ஞாயிறு, 31 ஜூலை, 2011

அமெரிக்காவை விட ஆப்பிள் பெருசு,

ஆயுர் வேதத்தில் நோய் எதிர்ப்பு[ஆண்டிபயாடிக்]மருந்துகள்.                                                           
நோயின் தன்மைக்கு ஏற்ப ஆன்டிபயாடிக் மருந்துகளின் பிரயோகங்களைச் செய்து, உடலில் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள கிருமித் தொற்று மற்றும் அது வளர்வதற்கு சாதகமான சூழ்நிலையை அழிக்க முற்படுவதே நவீன முறை சிகிச்சையின் நோக்கமாகும். இதுபோலவே ஆயுர்வேதத்திலும் நோய்களால் ஏற்படும் பாதகமான சூழ்நிலையை, நோய் எதிர்ப்புக்கு சாதகமாக மாற்றக்
 கூடிய மருந்துகள் பல உள்ளன. அவற்றில் சில -
 குளிர், கடுப்பு, வலி, தலை பாரம், மார்ச்சளி முதலியவற்றுடன் ஏற்படும் காய்ச்சலுக்கு, அதிலும் முக்கியமாகக் குளிருடன் ஆரம்பிக்கும் முறைக் காய்ச்சலுக்கு பத்து கருந்துளசி இலைகளையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட, ஆரம்ப நிலையிலேயே காய்ச்சல் தவிர்க்கப்பட்டுவிடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். காய்ச்சல் வந்த பின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம். அதுபோல துளசி, மிளகு, பழைய வெல்லம் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு கொட்டைப் பாக்கு அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர, மலேரியா, யானைக்கால் காய்ச்சல் வராது. அதிக வீரியமுடைய ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்த உபாதைகளுக்கு இன்று பெருமளவு கொடுக்கப்பட்டு வருகின்றன. துளசி மற்றும் மிளகை மூலப் பொருட்களாகக் கொண்ட சீதஜ்வராரி எனும் மாத்திரைகளையும் பயன்படுத்திக் குணமடையலாம்.
 ஓமத்தைத் துளசிச் சாற்றில் ஊற வைத்து நிழலில் உலர்த்தித் தூள் செய்து காலையில் வெறும் வயிற்றில் 5-8 கிராம் சாப்பிட, வயிற்றில் அஜீரணத்தாலும், வாயுவாலும் ஏற்படும் பொருமல், உப்புசம், வலி, அஜீர்ண பேதி, கீரைப்பூச்சிகள், பூச்சிகளால் ஏற்படும் பேதி முதலியவற்றுக்கு நல்ல குணம் கிடைக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகளின் தேவையே இருக்காது. வில்வாதி குளிகை எனும் மாத்திரை மருந்து இதுபோன்ற உபாதைகளில் பயன்படும் ஒரு சிறந்த ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்தாகும்.
 பறங்கிச் சக்கை எனப்படும் மதுஸ்னுஹீ சூரணம் 2 - 3 ஸ்பூன் உருக்கிய நெய்யையும்விட்டுக் குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட, சேற்றுப் புண், சிரங்கு, சொறி, கிருமி உபாதை போன்றவை நீங்கிவிடும்.
 தீப்புண் ஆறிய இடத்திலெல்லாம் சிலருக்குத் தோல் உரிந்து வெள்ளை வெளேரென்று ஆகிவிடும். 15 கிராம் வேப்பம்பட்டையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, 250 மில்லி ஆனதும் வடிகட்டி, அதில் கையிட்டுச் சிலுப்பினால் ஒரு நுரை வரும். அதைப் புண் வடுக்களின் மேல், ஒருநாளில் 3 - 4 முறை தேய்த்துவர, வடுக்கள் நீங்கி, பழைய நிறம் சீக்கிரத்தில் வந்துவிடும். விற்கப்படும் மருந்துகளில், சததெüதகிருதம் எனும் மருந்தையும் பூசலாம். எளிய ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்தாகும்.
 சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு வழங்கப்படும் ஆங்கில ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மாற்றாக, ஏலக்காய் சூரணம், வால் மிளகின் சூரணம், நெரிஞ்சில் முள்ளின் சூரணம் இவற்றைத் தனித்தனியாகவோ, சம அளவில் சேர்த்தோ, இளநீருடன் சாப்பிட, விரைவில் குணம் உண்டாகும்.
 தோல் எரிச்சல், அரிப்பு, நீர்க்கசிவு, புண்ணில் சீழ்ப்பிடித்தல், ஆறாத புண், வாய்ப்புண் போன்ற உபாதைகளில் திக்தகம் அல்லது மஹாதிக்தகம் எனும் கஷாயம் ஆங்கில ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு நிகரான வேலையைச் செய்து குணப்படுத்தும்.
 "கல்யாணக்ஷôரம்' என்று ஓர் ஆயுர்வேத மருந்து இருக்கிறது. ஒரு சிட்டிகை மருந்துடன் சிறிது நெய் குழைத்து, சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். உடல் உட்பகுதிகளில் ஏற்படும் ரத்தக் குழாய் அடைப்பு, மூலம், குடலில் வாயு பந்து போன்று அடைத்திருத்தல், ரத்தசோகை, வயிற்றில் நீர் தங்கும் உபாதை, குடலில் கிருமி உபாதை, சிறுநீர்த்தடை, சிறுநீரகக் கற்கள், உடல்வீக்கம் , இதய உபாதைகள், சர்க்கரை உபாதை, மூச்சிரைப்பு, இருமல் போன்ற உபாதைகளைத் தீர்க்கும் ஒரு சிறந்த ஆயுர்வேத ஆன்டி பயாடிக் மருந்து கல்யாண க்ஷôரம்.
 தொடை இடுக்குகளில் ஏற்படும் கறுப்பு நிறம், அரிப்பு, படை, எரிச்சல் போன்ற உபாதைகளில் நால்பாமராதி தைலம் எனும் ஆயுர்வேத ஆன்டிபயாடிக் பயன்படுத்தலாம்.
 இப்படி எத்தனையோ ஆயுர்வேத ஆன்டிபயாடிக் மருந்துகள் இருந்தாலும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்று ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து கொள்வதுதான் மிகவும் நல்லது.
__________________________________________________________________________________
ஆப்பிளும்-அமெரிக்காவும்
அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளிடம் உள்ள ரொக்க இருப்பு அமெரிக்க அரசின் ரொக்க இருப்பை விட அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் நிறுவனத்திடம் 75.87 பில்லியன்(ஒரு பில்லியன்=100 கோடி) டொலர் ரொக்க இருப்பு உள்ளது. ஆனால் அமெரிக்க அரசின் கருவூலத்தில் 73.76 பில்லியன் டொலர் மட்டுமே ரொக்க இருப்பு உள்ளது.

அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்று குடியரசு, ஜனநாயக கட்சிகள் கோரிவருவதற்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்காவின் கருவூலம் அளித்த பதிலில் இருந்து இந்த விவரம் பெறப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசிடம் உள்ள ரொக்க இருப்பு இந்த அளவிற்குத்தான் என்பதால் கடன் உச்ச வரம்பை உயர்த்த முடியாது என்று பதிலளித்துள்ளது.

அமெரிக்க அரசிற்கு தற்போது 14.3 டிரில்லியன்(ஒரு டிரில்லியன்=1000 பில்லியன்) டொலர் உள்ளது. இதற்கு மேலும் கடன் வாங்கினால் அது அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதித்துவிடும் என்று அமெரிக்க கருவூலம் கூறியுள்ளது.

அமெரிக்க அரசி விட ஆப்பிள் அதிக நிதியை கையிருப்பாக வைத்திருப்பதுதான் உலக தாராளமயமாக்களின் வெளிப்பாடு.இன்று அமெரிக்க அதிபர் அரசு கையிருப்பை அதிகமாக்க உதவிட எதிர் கட்சிகளிடம் கெஞ்சுகிறார்.அவரின் பதவிக்கே இப்பிரச்னை ஆபத்தாகிவிட்டது.மங்களம் பாடும் நிலையில் உள்ளார்.
அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி அந்த நாட்டுடன் முடிந்து போவதில்லை.இந்தியா உட்படஉலகுக்கே போருளாதார வீழ்ச்சிஆபத்தை விளைவிக்கும்.அமெரிக்கா அந்த அளவு உலகநாடுகளை ஒவ்வொருவகையில் தன் வலையில் மாட்டி வைத்திருக்கிறது.அதனால்தான் ஐரொப்பிய நாடுகளும் கூட இந்த பொருளாதார வீழ்ச்சியைக்கண்டு ஆடிப் போய் உள்ளன.
   உலக வங்கியின் தலைவரும் உடனே இதற்கு முடிவு காண வேண்டும் என அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்க பொருளாதார் வீழ்ச்சியினால் இந்தியாவிலும் வேலை வாய்ப்புகள் குறைந்தாலும் இந்தியாவும்-சீனாவும் அதை தாக்குப் பிடித்து நின்றன.ஆனால் அப்போது மத்திய அரசை இடதுசாரிகள் கண்காணித்து பல பொருளாதார முடிவுகளை மாற்ற் வைத்திருந்தினர்.
இப்போதோ கடிவாளம் இல்லாமல் முற்றிலும் அமெரிக்க ஆதரவு நடவடிக்கையில் மன்மோகன் அரசு சென்று விட்டது.எனவே இந்தியாவுக்கும் பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  


அமெரிக்காவின் கடன் பெறும் உச்ச வரம்பை உயர்த்தும் விஷயத்தில் விரைந்து முடிவெடுக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விஷயத்தில் ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இருவேறு கருத்துகளைக் கொண்டுள்ளனர். எனவே இறுதி முடிவை எட்ட முடியவில்லை.

இந்நிலையில் இது குறித்து ஒபாமா சனிக்கிழமை கூறியிருப்பது: இந்த விஷயத்தில் இரு கட்சியினரும் சேர்ந்து விரைவில் இறுதி முடிவுக்கு வர வேண்டும். அமெரிக்காவின் கடன் பெறும் உச்ச வரம்பை உயர்த்தாமல் நிலைமையைச் சமாளிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஆளும் ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள, பிரதிநிதிகள் அவையில் கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ள செனட்டில் மசோதா நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அதிபர் ஒபாமா எதிர்க்கட்சியினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மசோதா நிறைவேற்றப்படாவிட்டால் அமெரிக்காவில் பெரும் பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படும்.
_________________________________________________________________________                                       
ஈழப் பிரச்னைக்குத் தீர்வு?  பிரகாஷ் காரத்.


”இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரி மையும் சம வாய்ப்பும் வழங்கவேண் டும் என்ற முக்கியமான கோரிக்கை எழுந்துள்ள நிலைமையில் இந்த மாநாடு நடைபெறுவது குறிப்பிடத் தக்கது. இலங்கையில் ஆயுத மோதல் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் தமிழ்மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை. இலங்கை யில் இனப் பிரச்சனையால் ரத்த ஆறு ஓடியதும், அதனால் ஆயிரக்கணக் கான மக்கள் கொல்லப்பட்டதும் நாமறிவோம். இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக அந்த நாட்டில் நீடித்து வரும் பிரச்சனையாகும். இலங்கை யின் வரலாற்றை நாம் உற்று நோக்கிப் பார்த்தால் அந்த நாட்டில் சுதந்திரத் திற்கு பின்னர் சிங்களர், தமிழர் என இரு பிரிவு மக்கள் வசித்து வந்தாலும் தமிழர்களுக்கு சமவாய்ப்பும் சம உரி மையும் வழங்கப்படவில்லை. தமிழர் களின் சமூக கலாச்சார உரிமைகள் மறுக்கப்பட்டே வந்துள்ளன.

இலங்கை நாடு ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என்றால் அங்கு வாழும் அனைத்து மக்களுக்கும் குறிப் பாக தமிழ்மக்களுக்கு சம வாய்ப்பும் சம உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவேண் டும். அப்பகுதிகளுக்கு அதிகபட்ச சுயாட்சி வழங்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனால் இலங்கை அரசு இதை செய்யமறுத்து வருவதால் தான் நமது அண்டை நாடான இலங்கை யில் ஆயுத மோதல் ஏற்பட்டது. ஜன நாயக முறைப்படியான கூட்டாட்சி அமைப்பு முறை அங்கு ஏற்படுத்தப் பட்டால் தான் அடிக்கடி எழும் ஆயுத மோதல் பிரச்சனைக்கு முற் றுப்புள்ளி வைக்கமுடியும்.

ராணுவமயமாக்குவதே மையப்பிரச்சனை

2009 ஆம் ஆண்டு ராணுவ மோதல் முடிவுக்கு வந்தபின்னர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்படும் என்று அதிபர் ராஜபக்சே அறிவித்தார். தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேசி இதற்கு தீர்வு காணப்படும் என்றார். பின்னர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கள் அடங்கிய தெரிவுக்குழு அமைக் கப்படும் என்றும், அந்த குழு அளிக் கும் பரிந்துரைகளை அரசு அப்ப டியே நிறைவேற்றும் என்றும் கூறி னார். ஆனால் இதை அவர் செய்ய மறுத்ததோடு, ஆயுத மோதல் முடி வுக்கு வந்து 2 ஆண்டுகளில் ராணுவத் தின் செயல்பாட்டை தான் வலு வாக்கியுள்ளார். சிங்கள மொழி பேசும் இனவாத அமைப்புகளின் பார் வையில் தமிழர்கள் பிரச்சனையை ராஜபக்சே அரசு அணுகுவதால் தான் தீர்வு இன்னும் ஏற்படவில்லை. அர சியல் ரீதியாக இது ஒரு மக்கள் பிரச் சனை என்பதை அவர் காண மறுக் கிறார். இதுதான் இலங்கை பிரச்சனை தீராமல் இருக்க மூலவேராக உள்ளது.
                          
இலங்கைத் தமிழர் பிரச்சனை நீண்ட காலமாக நீடிப்பதால் அதற்கு விரிவான அணுகுமுறையுடன் தீர்வு காணப்படவேண்டும். ஆனால் அதை செய்யாமல் ராஜபக்சே அரசு அதிகா ரங்கள் முழுவதையும் தன்னிடமே வைத்துக்கொண்டு, வேண்டுமென்றே காலதாமதம் செய்வதால் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. இதனால் சிங்கள இனவாத குழுக்க ளின் பிடிமானமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிங்களர்-தமி ழர் இடையே மோதல் தீவிரமாக தூபமிடப்படுகிறது.
பிரச்சனை குறித்து பேச தமிழர் குழுக்கள் உள்ளன. தமிழ்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் உள்ளன. இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து பேசலாம். இப்போது கூட இலங்கையின் தமிழர் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் கட்சிகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. அவர்களின் பிரதிநிதி களை அழைத்து பேசலாம். ஆனால் அதை செய்ய ராஜபக்சே அரசு தவறிவிட்டது.

கொடுமையிழைத்தது ராணுவம்

இலங்கையில் ராணுவமோதல் தீவிரமாக இருந்தபோது தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவம் கொடு மைகளை இழைத்தது. அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டன. போர் காலத்தில் பின்பற்றக் கூடிய விதி முறைகளைக்கூட, அந்நாட்டு ராணு வம் மீறியது. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் என குண்டு வீச தடைசெய்யப்பட்ட பகுதி களில் கூட ராணுவ விமானங் கள் குண்டுகளை வீசின. நிவாரண முகாம் கள் என்ற பெயரில் பொது மக்கள் அடைத்து வைக்கப்பட்டு பட்டினி யால் சாகடிக்கப்பட்டனர். சரண் அடைய வந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் சித்ரவதை செய்யப்பட்டனர். ராணுவ மோதல் தீவிரமாக இருந்தபோது நடை பெற்ற இந்த கொடுமைகளை ஐநா பொதுச் செயலாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழு ஆவணப்படுத்தியுள்ளது. இந்த குற்றங்கள் எப்படி நடந்தது? இந்த குற் றத்தை செய்தவர்கள் யார்? அவர் களுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தரப்போகிறோம் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளை யும் இலங்கை அரசும் அதிபர் ராஜ பக்சேயும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தொடர்ந்து மறுப்பு தெரி வித்து வருகிறார்.

எனவே இந்த கொடுமைகள் குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்படவேண் டும். குற்றமிழைத்தவர்கள் தண் டிக்கப்படவேண்டும். வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கும் மக்கள் அவர்களது இருப்பிடங் களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். புனர்வாழ்வு பணிகள் தீவிரமாக நடைபெறவேண்டும். ஆனால் அந்த பணிகள் மிக தாம தமாகவே நடைபெறுகின்றன. மேலும் இலங்கைத் தமிழ் மக்க ளுக்கு வீடுகள் கட்டித் தர இந் திய அரசு அனுப்பிய உதவிகள் போய் சேரவில்லை. உயர் பாது காப்பு மண்டல பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்கள் யார்? அவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை இலங்கை அரசு வெளியிட மறுக்கிறது. எல்டிடிஇ அமைப்போடு தொடர்பு இருப்பவர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண் டும்.

30 ஆண்டுகால மோதலுக்குத் தீர்வு 

தமிழ்மக்கள் சுதந்திரமாக வும் கவுரவத்துடனும் வாழ ஏற் பாடு செய்யவேண்டும். அவர்கள் இழந்த அமைதியான வாழ்க்கை யை மீட்டெடுக்க இயல்பு நிலை திரும்ப வழிசெய்யவேண்டும். போர் முடிந்த பிறகும் தமிழர் பகு தியில் ராணுவம் முகாம்களை அமைத்துவருகிறது. இதற்காக அரசு நிலம் மட்டுமல்ல, தனி நபர்களின் நிலமும் கையகப் படுத்தப்படுகிறது. இது பிரச்ச னைக்கு தீர்வுகாணாமல் மீண் டும் மோதல் ஏற்படவே செய் யும். ராணுவமயமாக்கல் நடவ டிக்கை என்பது தமிழ் மக்க ளுக்கு மட்டுமல்லாமல், எதிர் காலத்தில் இலங்கையில் உள்ள அனைத்து மொழிபேசக்கூடிய மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத் தக்கூடியதாகும். எனவே ராணுவ மயமாக்கலை அனைத்து ஜன நாயக சக்திகளும் எதிர்க்கமுன் வரவேண்டும். ராஜபக்சே அர சின் இந்த நடவடிக்கைகள் அர சியல் ரீதியாக தமிழர் பிரச்ச னைக்கு தீர்வு காண தடையாக இருக்கிறது. 30ஆண்டுகளாக நீடித்துவரும் அரசியல் பிரச்ச னைக்கு எப்போது தீர்வு என்ப தும் இப்போதைய முக்கிய கேள் வியாகும்.

இலங்கையில் ராணுவ மோதல் தீவிரமாக இருந்தபோதும் பல ஆண்டுகளாகவும் அவசர நிலை அமலில் இருந்தது. மோதல் முடிந்த பிறகும் அவசர நிலை முழுவதுமாக விலக்கிக்கொள் ளப்படவில்லை. எனவே இலங்கை அரசின் எதேச்சதிகார நடவடிக் கையை இந்தியாவில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இலங்கையில் அமைதியை விரும் பும் சக்திகளும் இணைந்து எதிர்க்க முன்வரவேண்டும்.

இந்தியா- இலங்கை உடன் படிக்கையின் முக்கிய அம்ச மான, தமிழர்களுக்கு அதிக அதி காரங்கள் வழங்கும் 13வது அர சியல் சட்ட திருத்தத்தை அந் நாட்டு அரசு அமல்படுத்தவில்லை. இதுகுறித்து அரசு அளித்த உறுதி மொழியில் இருந்து விலகி விட்டது. இந்தியாவில் மாநிலங் களுக்கு அதிக தன்னாட்சி இல்லை என்றாலும், இருக்கிற அதிகார வரம்புப் படி சட்டம்- ஒழுங்கு என்பதும் காவல்துறை யும் மாநில அரசின் அதிகாரத் தில் உள்ளன. ஆனால் இலங்கை அதிபர் சமீபத்தில் அளித்த பேட் டியில் காவல் துறையும் நிலம் தொடர்பான அதிகாரங்களும் தேசிய அரசாங்க கட்டுப்பாட்டி லேயே இருக்கும் என்று கூறியுள் ளார். இது அதிகார பரவலுக்கு தேவையான நடவடிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யும். இது போன்ற நடவடிக்கைகள் சிங் களர்- தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உதவாது. இலங்கை யில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்துப் பேசினால் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்த புரிதல் ஏற் படும். அவர்களுக்கு அதிகார பர வல் ஏன் வழங்கவேண்டும் என் பதை உணர்ந்து கொள்ளவும் அது உதவும். அத்தகைய பேச்சு வார்த்தை தான் பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய அர்த்த முள்ள தீர்வாக இருக்கும். இதை முதலில் இலங்கை அரசு செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, குடியிருப்பு களை இழந்துள்ள மக்கள் அனை வரையும் அவர்களது பகுதியில் மறுகுடியமர்த்தம் செய்ய வேண் டும். மூன்றாவதாக, ராணுவ மோதலின் போது தமிழர் களுக்கு இழைக்கப்பட்ட கொடு மைகள்- சித்ரவதைகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப் படவேண்டும். நான்காவதாக, வடக்கு மற்றும் வட கிழக்கு பகு திகளில் நிர்வாகத்தில் ராணு வத்தின் தலையீட்டை நிறுத்த வேண்டும். அவசர கால சட்டத்தை திரும்பப் பெறவேண்டும். தமிழர் பகுதியில் ஜனநாயக முறை திரும்பி இயல்பு நிலை ஏற்பட வேண்டும். தமிழ் மக்கள் அதிக அதிகாரத்துடனும் சுதந்திரமாக வும் கவுரவமாகவும் வாழ வழி வகை காண வேண்டும். இதை செய்தால் தான் இலங்கைத் தமி ழர் பிரச்சனைக்கு அர்த்தமுள்ள தீர்வை காண முடியும்.”ஜுலை30 - சென்னை ஈழத்தமிழர் அரசியல் தீர்வு மாநாட்டில்பேசியது.
_____________________________________________________________________________________________________________
 இதே போல் ஈழத்தில் சிங்கள-தமிழர் ஒற்றுமை வருமா?
      புலிக்குட்டிக்கு பால் கொடுக்கும் சிம்பன்சி                                                                       

சனி, 30 ஜூலை, 2011

பக்சேயிடம் விடை பெற்ற நிருபமா


                                            
இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் மூன்று நாள் தனிப்பட்ட முறையில் நேற்றிரவு இலங்கை வந்துள்ளார். இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் தனது வெளிவிவகார செயலாளர் பதவியிலிருந்து ஜூலை31ல்விலகுகிறார்.
அதற்கு பிரியாவிடை கொடுத்து விருந்துஅளிக்கும் வகையில்இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் நிரூபமா ராவ் இலங்கை வந்துள்ளார். நிரூபமா ராவிற்கு இன்று காலை உணவுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டதாகஇலங்கை அரசின் ஊடகம் தெரிவித்துள்ளது.
நிரூபமா ராவ் இலங்கையின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழ்ங்கவுள்ளார். 2ம்தேதி இந்தியா திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1973ம் ஆண்டு முதல் நிரூபமா ராவ் இலங்கையுடன் இணைந்து பல்வேறு விதத்தில் செயற்பட்டுள்ளார். அதில் விடுதலைப்புலிகள் ஒழிப்பும் ஒன்று. நிரூபமா ராவ் அமெரிக்காவிற்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
=============================================================================================
உலகிலேயே முதன் முறை கருதரித்த ஆண்

                                                     

 3 குழந்தை பெற்றார்.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர் தாமஸ் பெட்டி(37). இவரது மனைவி நான்சி. நான்சிக்கு சிறுவயதில் செய்யப்பட்ட அறுவைசிகிச்சை காரணமாக குழந்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மனைவிக்குப் பதிலாக தானே குழந்தை பெற பெட்டி முடிவு செய்தார்.செயற்கை கருவூட்டல் மூலம் கடந்த 2008ம் ஆண்டு முதன்முதலாக பெட்டி கர்ப்பமானார். சுகப்பிரசவம் மூலம் அவருக்கு சூசன் என்ற மகள் பிறந்தாள். தொடர்ந்து 2வது மகன் ஆஸ்டின் பிறந்தான். கடந்த ஆண்டு ஜூலை 25ம் தேதி 3வது மகன் ஜென்சன் பிறந்தான். தற்போது அவனுக்கு ஒரு வயது ஆகிறது. 3 குழந்தைகளும் பெட்டிக்கு சுகப்பிரசவத்திலேயே பிறந்தன. பெட்டி குழந்தைகளை பெற்றாலும் அவர்களுக்கு நான்சி பாலூட்டினார்.
இந்நிலையில் குழந்தை பெறுவதற்காக பெண்தன்மையடைந்த பெட்டி டெஸ்டோ ஸ்டீரான் ஹார்மோன்கள் உதவியுடன் மீண்டும் ஆண் தன்மையை அதிகரித்துள்ளார். அதுமட்டுமின்றி தனது சிக்ஸ் பேக் உடலை மீண்டும் பெற்றுள்ளார். பெட்டி பிறப்பால் பெண். ஆனால் ஆணாக மாறவேண்டும் என விரும்பியதால் தனது 20ம் வயதில் அறுவை சிகிச்சை மூலம் சட்டப்படி ஆணாக மாறினார்.
டெஸ்டோ ஸ்டீரான் ஹார்மோன் எடுத்துக்கொண்டதால் அவரது முகத்தில் மீசை, தாடி முளைத்து முழு ஆணாக மாறினார். தனியாக அவர் வெளியே சென்றால் யாரும் அவரை சந்தேகப்பட மாட்டார்கள். இந்நிலையில் அவர் சூசன்னாவை திருமணம் செய்து கொண்டு ஓரினச்சேர்க்கை தம்பதிகளாக இருந்து வந்தனர்.
குழந்தை பெற வேண்டும் என்பதற்காக கடந்த 8 ஆண்டுகளாக டெஸ்டோ ஸ்டீரான் எடுப்பதை பெட்டி நிறுத்தியிருந்தார். வயிற்றில் முதல் குழந்தையை சுமந்தபடி பெட்டி இருக்கும் புகைப்படம் அப்போது பத்திரிகைகளில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது 3 குழந்தைகள் பிறந்து விட்ட நிலையில் பெட்டி மீண்டும் டெஸ்டோ ஸ்டீரான் எடுக்கத் தொடங்கி விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீண்டும் ஒட்டிய வயிறு மற்றும் சிக்ஸ் பேக் உடலை பெற்றுவிட்டார். 3 குழந்தைகளுடன் வெளியே செல்லும் இந்த ஓரினத்தம்பதிகளை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.

டாடா,அம்பானி,நீரா நார்டியா எல்லோரையும் எங்கே?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு
1291028134Niira_Radia.jpg  
    

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டாடாவையும், நீரா ராடியாவையும் சேர்க்காதது ஏன் என்று ஆ.ராசாவின் உதவியாளராக செயல்பட்ட ஆர்.கே. சந்தோலியா, நீதிமன்றத்தில் சி.பி.ஐ.க்கு கேள்வி எழுப்பினார்.

தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன் னிலையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தனது தரப்பை நியாயப்படுத்தி வாதாடிய ஆ.ராசா, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மீது குற்றம் சாட்டினார்.

அடுத்ததாக தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுராவின் வழக்கறிஞர் மத்திய அமைச்சரவை மீது குற்றம் சாட்டி னார். இந்நிலையில் வெள்ளியன்று ஆ. ராசாவின் உதவியாளர் ஆர்.கே.சந் தோலியா தரப்பில் வாதம் நடந்தது.
சந்தோலியா கூறியதாவது:
’ஒரு வருட விசாரணைக்குப் பிறகு சிபிஐ என்னை இந்த வழக்கில் சேர்த் தது. சாட்சியமாக மாறு, இல்லை யென்றால் குற்றவாளி ஆகிவிடுவாய் என்று என்னை மிரட்டியது. 2ஜி விவ காரத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஒன்றும் என் கையில் இருந்ததில்லை. நான் அமைச்சருக்கு உதவியாக இருந் தேன். அமைச்சரை, என்ன முடிவு எடுத்துள்ளீர்கள் என்று உதவியாள ரால் கேள்வி கேட்க முடியுமா? அவர் எடுக்கும் முடிவுகள் சரியா, தவறா என்று எனக்கு கவலை இல்லை. நான் பெரிய ஆள் இல்லை. நான் கையெழுத் துப் போட்ட ஒரு ஆவணத்தையாவது சிபிஐயால் காட்ட முடியுமா? எத்த னையோ பேர் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்கள். ஆனால் சிபிஐ அவர்களை எல்லாம் விட்டு விட்டது. இந்த விவகாரத்தில் நீரா ராடியாவையும், டாடாவையும் சிபிஐ விசாரிக்காதது ஏன்?

டாடா ஸ்கையின் டிடிஎச் சேவை யில் கலைஞர் டி.வியை சேர்க்க ராசா முயன்றது உண்மைதான். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வியாழனன்று, தொலைத் தொடர்புத் துறை முன்னாள் செய லாளர் சித்தார்த் பெகுரா தரப்பு வழக் குரைஞர் அமன் லேகி கூறியதாவது:-

’முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதற்கு பிரதமர்தான் ஒப்புதல் அளித்துள் ளார். இது தொடர்பாக மத்திய அமைச் சராக இருந்த ஆ.ராசா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அலைக்கற்றை ஒதுக்கீடு கோருவதற்கான தேதியை முன்னதாகவே முடித்துக் கொள்ள வும் பிரதமர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட் டோர் இதில் அனுமதி அளித்துள்ள நிலையில், அரசு அதிகாரியான பெகுரா, இந்த கொள்கை விஷயத்தில் தலையிட முடியாது. மத்திய அமைச் சரவை கூறியபடிதான் செயல்பட முடியும். தவறு இருப்பதாகத் தோன்றி னால் பிரதமர்தான் தலையிட்டிருக்க வேண்டும். இந்த வழக்கில் சாட்சியாக வேண்டுமானால் பெகுராவைச் சேர்க் கலாம். குற்றவாளியாக சேர்த்திருக்கக் கூடாது.’
எனஅவர் கூறினார்.

மேலும் 2007ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அப் போதைய நிதியமைச்சர் ப.சிதம்பர மும், தற்போதைய ரிசர்வ் வங்கி கவர் னரும் அப்போதைய நிதித்துறைச் செயலாளருமான சுப்பா ராவும் கலந்து கொண்ட தாகவும், இந்த கூட்டத்தில் தான் 2ஜி அலைக்கற்றையை ஏலம் விடாமல் உரிமங்களை ஒதுக்குவதற் கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் பெகுரா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக முன்னாள் நிதி யமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் நிதித் துறைச் செயலாளராக இருந்த டி. சுப்பா ராவ் ஆகியோர் மீது தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செய லாளர் சித்தார்த்த பெகுரா கூறியுள்ள குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் மறுத்துள்ளார்.

இதுகுறித்து கபில் சிபல் கூறுகை யில், பெகுரா தெரிவித்தபடி ப.சிதம் பரமும், சுப்பாராவும் கலந்து கொண் டதாக கூறப்படும் 2007ம் ஆண்டு டிசம் பர் 4ம் தேதி கூட்டம் நடைபெற்றதற் கான ஆதாரம் ஏதுமில்லை என்றார்.

இந்த ஊழலில் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என சி.பி.ஐ ஆல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்தடுத்து காங்கி ரஸ் தலைமையிலான அரசின் செயல் பாடுகளை புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கும் நிலையில்,பாவம் அமைச் சர் கபில்சிபல் வெளியிலிருந்து அவற் றை மறுத்துக்கொண்டிருக்கிறார்.
      இனிதான் சி.பி.ஐ.நீதிமன்றம் களை கட்டப்போகிறது.
மன்மோகன்,சிதம்பரம்,அம்பானி,டாடா,நீரா நார்டியா,முதல் சோனியா-ராகுல் வரை 2-ஜி அலைவரிசை நீளும் என தலைநகர வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்

ஸ்டாலினும் கைது

                                       
   தி.மு.க, வின் பொருளாளரும்-முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை திருவாரூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காரணம் ,கைதாணை[வாரண்ட்] கேட்டபோது ஏதும் இல்லை எனக்கூறி யதுடன் பூண்டி கலைவாணனையும் அவருடன் கைது செய்து வேனில் ஏற்றி திருவாரூர் மாவட்டத்தில் எங்கே செல்கிறோம் எனக் கூறாமலே சுற்றிவருகின்றனராம்.
அவர்களைத்தொடர்ந்து தி.மு.க,வினரும்,பத்திரிகையாளர்களும் வாகனங்களில் சென்று கொண்டிருக்கிறார்கள்.திருவாருர் அல்லது மன்னார்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
 முன்னதாக 20 க்கும் மேற்பட்ட காவைதுறை வாகனங்களில் சுமார்300 காவலர்கள் வந்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் ஒரு படத்திறப்பு விழாவுக்கு காரில் சென்ற போது அவரின் காரில் மீது மோத வேகமாக வந்த காவல்துறை வாகனத்தைகண்டு ஸ்டாலின் கார் ஒட்டுநர் வண்டியை நிறுத்தியுள்ளார்.உடனே ஸ்டாலின்,பூண்டிகலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்வதாக காவல் அலுவலர் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலில் தி.மு.க,வினர் ஈடுபட்டுள்ளனர்.
சுமார்680 பேர்களுடன் ஸ்டாலின்,கலைவாணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின்,கலைவாணன் தனியாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊரை சுற்றிவருகிறனர்.
சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடிய தி.மு.க.வினர் திருப்பி அனுப்பிய மாணவர்களில் ஒருவர் திரும்பிப்போகும் போது பேருந்து விபத்தில் இறந்து போனதற்காக இக்கைது நடவடிக்கை என காவல் துறையில்          ஒ ருவர் கூறியதாகத்தெரிகிறது.
அப்படி என்றால் தர்மபுரியில் வேண்டுமென்றே மாணவிகளைப் பேருந்தில்
வைத்துக்கொளுத்தி 3மாணவிகளை அ.தி.மு.க.வினர் துடி,துடிக்கக் கொன்றதற்கு,   கும்ப கோண மகாமகத்தில் இவரும்,உடன்பிறாசகோதரி சசிகலா குளிப்பதைக் காண  ஏற்பட்ட நெரிசலால் உண்டான விபத்தில் 21பேர்கள் இறந்தார்களே அதற்கெல்லாம் ஜெயலலிதாவை கைது செய்திருக்க வேண்டுமோ?
அ.தி.மு.க அறிவித்த போராட்டங்கள்,மாநாடுகளில் கலந்து கொண்டு வீடு திரும்பிய எத்தனையோ தொண்டர்கள் விபத்தில் பலியாகியுள்ளார்களே அதற்கெல்லாம் காவல்துறை ந்டவடிக்கை எடுக்குமா?அதற்கெல்லாம் யார் காரணம்.முதல்வர் ஜெயலலிதாதானே? 
இதேபோல் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் எம்.எல்.ஏ,வும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் கையொப்பமிட்டு செல்ல முயன்ற வீரவாண்டி ஆறுமுகம்,அவரது வழக்குரைஞருடன் கைது செய்யப் பட்டுள்ளார்.அதற்கான காரணங்களும் அறிவிக்கப்பட வில்லை.
மோசடி குற்றசாட்டுகள் யார் கொடுத்தாலும் எந்த விசாரணையுமின்றி அதன் பேரில் கைது செய்து உடனே சிறையில் அடைப்பது.சரியானதாக தெரியவில்லை. பழிவாங்கும் செயலாக மட்டுமே தெரிகிறது.
புகாரைப்பதிந்து.விசாரித்து அதில் உண்மை தெரிந்தால் மட்டும் நீதிமன்ரம் மூலம் சிறையில் அடைப்பதுதானே வழமையான நடைமுறை.
டான்சி,சிப்காட் சிறுதாவூர்,பையனூர்,கொடநாடு,சொத்துக்குவிப்பு ,நிலமோசடிகளில் ஜெ’யை யாரும் இப்படி சிறைக்குள் தள்ள வில்லையே?
இன்னும் நீதிமன்றத்தில் கூட முன்னிலையாகாமல் தாவு காட்டிக்கொண்டுதானே இருக்கிறார்.
                             
இப்போதும் ஜெயலலிதா குணம் -பழிவாங்கும்தனம் மாறவில்லை என்பதையே நிகழ்வுகள் காட்டி வருகின்றது.

வெள்ளி, 29 ஜூலை, 2011

சிங்கள படை வீரரின் மனசாட்சி

இறுதிப் போரில் தமிழர்மீதன கொடூரம் விவரிக்கிறார் சிங்கள வீரர்

                                               
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்த போது ராணுவ வீரர்கள் தமிழர்களின் நாக்குகளை அறுத்ததாகவும், நிராயுதபாணிகளாக சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சுட்டுக் கொன்றதாகவும் சிங்கள ராணுவ வீரர் ஒருவரே தெரிவித்து உள்ளார்.

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்த போது மனிதாபிமானமற்ற கொடூர செயல்களில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். தமிழ் வாலிபர்களை நிர்வாணமாக்கி கண்களை கட்டி ஈவு இரக்கமின்றி அவர்கள் சுட்டுக்கொன்ற காட்சிகள் இங்கிலாந்து நாட்டின் `சேனல் 4' டெலிவிசனில் ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலகம் முழுவதிலும் இருந்து இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கணைகள் பாய்வதோடு, போர்க்குற்றம் புரிந்த அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் சிங்கள ராணுவத்தினர் நடத்திய கோர தாண்டவங்கள் ஒவ்வொன்றாக `சேனல் 4' டெலிவிசன் அம்பலப்படுத்தி வருகிறது. இறுதிக்கட்ட போரின் போது சரண் அடையும் விடுதலைப்புலிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அதிபர் ராஜபக்சே உறுதி அளித்தார். அவரது பொய்யான வாக்குறுதியை நம்பி ஏராளமான விடுதலைப்புலிகள் சரண் அடைந்தனர். அவரது வாக்குறுதியை நம்பி சரண் அடைந்த விடுதலைப்புலிகளை ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டுக்கொல்லுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு, ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கோத்தபய உத்தரவிட்டதும், சரண் அடைந்த விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். இந்த தகவலை அப்போது அருகில் இருந்த இலங்கை ராணுவத்தின் 58-வது படைப்பிரிவின் ராணுவ வீரர் ஒருவரே உறுதிப்படுத்தி உள்ளார்.

அதன்பிறகு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிரிகேடியர் சவேந்திர சில்வா பதவி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது நினியார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் துணைத்தூதராக பணியாற்றுகிறார்.

போரின் இறுதி நாட்களில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை நேரில் கண்டவரும், அங்கு சாதாரண படை வீரர்களில் ஒருவராக இருந்தவருமான பெர்னாண்டோ என்ற ராணுவ வீரர் `சேனல் 4' டெலிவிசனுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ள தகவல்கள் கல் மனதையும் கரையச் செய்வதாக உள்ளது. தனது பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

என்னுடைய சக ராணுவ வீரர்கள், கண்ணில் பட்ட அப்பாவி மக்களை எல்லாம் மிருகத்தனமாக சுட்டுக்கொன்றனர். மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். துடிக்க துடிக்க அவர்களுடைய நாக்குகளை அறுத்து எரிந்தனர். பெண்கள், முதியவர்கள், குழந்தைகளையும் கூட விடாமல் கொன்று குவித்தனர். அப்படி கொல்லப்பட்டவர்கள் யாரும் விடுதலைப்புலிகள் அல்ல. சாதாரண குடிமக்கள்தான்.

பெண்களை அடித்து உதைத்து துன்புறுத்தி கற்பழித்தனர். அந்த கொடூரத்தை தடுக்க முயன்ற அவர்களுடைய பெற்றோர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றனர். மருத்துவமனையில் தமிழ் இளம்பெண் ஒருவரை எனது சகாக்கள் 6 பேர் சேர்ந்து கற்பழித்த கோரத்தை என் கண்களாலேயே பார்த்தேன். ராணுவத்தினரின் இதயங்கள் மிருகங்களை விட மோசமாக இருந்தது. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஆங்காங்கே ரத்த வெள்ளத்தில் சிதறிக்கிடந்ததை பார்த்தேன். இவ்வாறு தனது பேட்டியின் போது சிங்கள ராணுவ வீரர் பெர்னாண்டோ தெரிவித்து உள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை வழ்க்கம் போல் ராஜபக்சேயின் இலங்கை அரசு மறுத்துள்ளது.

=========================================================================================

கலைஞர் டி.வி.முடக்கம்.

thumbnail

கலைஞர் தொலைக்காட்சியின்சொத்துக்களை ஜப்தி செய்து முடக்கி வைக்கும் நடவடிக்கையில் அமலாக்க பிரிவினர் இறங்கி உள்ளனர். கலைஞர் டிவி.,க்கு சொந்தமான ரூ.215 கோடி மதிப்பிலான சொத்துக்களை பணமோசடி சட்டப்பிரிவின் கீழ் கைப்பற்றிடநடவடிக்கை மேற்கொள்ளமத்திய அரசின் அமலாக்கப்பிரிவு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதா அரசு பரவாயில்லை போல் இருக்கிறது.கூட்டணி காங்கிரசு செய்யும் அட்டகாசம் ரொம்ப அதிகமாயிருக்கே.பாவம் தி.மு.க. பரிதாபம் லட்சிய[ கூடா நட்பு]க்கூட்டணி.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரி எவ்வளவு பதட்டமான செய்திகளையே படிப்பது கொஞ்சம் மீள்வதற்கு இதை பாருங்கள்;

                                                           

சமச்சீர் 22 கெடு

                                   

ஆப்கானிஸ்தானில் மூன்று இடங்களில்நடந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில், பி.பி.சி. டி.வி. நிருபர் உள்பட 22 பேர் பலியாயினர். ஆப்கானிஸ்தானின் உரூஸ்கான் மாகாணத்தில் தலிபான்களை வேட்டையாடுவதற்காக , நேட்டோப்படையினர், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். நேற்று டிரி்ன்கோட் எனும் நகரில் மூன்று முறை மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் குழந்தைகள் மற்றும் இப்பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஆப்கான் பிரிவு பி.பி.சி. டி.வி நிருபர் ஓமித்கஹாவல்காக் என்பவர் உள்பட 22 பேர் பலியாயினர். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வரும் 2014-ம் ஆண்டிற்குள் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டுபடைகள் ஆப்கானை விட்டு வெளியேறவுள்ள நிலையில் தலிபான்கள் தாக்குதல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.

========================================================================================

                                                

தி.மு.க. அரசு அறிமுகப்படுத்திய சமச்சீர் கல்வியை இப்போதைய ஜெயலலிதா அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஜெயலலிதா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்றம், அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என கடந்த 18 ம் திகதி தீர்ப்பு வழங்கியது.

மேலும் வருகிற 22 ம் திகதிக்குள் மாணவர்கள் அனைவருக்கும் சமச்சீர் பாட புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அதில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் ஆகஸ்ட் 2 ம் திகதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வினியோகிக்க உத்தரவிட்டது.

தற்போது இந்த வழக்கு குறித்த இறுதி விசாரனை நடைபெற்று வருகின்றது. கடந்த 2 நாட்களாக அரசுத் தரப்பு வாதம் நடந்து வந்தது. அப்போது ஆகஸ்ட் 2  ம் திகதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க இயலாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ம் திகதிக்குள் சமச்சீர் பாட புத்தகங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவுவிட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் வரும் செவ்வாய்கிழமை விசாரணை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 28 ஜூலை, 2011

விளையாட்டு

இங்கிலாந்து நாட்டில் 2012-ல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக வடிவமைக்கப்பட்ட பதக்கங்கள் ஒலிம்பிக் கமிட்டி தலைவர்கள் முன்னிலையில் பிரிட்டனின் டிராவல்கர் சதுக்கத்தில் வெளியிடப்பட்டன. இங்கிலாந்து கலைஞர் டேவிட் வாட்கின்ஸ் வடிவமைத்துள்ள இதில் வெற்றியை குறிக்கும் நைக் என்ற கிரேக்க பெண் கடவுளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் பின்புறம் லண்டன் தேம்ஸ் நதிக்கரையை குறிக்கும் படங்களும் இடம் பெற்றுள்ளன. கிட்டத்தட்ட 2,100 பதக்கங்கள் பல்வேறு போட்டிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஞாபகம் வருதா,,,..
                                                      
காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் புரிந்ததாக சி.பி.ஐ.விசாரணையில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ,போட்டியின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடிக்கு  எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பகுதியினை ஸ்கேன் செய்து பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக டில்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில், பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததாக, போட்டியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து சுரேஷ் கல்மாடி மீது புகார் கூறப்பட்டது. சி.பி.ஐ. விசாரணையில் இவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்மாடிக்கு ஞாபக மறதி நோய் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதற்காக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் நீதிபதி தல்வாந்த்சிங் ,கல்மாடியை இதயம் மற்றும் நரம்பியல் சம்பந்தமான சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இன்று டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை பகுதியினை ஸ்கேன் செய்து உண்மையினை கண்டறியும் சோதனை நடத்தப்படவுள்ளதாக தெரிகிறது. பலத்த போலீஸ்பாதுகாப்புடன் எய்மஸ் மருத்துவமனையி்ல் தங்கியுள்ள கல்மாடியினை சந்திக்க உறவினர்களுக்கும் ,நண்பர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக திகார் சிறைத்துறை செய்தி தொடர்பாளர் சுனில்குப்தா கூறினார்.
ஆனால். ஸ்கேன் எடுத்து திரும்பும் போது பத்திரிகையாளர்களிடம் பேசிய கல்மாடி, நான் நன்றாக இருக்கிறேன். என்னைப்பற்றி வரும் தகவல்கள் தவறானவை. நான் எனது வழக்கமான பரிசோதனைக்கே வந்தேன். நேரம் வரும் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன என்று கூறினார். 
அரசியல்வாதிகளுக்கும் மக்கள் சொத்தில் ஆட்டையை போடுகிறவர்களுக்கும் இந்த செலக்டிவ் அம்னீசியா போன்ற நோய்கள் வசதியாகி விட்டது.
நான் நலமாகத்தான் இருக்கிறேன் என மறதி இல்லாமல் கல்மாடி கூறுகிறார்.ஆனால் சி/பி/ஐ,யும் சிறையினரும் அவருக்கு மறதி நோய் என்கிறார்கள்.அங்கே என்ன நடக்கிறது.?
ஆசியப்போட்டியை தான் நடத்தியதை அவர் மறக்க வேண்டும் என்று யாரோ நினைப்பதுபோல் தெரிகிறது.
______________________________________________________________________________________________
வால்ட் டிஸ்னியின் தமிழக வருகை.
தமிழ் மற்றும் பல இந்தியா மொழிகளில் சின்னத்திரை,வெள்ளித்திரை துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் முக்கிய நிறுவனமான யுடிவி-யை ரூ.2014 கோடிக்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமா உலக அளவில்செல்ல நல்ல வாய்ப்பு அமைந்துள்ளது. முன்பு யுடிவி நிறுவனத்தின் 50.5 பங்குகளை வால்ட் டிஸ்னி நிறுவனம் வாங்கி வைத்திருந்தது. இப்போது மீதமுள்ள பங்குகளையும் ரூ 1000 வீதம் டிஸ்னி நிறுவனம் வாங்க முடிவு செய்து ஒப்பந்தமும கையழுத்தானது. யுடிவியின் நிறுவனர்களான ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசமுள்ள பங்குகளையும் சேர்த்து வாங்குகிறது டிஸ்னி. இதன் மூலம் புதிதாக 454 மில்லியன் டாலர் அதாவது ரூ 2014 கோடியை யுடிவியில் முதலீடுசெய்துள்ளது வால்ட் டிஸ்னி.
                                        
பாலிவுட் டில் படங்கலைத்தயாரித்தயுடிவிதற்போதுதமிழில் திரைப்படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இப்போது இந்த நிறுவனம் டிஸ்னி வசம் செல்வது, தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்கை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. யுடிவி வெளியிட்ட தெய்வத்திருமகள் படம் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுபோக இந்நிறுவனம் அடுத்து வெளிவர இருக்கும் வேட்டை, வழக்கு எண் 18/9 , கும்கி படங்களின் உரிமையையும் யுடிவி பெற்றுள்ளது. இந்தப் படங்கள் இனி வால்ட் டிஸ்னி பெயரில் வெளியாகும் எனத் தெரிகிறது. அதேபோல், யுடிவியின் நேரடித் தயாரிப்பில் உருவாகும் முகமூடி படம் வால்ட் டிஸ்னி தயாரிப்புபெயரிலேயே வெளியாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்னொரு சிகப்பு ரோஜா.?

thumbnail
----------------------------------------------------------------------
கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் புதிய படமான விஸ்வரூபம் படத்தில்
சிவப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்தது போன்று நெகட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறாராம் கமல்ஹாசன். வெகு நாட்களாக நெகட்டிவ் ரோலில் நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம் கமல். அதிலும் குறிப்பாக சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்தது போன்ற ஒரு கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். நியாயமான காரணத்திற்காக காதலை வெறுக்கும் ஒரு ஹீரோ, சைக்கோ கொலையாளியாக மாறி ஒவ்வொரு பெண்ணாக போட்டுத் தள்ளுகிற கதைதானாம் விஸ்வரூபம் படத்தினுடையது. ஆனால் இதிலும் கமலுக்கு அழகான ஒரு லவ் இருக்கும்.
படப்பிடிப்பு நடத்தப்போகும் இடங்களையெல்லாம் புகைப்படங்களாக்கி, தயாராக வைத்திருக்கும் கமல்ஹாசன் சூட்டிங்கிற்கு தயாராகி விட்டார். ஆனால் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நாயகிதான் யாரென்று இன்னமும் தெரியாமலேயே இருக்கிறது. அதேநேரம் படத்தில் இடம்பெறும் முக்கிய கேரக்டரில் நடிகை ப்ரியா ஆனந்தை கமல் நடிக்கவைக்கிறார் செய்திருக்கிறார் கதாநாயகிதான் யார் என தெரியவில்லை.

=========================================================================
கென்யா அகதிகள் முகாமில் உள்ள 7 மாதக்குழந்தை இது.
           கொஞ்ச முடியுமா?
உள்நாட்டுக்கலவரமும்.பொறுப்பற்ற அரசுமே இந்த அவலத்தின் மூலக்காரணிகள்.
       இது கென்ய பள்ளியில் வழ்ங்கப்படும் சத்துணவு[?]சாப்பிட முயலும் மழலையர்.
==============================================================================================

எடியூரப்பா ஒருபடியாக பதவி விலகி விட்டார்>!<?
                     
வெறும் 25 எம்.எல்.ஏ.க்கள் வரை மட்டுமே தன்னை ஆதரித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தனது ராஜினாமாக் கடிதத்தை கட்சித் தலைவர் நிதின் கட்காரிக்கு அவர் அனுப்பி வைத்தார். கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதலமைச்சர் எடியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க. இன்று காலை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தெரிவு செய்ய, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்றும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.
ஆனால் இதை முதலில் எடியூரப்பா ஏற்கவில்லை. மாறாக, தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை அவர் அதிரடியாக பெங்களூருவி கூட்டினார். ஆனால் அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அவர் கூட்டிய கூட்டத்துக்கு அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே வந்திருந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியுற்ற எடியூரப்பா தனது பிடிவாதத்தை தளர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து கட்காரியுடன் தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசினார். கட்சி முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 

உலகில் சிறிய குரங்கினம்?

.

மாமியார் உடைத்தால்......................................,

                          

தமிழக அரசுக்கு 5,600 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு வழி காணப்பட்டுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அமைய உள்ளது.புதிய அரசு பொறுப்பேற்ற பின், இந்த நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 4ம் தேதி காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, இம்மாத துவக்கத்தில் இருந்து தினமும், துறை வாரியான ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் ஜெயலலிதா நடத்தினார். இக்கூட்டங்கள், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தன.
இக்கூட்டங்களில், துறைகளது செயல்பாடு, ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் ஒரு மணி நேரமாவது ஒதுக்கி, ஆய்வு செய்யப்பட்டது..

                         
இதனால், அடுத்த பத்து நாட்களில் பட்ஜெட் தயாரிப்பு பணி தீவிரமக நடக்க உள்ளது. பட்ஜெட் வெளியாவதற்கு முன்பே, மதுபானங்கள் மீதானஆயத்தீர்வை மற்றும் சிறப்புக் கட்டணங்களை உயர்த்தி, 1,400 ரூபாய் கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, பல்வேறு பொருட்கள் மீதான, "வாட்' மற்றும் விற்பனை வரி உயர்த்தப்பட்டு, 3,900 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பத்திரப்பதிவு கட்டணங்களை உயர்த்தியன் மூலம், கூடுதலாக 300 கோடி ரூபாய் வருமானத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளதால், பட்ஜெட் உரையில் புதிய வரி விதிப்புகள் ஏதும் இருக்காது என்று நம்பப்படுகிறது.

இது உண்மையின் உரைகல் தினமலர் செய்தி.

இரவோடு,இரவாக வாட்-டும் வரிகளை பட்ஜெட்டு அறிவிப்புக்கு முன் நடமுறைகளை மீறி அறிவித்து மக்களை விலைவாசி ஏற்றத்தில் தள்ளிய பின்னர் வெறும் அறிவிப்புகள் வெளியிடுவதற்கு பெயர் பட்ஜெட்டா?

இதில் புதிய வரிகள் இருக்காது என தினமலரின் பாராட்டுகள் வேறு. 

ஏற்கனவேதான் போட வேண்டிய வரிகளை 3900 கோடிக்கு போட்டாகிவிட்டதே.

ஜெயலலிதா போட்ட வரிகளால் மக்களுக்கு வலிகளே கிடையாதாம். காரணம்

அவர் மருந்து பொருட்கள் உட்பட மக்கள் அன்றாட உபயோகப்பொருட்களுக்கு வாட் வரியை உயர்த்தி,மதுபானங்கள் விலை உயர்வு,பத்திரப்பதிவு கட்டணங்களைக் கூட்டி 5600 கோடிக்களுக்கு வருமானத்திற்கு வழி செய்து விட்டாராம் எனவே பட்ஜெட்டில் மக்களை வாட்டும் வரி அறிவிப்புகளே இராதாம்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலவச கால்நடைகள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் லேப்-டாப்கள் போன்ற திட்டங்களை, செப்டம்பர் 15ம் தேதி முதல் செயல்படுத்தும் வகையில், அதற்கான நிதி ஒதுக்கீடுகள், பட்ஜெட்டில் செய்யப்படும். அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம், எவ்வாறு கேபிள் இணைப்புகள் மாற்றப்பட உள்ளன என்பதற்கான அறிவிப்பும் மட்டுமே பட்ஜெட்டில் இடம்பெறமாம்.

அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட இலவச அரிசி, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்கள் ஏற்கனவே துவக்கப்பட்டுள்ளன. எனவே, மீதமுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றும் அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளன.எனவே, பட்ஜெட்டில் மக்களுக்கு பயனளிக்கும் விஷயங்களே அதிகம் இருக்கும் என்று உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த பட்ஜெட்டில், ஆசிரியர்கள் நியமிக்கப்படும் விதம் பற்றிய அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாம்.

ஆக ஜெயலலிதா வரி விதித்தால் அது வருமானத்துக்கு வழி செய்கிறார்.மற்றவர்கள் வரி போட்டால் மக்கள் மீதி விழும் அடியா? 

  நீங்கள் சொல்லும் உண்மையை எந்த கல்லில் போட்டு உரைப்பது என்றுதான் தெரிய வில்லை.

ஏற்கனவே கருணாநிதி ஆட்சிகாலத்தில் பணிவழங்கப்பட்ட 5000 க்கும் அதிகமானவர்களை ஆசிரியர் நியமனம் ஆணை வழங்காமல் வைத்திருந்து விட்டு இப்போது தனக்கு பெயர் வர அதி பட்ஜெட்டில் அறிவிப்பாராம்.

                                                           

இலவசங்கள் இவரை யார் அறிவிக்கக் கூறியது.இலவச்ங்கள் கொடுக்கவே நிதியாதாரம் தேடி வாட்-வரியை அதிகப்படுத்துகிறாராம்.எங்களுக்கு ஒரு இலவசமும் வேண்டாம்.

வாட்டும் வரிகளைக் குறைத்து இந்த ஆட்சிக்காலத்திலாவது கசப்புமருந்து தராமல் ஆட்சி செய்யுங்களேன்.

பாவம்.இந்த அரசு ஊழியர்கள் என்ன பாடுபடப்போகிறார்களோ?அவர்கள் பக்கம் எப்போது அம்மாவின் கடைக்கண் பார்வர் விழப்போகிறதோ? விரைவிலேயே இருக்கும்.காலம் பதில் சொல்லும்.[இது சினிமா பெயர்மட்டுமில்லை.]

புதன், 27 ஜூலை, 2011

நெருப்பு நரி-5

பயம் வேண்டாம்.இது பயங்கரமான மிருகம் அல்ல. இது ஒரு வகை பாக்டிரியா.பல மடங்கு 

பெரிதாக்கப்பட்டுள்ளது[நம் உடலிலும் இருக்கிறதாம்]

======================================================================================

பயர் பாக்ஸ்-5

இப்போது வெளியாகியுள்ள பயர்பாக்ஸ் 5 பிரவுசர் இணைய உலகில் சாதனை படைக்குமெனத்தெரிகிறது.

பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய பதிப்பான 3.6ஐக் காட்டிலும் பலவகைகளில் கூடுதல் திறனும், வசதிகளும் கொண்டிருந்தது.

பதிப்பு 5 அதே போல புதிய தளங்களைக் காட்டாவிட்டாலும் மிகவும் உறுதியான செயல்பாட்டினையும், சில நல்ல புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

                          

மற்ற பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகளைப் போலவே பதிப்பு 5க்கும் பல கூடுதல் வசதிகள் ஆட் ஆன் புரோகிராம்கள் வழியாகக் கிடைக்கின்றன.

பதிப்பு 5 வெளியாகிச் சில வாரங்களே ஆகியுள்ளதால் இன்னும் பல ஆட் ஆன் புரோகிராம்களை நாம் விரைவில் பெறலாம். ஆட் ஆன் புரோகிராம்களைப் பொறுத்த வரை பதிப்பு 4ல் செயல்பட்ட அனைத்து ஆட் ஆன் தொகுப்புகளும் பதிப்பு 5லும் செயல்படும் என்று உறுதியுடன் சொல்ல முடியாது.


இவை பதிப்பு 5 மற்றும் 4ல் செயல்படுபவை. அத்துடன் இவை இலவசமாகவே கிடைக்கின்றன. மேலும் இவை தேவை இல்லை என்று எண்ணும் நிலையில் எளிதாகக் கணணியிலிருந்து இவற்றை நீக்கிவிடலாம்.

1. கூகுள் ஷார்ட்கட்ஸ்(googleshortcuts): என்ன தான் பயர்பாக்ஸ் பிரவுசரை(குரோம் பிரவுசர் இல்லாமல்) விரும்பிப் பயன்படுத்தினாலும் நாம் கூகுள் தரும் பல வசதிகளுக்கும் அடிமையாகவே இருக்கிறோம்.

அந்த வகையில் கூகுள் ஷார்ட்கட்ஸ் என்னும் இந்த ஆட் ஆன் புரோகிராமினைச் சொல்லலாம். இதனைப் பயன்படுத்தி கூகுள் தரும் அனைத்து வசதிகளுக்கும் பட்டன்களை பயர்பாக்ஸ் பிரவுசரில் உருவாக்கிப் பயன்படுத்தலாம். அல்லது அட்ரஸ் பாருக்கு அடுத்தபடியாக ஒரு ட்ராப் டவுண் மெனு போல அமைக்கலாம்.

இதனை இயக்கியவுடன் கிடைக்கும் செட்டிங்ஸ் மெனு பாக்ஸில் கூகுள் தரும் பல வசதிகள் பட்டியலிடப்பட்டு நாம் தேர்ந்தெடுக்கக் கிடைக்கும். அதில் நாம் இதுவரை அறியாத பல வசதிகளும் காணப்படுகின்றன. இந்த ஆட் ஆன் தொகுப்பினைப் பெறச் செல்ல வேண்டிய இணையதள முகவரி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/google-shortcuts-all-google-se/

2. ஆட் பிளாக் ப்ளஸ்(AdBlock Plus): இணையதளம் நம் மொனிட்டரில் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் விளம்பரங்களை வெகு எளிதாக இந்த ஆட் ஆன் புரோகிராம் தடுத்து விடுகிறது. இதனை நிறுவியவுடன் இது இயங்காது. இதனை நம் தேவைக்கேற்ப வடிவமைக்க வேண்டும். நாம் விரும்பினால் சில விளம்பரங்களுக்கு விலக்கல் அளிக்கலாம்.

அந்த விளம்பரத்தினை இந்த ஆட் ஆன் புரோகிராம் தடை செய்திடாமல் அமைத்திடலாம். இந்த புரோகிராமினைப் பெற http://adblockplus.org/en/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3. லாஸ்ட் பாஸ்(Last Pass): இந்த ஆட் ஆன் புரோகிராம் ஒரு நல்ல கடவுச்சொல் மேனேஜராக மட்டுமின்றி பார்ம் பில்டராகவும் செயல்படுகிறது. உங்கள் கடவுச்சொல்கள் அனைத்தும் ஓன்லைனில் தனி ஒரு வாணலியில் பாதுகாக்கப்படுகிறது. இதனால் அது அனைத்து பிரவுசர்களிலும், மற்ற கணணிகளிலும் பயன்படுத்தப்படலாம்.

இதனால் நாம் ஏதேனும் ஓர் இடத்தில் கடவுச்சொல்லை எழுதி வைத்திட வேண்டியதில்லை அல்லது ஒரே கடவுச்சொல்லை திரும்ப திரும்ப அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டியதில்லை. ஓன்லைனில் பாதுகாக்கப்படும் நம் கடவுச்சொல்லை எங்கிருந்தாலும் பயன்படுத்த முடியும்.

இதனை பெற http://lastpass.com/index.php என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.

4. கூலிரிஸ்(Cooliris): இதன் பயன்கள் மிகப் பெரிய அளவில் நமக்குப் பயன்படப் போவதில்லை என்றாலும் பொட்டோ மற்றும் வீடியோ கிளிப்களை, முப்பரிமாணத்தில் பார்க்கும் வசதியைத் தருகிறது. http://www.cooliris.com/desktop/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம்.

இந்த ஆட் ஆன் புரோகிராம் யூடியூப் மற்றும் Flickr, Picassa Web போன்ற பொட்டோ பகிர்ந்து கொள்ள உதவிடும் தளங்களில் சிறப்பாகப் பயன்படுகிறது. ஆனால் இது பழைய கணணிகளில் செயல்பட மறுக்கிறது. விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்கள் இயங்கும் கணணியில் சிறப்பாக இயங்குகிறது.

5. ஆஸ்ட்ராய்ட்ஸ் புக்மார்க்லெட்(Asteroids Bookmarklet):  இது ஒரு பொழுது போக்கும் வகையிலான ஆட் ஆன் புரோகிராம். ஆஸ்ட்ராய்ட் என்பது ஒரு சிறிய விண்கோள். இந்த புரோகிராம் எந்த ஒரு இணைய தளத்தினையும் விண்கோள் திரையாக மாற்றுகிறது. உங்களுடைய கர்சர் பெரிதாக மாறுகிறது.

ஸ்பேஸ் பாரினைத் தட்டினால் லேசர் துப்பாக்கி வெடிக்கிறது. தேவையற்ற பக்கத்தினைக் காலி செய்திடலாம். இப்படிப் போகிறது இதன் செயல்பாடு. இதனைக் கணினியில்இற்க்கி நிறுவ வேண்டாம்.

இதன் ஐகானை இழுத்துவந்து நம் அட்ரஸ் பாரில் போட்டுவிட்டால் போதும். இந்த புரோகிராம் ஒரு சிறிய ஜாவா ஸ்கிரிப்ட் ஆகும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி: http://erkie.github.com/

                                                             

ஸ்பெக்ட்ரம்:


ஆ.ராசாவின் கேள்விகள்.


ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனக் காக வாதாடி வரும் முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தொடர் பல்டி அடித்து வருகிறார். முன் னுக்குபின் முரணான வாதங் களை அவர் முன்வைத்து வருகிறார்.

திங்களன்று வாதாடிய அவர், பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதிய மைச்சர் ப.சிதம்பரம் ஆகி யோருக்கு தெரிந்துதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்தும் நடந்தது என்று கூறினார்.

ஆனால், செவ்வாயன்று ஆ.ராசாவின் சார்பில் ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் சுசீல்குமார், பிரதமர் மன் மோகன்சிங், ப.சிதம்பரம் ஆகியோரை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சேர்க்க வேண்டும் என்பது ஆ.ராசா வின் கருத்தல்ல என்றும், பத்திரிகைகள் அவ்வாறு திரித்து எழுதிவிட்டன என் றும் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஊழலை ஊடகங்கள்தான் ஊதி பெரிதாக்கிவிட்டன என்று திமுக தலைவர் கருணாநிதி தொடர்ந்து கூறி வரும்நிலை யில், ஆ.ராசாவின் வழக்கறி ஞரும் அதை எதிரொலிக் கும் வகையில் இவ்வாறு கூறினார். ஊடகங்கள் தங்க ளது வார்த்தைகளை எனது வாயில் திணிக்கக் கூடாது. நீதிமன்றத்தை விட்டு வெளி யே செல்லும்போது உண் மையை மட்டும் அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்று ஆ.ராசாவின் கருத் தை வழக்கறிஞர் கூறினார்.

ஆனால், இவ்வாறு கூறிய ஒரு மணி நேரத்தி லேயே அவர் தனது கருத் தை மாற்றிக் கொள்ளும் வகையில், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை யில் சாட்சியாக அப்போ தைய நிதியமைச்சர் ப.சிதம் பரத்தையும் சேர்க்க வேண் டும் என்று தனது வாதத்தில் ஆ.ராசா குறிப்பிட்டார்.

ஸ்வான் மற்றும் யுனி டெக் நிறுவனங்கள் தங்க ளது பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றது தொடர்பாக ப.சிதம் பரத்தை சாட்சியாக விசா ரிக்க வேண்டும் என்று கூறிய அவர், எனது நிலையைத் தான் நான் நியாயப்படுத்துகி றேன். யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றார்.

பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீட்டில் தவறு நடந் தது என்று பிரதமர் மன் மோகன்சிங் கருதியிருந் தால், இந்தப் பிரச்சனையை மத்திய அமைச்சர்கள் குழு வின் பரிசீலனைக்கு அவர் அனுப்பாதது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். அவ்வாறு அவர் அனுப் பாத நிலையில், பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் குற் றத்தில் பங்கு உண்டு என்றார் அவர்.

இந்தப் பிரச்சனையை மத்திய அமைச்சர்கள் குழு வுக்கு அனுப்பாமல், பிர தமர் மன்மோகன்சிங் நிராக ரித்தது ஏன்? இதுகுறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சர்கள் குழுவை அவர் அமைக்காதது ஏன்? அவரது கடமையை அவர் செய்யாததால் சதி நடவடிக் கை என்று கூறப்படுவதில் அவருக்கும் பங்கு உண்டு என்று பொருளாகிறது என்றார் ராசா.

தம்மை ஜாமீனில் விடு தலை செய்ய வேணடும் என்றும், சட்டவிரோதமாக தம்மை சிறையில் அடைத் திருப்பதாகவும் ஆ.ராசா கூறினார்

growing stomach of young boy | பெரிதாகி வரும் சிறுவனின் வயிறு:ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிப்பு Dinamalar


 சிங்கம்புணரியில் பிறந்த உடன் குடல் வெளியே தெரிந்த சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, அவனது தாய் தவித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி வனிதா. இவர்களது மகன் மணிசர்மா(4). இவர், சிங்கம்புணரியில் உள்ள தனியார் கிளினிக்கில் பிறந்தபோது தோல் மென்மையாக இருந்துள்ளது. இதனால், வயிற்றுக்குள் இருந்த குடல் வெளியே தெரிந்துள்ளது. நாளைடைவில், இவரது குடல் பெருத்து வயிறு வீங்கியது. பயந்துபோன வனிதா, மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் கிளினிக்கிற்கு சிறுவனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுவனின் 2 வயதில் ஆப்பரேஷன் செய்துள்ளனர். மீண்டும், சிறுவனின் வயிறு பெருத்துக்கொண்டே இருந்தது.
இரண்டாவது முறையாக ஆப்பரேஷன் செய்யவேண்டும்; இதற்கு 2 லட்ச ரூபாய் வரை செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஏழை சிறுவனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி, வனிதா தவிக்கிறார். இது குறித்து வனிதா கூறுகையில்,"" எனது மகனின் நிலையை பார்த்து, என் கணவர் என்னை விட்டு பிரிந்து விட்டார். இதனால், குடும்பம் நடத்த வசதியின்றி, கயிறு திரிக்கும் தொழிலுக்கு வந்தேன். தினமும் 100 ரூபாய் சம்பாதித்து, குடும்பம் நடத்துகிறேன். எனது மகனின் ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிக்கிறேன்,'' என்றார்.உதவ விரும்புவோர், 96261 - 08933-ல் தொடர்பு கொள்ளலாம்.
   
| பெரிதாகி வரும் சிறுவனின் வயிறு:ஆப்பரேஷனுக்கு நிதியின்றி தவிப்பு
இவனின் அறுவை சிகிச்சைக்கு உதவுபவர்கள் உதவலாமே..

செவ்வாய், 26 ஜூலை, 2011

பிடிபட்ட தீவிரவாதி.


             
சென்ற 13 ம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில்24பேர்கள் உடல் சிதறி பலியானார்கள்.129 பேர்கள் படுகாயமைந்து இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மனிதாபிமானமற்ற  இக்குண்டு வெடிப்பில் தொடர்புடைய நேபாள நாட்டைச் சேர்ந்த ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் காத்மாண்டுவில் கைது செய்துள்ளனர்.நேபாளத்தின் சர்லஹி மாவட்டத்தைச் சேர்ந்த முகம்மத் ஜாகீர் (40) என்பவர் உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேபாள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள பலுவதார் பகுதியில் வாடகைக்குக் குடியிருந்த இவரின் செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. மும்பை குண்டுவெடிப்புகள் தொடர்பாக இவர் தொலைபேசியில் பேசியதும், குறுந்தகவல்கள் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜாகீர் கடந்த வாரமே கைது செய்யப்பட்டு விட்டார். எனினும் அந்த செய்தி ரகசியமாக வைக்கப்பட்டு இப்போது  வெளியில் கசிந்துள்ளது
===================================================
கணினியியல் கற்றுத் தரும் இணையம்
========================================
கூகுள் கோட் யூனிவர்சிட்டி என்னும் பெயரில் கூகுள் இணைய பல்கலையை நடத்தி வருகிறது.
இந்த பல்கலையில் கணினி தொடர்பாக அனைத்தும் கற்று கொள்ளலாம். கணினி கல்வி தொடர்பான இணைய பாடங்களை இந்த இணைய பல்கலையில் கூகுள் பட்டியலிட்டுள்ளது.
புதிய புரோகிராமிங் மொழிகள், எச்.டி.எம்.எல் வடிவமைப்பு, இணையதள பாதுகாப்பு, ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகள் தொடர்பான இணைய பாடங்கள் வீடியோ விளக்கங்களோடு இடம் பெற்றுள்ளன.
ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு தேவையான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம். கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவையும் இல்லை.
இணையவாசிகள் தங்களுக்கு தேவையான பாடதிட்டம் உள்ளதா என்று தேடிபார்க்கும் வசதியும் உள்ளது. மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டு சந்தேகத்தையும் தீர்த்து கொள்ளலாம்.
பேராசிரியர்கள் மற்றும் இணைய நிபுணர்கள் தங்களது இணைய பாடங்களை இங்கே சமர்பிக்கலாம். புதிய பாட திட்டங்கள் மற்றும் பிரபலமாக உள்ள பாடங்களும் தனியே அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
மொத்தத்தில் இத்தளத்தில் நிறைய கணினி தொடர்பாகக் கற்றுத்தேரலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

முதலிடத்தை இழக்கும் நோக்கியா.

கையடக்கத்தொலைபேசி சந்தையில் 1990 ஆம் ஆண்டு முதல் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடித்திருந்த நோக்கியா முதற்தடவையாக ஆப்பிளிடம் தனது இடத்தினை இழந்தது.
கடந்த பல மாதங்களாக நொக்கியா தனது சந்தையினை சிறிது சிறிதாக இழந்து வந்தது.
அந்நிறுவனத்தின் அறிக்கைகளின் படி 2011 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் தனது விற்பனை 34% குறைந்துள்ளதாகவும் 16.7 மில்லியன் கையடக்கத்தொலைபேசிகளை மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் ஆப்பிள் 20 மில்லியன் ஐ போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது நோக்கியாவிற்கு இழப்பாகும்.
மேலும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் நோக்கியாவை முந்தும் நிலையில் உள்ளதாகவும் அதன் அறிக்கை வெளியாகும் போது நோக்கியாவின் நிலை இதைவிடகீழிறங்கும்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் நோக்கியாவின் சந்தைப் பங்கானது 38 வீதத்திலிருந்து 28 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆப்பிள் மற்றும் கூகுளின் ஆண்ட்ராயிட் இயக்குதளத்தினைக்கொண்டியங்கும் கையடக்கத்தொலைபேசிகளும் சந்தையில் வேகமாக வளர்ச்சியடைந்து வருவது முக்கிய காரணமாகும்.
 நோக்கியா இன்று வரை எந்தவிதமான மாறுதலுமின்றி தனது ‘சிம்பியன்’ இயக்குதளத்தினை கொண்டியங்குவதே அதன் தோல்விக்கான மற்றுமொரு முக்கியமான காரணம்.
இதனைத் தவிர்க்கவே நோக்கியா விண்டோஸ் உடன் கைகோர்ப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தது. எனினும் கையடக்கத் தொலைபேசிச் சந்தை வேகமாக வளர்ந்துவரும் நிலையில் நோக்கியா தனது இடத்தினை தொடர்ச்சியாக இழந்து வருகின்றது.
மேலும் சீன நிறுவனங்களின் மலிவான ஆனால் பல்வேறு வசதிகளைக் கொண்ட கைப்பேசிகளும் சந்தையில் மும்மரமாக விற்பனையாவதும் பலத்த அடியை நோக்கியாவுக்கு தந்துள்ளது.
சீன நிறுவனமான ‘ZTE’ மற்றும் ‘RIM’ இன் பிளக்பெரி ஆகியவையும் குறிப்பட்ட அளவில் வளர்ச்சியடைந்து வருகின்றமை நோக்கியாவிற்கு மேலும் சவாலாகவுள்ளது.
நோக்கியா வெகுவிரைவில் புதிய இயக்குதளத்தில்  இயங்குவதுடன் பல முன்மாதிரியான கையடக்கத்தொலைபேசிகளை தயாரிக்காவிடில் சந்தையில் பின்தங்கிப்போகும் நிலை வெகுதொலைவில் இல்லை .
=========================================================================
  ராசாவின் பார்வை
ஆ.ராசாவின் தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்,ப.சிதம்பரம்.டா டா நிறுவனம் 
அருண் ஷோரி ஆகியோர்  இலக்காக இருக்கின்றனர்.
ராசா ஏதோ கையில் பலத்த ஆதாரம் வைத்திருப்பதாகவே தெரிகிறது.
முன்பே 18 கடிதங்கள் தன் கையில் உள்ளதாகவும் அதை வைத்து தானே வாதாடப்போவதாகவும் அவர் கூறியது நினைவிருக்கலாம்.
சி.பி.ஐ. சேயல் பாடுகளும் அவர் கூருவதைப் போல் ஒருதலைப்பட்சமாகவே இருப்பது போல்தான் உள்ளது.
                                                       
ஸ்வான் போன்ற நிறுவனங்களை வழக்கில் சேர்த்த சி.பி.ஐ.டா டா வை ஏன் சேர்க்கவில்லை.
கலைஞர் தொலைக்காட்சியில் 20% பங்கு வைத்திருக்கும் கனிமொழியை கைது செய்த சி.பி.ஐ.தனது ரிலையன்ஸ் நிறுவனத்தில் 69% பங்கு வைத்திருக்கும் அம்பானி.ரத்தன் டாடா க்களை இதுவரை விசாரிக்கவே அலைக்க வில்லையே ஏன்?
ராசா லேட்டாகக் கேட்டாலும் ஹாட்டாகத்தான் கேட்டுள்ளார்.
சிதம்பரம்.மன்மோகன் சிங்,அம்பானி மாட்டுவதாக இருப்பதால் இனி 2ஜி வழக்கு சற்று தள்ளாடி மறக்கவைக்கப் படும் எனவே தெரிகிறது.