ஆப்கானிஸ்தானை தாலிபான்கள்

ஜூலியஸ் பூசிக் 

செக்கோஸ்லேவேகியாவில் உதித்த ஜூலியஸ் பூசிக் தமது 12ஆம் வயதிலேயேஇலக்கியங்களைப் படைத்தவர். 




செக்கோஸ்லேவேகியா கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் சங்கத்தில் பணியாற்றியவர். பத்திரிகையாளராகவும் போராளியாகவும் திகழ்ந்த பன்முகத் தன்மை வாய்ந்தவர்.1929 ஆம் ஆண்டு நடைபெற்ற சுரங்கத் தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றவர். இரண்டாம் உலகப் போரில் நாஜிகளின் எதிர்ப்பு முன்னணியில் முனைமுகத்து நின்றவர். அவரது வீரம்மிக்க செயல்பாடுகளால் கொதித்த நாஜிகள் 1942ஆம் ஆண்டில் ஜூலியஸ் பூசிக்கைச் சிறையில்அடைத்தனர். சிறையிலிருந்தபோதே ‘தூக்குமேடைக் குறிப்புகள்’ எனும்உலகப் புகழ் வாய்ந்த நூலை எழுதினார். சிறையில் கொடுமைப்படுத்தப்பட்ட போதிலும் மனந்தளராது துணிவுடன் எதிர்கொண்ட மகத்தான கம்யூனிஸ்ட்டாக விளங்கினார். 1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். 

“கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. லாபம், லாபம், மீண்டும் லாபம்! இதையே குறிக்கோளாகக் கொண்ட ஒரு அமைப்பு, மக்களுக்கிடையே நேச உறவு நிலவுவதற்குப் பதிலாக, பண உறவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பு, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற ஒரு அமைப்பு மனிதத்தன்மை அற்றதாகும்.

 மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு, ஒரு கம்யூனிஸ்டுக்கு, மக்களின் மனிதத் தன்மை பறிக்கப்படுகின்ற பொழுது, சும்மா இருக்க உரிமை உண்டா? இல்லை. எனவேதான், நிறைவும் சுதந்திரமும் பண்பும் பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில், தங்கள் முழு வலிமையை பயன்படுத்தவோ, தியாகம் செய்யவோகம்யூனிஸ்டுகள் பின் வாங்குவதில்லை!”

என்பது அவரின் இறுதி வாக்குமூலம்.

---------------------------------------------------------.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் 

முழுமையாக ஆக்கிரமித்துவிட்ட நிலையில், அந்தப் படையில் ஹைபத்துல்லா அகுன்சதா, முல்லா முகமது யாகூப், சிராஜுதீன் ஹக்கானி, முல்லா அப்துல் கானி பரதார், ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய், அப்துல் ஹகீம் ஹக்கானி ஆகிய 6 பேரும் மிக முக்கியப் புள்ளிகளாகக் கருதப்படுகின்றனர்.
தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா முகமது ஹசன் பிரதமராகவும் அப்துல் கனி பரதார் துணைப் பிரதமராகவும் இருப்பார் என்று தாலிபான்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மேலும், உள்விவகார அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக முல்லா ஒமரின் மகன் முல்லா முகமது யாகூப், நிதியமைச்சராக ஹெதாயத்துல்லா பத்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மட்டுமின்றி, இன்னொரு துணைப் பிரதமராக அப்துல் சலாம் ஹனாபி நியமிக்கப்பட்டுள்ளார். 

தாலிபான் இயக்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவரான முல்லா ஹஸ்ஸன் அகுந்த்,. அந்த இயக்கத்தின் சக்திவாய்ந்த மற்றும் உச்ச அதிகாரம் கொண்ட குழுவான ரெஹ்பாரி ஷூராவின் தலைவராக 20 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார்.

2001ல்ஆப்கானிஸ்தானில் அதிகாரம் செலுத்தி வந்த தாலிபானை அமெரிக்க மற்றும் நேச நாடுகளின் துருப்புகள் வெளியேற்றும்போது தாலிபான் அமைச்சரவையிவல் அமைச்சராக ஹஸ்ஸன் அகுந்த் இருந்தார்.

ஆயுத குழுவின் தலைவர் என்பதை விட தாலிபான்களால் போற்றக்கூடிய சமயத் தலைவராகவே ஹஸ்ஸன் அகுந்தை அவர்கள் கருதினர். பிரித்தானிய அரசு தடை விதித்துள்ளவர்களின் ஆவணங்களின்படி 58 வயதாகும் முல்லா ஹஸ்ஸன் அகுந்த் கந்தஹார் மாகாணம், மியால் பகுதி, ஸ்பின் போத்லாக் மாவட்டத்தில் பிறந்தவர் எனவும்,

நூர்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லா ஹஸ்ஸன் அகுந்த், ஐ.நா பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவர். அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலிலும் இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் நிகழ்ச்சியில் 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவை ஐக்கிய அமீரகம், பாகிஸ்தான், சவுதி அரேபியா சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் ஆகும் இதில் பாகிஸ்தான், ஐக்கிய அமீரகம், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் தலிபான்கள் ஆட்சி நடத்திய 90களிலே அவர்களுக்கு ஆதரவு அளித்தன. தற்போது தலிபான்கள் நட்புப் பட்டியலில் புதிதாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் சேர்ந்துள்ளன. கத்தாருக்கும் தலிபான்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‌தாலிபான்கள் முழுமையாக ஆப்கானை தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்தாலும் அங்கு பல இடங்களில் போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,கலவரங்கள் என நடந்து கொண்டுதான் உள்ளன.

இந்நிலையில், ஹக்கானி பயங்கரவாத அமைப்பும், பாக்.,கின் முழு ஆதரவோடு செயல்பட்டு வருகிறது. தற்போது ஆப்கனில் புதிய அரசு அமைக்க, தலிபான்கள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஹக்கானி அமைப்புக்கு முக்கியத்துவம் தருவதற்கு, தலிபான்கள் தயங்குகின்றனர். ஹக்கானி மற்றும் தலிபான்கள் இடையே இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வதற்காக பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலைவர் ஹமீத் பயஸ் காபூல் சென்று உள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், ஆப்கன் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காபூலில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன் போராட்டம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், அவர்களை கலைப்பதற்காக தலிபான்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தை படம்பிடித்த பத்திரிகை நிருபரையும் தலிபான்கள் பிடித்து வைத்துள்ளதாக தெரிகிறது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?