கண்டிப்பார்களா?
தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.இரவி அவர்களின் பேச்சுகள் சர்ச்சைக்குரியதாக இருப்பது மட்டுமல்ல, அவரது நடவடிக்கைகளும் சந்தேகத்துக்குரியதாக இருக்கின்றன. கோவை சம்பவத்தை மூன்றே நாட்களில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு. அந்த மூன்று நாள் தாமதத்தையே பெரிய சர்ச்சை ஆக்கினார் ஆளுநர். சம்பவம் நடந்ததும் என்.ஐ.ஏ. வரவுக்காகக் காத்திருக்காமல் அனைத்து தடயங்களையும் திரட்டி, அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து வழங்கியது தமிழ்நாடு காவல்துறை. அதனையே சந்தேகப்பட்டார் ஆளுநர். இப்போது கர்நாடக பா.ஜ.க. அரசு என்ன செய்துள்ளது? ஆறுநாட்கள் கழித்து தான் என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அது பற்றி எல்லாம் இவருக்கு கவலை இல்லை. அதனைப் பற்றி இவர் கருத்துத் தெரிவிக்கவில்லை. இது எல்லாம் ஏன் என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. அரசைப் பற்றி ஏதாவது குறை சொல்ல வேண்டும். அதற்காக எதையாவது சொல்வது என்று இருந்தார் ஆளுநர். இதோ, இப்போது ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அரசின் சட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் ஆளுநர் ஏற்படுத்தும் காலதாமதம் சந்தேகத்துக்குரியதாக பொதுமக்களால் பார்க்கப்படுகிறது. ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்