வெள்ளி, 30 ஏப்ரல், 2021

நாளையச் செய்தி.

 வெளிநாடு ஊடகங்களின் 

பாராட்டு மழையில் மோடி.

உலக அளவில் மிகப் புகழ்பெற்ற மதிப்புக்குரிய பத்திரிகைகளில் ஒன்று தி கார்டியன். இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளியாகும் இந்த இதழில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட தலையங்கத்தில் இந்தியாவில் மிகத் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றினைத் தடுக்க இந்திய அரசு குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

"இந்தியாவில் கொரோனா தொற்று இந்த வாரம் உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ‘இந்தியாவில் கொரோனா முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக’ தெரிவித்தது. ஆனால் இப்போது இந்தியர்களின் வாழ்க்கை நரகத்தில் தவிக்கிறது. புதிய இரட்டை மரபணு கொண்ட பி .1.617 என அழைக்கப்படும், பேரழிவு தரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலைப் பரவலாக இந்தியா முழுவதும் வெளிப்பட்டுள்ளது, இந்தியாவின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.ஆக்ஸிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சவக் கிடங்குகள் நிரம்பியுள்ளன. கொரோனாவால் இறந்த உடல்கள் தெருக்களில் விடப்படுவதால் அவை சிதைந்து அதனாலும் பெரும் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 3,32,730 பேருக்கு புதிய கொரோனா நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உலகளவில் அதிக எண்ணிக்கையிலானது. பல நாடுகள் இந்தியாவில் இருந்து விமானங்களைத் தடை செய்துள்ளன, இந்தியாவுக்கு பயணிப்பதைத் தவிர்க்க பரிந்துரைத்துள்ளன.

ஆறு வாரங்களுக்கு முன்னர், இந்தியாவின் மக்கள் தொகையில் 1% மக்களுக்குக் கூட தடுப்பூசி போடாத நரேந்திர மோடி இந்தியாவை, ‘உலகின் ஃபார்மசி’ என்று பெருமிதத்தோடு அழைத்துக்கொண்டார். மேலும் கொரோனா தொற்றுக்கு முந்தைய இயல்பு நிலை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தன் பேச்சுகளில் கருத்துகளை வெளிப்படுத்தினார். வட இந்தியாவில் கும்பமேளா திருவிழாவின் போது பல லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். கும்பமேளாவை முன்னிட்டு லட்சக்கணக்கான இந்துக்கள் கங்கையில் புனித நீராடினார்கள். கும்பமேளாவுக்காக கிரிக்கெட் ஸ்டேடியங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.

இது மாதிரியான பெருந்திரள்களால் கொரோனா வட இந்தியாவில்,‘சூப்பர் ஸ்ப்ரெடிங்’என்ற உச்சப் பரவல் நிலையை அடைந்தது. அமெரிக்காவில் அதிபராக இருந்த டிரம்ப்பை போலவே மோடியும் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக பரவும் நிலையிலும் தேர்தல் பிரச்சாரத்தைக் கைவிடவில்லை. ஏப்ரல் மாதத்தில் இந்தியா ஐந்து மாநிலங்களின் தேர்தல்களை சந்தித்தது. அப்போது பிரதமர் மோடி மிகப்பெரிய தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் முகக்கவசம் இல்லாமல் கலந்து கொண்டார். இது மாதிரியான காட்சிகள் இந்தியாவை ஒரு விதிவிலக்கான நாடு என்று மோடி முத்திரை குத்தியதை வளர்த்தன.

அதாவது தேசத்தின் மீதான பெருமித அனுமானங்கள், தொற்று நோயை எதிர்கொள்ள தயாராவதை விட அதிகமாகிவிட்டன. மேலும், கொரோனா தடுப்பூசி உற்பத்தி விவகாரத்தில் இந்தியாவை மேற்குலக நாடுகள் ஒரு கடையாணியாக பயன்படுத்திக் கொண்டன. ஆனால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இது ஒரு பிழையாக இருக்கலாம் என்று கூறினார். சீனாவும் அமெரிக்காவும் இப்போது இந்தியாவை விட அதிகமான கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. ஆனாலும் கூட தடுப்பூசிக்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா இன்னும் தளர்த்தவில்லை.

ஆனால், இந்திய பிரதமர் மோடி தனது சொந்த உள்ளுணர்வுகளின் அடிப்படையிலான அதிகபட்ச நம்பிக்கை காரணமாக, சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளை ஊதித் தள்ளினார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்) நாட்டின் மீதான அக்கறையோடு அரசுக்கு ஆலோசனைகள் அளித்த நிலையில், அவர் மீது மோடியின் அமைச்சரவை சகாக்கள் அரசியல் ரீதியான தாக்குதல் நடத்துகின்றனர்.

கடந்த ஆண்டு மார்ச்சில்தான் மோடி இந்தியாவின் மீது திடீரென ஊரடங்கு உத்தரவை திணித்தார். முன்கூட்டியே எச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற நிபுணர்களின் உத்தரவு நிராகரிக்கப்பட்டது. ஆனால் அந்த ஊரடங்கு என்பது மோடியின் நாடகத்தனமான உரைகளுக்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. கொரோனா முதல் அலையில், கொரோனாவின் தாக்குதல் இந்தியாவின் நகரங்களை அதிகமாகத் தாக்கியது. ஆனால் இப்போது கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவின் பெரும்பாலான கிராமங்களுக்கும் ஊடுருவி விட்டது.

“இந்தியா ஸ்தம்பித்து போனதற்கு மோடி அரசின் திறமையின்மையே காரணம்” - வசைப்பாடும் உலக செய்தி ஊடங்கள்!

மற்ற நாடுகளைப்போல இந்தியாவின் மிகப்பெரும் எண்ணிக்கையிலான இறப்பு விகிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் திறமையற்ற திமிர் பிடித்த அரசாங்கத்தின் விளைவால் அந்த நிலை தவிர்க்கப்பட்டது. இந்தியா ஒரு பெரிய, சிக்கலான மற்றும் மாறுபட்ட நாடு. அப்படிப்பட்ட நாட்டை நல்ல நாட்களில் ஆட்சி செய்வதே கடினம். இப்படியிருக்க தேசிய சுகாதார அவசர நிலையில் இந்தியாவை ஆட்சி செய்வது மிகப்பெரிய கடினம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பொறுப்பற்ற தன்மையை மறைக்க இப்போது மாநில நிர்வாகங்களின் தலையில் சுமத்தப் பார்க்கிறார்.

தனது நடவடிக்கைகளால் இந்தியா என்ற நாட்டுக்கு மகத்தான துன்பத்தை ஏற்படுத்தியதை அவர் ஒப்புக் கொண்டு, திருத்திக் கொள்ள வேண்டும். கட்டுப்பாடுகளை எவ்வாறு நிலைநிறுத்துவது என்பது குறித்து அவர் நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட வேண்டும். இந்தியாவுக்கு ஒற்றுமை தேவைப்படும் இந்த நிலையில், பிரித்துப் பார்க்கும் குறுங்குழுவாத சித்தாந்தத்தை மோடி கைவிட வேண்டும். பேரழிவுகரமான பொதுசுகாதார முடிவுக்கு வழி வகுத்த தனது விதிவிலக்கான கருத்துக்களை நரேந்திர மோடி தொடர்ந்தால் எதிர்கால வரலாற்றாசிரியர்கள் மோடியை சும்மா விட மாட்டார்கள்.

நன்றி - மின்னம்பலம்

---------------------------------------------------------------

நாளையச்  செய்தி.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சி வோட்டர் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி தி.மு.க கூட்டணி 160 முதல் 172 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 58 தொகுதிகள் முதல் 70 வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

IndiaAhead நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின்படி தி.மு.க கூட்டணி 165 முதல் 190 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 40-65 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டுடே - மை ஆக்சிஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி தி.மு.க கூட்டணி 175 முதல் 195 தொகுதிகள் வரை வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணி 38 முதல் 54 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 1 முதல் 4 வரை வெல்லக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க 48% வாக்குகளைப் பெறும் என்றும், அ.தி.மு.க 35% வாக்குகளைப் பெறும் என்றும் இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Today's Chanakya நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, தி.மு.க 164 முதல் 186 தொகுதிகள் வரை வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க 48-68 தொகுதிகள் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.ஏபிபி - சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 166 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க கூட்டணி 46.7% வாக்குகளைக் கைப்பற்றும் எனவும், அ.தி.மு.க கூட்டணி 35% வாக்குகளைக் கைப்பற்றும் என்றும் ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ரிபப்ளிக் CNX நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 58 முதல் 68 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------

மோடிக்கும் மொட்டைக்கும்

அனைத்து தடுப்பூசிகளையும் மத்திய அரசே வாங்கி தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் ஏன் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா தடுப்பூசி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது நீதிபதிகள், தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

குஜராத் மாநிலத்தில் ஏன் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிக்க மறுக்கின்றனர்? 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தால் தான் அனுமதிக்கப்படும் என்று ஏன் நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ உதவிக்காக பொதுமக்கள் அலையும்போது, சமூக வலைத்தளங்களில் உதவி கோருவோர் மீது நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது. 

அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க நேரிடும் என்று தெரிவித்தனர்.

பின்னர், சமூக வலைத்தளங்களில் மருத்துவ உதவி கேட்கும் பொதுமக்கள் மீது உ.பி,அரசு போல் அவதூறு பரப்புவதாகக் கூறி வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று அனைத்து மாநில காவல்துறை தலைவர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

தடுப்பூசி தயாரிக்கும் 10 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ள போது இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் எந்த அடிப்படையில் மத்திய அரசு 4,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பது புரியவில்லை என்று வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தடுப்பூசிக்கான விலையை நிறுவனங்கள் முடிவு செய்ய அனுமதிக்கக் கூடாது. 

தடுப்பூசி விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

----------------------------------------------------------------------------------------

புதன், 28 ஏப்ரல், 2021

இன்று இந்தியா

 இந்தியாவில் இருந்து வருகின்ற அரசியல்ரீதியான இறுமாப்பு தொற்றுநோயின் யதார்த்தத்தை இந்த வாரம் சந்தித்தது. 

நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்து தேசியவாத அரசு நாடு கோவிட்-19 இன் இறுதியாட்டத்தில் இருக்கிறது என்று இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் கூறியிருந்த போதிலும் இப்போது இந்தியா ஒரு நரகமாகவே இருந்து வருகிறது. போதியபடுக்கைகள், ஆக்சிஜன் இல்லாத மருத்துவமனைகளுடன் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாவது அலை மூலம் பி.1.617 என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸின் புதிய இரட்டைப் பிறழ்வு தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது. சவக்கிடங்குகள் நிரம்பி விட்டதால், வீடுகளிலேயே உடல்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 தொண்டு நிறுவனங்கள் இறப்பை ஏற்படுத்துகின்ற வகையிலே தெருக்களை ஆபத்து சூழ்ந்திருப்பதாக எச்சரிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய சார்ஸ் கோவி-2 நோய்த்தொற்றுகள் 3,32,730 என்ற அளவில் இந்தியாவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக உலகளவிலே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் என்ற அளவிலே அந்த எண்ணிக்கை அதிகரித்துள் ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2,200க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன.

 இந்தியாவில் இருந்து வருகின்ற விமானங்களைத் தடைசெய்துள்ள நாடுகள் தங்களுடைய மக்கள் இந்தியாவிற்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன அல்லது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்குச் சென்று திரும்பி வந்தவர்கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.

ஆறு வாரங்களுக்கு முன்னர் இந்தியமக்கள்தொகையில் ஒரு சதவீதம் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதிருந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய நாட்டை ‘உலகின் மருந்தகம்’ என்று அறிவித்திருந்தது தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவே அறியப்பட்டிருந்தது. தொற்றுநோயின் அதிவிரைவுப் பரவல் ஆயிரக்கணக்கான வர்கள் கிரிக்கெட் மைதானங்களில் குழுமிய போது, லட்சக்கணக்கான இந்துக்கள் கும்பமேளாவின் போது கங்கையில் நீராடிய போது நடந்தேறியது.

 தொற்றுநோய்ப் பரவல் அதிகரித்த வேளையில் டொனால்ட் ட்ரம்பைப் போல திரு மோடியும்தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைக் கைவிடவில்லை. ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்ற இந்தியாவில் முகக் கவசம் அணியாத மோடி மிகப்பெரிய பேரணிகளை ஏப்ரல் மாதம் நடத்தினார். 

மோடியின் குணாம்சமாக இருந்து வருகின்றஇந்திய விதிவிலக்கு வாதம் மெத்த னத்தையே வளர்த்தெடுத்துக்கொடுத்தது.

தேசிய மகத்துவம் குறித்து இருந்து வந்த அனுமானம் குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியில் ஆயத்தமின்மைக்கே வழிவகுத்துக் கொடுத்தது. உலகளாவிய மருந்து தயாரிப்பில் இந்தியாதான் அச்சாணியாக இருக்கப் போகிறது என்று மேற்குலக நாடுகள் ஊக்குவித்தன. ஆனால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இந்த வாரம் ‘அது ஒரு பிழையாகஇருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். 

சீனாவும் அமெரிக்காவும் இப்போதுஇந்தியாவை விட அதிகமாக கோவிட்-19தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வரு கின்றன. ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைஎளிதாக்கித் தருவதில் இன்னும்வாஷிங்டனை இந்தியாவால் சமாதானப் படுத்த முடியவில்லையாதலால் அது ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.

தனது உள்ளுணர்வு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை ஏளனம் செய்கின்ற அதீத நம்பிக்கை ஆகியவற்றால் இந்தியப் பிரதமர் இப்போது அவதிப்பட்டு வருகிறார்.

 இந்த வாரம்கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக தங்களுக்கு ஆலோசனை வழங்கத் துணிந்த முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மீது மோடியின் அமைச்சர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு கோடிக்கணக்கான இந்திய மக்கள் மீது மிகக் கடுமையான திடீர் பொது முடக்கத்தை மோடி திணித்திருந்தார். எந்தவொரு எச்சரிக்கையுமின்றி கொண்டு வரப்பட்ட பணி நிறுத்தம் நாட்டின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு எதிராகவே சென்றது. ஆனால் தன்னிட முள்ள நாடகத்தனமான உடல்மொழிகள் மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு ஏற்றவையாகவே அவரது அந்தச் செயல்பாடு இருந்தது. 

கோவிட்-19ஆல் இறந்து போனவர்களின் விகிதம் மிகவும் இளைய வயதினரை அதிகமாகக் கொண்டுள்ள இந்தியாவில் மற்ற நாடுகளை விடக் குறைவாகவே இருக்கும்.

நன்றி: கார்டியன்.

----------------------------------------------------------------------------------

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு  குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாரிக் ஜாசரெவிக் கூறியதாவது:-

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தேவைப்படுகிறது. இதிலும் குறைவானவர்களுக்குத்தான் ஆக்சிஜன் அவசியமாகிறது.ஆனால் தற்போது பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்று பார்த்தால், சரியான தகவல்கள், ஆலோசனைகள் கிடைக்காததின் விளைவாக பலர் ஆஸ்பத்திரிகளுக்கு விரைகிறார்கள். (அவர்களுக்கு வீட்டில் இருந்து கொண்டு பராமரித்து, கண்காணித்து வந்தாலே கொரோனாவை பாதுகாப்பாக நிர்வகிக்க முடியும்.)

சமூக அளவிலான மையங்கள் நோயாளிகளை சோதனை செய்ய வேண்டும். பாதுகாப்பான வீட்டு பராமரிப்பு குறித்த ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே நேரத்தில் ஹாட்லைன் மற்றும் டேஷ்போர்டுகள் மூலம் தகவல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

---------------------------------------------------------------

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்’ என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதன் விவரம்:

"அனைவருக்கும் அன்பான வணக்கம்!

ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக் கொள்கிறேன்.

மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலைப் பாருங்கள். வீட்டுக்குள்ளும் போதிய தனிமனித இடைவெளியைக் கடைபிடியுங்கள்.

தடுப்பூசியை போட்டுக் கொள்ளுங்கள். மிகத்தீவிரமான உடல்நலக் கோளாறு உள்ளவர்கள் தங்களது மருத்துவரை கலந்தாலோசனை செய்த பிறகு தடுப்பூசியை பயன்படுத்துங்கள்.

முகக் கவசங்களை தொடர்ந்து அணியுங்கள். கிருமிநாசினியை பயன்படுத்துங்கள். கபசுரக் குடிநீர் அருந்துங்கள். காய்கறி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பானங்களை அருந்துங்கள். பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். சத்தான, இயற்கை உணவுகளை சாப்பிடுங்கள். பதப்படுத்தப்பட்ட பொருள்களை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.

மருத்துவக் குணங்கள் கொண்ட பலவற்றையும் நமது உணவுடன் சேர்த்து பயன்படுத்தும் பழக்கம் காலம் காலமாக நம்மிடம் இருக்கிறது. அந்த பாரம்பர்யத்தை தொடந்து பின்பற்றினால் கரோனாவை தடுக்கலாம்.

மருந்தால் மட்டுமல்ல, உணவுப் பொருளாலும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.நமக்கு கரோனா வராது என்ற அலட்சியம் மட்டும் யாருக்கும் எப்போதும் வேண்டாம்!

கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக மிக மோசமானதாகப் பரவி வருகிறது.

‘கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மே மாதத்தில் உச்சத்தை எட்டும்’ என்று வருகின்ற செய்திகள் அச்சத்தைத் தருவதாக உள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.

தினந்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அனைத்து மாவட்டங்களுமே கரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. ஒரு நாளில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா உலகில் முதல் நாடாக இருக்கிறது.

வட மாநிலங்களில் இருந்து வரும் தகவல்கள் நமது பயத்தை அதிகம் ஆக்குகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மருந்துகள் இல்லை. ஆக்சிஜன் இல்லை. தடுப்பூசி இல்லை.

இப்படி இல்லை, இல்லை என்பதே வட மாநிலச் செய்திகளாக இருக்கின்றன.

முதல் அலை பரவிய து அதைத் தடுக்கத் தவறியது மத்திய, மாநில அரசுகள். அந்தப் பரவலைக் கட்டுப்படுத்தவும் அந்த இரண்டு அரசுகளும் தவறின.

முதல் தவறையாவது திருத்திக் கொண்டு அதிலிருந்து ஏதாவது பாடம் கற்றுக் கொண்டார்களா என்றால் இல்லை. முதல் தவறை விட பெரிதாக இரண்டாவது தவறைச் செய்துவிட்டார்கள். முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடைப்பட்ட ஆறு மாத காலத்தில் எந்த தற்காப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை. அதன் விளைவைத்தான் நாம் கண்ணுக்கு முன்னால் இப்போது பார்க்கிறோம்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக் குழு எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை. இந்த அறிக்கை பிப்ரவரி 2-ம் தேதி மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது அலை நாட்டு மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் கூட தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஆக்சிஜனையும் வெளிநாடுகளுக்கு இந்தியா விற்பனை செய்திருக்கிறது.

தடுப்பூசியை வைத்து நடந்த கொள்ளைகள்தான் இந்த வேதனையான நேரத்தில் மேலும் துயரமான ஒன்றாகும்.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை உணர்ந்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘மனித உயிர்கள் முக்கியமில்லையா? பிச்சை எடுங்கள்… கடன் வாங்குங்கள்… திருடக் கூட செய்யுங்கள்… இது தேசத்தின் அவசர நிலைக் காலம். ஆக்சிஜன் கொண்டு வந்து மக்களைக் காப்பாற்றுங்கள்’ என்று மத்திய அரசைப் பார்த்துக் கூறியிருக்கிறது. ஆக்சிஜன் தர மறுக்கும் நிறுவனங்களைக் கையகப்படுத்தலாம் என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.

இந்த அளவுக்கு மோசமான சூழ்நிலை இருக்கும்போது, தடுப்பூசியின் விலையை உயர்த்துகிறார்கள் என்றால் எவ்வளவு அநியாயம் இது! மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு விலை என்பது அநியாயத்திலும் அநியாயம் இல்லையா? உயிர் அனைவருக்கும் பொதுவானது தானே?

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்; ஒரே ரேஷன் கார்டு; ஒரே வரி; ஒரே சந்தை; ஒரே மதம்; ஒரே உணவு; ஒரே மொழி’ என்று பேசும் பாஜக ஆட்சியில் உயிர் காக்கும் மருந்துக்கு மூன்று விலைகள்!

ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மாநில அரசுகள் தங்களிடம் இருந்த வரி போடுகிற அதிகாரங்களையும் பெருமளவுக்கு இழந்துவிட்டன. எனவே, இந்தச் சுமையை மாநில அரசுகள் சுமப்பது மிகக் கடினம்.

எனவே, இந்தக் கடினமான காலத்தைச் சமாளிக்க, மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அதுமட்டுமல்ல, முக்கியமாக ‘அனைவருக்கும் இலவச தடுப்பூசி’ என்ற அறிவிப்பை பிரதமர் அறிவித்து, உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் காலம் காலமாக மருத்துவ உள்கட்டமைப்பு வசதி வளப்படுத்தப்பட்டு வருவதால் ஓரளவு சமாளிக்க முடிந்தது. ஆனாலும் அதிமுக அரசு இதனை முறையாகப் பயன்படுத்தும் திறன் பெற்றதாக இல்லை.

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு தமிழகத்திலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாக ஆக்சிஜன் தயாரிப்பதற்காக மட்டும் திறக்கலாம். நான்கு மாதத்தில் அந்தப் பணிகள் முடிந்ததும் ஆலையை நிரந்தரமாக மூடிவிடலாம் என்று மனிதாபிமான அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் சொன்னோம்.

அப்படி தயாரிக்கப்படுகின்ற ஆக்சிஜனையும் தமிழகத்தின் பயன்பாட்டுக்கு முழுமையாகப் பயன்படுத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி சொல்லி இருக்கிறோம். மக்கள் மிகவும் எச்சரிக்கையாக தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்றால், ஒருவர் மூலமாக ஒரு மாதத்தில் 406 பேருக்கு கரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளதாக மத்திய மக்கள் நலவாழ்வுத்துறை சொல்லியிருக்கிறது.

இதையெல்லாம் மக்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். எங்கும், எப்போதும், எந்த இடத்திலும் தனிமனித இடைவெளி முக்கியம், மிக மிக முக்கியம் என்பதை மக்கள் தங்களுடைய மனதில் அழுத்தமாக பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி அரசுத் தரப்பில் அவசரமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக்சிஜன், தடுப்பூசி ஆகியவற்றின் கையிருப்பை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதியைப் புதிதாக உருவாக்க வேண்டும். போதிய எண்ணிக்கையில் வென்டிலேட்டர்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு மற்றும் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், புதிய படுக்கை வசதிகள் கொண்ட ‘தற்காலிக மருத்துவமனைகள்’ அமைக்கப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் எல்லாம் கரோனா சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கரோனா பரவல் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். மக்கள் பாதுகாப்பை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். முகக்கவசம் அணிவதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் பரிசோதனை, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை இயக்கமாக மாற்ற வேண்டும்.

ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவக் கூடாது, தொற்று ஏற்பட்டவர்கள் காப்பாற்றப்பட வேண்டும் ஆகிய இரண்டு முக்கிய இலக்கைக் கொண்டதாக அந்த இயக்கம் செயல்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் இப்போது இருக்கும் அரசு செயல்படுத்துகிறதோ இல்லையோ, விரைவில் புதிதாக அமையப்போகிற அரசு நிச்சயமாக நிறைவேற்றும். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுடைய அமைதியான வாழ்வுக்கும் தேவையான அனைத்தையும் அமையப்போகிற அரசு செய்யும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுவரை தற்போதைய காபந்து அரசு மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் அலட்சியம் வேண்டாம், அலட்சியம் வேண்டாம் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களைக் காப்பாற்றுங்கள், மக்களைக் காப்பாற்றுங்கள் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். வரலாற்றின் பழிக்கு ஆளாகாதீர்கள், ஆளாகாதீர்கள் என்று எச்சரிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

புதிய அரசு அமைந்தவுடன் மக்கள் நலன் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும். எப்போதும் மக்கள் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருந்து நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்”.

--------------------------------+-----------------------------------


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 1,79,97,267 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 3293 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக உயர்ந்துள்ளது. 
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,48,17,371 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,61,162 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 29,78,709  பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 14,78,27,367 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

தாடி மனிதனின் தவறு.

 ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதமே நாடாளுமன்ற நிலைக் குழு எச்சரித்தும் மத்திய அரசு கண்டுகொள்ளாததும் தற்போது அம்பலமாகியுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆக்சிஜன் தேவை பெருமளவுக்கு உயர்துள்ளதை சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது ஆய்வு செய்தது.

குழு முன்பாக அப்போது ஆஜரான சுகாதாரத்துறை செயலாளரும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதை தெரிவித்துள்ளார். பல துறை நிபுணர்களின் கருத்தினைப் பெற்று ஒரு பரிந்துரை அறிக்கையை கடந்த நவம்பர் 21 ஆம் தேதி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நிலக்குழு அறிக்கை அளித்துள்ளது.

பின்னர், இந்த அறிக்கை பிப்ரவரி 2 ஆம் தேதி மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்தியை மத்திய அரசு அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்தது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதனை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுபினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பரிந்துரை அறிக்கைக்குப் பின்னரும் மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகப்பெரிய மனித தவறு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

-----_---------------_---------------_------------_--------------_-----------

மனித உயிர்களை விட

சோதிடமே முக்கியம்.

பொது சுகாதாரத்தை விட ஜோதிடர்களை திருப்திப்படுத்த மத்திய அரசாங்கமும், மாநிலஅரசாங்கமும் முடிவெடுத்ததால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அனுசரிக்கப்படுகிற கும்பமேளா ஹரித்வாரில் இம்முறை 11 ஆண்டுகள் முடிந்ததுமே நடத்தப்பட்டது.

கும்பமேளாக்கள் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. ஹரித்வார் கும்பமேளா கடைசியாக நடந்தது 2010-ம் ஆண்டில். எனவே,`தற்போதைய’ இந்தக் கும்பமேளாவை நடத்த வேண்டிய ஆண்டு 2021அல்ல, 2022.

ஆனால், இந்தியாவில் கோவிட் இரண்டாம் அலை வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில்கூட, முழுமையாக ஓராண்டிற்கு முன்னாலேயே கும்பமேளாவை நடத்த ஏன் முடிவெடுத்தார்கள்? அதுவும் மிக ஆபத்தான இந்த ஆண்டில் ஏன் நடத்தினார்கள்?

அதுவும், பெருந்தொற்று குறித்த ஆய்வுகள், எப்போதுமே முதலாம் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலைத் தொற்றுகள் மோசமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டிய பிறகும் ஏன் நடத்தப்பட்டது? காரணத்தை நான் சொல்கிறேன்.

Kumbh Mela

ஜோதிடக் கணிப்புகளின்படி, `சூரியன் மேஷ ராசிக்கும்’, `குரு (வியாழன்) கும்ப ராசிக்கும்’ இந்த ஆண்டில் இந்தக் காலகட்டத்தில் இடம்பெயர்கிறார்களாம். நாட்காட்டிக்கும், சோதிட கணிப்புக்கும் இருக்கும் இடைவெளியை சரிக்கட்ட ஓராண்டு முன்கூட்டியே நடத்தப்பட்டதாம்.

83 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நிகழுமாம். இந்தக் கணக்கின் சூட்சுமங்களை விளக்கும் திறன் எனக்கில்லை. உங்களுக்கு தலைவலி வர வேண்டாம் என்றால், அந்த வேலையில் நீங்களும் இறங்காதீர்கள். எனவே, இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் மாநில அரசாங்கமும் கும்பமேளாவை நடத்தாமல் இருந்திருக்கலாம்.

பல கோடி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த கோவிட் சூப்பர் தொற்று நிகழ்ச்சியை மிகச் சாதாரணமாகத் தவிர்த்திருக்க முடியும். இது 11-வது ஆண்டுதான். ஹரித்வாரில் கும்பமேளா நடந்து இன்னும் 12 ஆண்டுகள் முடியவில்லை எனச் சொல்லி, மிகச் சாதாரணமாக இந்த ஆண்டில் நடப்பதைத் தடுத்திருக்கலாம்.

வாய்ப்பிருந்தால் 2022-ம் ஆண்டில், இப்படிப்பட்ட ஒரு நிகழ்வை நடத்தும் புறச்சூழ்நிலையை உருவாக்குவதற்காக, இந்த முழு ஆண்டையும்கூட பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அந்த இரண்டு அரசாங்கங்களும் அப்படிச் செய்யாமல், இன்னும் கொடூரமான காரியங்களைச் செய்தன.

அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் ஆலோசனை நடத்தி, 2022-ம் ஆண்டு நடக்க வேண்டிய நிகழ்வை ஓராண்டு முன்கூட்டியே நகர்த்தி 2021-ம் ஆண்டில் நடத்தின. இந்தப் பெருந்தொற்றின் ஆபத்துகள் அனைத்தையும் அறிந்திருந்தும்கூட, சில மாபெரும் ஜோதிடக் கிறுக்குகள் விருப்பப்பட்டதால், இந்தக் காரியத்தை அந்த இரண்டு அரசாங்கங்களும் செய்தன.

ஒரு கிரிமினல் அத்துமீறலுக்குப் (பாபர் மசூதி இடிப்பைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்) பரிசாக ஒரு கட்டுமானத் திட்டத்தை (ராமர் கோவில் கட்டுமானத்தைக் குறிப்பிடுகிறார் கட்டுரையாளர்) உச்சநீதிமன்றமே வழங்குவதற்கு வழிவகுத்த ஓர் அரசியல் சட்டப் பிரிவு இருக்கிறதல்லவா?

அவர்களுக்கு மிகவும் பிடித்த `ஆச்சாரம்/நம்பிக்கை’ என்ற அதே அரசியல் சட்டப்பிரிவுதான், தற்போதும் இந்திய அரசாங்கத்தையும், உத்தரகண்ட் மாநில அரசாங்கத்தையும், மிகப் பிரம்மாண்டமான அளவில், மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான காரியத்தைச் செய்வதற்குத் தூண்டியது.

பெருந்தொற்று வரலாறு கொண்ட கும்பமேளா

பெருந்தொற்று பரவல் நடக்கும் இடம் என வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வு கும்பமேளா. இருந்தும், இந்திய அரசாங்கம் சில சமயங்களில் சிறப்பாகச் செயல்பட்டு, கும்பமேளா போன்ற நிகழ்வால் ஏற்படும் பொது சுகாதாரப் பிரச்னைகளைத் திறமையாகவும், அக்கறையுடனும் கையாண்டிருக்கின்றன.

அப்படி 2013-ம் ஆண்டின் அலகாபாத் மகா கும்பமேளா எந்தவிதமான மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்ததாக, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி நடத்திய பெருந்தொற்றுகள் குறித்த ஆழமான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால், அப்போது படுவேகமாகப் பரவிய பெருந்தொற்றுப் பிரச்சனை எதுவும் இல்லை. 2020-ம் ஆண்டில் இருந்து கோவிட் காட்டுத்தீயென பரவி வருகிறது. இந்நேரத்தில், கும்பமேளா நீராடலைப் போன்ற ஒரு நிகழ்வு, கொரோனா சுனாமியையே உருவாக்கும் திறன் பெற்றது என்பதையும், இரண்டாம் அலையின் மையப்புள்ளியாக இருக்கும் என்பதையும் ஊகிப்பதற்கு முனைவர் பட்டம் வேண்டுமா என்ன?

People queue up for COVID-19 vaccine

இந்தியாவில் அனைவருமே, இன்னும் சொல்லப்போனால், உலகில் எல்லோருமே இப்போது ஆபத்தை எதிர்கொள்கிறோம். ஏன்? தில்லியிலும், டேராடூனிலும் உள்ள சில அறிவிலிகள் எடுத்த முட்டாள் தனமான முடிவுகளால்!

`மிச்சமிருக்கும் கும்ப உற்சவத்தை அடையாள உற்சவமாக நடத்துங்கள், எனத் தாமதமாகவும், அரை மனதோடும்’ என நரேந்திர மோடியைக் கேட்கத்தூண்டிய நிலைமை உட்பட, இன்று நாம் எதிர்கொள்ளும் எதுவும் எதிர்பாராத நிகழ்வுகள் அல்ல.

சின்மை தும்பேயின் சமீபத்திய நூலான, “பெருந்தொற்றுகளின் காலம்: அவை எப்படி இந்தியாவையும் உலகத்தையும் வடிவமைத்தன (The Age of Pandemics: How They Shaped India and the World)”, பெருந்தொற்றுகளையும், கும்பமேளாக்களையும் பற்றிய குறிப்பிட்ட விவாதத்தை உள்ளடக்கி இருக்கிறது.

மேலும், 1986-ம் ஆண்டில் வெளிவந்த டேவிட் ஆர்னால்டின், `காலராவும், பிரிட்டிஷ் இந்தியாவில் காலனியமும்’ என்ற கட்டுரையும், காமா மெக்லீனின் `புனித யாத்திரைகளும் அதிகாரமும்: அலகாபாத்தில் கும்பமேளா, 1765-1954’ என்ற 2008-ல் வெளியான நூலும் மிகவும் பயனுள்ளது.

கும்பமேளா மற்றும் தொற்றுகள் குறித்த வரலாறு பல ஆண்டுகளாக மிகச் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்திடம் உள்ள காலரா குறித்த மோனோகிராஃபில் கும்பமேளாவைப் பற்றிய தனி அத்தியாயமே இருக்கிறது.

1895-ம் ஆண்டு இந்திய மருத்துவ கெஸட்டில், ஹரித்வார் காலரா தொற்றுகள் குறித்த இயற்கை வரலாறு என்ற கட்டுரையும், `கும்பமேளா பற்றிய விரிவான ஆய்வு: தொற்றுநோய்ப் பரவலுக்கான ஆபத்துகளைக் கண்டறிவது – 2015’ என்ற சமீபத்திய ஆய்வுத்தாளும் கூட இருக்கின்றன.

எனவே, இவ்வளவு பெரிய ஆபத்தான வழியில் செல்வதற்கு, பிரதம மந்திரி மற்றும் அவருடைய ஆலோசகர்களின் அறியாமைதான் காரணமா? அல்லது ஆபத்துகளை அறிந்திருந்தும் எடுக்கப்பட்ட அப்பட்டமான அரசியல் முடிவா?

அரசாங்கத்துக்கு இந்த ஆபத்துகள் எல்லாம் நன்றாகவே தெரியும். உத்தரகண்ட் மாநில அரசாங்கம் கடந்த ஓராண்டாக, கும்பமேளாவை நடத்துவது குறித்தும், நடத்தப்படும் விதம் குறித்துப் பேசியது, பொது சுகாதார ஆபத்துகள் பற்றிய அதன் புரிதலை நன்கு வெளிப்படுத்துகிறது.

2020 ஜூலையில் அப்போதைய முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் (பா.ஜ.க), அகில பாரதிய அக்காதா பரிஷத்திடம் வழக்கம்போல கும்பமேளா நடைபெறும் என்று வாக்குறுதி அளித்தார். (எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்லும் நிலையில் அவர் அப்போது கிடையாது. எனவே அப்படிப்பட்ட உறுதிமொழிகளை அள்ளிவீசும் நிலையிலும் அவர் அன்றைக்கு இருக்கவில்லை!). எனினும் அப்போதைய கொரோனா சூழலைப் பொறுத்து அது நடத்தப்படும். பாரம்பரியமான முறைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம்” என பி.டி.ஐ செய்தி நிறுவனம் அவரைச் சுட்டிக்காட்டியது.

செப்டம்பர் 2020-ம் ஆண்டில் திரிவேந்திர சிங் ராவத் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் இருக்கும் என்றார். டிசம்பர் 2020-ம் ஆண்டில், அக்காதா பரிஷத்தின் `துறவிகள்’, அரசாங்கம் மேற்கொள்ளும் கும்பமேளா ஏற்பாடுகள் தங்களுக்கு `அதிருப்தி’ தருவதாகச் சொன்னார்கள்.

வரக்கூடிய பேரிடரை உணர்ந்திருந்ததால் அதை நடத்த முனைப்புக் காட்டாமல் கூட உத்தரகண்ட் மாநில அரசாங்கம் இருந்திருக்கக்கூடும்; கடைசி நேரத்தில் `போதிய தயாரிப்புகள் இல்லை’ என்ற காரணத்தைப் பயன்படுத்தி நடத்தாமல் இருக்கும் எண்ணத்தில்கூட இருந்திருக்கலாம். எனினும், பரிஷத் `எங்கள் வழியில் நாங்கள் நடத்துவோம்’ என மிரட்டியது.

2021 மார்ச் 9-ல், திரிவேந்திர சிங் ராவத் ராஜினாமா செய்தார். அடுத்ததாகப் பதவிக்கு வந்த தீரத் சிங் ராவத், `அதெல்லாம் எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது, புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கு ஒரு கட்டுப்பாடும் இருக்காது, கங்கை அன்னை அருளால், இந்தத் தொற்று நோயை வென்றுவிடுவோம்’ என்றார்.

திரிவேந்திர சிங் ராவத் பதவியை விட்டு விலகிய பிறகு, கும்பமேளாவிற்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பப்பெறப்பட்டது தொடர்பாக அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

தீரத் சிங் ராவத்

இந்தியாவில் `கோவிட் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதிரியான பிரம்மாண்டமான மத நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது, மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்று அவர் சொன்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

அவருடைய கூற்று, கும்பமேளாவைக் கையாள்வது குறித்து, பாஜகவின் மத்திய தலைமைக்கும், உத்தரகண்ட் மாநில பா.ஜ.கவின் ஒரு சில கோஷ்டிகளுக்கும் இருந்த கருத்து வேறுபாடு, ராவத் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்திருக்குமோ என்று நினைக்கத் தூண்டுகிறது.

ஏப்ரலில் இந்த நிகழ்வு தொடங்கியபோது, மத்திய குடும்ப நலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் கலவையான செய்திகளையே அனுப்பியது. ஏப்ரல் 6-ம் தேதி, அரசால் ஆதரிக்கப்படுகிற செய்தி ஏஜென்சியான ஏ.என்.ஐ, `சூப்பர் தொற்று பரவல் நிகழ்வாக’ கும்பமேளா இருப்பது குறித்து, மூத்த அரசு அதிகாரிகள் கவலை தெரிவிப்பதாக செய்தி ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் சிறிய மாற்றங்களைச் செய்து, பல்வேறு செய்தித் தளங்களும், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களும் செய்தி வெளியிட்டன. `இந்தியா டுடே செய்தி போலியானது’ என்று மறுநாளே மத்திய குடும்பநலம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. மிகச் சுருக்கமான அந்த மறுப்பு, ஒரு அரசு அதிகாரியின் கூற்று தவறாக சித்தரிக்கப்பட்டதா இல்லையா என்று கூட தெளிவுபடுத்தவில்லை.

இந்திய அரசாங்கம் தீவிர பொது சுகாதார அவசர நிலையை கும்பமேளா ஏற்படுத்தக்கூடும் என்பதை மறுக்கும் மனநிலையில் மட்டுமே இருக்கிறது. அதற்காக ஒரு மூத்த அதிகாரியின் கூற்றைக் கூடத் திரும்பப் பெறும் அளவுக்குச் செல்கிறது என்ற எண்ணத்தையே அந்த ட்விட்டர் செய்தி ஏற்படுத்தியது.

அரசியல் குற்றம்

ஆரம்பத்தில் கோவிட் 19 பெருந்தொற்று எண்ணிக்கையை சரியாகக் குறிப்பிடுவதில் நடந்த தவறுகளுக்கு சீன அரசாங்கம் பொறுப்பாக இருக்கலாம். ஆனால், அவர்கள் நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்கள், நோயை அதிகரிக்கக்கூடிய எதையும் அவர்கள் செய்யவில்லை.

ஆனால், இந்தியாவை ஆளும் இந்தத் தரப்பு, தொற்றுகளின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டிருக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம்.

சீன அரசாங்கத்தைப் போல, முற்றிலும் எதிர்பாரா நிலையில் இதெல்லாம் நடந்துவிட்டது என்று இந்திய அரசாங்கம் இம்முறை சொல்லவும் முடியாது.

இரண்டாம் அலை வரும் என்பதை அறிந்துகொள்வதற்கு அவசியமான அனைத்து அறிவையும் இந்திய அரசாங்கம் பெற்றிருந்தது. அது மட்டுமல்லாமல், இந்த நேரத்தில் கும்பமேளாவை நடத்தத் தேவையே இல்லை என்ற நிலை இருந்தும்கூட, அதை நடத்தி உண்மையில் இரண்டாம் அலை ஏற்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தது.

பல்வேறு அரசாங்க அமைப்புகள் ஒன்றுக்கொன்று முரணாகச் செயல்பட்டதும், முரணான செய்திகளை வெளியிட்டதும் பாதிப்புகளை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தன. (உதாரணமாக பிரதமர், மேற்கு வங்கத்தில் மிகப்பெரும் தேர்தல் கூட்டங்களுக்கு மக்களை வரவழைத்துக்கொண்டே, மிச்சமுள்ள கும்பமேளாவின் பூஜைகளை அடையாள நிகழ்வாக நடத்திக்கொள்கிறீர்களா என, அதுவும் மிகத் தாமதமாகவே கேட்டார்)

எது மிக மோசமானது என்றால், செய்ய வேண்டிய நேரத்தில் ஒன்றுமே செய்யாமல் இருப்பதும், ஒன்றுமே செய்யத் தேவையில்லாத நேரத்தில் மிக அதிகமாகச் செய்வதும், இல்லையென்றால் எண்ணிக்கையில் குளறுபடிகள் செய்வதும், இல்லையென்றால் அப்பட்டமான பொய்களைச் சொல்வதும்தான் (கடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேசத்தின் இறப்பு எண்ணிக்கை).

இந்திய அரசாங்கமும், உத்தரகண்ட் மாநில அரசாங்கமும் மிகப் பெரும் அளவில் சொதப்பிவிட்டது என்று எல்லோரும் சொன்னார்கள். 83 ஆண்டுகள் முடிந்ததோ இல்லையோ, இந்த ஆண்டு கும்பமேளாவை 11 ஆண்டு முடிந்த நிலையில் ஓராண்டு முன்கூட்டியே நடத்த எந்தவொரு நியாயமும் இல்லை.

மேலும், தடுப்பூசித் திட்டத்தின் அமலாக்கம் மிக மிகத் தொடக்க நிலையில் இருக்கும் போது இப்படியொரு நிகழ்வை நடத்தி இருக்கிறார்கள். கும்பமேளா போன்ற மிகப்பிரம்மாண்டமான அளவில் ஒரு பெருங்கூட்டத்தை நடத்தியதை எவர் ஒருவராலும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

oxygen level i

தேர்தலுக்கும் இதுதான் பொருந்தும்

முதுகெலும்பிருந்தால், அல்லது மூளை இருந்திருந்தால் தேர்தல் ஆணையம் தேர்தல்களைத் தள்ளிவைக்க வலியுறுத்தி இருக்க முடியும், அல்லது குறைந்தது பெரிய கூட்டங்கள், பேரணிகளுக்காவது தடைவிதித்திருக்க முடியும். ஆனால், இதெல்லாம் நடக்கவில்லை.

ஜோதிடம் பொது சுகாதாரத்தை நசுக்க அனுமதிக்கப்பட்டது ஏன்?

இதற்கு முன்னர் கும்பமேளா ஓராண்டிற்கு முன்னதாக நடத்தப்பட்டிருக்கிறதா? ஆமாம். 1938, 1855-ம் ஆண்டில், இதேபோல `ஜோதிட இடப்பெயர்வுகள்’ நடந்தபோது இப்படி செய்யப்பட்டிருக்கிறது. நாம் என்ன 1938-லும், 1855-லுமா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்?

காற்றால் பரவும் பெருந்தொற்றை நாம் 1938-ம் ஆண்டில் எதிர்கொண்டோமா?

1855-ம் ஆண்டில் கும்பமேளா வந்தபோது காலரா பெருந்தொற்று இருந்தது. அந்தக் கும்பமேளா நிகழ்வு காலராவின் தாக்கத்தைப் பெருமளவில் அதிகப்படுத்தவும் செய்தது. பெருந்தொற்று தொடர்பான அறிவு குறைவாக இருந்த அந்தக்காலத்தில்கூட, இதைப் பற்றிப் பேசப்பட்டிருக்கிறது. 1866-ம் ஆண்டில் இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலகத் தூய்மைப்பணி சிறப்பு மாநாடு (International Sanitary Convention) குறிப்பாக கும்பமேளா புள்ளியில் தொடங்கிய நோய்த் தொற்றைக் குறித்த அறிக்கைகள் மீது கவனம் செலுத்தியது.

1866-ம் ஆண்டில் உருவான சர்வதேச ஒருமித்தக் கருத்தின்படி, `கங்கை ஆற்றை ஒட்டிய இந்தியப் புனித யாத்திரைத் தளங்கள் காலரா தொற்றை உருவாக்கிய இடங்களாக இருந்தன என்றும், அதன் பிறகு அங்கிருந்து முதலில் மெக்காவுக்கும், பிறகு எகிப்துக்கும் சென்று, பிறகு ஐரோப்பாவின் மத்திய தரைக்கடல் பகுதி துறைமுகங்கள் வாயிலாக ஐரோப்பாவில் புகுந்து, முக்கிய ஐரோப்பிய நகரங்களைத் தாக்கியது’ – என, 1866-ம்ஆண்டில், அன்றைய ஒட்டோமான் துருக்கிய அரசின் தலைநகராக இருந்த இஸ்தான்புல்லில் பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற சர்வதேச தூய்மைப்பணி சிறப்பு மாநாட்டின் உரைத் தொகுப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பெருந்தொற்றுகள் பற்றி 1938 அல்லது 1855-ல் பெற்றிருந்த அறிவைக் காட்டிலும் கூடுதல் அறிவை நாம் 2021-ம் ஆண்டில் பெற்றிருக்கும் நிலையில், பகுத்தறிவு பெற்ற, அறிவார்ந்த அரசாங்கம், `புனிதர்கள்’ என்று தங்களைத்தாமே நியமித்துக்கொண்ட ஒரு சிறிய குழுவினரை, தன்னுடைய அனைத்து வகையான சக்திகளையும் பயன்படுத்தி சம்மதிக்க வைத்திருக்க முடியும். இந்த ஒரே முறை மட்டும் ஜோதிடத்தை சற்று தள்ளிவைத்துவிட்டு, எளிமையாக நாட்காட்டிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் முறையையே பின்பற்றி இருக்கலாம். பொது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் இடையிலான முறையான, பகுத்தறிவு அடிப்படையிலான விவாதத்துக்கு உதாரணமாக இது இருந்திருக்க முடியும்.

`இப்படி ஒரு பேரிடர் ஏன், எப்படி நிகழ்ந்தது’ என்று எந்தவொரு விளக்கத்தையும் தங்களுடைய துறையான ஜோதிடத்தில் இருந்து, இந்தியாவின் ஒட்டுமொத்த ஜோதிடர்களாலும் தரமுடியாத நிலையில், நாம் இப்போது சற்று தள்ளி இருப்போம் என அவர்கள் முடிவெடுத்திருக்கலாமே? அதுவும் குறிப்பாக, `ஒரு சூப்பர் பெருந்தொற்று நிகழ்வை’ அரசாங்கம் ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து முக்கிய, பெரிய கொள்கை முடிவை எடுக்கும் வரையாவது நாம் தலையிடாமல் இருப்போம் என இருந்திருக்கலாமே? அதற்குத் தேவை கொஞ்சம் பொது அறிவுதானே?

1942: கும்பமேளாவைத் தடை செய்த போர்

இறுதியாக, கடந்தகாலத்தில் அரசாங்க முகமைகள் திறமையாகச் செயல்பட்டு, கும்பமேளா நிகழ்வுகளைத் தடுத்திருக்கின்றனவா? இந்த ஆண்டு நாம் நடத்த வேண்டாம் என முடிவெடுத்ததற்கான உதாரணங்கள் இருக்கின்றனவா? இருக்கின்றன.

அலகாபாத்தில் 1942-ம் ஆண்டில் நடைபெற்ற, கும்பமேளாவும், மகாமேளாவும் இணைந்த நிகழ்விற்காக, இந்திய அரசாங்கம் எந்த ஒரு ஏற்பாடுகளையும் செய்து தரவில்லை. அந்தக் கும்பமேளா நடைபெற்ற காலம் முழுவதும் அலகாபாத்துக்கு ரயில் டிக்கெட்டுகள் ஏதும் விற்பனை செய்யப்படவில்லை.

இதன் வாயிலாக, கும்பமேளாவுக்குப் போகும் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. `ஜப்பானிய விமானப்படை குண்டு வீசக்கூடும்’ என்ற காரணம் காட்டி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கும்பமேளா பகுதியில் மக்களுக்கு எந்தவோர் ஏற்பாடுகளும் செய்து தரப்படவில்லை. விளைவாக, அந்தக் கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் ஆதரவு தர முடியாது என்ற முடிவெடுத்ததற்கு, அன்றைக்கு அக்காதா-க்கள் ஒன்றும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அன்றைக்கு அனைத்து தரப்பினரும், இந்த மாதிரியான ஒரு சூழலில், இப்படியொரு முடிவை எடுக்க வேண்டியது இயல்புதான் எனப் புரிந்துகொண்டார்கள். இம்முறையோ, ரயில்களை ரத்து செய்வதற்குப் பதிலாக, இந்திய ரயில்வே டேராடூனுக்கும், ரிஷிகேஷுக்கும் இடையில் சிறப்பு ரயில்களை இயக்கியது.

Prime Minister Narendra Modi

Also Read:

மேலும், அரசாங்கம் பெரும் எண்ணிக்கையில் கூடுவதைத் தூண்டும் வகையில் செய்தித்தாள், ரேடியோ, தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தது.

இந்த ரயில்களை இயக்க வேண்டாம் என்றோ, இந்த நிகழ்வுக்கு விளம்பரம் செய்ய வேண்டாம் என முடிவுசெய்திருந்தாலே மிகப் பெரிய வேறுபாடு ஏற்பட்டிருக்கும்.

ஆனால், அப்படிச் செய்யவில்லை. அதை எப்படிச் செய்யமுடியும்? இவர்களுக்கு வெல்ல வேண்டிய தேர்தல்கள் இருக்கின்றன. இந்தப் புனிதச் சாமியார்களின் ஆதரவு இவர்களுக்குத் தேவைப்படுகிறது; அதே போல, கான்ட்ராக்ட்களில் இருந்தும் பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது; லட்சக்கணக்கானோரை நோய்வாய்ப்படச் செய்யும் திறன்படைத்த இந்த நிகழ்வில் இருந்து விளம்பர வருவாயைப் பெற முடியும்.

எனவே இந்திய அரசாங்கத்திலும், உத்தரகண்ட் மாநில அரசாங்கத்திலும் தலைமையில் உள்ள மனிதர்கள் மரணப் பொறியை வைத்தார்கள். அவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என நன்றாகவே தெரியும். அந்த `புனிதர்களுக்கும்’ கூட என்ன நடக்கிறது என்பது முழுமையாகத் தெரியும்.

`மரணம் தவிர்க்க முடியாதது, நமது பாரம்பரியத்தை நாம் தொடர வேண்டும்’ என ஜூனா அக்காதாவின் தலைமை சாமியார் மகந்த் நாராயண் கிரி ஏப்ரல் 17-ம் தேதி அன்று சொன்னார். தானும் தன்னுடைய `புனித’ சாமியார்களும், ஏன் கும்பமேளாவிற்குக் கூடுவதைத் தடுக்க வேண்டுகோள் விடுக்கவில்லை என்று விளக்கியபோது, அவர் இப்படிச் சொன்னதுடன், `எனக்கு ஹரித்வாரில் இது ஒரு வழக்கமான நிகழ்வுதான்’ என்று வேறு சொல்லி இருக்கிறார். `சாக வாருங்கள்!’ என்ற இப்படிப்பட்ட திறந்த அழைப்பு ஏன் எல்லா தளங்களிலும் கண்டிக்கப்படவில்லை எனச் சில மென்மையான மனங்கள் கேள்வி கேட்கலாம்.

modi

Also Read:

அதுவும், இதைவிடக் குறைவாகப் பேசியதற்காக, தப்லிக் ஜமாத் அடித்துத் துவைக்கப்பட்டதை நாம் அறிவோம். உண்மையான சனாதன மனங்களுக்கு இது ஏன் என்று புரியும்?

கர்ம வினையையும், மறுபிறவியையும் நம்பும் `நல்ல இந்துக்கள்’, வாழ்க்கை எனும் விளையாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். மரணம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம், ஆனால், ஜூனா அக்காதா போன்ற தெய்வீகத்தன்மையின் மகிமைக்குக்கூட, மரணம் என்பது மாற்ற முடியாத ஒன்றுதான்.

நீங்கள் இன்றைக்கு இறக்கலாம். ஆனால், நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்டதால் நீங்கள் சேர்த்த உங்கள் கர்மவினை, நாளையே உங்களுக்கு மறுபிறவியைத் தரப்போகிறது. அதனால், உங்கள் கர்ம வினையை இன்னும் வலுப்படுத்த, இன்னும் நீண்ட நேரம், இன்னும் ஆழமாக நீங்கள் ஏன் கும்பமேளா மரணக்குழியில் மூழ்கக்கூடாது. நீங்கள் வாழுங்கள், மரணியுங்கள், நீங்கள் வாழுங்கள், தொற்றைப் பிறர்க்குப் பரப்புங்கள், இப்படியே தொடருங்களேன்.

நம்மில் சிலர் அந்தளவுக்கு அருள் பெற்றவர்களாக இருக்க மாட்டார்கள். ஏனெனில், கடவுள் நம்பிக்கையிலும் சரி, கடவுள் நம்பிக்கை இல்லா சிந்தனையிலும் சரி, ஒரு பிறப்பில் ஒரு முறைதான் வாழ்க்கை. அதன்படி, நமக்குக் கொடுக்கப்பட்ட காலத்தை இன்னும் நீட்டித்து, நம்முடைய வாழ்க்கையைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்க வேண்டும்.

அதே போல், மற்றவர்களின் வாழ்க்கையை நீட்டிக்கவும், பாதுகாக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டும். குறிப்பாக, மாஸ்க் அணிவதன் மூலமும், கூட்டம் கூடுவதைத் தவிர்த்தும், சமூக இடைவெளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கடைப்பிடித்தும், இந்த நோயைப் பரப்பும் விஷயங்களில் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளி இருந்தும், குறிப்பாக, நம்முடைய வாழ்க்கையையும், இறப்பையும் சர்வ சாதாரணமாகக் கருதும் இந்த மதங்களில் இருந்தும் அரசாங்கத்திடம் இருந்தும் நம்மை நாம் விலகி இருக்க வேண்டும்.

ஆனால், இந்த `அன்பிற்குரிய இந்தியர்களும், அன்பிற்குரிய இந்துக்களும்தான்’ உங்கள் தலைவர்களாக இருக்கிறார்கள், உங்களுடைய புனித குருக்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் உங்களின் கண்ணாடியாகவும், உங்களின் மரண விருப்பமாகவும் இருக்கிறார்கள். அவர்களின் தரிசனத்தைப் பெறுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களைப் பார்த்து சிரிக்க வேண்டிய தேவையை உணராமல் நட்சத்திரங்கள் சொர்க்கத்தில் அலட்சியமாக இருக்கின்றன. வெளிப்படையாகச் சொல்வதென்றால், நீங்கள் அவற்றைப் பற்றி என்ன நினைத்தாலும், அவை உங்களை சட்டையே செய்யாது.உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கு எனது வாழ்த்துகள்!

`The Wire’ இணையதளத்தில் சுத்தபிரதா சென்குப்தா என்பவர் எழுதிய `‘ கட்டுரையின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.

தமிழில்: நர்மதாதேவி / தீக்கதிர்

சனி, 24 ஏப்ரல், 2021

தாடி வளர்த்த நேரத்தில

பேரிடரிலும்  கார்பரேட் நலன்.

எரிகிற வீட்டில் எடுத்தது லாபம் என்பதைப் போல - கொரோனா காலத்திலும் கொள்ளைகள் தொடர்கிறது. அதுவும் கொரோனாவை வைத்து அடிக்கும் கொள்ளைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம் ஆகி வருகிறதே தவிர குறையவில்லை! கொரோனா தடுப்பூசியின் விலையின் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு நன்மை செய்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுமைக்கும் கேட்கிறது.

மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தாலும் அது அவரது நண்பர்களுக்கு நன்மை செய்வதாக இருக்கும். பொதுத்துறை நிறுவனங்களை விற்றாலும் அதனால் பலனடைபவர்கள் அவரது நண்பர்களாக இருப்பார்கள். ரயில் நிலையங்களை விற்றாலும் விமான நிலையங்களை விற்றாலும் அதனால் நன்மை அவரது நண்பர்களுக்கே. இதோ இப்போது கொரோனாவால் நன்மை அடைபவர்களும் மோடியின் நண்பர்களே! கோவிஷீல்டு தடுப்பூசியைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம், ஒரே ஊசிக்கு மூன்று விதமான விலையை நிர்ணயித்துள்ளது.

ஒரு டோஸ் மருந்தை மத்திய அரசு வாங்கினால் 150 ரூபாய். அதையே மாநில அரசு வாங்கினால் 400 ரூபாய். தனியார் மருத்துவமனைகள் வாங்கினால் 600 ரூபாய்க்கு மேல். இதுதான் சீரம் நிறுவனத்தின் மருந்துக் கொள்கை. கொள்கை அல்ல; இது கொள்ளை. மாநில அரசுகளே, தடுப்பூசியைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று இப்போது அறிவித்துள்ளார்கள். எதற்காக இந்த அறிவிப்பு என்று இப்போது தெரிகிறதா?

மாநில அரசுகளே அதிகப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான். ஏற்கனவே மாநில அரசின் வரி வருவாயை ஜி.எஸ்.டி. கொள்கை மூலமாக மத்திய மோடி அரசு தனது கஜானாவுக்குக் கொண்டு போய்விட்டது. இதனால் பல்வேறு மாநிலங்கள் ‘வறுமைக் கோட்டுக்கு கீழே' வாடி வதங்கிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா காரணமாக அனைத்தும் தடைப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து தடுப்பூசியையும் கொள்ளை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றால் எப்படி?

கொரோனா ஒழிப்பை விட‘மாநிலங்கள் ஒழிப்பு தான்' மோடி அரசின் மறைமுகத் திட்டமா? ஒரு தனியார் நிறுவனத்தை வாழ வைக்க மொத்த மாநிலங்களையும் சுரண்டத் திட்டமா? ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தடுப்பூசிக்கு மூன்று வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும்? அப்படி ஒரு நிறுவனம் விலையை நிர்ணயிக்குமானால் அதனை தடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தானே இருக்கிறது? மாறாக, மத்திய அரசே இதற்கு பச்சைக் கொடி காட்டுகிறது என்றால் இது பச்சைத் துரோகம் ஆகாதா?

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் சார்பில் எதையாவது செய்துள்ளார்களா இந்த ஓராண்டு காலத்தில் என்றால் இல்லை. ஆனால் சுரண்டலை மட்டும் நடத்துகிறார்கள். தடுப்பூசிக்குக் கூட பணம் வசூலிக்கும் கொடூர அரசு இது. அதுவும் அதிகப்படியான பணம் வசூலிக்கும் பஞ்ச மாபாதக பா.ஜ.க. அரசு இது. இந்த விலை நிர்ணயம் குறித்து வ இந்தியன் டிரக்ஸ் அண்ட் காஸ்மாட்டிக்ஸ் சட்டம், இந்திய காப்புரிமை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் எல்லாம் என்ன ஆனது?" 

*மருந்து தயாரிப்புத் துறை என்பது அரசு வசம்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ஆரோக்கியத்தை சாத்தியப்படுத்த முடியும். அது ஒரு போதும் தனியார்கள் கோலோச்சும் நிலைக்கு சென்றுவிடக் கூடாது என்பது என் உறுதியான நிலைப்பாடு என்றார் பிரதமர் ஜவகர்லால் நேரு!

இந்தியன் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் என்ற அரசுத்துறை நிறுவனத்தை 1961 ஆம் ஆண்டு திறந்த போது அவர் பேசியதுதான் மேற்படி வாசகம்! இந்த நிறுவனத்திற்கு தலைமை இடம் தவிர்த்து நான்கு கிளைகள் உருவாக்கப்பட்டது. அந்த நிறுவனங்களில் நான்கை மோடி அரசு இழுத்து மூடிவிட்டது!

*உயிர் காக்கும் மருந்துப் பொருள் தயாரிப்பில் இந்தியா சுய சார்பு நிலையை எட்ட வேண்டும். தனியார்களையோ, வெளி நாடுகளையோ நம்பி இருக்கக்கூடாது என்பதற்காக ஐ.டி.பி.எல்.-ஐ சோவியத் யூனியனின் ஒத்துழைப்போடு உருவாக்கினார் நேரு.

இதன் முதலாவது ஆலை ஹைதராபாதில் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு திட்டம், காலரா ஒழிப்பு, தொழுநோய் ஒழிப்பு, காச நோய் ஒழிப்பு ஆகியவற்றில் ஐ.டி.பி.எல்.-லின் பங்களிப்போடுதான் நாம் இமாலய சாதனைகளை நிகழ்த்தினோம்.

* இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சினுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இது தவிர ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தும் கொரோனா வைரஸ் தடுப்பூசியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு முன் பணமாக தற்போது ரூ.4,500 கோடி தரப்போவதாக பிரதமர் கூறியுள்ளார்.

* இந்திய மருந்து சந்தை என்பது தனியார் நிறுவனங்களின் வேட்டைக் காடாக உள்ளது. இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன! இவர்களின் ஆண்டு சந்தை ரூபாய் 4,50,000 கோடிகளாகும். அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐ.டி.பி.எல்.லையும், மற்ற எட்டு அரசு நிறுவனங்களில் ஆறையும் செயல் இழக்க வைத்துவிட்டு, தனியாரிடமிருந்து அனைத்தையும் கொள்முதல் செய்யும் துர்பாக்கிய நிலைக்கு அரசாங்கம் வந்துவிட்டது.

* இந்தக் காரணங்களால்தான் அரசு நிர்பந்திக்கும் தடுப்பூசி மருந்துகளின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது. இதுவே அரசு தயாரிப்பு என்றால் மக்களுக்கு மகத்தான நம்பிக்கை ஏற்பட்டிருக்குமல்லவா? என்று அவர் பல்வேறு ஆதாரப்பூர்வ தகவல்களைக் கொடுத்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்.

ஆர்.டி.பி.எல். எனப்படும் அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை சப்ளை செய்யும் ராஜஸ்தான் டிரக்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், பி.சி.பி.எல். எனப்படும் பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், தமிழ்நாடு பார்மசூட்டிக்கல்ஸ், இந்துஸ்தான் ஆன்டிபயாடிக் நிறுவனம், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.) நிறுவனம் இவை அனைத்தும் மத்திய அரசின் மாற்றாந்தாய் கொள்கையால் முன்னேற்றம் காண முடியாமல் போய்விட்டன என்கிறார் அவர். மக்களுக்கு மாபெரும் வஞ்சகத்தைச் செய்து வருகிறது மோடி அரசு. மக்கள் திரும்பினால் காணாமல் போய்விடுவீர்கள்!

------------------------------------

தாடி வளர்த்த நேரத்தில

செய்திருக்கலாமே மோடி.?

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனம் மத்திய அரசு, மாநில அரசு, தனியார் நிறுவனங்கள் என மூன்று மாதிரியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

கொரோனா தொற்று நாட்டையே சூறையாடி வரும் நிலையில், மக்களுக்கு தடுப்பூசி அளித்துக் காக்கும் கடமையை மறந்து கார்ப்பரேட்களுக்கு லாபம் குவித்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது மோடி அரசு.

நாடு முழுவதும் இலவச தடுப்பூசி வழங்க முன்வராத பிரதமர் மோடி, மேற்கு வங்கத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அங்கு இலவச தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவித்த பா.ஜ.க அரசு, தற்போது வரை இலவச தடுப்பூசி அளிக்காமல் மக்களை ஏமாற்றி வருகிறது.

அதேபோல, தற்போதும் தேர்தலைக் குறிவைத்து, கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவோம் என மேற்கு வங்க மக்களை பா.ஜ.க ஏமாற்ற முயல்வது கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

------

"-என் தாயை யாராவது பார்த்துக்கோங்க’ என உள்ளே நுழைய முடியாமல் கதறும் ஒரு மகன். விக்கலை போல் மூச்சுக்காக ஏங்கித் திணறி சரியும் கணவனை கண்டு கதறி எழும் மனைவி, ‘அப்பாவை யாராவது பாருங்க...’ என கதறும் மகனை கேட்டு ஆம்புலன்ஸ்ஸுக்குள் சென்று பார்க்கும் ஒருவர், ‘கெட்ட சேதி’ என சொல்லி இறங்குகிறார், அசையாமல் கிடக்கும் மகனை பார்த்து கோபத்துடன், ‘எழுந்திரிடா, எழுந்திரிடா’ என திட்டிக் கொண்டிருக்கும் தாய்! மோடி கட்டமைத்திருக்கும் இந்தியாவின் லட்சணம் இதுதான்!

கோவிட் பரவலின் முதல் அலை கடந்த வருடம் நேர்ந்தது. உலகமே விமான போக்குவரத்தை நிறுத்தி வைத்திருந்த சமயம் மோடி மட்டும் விமானம் வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்து வந்து அகமதாபாத்தில் பெரிய கூட்டம் நடத்தி குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தையும் ஒடுக்கிக் கொண்டிருந்தார். பிறகொரு நன்னாளில் ‘அனைவரும் கரகோஷம்’ எழுப்புங்கள் என தொலைக்காட்சியில் தோன்றி பொறுப்பில்லாமல் அறிவிக்க, ஊருக்குள் கூட்டம் கூட்டமாக பாத்திரம் தட்டும் சம்பவங்களும் நடந்தேறின. பிறகொரு நன்னாளில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, சில மணி நேரங்களே இடைவெளி இருக்கும் நிலையில் பொது முடக்கம் அறிவித்தார். வெவ்வேறு ஊர்களிலும் மாநிலங்களிலும் சென்று வேலை பார்க்கும் மக்கள் விழுந்தடித்துக் கொண்டு பேருந்து நிலையங்களில் குவிந்தனர். கோவிட்டுக்கான குவிமையங்கள் வெற்றிகரமாக உருவாகின.

மக்களின் வாழ்வாதாரத்துக்கான எந்தவித பொருளாதார கவசமும் அறிவிக்கப்படவில்லை. நிதி அமைச்சர் மட்டும் திடுமென ஒருநாள் ஞாபகம் வந்து திரையில் தோன்றி ஏற்கனவே வழக்கில் இருக்கும் நலத்திட்டங்களை புதிதாக அறிவிப்பது போல் அறிவித்தார். மோடியும் தாடி வளர்க்கையில் கிடைத்த இடைவெளிகளில் அவ்வப்போது தோன்றி விளக்கு ஏற்றவும் மீண்டும் கைதட்டவும் விமானங்களில் மருத்துவமனைகள் மீது பூக்கள் கொட்டவுமென கார்ப்பரெட் நிறுவன HR போல புதுப்புது டாஸ்க்குகளை கொடுத்துக் கொண்டிருந்தார்.

இவற்றுக்கு இடையே இந்தியாவை இந்தியாவாக கட்டமைத்த பெரும் தொழிலாளர் கூட்டம் தங்களின் ஊர்களுக்குத் திரும்ப முடிவெடுத்தது. மொத்த நாட்டிலும் முடங்கிப் போய் வெறித்துப்போன சாலைகளில் குறுக்கும் மறுக்குமாக நடக்கத் தொடங்கியது. பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டதால் அவர்களுக்கு வேலை தந்த முதலாளிகளுக்கு தொடர்ந்து வேலை கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கு தொடர்ந்து ஊதியம் கொடுக்கவும் அவர்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. அவர்களுக்கு பொருளாதார உதவி செய்யும் அக்கறையும் மோடியின் அரசுக்கு இருக்கவில்லை. உணவுமின்றி வேலையுமின்றி என்ன செய்வதென தெரியாமல் ஊர்களுக்கு திரும்ப அவர்கள் முடிவெடுத்தபோது பேருந்துகள் இல்லை. ரயில்கள் இல்லை. நடக்கத் தொடங்கினர்.

ஜம்லோ என்கிற 12 வயது பெண் தெலங்கானாவிலிருந்து சொந்த ஊரான சட்டீஸ்கரின் பிஜாப்பூருக்கு 150 கிலோமீட்டர் பயணத்தை தொடங்கி ஊருக்கு ஐம்பது கிலோமீட்டர் இருக்கும்போது சாலையில் விழுந்து இறந்தாள். மத்திய பிரதேசத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், ‘பொது முடக்கம் என்கிறார்களே.. ரயிலும் முடக்கப்பட்டுதானே இருக்கும்’ என நினைத்து ரயில் பாதையில் இளைப்பாறினார்கள். ஆனால் மோடி இந்தியாவில் மக்களுக்குதான் முடக்கம், முதலாளிகளுக்கு அல்ல என்பதை அவர்கள் தெரிந்திருக்கவில்லை. சரக்கு ரயில் ஓடி வந்து அவர்கள் மீது ஏறி அரசின் உண்மையான அக்கறை யாரின் மீது என்பதை புரிய வைத்து ஓடியது. 16 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாயினர். இன்னொரு பக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டத்தை அரசதிகாரிகள் பிடித்து உட்கார வைத்து கிருமிநாசினியை பீய்ச்சி அடித்தனர்.

உத்தர பிரதேச யோகி அரசுக்கு வேறொரு முக்கியமான கவலை இருந்தது. முதலாளிகளுக்கும் நிறுவனங்களுக்கும் லாபத்தை எப்படி மீட்டுக் கொடுப்பது என்கிற கவலை. இனி வரும் வருடத்தில் எல்லா நிறுவனங்களும் 12 மணி நேரங்களுக்கு மேல் தொழிலாளர்களை வேலை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது. தொழிலாளர் உரிமை சட்டங்கள் பலவற்றை ரத்து செய்தது. அதிக நேரம் வேலை பார்த்தாலும் ‘ஓவர் டைம்’ ஊதியம் கிடைக்காது என்கிற நிலை. மத்திய அரசும் நிறுவனங்களிடம் செல்லக் கோபத்துடன், ‘தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டாம், பாவம் அவர்கள்’ என யோசனை கூறியது. உடனே பல நிறுவனங்களில் சம்பளம் வெட்டியெறியப்பட்டது. நான்காண்டுகளுக்கு முன் வாங்கிய சம்பளங்களுக்கு சரேலென தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் பணியாளர்களின் வேலைகளை பிடுங்கி தூக்கி எறிந்தது.

மோடி மயிலுக்கு உணவு போடும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

உலக நாடுகள் கோவிட் பரவலை குறைப்பதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் மும்முரத்தில் இருந்தன. ‘என் புருஷனும் கல்யாணத்துக்கு போனான்’ என மோடியும் தடுப்பூசி ஆராய்ச்சியை அறிவித்தார். இந்திய சுதந்திர தினத்தன்று தடுப்பூசி வந்துவிட வேண்டிய வகையில் வேலை பார்க்க ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆய்வாளர்களோ ‘ஆஸ்ட்ரிச் பார்த்திருக்கீங்களா ஆஸ்ட்ரிச்’ என மோடியை கேட்டதும் வேறு வழியின்றி அந்த திட்டத்தை மக்களுக்காக தியாகம் செய்துவிட்டு தாடியில் கவனம் செலுத்தினார் மோடி. மோடிக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என ஒருநாள் நிர்மலா சீதாராமன் தோன்றி ‘கூறு பத்து ரூபாய்’ என பொதுத்துறை நிறுவனங்களை விற்றார்.

இதற்கு மேலும் இவர்களுக்கு அறிவு வரப் போவதில்லை என வெறுத்துப் போய் கோவிட்டே சில நாட்களுக்கு ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டது. ‘ஹைய்யா ஜாலி’ என அம்பானிக்கு விவசாயி வேடம் கட்டுவதற்கான மேக்கப் டெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தார் மோடி. விவசாயிகள் அதை எதிர்த்து தங்களுக்கான துயரத்தை கேட்கச் சொல்லி தில்லி எல்லைகளுக்கு சென்றனர். மோடி கேட்கவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் அமித்ஷா அசைந்து கொடுக்கவில்லை. விவசாயிகளுக்கு எதிராக காவலர்கள் களமிறக்கப்பட்டனர். விவசாயிகள் வரும் வழியில் ஆணிகளை அறையச் சொன்னார் மோடி. பள்ளம் தோண்டி விவசாயிகளை அதற்குள் ‘தொபுக்கடீர்’ என விழ வைத்து இந்தியாவின் விவசாயப் பிரச்சினையை தீர்த்து வைக்க முயன்றார்.

அடுத்தகட்டமாக ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மோடிக்கான டெலிப்ராம்ப்டரே கதறியழும் வகையில் பொய்கள் எழுதிக் கொடுக்கப்பட்டன. ஐந்து மாநில தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தாமல் தேர்தல் ஆணையம் தன்னுடைய விசுவாசத்தை காட்டியது. கோவிட் இரண்டாம் அலையை பற்றி உலக நாடுகள் எச்சரித்துக் கொண்டிருந்த வேளையிலும் மேற்கு வங்கத்துக்கு எட்டு கட்ட தேர்தலை அறிவித்து நல்ல பெயரை வாங்கிக் கொண்டது தேர்தல் ஆணையம். பிரசாரங்கள் முடுக்கி விடப்பட்டன. இவற்றுக்கு நடுவே கடவுளை நாம் மறந்துவிடக் கூடாது என 31 லட்சம் பேர் கும்பமேளாவில் அரசின் உதவியுடன் கூட்டப்பட்டனர்.

தமிழகமும் கேரளாவும் புதுச்சேரியும் ஒரே கட்டத்தில் தேர்தலை எதிர்கொண்டு முடித்த நேரத்தில் கோவிட் இரண்டாம் அலை தலைவிரித்தாடத் தொடங்கியது. மோடி எந்த கவலையுமின்றி மேற்கு வங்கத்தில் கூட்டம் கூட்டமாக மக்களைக் கூட்டி பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்.

கோவிட் தடுப்பூசிகளை உலகம் அறிவித்துக் கொண்டிருந்த நேரத்தில் இந்தியா மட்டும் இரண்டே இரண்டு நிறுவனங்களுக்கு மொத்த தடுப்பூசி தயாரிப்பையும் ஒதுக்கியது. மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யாமலேயே தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு அறிவுறுத்தப்பட்டது. 70% விகித செயல்திறன் கொண்ட தடுப்பூசியின் மிச்ச 30% சதவிகிதத்துக்கு அரச பாதுகாப்பு எதுவும் உருவாக்கப்படவில்லை. தடுப்பூசி கொடுக்கும் பக்கவிளைவு பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. பக்கவிளைவுகளுக்கான மருத்துவச் செலவுக்கும் அரசு பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய சூழலில்தான் இன்று நாம் காணும் எல்லா காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையை மாநில அரசுகள் மத்திய அரசுக்கு முன்வைத்துக் கொண்டே இருந்தன. தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு இரண்டாம் டோஸ் கிடைக்கவில்லை. என்ன செய்வதெனவும் மக்களுக்கு தெரியவில்லை. கோவிட் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்க போதுமான வசதிகள் இல்லை. கோவிட் மரணங்களுக்கான இறுதிச் சடங்குகளுக்கு இடமில்லை. படுக்கை, தடுப்பூசி, ஆக்சிஜன், சுடுகாடு என எதற்கும் பதிலின்றி மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கையில்தான் மோடி மீண்டும் ஊடகங்களிடம் அல்ல, தொலைக்காட்சியில் தோன்றினார்.

நீளமாக தாடி வளர்த்திருந்தார். தலையின் பின்பக்கத்தில் முடி பிறைநிலா போல் தோற்றமளிக்கும் வகையில் அற்புதமாக வாரியிருந்தார். கோவிட்டை எதிர்த்து இரண்டாம் போர் நடப்பதாக அறிவித்தார். அப்போரில் இந்தியாவின் உச்ச அதிகாரம் படைத்த பிரதமர் எதிரியான கோவிட்டை எப்படி கையாளப் போகிறாரென எதையும் தெரிவிக்கவில்லை. மாறாக மக்களுக்கு துணையாக ஓர் ஓரத்தில் நிற்பதாக உறுதியளித்தார். நம்புங்கள், இவரே இந்திய நாட்டுக்கு பிரதமர்.

அற்புதமான நிர்வாக மாடல் என கொண்டாடப்பட்ட குஜராத்தில் கோவிட் பாதிப்பு கொண்டோருக்கு சிகிச்சை படுக்கைகள் கிடைக்காத நிலை. ஒரே படுக்கையில் மூவர் படுத்து சிகிச்சை பெற வேண்டிய கோரம். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக மாநில அரசுகள் ஆக்சிஜன் கேட்டு நீதிமன்ற படி ஏறியிருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாட்டுக்காக தொடர்பு கொள்ளப்படுகையில் பிரதமர் பதிலளிக்கவில்லை என்கின்றன. பிச்சை எடுத்தாவது, கொள்ளை அடித்தாவது ஆக்சிஜனை மக்களுக்கு கொடுக்க சொன்னது நீதிமன்றம். அடடே.. நீதிமன்றமே கொள்ளை அடிக்க அனுமதி கொடுத்துவிட்டதே என ஆனந்தத்தில் திளைத்தார் பிரதமர்.

அவசரமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ‘மக்கள் நலனா... என்ன ஆச்சரியம்’ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அறிவிப்பு வெளியாகிறது. தடுப்பூசிகள் இனி தனியார் சந்தையிலும் கிடைக்கும் என்றும் அவற்றை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ள வேண்டும் என்றது அறிவிப்பு. ‘நீட்’ முதலிய நுழைவு தேர்வுகளை நடத்தி ‘சுகாதாரம்’ மத்திய அரசுக்குதான் என அடம்பிடித்து நம் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்த மோடி தற்போது தடுப்பூசிகளை மாநில அரசுகளே வாங்கிக் கொள்ளட்டும் என கைவிரித்திருக்கிறார்.

இவற்றுக்கு பிறகு ஒரு முக்கியமான விஷயமும் வெளியானது. கோவிஷீல்ட் என்கிற தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் அதிபரான அதார் பூனாவாலா, ‘அரசுகளுக்கு 400 ரூபாய்யும் தனியாருக்கு 600 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்படும் என்றார். இதற்கு முன் தனியாரில் தடுப்பூசி இல்லை. அரசுக்கு விற்கப்பட்ட தடுப்பூசியும் 150 ரூபாய் கட்டணத்தில்தான் விற்கப்பட்டது. ‘பற்றியெரியும் வீட்டில் ஏன் இந்த கொள்ளையடிக்கும் வேலை’ என நாம் கதறுவதற்கு அதார் பூனாவாலா சொல்லும் பதில் இதுதான்:

“முதலில் தடுப்பூசி எந்தளவுக்கு வேலை பார்க்கும் என்பது எங்களுக்கு தெரியாது. எனவேதான் 150 ரூபாய்க்கு கொடுத்தோம். தற்போது அது பலனளிப்பது தெரிவதால் நாங்கள் விலை ஏற்றுகிறோம். எங்களுக்கு லாபம் மட்டுமே முக்கியம்”. சீரம் நிறுவனத்துக்கு தயாரிப்பு அனுமதியை கொடுத்தது மத்திய அரசுதான். அதுவும் ஜனவரி மாதத்திலேயே அதார் பூனாவாலா கொடுத்த ஒரு பேட்டியில், “பத்து கோடி டோஸ்களுக்கு மட்டும்தான் நாங்கள் மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். அதற்குப் பிறகு தனியாரில் 1,000 ரூபாய் வரை விலை வைத்து விற்கவிருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.

அதாவது 130 கோடி பேர் வாழும் நாட்டில், இரண்டு டோஸ்கள் கொடுக்க வேண்டிய தடுப்பூசியில் 10 கோடி டோஸ்களுக்கு மட்டுமே மத்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்றால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிச்சயம் ஏற்படும் என்பது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும். அந்த ஒப்பந்தத்துக்கு பிறகும் புதிய தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவென வேறெந்த நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அரசு உற்பத்தி நிறுவனங்களே பல இருக்கும்போதும் அவை எதுவும் அரசால் சீண்டப்படக்கூட இல்லை. பதிலாக ‘போட்டோஷூட்’, ‘டெலிப்ராம்ப்டர் ரீடிங்’, ‘டாஸ்க் கேம்’, ‘சாலையில் ஆணி அடித்தல்’ முதலிய அத்தியாவசிய வேலைகளில் ஈடுபட்டிருந்திருக்கிறார் மோடி.

சரியாகச் சொல்வதெனில் இரண்டு நிறுவனங்கள் லாபத்தில் கொழிப்பதற்காக வேண்டுமென்றே தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, தனியாரில் மருந்துகளை இறக்கி, மக்களை சாகக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டத்துக்கு உயிர் கொடுத்திருப்பவர் பிரதமர் மோடி. இவர்தான் இப்போதும் மேற்கு வங்கத்தில் சென்று ‘எத்தகைய ஆட்சியை நாங்கள் தருவோம் தெரியுமா’ என 56 இஞ்ச் மார்பை விரித்து பஞ்ச் வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். கொத்துக்கொத்தாக மக்கள் செத்துவிழும் ஒரு பேரிடரை வணிகமாக்கும் அரசைப் பார்த்திருக்கிறீர்களா?

மோடி அரசுதான் அது.

--------------------------------------------------------------------------------------

இதுதான்

குஜராத் மாதிரி.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்துறையின் படுதோல்வியால், உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன.

பிற மாநிலங்களை விட பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பும், இறப்பும் அதிகரிப்பதற்கு மோசமான மருத்துவக் கட்டமைப்பே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை மீட்டு வருவதாக பேசி வரும் பிரதமரின் சொந்த ஊரில் தான் கொரோனாவை கடுப்படுத்த முடியாமல் அம்மாநில அரசு திணறி வருகிறது.

மோடி முதன்முதலாக மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தேர்தல் பிரச்சாரங்களில், அனைத்து மாநிலங்களையும் குஜராத் போல மாற்றுவேன். இந்தியாவிற்கே குஜராத் ஒருமுன்மாதிரி மாநிலம் எனக் கூறி. ‘குஜராத் மாடல்’ என்ற வெற்று விளம்பரத்தை நாடுமுமுவதும் பரப்பி ஆட்சியைப் பிடித்தார்.

பிரதமர் மோடி பிறந்த குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க சுமார் 25 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தது. அதில் 13 வருடங்கள் நரேந்திர மோடி தான் முதல்வராக இருந்து வந்தார். அதன் விளைவே பிரதமராக மோடி இன்று இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்திருக்கிறார்.

நாட்டிலேயே அசுர வளர்ச்சி அடைந்த மாநிலம் என்றால் அது குஜராத்தான் என மேடைகளில் பேசிய பா.ஜ.க தலைவர்கள் இன்று பலரும் அந்த வார்த்தையை மீண்டும் சொல்லக் கூச்சப்படும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். அந்த அளவிற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில் மோடி அரசின் வெற்று விளம்பரம் தான் ‘குஜராத் மாடல்’ என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ராஜீவ் சதவ் கூறுகையில், “குஜராத் நிலைமை படுமோசமாக மாறியுள்ளது. மோடி 2014ல் சொன்ன குஜராத் மாடல் நாட்டுமக்களுக்கு என்னவென்று புரியாமல் இருந்திருக்கும்.

ஆனால், இப்போது அனைவரும் குஜராத் மாடல் என்பது வெற்று விளம்பரம் எனப் புரிந்துகொண்டிருப்பார்கள். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மோடி 13 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார். பா.ஜ.க 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்துள்ளது. ஆனால் அத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், ஒரு அரசு மருத்துவமனை கூட கட்டவில்லை.

இன்னும் கூட சுமார் 14 மாவட்டங்களில் சி.டி ஸ்கேன் எடுக்கும் வசதிகூட இல்லை. ஆனால் அதேவேளையில் குஜராத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி தான் பெருகியிருக்கிறது. இதன் மூலம் மக்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

இந்த நிலையில் உள்ள குஜராததை வைத்துக்கொண்டு, பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் குஜராத் மாடல் என்று புராணம் பாடிக் கொண்டிருப்பதை நிறுத்தவேண்டும். ஏனென்றால் அது வேடிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

--------------------------------------------------------------------------------------

புதன், 21 ஏப்ரல், 2021

பல்லிளிக்கும் குஜராத் மாடல்

 ந்தியாவின் மாடல் மாநிலமான குஜராத் மாநிலத்தின் மக்கள் தங்களது அரசாங்கம் 25,000 ரெம்டெசிவர் வைரஸ் தடுப்பு மருந்து குப்பிகளை உ.பி-க்கு அனுப்பியது குறித்த செய்தியை கடந்த வியாழன் (15.04-2021) அன்று செய்தித்தாளில் படித்ததும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

குஜராத் மாநிலத்தில் கொரோனா நெருக்கடி அந்த அரசாங்கத்தால் மிக மோசமான முறையில் குறைத்துக் காட்டப்படுவதை, கொரோனா நோயாளிகளின் குடும்பத்தினர்  ரெம்டெசிவிர் மருந்தைப் பெற 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் சுட்டிக் காட்டுகிறது.

உதாரணமாக, வியாழன் (15-04-2021) அன்று இரவு, குஜராத்தில் 8,112 பேருக்கு கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்டது. இது வரையிலான தினசரி அளவில் இது உச்சபட்சமாக இருந்தது. இதன் மூலம் குஜராத்தின் நடப்பு கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 44,298 ஆனது. அந்த 24 மணி நேரத்தில்  81 பேர் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அதே காலகட்டத்தில் குஜராத்தின் அண்டை மாநிலமான மராட்டியத்தில் புதிதாக 61,695 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 349 கொரோனா மரணங்கள் நிகழ்ந்தது.

புதன் (14-04-2021) அன்று அஹமதாபாத் மருத்துவக் கழகம், மருத்துவமனைகளைத் தவிர மற்ற துறைகளுக்கு ஆக்சிஜன் உருளைகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ஒரு கடிதம் எழுதியது. இந்த கடிதமானது கொரோனா நோயாளிகளுக்கு முறையாக மருத்துவம் பார்க்க மருந்துகள், ஊசிகள், ஆக்சிஜன் உருளைகள் போன்றவை கிடைக்காமல் மருத்தவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

ஆனால், குஜராத் அரசு தொடந்து இந்த நெருக்கடியை குறைத்துக் காட்டுகிறது.   குஜராத் மக்கள், மருத்துவமனைகளில் போதுமானப் படுக்கைகள் இல்லாமல், போதிய ஆம்புலன்ஸ் இல்லாமல், எரியூட்டும் இடங்கள் நிரம்பி வழியும் நிலைமை இருக்கையில், இதனை புறக்கணித்துவிட்டு, மருத்துவமனைப் படுக்கைகள் முறையாகக் கிடைக்கின்றன என்ற தனது கூற்றுக்கு ஆதரவளிக்கும் விதமாக விவரங்களை மட்டும் குஜராத அரசு கொடுக்கிறது.

அனேக மக்களுக்கு, இந்த பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு குஜராத் அரசு கொடுக்கும் முக்கியத்துவம் குழப்பமானதாகவே தெரிகிறது. ஒரு புறம், முகக் கவச விதிமுறையை மீறிதாக ரூ.1000 அபராதம் விதிக்கிறது. மறுபுறம், மாநிலத்தின் ஆளும் கட்சியான பா.ஜ.க எதிர் வரும் மோர்வா ஹடஃப் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக கடந்த புதன்கிழமை நடந்தப் பிரமாண்டமான இரு சக்கர வாகன பேரணியில் யாரும் முகக் கவசம் அணியவில்லை.

“எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அங்கெல்லாம் பி.ஜே.பி-க்கு கொரோனா கிடையாது’’ என்று தி வயர் இணைய தளத்திடம் கூறுகிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாரத் சோலங்கி.

குற்றமும் கொரோனா வைரசும் :

கடந்த 96 மணி நேரத்தில் (ஏப்ரல் 16-க்கு முன்) பெருந்தொற்றை மேற்கண்டவாறு கையாளுவதைச் சுற்றி நிகழும் இந்தக் குழப்பமானநிலை, மோசடி மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுத்துள்ளது. இதுவரை குறைந்தபட்சம் 4 புகார்கள் இது தொடர்பாக போலீசுக்கு வந்துள்ளன.

அகமதாபாத்தில், ஒரு அரசு மருத்துவமனையில் கொரோனாவால் இறந்தவரின் உடலை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து பிணவறைக்கு கொண்டுசென்ற நேரத்தில், இறந்தவரின் உடலிலிருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள தங்க வளையலை திருடியதற்காக ஒப்பந்த ஊழியர் ஒருவரை போலீசு கைது செய்துள்ளது. குஜராத்தின் இருவேறு இடங்களில் நடந்த இருவேறு வழக்குகளில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றை ரூ.12,000-க்கு விற்றுக் கொண்டிருந்த இரு கள்ளச் சந்தைகாரர்களை போலீசு கைது செய்துள்ளது.

ரெம்டெசிவர் மருந்துக் குப்பி ஒன்றின் அரசு விலை ரூ.800 அல்லது ஆய்வகத்தில் இருந்து நேரடியாகப் பெற்றால் ரூ.690 மட்டுமே. அந்த கள்ளச் சந்தை  பேர்வழிகள் வெளிப்படையாக போலீசிடம்  இதுவரை தாங்கள் 50 குப்பிகளை விற்றுள்ளதாக தெரிவித்தனர். ஆனால், அவர்கள் இன்னும் பல மருந்துக் குப்பிகளை விற்றிருக்கக் கூடும் என்று போலீசு நம்புகிறது.

இன்னொரு கள்ளச் சந்தை சம்பவத்தில், 18 டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளுடன் இரண்டு நபர்களை வல்சாத் என்ற இடத்தில் குஜராத் சிறப்பு போலீசுக் குழு கைது செய்தது. அவர்கள் அம்மருந்துக் குப்பி ஒன்றை ரூ.25,000 வீதம் விற்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இதற்கிடையில் ராஜ்கோட்டில் ஒரு நோயாளிக்கு ரெம்டெசிவர் கொடுப்பதற்கு ரூ.45,000 வாங்கிக் கொண்டு அதன் பிறகும் கூட அம்மருந்தை அந்த நோயாளிக்குப் போடாமல் இருந்ததற்காக ஒரு மருத்துவமனை ஊழியரின் பெயரும் நகராட்சி வார்டு ஒன்றின் பா.ஜ.க தலைவர் ஒருவரின் பெயரும் போலீசிடம் உள்ள புகார் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது. ராஜ்கோட் நகரம் முதலமைச்சர் விஜய் ரூபானியின் சட்டமன்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் தலைவர் இந்திரனில் ராஜ்யகுரு “இது எந்த விழுமியத்தையும் கடைபிடிக்காத மோசமானக் காலகட்டம்” என்கிறார். இவர் ராஜ்கோட் தொகுதியில் விஜய் ரூபானியை எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராஜ்யகுரு தொலைபேசியில் பேசுகையில், “குஜராத் பரோபகாரத்திற்கு பெயர் போன மாநிலம். இன்று அந்த பிம்பம் பாழாகிக் கொண்டிருக்கிறது.

நோயாளிகள் மிக மோசமான நிலையில் உள்ளனர். உறவினர்கள் ரெம்டெசிவிரும், டோசிலிஜூனப்பையும் வெளியே வாங்கி வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். ஆனால், உறவினர்கள் உடனில்லாத அனேக நோயாளிகள் ராஜ்கோட் நோயாளியை போன்று அதே மாதிரியான வழியில், மோசடியான மருத்துமனைகளாலும் மருத்துவர்களாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மிக மிக கவலைக்குரிய விசயம்.’’ என்று கூறினார்.

ராஜ்யகுரு தி வயர் இணையதளத்திடம் பேசிய பின்னர், அவர் கோவிட்19 சிகிச்சைக்காக ராஜ்கோட் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

வேறுசில வடிவங்களிலான கொரோனா ஊழல்களும் கூட நடைபெற்று வருகிறது. இந்த வாரம், 3,000-கும் மேற்பட்ட RT-PCR சோதனைகள் மேற்கொண்டிருந்த அகமதாபாத்தின் கொடசார் அருகில் உள்ள ஒரு சோதனையகம், அங்கே கொரோனாவுக்கு சோதனை எடுத்துக் கொண்டவர்களின் புகாரின் பேரில் அகமதாபாத் மாநகராட்சி கழகத்தால் சோதனையிடப்பட்டது.

அச்சோதனையின் மூலம் அந்த சோதனையகத்தில் ரேபிட் ஆன்டிஜன் சோதனை செய்வதற்கான எவ்வித கருவிகளோ கிட்டுகளோ இல்லை என்று கண்டறியப்பட்டது. ஆனால், அந்த சோதனையகங்கள் மக்களை முட்டாளாக்கி பொய்யான அறிக்கைகளைக் கொடுத்து வந்துள்ளதுத் தெரிய வந்துள்ளது.

குஜராத்திலிருந்து வந்து சேர்ந்த ரெம்டெசிவிர் மருந்தை லக்னோ ஏர்போர்ட்டில் இருந்து எடுத்துச் செல்லும் காட்சி

மக்கள் கொரோனா சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் மருந்தை கள்ள சந்தையில் வாங்க தங்களது நகைகளையும் வீட்டையும் விற்றுக் கொண்டிருந்ததாக செய்திகள் வந்து கொண்டிருந்த நேரத்தில், குஜராத் அரசு 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை உத்திரப் பிரதேசத்திற்கு அனுப்பியதாக வந்த செய்திப் பேரபாயத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த செய்தி அறிக்கையை ஆதாரமற்றது, கற்பனையானது என்று குஜராத் அரசு மறுத்தாலும், லக்னோவில் செயல்படும் பாரத் சமாச்சர் என்ற செய்தி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர், பிரஜேஷ் மிஸ்ரா குஜராத்திலிருந்து 25,000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் உ.பி அரசு கடந்த புதன்கிழமை அன்று தருவித்துள்ளதால் உ.பி மக்களுக்கு ரெம்டெசிவர் பற்றாக்குறை ஏற்படாது என்று கூறினார்.

எனினும், குஜராத் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. அந்த ரெம்டெசிவர் மருந்து உற்பத்தி கம்பெனியின் செய்தி தொடர்பாளரும் தி வயர் இணையதளத்திடம் இது குறித்து பேச கிடைக்கவில்லை.

இதற்கிடையில் புதன்கிழமை (14-03-2021) அன்று,  கிட்டத்தட்ட எல்லா உயர் அமைச்சர்களும் அதிகாரிகளும் ஒன்று கூடி மாநில அரசு கொரோனா நெருக்கடிக்கு மாநில அரசு சார்பாக பதில் கொடுக்கும் முகமாக ஒரு அறிக்கையை கொடுத்தனர். வியாழன் அன்று அந்த அறிக்கை உயர்நீதி மன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இது ஒரு வாரத்திற்கு முன்பு, கொரோனாவை கையாள்வதில் கவலையும் அதிருப்தியும் தெரிவித்திருந்த உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு பதில் கொடுப்பதன் ஒரு பகுதியாக அமைந்தது. உயர்நீதிமன்ற வாதத்தின் போது குஜராத் அரசு வழக்கறிஞர் கமல் திரிவேதி ஏப்ரல் 12, 2021 வரை 53 சதவீதப் படுக்கை வசதி மட்டுமே உள்ளது என்று அறிக்கை சமர்பித்தார்.

கிரிக்கெட் விளையாட்டு முக்கிய காரணி

ஆச்சரியப்பட வைக்கும் வகையில் குஜராத்தில் திடீர் கோவிட்-19 உயர்வுக்கு காரணமாக நம்பப் படுவது என்னவென்றால் கடந்த மாதம் நரேந்திர மோடி விளையாட்டரங்கத்தில் நடந்த  இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிதான். கிட்டத்தட்ட 75,000  பேர் கலந்து கொண்டதில் அனேகமாகப் பெரும்பாலானோர் முகக்கவசமின்றிக் காணப்பட்டனர். அகமதாபாத் IIM–ல் மட்டுமே 49 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. காந்தி நகரில் உள்ள IIT-யில் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் பாரத் சோலங்கி,  இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவின் கொள்ளைக்காகவே குஜராத் அரசு செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். ஜெய் ஷா, பார்வையாளர்களைக் கொண்டு விளையாட்டை நடத்த ஆர்வமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

“குஜராத் அரசு முதுகெலும்பு அற்றது. அது கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யுங்கள் என்று ஜெய் ஷாவிடம் சொல்லாது” என்று சொலங்கி தி வயர் இணையதளத்திடம் கூறினார். “இரு விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு, பெரிய அளவிலான மக்களின் கூக்குரலுக்குப் பின்னர்தான் விளையாட்டு நிகழ்ச்சியை ஸ்டேடியத்திலிருந்து பார்க்கப் பார்வையாளர்கள் தடைசெய்யப்பட்டது நிகழ்ந்தது.”

பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் கூடவோ குறையவோ கோவிட்-19 குறித்து அரசின் கருத்துடன் ஒத்துபோகிறது. அதே நேரத்தில் குஜராத்தி மொழியில் வெளிவரும் பத்திரிகை குஜராத் அரசு கோவிட்-19 இரண்டாம் அலையை கையாளுவது குறித்து உண்மையை வெளிக்கொண்டு வருகிறது.

திவ்ய பாஸ்கர் என்ற தினசரி பத்திரிகையின் ஆசிரியர் தேவேந்திர பட்நகர், குஜராத் மாநில பாஜக செயலர் சி.ஆர் பாட்டில்-ன் தொலைப்பேசி எண்ணைப் பிரசுரித்து அவரிடம் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகள் குறித்து தொடர்பு கொண்டு கேட்குமாறு கேட்டுக் கொண்ட போது நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைப் பெற மக்கள் இரவு பகலாக கால்கடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கும் அதே நேரத்தில் சி.ஆர்.பாட்டில் 5000 ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளை பெற்று அவற்றை நவ்சரியில் உள்ள பி.ஜே.பி அலுவலகத்திலிருந்து வினியோகம் செய்தார் என்ற செய்தி ஏப்ரல் 12 அன்று பிரசுரிக்கப்பட்டது.

ஆனால், பி.ஜே.பி குஜராத்தில் பெருந்தொற்று பாதிப்பில் பாகுபாடுக் கட்டுகிறது, பெருந்தொற்றை வைத்து அரசியல் செய்கிறது என்று விமர்சனம் வந்த ஒருநாளுக்கு பிறகு பாட்டிலினுடைய ‘முன்முயற்சி’ கைவிடப்பட வேண்டியதாகிவிட்டது. அவை ரெம்டெசிவர் மருந்து தகுதியான மருந்தாளுனர்களால் மட்டுமே மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரை உள்ளது என்ற உண்மை நிலையிலிருந்து எடுத்தாளப்பட்டது.

அகமதாபாத்தின் சைடஸ் கடிலா நிறுவனம் என்பது இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிகளைத் தயாரிக்கக் கூடிய நிறுவனங்களில் ஒன்று. ஆனால், கடந்த ஆறு மாதங்களில் இந்திய அரசு ரெம்டெசிவர் மருந்தை உற்பத்தி செய்யக் கூடிய சிப்லா, சைடஸ் கடிலா, ஹெடெரோ, டாக்டர் ரெட்டி மற்றும் பல நிறுவனங்கள் என எல்லா உற்பத்தியாளர்களுக்கும் அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய, பார்மா கம்பெனிகளுக்கும் அமெரிக்காவின் கிலீட் அறிவியல் நிறுவனத்துக்கும் இடையிலான தன்னார்வ உரிம ஒப்பந்தத்தின் அடிப்படையில் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட ரெம்டெசிவிர் மருந்து டோஸ்கள் சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அரசாங்கக் கூற்றுப்படி, இந்தியா ஒரு மாதத்தில் 38.80 லட்சம் ரெம்டெசிவர் மருந்து யூனிட்டுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. பெருந்தொற்று தீவிரமாகிற இச்சூழலில் மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

குஜராத்தில் காங்கிரசும் பி.ஜே.பி-யும் கொரோனா காலத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிவரும் நிலையில் அம்மாநிலத்தின் மக்கள் துயர நிலையில் உள்ளனர். வியாழன் அன்று, தினேஷ் பட்டேல் (அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தியாவிலே மிகப்பெரிய பொது மருத்துவமனையான அகமதாபாத்தின் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட இருந்தபோது, அவரது குடும்பத்தினர் அவரை ஆம்புலன்சில் ஏற்றிய பிறகு மருத்துவமனை வாயிலுக்கு முன்பு ஒன்றரை மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கக் காத்திருந்த 35 ஆம்புலன்ஸ்களில் ஒரு ஆம்புலன்சில் பட்டேல் இருந்தார்.

“மக்கள் ஆம்புலன்சுகளில் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும்” என்கிறார், மருத்துவர் ஜே.வி மோடி. “ஆனால், முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் மக்களை எங்களால் அனுமதிக்க முடியாது” என்கிறார் அவர்.

இதற்கிடையில் அகமதாபாத் மற்றும் சூரத்தில் இடுகாடுகளும், எரியூட்டு மையங்களும்  24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. அங்கும் காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்கும் நிலை கண்கூடாக இருக்கையில், குஜராத் அரசோ கடந்த வியாழன் அன்று சூரத் மற்றும் அகமதாபாத்தில் 24 மரணங்கள் மட்டும்தான் நிகழ்ந்துள்ளது என்று அறிவித்துள்ளது.

பிரபலமான குஜராத் பத்திரிகையான சித்திரலேகா என்ற சூரத் பதிப்பின் வாரப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஃபாய்சல் பகிலி, “சூரத் நிர்வாகம்  பெருகிவரும் கொரோனாப் பரவலைத் தடுக்க தயாராக இல்லை என்றும் மேலும் இதை எதிர்கொள்ள எவ்வித செயல்திட்டமும் இன்னும் வகுக்கப்படவில்லை என்றும் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சுடுகாட்டில் கடுமையான வேலைப்பளுவில் பணியாற்றும் ஊழியர்கள் எரியூட்டுவதற்கு இதுவரை வழக்கமாக பயன்படுத்தி வந்த நெய்யிற்குப் பதிலாக பிணங்களை வேகமாக எரியூட்ட இப்போது மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

சுனித் கமி என்ற சூரத்வாசி, “தன் மாமா கோவிட்டால் இறந்தபோது, சுடுகாட்டில் 12 மணி நேரம் காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டியிருந்தது” என்றார். “ஆகவே, நாங்கள் அருகாமை நகரமான பர்டோலிக்கு உடலை இறுதி சடங்கிற்காக கொண்டு வந்தோம்” என்றார் சுனித் கமி.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் தற்போது வழக்கறிஞருமான ராகுல் ஷர்மா தி வயர் இணையதளத்திடம், “பெருந்தொற்றின் இந்த இரண்டாவது அலை பாதிப்புக் குறித்து குஜராத் அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாகத் தெரிகிறது” என்றார். “குஜராத் அரசு சோதனை செய்யும் வசதிகள், உயிர் காக்கும் கட்டுமானம் ஆகியவற்றில் தனது திறனைக் கட்டி வளர்ப்பது பற்றி கவலைக் கொள்ளவில்லை” என்றார். “பொன்னான நேரத்தை வீண்டித்து விட்டது” என்றார்.

அகமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த மருத்துவர் தி வயர் இணையதளத்திடம், திடீர் கொரோனா அதிகரிப்புக் குறித்து சுகாதார அதிகாரிகளின் கவனத்திற்குத் தான்  கொண்டு சென்றதாகவும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறினார். “குஜராத் உள்ளாட்சி தேர்தல் அந்த நேரத்தில் நடந்து வந்ததால் அதுவரை சுகாதாரத் துறையை அமைதி காக்குமாறு அரசு கூறியிருக்கலாம்” என்றார்.

மேலும் “எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தன்னை விளம்பரபடுத்துவதிலே அரசு கவனம் செலுத்தியது. இந்த நோய் அதிகரிப்பு என்பது தவறான நிர்வாகம், அராஜகம் ஆகியவற்றின் விளைவு என்றார். மேலும் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை முழுமையாகத் தவிர்த்திருக்க வேண்டும்” என்றார்.

அகமதாபாத்வாசியான ஹரிதா தேவ், இது குறித்து தி வயரிடம் பேசுகையில், ஆம்புலன்ஸ்கள் கிடைக்கவே இல்லை என்று கூறினார். ஏப்ரல் 13 அன்று,  மிக மோசமான நிலையில் உள்ள 58 வயதுடைய பக்கத்து வீட்டு நோயாளிக்காக ஆம்புலன்சை அழைத்தார் அவர்.

“108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது, தற்போதைய சூழ்நிலை காரணமாக எந்த ஆம்புலன்சும் இல்லை. உங்கள் கோரிக்கையைப் பதிவு செய்கிறோம். கூடிய விரைவில் அழைக்கிறோம் என்று கூறினர். மூன்று மணி நேரத்திற்கு பின்னர், இன்னும் ஆம்புலன்ஸ் தேவையில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டு ஒரு அழைப்பு வந்தது” என்றார், தேவ்.

மெஹல் நரேந்திரபாய் என்ற மற்றொரு அகமதாபாத் வாசி ஒரு ஆம்புலன்சிற்காக ஏப்ரல் 14 அன்று காத்திருந்தார். “நாங்கள் மாலை 3.30-க்கு ஆம்புலன்சை அழைத்தோம். ஆனால் மறுநாள் அதிகாலை 1.00 மணிக்குதான் எங்களை அழைத்தனர். இதற்கு இடைபட்ட நேரத்தில் நாங்கள் நகரத்தில் உள்ள 50 முதல் 60 மருத்துவமனைகளுக்கு தொடர்பு கொண்டு ஒரு எமர்ஜென்சி கேஸை எடுத்துக் கொள்வீர்களா என்று கேட்டோம்.  ஆனால், படுக்கைகள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டனர்’’ என்றார்.

ஏப்ரல் 13 அன்று, ஆல்ட் நீயூசின் இணை நிறுவனர் பிராத்னிக் சின்கா, “ஆம்புலன்சுகள் ஒவ்வொரு 10-15 நிமிடத்திற்கு ஒரு முறை எங்கள் வீட்டை மிக வேகமாகக் கடந்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் இரண்டு சைரன் சத்தங்களுக்கு இடையிலான காலகட்டம் 5 நிமிடத்திற்கும் குறைவாக இருக்கிறது. இவை அகமதாபாத்தின் நிலை எவ்வாறு மோசமாக இருக்கிறது என்று அச்சுறுத்துகிறது’’ என்று தனது ட்விட்டில் தெரிவித்தார்.

சந்தேஷ் என்ற பிரபலமான குஜராத் தினசரியை சேர்ந்த இம்தியாஸ் உச்சைன்வாலா, ரோனக் ஷா ஆகிய இரு செய்தியாளர்களும் கோவிட்-19 நெருக்கடி குறித்து ஆய்வு செய்யும் முகமாக ஏப்ரல் 11 அன்று இரவு அகமதாபாத்தில் உள்ள ஒரு அரசு மருத்தவமனைக்கு சென்றிருந்தபோது அங்கு 63 பிணங்கள் பிணவறையிலிருந்து எடுத்து சென்றதை பார்த்தனர்.

“நாங்கள் பிணங்களை எண்ணினோம். அந்த ஒரு மருத்துவனையிலிருந்து மட்டுமே மொத்தம் 63 பிணங்கள்’’ என்று அந்த இரு நிருபர்களும் தி வயர் இணையதளத்திடம் கூறினர். “எரியூட்டும் இடம் குறித்து இரவு ஆய்வுக்கு சென்றிருந்த எங்கள் மற்ற நிருபர்கள்  அந்த மருத்துவமனையிலிருந்து வந்த அந்த 63 பிணங்களும் அரசின் கோவிட் வழிமுறைப்படி எரியூட்டப்பட்டதாக எங்களிடம் தெரிவித்தனர்.

இதைபோல் மற்ற மருத்துவமனையிலிருந்தும் கொண்டுவந்து பிணங்களை எரித்தனர். ஆனால், அகமதாபாத்தில் கோவிட் மரணங்கள் பற்றி ஏப்ரல் 12 அன்று அறிவிக்கப்பட்டபோது, 20 பேர் இறந்ததாக அதிகாரப் பூர்வமாகத் தெரிவிக்கபட்டது. அரசின் இந்தக் கணக்கு அபத்தமானது.’’

காங்கிரஸ் தலைவர் சோலங்கி, குஜராத் அரசு கொரோனா குறித்த அனைத்து  விவரங்களைக் குறைத்துக்காட்டி கொடுக்கப்படும் அறிக்கைகள் இப்போது அம்பலபட்டுவிட்டது என்று தி வயரிடம் கூறினார்.

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பாதித்து அகமதாபாத் ஷ்ரேய் மருத்துவமனையில் தன் மனைவியை சேர்த்திருந்தார் வழக்கறிஞர் சுஹல் திர்மிஜி.  அந்த மருத்துவமனையில் ஏற்பட்ட  துயர தீ விபத்தில் தன் மனைவியைப் பறிகொடுத்த அந்த வழக்கறிஞர்  குஜராத் மாநில அரசு மற்றும் மத்திய அரசு மீது கடுஞ்சீற்றத்தில் உள்ளார்.

“புதிய விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக அல்லது தமது பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்கான ஆலோசகர்களை அமர்த்திக் கொள்வதற்குப் பதிலாக தேவையான எண்ணிக்கையில் வெண்டிலேட்டர்கள், ஊசிகள், பிராணவாயு உருளைகள் வாங்க கவனம் செலுத்த வேண்டும்’’ என்று அவர் தி வயர் இணையதளத்திடம் கூறினார். “மேலும் அவர்கள் மருத்துவமனையில் உள்ள வென்டிலேட்டர்களின் ஆற்றல் பயன்பாட்டை சோதிக்க மின் பொறியாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். வெண்டிலேட்டரில் ஏற்பட்ட தீ தான் என் மனைவியின் உயிரைப் பறித்தது” என்று கூறினார்.

வைரலாக சென்ற அரசியல்

இந்த சூழ்நிலையில் கூட, குஜராத் மக்கள் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டுவதில்லை. அவர் பிறந்த நகரம் அகமதாபாத். அவர் இந்தியப் பிரதமராகுவதற்கு முன்பு குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருக்கிறார்.

உண்மையிலேயே,  மோடி இப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பதுதான் இப்போது பாடப்படும் பல்லவி.

ஒரு டோஸ் ரெம்டெசிவர் மருந்துக் குப்பிக்காக 9 மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பிரனய் தாக்கர், “மோடி இருந்திருந்தால் எல்லாம் கிடைத்திருக்கும். இப்பிரச்சினைகள் எல்லாம் 48 மணி நேரத்தில் தீர்வு கண்டிருக்கும். நான் கடவுள் கிருஷ்ணன் மீது நம்பிக்கை வைத்திருப்பது போல் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளேன்” என்று தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

தனது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ள பிரிதிபென் பட் என்ற பெண்மணி இந்த சூழ்நிலை ஏற்பட்டதற்கு மோடியின் தவறு காரணமல்ல என்கிறார். “உண்மையிலேயே, மோடி முதலமைச்சராக இருந்திருந்தால் கொரோனா குஜராத்தை நெருங்கியிருக்காது’’ என்கிறார்.

ஆனால், சில மக்கள் இந்த நம்பிக்கையுடன் ஒத்துப் போகவில்லை. காந்தியை பற்றி படிக்கும் மாணவரான பிரவின் மக்வானாவை பொறுத்தவரை, குஜராத் அரசு இந்த கொரோனா பாதிப்பு சூழ்நிலையை,  குஜராத் மாடலில் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது என்று எளிதாகக் குறைத்துக் காட்டுகிறது. (பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முன்னுதாரணமிக்க மாநிலம். இந்த குஜராத் மாடலை மற்ற எல்லா மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்) “குஜராத் மாடல் கட்டுக்கதை அம்பலமாகிக் கொண்டிருப்பதை மோடியால் தடுக்க முடியாது” என்றார், மக்வானா.

குஜராத் அரசு உயர் நீதிமன்றத்தில் வியாழன் (15.04.2021) பதில் அளிப்பதற்குத் தயாராக,    புதன்கிழமை அன்றே நடமாடும் ஆர்.டி-பி.சி.ஆர் (Drive in RT-PCR) சோதனை மையம், 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவனை கோவிட் நோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு, கூடுதலான பிராண வாயு சப்ளை, மேலும் கள்ளச் சந்தையை கண்காணிக்க ஒரு அவசர சிறப்புக் குழு என மற்ற சில திட்டங்களுடன் ரெம்டெசிவர் மருந்து குறித்த நிலைப்பாட்டையும் திட்டமிட்டது.

உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம், குஜராத் போலீசு, பல்வேறு நகராட்சி அலுவலகத்தின் ஊழல் தடுப்பு துறைகள் ஆகியவை இந்த கண்காணிப்பை நல்ல முறையில் செயல்படுத்தப் பொறுப்பேற்கும்.

பிரபல அகமதாபாத் மருத்துவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ-வுமான மருத்தவர் ஜிடுபாய் பட்டேல், அரசாங்கத்தின் இத்திட்டங்கள் குறித்து கிண்டலடித்துள்ளார். “இன்னும் படுக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, குஜராத் சூழல் கட்டுக்குள் உள்ளது. ஊடகங்களால் சூழல் கைமீறியதாக பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்று அரசாங்கம் சொல்கிறது, அப்படி என்றால் 900 படுக்கைகள் கொண்ட டி.ஆர்.டி.ஓ.மருத்துவமனையை இரண்டு வாரத்தில் அகமதாபாத்தில்  அமைக்க மத்திய அரசிடம் ஏன் விஜய் ரூபானி கேட்டிருக்கிறார்?” என்று கேட்கிறார் மருத்துவர் பட்டேல்.

இது ஒரு அரசியல் கேள்வி, ஆனால் சரியான கேள்வி. குஜராத்தில் வாழ்வின் எல்லா அம்சங்களையும் அரசியல் ஆளுமை செய்வதாகத் தெரிகிறது. இவற்றை அரசின் மிக மோசமான நிர்வாகக் கோளாறு என்று விமர்சிக்கும் காங்கிஸ் கட்சி, குஜராத் அரசின் திட்டங்கள் எல்லாம் மேலோட்டமானவைதான் என்று சொல்கிறது.

பி.ஜே.பி-யின் எதிர் கட்சிகள் குஜராத் மாடல் என்பதே மோசடியானது என்ற மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் கூற்றை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன. ஏப்ரல் 11 அன்று, சுயட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஸ் மேவானி, கொரோனா சூழ்நிலையை குறைத்துக்காட்டி நிர்வாக கோளாறு செய்து அனேக மக்களை மரணத்திற்கு தள்ளும் உங்களை குஜராத் ஒருபோதும் மன்னிக்காது என்று குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், அப்பட்டமான மிக மோசமான நிர்வாக சீர்கேட்டால் குஜராத் தொடர்ந்து துன்புறுகிறது.

தி வயர் இணையதளம், குஜராத் சுகாதாரத்துறை அமைச்சரையும், செயலரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தது. ஆனால், அவர்களிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை.

கட்டுரையாளர் : தீபல் திரிவேதி
தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : The Wire

மாட்டை வாழவைப்போம்.

மனிதரை கொன்று குவிப்போம்.

உ.பி.நாத்

நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், பல மாநிலங்களும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம்தான், தற்போது அதிகமாக பதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும்.

நிலைமை கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று அரசு அதிகாரிகள் தெரிவித்து வந்தாலும், மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

கன்வால் ஜீத் சிங்கின் தந்தை நிரஞ்சன் பல் சிங். வயது 58. கோவிட் தொற்று ஏற்பட்ட இவரை ஒவ்வொரு மருத்துவமனையாக அழைத்து சென்று கொண்டிருந்தபோதே இவரது உயிர் பிரிந்தது. நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத்தால், நான்கு மருத்துவமனைகளால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

`அன்றைய நாள் என் மனம் உடைந்ததுபோல ஆனது. சரியான நேரத்தில் சிகிச்சை கிடைத்திருந்தால், அவர் உயிரோடு இருந்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஆனால், அரசு, காவல்துறை, சுகாதாரத்துறை என யாருமே எங்களுக்கு உதவவில்லை.` என்று கான்பூரில் உள்ள தனது வீட்டிலிருந்து தொலைபேசியில் என்னிடம் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு, கோவிட் பரவல் தொடங்கியபோது, உத்தரபிரதேசத்தில் 8,51,620 பேருக்கு நோய் பாதித்து, 9,830 பேர் உயிரிழந்தனர். நாட்டின் மற்ற மாநிலங்களை கணக்கில் கொள்ளும்போது இது மோசமாகத் தெரியவில்லை என்று நினைத்த நிலையில், இந்த இரண்டாம் அலை, அம்மாநிலத்தை உலுக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசம்

பட மூலாதாரம்

நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், நிறைந்து வழியும், கோவிட் சோதனைச்சாவடிகள், மருத்துவமனைகளால் திருப்பி அனுப்ப்ப்படும் நோயாளிகள், மாநில தலைநகரான லக்னோ மற்றும் இதர நகரங்களிலும் மயானங்களில் தொடர்ந்து எரியும் சடலங்கள் என பல காட்சிகள் தலைப்பு செய்திகளாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

சுமார் 24 கோடி மக்கள் தொகையுடன், இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது. நாட்டில் ஆறில் ஒருவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவராக உள்ளார். தனி நாடாக பிரிக்கப்பட்டால், உலகில் மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில், சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் இந்தோனீஷியாவுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை உத்தரப்பிரதேசம் பிடிக்கும். பாகிஸ்தான் மற்றும் பிரேசிலைவிட மக்கள்தொகை அதிகமுள்ள பகுதி இது.`

அரசியல் ரீதியாகவும், இந்தியாவிற்கு முக்கிய மாநிலமாக உள்ளது. இங்கிருந்து இந்திய பிரதமர் மோதி உட்பட 80 பேர் நாடாளுமன்றம் சென்றுள்ளனர். மோதி வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தபோதிலும், இங்கிருந்து போட்டியிட்டார். இதனால், இம்மாநிலத்திற்கு சில நன்மைகளும் நடந்துள்ளன.

தற்சமயம், 1,91,000 பேர் கோவிட் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தினமும், ஆயிரக்கணக்கானோர் புதிதாகப் பாதிக்கப்படுவதாக செய்திகளும் வெளியாகின்றன. இது உண்மை நிலையைவிட குறைவான எண்ணிக்கையாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது. இந்த சூழல், அம்மாநிலத்தின் சுகாதார உட்கட்டமைப்பின் நிலையை அனைவருக்கும் காட்டியுள்ளது.

மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பல அமைச்சரவை உறுப்பினர்கள், டஜன் கணக்கான அரசு அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பேசி, அவர்களின் சோகக்கதைகளை கேட்டறிந்தேன்.

உத்திர பிரதேசம்

பட மூலாதாரம்,

படக்குறிப்பு,

உத்திர பிரதேசம்

கான்பூரில் உள்ள ஒரு செய்தியாளர் பகிர்ந்த காணொளியில், நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு மனிதர், அரசு லாலா லஜபதி ராய் மருத்துவமனையின் வாகன நிறுத்த வளாகத்தில் அமர்ந்துள்ளதை பார்க்க முடிகிறது. அவருக்கு சற்று தொலைவில் வேறொருவர் அமர்ந்துள்ளார். இருவருமே கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால், அவர்களை அனுமதிக்க மருத்துவமனையில் இடமில்லை.

அரசால் நடத்தப்படும் கன்ஷிராம் மருத்துவமனையில் ஒரு பெண்மணி கண்ணீர் மல்க அமர்ந்துள்ளார். இரு மருத்துவமனைகளில் தனது நோய்வாய்ப்பட்ட தாயை சேர்க்க மறுத்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

`நோயாளிகளுக்கான படுக்கைகள் இல்லை என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், அவரை தரையில் படுக்க வையுங்கள். குறைந்தபட்சம் அவருக்கு சிகிச்சையாவது அளியுங்கள். இதுபோல நான் பல நோயாளிகளை பார்த்துவிட்டேன். எங்களைப்போலவே பலரையும் திருப்பி அனுப்புவதை நான் பார்த்தேன். படுக்கைகளுக்கு பற்றாக்குறை இல்லை என்று முதல்வர் கூறுகிறார். அவை எங்கு உள்ளன என்று தயவு செய்து சொல்லுங்கள். அம்மாவிற்கு சிகிச்சை அளியுங்கள்` என்று அவர் அழுதார்.

`யாருமே வரவில்லை`

மாநிலத் தலைநகரான லக்னோவிலும் இதே மோசமான நிலைமைதான்.

சுஷில்குமார் ஸ்ரீவத்சவா என்பவருக்கு, ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தி, காரில் வைத்தபடியே ஒவ்வொரு மருத்துவமனையாக குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். கடைசியாக அவருக்கு படுக்கை கிடைத்தப்போது, நிலைமை கைமீறி சென்றுவிட்டது.

அவரது மகன் ஆஷிஷை தொடர்புகொண்டு பேசியபோது, அவர் பேசும் நிலையிலேயே இல்லை. `என்ன நடந்தது என்பது உங்களுக்கே தெரியும். நான் பேசும் நிலையில் இல்லை.` என்று என்னிடம் கூறிவிட்டார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ரமேஷ் சந்திரா, மறைந்த தன் மனைவின் உடலை அங்கிருந்து எடுத்துச்செல்ல அதிகாரிகள் உதவத் தவறியதால் உதவிகேட்டு தன் கைப்பட ஹிந்தியில் எழுதிய கடிதம், சமூக வலைதளத்தில் நூற்றுக்கணக்கானோரால் பகிரப்பட்டது.

`நானும் என் மனைவியும் கொரோனா நோயாளிகள். நேற்று காலையிலிருந்து அரசு உதவி எண்ணுக்கு 50 முறை தொடர்புகொண்டுவிட்டேன். யாருமே மருந்து கொண்டு வந்துகொடுக்கவோ, எங்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவோ வரவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால், இன்று காலை என் மனைவி உயிரிழந்துவிட்டார்.` என்று அதில் இருந்தது.

உத்திர பிரதேசம்
படக்குறிப்பு,

உத்திர பிரதேசம்

தனிப்பட்டமுறையில் சொல்லவேண்டுமென்றால், இந்த பெருந்தொற்று காலத்தில் இம்மாநிலம் இத்தனை கஷ்டங்களை அனுபவிப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றே சொல்லுவேன். பல ஆண்டுகளாக, இங்குள்ள மோசமான சுகாதார வசதிகளை நான் பார்த்துள்ளேன். என் குடும்பத்தினரின் சொந்த கிராமம் அங்குதான் உள்ளது. சாதாரண நாட்களிலேயே ஒரு மருத்துவரையோ, அவசர வாகனத்தையோ கண்டுபிடிப்பது கடினமான விஷயமாகும்.

பெருந்தொற்று காலத்தில் அது இன்னும் கடினம் ஆகிவிட்டது.

பிரதமரின் தொகுதியான வாரணாசியில், நிர்மலா கபூர் என்ற 70 வயது பெண்மணி கடந்த வியாழக்கிழமை கோவிட் தொற்றால் உயிரிழந்தார். அந்த சூழல் மிகவும் பயமுறுத்தும் விதமாக உள்ளது என்று விளக்குகிறார் விமல் கபூர்.

`அவசர ஊர்தியிலேயே பலர் இறப்பதை நான் பார்க்கிறேன். படுக்கைகள் இல்லாமல், மருத்துவமனைகள் நோயாளிகளை திருப்பி அனுப்புகிறார்கள், தேவையான கோவிட் மருந்துகள் இல்லாமல், மருந்து அளிப்பவர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆக்சிஜன் சிலிண்டருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.`

தனது தாயின் உடலை மயானத்திற்கு எடுத்துச்சென்றபோது, `பிணக்குவியலை` பார்த்ததாக கூறுகிறார் அவர். உடலை எரிக்கும் கட்டைகளின் விலை மூன்று மடங்காகியுள்ளதோடு, உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் காத்திருக்கவேண்டியுள்ளது.

`இதுபோல நான் பார்த்ததே இல்லை. எங்கு பார்த்தாலும் அவசர வாகனங்கள், அதில் பிணங்கள்.` என்கிறார் அவர்.

இதுபோல, கோவிட்-19 தொற்றின் தாக்கத்தால் பல சோகக் கதைகளை சுமந்துகொண்டுள்ளது இந்த மாநிலம். கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒரே நாளில் 30,596 புதிய நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஒருநாளில் பதிவான அதிக எண்ணிக்கை இதுவே.

உத்தரப் பிரதேசம்

பட மூலாதாரம்R

இதுவே, மாநிலத்தின் முழு நிலையை வெளிகொண்டுவரவில்லை என்று செயற்பாட்டாளர்களும், எதிர்கட்சி தலைவர்களும் கூறுகின்றனர். அதிக பரிசோதனைகள் செய்யாமலும், தனியார் சோதனைக்கூடங்களில் இருந்து வரும் முடிவுகளை கணக்கில் கொள்ளாமலும் விட்டதன் மூலம், முழு எண்ணிக்கையை அரசு மறைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்களின் குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதுபோலவே தோன்றுகிறது. நான் பேசிய பலரும், தங்களால் பரிசோதனை செய்துகொள்ள முடியாமல் போனது என்றோ, தங்கள் பரிசோதனை முடிவுகளை அரசு இணையதளத்தில் பதிவேற்றவில்லை என்றோதான் கூறுகிறார்கள். லக்னோவை சேர்ந்த 62 வயதாகும் அஜய் சிங், தனது மனைவியின் பரிசோதனை முடிவை காண்பித்தார். ஆனால், அந்த முடிவு குறித்த எந்த தகவலும் அரசு தரவுகளில் இல்லை.

கான்பூரில் இறந்த சிங், வாரணாசியில் இறந்த கபூரின் தாய் என யாருமே இதில் சேர்க்கப்படவில்லை. அவர்களின் இறப்பு சான்றிதழில், கோவிட்தான் காரணம் என்று எழுதவில்லை.

இது குறித்து இந்திய ஊடகங்களும், அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளன. அரசு தரவுகளில் குறிப்பிடப்படும் இறப்பு எண்ணிக்கைக்கும், வாரணாசி மற்றும் லக்னோவில் உள்ள மயானங்களில் உள்ள உடல்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாக அவை கூறுகின்றன.`

இந்த சூழல், மிகவும் மோசமாக உள்ளதாக கூறுகிறார் ஹெரிடேஜ் மருத்துவமனைகளின் இயக்குநரான அன்ஷுமான் ராய்.

` பல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடல்நிலை சரியில்லாமல் போவதே நிலைமை இப்படி இருக்க காரணம் என்கிறார் அவர்.

`நாம் 200% வேலை செய்யவேண்டிய இடத்தில் நம்மால் 100% கூட செய்ய முடியவில்லை. இதற்கு, நமது சுகாதாரத்துறை முழுக்க முழுக்க மனிதவளத்தை நம்பியுள்ளதே காரணம்` என்கிறார் அவர்.

விமர்சகர்களோ, இரண்டாம் அலையை சமாளிக்க தயாராகாமல் இருந்தமைக்காக, மத்திய, மாநில அரசுகளையே குற்றம் சாட்டுகின்றனர்.

செப்டம்பர் - பிப்ரவரிக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு இடைவேளை இருந்தது. அந்த சூழலை பயன்படுத்தி மருத்துவர்களை தயார் செய்து, ஆக்சிஜன் சிலிண்டர்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி வைத்திருந்திருக்க வேண்டும். அந்த வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார்கள் என அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

தரவுகள் பி.பி.சி.

ஆய்வு: ஷதாப் நஸ்மி.