இலங்கை- இந்தியா- அமெரிக்கா ,........

  இலங்கை அரசு வழங்கும்  அசல் காணொளி[வீடியோ]
சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் சுடப்படும் காட்சி- சேனல் 4

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படு்ம் போர்க்குற்றங்கள் பற்றி சானல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில் வெளியான காட்சிகளின் மாற்றம் செய்யப்படாத, அசல் காணொளி காட்சிகள் தமக்கு கிடைத்துள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.
இவ்வாறான காட்சியொன்றை இலங்கைஅரசுக்கு ஆதரவான சில ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
சானல் 4 ஆவணப் படத்தில், வெட்ட வெளியொன்றில் இலங்கை இராணுவத்தின் சீருடை போன்று தோன்றும் உடையணிந்தவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சிலரை கண்களையும் கைகளையும் கட்டி, அவர்களை நிர்வாணப்படுத்தி, பின்னால் நின்று சுட்டுக் கொல்வது போன்ற காட்சியொன்று வெளியாகியிருந்தது.
அந்தகாணொளி காட்சிகள் போலியானவை என்றும், மாற்றம் செய்யப்பட்டவை என்றும் கூறிய இலங்கை அரசாங்கம், தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துவிட்டது.
ஆனால் அந்த காணொளி காட்சிகள் உண்மையானவை என்பதை ஐநா சார்பான தொழிநுட்ப வல்லுநர்கள் உறுதிப்படுத்திய பின்னரே தாம் அவற்றை வெளியிடுவதாகவும் சானல் 4 தெரிவித்திருந்தது.
சிங்கள - தமிழ்  உரையாடல்கள்
'போர்க்குற்றங்கள்'-சுயாதீன விசாரணைகள் கோரப்படுகின்றன
'
 4வில் வெளியான காட்சியில் பின்னணியில் இலங்கைராணுவ சீருடையில் இருப்பவர்கள் தங்களுக்குள் சிங்கள மொழியில் உரையாடுவதைப் போன்றே காணொளிஅமைந்திருந்தது.
ஆனால், தற்போது இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிடமிருந்து தமக்கு கிடைத்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்ற, மாற்றம் செய்யப்படாத அசல் காணொளி என்று வெளியிடப்பட்டுள்ள காணொளி காட்சியில் பின்னணியில் அவர்கள் தமிழ் மொழியில் உரையாடுவதை போன்று காட்சி அமைந்திருக்கின்றது.
சானல் 4 காணொளியிலும், தற்போது இலங்கையில் வெளியாகியிருக்கும் காணொளியிலும் ‘காட்சிகளில்  வித்தியாசங்கள் இல்லை’.
பின்னணியில் கேட்கும் மொழியில் மட்டுமே வித்தியாசம் தெரிகிறது. சானல் 4 தொலைக்காட்சி காணொளியில் சிங்கள மொழியில் குரல்கள் கேட்கின்றன. ஆனால் தற்போது இலங்கையில் வெளியாகியுள்ள வீடியோ காட்சியில் பின்னணிக் குரல்கள் தமிழ் மொழியில் கேட்கின்றன
 இலங்கையின் இறுதி கட்டப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி விசாரணைகள் நடத்த வேண்டுமென்று ஐநாவும் பல்வேறு நாடுகளும் கோரி வருகின்றதது.
  மொத்தத்தில் இலங்கை அரசு சானல்-4 வெளியிட்ட காணொளியை தமிழில் [டப்பிங் ] மொழிமாற்றம் செய்து வெளியிட்டு உலகை ஏமாற்றுகிறது.ஆனால் அதன் திருட்டுத்தனம் வெளிப்பட்டு உலகின் முன் மேலும் குற்றவாளியாகி தலைகுனிவைத்தான் பெற்றுள்ளது.
 இந்த போலி காணொளி மூலம் ராஜபக்சேயின் இலங்கைப்படைகள்  செய்த கொலைச்செயல்கள் உண்மைதான் என்றும்-அதை மூடி மறைக்க இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொள்கிறது என்பதும் உலக நாடுகளுக்கு தெளிவாகப் புரிந்திருக்கும்.
  ஆனால் உலக நாடுகளும்-ஐ.நா சபையும் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் மன்மோகன் சிங் போன்று இருப்பது இக்கொலைச்செயல்களுக்கு இப்போதைக்கு நியாயம் என்ற பெயரில் எதுவுமே கிடைக்கப் போவதில்லை.
     தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவந்ததற்கே உலக சாதனை போல் பாராட்டுகளைக் குவித்தவர்கள் இன்னும் அத்தீர்மானம் மீதான மேல் நடவடிக்கைகளைப் பற்றி எதுவும் பேசாமல்  துருப்பிடித்த அருங்காட்சியக  இரட்டைக்குழல் துப்பாக்கியா மாறிப்போனது மட்டும் தெரிகிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சிக்கபோகும் இந்தியா! வெள்ளை கொடி தொடர்பாக சிக்கி இருக்கும் முக்கிய ஆவணங்கள்

சனி, 2 ஜூலை, 2011
தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதிமுற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடிதாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .

அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்கபட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்சரண் அடைந்தனர். ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாககோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டனர் .அன்று நடந்த இந்த தமிழர் வரலாற்றில் துயர் தோய்ந்த நிகழ்வுகள்.

தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில்தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணக்ம சிக்கியுள்ளன .இவை ஐநாவில் பெரும் சர்ச்சையினை உருவாக்குவதுடன் இலங்கையைசர்வதேச விசாரணைக்கு வர வேண்டிய நிர்பந்தம் உருவாகும் நிலை ஏற்படுவதுடன்இந்தியாவும் மிகப் பெரிய இக்கttiல் சிக்கும்.அதன் ஆலோசனைபடிதான் இவை நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
   இந்திய அரசும் சிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டதுடன் தாமும் புலிகளை தமிழர்களை அழிக்கும் பணியில் பங்கேற்றோம் என்பதனை ஏற்று கொள்ளும் நிலை உருவாகுவதுடன் ,ஐநா  சபையும் தவறிற்காக மன்னிப்பு கோரவேண்டிய நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகின்றது .

முக்கிய நிறுவனம் ஒன்றில் இந்த ஆவணம்கள் கைமாற பட்டுள்ளன .எதிர் வரும் காலம்களில் இவை பெரும் பரபரப்பினை உருவாக்கும் என எதிர்பார்க்க படுகின்றது.. இதில் இரண்டு விதமான சான்றுகள் பரிமாற்ற பட்டுள்ளன. இறந்தகாலம். நிகழ்காலம் இதற்குள் அடக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

இலங்கை அரசால் வெளியிட பட்ட புகைப்படம் கீழே உள்ளது.அதில் புலித்தேவன் அவர்கள் உடம்பில் வெள்ளை நிற உள் அங்கியுடன் இருக்கிற புகைப்படத்தை வெளியிட்டது. அதன் பின்னர் உடம்பில் எந்த துணியும் இல்லாமல் உடம்பின் மேல் பெட்ரோல் ஊத்தி தீ மூட்டி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது ஆதாரமாகிறது.


===========================================================================

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்தேதி                                                    நியூயார்க் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் நடத்திய புள்ளிவிவர சேகரிப்பில் இது தெரிய வந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இரட்டை கோபுரம் விமானம் மூலம் தகர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, உலகளாவிய தீவிரவாத வேட்டையைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான், ஏமன் என பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் வேட்டையில் இறங்கின.

இதில் ஈராக், ஆப்கானிஸ்தானில்தான் பெருமளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தின அமெரிக்கப் படைகள். அமெரிக்கப் படைகள் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக இந்தத் தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்கப் படைகளின் தாக்குதலில் சிக்கி 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பல்கலைக்கழக தகவல் தெரிவிக்கிறது.

இதில் அமெரிக்க கூட்டுப் படைகளின் தரப்பில் மட்டும் 31 ஆயிரத்து 741 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே ராணுவத்தினர் ஆவர். இவர்களில் 6000 பேர் அமெரிக்கர்கள், 1200 பேர் கூட்டுப் படையினர், 9900 பேர் ஈராக்கியர்கள், 8800 பேர் ஆப்கானிஸ்தானியர்கள், 3500 பேர் பாகிஸ்தானியர்கள். இவர்கள் தவிர அமெரிக்காவுக்காக பாதுகாப்பு குறித்த தகவல்களைத் திரட்டித் தந்தவர்கள் 2300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
afghan bomb attacks

அப்பாவி மக்கள்தான் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் பேர் ஆவர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் ஈராக்கியர்கள், 35,000 பேர் பாகிஸ்தானியர்கள், 12,000 பேர் ஆப்கானிஸ்தானியர்கள் ஆவர்.

அமெரிக்க மற்றும் கூட்டுப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த தீவிரவாதிகளின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் இது 20,000 முதல் 51,000 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 168 பேர் செய்தியாளரக்ள், 266 பேர் மனிதாபிமான பணியாளர்கள் ஆவர்.

அமெரிக்காவின் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சிக்கி இடம் பெயர்ந்து அகதிகளாக உள்ளோரின் எண்ணிக்கை மட்டும் 70.8 லட்சம் பேர் ஆவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
   இலங்கைக்கு எதிராக மட்டுமைன்றி அமெரிக்காவிற்கு எதிராகவும் போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    ஆனால் ஐ.நா,சபை என்பதே அமெரிக்க  பெண்டகனின் கிளை அமைப்பு என்பதாகி விட்டதே,,,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?