ஈழத்தளபதி .........,?

=========================================================================

ராஜபக்சேவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சந்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.
இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகி தகடூர் தமிழ்ச் செல்வன், மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், விடுதலைச் செல்வன், செந்தில் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கி வரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும் படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு கூறியதாவது, நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில், உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.
ராஜபக்சே கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.
மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார். விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்பாவும்,மகனும்  தனி இயக்கம் நடத்தினாலும் மற்றவர்கள் கையெலுத்து இயக்கத்தில் கையொப்பம் போடுவதில் தறில்லையே?
உண்மையிலேயே ஈழத்தமிழர் மீது பரிதாபம் -பாசம் இருந்தால் தானே தேடிப்போய் கையொப்பம் இட்டிருப்பார்கள்.
அவர் அடிச்சாத்தான் நாலு மாசம் தூங்க மாட்டார்கள் என்றால் கையேழுத்து போட்டாலுமா?
இது அரசியல் சித்து விளையாட்டை அப்பனும்-மகனும் செய்யும் போது எப்படி போடுவார்கள்.பக்சே மீது நடவடிகை யெடுத்தால் இவர்கள் பின்னர் எப்படி அரசியல் செய்வது?
நடிகர்ள்சிலர் ரசிகர்களின் உழைப்பால் அரசியலில் பெரிய மனிதனாகுவது தமிழகத்தில் மட்டும் இன்னமும் நடந்து கொண்டிருப்பது வேதனை தருகிறது.

=========================================================================
முறையற்ற ஆய்வுகள்.
 மனித விந்தையும் மிருகங்களின் கரு முட்டையையும் இணைத்து புதிய உயிரினங்களை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 3 ஆண்டாக இந்த ஆராய்ச்சி வெளி உலகுக்குத் தெரியாமல் நடந்து வருகிறது. இதுவரை 150க்கும் மேற்ப்ட்ட உயரினங்கள் இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் உயிரினங்களிலிருந்து எடுக்கப்படும் மூல உயிரணுவை மனித உடலுக்குள் செலுத்தி, மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை உருப் பெறச் செய்வதுதான் இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சட்டப்படி இத்தகைய கலப்பு உயிரனங்களை உருவாக்குவது தவறு என்பதால், இவை உருவாக்கப்பட்ட 14 நாட்களுக்குள் அழிக்கப்படுவதாகவும் இந்த கண்டுபிடிப்பு மனிதனுக்கு ஏற்படும் கொடிய நோய்களை சரி செய்வதற்கு உதவும் என்றும் இந்த விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் ராபின் லோவல் பாட்ஜ் தெரிவித்தார்.
   ஆனால் நமக்குள்ள கவலை எல்லாம் இது போன்ற ஆய்வில்தான் எய்ட்ஸ் கிருமிகள்,டி-கோலி போன்ற ஆபத்தான கிருமிகள் உருவாகி இன்று உலகை அச்சுறுத்தி வருகின்றன.
ஆனால் நமது ஆய்வாளர்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.
புதிய உயிரினங்கள் இவர்கள் ஆய்வுக்குப்பின் அழிக்க இயலாதபடி உருவாகி விட்டால்? என்ன செய்வது/அடு மனித இனத்துக்கு அச்சுறுத்தல் தரும் இனமாக இருந்தால் அதை விட ஆபத்தாகி விடுமே. பல ஆங்கிலத் திரைப்படங்களில் பார்த்து மிரண்டு போனது உண்மையாகி விடுமே.
அறிவியல் வளர்ச்சி மனிதனுக்கு பயன் பட்டது போய் இப்போது பயப்படும் நிலைக்கு சென்று விட்டது.

thumbnail

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?