வளரும் பில்லியனர்கள்
உலகின் செல்வந்த குடும்பங்கள் கடந்த வருடத்தில் 312 பில்லியன் டாலர் அளவுக்கு சொத்து மதிப்பு அதிகமாக பெற்றுள்ளன.
கொரோனா தொற்றுநோய்க்கு இடையிலும், ஏராளமான பணப்புழக்கம், உயரும் பங்குச் சந்தைகள் மற்றும் வரி கொள்கைகள் ஆகியவை இந்த செல்வந்த குடும்பங்களின் வருவாய் உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளன. அதிலும்,
உலகின் 25 பணக்கார குடும்பங்கள் 1.7 டிரில்லியன் டாலர் மதிப்புடையவை. இது ஒரு வருடத்திற்கு முந்தையதை விட 22% அதிகமாகும்.
இதில் குறிப்பிடத்தக்கவையாக சில்லறை விற்பனையாளரான வால்மார்ட் இன்க் நிறுவனத்தில் கிட்டத்தட்ட பாதி பங்குகளை வைத்திருக்கும் வால்டன்ஸ் ஆஃப் ஆர்கன்சாஸ் குடும்பம் (Waltons of Arkansas), தொடர்ந்து நான்காவது ஆண்டாக 238.2 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.
பிப்ரவரி முதல் இந்த குடும்பம் 6 பில்லியன் டாலர் பங்குகளை விற்ற போதிலும், கடந்த 12 மாதங்களில் அவர்களின் சொத்து மமதிப்பு 23 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது.
இந்தப் பட்டியலில் புதிய பெயர்களும் இடம்பிடித்துள்ளன. மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பம் மற்றும் விமான நிறுவனமான பிரான்சின் டசால்ட்ஸ்-ம், நியூயார்க்கைச் சேர்ந்த அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பாளர் எஸ்டீ லாடர் நிறுவனமும் இடம்பிடித்துள்ளன.
மேலும், இந்தப் பட்டியலில் ஒரு நிறுவனம் வீழ்ச்சி கண்டுள்ளது. அது தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சாம்சங் சாம்ராஜ்யம் தான்.
கடந்த ஆண்டு இதன் உரிமையாளர் லீ குன்-ஹீ இறந்ததைத் தொடர்ந்து 11 பில்லியன் டாலர் பரம்பரை வரியை செலுத்திய பின்னர் அந்த குடும்பம் வீழ்ச்சி கண்டுவருகிறது.
தரவரிசையில் ஒரு குடும்பத்தைத் தவிர மற்ற அனைவரும் தங்கள் செல்வத்தைச் சேர்த்துள்ளனர்.
பிரான்ஸின் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆடம்பர பொருட்கள் நிறுவனமான ஹெர்ம்ஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 75% அதிகரித்து 111.6 பில்லியன் டாலராக உள்ளது. ஒரு அறிக்கையின்படி, கடந்த ஆண்டு உலகின் பணக்கார குடும்பங்களின் சொத்து 22 சதவிகிதத்திற்கு மேல் வளர்ந்துள்ளது.
மேலும், தொற்றுநோய்க்கு மத்தியில் கடந்த ஆண்டு முதன்முறையாக உலகளவில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒரு சதவிகிதம் பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இதேபோல், மிக உயர்ந்த நிகர மதிப்புள்ள தனிநபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 24% அதிகரித்துள்ளது.
கோடீஸ்வரர் வளர்ச்சியில் அமெரிக்கா நம்பர் -1 நாடாக 29 சதவிகிதத்துடன் உள்ளது. இது கடந்த ஆண்டு ஒட்டுமொத்த பில்லியனர் செல்வத்தில் 37 சதவிகிதத்துடன் சீனா மற்றும் ஜெர்மனிக்கு அடுத்ததாக இருந்தது. வெல்த்-எக்ஸ்-ன் 2021 கோடீஸ்வரர் கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 60 சதவிகித கோடீஸ்வரர்கள் சுயமாக உருவானவர்கள் (self-made) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கோடீஸ்வரர்களின் அதிகரிப்பு முக்கியமாக தொழில்நுட்பம், கப்பல் மற்றும் வாகனத் தொழில்களில் இருந்து உள்ளனர். "சூப்பர் பில்லியனர்கள்" பட்டியலில் அமேசானின் ஜெஃப் பெசோஸ், ஸ்பேஸ்எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க், எல்விஎம்ஹெச் மொய்ட் ஹென்னெஸி தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.