முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரப்பர் ஸ்டாம்ப்

 தமிழக அரசின் பல முக்கியமான மசோதாக்கள் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பிலேயே போட்டு வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருந்தது. ஒரு கட்டத்தில் ஆளுநரைப் புறக்கணித்துவிட்டு 7 தமிழரையும் விடுதலையும் செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.

 இதனால் தார்மீக அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி   திரும்ப பெற வேண்டும் என்பதும் தமிழக தலைவர்களின் குரல்.

ஏற்கனவே ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் திமுக எம்.பிக்கள் மனுவும் கொடுத்துள்ளனர்.

டிசம்பர் 29-ந் தேதி ஆளுநர் பதவி விலக வலியுறுத்தி 1 லட்சம் பேருடன் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்தும் உள்ளார்.

தி.மு.க.கூட்டணியினர் குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்க செல்கிறார்கள் என்ற உடனே டெல்லி சென்று இரண்டு நாட்கள் ரவி முகாமிட்டார்.

பின் திமுக மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரை சந்திக்க காலம் கேட்ட போது அவர்தரவில்லை.எனவே அங்குள்ள அலுவலரிடமே கொடுத்து வந்தார்கள்.

இருந்தாலும் ரவி அடங்குவதாகத் தெரியவில்லை டெல்லி சென்ற போது பா.ஜ.க தலைமை அவரை இதுபோன்ற rssபேச்சுகளை பேச ஊக்கமளித்து தமிழக அரசியலில் குட்டையை கிளறி நாறடிக்கவே ரவியிடம் கூறியிருப்பதாகவே தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில்  ரவி : 'ஆளுநர் பதவி அமைப்பு முறை முக்கியமானது. லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளை வலுவிழக்கச் செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் போது பங்காற்றுவதற்கு ஆளுநர்களுக்கு பொறுப்பு உள்ளது. 

ஆளுநர்கள் அதில் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் அல்ல.

அரசியலமைப்பு விதி 200-ன் கீழ், மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாகவோ அல்லது மசோதாவை தடுத்து நிறுத்துவதாகவோ அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக வைத்திருப்பதாகவோ ஆளுநர் அறிவிக்கலாம். 

அது அரசியலமைப்பு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளா

இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். , ஆளுநர் ரவி அவர்களே, உங்கள் ஆசையெல்லாம் அரசியல் சாசனம் ஆகி விடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ரப்பர் ஸ்டாம்ப் ஆக்கும் உங்கள் விருப்பம் ஈடேறாது. 

திராவிடர் ஒரு மரபினம் அல்ல, என்று சொல்லும் போதே நீங்கள் யாருடைய ரப்பர்ஸ்டாம்பை குத்த நினைக்கிறீர்கள் என்பதை தமிழகம் அறியும் என்று கூறியுள்ளார்.

அதற்கு முன் திராவிடம் என்பதை இனம் என ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டது தவறு. விந்திய மலைக்கு தெற்கே இருப்பது பஞ்ச திராவிட பகுதி, வடபகுதி பஞ்ச ஆரிய பகுதி என்பதே பண்டைய வரலாறு. 

வட பகுதியில் இருப்பவர் தெற்கே வருவதும், தெற்கில் இருப்பவர் வடபகுதிக்கு வருவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது.என ரவி ஆய்வறிக்கையை  வெறியிட்டார்.

ரவி போன்ற ஆர்யவம்சத்தினருக்கு திராவிடர்கள் என்றாலே கசப்பு.அப்படி ஒரு இனத்தையே அழிக்கவேண்டும் என்றுதானே 2000 ஆண்டுகாலமாக அதற்கான அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள்.

ஆர்ய இனம் என்று ஒன்று இருக்கையில் விந்திய மலைக்கு பின் திராவிட இனத்தை சிந்து சமவெளியில் இருந்து விரட்டி ஒதுக்கி வைத்தது ஆர்ய இனம்தானே .தற்போது அதை முற்றிலும் அழிக்கத்தானே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முயல்கிறது.

ரவி RSS,பா.ஜ.கவின் ரப்பர்ஸ்டாம்தான்.

இதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதைத்தான் ரவியும் செய்கிறார்.

-------------------------------------------------------------

மக்கட்தொகை அதிகரிப்பு.

800 கோடி ஆகி இருக்கிறோம் என்றால் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டுமே 100 கோடி அதிகமாகி இருக்கிறது. என்ற வகையில் இது பத்து ஆண்டுகால வளர்ச்சியாகும்.

1800 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 100 கோடிக்கும் குறைவாகவே இருந்தது. 100 முதல் 200 கோடியாக வளர 100 ஆண்டுகள் ஆனது. ஆனால் அது 800 கோடி ஆக 100 ஆண்டுகள் போதுமானதாகவும் இருக்கிறது. 900 கோடியாக எப்போது ஆகும்? என்ற அரிய கேள்விக்கான பதிலையும் ஐ.நா.சொல்லி இருக்கிறது. இதற்கு 14.5 ஆண்டுகள் ஆகுமாம். அதாவது 2037 ஆம் ஆண்டில் 900 கோடியைத் தொடுவோம். 2058 ஆவது ஆண்டில் 1000 கோடியைத் தொடுவோம். 2060 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1,040 கோடியாக ஆகும் என்றும் கணித்திருக்கிறார்கள்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 800 கோடியில் இந்தியர்களின் பங்கு என்பது 141.2 கோடி ஆகும். நம்மை முந்தி நிற்கிறார்கள் சீனர்கள். 142.6 கோடி என்பது சீனநாட்டின் மக்கள் தொகை ஆகும். அடுத்த ஆண்டில் சீனாவைத் தாண்டி இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகி விடும் என்பதையும் ஐ.நா. ஒப்புக் கொண்டுள்ளது.

2050 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகையானது 166.8 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையானது 131.7 கோடியாகத்தான் இருக்குமாம். இந்தியா அப்போது மக்கள் தொகை வல்லரசாக இருக்கும்!

இதனைக் கூட, ‘இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவே’ ஐ.நா. கணித்துள்ளது. இந்தியாவில் சராசரி கருவுருதல் விகிதமானது 2.2 என்ற நிலையில் இருந்து 2 விழுக்காடாகக் குறைந்துள்ளதாக ஐ.நா. கூறுகிறது. நவீன குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறைகளே இந்தியாவில் கருவுறுதல் விழுக்காடு குறைந்ததற்கான முக்கியக் காரணமாகச் சொல்லப்பட்டுள்ளது.

உலகளாவிய அளவில் பல செயல்கள் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டும் என்பதையே இந்தப் புள்ளிவிபரங்கள் உணர்த்துகிறது. 800 கோடி மக்களின் பிரச்சினைகளைத் தாங்கும் அளவுக்கு உலகம் தயாராகி இருக்கிறதா என்பதே இன்றைய கேள்வி ஆகும்.

சில நாடுகள் மக்கள் தொகையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. சில நாடுகள் தங்கள் நாட்டின் மக்கள் தொகை குறைந்து வருவதை நினைத்து வருந்தி, மக்கள் தொகையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றன. இரண்டுமே இன்று உலகத்தில் நடந்து வருகிறது. ஜப்பான் உள்ளிட்ட உலகின் பணக்கார, தொழில் மய நாடுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து வருகிறது. 22 நாடுகளில் மக்கள் தொகை மிகமிகக் குறைந்து வருவதாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இந்தியாவிலேயே 2050 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை குறையும் என்றே சொல்கிறார்கள். இவை அனைத்துமே ஆய்வுக்கு உரியவை ஆகும். இவை அனைத்தையும் துல்லியமாக ஆராய்ந்து திட்டங்களைத் தீட்டியாக வேண்டும்.

உலக மக்கள் தொகை 8 பில்லியனை அடைந்துள்ளது.  இதற்கு இந்தியா முக்கியமான காரணமாக உள்ளது என ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிவித்துள்ளது.

1 பில்லியனில் 17%:

இந்தியா 2010-2021 இடைப்பட்ட காலக்கட்டத்தில் 17 கோடி மக்கள் தொகையை உலக மக்கள் தொகையுடன் இணைத்துள்ளது.  அதாவது அதிகரித்துள்ள 1 பில்லியன் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கீடு 17 சதவீதம் என கூறியுள்ளது ஐ.நா.

பீகார் மற்றும் உ.பி.யின் பங்கீடு:

கங்கை சமவெளியில் அமைந்துள்ள பீகார் மற்றும் உத்திர பிரதேசம் இந்தியாவிலேயே அதிக அளவிலான மக்கள் தொகையை கொண்ட மாநிலங்கள்.



தென் மாநிலங்களில் அதிகரிக்காத மக்கள்தொகை:

தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களை இணைத்தும் உலக அளவில் அதிகரித்துள்ள 1 பில்லியனில் 2.38 சதவீதம் கூட வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

வடமாநிலங்கள் vs தென்மாநிலங்கள்:

வட மாநிலங்களோடு ஒப்பிடும் போது மக்கள் எண்ணிக்கை தென் மாநிலங்களில் குறைவாகவே உள்ளது.  கல்வி வளர்ச்சியே இத்தகைய மாற்றத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.  தென் மாநிலங்களின் சிறந்த திட்டங்களும் அரசின் செயல்பாடுகளும் இதற்கு முக்கிய காரணமாகும்.  

அதிகரிக்கும் மக்கள் தொகை நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று என்றாலும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் அதிக அளவில் சிக்கலகளை ஏற்படுத்துகிறது.  வட மாநில அரசுகள் இவற்றை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

-------------------------------------------------------------------





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?