மும்பை இந்தியாவின் சோகம்,



மும்பை இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மட்டுமல்ல.தீவிரவாதிகளின் கொடுஞ்செயல்களின் பலிகளமாகவும் உள்ள அவலம்.
எந்தநேரம் எங்கு குண்டு வெடிக்கும் .வீட்டுக்கு யாரெல்லாம் திரும்பிவருவார்கள் என்ற திக்,திக்,நெஞ்சோடு காத்திருக்கும் அவலம் நிறைந்த மாநரகமாகி விட்டது. ரா,ஐ.பி,போன்ற புலனாய்வு நிறுவனங்கள்.மாநில அளவிலான புலனாய்வு அமைப்புகள் பல இருந்தும் இது போன்ற கொடுஞ்செயல்களை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த இயலாமல் போவது அந்த அமைப்புகளின் தேவையை ஆய்வு செய்யவைக்கிறது.
   அது மட்டுமல்ல ஏற்கனவே இது போன்ற கொடிய செயல்களை செய்து மாட்டிக்கொண்ட மிருகங்களை நாம் தண்டிக்காமல் சிறையில் வைத்து பாதுகாத்து பிரியாணி போட்டு பராமரிப்பதும்.இது போன்ற செயலை இந்தியாவில் செய்வதை தீவிரவாதிகள் சுற்றுலா பயணம் போல் வந்து செய்துவிட்டு போவதை ஊக்குவிக்கிறது.காசாப் ,பாராளுமன்றத் தாக்குதல் தீவிரவாதிகள் மீது நாம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்?இது போன்றவைதான் எவ்வளவு குண்டு வெடித்து எவ்வளவு பேர் செத்தாலும் இந்தியாவில் ஒன்றும் செய்யமாட்டார்கள்-மாட்டினாலும் பிரியாணியுடன் சிறையில் ஓய்வெடுத்து அடுத்த குண்டுவைப்புக்கு யோசிக்கலாம்.இவுங்க ரொம்ப நல்லவங்கப்பானு உலகதீவிரவாதிகளின் கவனத்தை இந்தியா திருப்பியுள்ளது.
    அளவுக்கு மீறினால் அனைத்தும் விசம்தான்.அதே போல் அளவுக்கு மீறி சட்டம் -நியாயம் என தீவிரவாதிகளை பாதுகாத்துக் கொண்டிருப்பதும் நம்நாட்டுக்கு கேடுதான்.பலியாவது அப்பாவி மக்கள்தான்.
அந்த எண்ணம் அரசுக்கு வரவேண்டும்.
    இந்திராகாந்தியை ஒரு சீக்கியன் கொன்றதால் எத்தனை சீக்கிய அப்பாவிகள் கொல்லப்பட்டனர். ஒரு ராஜீவ் காந்தி கொலையில் ஈழத்தமிழன் சம்பந்தப்பட்டிருந்ததால் ஈழத்தமிழினமே முள்ளிவாய்காலில் கொன்று குவிப்புக்கு இந்திய படை உதவியதே.
     அதே உணர்வு ஒவ்வொரு இந்தியனும் தீவிரவாதத்தால் பலியாகும் போதும் இந்த அரசுக்கு வரவேண்டும்.அப்போதுதான் இத்தீவிரவாதத்தை ஒழிக்க இயலும்.எதற்கும் அமெரிக்கா வழியில் செல்லும் மன்மோகன் காங்கிரசு அரசு தீவிரவாத ஒழிப்பில் அதை ஏன் கைக்கொள்ள மறுக்கிறது.?
Stunned onlookers
Stunned onlookers
மும்பை குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து, மகாராஷ்டிர போலீசாரும், பயங்கரவாத தடுப்பு படையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருந்தாலும், குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்பதை கண்டறிய முடியாமல் திணறுகின்றனர். குண்டுகளை வெடிப்பதற்காக பயன்படுத்திய ஸ்கூட்டர் ஒன்றைத் தவிர வேறு எந்தத் தடயமும் கிடைக்காததால், போலீசார் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர். குண்டு வெடிப்பு நடந்த மூன்று இடங்களிலும் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என, தேடி வருகின்றனர். கடந்த 13ம் தேதி, மும்பை நகரின் முக்கிய பகுதிகளான தாதர், ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், 18 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்து 48 மணி நேரம் ஆகியும், புலனாய்வில் எந்தவொரு முக்கிய தடயங்களும் இதுவரை சிக்கவில்லை. குண்டு எங்கிருந்து வந்தது, யார் கொண்டு வந்தது, இந்த நாச வேலையைச் செய்தவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. குண்டு வெடிப்பு சம்பவங்கள் குறித்து மும்பை கிரைம் பிராஞ்ச் போலீசாரும், மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
=========================================================================
வெடிக்கத்தயாராகும் அமெரிக்க பொருளாதாரப் பலூன்,,,,,,
அமெரிக்காவில் கடன் நெருக்கடி தலைதூக்கியுள்ளது. அந்நாடு கடன் உச்சவரம்பை அதிகரிக்காவிட்டால், கடன் தொகைகளை திரும்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய கடன் பிரச்னையால், ஒபாமா ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையிலிருந்து நாட்டை மீட்க ஒத்துழைப்பு தர, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார்.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா, தனது கடன் உச்சவரம்பு நிலையை எட்டிவிட்டது. அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு 14.3 டிரில்லியன் டாலர். ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. இந்த கடன் உச்சவரம்பை, வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் உயர்த்த வேண்டும்.கடன் நெருக்கடியை சமாளிக்க, வரி விதிப்பு போன்ற அதிரடி நடவடிக்கைகளை அதிபர் ஒபாமா மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு, எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் ஆதரவு தேவை. ஆனால், ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர்.இதையடுத்து, வெள்ளை மாளிகையில் நான்கு சுற்று பேச்சுவார்த்தை நடத்திய அதிபர் ஒபாமா, நேற்று குடியரசு கட்சியினருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, தற்போதைய கடன் பிரச்னையால் என் ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என, தெரிவித்தார்.கடன் நெருக்கடியை சமாளிக்க, சில செலவினங்களை ரத்து செய்ய வேண்டும்; வசதியுள்ளவர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்பது, அதிபர் ஒபாமாவின் திட்டம். இதற்கு குடியரசு கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
குடியரசு கட்சியினர், ஒபாமாவின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால், அமெரிக்கா திவால் நிலைக்கு தள்ளப்படும். கடந்த 2008ம் ஆண்டில் உலக பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டதை விட மோசமாகும் என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.குடியரசு கட்சியினர் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதால், நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, அமெரிக்காவின் இக்கட்டான நிலைமையை அதிபர் ஒபாமா அப்படியே போட்டு உடைத்தார்.
     ஆக எந்நேரமும் அமெரிக்க பொருளாதாரம் டமால் ஆகலாம்.
இப்படி மோசமான பொருளாதாரக்கொள்கைகளை கடைபிடிக்கும் அமெரிக்கா மற்றைய நாடுகள் மீதும் தனது கொள்கைகளை திணிப்பது மிக மோசமான செயல் .அதிலும் அமெரிக்கா கூறும் வழிமுறைகளை அப்படியே இம்மி பிசகாமல் செயலாக்கும் நமது பொருளாதாரப்புலிகள் மன்மோகன் சிங்,சிதம்பரம் வகையறாக்கள் இந்நிகழ்வைக்கண்ட பின்பாவது திருந்துவார்களா?.
=========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?