அடுத்த” திகார்” பயணி..?
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் தயாநிதி தனது அமைச்சர் பதவியைவிட்டு இன்று [07-07-11]பிற்பகல் விலகினார். தயாநிதி விலகல் கடிதம் கொடுத்ததை பிரதமர் அலுவலகமோ, தி.மு.க.,தலைமையோ இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் தயாநிதி ஆலோசனை நடத்தியதாகவும், இதன் பின்னர் அமைச்சரவையில் இருந்து விலகல்கடிதம் கொடுத்ததாகவும் தெரிகிகிறது.
2004- 2007 ஆம் ஆண்டு கணக்கில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாககுற்றச்சாட்டு தயாநிதி மீது உள்ளது.
இதை அடுத்து ஏர்செல் நிறுவனர் சிவசங்கரனிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது. இதில் தயாநிதி தமக்கு அலைவரிசை ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார். இதனால் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவை சேர்ந்த மாக்ஸிஸ் நிறுவனத்திடம் விற்க வேண்டியதாயிற்று. விற்ற உடன் இந்த நிறுவனத்திற்கு உடனடியாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று கூறியிருந்தார். இந்த காலத்தில்தான் சன் டி.டி.எச்., நிறுவனத்தில்., மாக்ஸிஸ் துணை நிறுவனம் ரூ. 600 கோடியை முதலீடு செய்தது எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., வக்கீல் இது தொடர்பான விசாரணை அறிக்கையை நேற்று தாக்கல் செய்தார். இதில் தயாநிதி மீதான குற்றச்சாட்டிற்கு ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் தயாநிதி எந்நேரமும்பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. பிற்பலில் பிரதமரை சந்தித்து தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியே வந்த தயாநிதி பத்திரிகையாளர்களிடம் பேச மறுத்து விட்டு சென்று விட்டார். முன்னதாக காலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தயாநிதி பங்கேற்றார்; ஆனால் பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறிவிட்டார்.