இந்தியா-கூகுள் , என்ன நடக்கிறது?


கூகிள் சின்னம்

கூகுள் இணையத் தேடல்   தகவல்கள்-படங்களை வழங்குவதில் முக்கியத் தளமாக உள்ளது. ஆனால் இந்தியாவில் ஆட்சியாளர்கள்-பகாசுர நிறுவனர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அதில் வரும் செய்திகள்,படங்கள் அவ்வப்போது தலைவலியாகவும்  சங்கடத்தை தருகிறது.
இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு கடைசி 6 மாதங்களில், இணையத் தேடல் வலைத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்களை அல்லது படங்கள் உள்பட 282 அம்சங்களை நீக்குமாறு கோரி 67 கோரிக்கைகள் வந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.
அவற்றில் 6 கோரிக்கைகள் நீதிமன்றங்களில் இருந்தும், மீதமுள்ளவை நிர்வாகம், காவல் துறை உள்ளிட்டவர்களிடமிருந்தும் வந்துள்ளது. அதில் 22 சதம் கோரிக்கைககள் முழுமையாகவோ அல்லது பாதியளவோ ஏற்கப்பட்டு, தகவல்கள் நீக்கப்பட்ட நிலையில், மற்ற கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக கூகுள் கூறியுள்ளது.
பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரிகள் குறி்த்து கடுமையாக விமர்சனத்துடன் வெளியாகியுள்ள யூ டியூப் வீடியோ மற்றும் வலைபூக்களை (blogs) நீக்குமாறு வந்த கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதாக கூகுள் தெரிவித்துள்ளது.
உலகளவில் கூகிளுக்கு ஆதரவு உள்ளது
கூகுள் பார்வை சரியா?
கூகுள் இணையத் தேடல் வலைத்தளத்தில் இதுபோன்ற தகவல்களை உபயோகிப்போர் பற்றிய விவரங்களுக்காக அரசிடமிருந்து 1699 கோரிக்கைகள் வந்ததாகவும், அவற்றில் 79 கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாகவும் கூகுள் கூறியுள்ளது.
அந்த நபர்கள் எப்படிப்பட்ட தகவல்களைத் தேடுகிறார்கள் என்ற விவரங்களைப் பெறுவதற்காக இந்தக் கோரி்க்கைகள் வைக்கப்பட்டன. ஆனால், அந்த நபர்களைப் பற்றிய விவரங்களைத் தரவில்லை என கூகுள் கூறியுள்ளது.
இந்தியாவில் இருந்து, விவரங்களை நீக்குமாறு வந்த 50 கோரிக்கைகளில், 15 கோரிக்கைகள் அவதூறு தொடர்பானவை. 16 கோரிக்கைகள் தேசிய பாதுகாப்பு தொடர்பானவை.
ஆள் மாறாட்டம், ஆபாசப்படம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாகவும் கோரிக்கைகள் வந்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை, தகவல்கள் அல்லது வீடியோக்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 123 சதம் அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பல்வேறு நாடுகளில் இருந்தும் கூகுள் நிறுவனத்துக்கு கோரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன. ஏறத்தாழ எல்லா நாடுகளில் இருந்தும், கோரிக்கைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
==========================================================================
சானல்-4 ஈழப்படுகொலை  காணொளி தமிழ்நாடு  தொ.காட்சிகளிலும்   ,,,,,
சண்டேடைம்ஸ(http://sundaytimes.lk/110703/Columns/political.html) செய்தித்தாளில் அறிவிக்கப்பட்டுள்ளவாறு டெல்லியிலுள்ள முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் சனல் 4இன் ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ ஆவண வீடியோப் படத்தை ஒளிபரப்புச்செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இந்த உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் சனால் 4க்கும் இந்திய ஒளிபரப்பாளருக்குமிடையே பேரம் பேசுவதில் உலகத் தமிழர் பேரவை முக்கிய பங்காற்றியுள்ளதெனவும் அச்செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டுத் தமிழர் மட்டுமல்லாது அனைத்து இந்திய மக்களும் இந்திய அரசியல் மேலிடமும் இலங்கையில் அப்பாவித் தமிழருக்கெதிராக நடந்தேறிய போர்க் குற்றங்கள் மற்றும் மனித இனத்திற்கெதிரான குற்றங்கள் பற்றிய உறுதிப்படுத்தப்பட்ட உருப்படியான சான்றுகளை அறியச் செய்வதை உலகத் தமிழர் பேரவையானது அதன் உத்தியாகக் கொண்டுள்ளது.
இந்தியா டுடே குழுமத்தைச் சேர்ந்த ஹெட் லைன்ஸ் டுடே, ஆஜ் தக் (Headlines Today, Aaj Tak TV � India Today Group) ஆகியன ‘இலங்கையின் கொலைக் களங்கள்’ ஆவண வீடியோப் படத்தை ஜூலை 7, வியாழக்கிழமை மாலை 10 மணிக்கும் ஜூலை 8, வெள்ளிக்கிழமை மாலை 11 மணிக்கும் ஜூலை 9, சனிக்கிழமை மாலை 10 மணிக்கும் ஒளிபரப்புச் செய்யவுள்ளன.
இந்த அமைப்பின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒளிபரப்பப்படவுள்ள இந்த ஆவண வீடியோப் படத்தை தமிழ் நாட்டுச் செய்தித் தாள்கள், சென்னையிலுள்ள விளம்பரப் பதாகைகள், இந்தியாவில் உள்ள வானொலிகள் தொலைக்காட்சிகள் ஆகியனவற்றில் விளம்பரப்படுத்துவதற்கு (India Today Group) கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவிடம் இக்காணொளி பற்றிய கருத்துக்களைப் பெற்று  அதையும்  ஒளிபரப்பவும் இந்தியாடுடே திட்டமிட்டுள்ளது.
                                           

  •  
                                                                                                                                                                                   ஆனால் தமிழில் இக்காணொளியை ஒளிபரப்பும் தமிழ்த் தொலைக்காட்சி இதுவரை எது எனத் தெரியவில்லை.அநேகமாக’ ஜெயா ’வாக இருக்கலாம்.
    =============================================================================
    கறுப்புப் பணம்-  சிறப்புக் குழு நியமனம்

    அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட் டிருக்கும் பணத்தை திரும்பக் கொண்டு வரும் நடவடிக்கை மற்றும் விசாரணை யை கண்காணித்தல் தொடர்பாக நீதிபதி எஸ்.வி.ஜீவன்ரெட்டி தலைமையிலான உயர்மட்ட விசாரணைக்குழுவை (எஸ்ஐடி) உச்சநீதிமன்றம் திங்கட்கிழமை நியமனம் செய்தது.

    சிறப்பு விசாரணைக்குழுவில் நீதிபதி ரெட்டியைத் தவிர முன்னாள் நீதிபதி எம்.எஸ்.ஷா உள்ளார். இவர் குழுவின் துணைத்தலைவர் ஆவார். கறுப்புப்பணம் விவகாரத்தை கண்காணிப்பதற்காக அரசு நியமித்த உயர்மட்டக்குழு (எச்.எல்.சி) இனிமேல் எஸ்ஐடியின் ஒரு பகுதியாக இருக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சுதர்ஷன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் ஆகி யோரை கொண்ட அமர்வாயம் தெரிவித் தது. உடனடியாக இது செயல்பாட்டுக்கு வருவதாகவும் தெரிவித்தது. கறுப்புப்பண விவகாரம் தொடர்பாக அரசுத்தரப்பில் யாருக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிவிக்கவேண்டும் என்றும் பெஞ்ச் அறிவுறுத்தியது.

    அயல்நாடுகளில் பணத்தை முதலீடு செய்து, இதுவரை விசாரணை செய்யப் படாத நபர்களின் பெயர்களை நிர்வாகம் அறிவிக்கவேண்டாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

    பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி மற்றும் இதர நபர்கள் தாக்கல் செய்த மனு வில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியப் பணத்தை திரும்பக்கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசுக்கு நீதி மன்றம் அறிவுறுத்த வேண்டும் எனக் கூறி யிருந்தனர். அந்த மனு மீது, உச்சநீதிமன் றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. எஸ்.ஐ.டி. நியமனம் தொடர்பாக மத்திய அரசு தாமதம் இல்லாமல் அறிவிக்கை வெளி யிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

    இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் போது உச்சநீதிமன்றம், மத்திய அரசு செயல்பாடு தொடர்பாக கடுமையான கருத்துக்களை தெரிவித்தது. வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பதுக்கியுள்ள பணத்தை மத்திய அரசு கொண்டுவருவதில் தோல்வி யடைந்துள்ளது. பணத்தைக் கொண்டு வருவதில் உரிய நடவடிக்கை எடுக்காத தால் இந்த நிலை என்றும் பெஞ்ச் தெரி வித்தது. கறுப்புப்பணம் நாட்டிற்கே பெரும் அபாயமானது என்று கூறிய நீதி மன்றம், அயல்நாட்டு வங்கிகளில் பணம் பெருமளவு முதலீடு செய்யப்பட்டிருப் பது பலவீனத்தையும் நாட்டின் மென்மை யான போக்கையும் காட்டுவதாக உள்ளது என விமர்சித்தது.

    அரசு தீவிர நடவடிக்கை எடுக்காத தால் இதுபோன்று ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் அயல் மற்றும் உள்பாதுகாப்பு விஷயத்தில் விளைவை ஏற்படுத்துவதாக இருக்கும். அரசின் விசாரணை முற்றிலும் முடங்கியுள்ளது. நீதிமன்ற தலையீட்டின் பேரிலேயே இது வேகம் அடைந்துள்ளது. கறுப்புப்பண விசாரணை விஷயத்தில் நீதிமன்றம் தொடர்பு இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

    நீதிமன்றத்தின் வலியுறுத்தல் காரண மாக கறுப்புப்பண விவகாரத்தில் உரிய விசாரணையை மத்திய அரசு மேற் கொண்டு உள்ளது. இதற்கு குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலி வழக்கை சுட்டிக்காட்டலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. கறுப்புப்பண விவகாரம் வழக்குகள் மற்றும் அது தொடர்பான தற்போதைய விவர அறிக்கையை தன்வசம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. கறுப்புப்பண விவகாரம் தொடர்பாக அனைத்து அம்சங்களும் கொண்ட திட்டத்தை எஸ்ஐடி சமர்ப்பிக் குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

    அரசியலமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முந்தைய வழக்குகளில் உத்தரவு பிறப்பித்ததை குறிப்பிட்ட பெஞ்ச், எஸ்ஐடி விசாரணைக் குழுவை நியமித்தது சரியானது என்றும் தெரி வித்தது.

    அரசின் மெத்தனப்போக்கு குறித்து நாம் தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. கறுப்புப்பணத்தை அயல்நாடுகளில் இருந்து கொண்டு வரு வது குறித்து அரசு முதன்மை பொறுப்பு நபராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள வர்களும் தண்டிக்கப்பட வேண்டுமென் றும் உச்சநீதிமன்றம், மத்திய அரசுக்கு அறி வுறுத்தியது.
    ==========================================================================  

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    2025ல் தங்கம் விலை

    வினேஷ் போகத் வென்றார்!

    முடிவுக்கு வருகிறதா?