போட்டியாளர்கள்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

 கூகுளை மிஞ்சிய பேஸ்புக்
சொத்து மதிப்பில் கூகுள் இணையதளத்தின் நிறுவனர்களான செர்ஜி பிரின், லேரி பேஜ் ஆகியோரை சூகர்பெர்க் முந்தினார்.

சூகர்பெர்க் நிறுவிய சமூக இணையதளமான பேஸ்புக் தற்போது உலக அளவில் அதிக வாடிக்கையாளருடன் பிரபலமாக திகழ்கிறது.

இந்நிலையில்  ரூ,1317 முக மதிப்பு கொண்ட பேஸ்புக்கின் 2.25 லட்சம் பங்குகளை ஜிஎஸ்வி நிதி நிறுவனம் வாங்கியுள்ளது.

ஜிஎஸ்வி முதலீடு மூலம் ரூ.60,750 கோடியாக இருந்து சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ரூ.81,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் சொத்து மதிப்பில் கூகுள்  செர்ஜி பிரின் ,லாரி பேஜ் ஆகியோரை விடசூகர்பெர்க் முன்னிலையில் உள்ளார்.
உலகின் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பட்டியலிலிலும்3ம் இடத்தை  சூகர்பெர்க் பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.
இந்த பட்டியலில் ரூ.2.52 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் ஒராக்ல்ஸ் லேரி எலிசன் ரூ.1.78 லட்சம் கோடியுடனும் முன்னிலை வகிக்கின்றனர்.
போட்டி அத்துடன் முடியவில்லை.பேஸ்புக்கிற்கு கூகுள் பதிலடி தரவுள்ளது.
உலகின் பிரபல சமூக இணைப்பு இணையத் தளமான பேஸ் புக்குக்கு போட்டியாக அறிமுகம் செய்கிறது. அதுதான் கூகுள் பிளஸ்.

கூகுள் நிறுவனத்தின்  விடா முயற்சியின் பலனாக கூகிள் பிளஸ் வருகின்றது.

தற்போது கூகுள் பிளஸ்முன்னோட்டமாக வெளியிடப்பட்டு உள்ளது. விரைவில் இணைய பயன்பாட்டுக்கு வரும்.

பேஸ் புக்கில் காணப்படுகின்ற வசதிகளைவிட அதிகமான வசதிகள் உள்ளது. வீடியோ சட்டிங் வசதி கூகுள் பிளஸில்  உள்ளது.

இதன்மூலம் கூகுள் பிளஸ் ஸ்கைப் நிறுவனத்துக்கும்  போட்டியாக அமையும்.
    மொத்தத்தில் இவர்கள் போட்டி இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நல்லதுதான்.


==========================================================================

கூகிள் ப்ளஸ் என்றால் என்ன?
கூகிள் ப்ளஸ் என்பது மற்ற சமூக தளங்கள் போன்று நண்பர்களுடன் உறவுப்பாலத்தை அமைப்பதற்கான தளம். அனைத்து சமூக தளங்களும் இதை தான் செய்கின்றன. ஆனால் அவைகள் ஒவ்வொன்றும் வேறுபடுவது அவைகள் கொடுக்கும் வசதிகளை பொறுத்தே! அதனால் கூகிளும் மற்ற தளங்களைவிட வேறுபடுவதற்காக சில வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
தற்போது கூகிளின் முகப்பு பக்கத்தில் மாற்றம் வந்திருப்பதை கவனித்திருப்பீர்கள். அங்கு Web என்பதற்கு பக்கத்தில் +You என்ற Tab வர இருக்கிறது. அதனை க்ளிக் செய்தால் பின்வரும் வசதிகள் வரும்.

என்னென்ன வசதிகள்?
ப்ளஸ் சர்குள்ஸ் (+Circles) - நட்பு வட்டம், பதிவர் வட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அது போல தான் இதுவும். நண்பர்கள், உறவினர்கள், பதிவர்கள் இப்படி தனிதனி குழுவாக(Group) வைத்திருப்பது. நாம் பகிர நினைப்பதை குறிப்பிட்ட வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பகிரலாம்.
ப்ளஸ் ஸ்பார்க்ஸ்(+Sparks) – நீங்கள் ஒரு விஷயத்தை பற்றி அதிகம் கூகிளில் தேடுபவர்களாக இருந்தால், இந்த வசதி உங்களுக்காகத்தான்..! உதாரணத்திற்கு “தொழில்நுட்பம்” என்பதை அதிகம் தேடுபவர்களாக இருந்தால், முதலில் அந்த வார்த்தையை கொடுத்து தேட வேண்டும். அதற்கான முடிவுகள் வரும். அங்கு தேடுபொறி பெட்டிக்கு கீழே Add Interest என்பதை க்ளிக் செய்தால், அந்த வார்த்தை இடது புறம் வந்துவிடும். பிறகு நீங்கள் தொழில்நுட்பம் பற்றி தேடுவதாக இருந்தால், அந்த வார்த்தையை க்ளிக் செய்தால் போதுமானது.
ப்ளஸ் ஹேங்கவுட்ஸ் (+Hangouts) - இணையத்தில் நண்பர்கள் பலருடன் ஒரே நேரத்தில் முகம் பார்த்து உரையாடும் வசதி( Group video Chat). இதற்கு உங்களிடம் வெப்கேமரா இருக்க வேண்டும்.
இன்ஸ்டன்ட் அப்லோட்(Instant Upload) – மொபைல்களில் எடுக்கப்படும் படங்களை உடனடியாக பதிவேற்றம் செய்யும் வசதி.இது பற்றி சரியாக தெரியவில்லை. பயன்படுத்திப் பார்த்தால் தான் தெரியும்.
இன்னும் சில வசதிகளையும் அறிமுகப்படுத்தவுள்ளது. தற்போது சில நபர்களுக்கு மட்டுமே சோதனை முறையாக அறிமுகப்படுத்த உள்ளது. அந்த சோதனையில் சேர நீங்கள் உங்கள் பெயரையும்,மின்னஞ்சல் முகவரியினையும் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவலையும், வீடியோக்களையும் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
இது பற்றிய Demo பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்.
கூகிளின் இந்த அறிமுகம் சாதனை படைக்குமா? அல்லது Google wave, Google Buzz போன்று சோடை போகுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.
                                                                                              நன்றி: வருணன்,

===========================================================================
செயல்படாத இளவரசர்,,,,,,,,,,
     % தொகுதி மேம்பாட்டு நிதியை செலவு செய்வதில் ராகுல் காந்தியை பின்னுக்கு தள்ளி வருண் காந்தி சிறப்பாக செயல்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் 78 சதவீதத்தை பில்பித் தொகுதி மேம்பாட்டுக்காக வருண் காந்தி செலவிட்டுள்ளார். இதே கால கட்டத்தில் அமேதி தொகுதிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வெறும் 6 சதவீதத்தை மட்டுமே ராகுல் காந்தி செலவழித்துள்ளார்.

  •  

    இதில் இருந்தே பிரதமர் மன்மோகன் சிங் மட்டுமல்ல நமது இந்தியாவின் வருங்கால பிரதமர்-இப்போதைய இளவரசருமான ராகுல் காந்தியும் செயல்படா மக்களவை உறுப்பினராக உள்ளார்.
    தன்னை தேர்ந்தெடுத்த தவறை செய்த மக்களுக்கு தனக்கு ஒதுக்கிய நிதியைகூட செலவிடாது ராகுல் ஒரு நல்ல மக்களவை உறுப்பினர் அல்ல.
    நல்ல உறுப்பினராக இல்லாத இவர் எப்படிடி பிரதமருக்கு தகுதியானவர்.தன்னைப்போலவே செயல் இல்லாத தகுதி ராகுலுக்கு இருப்பதுதானா?
    ஒவ்வொரு குடிசையாகப்போய் சாப்பிடுவதும்,வேண்டுமென்றே பாதுகாப்பை மீறி சென்று ’படம்’காண்பிப்பதை தவிர ராகுல் என்ன செய்துள்ளார்.
    இவருக்கு  வருண்காந்தி எவ்வளவோ செயல் வீரராக இருக்கிறார்.ஆனால் அவர் மதவெறியராக இருப்பதுதான் சரி இல்லை.
        உ.பி.சென்று போராடிய ராகுல் அதன் பின் அதுபற்றி வாயை திறக்கவில்லை.
    போஸ்கோ போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ள வில்லை.குஜராத் சென்று சிறுபான்மையினர் ஆதரவு போராட்டங்கள் ஏன் செய்யவில்லை.
    தமிழக மீனவர்கல் இலங்கைபடையினரால் அடிக்கடி தாக்கப் படுவதை எதிர்த்து ஏன் போராடவில்லை?


  •  
    எப்படியோ ராகுல்காந்தியின் இளவரசர் பட்டத்திற்கு ஆபத்து வந்து விட்டது.அதான் அவரின் சித்த்ப்பா சஞ்சய்காந்திமகன் வருண்காந்திக்கும் இந்திய தேசவாரிசுரிமை உண்டுதானே?                                                                                                                        

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    விகடானந்தா நிலவரம்

    பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

    கட்டுமானம் ஆரம்பம்?