ஓபாமா சுட்டுக் கொலை...?

ஆசையை[இணையத்தில்] தீர்த்ததவர்கள் தீவிரவாதிகள் இல்லை.
Barack Obama at Westminster Hall
 உலக அதிர்ச்சி
அமெரிக்கா அதிபர் ஒபாமா சுடப்பட்டதாக பாக்ஸ் தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையதளத்தில் தகவல் பரவியதால் அதை படித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அமெரி்க்காவின் முன்னணி தொலைக்காட்சியான "பாக்ஸ் நியூஸ்" பயன்படுத்தி வரும் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில்,"ஜூலை 4 மிகவும் வருத்தமான தினம். அதிபர் ஒபாமா இறந்துவிட்டார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்" என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர் ஜான் பைடன் என்பவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்தவர்களில் பலர் அதை உண்மை என்று நம்பி தங்கள் அனுதாபக் கருத்தையும் பதிவு செய்தனர். இன்னும் சிலரோ புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து எழுதினர்.
ஜூலை 4 அமெரிக்காவின் தேசிய தினம் என்பது குறிப்பிடத்தக்கது.            சிலர் "பாக்ஸ் நியூஸ்" தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையப் பக்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஒபாமா குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே ஒபாமா பற்றிய தகவலை வெளியிட்டதற்கு பொறுப்பு ஏற்பதாக "த ஸ்கிரிப்ட் கிட்டீஸ்" என்ற இணையதளக் குழுவினர் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
 இந்த இணைய குழப்பவாதிகள் முன்பு மே -2011லிலும் இதுபோன்றே பாக்ஸ்.காம் இணையத்தில் குழப்பம் செய்திருந்தனர்.
இந்த பெண் அந்த இணையக் குழப்பவாதிகள் கும்பலில் இருப்பதாக காவலர்களால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
 பாரக் ஒபாமா மீது என்ன கோபமோ இவர்களுக்கு?
==========================================================================
காமன்வெல்த் ஊழல்  6 ஆண்டுகளுக்கு முன்பே பிரதமரை எச்சரித்த அமைச்சர்கள்
 காமன்வெல்த் விளையாட் டுக்கான ஏற்பாடுகள் செய்த அமைப்புக் குழு மற்றும் அதன் தலைவர் சுரேஷ் கல்மாடி குறித்து கடந்த 2004ம் ஆண்டு முதல் 3 மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் எச்சரித் தனர். அமைச்சர்களின் எச்ச ரிக்கை கடித விபரங்கள்.தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிச்சத்திற்கு  வந்துள்ளது,
  •                                                                                               


  • காமன்வெல்த் விளை யாட் டுப் போட்டி முதன்முறையாக இந்தியாவில் 2009ம் ஆண்டு அக்டோபர் 3ம்தேதி முதல் 14ம்தேதி வரை நடைபெற்றது. தலைநகர் தில்லியில் நடந்த பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மிகப் பெரும் சர்வதேசப் போட்டி என்பதாலும், முதன்முறையாக காமன்வெல்த் போட்டியை நடத்துவதாலும் ரூ.70 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட் டது. ஸ்டேடிய கட்டுமானம், புதுப்பிப்பு பணிகள், தலை நகரில் புதிய போக்குவரத்து வசதி என பல்வேறு பணிக ளுக்கு இந்த செலவுகள் செய் யப்பட்டன.

    முன்னாள் மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சர்கள் சுனில் தத், அவரையடுத்து பத வியேற்ற மணிசங்கர் அய்யர் மற்றும் எம்.எஸ்.கில் ஆகி யோர் காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக் குழுவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். காமன்வெல்த் அமைப்புக் குழு, பணத்தை அர்த்தமற்ற முறையில் வீண டித்துக் கொண்டிருப்பதாக மணி சங்கர் அய்யர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். காமன்வெல்த் விளை யாட்டு அமைப்பின் செயற் குழு என்பது, ஒரு தரப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒப்புதல்  அளிப் பதாக  மட்டுமேசெயல்பட்டு வந்துள்ளது என எம்.எஸ்.கில் தெரிவித்தார்.

    விளையாட்டுத் துறை அமைச்சர்கள் பிரதமருக்கு எழுதிய கடித விபரத்தை தக வல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ் ஆர்வலர் எஸ்.சி.அகர் வால் பெற்றார்.

    2004ம் ஆண்டு காமன் வெல்த் விளையாட்டுக் குழு வின் வடிவமைப்பு முடிவு செய் யப்பட்டது. அப்போது விளை யாட்டுத் துறை அமைச்சராக இருந்த சுனில் தத் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கம், அதன் தலை வர் சுரேஷ் கல்மாடியை காமன் வெல்த் அமைப்புக் குழு தலை வராக தேர்வு செய்திருப்பது ஆச்சரியம் தருகிறது; அமைச் சர்கள் குழு எடுத்த முடிவுக்கு மாறுபட்டதாக இந்த முடிவு உள்ளது என தெரிவித்திருந்தார்.

    விளையாட்டுத் துறை அமைச்சரை, காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழு தலைவராக நியமிக்க வேண் டும் என்ற அமைச்சர்கள் குழு வின் முடிவு இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு நன்றாகவே தெரி யும். ஆனால், அதனை பிரதி பலிப்பதாக காமன்வெல்த் விளையாட்டுக் குழு இல்லை. பல்வேறு வேறுபாடுகள் இருந் தன என்றும், சுனில் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதங்களின் விபரங்களி பிரதமர் பார்த்துவிட்டார் என் று கடிதங்களின் மேல் பிரதமர் அலுவலக் குறிப்பும் எழு தப்பட்டுள்ளது.

    இதையடுத்து மத்திய விளை யாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற மணிசங்கர் அய்யர், காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக் குழு அரசு பணத்தை வீணடிக்கிறது. ஆலோசகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் 5 ஆயிரம் டாலர் என் கிற ரீதியில் நியமனம் செய் துள்ளது. அதைத் தவிர ரூ.2 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு மற்றும் காமன்வெல்த் விளையாட்டு பெடரேசனின் மைக் ஹூப்பர் வந்து செல்ல மாதாந்திர விமான டிக்கெட் ஆகியவை அளிக்கப்பட்டுள் ளன என்றும் அமைப்புக் குழு குறித்து கடுமையான புகார் களை பிரதமருக்கு எழுதியிருந் தார்.

    1982ம் ஆண்டு தில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த போது சக்திவாய்ந்த பொது நோக்கம் உள்ள பிரதி நிதிகள் கொண்ட விளை யாட்டு அமைப்பு குழு அமைக்கப்பட்டது. ஆனால், காமன்வெல்த் விளையாட்டுக் குழு அதுபோன்று இல்லை என்றும் மணிசங்கர் அய்யர் விமர்சித்திருந்தார்.

    காமன்வெல்த் போட்டி நடைபெறுவதற்கு 3 ஆண்டு கள் முன்பாக 2007ம் ஆண்டி லேயே, சுரேஷ் கல்மாடி தலை மையிலான காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக் குழு வின் நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் மணி சங்கர் அய் யர் எழுதிய கடிதத்தில் எச்சரித் திருந்தார்.

    சுரேஷ் கல்மாடி தலைமை யிலான காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக் குழு செய்த முறைகேடுகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வருகின்றன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியாளர்கள் வெற்றி நேரம் குறித்தல், புள்ளி விபரம் பதிவு செய்தல், முடிவு செய்தல் ஆகியவற்றுக்கான கருவிகளை பெற பலனடைந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் விண்ணப்பம் செய்வதற்கு முன்னரே சுரேஷ் கல்மாடி தலைமையிலான குழு சுவீஸ் ஒமேகா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது என சர்வதேச விளையாட்டு பிரி வின் இணைச் செயலாளர் ராகுல் ரத்னாகர் பகிரங்கமாக தற்போது தெரிவித்துள்ளார்.  
                                    

     

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    2025ல் தங்கம் விலை

    வினேஷ் போகத் வென்றார்!

    முடிவுக்கு வருகிறதா?