அரியவகை ஏழைகள்

 எடப்பாடி வியூகம்

சில காலமாக எடப்பாடி பழளிசாமி செயல்பாடுகள் இல்லை.

எதிர்கட்சியின் செயல்பாடுகளை பாஜகதான் செய்கிறது என்ற பேச்சுகள் எழ்ழுந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது, தீர்ப்பு எப்படி வந்தாலும் தனது பாதை இதுதான் என்பதில் எடப்பாடி பழனிசாமி தெளிவாக இருக்கிறாராம்.

பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் தமிழகம் வருகை அதிமுகவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறிவரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்துடன் தனது ஆதரவாளர்களை தயார்படுத்தி வருகிறார்.

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்கின்றனர். 

ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. 

இதை எதிர்த்துஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில் அது தொடர்பாக இந்த மாதம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

தீர்ப்பு எப்படியும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு நம்புகிறதாம். 

ஒருவேளை எதிராக வந்தாலும் சட்ட ரீதியாக எப்படி மேல்முறையீடு செய்யலாம்  என ஆலோசனை நடந்துவருகிறது..

 ஆனால் எக்காரணம் கொண்டும் ஓபிஎஸ் உடன் சமரச முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாக சொல்கிறார்கள்.

மக்களவைத் தேர்தலை மெகா கூட்டணி அமைத்து சந்தித்து வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

மெகா கூட்டணியில் தினகரன்  கட்சியை இடம் பெற வைப்பதற்கான திரைமறைவு வேலைகள் தொடங்கிவிட்டதாக சொல்கிறார்கள். 

இதன் மூலம் சசிகலா தரப்பை சிறிது குளிரவைக்கலாம்.தென் பகுதிகளில் பன்னீர் செல்வத்திற்கு இருக்கும் சாதீய அடிப்படையிலான ஆதரவை குறைக்கலாம் என்று பழனிச்சாமி திட்டமிடுகிறார்.

தென்பகுதியிலும் பன்னீர்செல்வத்திற்கு செல்வாக்கு இல்லாத நிலைதான் தற்போது.

தூத்துக்குடி மாவட்டசெயலாளராக தனது பொறுப்பில் பன்னீர்செல்வம் நியமித்த சி.த.செல்லபாண்டியன் சென்னை வந்து தன்னைசந்தித்து வாழ்த்து பெறுவார் என பன்னீர் நினைக்க சென்னை வந்த செல்லபாண்டியன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் அணியில் கலந்துவிட்டார்.

கூட்டம் நடத்த பன்னீர் பைசா தரமாட்டார்.ஆனால் பழனிசாமியோ வாரித்தருவார் என்ற நிலைதான் தனதுகைக்காசை செலவிடாத கொள்கையுடைய செல்லபாண்டியன் வாதமாம்.

அதேசமயம் உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக அமைந்துவிட்டால் இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது ஜனவரியில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் பணிகள் நடைபெற்றுவருகிறதாம். அதுமட்டுமல்லாமல் பொதுக்குழுவை தொடர்ந்து பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தவும் ஆலோசனை நடைபெறுகிறது.

திட்டமிட்டபடி இரண்டு மாதங்களில் இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து முடிந்துவிட்டால் திமுகவை எதிர்த்து துணிச்சலுடன் அரசியல் செய்யலாம். 

அதிமுக பழையபடி எழுச்சியுடன் திமுக எதிர்ப்பில் கவனம் செலுத்தும். அப்போது யார் எதிர்கட்சி என்ற கேள்வி எழாது என்பதுதான் எடப்பாடியின் தற்போதைய எண்ணவோட்டம் என கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில்.

மெகா கூட்டணியில் பாஜக இடம் பெறாமலும் போகலாமாம்.

காரணம் தமிழ்நாடுக்கு தற்போது வருகை தந்த முடியும்,அமித்ஷாவும் தனக்கு சந்திப்புக்கு நேரம் ஒதுக்காமல் உதாசீனப் படுத்தியது பழனிசாமியை காயப் படுத்திவிட்டதாம்.

தனியேகழட்டி விட்டால்தான் முக்கிய எதிர்கட்சிபோல் படம் காட்டி வரும் பா.ஜ.கவுக்கு  தனக்கு உள்ள செல்வாக்கு தெரியும்.அடக்கி வாசிக்கும் என எண்ணுகிறார் பழனிசாமி.

----------------------------------------------------------


அரியவகை ஏழைகள்

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு எதிரான வழக்குகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ்.பி. பார்திவாலா, பேலா திரிவேதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து, இந்த வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று வழங்கியது.

அதன்படி, 5 நீதிபதிகளில் 3 பேர் 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்றும் 2 பேர் தவறு எனவும் தீர்ப்பு அளித்துள்ளனர். தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகிய இருவர் பத்து சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

 மற்ற 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளனர். 3:2 என்ற அடிப்படையில், பெரும்பான்மை நீதிபதிகள் இட ஒதுக்கீடுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததால், பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் உறுதியாகியுள்ளது.

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்த மத்திய அரசு, இட ஒதுக்கீட்டை வழங்க வழிசெய்யும் வகையில், இது தொடர்பான 103ஆவது சட்டப்பிரிவில் திருத்தம் கொண்டு வந்து அதற்கான மசோதாவை மக்களவையிலும், மாநிலங்களவியிலும் தாக்கல் செய்து நிறைவேற்றியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா சட்டமாகியது. அப்போதே இந்த சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

 பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினர் என்பதற்கான அளவுகோல் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆனாலும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒன்றிய அரசு இந்த இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. 

உச்ச நீதிமன்றத்திலும் அச்சட்டம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய அம்சங்களில் முக்கியமானது பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பதற்கு அளிக்கப்பட்ட வரையறை. ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் கீழ் வருமானம் உள்ளவர்கள் பின் தங்கியவர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர். 

இந்த வரையறை எதன் அடிப்படையிலானது என்பது மிகப்பெரிய கேள்வி. அதேசமயம், இந்தியாவில் நாளொன்றுக்கு ரூ.32க்கு குறைவாக செலவு செய்யும் கிராமப்புறங்களில் வசிப்போரும், ரூ.47க்கு குறைவாக செலவு செய்யும் நகர்ப்புறங்களில் வசிப்போரும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு வரயறுத்துள்ளது. 

ஆனால், வறுமை கோடு பற்றிய சர்வதே வரையறை நாளொன்றுக்கு 2 அமெரிக்க டாலர்கள் என்கிறது. அப்படி பார்த்தால், இந்தியாவில் சுமார் 70 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாகவே கருதப்படுவார்கள்.


இந்தியாவில் கடைசியாக, 1997 - 2002ஆம் ஆண்டில் 9ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ்தான் வறுமைக் கோடு பற்றி கடைசியாக கணக்கெடுக்கப்பட்டது. அதன்பின்னர் எடுக்கப்படவில்லை. 

இதனால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் குறித்து மத்திய அரசிடமே தெளிவான கணக்குகள் இல்லை. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானமே 1 லட்சம்தான். இண்டஹ் பின்னணியில், உயர் வகுப்பினருக்கு மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் என்ற வருமான வரம்பு எங்கிருந்து வந்தது .

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமி லேயர் என்ற பொருளாதார அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர். 

இதற்கான வரம்பு ஆண்டு வருமானம் 8 லட்சமாக உள்ளது. இதன் மூலம், ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெற்றோராக இருந்தால், அவர்களின் பிள்ளைகள் பி.சி.க்கான இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியாது. 

நாட்டில் சுமார் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கிரீமி லேயருக்கு கீழே உள்ள நிலையில், உயர்வகுப்பினரை மட்டும் மேலே கொண்டுவருவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. 

ஒன்றிய அரசுக்கு உயர் வகுப்பினரைத் தவிர பிறர் மீது அக்கறை இல்லையோ என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், “10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு; 

சமூகநீதிக்கான குரல் நாடெங்கும் ஓங்கி ஒலித்திடச் செய்ய ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

“பட்டியலின, பழங்குடியின, ஓபிசி பிரிவு ஏழைகளுக்கு மறுத்து, உயர் சாதி ஏழைகளுக்கு மட்டும் தரப்படும் பாரபட்சமான 10 சதவீத ஒதுக்கீடு செல்லும் என்பதும், பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு அரசியல்சாசன சட்டப்படி செல்லத்தக்கதே என்பதும் விந்தையான வேடிக்கை.” என மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீடு என்பது சமூக ரீதியிலான படிநிலைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை போக்குவதற்காக கொண்டு வரப்பட்ட குறைந்தபட்ச நிவாரணமே.

 இந்தியாவை பொறுத்தவரை, கல்வி, வேலைவாய்ப்பில் சாதியின் அடிப்படையிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு வந்ததே ஒழிய, பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்ல. எனவே, இட ஒதுக்கீட்டில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமானால், அதனடிப்படையில்தான் கொண்டு வரவேண்டும்.

பொருளாதார ரீதியிலான இட இதுக்கீடு அரசியல் சட்டத்திற்குப் புறம்பானது என்பதும், இது போன்ற நடவடிக்கையை மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அரசு மேற்கொண்ட போது, அதனை நீதிமன்றம் ஏற்கவில்லை என்பதும் நினைவுகூற


த்தக்கது
பொருளாதார உயர்வு ஒருவரின் சாதியையும் மீறி சமூக அந்தஸ்தை உயர்த்துவது இல்லை.’ என்று கடந்த 2018ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்தான் இந்த தீர்ப்பையும் அளித்துள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?