மேல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த நான், நாடார்களின் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன்.

தற்போது கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட் spl cc no. 822 of 2021 வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறேன்.

எனக்கும், எனது மனைவி ஷாலினிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நான் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். இந்நிலையில் நான், ஷாலினியிடம் இருந்து முறையாக பிரிந்து வாழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன்


.

அதன்படி சென்னை உயர்நீதிமன்றம் மூன்றாவது குடும்ப நல நீதிமன்றத்தில் HMOP.No.2124/2020 விவாகரத்து வழக்கு பதிவு செய்து விசாரணை முறையாக நடைபெற்று வருகிறது. ஷாலினியும் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.

நான் சிறைக்கு வந்த நாள் முதல் இன்று வரை பனங்காட்டு படை கட்சி தலைமையின் சார்பில், நான் சிறையில் இருந்து வெளிவர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்த ஒரு உதவியும் செய்யவில்லை.

அதற்கு மாறாக நான் சிறையில் இருந்து வெளியே வராமல் தடுப்பதற்காக அனைத்து பல முயற்சிகளை கட்சியின் தலைமை மேற்கொண்டு வருகிறது என்பதனை எனது வழக்கறிஞர் மூலம் நான் அறிவேன்.

அதேவேளையில், நான் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் என்னை கைது செய்த நாள் முதல் இன்று வரை நான் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என எனக்கு நன்கு அறிமுகமான மலேசியாவை சேர்ந்த பெண் தொழிலதிபர் மஞ்சு என்பவர் எனக்கான சட்ட உதவிகளை எனது அனுமதியுடன் முறையாக கவனித்து வருகிறார்.இதற்கிடையே ஷாலினி தங்களிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும், அதில் மஞ்சு என்பவர் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தி அவருடன் வைத்திருப்பதாகவும், என்னை மஞ்சுவிடம் இருந்து மீட்டுத் தரும்படியும் புகார் மனுவில் கூறி இருப்பதாக எனது வழக்கறிஞர் என்னை நேரில் சந்தித்து விளக்கி கூறினார்.

ஷாலினி அவர்கள் அளித்துள்ள புகார் மனுவில் எந்த ஒரு உண்மையும் இல்லை. இந்த விளக்க கடிதத்தை நான் சிறையில் இருந்து தங்களுக்கு அனுப்புகிறேன். ஷாலினி தனக்கு தாய், தந்தை மற்றும் உறவினர்கள் யாருமே கிடையாது. ஒரு அனாதை என்று கூறி என்னை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆவார்.

நானும், ஒரு அனாதை பெண்ணிற்கு வாழ்க்கை கொடுப்பது நமது குலத்திற்கு பெருமை என எண்ணி திருமணம் செய்து கொண்டேன். ஆனால் நாளடைவில் அவருக்கு உறவினர்கள் இருப்பதும் அவரது தாய், தந்தை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தான் இறந்ததும், தனது தந்தை இறப்பிற்கு கூட அவர் செல்லவில்லை என்பதும் எனக்கு தெரிய வந்தது.


எனது பணம், நகை மற்றும் சொத்திற்காக மட்டுமே அவர் என்னிடம் மனைவியாக நடிக்கிறார் என நாளடைவில் நான் தெரிந்து கொண்டேன். அவருடைய நடவடிக்கையில் ஏற்பட்ட பல மாற்றங்களால் அவரை பிரிந்து வாழ முடிவு செய்து, சென்னை உயர் நீதிமன்றம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு போட்டுள்ளேன்.

கடனில் தவிக்கவிட்ட அதிமுக; வெளுத்து வாங்கிய... முதல்வர்!

அந்த வழக்கில் விவாகரத்து எனக்கு கிடைத்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு என்னையும் மலேசியாவை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணையும் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து எனது நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கி வருகிறார்.

தற்போது நான் சிறையில் இருந்து வெளியே வர எனக்கு சட்ட உதவிகள் செய்து வரும் மஞ்சு மீது பொய்யான அபாண்டமான புகார்களை கூறி ஷாலினி அளித்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது ஆகும்.

ான் சட்டத்தை மதித்து நடப்பவன். எனது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் முறையாக நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்க நான் காத்திருக்கிறேன்.

மேலும் என்னை மஞ்சுளா என்பவரோ அல்லது வேறு யாரோ மிரட்டியோ, கட்டாயப்படுத்திய அல்லது யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை என்பதை தெளிவுபட எனது சுய சிந்தனையுடன் இந்த கடிதத்தின் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.

ஷாலினி என்பவரது மொபைல் எண்ணில் இருந்து அவர் யாரிடமெல்லாம் தொடர்பு இருக்கிறார்? என்னவெல்லாம் பேசியிருக்கிறார்? என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர் அளித்துள்ள புகார் பொய்யானது என்பது தெரிய வரும்.

நான் சிறையில் இருந்து வெளி வரக்கூடாது, விவாகரத்து வழக்கில் எனக்கு நீதி கிடைத்து விடக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு பனங்காட்டு படை கட்சியின் தலைமையுடன் கூட்டாக சேர்ந்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த ஷாலினி இந்த புகாரை அளித்துள்ளார்.

நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. என்னை யாரும் மிரட்டியும் வைத்திருக்கவில்லை. ஆகவே, ஷாலினி அளித்துள்ள புகாரை இத்துடன் தங்கள் முடித்து வைக்க வேண்டும்.

மேலும் மஞ்சுவிடம் இந்த புகார் குறித்து விசாரணை நடத்த தேவையில்லை. ஏதாவது என்னிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால் நான் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு ஹரிநாடார் கடிதம் மூலம் கூறியுள்ளார்.

பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று கெத்தா சுத்திகிட்டு திரிந்த ஹரி நாடார் சிறைக்கு போகும் சில மாதங்களுக்கு முன்பாக தான் தமிழக போலீசாரை கடுமையாக மிரட்டி ஹரி நாடார் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

அதில், ‘நீங்கள் போட்டு இருக்குற காக்கி சட்டைக்காக பார்க்கிறேன்.... இல்லாட்டி அறுத்து வீசிடுவேன்’ என ஏகத்துக்கும் வீர வசனம் பேசி இருப்பார். அப்போது அதிமுக ஆட்சியில் இருந்தது.

குருமூர்த்திக்கே கொண்டாட்டமாக இருந்த காலமான அதிமுக ஆட்சியில் ஹரி நாடார் பேச்சை எல்லாம் யாரும் ஒருபொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் எப்போ சிக்குவாரோ என்று எதிர்பார்த்து காத்திருந்த தமிழக போலீசுக்கு ஹரி நாடார் மனைவியே புகார் என்ற பெயரில் உதவி செய்துள்ளார்.

மேலும் ஹரி நாடார் மலைபோல் நம்பிக்கொண்டு இருந்த பனங்காட்டு படை கட்சியும் பக்காவாக பிளான் போட்டு தருவது உறுதியாக தெரிகிறது. இது, ஹரி நாடாருக்கு ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சினங்கொண்ட சிங்கம் செல்லிலேயே சிதைய போவது உறுதி என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

சனி, 25 செப்டம்பர், 2021

வளரும் பில்லியனர்கள்

 

உலகின் செல்வந்த குடும்பங்கள் கடந்த வருடத்தில் 312 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகமாக பெற்றுள்ளன.

கொரோனா தொற்றுநோய்க்கு இடையிலும், ஏராளமான பணப்புழக்கம், உயரும் பங்குச் சந்தைகள் மற்றும் வரி கொள்கைகள் ஆகியவை இந்த செல்வந்த குடும்பங்களின் வருவாய் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன. அதிலும்,

உலகின் 25 பணக்கார குடும்பங்கள் 1.7 டிரில்லியன் டாலர் மதிப்புடையவை. இது ஒரு வருடத்திற்கு முந்தையதை விட 22% அதிகமாகும்.

இதில் குறிப்பிடத்தக்கவையாக சில்லறை விற்பனையாளரான வால்மார்ட் இன்க் நிறுவனத்தில் கிட்டத்தட்ட பாதி பங்குகளை வைத்திருக்கும் வால்டன்ஸ் ஆஃப் ஆர்கன்சாஸ் குடும்பம் (Waltons of Arkansas), தொடர்ந்து நான்காவது ஆண்டாக 238.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. 

பிப்ரவரி முதல் இந்த குடும்பம் 6 பில்லியன் டாலர் பங்குகளை விற்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் அவர்களின் சொத்து மமதிப்பு 23 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் புதிய பெயர்களும் இடம்பிடித்துள்ளன. மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் விமான நிறுவனமான பிரான்சின் டசால்ட்ஸ்-ம், நியூயார்க்கைச் சேர்ந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பாளர் எஸ்டீ லாடர் நிறுவனமும் இடம்பிடித்துள்ளன.

மேலும், இந்தப் பட்டியலில் ஒரு நிறுவனம் வீழ்ச்சி கண்டுள்ளது. அது தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் சாம்ராஜ்யம் தான்.


 கடந்த ஆண்டு இதன் உரிமையாளர் லீ குன்-ஹீ இறந்ததைத் தொடர்ந்து 11 பில்லியன் டாலர் பரம்பரை வரியை செலுத்திய பின்னர் அந்த குடும்பம் வீழ்ச்சி கண்டுவருகிறது.

தரவரிசையில் ஒரு குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் செல்வத்தைச் சேர்த்துள்ளனர்.

பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான ஹெர்ம்ஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 75% அதிகரித்து 111.6 பில்லியன் டாலராக உள்ளது. ஒரு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகின் பணக்கார குடும்பங்களின் சொத்து 22 சதவிகிதத்திற்கு மேல் வளர்ந்துள்ளது.


மேலும், தொற்றுநோய்க்கு மத்தியில் கடந்த ஆண்டு முதன்முறையாக உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இதேபோல், மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 24% அதிகரித்துள்ளது.

கோடீஸ்வரர் வளர்ச்சியில் அமெரிக்கா நம்பர் -1 நாடாக 29 சதவிகிதத்துடன் உள்ளது. இது கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பில்லியனர் செல்வத்தில் 37 சதவிகிதத்துடன் சீனா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்ததாக இருந்தது. வெல்த்-எக்ஸ்-ன் 2021 கோடீஸ்வரர் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 60 சதவிகித கோடீஸ்வரர்கள் சுயமாக உருவானவர்கள் (self-made) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.கோடீஸ்வரர்களின் அதிகரிப்பு முக்கியமாக தொழில்நுட்பம், கப்பல் மற்றும் வாகனத் தொழில்களில் இருந்து உள்ளனர். "சூப்பர் பில்லியனர்கள்" பட்டியலில் அமேசானின் ஜெஃப் பெசோஸ், ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், எல்விஎம்ஹெச் மொய்ட் ஹென்னெஸி தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ஆப்கன் ஹெராயினும். அதானி துறைமுகமும்

குஜராத் மாநிலம் முந்த்ரா துறை முகத்தில் ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான சுமார் 2 ஆயிரத்து 988 கிலோ 21 கிராம் ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் இருந்து ஈரான் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலுள்ள ஒரு முகவரியின் பெயரில் - இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹெராயினை, முந்த்ரா துறைமுகத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் (The Directorate of Revenue Intelligence -DRI) கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், போதைப் பொருள் பார்சலில் குறிப்பிட்டிருந்த விஜயவாடா முகவரிக்குச் சென்று, அங்கு வசித்து வந்த வைஷாலி, சென்னையைச் சேர்ந்த அவரது கணவர் சுதாகர் ஆகியோரை கைது செய்த அதிகாரிகள், டெல்லியில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வழியாக தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், ஒன்றிய பா.ஜ.க அரசானது, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு (Narcotics Control Bureau - NCP) தலைவரை நியமிக்காமல் கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக காலியாக வைத்திருப்பது ஏன்? என்று விவாதங்கள் கிளம்பியுள்ளன.

சுரன்துறைமுக உரிமையாளர்(?) அதானி


இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா பல அடுக்கடுக்கான கேள்விகளை மோடி அரசுக்கு எழுப்பியுள்ளார். “2017-ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புடைய 1500 கிலோ ஹெராயின், 2020-ஆம் ஆண்டு ஜனவரியில் 175 கோடி மதிப்புடைய போதைப் பொருள் ஆகியவை குஜராத் வழியாக கொண்டுசெல்லும் போது பிடிபட்டுள்ளது.

2021-ஆம் ஆண்டிலும் ஏப்ரல் மாதம் 150 கோடி மதிப்புள்ள கஞ்சா பிடிபட்ட நிலையில், தற்போது இரண்டு கன்டெய்னர்களில் வந்த 3 டன் எடையுள்ள போதை மருந்து பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு 9000 கோடி ரூபாய் என்றும், இப்பொழுது பிடிபட்ட போதைப் பொருள் மிகப்பெரிய அளவு என்றும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தலைவர் பதவியை, மோடி அரசு கடந்த 18 மாதங்களாக நிரப்பாமல் உள்ளது ஏன்?

கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான், ஈரான் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு போதை மருந்து கடத்தலுக்கு ‘விருப்பமான பாதையாக’ குஜராத் கடற்கரை மாறியது எப்படி?
அரசாங்கமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் ஏன் இந்த போதை மருந்து சிண்டி கேட்டை உடைக்க முடியவில்லை?

இந்திய அரசு, குஜராத் அரசு மற்றும் என்.சி.பி-யின் மூக்கின் கீழ் இந்தியாவில் எப்படி ஒரு போதைப் பொருள் சிண்டிகேட் செயல்படுகிறது?”

தற்போது பிடிபட்டுள்ள ஹெராயின் போதைப் பொருள் அளவு, பனிப்பாறையின் முனைதானா?

என்.சி.பி போன்ற புலனாய்வு முகமைகள் வேலை செய்கின்றன என்பதைக் காட்டுவதற்காக, 10 சரக்குகளை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் கையும் களவுமாக பிடித்தது போல காட்டுகிறார்களா?” என்று பவன் கெரா கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.

மேலும், “இதனிடையே, ஹெராயின் பிடிபட்ட முந்த்ரா துறைமுகம் அதானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதானி குழுமத்திற்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்று யூகங்கள் வெளியான நிலையில், இதனை அதானி குழுமம் வேகவேகமாக மறுத்துள்ளது.


"ஹெராயின் கடத்தலுடன் எங்கள் குழுமத்தை தொடர்புபடுத்தி பேசுவது உள்நோக்கம் கொண்டது. போதைப் பொருள்களுடன் வந்த கண்டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றைத் திறக்கும் அதிகாரம் அதிகாரிகளுக்குதான் உண்டு. எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை” என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அரசாங்கமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?

குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால் ஏன் இந்த போதை மருந்து சிண்டி கேட்டை உடைக்க முடியவில்லை?

இந்திய அரசு, குஜராத் அரசு மற்றும் என்.சி.பி-யின் மூக்கின் கீழ் இந்தியாவில் எப்படி ஒரு போதைப் பொருள் சிண்டிகேட் செயல்படுகிறது?”

தற்போது பிடிபட்டுள்ள ஹெராயின் போதைப் பொருள் அளவு, பனிப்பாறையின் முனைதானா?

என்.சி.பி போன்ற புலனாய்வு முகமைகள் வேலை செய்கின்றன என்பதைக் காட்டுவதற்காக, 10 சரக்குகளை விட்டுவிட்டு, ஒன்றை மட்டும் கையும் களவுமாக பிடித்தது போல காட்டுகிறார்களா?” என்று பவன் கெரா கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.

இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்துக்கு வந்த மொத்தம் 40 டன் எடையுள்ள கன்டெய்னர்களை வழக்கமான சோதனை நடைமுறைகளின்படி போதைப்பொருள் பரிசோதனைக்ககு அதிகாரிகள் உட்படுத்தினர்.

அந்த கன்டெய்னர்களில் ஆப்கானிஸ்தானில் தயாரிக்கப்பட்ட பகுதியளவு சோப்புக்கல் இருப்பதாக ஆவணங்கள் கூறின. அந்த சரக்குகளின் எடை ஆயிரக்கணக்கில் இருப்பதால் அவற்றின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதன் தயாரிப்பு உள்ளடக்கம் குறித்து மேலதிக பரிசோதனைக்கு நடவடிக்கை எடுத்தனர். அந்த கற்கள் இடம்பெற்ற கன்டெய்னர்கள், குஜராத் காந்தி நகரில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதில் ஒரு கன்டெய்னரில் 1999.579 கிலோ எடையுள்ள ஹெராயின், இரண்டாவது கன்டெய்னரில் 988.64 கிலோ எடையுள்ள ஹெராயின் என மொத்தம் 2,988.219 எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் மறைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த போதை பவுடர்கள், ஆப்கானிஸ்தானில் விளைவிக்கப்பட்ட போதைச்செடிகளில் இருந்து தயாரிக்கப்பட்டவை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அவற்றின் சர்வதே மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் 15 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், தேசிய போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின்படி அந்த சரக்குகளை பறிமுதல் செய்தனர்.

தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது?

இலங்கையில் ஹெராயின் பயன்பாட்டால் 17000க்கும் அதிகமானோர் பாதிப்பு

இதைத்தொடர்ந்து ஆமதாபாத், டெல்லி, சென்னை, காந்திதாம், மாண்டவி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஹெராயின் போதைப்பவுடர்கள் சோப்புக்கற்களுக்குள் மறைந்து வைக்கப்பட்டிருப்பதையும் அவை இடம்பெற்ற கன்டெய்னர்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தது விஜயவாடாவைச் சேர்ந்த நிறுவனம் என்றும் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. அந்த கன்டெய்னர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த கன்டெய்னர்கள் விஜயவாடாவுக்கு அனுப்பவிருந்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாயின. இதை அந்த நகர காவல் ஆணையர் ஸ்ரீநிவாசுலு மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், விஜயவாடா நிறுவனம் பதிவு செய்யப்பட்ட முகவரியில் ஒரு பழைய வீடு மட்டுமே இருந்ததாகவும் அந்த நிறுவனம், அந்த வீட்டில் வசித்த பெண்மணியின் மகள் வைஷாலி பெயரில் இருந்ததும் தெரிய வந்தது. இந்த வைஷாலி மச்சாவரம் சுதாகர் என்ற சென்னை குடியிருப்புவாசியை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்ந்து வருபவர்.

இதை அறிந்து அவர்களின் சென்னை வீட்டுக்குச் சென்ற வருவாய் புலனாய்வுத்துறையினர் வைஷாலி, சுதாகர் இருவரையும் விசாரணைக்காக குஜராத் அழைத்துச் சென்றனர். பிறகு அவர்களை கைது செய்த அதிகாரிகள்,திங்கட்கிழமை குஜராத்தின் புஜ் நகரில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை பத்து நாட்களுக்கு காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி சி.எம். பவார் அனுமதி அளித்துள்ளார். இதன் பிறகே இந்த கைது விவகாரம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தகவலின் முழு விவரமும் தெரிய வந்துள்ளது.

இந்த கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு ஆப்கானியர்கள் தடுத்து வைக்கப்பட்டு வருவாய் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த போதைப்பொருள் மதிப்பை வைத்து, இதில் தொடர்புடைய பணப்பரிவர்த்தனை பல்லாயிரக்கணக்கான கோடியில் இருப்பதால் இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்பது குறித்து இந்திய அமலாக்கத்துறை இயக்குநரகமும் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் அதிகாரிகள் குழு ஏற்கெனவே குஜராத்தில் உள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து இவ்வளவு பெரிய எண்ணிக்கை மற்றும் மதிப்பில் கடத்தப்பட்ட போதைப்பொருளை இந்திய அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் பறிமுதல் செய்திருக்கவில்லை.

ஆப்கானிஸ்தானில் ஆளும் அதிகாரத்தை தாலிபன் கடந்த ஆகஸ்ட் மாதம் கைப்பற்றிய பிறகு அந்த நாட்டில் இருந்து இந்த போதைப்பொருட்கள் இரானுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த போதைப்பொருட்களை இந்தியாவில் அதுவும் விஜயவாடாவில் உள்ள ஒரு டிரேடிங் நிறுவனம் எந்த பின்புலத்தில் இறக்குமதி செய்தது, இதன் பின்னணியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ள என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.


இதற்கிடையே, குஜராத் முந்த்ரா துறைமுகத்தை நடத்தி வரும் அதானி குழுமம், "எங்களுடைய கட்டுப்பாட்டில் துறைமுகம் கையாளப்பட்டாலும், அதில் உள்ள கன்டெய்னர்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதை திறக்கும் அதிகாரமும் அவர்களுக்கே உள்ளது. அதில் எங்களுடைய பணி ஒன்றும் இல்லை. இந்த விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அதானி குழுமத்தை தொடர்புபடுத்தி வெளியிடப்படும் செய்தி தவறானது," என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.

தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல் போல, ஆப்கன் ஹெராயின் இறக்குமதி விவகாரத்தில் ஆப்கானிஸ்தான், இரான், குஜராத் என தொடங்கி விஜயவாடா, சென்னை வரை கண்டுபிடிக்கப்பட்ட தொடர்புகள், இப்போது டெல்லி நோக்கியும் விரிவடைந்துள்ளது. ஆனால், அந்த கன்டெய்னர்கள் டெல்லியில் யாருக்கு அனுப்பப்படுவதாக இருந்தது என்ற விவரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இந்த விவகாரத்தை மேலும் ஆழமாக விசாரித்தால், அது அடிப்படை வணிக வசதி கூட இல்லாத டிரேடிங் நிறுவனத்தை விஜயவாடாவில் நடத்தி வந்த சென்னை தம்பதியுடன் நின்று விடாது என்று தோன்றுகிறது. மேலும், இந்தியா முழுவதும் நடந்து வரும் போதைப்பொருள் வியாபாரம், அதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பதும் கண்டுபிடிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் ஆட்சியில் இருந்தபோது அபின் தயாரிப்பதற்குத் தேவையான பாப்பி செடிகளின் சாகுபடி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் சட்டவிரோத போதை மருந்துகளின் விற்பனை தடுக்கப்பட்டதாகவும் தாலிபன் கூறுகிறது.

ஆனால் தாலிபன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 2001 -ல் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடியில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் விளைச்சல் அதிகரித்துள்ளது.

அபின் பாப்பி செடிகளைப் பதப்படுத்தி ஹெராயின் உட்பட பல போதை மருந்துகளுக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள்.

போதை மற்றும் அது தொடர்பான குற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் அலுவல் அமைப்பின்படி (UNODC), உலகிலேயே அதிக அளவு அபின் உற்பத்தி செய்யப்படும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.

ஆப்கானிஸ்தான் ஆளுகையை கைப்பற்றியுள்ள தாலிபன் செய்தித்தொடர்பாளர் ஸபியுல்லா மாஜிஹித், "நாங்கள் ஆட்சியில்இருந்தபோது எந்தவிதமான போதைமருந்தும் தயாரிக்கப்படவில்லை. அபின் சாகுபடியை மீண்டும் பூஜ்ஜியத்திற்கு கொண்டு வருவோம்" என்றும் இனி போதைப்பொருள் கடத்தல் இருக்காது என்று தெரிவித்தார்.

ஒபியம் சாகுபடி ஆஃப்கனில் 1.2 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறது

முதலில், தாலிபன் ஆட்சியில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக உயர்ந்தது. 1998-ஆம் ஆண்டில் சுமார் 41,000 ஹெக்டேர் இருந்து, 2000-ஆவது ஆண்டில் 64,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் அபின் பாப்பிச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது.

இது பெரும்பாலும் தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் பயிரிடப்பட்டது. இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டது மட்டும் உலகின் சட்டவிரோத அபினின் 39% ஆகும்.

ஆனால் 2000-ஆம் ஆண்டு ஜூலையில் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அபின் பாப்பி சாகுபடியைத் தடை செய்தனர்.

தாலிபன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பாப்பி சாகுபடி முற்றிலுமாக தடை செய்யப்படுவதில் முழு வெற்றி கிடைத்ததாக ஐக்கிய நாடுகள் அவை 2001-ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருக்கிறது.

தாலிபன்கள் அபின் பாப்பி விவசாயத்திற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து, உலகளவில் 2001 மற்றும் 2002ல் அபின் மற்றும் ஹெராயின் பிடிபடுவது கணிசமாகக் குறைந்தது. ஆயினும், அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது.

இதற்கு முன் இருந்த அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் அபின் பாப்பிச் செடிகளின் சாகுபடி கணிசமாக இருந்தது. ஆனால் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில்தான் இது அதிகம்.

உதாரணமாக, தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மற்றும் கந்தஹார் மாகாணங்கள் தாலிபன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, 2018ஆம் ஆண்டில் பாப்பி சாகுபடிக்கு அதிக அளவிலான நிலம் பயன்படுத்தப்பட்டது
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின் இறக்குமதி செய்யப்பட்டு டெல்லிக்கு கடத்தப்பட்டிருப்பதாக புதிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஜூன் மாதம் 25,000 கிலோ எடையுள்ள ஹெராயின் அதாவது ரூ70,000 கோடி மதிப்பிலான ஹெராயின் கண்டெய்னர்கள் இதே முந்த்ரா துறைமுகத்துக்கு ஆந்திராவின் ஆஷி டிரேடிங் நிறுவனத்தின் பெயரால் கொண்டுவரப்பட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியை சேர்ந்த குல்தீப் சிங் என்பவர் பெயரில் இந்த கண்டெய்னர்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. குஜராத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஹெராயின் கண்டெய்னர்களை ராஜஸ்தானின் ஜெயதீப் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான RJ01 GB 8328 என்ற எண் கொண்ட லாரியில் டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
குஜராத்தில் இருந்து டெல்லிக்கு சுமார் 1,176 கி.மீ. சென்ற இந்த ராஜஸ்தான் லாரி எந்த ஒரு சுங்க சாவடியையும் கடந்து செல்லவில்லை என்பது இன்னொரு அதிர்ச்சி தகவல். சினிமாவில்தான் வில்லன்கள் கடத்தல் பொருட்களை புறநகர், கிராமப்புற சாலைகள் வழியாக கடத்தி செல்வார்கள். அதேபாணியில் குஜராத்தில் இருந்து டெல்லிக்கு கிராம புற சாலைகள் மார்க்கமே ரூ75,000 கோடி ஹெராயின் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. தற்போதுவரை டெல்லியில்தான் இந்த ஹெராயின் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன போலீஸ் அதிகாரிகள். தற்போது டெல்லி போலீசார் பதுக்கப்பட்ட ரூ75,000 கோடி ஹெராயினை தேடும் வேட்டையை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை தம்பதி உள்ளிட்ட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்தவர். அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். 
வியாழன், 23 செப்டம்பர், 2021

ஒரே நாளில் தீர்ப்பு!

 

உலகளவில் இந்திய உச்ச நீதிமன்றம் வழக்கு ஏற்று விசாரணை ஒருநாள் மட்டுமே நடத்தி மறுநாளே தீர்ப்பும் வழங்கி சாதனை புரிந்துள்ளது எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

நீட் தேர்வு வழக்குதான் அது.

வழக்கு நீதிபதி அனில் ஆர். தாவே தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வின் முன்பாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்தியாவில் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படுத்தும் இந்திய மருத்துவக் கவுன்சில் 2010 டிசம்பர் 21ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல பல் மருத்துவக் கவுன்சிலும் 2012 மே 31ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஒன்றை நடத்தில் அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் மூலமாகவே மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டுமென அந்த அறிக்கைகள் கூறின.

இந்த அறிக்கைகளை எதிர்த்து வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. இந்த இரு அறிவிப்புகளும் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளின் சேர்க்கை உரிமையைப் பறிப்பதாக குற்றம்சாட்டியது.

அதேபோல, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள், மருத்துவக் கவுன்சிலுக்கு இதுபோன்ற அறிக்கையை விடுவதற்கான அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தி தங்கள் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தொடர்ந்தன. இந்த எல்லா வழக்குகளும் ஒன்றாக விசாரிக்கப்படுவதற்காக உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், விக்ரம்ஜித் சிங், அனில் ஆர். தாவே ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2013 ஜூலை 18ஆம் தேதி ஒரு தீர்ப்பை அளித்தது. இதில் அல்டமாஸ் கபீர், விக்ரம்ஜித் சிங் ஆகியோர் நீட் தேர்வுக்கு எதிராகவும் அனில் ஆர். தாவே நீட்டிற்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கோ பல் மருத்துவக் கவுன்சிலுக்கோ மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைகளை கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை என பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது.

தகுதியில்லாத மாணவர்கள் பெரிய அளவில் நன்கொடை அளித்து, மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதை நீட் தேர்வு தடுக்கும் என நீதிபதி ஆனில் ஆர். தாவே தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மருத்துவ இடங்களை விற்பதை தடுப்பதற்காகவே பொதுவான தகுதித் தேர்வு அவசியம் என அவர் கூறினார்.

ஆனால், தேசிய அளவில் தகுதித் தேர்வுகளை நடத்துவது என்பது மாநிலங்கள், மாநிலங்கள் நடத்தும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை தங்கள் விருப்பங்கள், முன்னுரிமைகளின் அடிப்படையில் மாணவர்களை மருத்துவப் படிப்புகளில் சேர்ப்பதைத் தடுக்கும் என பெரும்பான்மைத் தீர்ப்பு கூறியது.

neet exam

பட மூலாதாரம்,

படக்குறிப்


மேலும் இந்தத் தீர்ப்பின் மூலம் தமிழ்நாடு அரசு இயற்றிய 2007ஆம் ஆண்டின் 3வது சட்டத்தை, மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சிலின் அறிக்கைகள் பாதிக்காது என்றும் கூறியது. "இந்த விதிமுறைகள் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானவை. மேலும் இந்த அறிக்கைகள் டி.எம்.ஏ. பய் ஃபவுண்டேஷன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு முரணாக இருப்பதோடு, மாநிலங்கள் மற்றும் மாநிலங்கள் நடத்தும் பல்கலைக்கழகங்களின் உரிமைகளைப் பறிக்கின்றன" என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியது.

ஆகவே, இந்தத் தீர்ப்பின் மூலம் மருத்துவக் கவுன்சிலும் பல் மருத்துவக் கவுன்சிலும் நீட் தேர்வை வலியுறுத்த முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில் மேல் முறையீடு செய்தது. 2013ல் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்ப்பளித்திருந்த அல்டமாஸ் கபீரும் விக்ரம்ஜித் சிங்கும் அதற்குள் ஓய்வு பெற்றிருந்தனர். இதனால், நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய அனில் ஆர். தாவே தலைமையில் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு உருவாக்கப்பட்டது. இந்த வழக்கு அந்த அமர்வுக்கு மாற்றப்பட்டது. 2016 ஏப்ரல் 11ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

"வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கவனமாக ஆராய்ந்தபோது, அதனை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் இருப்பது தெரியவந்தது. இந்தத் தருணத்தில் அதற்கான காரணங்களை விளக்க வேண்டிய அவசியம் இல்லையென நினைக்கிறோம்.

அந்தத் தீர்ப்பை அளிப்பதற்கு முன்பாக, அமர்வில் இருந்த நீதிபதிகளுக்குள் எந்த கலந்தாய்வும் நடக்கவில்லை. சரியான முன்னுதாரணங்கள் பின்பற்றப்படவில்லை. ஆகவே இந்த மறுசீராய்வு மனுக்கள் ஏற்கப்படுகின்றன. 2013ல் அளிக்கப்பட்ட தீர்ப்பு திரும்பப்பெறப்படுகிறது" எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏழைகளுக்கும் மருத்துவக் கல்வியை அளிப்பதை நோக்கமாகச் சொல்லிக்கொள்ளும் சங்கிகள் நடத்தும் சங்கல்ப் சாரிட்டபிள் ட்ரஸ்ட் என்ற அமைப்பு ஒரு பொது நல மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், "2016-17ல் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நீட் தேர்வை நாடு முழுவதும் நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கோரியது.

வழக்குளும் தீர்ப்புகளும்

பட மூலாதாரம்

இந்த வழக்கு நீதிபதி அனில் ஆர். தாவே தலைமையிலான மூன்று பேர் அடங்கிய அமர்வின் முன்பாக 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீட் தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கருத்துகள் இந்த வழக்கில் கேட்கப்படவில்லை. மேலும், டி.எம்.ஏ. பய் ஃபவுண்டேஷன் தொடர்பான வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில்தான் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. டி.எம்.ஏ. பய் ஃபவுண்டேஷன் வழக்கில் 11 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்கியிருந்தது. அந்த வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை அளிக்கும் பிரிவுகள், சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு அந்தக் கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் போன்றவையெல்லாம் பரிசீலிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக அந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வழக்கில் நீட்டிற்கு ஏதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு, திரும்பப் பெறப்பட்டதால், 2010 டிசம்பர் 21ஆம் தேதி இந்திய மருத்துவக் கவுன்சில் விடுத்த அறிவிப்பு தற்போது செயல்பாட்டில் இருக்கிறது என தீர்ப்பளிக்கப்பட்டது.

இப்படியாக, மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயம் என்ற விதி நடைமுறைக்கு வந்தது.புதன், 22 செப்டம்பர், 2021

நீட் அறிக்கை

நீட் தேர்வுக்கு எதிரான வாதங்கள்

1. நீட் தேர்வு வந்த பிறகு மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வது குறைந்திருக்கிறது.

2. மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை நீட் தேர்வு ஏற்படுத்துகிறது. 12 ஆண்டுகள் படித்த படிப்பை இந்தத் தேர்வு புறக்கணக்கிறது. மேலும், இந்தியாவில் பல்வேறு பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் உள்ள நிலையில்,பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பெரிதும் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.

3. நீட் தேர்வு 'கோச்சிங்' மையங்களை ஊக்குவிக்கிறது. பயிற்சி இல்லாமல் யாரும் தேர்ச்சி பெற முடியாது. லட்சக்கணக்கில் பணம் செலுத்தி இரண்டு - மூன்று ஆண்டுகளாகவது படிக்க வேண்டும்.

4. தனியார் பள்ளிக்கூடங்களில் 11ஆம் வகுப்பிலேயே நீட் கோச்சிங் வகுப்புகளைத் துவங்கி விடுகிறார்கள். வசதியான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரும் தொகையை இதற்காகச் செலவிடுகிறார்கள்.

நீட் அமலாவதற்கு முந்தைய சில ஆண்டுகளைப்போல் அல்லாமல், நீட் வந்தபின் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் குடும்ப வருவாய் உள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ்-இல் சேரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

5. கிராமப்புறங்களில் இருந்து மருத்துவ கல்வியைப் படிப்பவர்கள், படித்து முடித்த பிறகு கிராமப்புறங்களில் பணியாற்ற முன்வருவார்கள்.ஆனால், நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து எம்பிபிஎஸ் முடிப்பவர்கள், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பணியாற்றவே விரும்புவார்கள்.

6. நீட் தேர்வு சமூக நீதி, மனிதத்தன்மை, சமத்துவத்திற்கு எதிரானது. பழங்குடியினத்தினர், ஒடுக்கப்பட்ட வகுப்பினர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேர்வதை நீட் தேர்வு தடுக்கிறது.

7. நீட், மாநில அரசின் உரிமைகளில் தலையிடுகிறது.

8. நீட் தேர்வு அறிமுகமான பிறகு, தமிழ்நாடு மாணவர்களுக்கு மருத்துவ உயர் கல்வியில் இடம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது.

9. நீட் தேர்வுக்குப் பிறகு, வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என போலியான சான்றிதழைப் பெற்று மருத்துவ இடங்களைப் பறிக்கிறார்கள்.

10. 3 மணி நேரத்தில் 180 கேள்விகளுக்குப் பதிலளிப்பது என்பது பெரிய அளவில் பயிற்சி இருந்தால்தான் நடக்கும். பயிற்சி பெறாத கிராமப்புற மாணவர்களால் இதை எதிர்கொள்ளவே முடியாது.


நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில கல்வி, மருத்துவ சேர்க்கை போன்ற பல்வேறு அம்சங்களில் ஏற்பட்ட தாக்கத்தை இந்த அறிக்கை பட்டியலிடுகிறது.

முதலாவதாக, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படிப்பவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. 2011ல் மாநில கல்வி வாரியத்தின் கீழ் 716543 மாணவர்கள் படித்த நிலையில், இது 2017ல் 893262ஆக உயர்ந்தது.

ஆனால், அதற்குப் பிறகு வெகுவாகச் சரிந்து, 2020ல் 779940க்கு வந்துவிட்டது. 2017க்கும் 2020க்கும் இடையில் 113,322 மாணவர்கள் மாநிலக் கல்வி வாரியத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். அதேபோல, தமிழ் வழிப் படிப்பை விட்டுவிட்டு ஆங்கில வழியில் படிப்பது அதிகரித்திருக்கிறது.

நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், தாழ்த்தப்பட்டோர், பளக்குடியின வகுப்புக மாணவர்களின் எண்ணிக்கை.

அதேபோல, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் மாணவர்களில் அறிவியல் பிரிவைத் தேர்வுசெய்யும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்த நிலையில், நீட் தேர்வு அறிமுகமான பிறகு அது குறைந்து வருகிறது. 2017ல் 3,84,407 பேர் அறிவியல் பிரிவில் படித்த நிலையில், 2020ல் இந்த எண்ணிக்கை 280315ஆக குறைந்திருக்கிறது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநில கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவது வெகுவாகக் குறைந்திருக்கிறது.

2010-2011ல் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படித்தவர்களில் 2,332 பேருக்கு மருத்துவ கல்வியில் இடம் கிடைத்தது. சிபிஎஸ்இ மாணவர்கள் 14 பேர்தான் எம்பிபிஎஸ்ஸில் சேர்ந்தார்கள்.

ஆனால், நீட் தேர்வு அறிமுகமான பிறகு இது வெகுவாக மாறியது. 2020-2021ல் சிபிஎஸ்இயில் படித்த 1,604 பேர் எம்பிபிஎஸ் பெற்றார்கள். சிபிஎஸ்இயின் கீழ் படித்தவர்களுக்கு நீட் தேர்வு வெகுவாக உதவியிருப்பதை இந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது.

அதேபோல, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தமிழ் வழியில் படிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக, தமிழ்வழியில் படித்த 19.79 சதவீத மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. ஆனால், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தமிழ் வழியில் படித்த 1.99 சதவீத மாணவர்களுக்கே இடம் கிடைத்துள்ளது.

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் எம்பிபிஎஸ் இடங்களைப் பெற்றனர். 2016- 17ல் அரசுக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 65.17 % இடங்களைக் கிராமப்புற மாணவர்களே பெற்றனர். ஆனால், 2020 - 2021ல் இது 49.91 % ஆகக் குறைந்துள்ளது.


முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேருவதையும் இந்தத் தேர்வு வெகுவாகக் குறைத்திருக்கிறது. 2016 - 17ல் மருத்துவ கல்வி இடங்களைப் பெற்றவர்களில் 24.94 சதவீதம் பேர் முதல் தலைமுறை மாணவர்கள். ஆனால், 2020 - 21ல் இந்த சதவீதம் 14.46ஆக குறைந்திருக்கிறது.
2010 - 11ல் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்தவர்களில் 92.85 % பேர் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள். ஆனால், 2020-21ல் இது 28.58 %ஆக குறைந்துள்ளது. மீண்டும் மீண்டும் தேர்வெழுதியவர்களே 71.42 % இடங்களைப் பிடித்துள்ளனர்.

ஏ.கே. ராஜன் குழு சில முடிவுகளை முன்வைத்தது.

1. நீட் தேர்வானது, பலதரப்பட்ட சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை மருத்துவக் கல்வியில் குலைக்கிறது. சமூகத்தில் வசதியான பிரிவினருக்கு சாதகமாக இருப்பதோடு, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் மருத்துவக் கனவைக் குலைக்கிறது. தமிழ் வழியில் படித்தோர், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள், 2.5 லட்ச ரூபாய் வருமானத்திற்கு கீழே உள்ளவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தினர், பழங்குடியினர் ஆகியோர் இந்தத் தேர்வால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

2. நீட் தேர்வானது, மீண்டும், மீண்டும் தேர்வழுதுபவர்களுக்கே சாதகமானதாக இருக்கிறது. முதல் முறையாக தேர்வு எழுதுவோருக்கு பாதகமாக இருக்கிறது.

3. நீட் தேர்வு மாணவர்களிடம் பெரும் அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்குகிறது. இந்தத் தேர்வில் நடக்கும் முறைகேடுகள், மாணவர்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்துகின்றன.

4. தரமான மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை நீட் தேர்வு உறுதிசெய்யவில்லை. மாறாக குறைவான திறனுள்ள மாணவர்கள் எம்பிபிஎஸ் இடங்களைப் பெறுவதையே உறுதிசெய்கிறது. மாறாக, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் சேர்க்கையை நடத்தும்போது தரமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பெறுகிறார்கள்.

நீட் தேர்வுக்கு முன்னும் பின்னும் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர விண்ணப்பித்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டும் தரவுகள்.


5. மருத்துவ படிப்பில் முதுநிலை இடங்களில் 50 சதவீதத்தையும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பரிவில் 100 சதவீதத்தையும் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு அளிப்பதால், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இது மாநிலத்தின் மருத்துவக் கட்டமைப்பை குலைக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாததால், இது சமூக நீதிக்கு எதிரானது.

6. இந்த பாரபட்சமான நீட் தேர்வினால், மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிப்பவர்கள் கல்வி முறை மீதே நம்பிக்கை இழக்கிறார்கள்.

நீட் தேர்வு வந்த பிறகு, பல முறை தேர்வு எழுதி எம்பிபிஎஸ் இடங்களைக் கைப்பற்றுவதும் வெகுவாக அதிகரித்திருக்கிறது.
7. நீட் தேர்வுக்கு முந்தைய மருத்துவர்கள், பிந்தைய மருத்துவர்கள் என பிரித்துப் பார்த்தால், நீட் தேர்வுக்குப் பிந்தைய மருத்துவர்கள் அனைவரும் வசதியான, நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அடிமட்ட சமூகத்தின் பல்வேறு விதமான வித்தியாசங்கள் குறித்த புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். இதனை துவக்கத்திலேயே சரிசெய்யா விட்டால், வருங்காலத்தில் இது மிக மோசமாக எதிரொலிக்கும்.

ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைகள்

நீட் தேர்வு தொடர்பான பிரச்னையை சரி செய்ய ஏ.கே. ராஜன் குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

1. நீட் தேர்வை அகற்றுவதற்கான சட்டரீதியான வழிகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.

2. 2007ஆம் ஆண்டின் 3வது சட்டத்தைப் போல, மருத்துவக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நீக்குவதற்கான ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

3. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்கைக்கு 12ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். பல்வேறு வாரியங்களைச் சேர்ந்த மாணவர்கள் போட்டியிடுவதால், அதனை சமப்படுத்த ஒரு முறையைக் கையாளலாம்.

4. மாணவர்களின் சமூக, பொருளாதார பின்னணி அவர்களின் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வெகுவாகப் பாதிக்கிறது. ஆகவே, அவற்றை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். அவர்களை மதிப்பிட "Adversity Score" என்ற முறையைப் பின்பற்ற வேண்டும்.

5. 12ஆம் வகுப்புவரை எல்லா மட்டங்களிலும் மனப்பாடம் செய்து, பயிற்றுவித்து தேர்வடைவதை ஊக்குவிக்காமல், கற்பதை ஊக்குவிக்க வேண்டும்.

6. எல்லா நிகர்நிலை பல்கலைக்கழகங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

-----------------------------------------------------------ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

ஒவ்வொரு அடியும் அதிரடி

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசியலில் ஒப்பற்ற தலைவராகவும், நாட்டிலேயே ஒரு முன்மாதிரி முதலமைச்சராகவும் திகழ்கிறார்” என்று கேரளத்தின் முன்னணித் தொலைக்காட்சி “மனோரமா நியூஸ்” புகழாரம் சூட்டியுள்ளது.

‘மலையாள மனோரமா’ கேரளத்தின் தலையாய நாளிதழ். ‘மனோரமா நியூஸ்’ கேரளத்தின் முதன்மையான செய்தித் தொலைக்காட்சிகளுள் ஒன்று. ‘மனோரமா நியூஸ்’ : ஸ்டாலின் அரசு' என்கிற பொருளில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதன் பிரதானப் பகுதிகள் வருமாறு :

எம்.கே.ஸ்டாலினின் அரசு 100 நாட்களைக் கடந்துவிட்டது. பாராட்டுகள் குவிகின்றன. மொத்த இந்தியாவும் தமிழகத்தைக் கவனிக்கிறது. இதுவரை தமிழகம் கண்டிராத அரசியல் நாகரிகத்துடன் அவரது ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சியும், திட்டங்களும் மக்கள் தொடர்புத் தந்திரங்களா? என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?முதல் 100 நாட்களைத் தேனிலவு என்பார்கள். அது ஒரு ஆட்சியை மதிப்பீடு செய்யப் போதுமானதில்லை என்றாலும் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று நெருங்கிப் பார்க்கலாம். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்... என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டபிறகு அவர் நேரே தான் ஓடியாடி வளர்ந்த கோபாலபுரம் வீட்டுக்குச் சென்றார். இங்கேயிருந்துதான் தனது 14வது வயதில் தி.மு.க.வின் இளைஞர் அணியைத் துவக்கினார் ஸ்டாலின். தாயாரிடம் ஆசி பெற்றார். அண்டை வீட்டாரின் நலம் விசாரித்தார். கட்சியிலும், அரசியலிலும் கரடுமுரடான பாதைகளைக் கடந்துவந்த போதும் தனது ஒவ்வோர் அடியையும் அவர் நினைவு வைத்திருக்கிறார்.

முதல் நாளே வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கினார்!

தனது தேர்தல் பரப்புரையின்போது நமது மனோரமா நியூஸுக்கு மு.க.ஸ்டாலின் ஒரு நேர்காணல் வழங்கினார். தேர்தல் அறிக்கையை நடப்பில் ஆக்குவதற்காகத்தான் தயாரித்திருக்கிறோம் என்றார்.

கோபாலபுரத்திலிருந்து அவர் கோட்டைக்குச் சென்றார். முதல்நாளே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் துவங்கினார். பாலின் விலையை லிட்டருக்கு மூன்று ரூயாய் குறைத்தார். இது நடுத்தர வர்க்க மக்களுக்கு வரமாய் அமைந்தது. பெண்களுக்குப் பேருந்துப் பயணத்தை இலவசமாக்கினார். இந்த அறிவிப்பு பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள தமிழகத்தில் பெண்களைச் சுதந்திரமானவர்கள் ஆக்கியது. எல்லோருக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கினார். கட்சிக்கு அப்பாற்பட்டவர் ஸ்டாலின் என்பது ஒவ்வொரு நாளும் உறுதியாகிக் கொண்டிருக்கிறது.

முதல் நாளே சில தி.மு.க தொண்டர்கள் அம்மா உணவகத்தைச் சூறையாடிய சம்பவம் நடந்தது. இதையறிந்த முதல்வர் உடன் தொகுதி எம்.எல்.ஏ.யை அனுப்பினார். மீண்டும் பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டன. ஊழியர்களிடம் மன்னிப்புக் கோரப்பட்டது. வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதிசயங்களும் நடந்தன!

ஆட்சி மாறியதும் முந்தைய தி.மு.க அரசு உருவாக்கிய புதிய சட்டசபைக் கட்டிடத்தை மருத்துவமனை ஆக்கியது அ.தி.மு.க. அதே தமிழகத்தில்தான் இப்படியான அதிசயங்களும் நடந்தன.

ஸ்டாலின் பதவியேற்றபோது கோவிட் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. நாளொன்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,000ஆக இருந்தது. இதுமேலும் அதிகரிக்கும் என்ற ஆருடங்களைப் பொய்ஆக்கினார் ஸ்டாலின். வல்லுனர்கள் அளித்த ஆலோசனைகளின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது பாதிப்பு 1500 ஆகக் குறைந்திருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்த காலம் போய் இப்போது எல்லா மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் போதுமான கையிருப்பு இருக்கிறது. 230 மெட்ரிக் டன் கையிருப்பு இருந்த இடத்தில் இப்போது 1000 மெட்ரிக் டன் கையிருப்பு இருக்கிறது என்கிறார் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தடுப்பூசி செலுத்துவதிலும் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகி இருக்கிறது தமிழ்நாடு. கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதியைப் பயன்படுத்திப் பல தனியார் மருத்துவமனைகளில் மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை 3,20,00,000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மறைந்தபோது முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் இடையில் அமர்ந்து ஆறுதல் சொன்னார் ஸ்டாலின். அதேபோல பன்னீர்செல்வத்தின் துணைவியார் மறைந்தபோது, அவரது கரம் பற்றி ஆறுதல் சொன்னார்.

எதிர்க்கட்சியினரிடம் நாகரீகமாக நடந்து கொள்ளும் அதே வேளையில் அவர்களது ஊழலையும், குற்றச்செயல்களையும் அவர் சகித்துக்கொள்வதில்லை. பழனிச்சாமிக்கு தொடர்பு உண்டு என்று சந்தேகப்படும் கொடநாடு கொலை வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மீது ஊழல் விசாரணை இறுகுகிறது. ஆறு முன்னாள் அமைச்சர்கள் ஊழல் ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். அமித்ஷாவைக் கைது செய்த கந்தசாமி ஐ.பி.எஸ். ஊழல் ஒழிப்புத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஒரு மலையாளத் தொலைக்காட்சியில் பி.கே.விஸ்வநாதன் எனும் அரசியல் தலைவர், ஸ்டாலினின் 100 நாள் சாதனைகளைப் பட்டியலிட்டார். அந்தக் காணொலி வைரலானது.

ஆன்மீகத் துறையிலும் ஸ்டாலின் சாதனை!

ஆன்மீகத் துறையிலும் ஸ்டாலினின் சாதனைகள் குறிப்பிடத்தக்கன. கோடிக் கணக்கான மதிப்புள்ள கோவில் சொத்துக்களை மீட்டெடுத்திருக்கிறார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றியுள்ளார். பெண் ஓதுவார்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அகில இந்திய அளவில் கவனிக்கப்படுகிறார். அயல்நாடுகளில் நிதித் துறையில் உயர்ந்த பதவிகளை வகித்தவர். தமிழ்நாட்டின் நிதிநிலையை உயர்த்துவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். மதுக்கடைகளை தமிழ்நாட்டில் மட்டும் தடை செய்வது நடைமுறை சாத்தியமல்ல என்றும் பி.டி.ஆர். தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் ஆகியோரைப் போல் பி.ஜே.பிக்கு எதிரான முதல்வராக இருந்த போதும், ஒன்றிய அரசோடு இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கிறார் ஸ்டாலின். கூடுதல் தடுப்பூசி பெறுவதிலும் வைரசின் மரபுக் கட்டமைப்பைக் கண்டறியும் சோதனைச் சாலைகளை நிறுவுவதிலும் அவர் பிரதமரைச் சந்தித்து உதவி கோருகிறார். அதே நேரத்தில் தி.மு.க.வின் ஆதாரக்கொள்கைகளில் அவர் எந்தச் சமரசமும் செய்து கொள்வதில்லை. இந்தி எதிர்ப்பில் இப்போதும் முன்னணியில் நிற்கிறது தி.மு.க. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கும் ‘நீட்’ தேர்வுக்கும் எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றியது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும், காவிரிப் பிரச்சினையிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இராது என்று உறுதிபடச் சொல்லி இருக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

இந்தக் காட்சிகளுக்கிடையில் அ.தி.மு.க. முகாமில் குழப்பம் நிலவுகிறது. பழனிச்சாமி, பன்னீர்செல்வம் இடையே தலைமையைக் கைப்பற்ற போட்டி நடைபெறுகிறது. முன்னாள் ஊழல் அமைச்சர்கள் மீது வழக்குகள் அணி வகுக்கப்போகின்றன. கலங்கிய குளத்தில் மீன் பிடிக்கத் தயாராகிறார் சசிகலா. தேர்தலுக்குப் பிறகு சினிமா வசனம் பேசுவது போலல்ல அரசியல் என்பது கமலஹாசனுக்குப் புரிந்திருக்கும்.

ஆக, தமிழக அரசியலில் மு.க.ஸ்டாலின் ஒப்பற்ற தலைவராகத் திகழ்கிறார். கேரள மக்களிடையே ஸ்டாலின் ஒரு நட்சத்திரமாய் உயர்ந்து வருகிறார். இவ்வாறு ‘மலையாள மனோரமா நியூஸ்’ கூறியுள்ளது.சனி, 18 செப்டம்பர், 2021

பெரியார்143

 ஈரோட்டில் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி-யை மதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கும் எதிராகத் திருப்பியது எது?

குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ நேர்ந்த பல்லாயிரம் பெண்களின் துயரம் அவரை குழந்தைப் பிராயத்திலேயே கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர் மறுமணம் செய்வித்தார்.

நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவரது மனதில் நீங்கா வடுவை உண்டாக்கியது.

பிறகு அவர் தமது துறவு எண்ணத்தைக் கைவிட்டு ஊருக்குத் திரும்பினார். இயல்பாகவே இருந்த ஆர்வத்தினால் அவர் பல பொதுப் பணிகளை சொந்த ஊரான ஈரோட்டில் மேற்கொண்டார்.

காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார்.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தாம் வகித்த நகரமன்றத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான பொதுப் பதவிகளைத் துறந்தார்.

தமது மனைவி நாகம்மையையும், சகோதரி பாலாம்பாளையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தார் பெரியார். அவர்கள் இருவரும் தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என்று, தமது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்தார் பெரியார்.

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இந்நிலையில், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் நடமாட தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த போராட்டத் தலைவர்கள் பெரியாருக்கு கடிதம் எழுதி போராட்டத்தை தலைமையேற்று நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெரியார் காந்தியின் அறிவுரையையும் மீறி தமது கட்சிப் பதவியைத் துறந்து திருவிதாங்கூர் விரைந்தார்.

திருவிதாங்கூர் மகாராஜா பெரியாரின் நண்பர் என்பதால் அவர் அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார். ஆனால், தாம் அரசை எதிர்த்துப் போராட வந்திருப்பதால் அரசு மரியாதையை ஏற்க முடியாது என்று மறுத்த பெரியார் தொடர்ந்து வைக்கத்தில் போராட்டம் நடத்திக் கைதானார். இதையடுத்து அவரது அவரது மனைவி நாகம்மை பெண்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடர்ந்தார்.

போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே அவர் ஊருக்குத் திரும்பினார். இதனால், வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

இதனிடையே சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோற்றுப் போனார் பெரியார்.

இந்நிலையில், சேரன்மாதேவி என்ற இடத்தில் காங்கிரஸ் மானியத்தில் வ.வே.சுப்ரமணிய ஐயர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலப் பள்ளியில் பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பறிமாறப்படுவதை அவர் எதிர்த்தார்.

Periyar

பட மூலாதாரம்

படக்குறிப்பு


ஆனால், வ.வே.சு. ஐயர் தமது போக்கை மாற்றிக் கொள்ள மறுத்ததுடன், காங்கிரசும் அந்த பள்ளிக்கான மானியத்தை நிறுத்த மறுத்தது.

இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். வைதீக மதத்தையும், கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். பிராமணர் அல்லாதவர்கள் தம்மையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.

இந்த நிலையில், 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்று பரவலாக அறியப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராமணர்கள் ஆரிய இனத்தில் தோன்றியவர்கள் என்றும் பிராமணர் அல்லாதோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வாதிட்ட பெரியார் திராவிடர்களை மானமும் அறிவும் மிக்கவர்களாக மாற்றுவதற்காகத் தாம் பாடுபடுவதாக கூறினார்.

குழந்தை திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, தமது துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒத்துவராத திருமணத்தை முறித்துக் கொள்ளும் உரிமை ஆகியவை வேண்டும் என்று வாதிட்ட பெரியார், பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக இருக்கத் தேவையில்லை என்று வாதிட்டார். அவரது பெண்ணுரிமைக் கருத்துகள் இன்றைய நிலையில் கூட புரட்சிகரமாகத் தோன்றக்கூடியவை.

பெரியார்

சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர். இந்தியா முழுவதும் ஒரே நாடாக ஆவதை எதிர்த்த அவர் தென்னிந்தியப் பகுதிகள் இணைந்து திராவிட நாடாக ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தார்.

ஆனால், தமிழ்நாடு தவிர்த்த பிற பகுதிகளில் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கத்தை மாற்றினார்.

இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வாதிட்ட, பெண்ணுரிமைக்காக வாதிட்ட, மூடப் பழக்கங்களை எதிர்த்த, மதத்தை எதிர்த்த பெரியார் தமது கருத்துகள் பரவ தமிழ்நாடு முழுவதும் நீண்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.இவர்

தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டார் அவர்.

ரஷியாவுக்குப் பயணம் சென்று வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. 

உலக கம்யூனிஸ்டுகளின் முதல் ஆவணமான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்ற புத்தகத்தை தமிழில் முதன் முதலில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தவர் பெரியார். 

தமது கருத்துகளைப் பரப்ப 'குடியரசு' முதற்கொண்டு பல பத்திரிகைகளையும் நடத்தியவர் பெரியார்.

தம்மைவிட வயதில் மிகவும் குறைந்தவரான மணியம்மையை அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர். அந்தக் கட்சியும் அதிலிருந்து பிரிந்த அண்ணா திமுகவும் தமிழ்நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வருகின்றன.

சுயமரியாதை, மத மறுப்பு, மூட நம்பிக்கை மறுப்பு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, திராவிடக் கொள்கை, பிராமணர் எதிர்ப்பு போன்ற தாம் நம்பிய பல கொள்கைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர் பெரியார். இந்தப் போராட்டத்தில் அவரைப் பாராட்டியவர்களும், எதிர்த்தவர்களும் உண்டு.

பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் அவரது கொள்கையாக இருந்தபோதும் அதை தனிப்பட்ட நபர்களை வெறுப்பதற்கான வழிகளாக அவர் மாற்றிக்கொண்டதில்லை. பிராமணராக இருந்தபோதிலும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரியுடன் பெரியார் கடைசிவரை நல்ல நட்பைப் பேணினார். கடவுள் நம்பிக்கை உடைய குன்றக்குடி அடிகளார் போன்றவர்களோடும் பெரியாருக்கு நல்ல நட்பு நிலவியது.

இன்றளவும் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு தமிழகத்தில் ஒரு தனி மகத்துவம் இருக்கிறது என்றால், அது பெரியார் ஏற்படுத்திக் கொடுத்தது என்றே பார்க்கப்படுகிறது.

திராவிடம், சுய மரியாதை, மூட நம்பிக்கை மறுப்பு, எழுத்து சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, சமூக நீதி போன்றவைகளே, அவர் தமிழர்களுக்காக,தமிழினம் இன்று முன்னேறிய சமூகமாக விளங்க ச் செய்கின்றன.

-------------------------------------------------------


ஏன்?

*கடுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜாஜி 94 வயது வரை வாழ்ந்தார்..*

*கடவுள் இல்லவே இல்லை என்று சொன்ன பெரியாரும் 94 ஆண்டுகள் வரை வாழ்ந்தார்..*

*இருவருமே சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.*

*பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் ஆன பிறகும் இன்றும் கொண்டாடப்படுகிறார்.*

*ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்ட ராஜாஜியின் ஆதரவாளர்கள் ஏன் அவரை இந்த அளவுக்கு கொண்டாட  மறந்து போனார்கள்..?*

*எத்தனை காலம் வாழ்ந்தான் என்பது முக்கியமல்ல..*

*அவன் எப்படி யாருக்காக வாழ்ந்தான் என்பதை முக்கியம்..*

----------+-------------------------------------------