சூதாட்டத்தில் ஒரு சதிராட்டம்
அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இத்தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதன்பின் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழப்பதால் நேரிடும் தற்கொலைகளைத் தடுக்க வலுவான புதிய சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் இதுகுறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஜூன் மாதம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை அடிப்படையிலேயே ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு செப். 26 தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த அவசர சட்டம்தான் 60 நாட்கள் முடிந்து நேற்றுடன் (நவ. 27) காலாவதியானது. அதற்கு மாற்றாக இயற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த அக்டோபர் 19 அன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்காக அக்.28 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
“ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
சட்ட மசோதா குறித்து ஆளுநர் தரப்பில் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கான விளக்கத்தையும் ஆளுநர் தரப்பில் கேட்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள் அளித்துள்ளது தமிழக அரசு.
மேலும் இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் ரவியிடம் நேரில் விளக்க தமிழக சட்ட அமைச்சர் பலமுறை நேரம் ஒதுக்கக் கேட்டும் ஆளுநர் ரவி நேரம் ஒதுக்கவில்லை.
ஆனால் அதே நேரம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் ஒதுக்கினார்.பா.ஜ.க நிர்ஙாகிகளைச் சந்தித்துள்ளார்.
பாரதியார் பிறந்த நாளை டிசம்பர் 11 ல் கொண்டாடும் முன் கார்த்திகை மாத மூல நட்சத்தித்தில்தான் அவர் பிறந்தார் என சோதிட ஆய்வு செய்து கண்டுபிடித்து நேற்று27. ம்தேதி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார்.
இதற்கெல்லாம் நேரம் வெட்டியாக ஒதுக்குபவருக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வரும் மசோதாக்களுக்கு கையெழுத்திட மட்டும் நேரமே கிடைப்பதில்லை.
23 மசோதாக்கள் கிண்டி பா.ஜ.க ஆளுநர் மாளிகையில் மயங்கிக் கிடக்கின்றன. ரவியோ திருக்குறள்,பிந்தநாள நட்சத்திர சோதிடம்,சனாதனம் ,இந்து,திராவிடம் என ஆய்வுகளில் மூழ்கி சங்கிமுத்துக்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் தான் இன்று சாப்பிடுவது,உல்லாசமாக வாழ்வது,தனக்கு ஆள்,அம்பு,படை பாதுகாப்பு தருவது எல்லாம் தமிழக மக்கள் வரிப்பணத்தில்தான ஆர்.எஸ்.எஸ் பணத்தில் அல்ல என்பதை அவர் மறந்து ஆளுநராக இல்லாமல் ஆத்திக சங்கியாக அலைகிறார்.
இதுவரை 36 பேர்கள் உயிரை பறித்துள்ளது இந்த ஆன்லைன் ரம்மி.இதை சூதாட்டம் இல்லை திறன் சார்ந்த விளையாட்டு என எத்தனைநாள் தான் ஒன்றிய அரசும்,உச்சநீதிமன்றமும் சொல்லிக் கொண்டு மக்களை பலிகொடுக்கும்.
டிக்டாக்,பப்ஜி விளையாட்டுகளுக்கு தடை கொண்டு வந்தவர்களுக்கு மக்கள் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மிக்கு தடை கொண்டு வர மட்டும் மனமில்லாமல் போன மர்மம் என்ன?
விடுதிகளில் விளையாடும் சூதாட்டங்களை ஆடுபவர்களை கைது செய்து வரும் நிலையில் இதற்கு மட்டும் தடை கொண்டு வர முடியா நிலை என்ன?
-----------------------------------------------------------------