சிவன்
கோவில் யாருக்கு
தாய்லாந்து, கம்போடியா எல்லையில், 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் உலக புராதனச் சின்னமாக, 2008ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கோவிலை தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் உரிமை கொண்டாடின. கோவிலுக்குள் நுழைந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவரை, கம்போடியா கைது செய்தது.இதைத் தொடர்ந்து தாய்லாந்து அரசு தனது படைவீரர்களை அனுப்பியது.
கம்போடியா -தாய்லாந்து இடையே குண்டு வீச்சு,துப்பாக்கி சூடு போன்றவை நடைபெற ஆரம்பித்தது.போர் படட்டத்தை தணிக்கவும்
இப்பிரச்னை தொடர்பாகவும், ஹேக்கில் உள்ள சர்வதேச கோர்ட்டை கம்போடியா நாடியது. விசாரணை மேற்கொண்ட சர்வதேச கோர்ட், "இரு நாட்டு எல்லைகளிலும் இருந்து ராணுவத்தை வாபஸ் பெற வேண்டும்' என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து, தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா, தலைநகர் பாங்காக்கில் அளித்த பேட்டியில், "இந்த உத்தரவு குறித்து புதிய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவு, எங்கள் நாட்டு இறையாண்மையை பாதிக்காது. ஆனால், இந்த உத்தரவு குறித்து, புதிய அரசுக்கு பரிமாற்றம் செய்யவும் எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை. எல்லையில் முகாமிட்டிருக்கும் 40 ஆயிரம் ராணுவ வீரர்களை கம்போடியா வாபஸ் பெற வேண்டும். எங்களது வீரர்கள் குறைந்தளவில் மட்டுமே முகாமிட்டுள்ளனர்' என்றார்.
தாய்லாந்து நாட்டில் புதிய பிரதமராக, பியூ தாய் கட்சி பதவியேற்கவில்லை. இக்கோவில் கம்போடியாவுக்கு சொந்தம் என்றும், அதைச் சுற்றியுள்ள நிலம் தாய்லாந்து நாட்டிற்கு சொந்தம் என்றும் 1962ம் ஆண்டில், சர்வதேச கோர்ட் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலம் ஒருவருக்கும் அதில் கட்டப்பட்ட கோவில் ஒருவருக்கும் என தீர்ப்பு மிக வேடிக்கையானது.இரு நாடுகளையும் திருப்தி படுத்த அளிக்கப்பட்ட தீர்ப்பினால் சிக்கல் மேலும் அதிகமாகவே ஆகியுள்ளது.
இரு நாடுகளும் இதோ போர் செய்யும் அளவு சென்று விட்டனர்.
சர்வதேச நீதிமன்றம் பேசாமல்”நிலம் தாய்லாந்துக்கு,கோவில் கம்போடியாவுக்கு.அனுபவ உரிமை இந்துக்கள் நிறைந்த இந்தியாவுக்கு ”என தீர்ப்பை மாற்றி சொல்லிவிடலாம்.
இதற்கிடையில்தாய்லாந்து, கம்போடியா எல்லையில் சிவன் கோவிலைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள ராணுவத்தினரை, வாபஸ் பெற போதிய அவகாசம் வேண்டும்; புதிய அரசு பதவியேற்க வேண்டும்' என்று தாய்லாந்து பிரதமர் அபிசிட் வெஜ்ஜாஜிவா கூறியுள்ளார்.---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------இரட்டையர் கிராமம்
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த 50 ஆண்டுகளில் 108க்கும் மேற்பட்ட இரட்டையர்கள் பிறந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் அருகே உள்ள உம்ரி கிராமத்தில் தான் இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
இங்கு மனிதர்கள் மட்டும் இரட்டையர்களாகப் பிறக்கவில்லை. கிராமத்தில் உள்ள விலங்கினங்களும் இரட்டைக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. இதற்கான காரணத்தை கண்டறிய, விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களும் முயற்சி மேற்கொண்டும் பலனில்லை.
ஐதராபாத், டில்லி, கோல்கட்டா, சென்னை மற்றும் மும்பை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்கள் பலரும், சமீப காலங்களில் உம்ரி கிராமத்திற்கு சென்று, சோதனை மேற்கொண்டுள்ளனர். எனினும், உரிய காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
உம்ரி கிராமத்தை சேர்ந்த இரட்டையர்களில் ஒருவரான குடு என்ற சிறுவன் கூறுகையில், "" தற்போது கிராமத்தில் உள்ள இரட்டையர்களில், 16 ஜோடி இரட்டையர்கள் மட்டுமே ஒரே மாதிரியாக இருப்பர். அவர்களில் ஒருவரை ஒருவர் அடையாளம் காண்பது கடினம்,'' என்றான். குடுவின் தாத்தா கூறுகையில், ""80 ஆண்டுகளுக்கு முன், கிராமம் முழுவதும் இரட்டைக் குழந்தைகள் அதிகளவு நிறைந்திருந்தன,'' என்றார்.
இவ்வகையில், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் தங்கள் ஊரின் பெயரைப் பதிவு செய்வது என, உம்ரி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.