ஞாயிறு, 20 நவம்பர், 2022

சங்கிகளின் சங்கமம்

 தமிழகத்தில் காலூன்றுவதற்காக பா.ஜ.க தீவிரமாக முயன்று வருகிறது. தமிழ் மொழியின் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் அக்கறை இருப்பது போல காட்டிக்கொள்ள எதையாவது செய்வது அக்கட்சியின் வாடிக்கை.

 இதற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் ஒன்றிய அரசு நடந்துகொள்கிறது.

ஒன்றிய கல்வி அமைச்ச கத்தின் நிதியுதவியுடன் உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசின் ஆதரவோடு காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுகிறது. 

இதற்காகத் தமிழகத்திலிருந்து 2500க்கும் மேற்பட்டோர் அணி அணியாக வாரணாசிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்கள். ஐ.ஐ.டி மற்றும் இதர பிரதான கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள், குறி வைத்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 


கர்நாடக மாநிலத்தில் ஆளுகின்ற பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணியக் கூடாது. 

பள்ளி வளாகங்களுக்குள் மதரீதியான குறியீடுகள் இருக்கக் கூடாது என்கிறது. ஆனால் ஐஐடி மற்றும் இதர கல்விக்கூடங்களில் இருந்து மாணவர்களை மதரீதியாக ஒருங்கிணைக்கும் பணியை ஒன்றிய அரசு மேற்கொண்டிருக்கிறது.

தமிழக ஆளுநரும் ஒன்றிய இணை அமைச்சர் முருகனும் காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிக்குப் பங்கேற்கச் சென்ற மாணவர்களுக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் காவித் துண்டு அணிவித்து வழியனுப்பி வைத்துள்ளனர். 

இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு விரோதமானது. காசி தமிழ்ச் சங்கமம் குறித்து ஒன்றிய அரசு தமிழக உயர் கல்வித்துறை அல்லது தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையோடு விவாதிக்கவில்லை. 


தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அக்கறை இருப்ப தாக மோடி அரசும் பா.ஜ.க-வும் காட்டிக்கொள்கின்றன. ஆனால் அவர்கள் ஆளும் உத்தரப்பிரதே சத்தில் திருவள்ளுவர் சிலை பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டு கங்கை நதியோரம் கிடக்கிறது. 

சாமி யார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிலையை நிறுவ முடியவில்லை. காசி தமிழ்ச் சங்கமம் நடத் தும் ஒன்றிய அரசு தமிழுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறது?


ஒன்றிய அரசின் முக்கியமான தேர்வுகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் நடத்தப்படுகின்றன. 

சமஸ்கிருதத்திற்கு இணை யாக உயர்தனிச் செம்மொழியாம் தமிழின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு போதுமான நிதி யுதவியை அளிக்க மறுக்கிறது. “தொன்மை வாய்ந்த மொழி தமிழ்’’ என்று பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தால் போதாது, அதற்குரிய அங்கீகாரத்தைத் தரவேண்டாமா?

ஒன்றிய அரசு அலுவலகங்களில் தமிழுக்கு ஆட்சி மொழி தகுதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் ஒன்றிய அரசு நடத்தும் கேந்தி ரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டம் இல்லை. 

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக தமிழ்ப் பேராசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு எத்தனை தமிழ்ச் சங்கமத்தை நடத்தினாலும் தமிழர்களின் இதயத்தில் நுழைய முடியாது.

சில தமிழ்ச் சூத்திர சங்கிகளை வைத்து,தமிழே தெரியாத ஆர்யசங்கிகள் நடத்தியதிதான் இந்த சங்கமம்.

இது தமிழ்ச் சங்கமம் அல்ல.சங்கிகள் சங்கமம்.

----------------------------------------------------

புரூஸ் லீ.

குங்ஃபூ தற்காப்பு கலை பயில விரும்பும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தாரக மந்திரம் புரூஸ் லீ. சீன வம்சாவளியைச் சேர்ந்த புரூஸ் லீ நவம்பர் 27 1940-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தார்.

சிறு வயதிலேயே குங்ஃபூ கலையில் சில மாற்றங்களை கொண்டு வந்த இவர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஹாலிவுட் படங்களிலும் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.  

புரூஸ் லீதனது 18 வயதிற்குள் பல படங்கள் மற்றம் தொலைக்காட்சி நிக்ழச்சிகளில் நடித்தார். அமெரிக்காவில் இருந்து ஹாக்ங் திரும்பிய இவரது முதல்படம் 1971-ஆம் ஆண்டு ’தி பிக்பாஸ்’ என்ற பெயரில் வெளிவந்ததது.  

இவரது அதிவேக சண்டைகளும் கண்கிளில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப் பொரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியம் டாலர்கள் இப்படம் வசூலித்தது.
மேலும் இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் அதிக வசூலை வாரி குவித்தன.

 கடைசியாக அவர் நடித்த படம் 'எண்டர் த டிராகன்'. இப்படம் உலகையை திரும்பி பார்க்க வைத்தாலும். அதை பார்க்க புரூஸ் லீ இல்லாமல் போனார்.
இப்படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் மரணம் அடைந்தார்.

 
அதாவது 1973-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி காலமானார். தலைவலியால் தூங்க சென்ற புரூஸ் லீ, பின்னர் நினைவு திரும்பாமலேயே குயின் எலிசபெத் மருத்துவமனையில் தனது 32 வயதில் காலமானார்.
அவரது மரணம் மர்மமாகவே இருந்து வந்தது.

 இந்நிலையில், இவருடைய மரணம் பற்றி பல்வேறு கதைகள் கூறப்பட்டு வருகின்றன. அதில், அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டதையே பலரும் உண்மை என்றே இதுவரை நம்பி வந்தனர்.

தற்போது , 50 ஆண்களுக்குப் பிறகு புரூஸ் லீ அவருடைய மரணத்துக்கான காரணம் பற்றி புதிய தகவல் 'கிளினிக் கல் ஜர்னல்' என்ற இதழ் வெளியிட்டு உள்ளது. 
அப்புத்தகத்தில், அவர் மூளை பெரிதாகி இறந்ததாக கூறப்பட்டு இருக்கிறது.

'புரூஸ் லீ அதிகமாக உடற்பயிற்சி செய்பவர். இதற்காக அவர் அதிகளவில் பழச்சாறுகளையும், புரோட்டின் திரவத்தையும் அடிக்கடி குடிப்பார்.
இதன் காரணமாக அவருக்கு அதிகளவில் தண்ணீர் தாகம் எடுக்கும்.

 எனவே, அவர் அதிகளவில் தண்ணீர் குடிப்பார். ஆனால், அதிகப்படியான இந்த தண்ணீரை சிறுநீராக பிரிக்கும் சக்தியை அவருடைய சிறுநீரகம் பெற்றிருக்கவில்லை.
நாளடையில் சிறுநீரகம் இந்த சக்தியை அதிகமாக இழந்ததால், அவருடைய மூளையின் அளவு பெரிதாகி விட்டது.

சிறுநீரகத்தால் சிறுநீரை பிரிக்க முடியாமல் போனால், அதன் பின்விளைவாக மூளையில்  நீர்வீக்கம் ஏற்பட்டு எடைகூடும்.
இதை மருத்துவ ரீதியாக, 'எடிமா' என்று அழைக்கின்றனர்.


வழக்கமாக மனிதனின் மூளை எடை சராசரியாக 1,400 கிராம் இருக்கும். ஆனால், புருஸ் லீயின் மூளை 1,575 கிராமாக பெரிதாகவிட்டது.
இதன் காரணமாகவே அவருக்கு திடீர் இறப்பு ஏற்பட்டுள்ளத

அவருடைய உடல் கூராய்வு  சோதனையில்  இது தெரிய வந்ததாக  அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதான் உண்மையாக புருஸ் லீ மரணத்திற்கு அடிப்படையாக இருக்கலாம் எனத் தெரிகிறது.


அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி ஆபத்தாக அமைந்து விட்டது.அளவுக்கு அதிகமானால் அமுதும் நஞ்சாகி விடுவது இயற்கை.


ஒரு நல்ல வீரனை தனது சண்டைக் காட்சிகளில் உலக இளைஞர்களைக் கவர்ந்த கலைஞனை இழந்து விட்டோம்.

இறந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டன.

வரும் நவம்பர்-27, புரூஸ் லீ யின் 82 வது பிறந்த தினம்.

புரூஸ் லீ

-----------------------------------------------