ஸ்டாலினும் கைது

                                       
   தி.மு.க, வின் பொருளாளரும்-முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலினை இன்று காலை திருவாரூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.காரணம் ,கைதாணை[வாரண்ட்] கேட்டபோது ஏதும் இல்லை எனக்கூறி யதுடன் பூண்டி கலைவாணனையும் அவருடன் கைது செய்து வேனில் ஏற்றி திருவாரூர் மாவட்டத்தில் எங்கே செல்கிறோம் எனக் கூறாமலே சுற்றிவருகின்றனராம்.
அவர்களைத்தொடர்ந்து தி.மு.க,வினரும்,பத்திரிகையாளர்களும் வாகனங்களில் சென்று கொண்டிருக்கிறார்கள்.திருவாருர் அல்லது மன்னார்குடி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.
 முன்னதாக 20 க்கும் மேற்பட்ட காவைதுறை வாகனங்களில் சுமார்300 காவலர்கள் வந்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் ஒரு படத்திறப்பு விழாவுக்கு காரில் சென்ற போது அவரின் காரில் மீது மோத வேகமாக வந்த காவல்துறை வாகனத்தைகண்டு ஸ்டாலின் கார் ஒட்டுநர் வண்டியை நிறுத்தியுள்ளார்.உடனே ஸ்டாலின்,பூண்டிகலைவாணன் ஆகிய இருவரையும் கைது செய்வதாக காவல் அலுவலர் கூறியதைத் தொடர்ந்து சாலை மறியலில் தி.மு.க,வினர் ஈடுபட்டுள்ளனர்.
சுமார்680 பேர்களுடன் ஸ்டாலின்,கலைவாணன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின்,கலைவாணன் தனியாக ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊரை சுற்றிவருகிறனர்.
சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடிய தி.மு.க.வினர் திருப்பி அனுப்பிய மாணவர்களில் ஒருவர் திரும்பிப்போகும் போது பேருந்து விபத்தில் இறந்து போனதற்காக இக்கைது நடவடிக்கை என காவல் துறையில்          ஒ ருவர் கூறியதாகத்தெரிகிறது.
அப்படி என்றால் தர்மபுரியில் வேண்டுமென்றே மாணவிகளைப் பேருந்தில்
வைத்துக்கொளுத்தி 3மாணவிகளை அ.தி.மு.க.வினர் துடி,துடிக்கக் கொன்றதற்கு,   கும்ப கோண மகாமகத்தில் இவரும்,உடன்பிறாசகோதரி சசிகலா குளிப்பதைக் காண  ஏற்பட்ட நெரிசலால் உண்டான விபத்தில் 21பேர்கள் இறந்தார்களே அதற்கெல்லாம் ஜெயலலிதாவை கைது செய்திருக்க வேண்டுமோ?
அ.தி.மு.க அறிவித்த போராட்டங்கள்,மாநாடுகளில் கலந்து கொண்டு வீடு திரும்பிய எத்தனையோ தொண்டர்கள் விபத்தில் பலியாகியுள்ளார்களே அதற்கெல்லாம் காவல்துறை ந்டவடிக்கை எடுக்குமா?அதற்கெல்லாம் யார் காரணம்.முதல்வர் ஜெயலலிதாதானே? 
இதேபோல் தூங்கிக் கொண்டிருந்த அன்பழகன் எம்.எல்.ஏ,வும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்நிலையத்தில் கையொப்பமிட்டு செல்ல முயன்ற வீரவாண்டி ஆறுமுகம்,அவரது வழக்குரைஞருடன் கைது செய்யப் பட்டுள்ளார்.அதற்கான காரணங்களும் அறிவிக்கப்பட வில்லை.
மோசடி குற்றசாட்டுகள் யார் கொடுத்தாலும் எந்த விசாரணையுமின்றி அதன் பேரில் கைது செய்து உடனே சிறையில் அடைப்பது.சரியானதாக தெரியவில்லை. பழிவாங்கும் செயலாக மட்டுமே தெரிகிறது.
புகாரைப்பதிந்து.விசாரித்து அதில் உண்மை தெரிந்தால் மட்டும் நீதிமன்ரம் மூலம் சிறையில் அடைப்பதுதானே வழமையான நடைமுறை.
டான்சி,சிப்காட் சிறுதாவூர்,பையனூர்,கொடநாடு,சொத்துக்குவிப்பு ,நிலமோசடிகளில் ஜெ’யை யாரும் இப்படி சிறைக்குள் தள்ள வில்லையே?
இன்னும் நீதிமன்றத்தில் கூட முன்னிலையாகாமல் தாவு காட்டிக்கொண்டுதானே இருக்கிறார்.
                             
இப்போதும் ஜெயலலிதா குணம் -பழிவாங்கும்தனம் மாறவில்லை என்பதையே நிகழ்வுகள் காட்டி வருகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?