தவறானதால் பலி

 சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பிரியா. 


இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.  கால்பந்து வீராங்கணையான பிரியா மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றுள்ளார்.

மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக சென்ற  பிரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

ஆனால்  அறுவை சிகிச்சைக்குப் பின், காலில் வீக்கம் ஏற்பட்டு பிரியா உணர்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். 

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவரது வலது காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பது தெரியவந்தது. மேலும் ரத்தம் கட்டி,ரத்த ஓட்டம் தடையாகியுள்ளதையும்,கால் மிக வீங்கி மோசமான  நிலையில்  இருப்பதையும் கண்டறிந்த மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்காக காலை அகற்ற வேண்டும் என உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது கால் அகற்றினர்.



பெங்களூருவில் உள்ள பிரபல பேட்டரி காலை பொறுத்துவற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது

அதன்பின் சற்று தெளிவான நிலைக்கு வந்த பிரியா 

சிறுநீரகம், ஈரல், இதயம் அடுத்ததடுத்து பாதிக்கப்பட்ட பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிகிச்சையின் மீது கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர்களை பணியிட மாற்றம் செய்திருந்தனர்.தற்போது இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

மேலும் பிரியாவின் குடும்பத்தினருக்கு உடனடியாக 10 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். 

மேலும் பிரியாவின் 3 சகோதாரர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்பட்டும்.முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்

--------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?