இன்னுமா இந்த ஊரு இவனுங்கள நம்புது?


பிடதி நித்யானந்தா தியான பீடத்தில், குரு பவுர்ணமி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, காலையிலிருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.  
விழாவை ஒட்டி, ஆசிரமத்தின் பிரதான வாயிலில் இருந்து, ஆனந்தேஸ்வரா கோவில் வரையிலும் நித்யானந்தா ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். இந்த  குருபூர்ணிமா விழாவில் நடிகை ரஞ்சிதாவும் கலந்து கொண்டார். அவர் நித்யானந்தாவுக்கு பாத பூஜை செய்தார் பிறகு நித்யானந்தா அவருக்கு ஆசிர்வாதம்  வழங்கினார். சிறிது நேரம் ஆசி வழங்கிய நித்தியானந்தா பக்தர்கள் அனைவருக்கும் குண்டலினி யோகாசன பயிற்சி அளித்தார். புவிஈர்ப்பு விசைக்கு எதிராக  பக்தர்களை தன்னால் அந்தரத்தில் மிதக்க வைக்க முடியும் என்று சவால் விட்டார். குண்டலினியை எழுப்பி, மந்திரங்களை ஓதி அவர் சைகை செய்ய  உட்கார்ந்தபடி குதித்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவின் கட்டளையை ஏற்று  அந்தரத்தில் மிதக்க முயற்சித்தார். ஆனால் தடுமாறி கீழே விழுந்த அவர் அப்படியே சிரித்தப்படி உட்கார்ந்துவிட்டார். இதனையடுத்து நித்யானந்தாவிடம் ஒருவர்  சவால் விட்டார். தன்னை இச்சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட அவருக்கு எந்த மாற்றமும் ஏற்படாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தில்  ஈடுபட்டவருக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நித்யானந்தா. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பற்றி அவதூறு பேட்டி அளித்த நித்யானந்தா சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுசென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர். நடிகையுடனான படுக்கையறை காட்சிகளின் மூலம் புகழ் பெற்ற கார்ப்பரேட் சாமியார் நித்யானந்தா, கடந்த 13ம் தேதி சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ரஞ்சிதாவுடன் சேர்ந்து கொண்டு, ‘‘அர்ஜூன் சம்பத் மனைவி வேறு மதத்திற்கு மாறி விட்டார். மனைவியையே இந்து மதத்தில் வைத்திருக்க முடியாதவருக்கு எனக்கு எதிராக குரல் கொடுக்க தகுதி இல்லை’’ என்று அவதூறான செய்தியை கூறியுள்ளார். 



மைக்கை எடுத்துவிட்டு ஆபாசமாக திட்டியுள்ளார். இவருடைய ஆபாசமான பேச்சை பத்திரிகையாளர்கள் கண்டித்தனர். இருந்தாலும் நக்கலும், நையாண்டியுமாக பல கேள்விகளுக்கு இதுபோன்ற பதிலை அளித்தார். இந்து மதத்தில் இருந்து கொண்டு எங்கள் மதத்தை இழிவுபடுத்தி இந்து மதத்திற்கு அவப்பெயரையும் அழிவையும் தேடித் தர வேண்டும் என்ற ஒரே தீய நோக்கத்தோடு செயல்படும் நித்யானந்தா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செக்ஸ் சாமியார் ஜாமீனில் வெளியிலிருக்கும்போது போலீசார் முன்னிலையில் பொது இடத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை பற்றி பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, போலி சாமியார் நித்யானந்தாவையும், நடிகை ரஞ்சிதாவையும் உடனடியாக கைது செய்து தக்க நடவடிக்கை எடுத்து இந்து சமுதாயத்தையும் பொதுமக்களையும் காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.
 வக்கீல் லிங்கேஸ்வரன் கூறுகையில், ‘‘அவர் மீதான வழக்கை திசை திருப்பும் வகையிலும், சாட்சிகளை கலைக்கும் வகையிலும் பேட்டி கொடுத்துள்ளார். நித்யானந்தாவின் ஜாமீனை ஏன் தள்ளுபடி செய்யக் கூடாது என்று பெங்களூர் நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’’ என்றார்.
இந்த போலி சாமியார் செய்த தில்லாலங்கடி வேலைகளை பார்த்து மக்கள் காரி துப்பிய போதும்.அதை துடைத்து விட்டு இப்படி ஜோடியுடன் வந்து பேட்டி கொடுக்க நித்யானந்தாவுக்குதான் மானம் கிடையாது.அதுதான் எப்போதோ போய்விட்டதே.
ஆனால் உண்மையின் உரைகல் சன் குழுமத்துடனான தனது பகைமையை காட்ட ஈனன் நித்யானந்தாவுக்கு ஆதரவாக செய்திகளைப் போடுவது உரைகல்லின் மீது எரிச்சலை உண்டாக்கு கிறது.
சாமியார் என்று சொல்லிக்கொண்டு இவன் செய்த மோசடிகளுக்கு மதம் என்று சொல்லிக்கொண்டு இந்துமத சாயம் பூசி வக்காலத்து வாங்குவது சரியான செயலே கிடையாது.
வழக்கு நடக்கும் போது இப்படி வேளியே சென்று உளறுவதும்.தான் செய்தவைகளை நியாயப்படுத்துவதும் சரியல்ல.
சன் தொலைக்காட்சி ஒன்றும் நியாயவான் கிடையாது.ஆனால் நித்யானந்தா செயல்களை பகிரங்கப்படுத்தியது சரிதான், .ஆன்மிக வேடத்தில் காமக் களியாட்டம் போடுவது அந்த மதத்தின் புனித தன்மையையே கெடுத்துவிடுமே.அப்படி செய்பவர்களின் முகத்திரையை கிழித்தது சரிதான்.
    இப்படி கொக்கோக யோகம் செய்த நித்யானந்தா போன்றவர்களுக்கு துணை போகும்தினமலரின் நம்பகத்தன்மை விரைவில் அதைவிட்டு சென்ற்விடும் அபாயம் உள்ளது.
அந்துமணி[சுரேஷ்] விவகாரத்தை மனதில் வைத்து மட்டுமே சன் குழுமத்தை குதற வேண்டாம்.கொஞ்சம் உண்மையின் உரைகல் லுக்கு ஏற்றபடி நடந்து கொள்ளுங்கள். 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தீவிரவாதிகளின் அடுத்தக்குறி..?
இந்தியாவில் பஞ்சாப், அரியானா, மற்றும் இமாசல பிரதேசத்தில் <உள்ள அணைகளை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். வரும் மழைக்கால நேரத்தில் அணையில் நீர் பெருக்கி வைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் இந்த தாக்குதலை நடத்த முயற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் பஞ்சாப், அரியானா, சண்டிகார் மற்றும் டில்லி பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி முடியும். மேலும் இது தொடர்பான செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்றும் பயங்கரவாதிகள் மனதளவில் தயாராகி வருகின்றனர். இவர்கள் இதற்கென அணையில் சுவர் உயரம் அறிந்தும், மற்றும் தண்ணீருக்குள் நீச்சல் அடித்து செல்லும் விஷயத்தில் முழு அளவில் பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது. 

முக்கிய குறியாக பக்ரா நங்கல் அணை: இதில் பஞ்சாப்- இமாசல பிரதேச எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பக்ராநங்கல் அணையை தகர்ப்பது பயங்கரவாதிகளின் முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளனராம். காரணம் இந்தியாவின் சட்லஜ் நதிப்பகுதியில் உள்ள இந்த அணை இந்தியாவில் மிகப்பெரியது.இந்த அணை இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில் ஜவஹர்லால் நேரு முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 9 ஆயிரத்து 300 மில்லியன் கியூபிக் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். இதற்கு சேதம் ஏற்படுத்தும் நேரத்தில் பெரும் அளவில் நாசத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் விவசாய பணிகளை சீரழிக்க முடியும் என்றும் பயங்கரவாதிகள் கருதியுள்ளனர்
     நம் கவனம்- பாதுகாப்பு நடவடிக்கைகள் அணைக்கட்டுகள் மேல் இருக்கும்போது அவர்கள் பின்னால் வந்து வேறு இடத்தில் தாக்கலாம். அரசு பொதுவான பாதுகாப்பை பலப்படுத்துவதுதான் பயன்தரும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?